Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண் வீடு

Featured Replies

  • தொடங்கியவர்

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். 
வீட்டின் முக்கிய அங்கங்கள் :
- அத்திவாரம்
- சுவர்
- கூரை
- தரை

முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமானவை.

1 - மண்
சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 - 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். 

2 - வைக்கோல்
முன்னைய காலங்களில் மண் வீடுகளில் வைக்கோல் பாவிக்கப் படவில்லை. ஈரமான மண் உள்ளடக்கியிருக்கும் நீர் ஆவியாக வெளியேறும்போது மண் சுருங்குவதால் ஏற்படும் வெற்றிடம் வெடிப்பாக மாறுகிறது. இதனைத் தடுப்பதற்கக வைக்கலைத் துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்துவிட்டால் வெடிப்பு ஏற்படாது. வெற்றிடத்தை நோக்கி களி சுருங்கிச் செல்ல விடாது வைக்கல் துண்டுகள் பிடித்து வைத்திருக்கும். வைக்கலினால் இன்னும் ஒரு பயன்பாடு என்னவென்றால், வெப்பத்தை மண்சுவர் உறிஞ்சுவதைக் குறைக்கும். அதே போன்று குளிர் நாடுகளில் குளிர் காலங்களில் வீட்டிற்கு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியே விரயமாக்காமல் தடுக்கும். 

3 - நீர்
மண் மிகவும் உலர்ந்ததாக இருந்தால் நீர் சேர்த்துக் குழைத்துக் கொள்ளலாம். அதிக நீர் சேர்க்கக் கூடாது. வேலையும் சுலபமாக இருக்கும். 

4 - சூரிய ஒளி
சுவர்கள் சிறிது சிறிதாக உலர வைக்கப்பட வேண்டும். கொழுத்தும் வெயிலில் உலரும் சுவர் இலகுவாக இடிந்துவிடும். மதிய நேரத்தில் நேரடிச் சூரிய ஒளி படாமல் சுவரின் மேல் பகுதியில் இலைகுழைகளை வைக்கலாம்.

5 - ஆட்கள்
சுவர் கட்டுவததற்குப் பல விதமான முறைகள் உள்ளன. தொழில்நுட்பமோ அனுபவமோ தேவையில்லை. கட்டத் தொடங்கும்போதே அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மண் தோண்டுவது, வைக்கல் - நீர் கலப்பது - கட்டுபவருக்கு மண்ணை அள்ளிக் கொடுப்பது போன்ற சாதாரண பணிகள் இருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கு கொள்ளலாம். ஒரே நாளில் ஒரு சுவரை முடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நேரம் கிடைக்கும் போது நிறிது சிறிதாகக் கட்டலாம்.

6 - உபகரணங்கள்
சுவர் கட்டும் முறையைப் பொறுத்து சில விசேடமான உபகரணங்கள் தேவைப்படலாம். ஆனால் சாதாரணமாகக் கிடைக்கும் மண்வெட்டி, வாளி, சாந்தகப்பை போன்றவற்றைக் கொண்டே கட்ட முடியும்.

இனி சுவர் கட்டும் முறைகளைப் பார்ப்போம்.
- தொடரும்

  • Replies 59
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1 - களிமண் கற்கள் (Adobe)

முன்பு எமது கிராமங்களில் மரக் குச்சிகளால் வேலி போன்று அமைத்து அதனைச் சுற்றிக் களிமண்ணால் மூடிச் சுவர் கட்டும் முறையைப் பார்த்திருப்போம். இவ்வாறான சுவர்களை மிக இலகுவாகக் கட்ட முடியுமாயினும் நேர்த்தியற்றனவாக அழகற்றதாக இருக்கும்.

ஆகவே சீமெந்து போலவே கற்களை அரிந்து சுவர் கட்டும் Adobe முறையை முதலில் பார்ப்போம். களிமண் வைக்கோல் துண்டுகள் அல்லது அதற்குச் சமனான நார்ப் பொருட்கள் நீர் ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்துக் கற்களை அரிந்து கொள்ள வேண்டும். சாதாரண கற்களை விடப் பெரிதாக இருக்க வேண்டும். ஏனென்றால் சுவரின் அகலம் வீட்டின் உயரத்தைப் பொறுத்து 30 முதல் 40 சென்ரி மீற்றர்களாக இருக்கும். நான்கு பலகைகளை நீள்சதுரமாக அடித்து அச்சினைச் செய்துகொள்ள வேண்டும். நீரின் அளவைக் கல் அரிவதற்கு வசதிக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். கற்களை அரியும்போது நிலத்துகடன் களிமண் ஒட்டாமல் இருக்கச் சிறிதளவு மணல் தூவி விடலாம்.adobe-brique.jpg

