Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில். இலக்கதகடற்ற ஜீப்பில் வந்தவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல்

Featured Replies

யாழில். இலக்கதகடற்ற ஜீப்பில் வந்தவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  யாழ்ப்பாணம்

யாழ்.ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இலக்க தகடு அற்ற  ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டு உள்ளனர்.

img_3672
ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஜீப்பில் வந்த நான்கு பேர் அவர்களை மறித்து அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி உள்ளனர். அத்துடன் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி சேதமாக்கியுள்ளனர். ஆணைக்கோட்டை சாக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கரராஜா சந்திரசேகரன் , காக்கை தீவு பகுதியை சேர்ந்த பாலசிங்கம் செல்வம் அதேயிடத்தை சேர்ந்த அமரசிங்கம் ஞானவேல் ஆகியோரே காயடைந்தவர்கள் .
 
இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில் ,
 
நான் எனது வீடு நோக்கி எனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை ஆலடி வைரவர் கோயிலுக்கு அருகில் ஜீப்பில் வந்தவர்கள் மூன்று இளைஞர்களை முழங்காலில் இருந்து விட்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களின் கைகளில் வாள் மற்றும் இரும்பு கம்பி காணப்பட்டது.  அவர்கள் என்னை கண்டதும் என்னை துரத்த முற்பட்டார்கள் நான் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு மிக வேகமாக ஓடி தப்பி விட்டேன்.
 
அவர்கள் என்னை துரத்திய வேளை முழங்காலில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுவிட்டு  அவர்களிடம் இருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து சென்ற பின்னர் நாம் அந்த இடத்திற்கு மீண்டும் சென்ற போது மூன்று மோட்டார் சைக்கிள்களும் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர்.
img_3683
அதேவேளை தாக்குதலாளிகள் அங்கிருந்து செல்லும் போது மோட்டார் சைக்கிள் திறப்புக்களையும் தம்முடன் எடுத்து சென்றுள்ளனர்.  தற்போது தாக்குதலுக்கு இலக்கான மூன்று இளைஞர்களும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
 
உயிரிழந்த பல்கலைகழக மாணவன் வீட்டுக்கு முன்பு அட்டகாசம்.
 
பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல்கலைகழக மானவனான விஜயகுமார் சுலக்சன் வீட்டுக்கு அருகில் ஆலம்பிட்டி சந்தியில் நின்ற யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் மீதும் இலக்கதகடற்ற ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். அதனை அடுத்து சந்தியில் இருந்தவர்கள் சிதறி ஓடியுள்ளனர். பின்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
 
 
img_3692
 

http://globaltamilnews.net/archives/4622

  • கருத்துக்கள உறவுகள்

 முன்பு தலைநகரில் தலை விரித்தாடி எங்களை விரட்டியது, இப்ப எங்கட வீட்டிக்குள்ளேயேவந்து   ஆடி, விரட்டுது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்.. 1983 - 1985 காலப் பகுதிக்கு ரணில்.. மைத்திரி.. சந்திரிக்கா அரசு கொண்டு போய் நிறுத்தி இருக்குது. மகிந்தர் விட்ட மிச்சத்தை இவை நல்லிணக்கம் அடிப்படையில் தொடரினம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி தொடக்கத்திலை இருந்துதான் ஆரம்பிக்க வேணுமெண்டு எங்கடை அரிசியல் தலைவர் சொல்லுறது சரிதான்..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 மூல காரணத்தை  ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கப்படும்வரை இந்தப் பிரச்னை குறையாது, தொடரும். தங்களுக்கெதிரான விசாரணைகளை திசை திருப்பவும், பொலிஸ் படையை தன்பக்கம் ஈர்க்கவும் , மக்களுக்கு தன்னிடம் இருக்கும் மதிப்பை தக்க வைத்துக்கொள்ளவும், சாட்டொடு சாட்டாக  தமிழர்களை அழிக்கவும் நகர்த்தப்படும் காய்கள் இவை. இவை திருத்தப்படாத விடத்து இந்த அரசாங்கத்தின் எதிர்காலம், இருப்பு கேள்விக்குறியே.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அரச படைகளோடு முரண்படுகின்றவர்கள் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்தை துளியும் கொண்டவர்கள் இல்லை. எதிர்காலத்தில் இவர்கள் நடவடிக்கைகள் மக்கள் விடுதலை என்ற இலக்கோடு சம்மந்தப்படப் போவதும் இல்லை. மக்கள் விடுதலைக்கன அனைத்துக் கதவுகளையும் மூட முனையும் பேரினவாதத்தின் கனவுகளை நனவாக்குவதற்கே படைகளைசொறிகின்றார்கள். இவர்கள் சொறிவதை சிங்களப் பேரினவாதம் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது. 

நடந்த இரு மாணவர்களது படுகொலையும் எற்கனவே நடந்த இனப்படுகொலைகளுடன் இணைக்கப்பட்டு ஒரு தொடர் இனப்படுகொலைக்கு எதிரான பிரச்சாரமாக அணுகுவதற்குப் பதிலாக கடந்த காலத்தை துண்டிக்க முனைகின்றார்கள். ஆனால் பேரினவாத ஒடுக்குமுறை என்பது எப்போதும் மாறுவதில்லை. விதி வலியது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதை வைத்தே  அரசியல் ரீதியாக  போராட  அருமையான  சந்தர்ப்பம் , ஆனால்  எங்கள்  அரசியல்  தூக்கத்தில்  இருந்து  விழிக்கக்காணோம் tw_anguished:

சிங்கள-பௌத்த பாதுகாப்புதுறைப் பயங்கரவாதிகள் (சிங்கள-பௌத்த புலனாய்வுத்துறைப் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த கடற்படைப் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த விமானப்படைப் பயங்கரவாதிகள்) யாழ் மண்ணில் இருக்கும் வரை இது போன்ற தாக்குதல்கள் தொடரவே செய்யும்.

யாழ் மண்ணில் அமைதி நிலவ வேண்டுமெனின் இந்தப் பயங்கரவாதிகள் அகற்றப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம்/காவல்துறை இச்சந்தர்ப்பத்தை தாங்களே உருவாக்கி சரியாக பயன்படுத்துகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.