அரியப்பட்ட கற்களை நேரடியாக வெயிலில் வைத்து உலர்த்தக் கூடாது. அப்படி உலர்த்தினால் இலகுவாக வெடித்தும் உருந்தும் போய்விடும். மரங்களுக்குக் கீழ் அல்லது ஓலைகளால் மூடி விடலாம். அவை முற்றாக உலர இரண்டு கிழமை ஆகும். 4 நாட்களின் பின்னர் கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் காற்றுப் போகக் கூடியவாறு அடுக்கியும் உலர விடலாம். 

காய்ந்த கற்களை சீமெந்துக் கற்களை அடுக்கிச் சுவர் கட்டுவது போலவே அடுக்கிக் கட்ட வேண்டும். கற்களை ஒட்டவைக்க சற்று அதிகம் களி அதிகமான மண் அல்லது சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவையைப் பாவிக்கலாம். கதவு அல்லது கூரையின் தீராந்தி தாங்கும் இடங்களில் கீழுள்ள படத்தில் காட்டப்பட்டது போன்று கற்களைச் சதுரமாக அடுக்கிக் கட்ட வேண்டும். நடுவில் இரும்பு தேவையில்லை. நடுவிலுள்ள இடைவெளியைக் களிமண்ணால் நிரப்பலாம்.

adobe-brique3.jpg

வீடு கட்டி முடிக்கப்பட்டதும் இச் சுவர்களின் மீது விசேடமான களிக் கலவையால் நேர்த்தியாகப் பூசி மெழுகியபின் சுண்ணாம்புப் பூச்சு அல்லது இயற்கையான வண்ணக் கலவைகளைப் பாவித்துச் சீமெந்துச் சுவர் போலவே ஆக்கலாம். ஆனால் சுண்ணாம்புப் பூச்ச்சு 100 வீதமான மண்சுவரின் பயனைத் தராது. 

இம் முறையில் ஒரு மாடி வரையில் சுவரை எழுப்பிக் கட்ட முடியும். அதற்குமேல் உறுதியாக இராது. மழைநீர் சுவரில் படாதவாறு கூரைகள் சுவரை விட வெளியே நீண்டிருக்க வேண்டும். 

வெள்ளப் பெருக்கை மட்டுமே இச் சுவர் தாக்குப் பிடிப்பது கடினம். சரியான முறையில் பராமரிக்கப்படும் சுவர்கள் 100 வருடங்களைத் தாண்டியும் அதே தன்மையுடன் இருக்கும். 

- தொடரும்

adobe-brique2.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

450px-Brihadeeswara.jpg

இங்கு நான் மதத்தையோ சமயத்தையோ இழுக்கவில்லை.

10 நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தஞ்சை பெருங்கோவில் கோபுரம் இன்றும் நிலைத்து நிற்கின்றது. அன்றைய காலத்து கட்டுமான பரிமாணங்களை ஆராய்ந்து பார்த்தாலே.....
மண்ணின்....மண்வீட்டின் மகிமை தெரியும்.

  • தொடங்கியவர்

பலரும் நினைப்பது போல் மண்சுவர் அவ்வளவு எளிதில் உடைந்து விடாது. 
Adobe முறையில் அரிந்து கட்டப்பட்ட இந்த வீட்டைப் பாருங்கள். 

maison-terre.jpg
 
இதனை எப்படிக் கட்டினார்கள் என்பதை விளக்குகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...

  • தொடங்கியவர்

2 - அச்சுச் சுவர்
சாக்குப் பைகளில் மண்ணை நிரப்பி அடுக்கிச் சுவர்களாக்கும் இன்னொரு முறையும் உண்டு. இதுவும் அழகாக இராது.
மனிதனின் தேவைக்குள் அழகும் முக்கியத்துவம் பெறுவதால் வேறு முறைகளைக் கையாள வேண்டும். அச்சுச் சுவர் என்பது சரியான பதமோ தெரியவில்லை. இரு பக்கமும் தட்டையான பலகைகளை வைத்து நடுவில் களிமண்ணை நிரப்பி இடித்து நேர்த்தியான சுவராகக் கட்டுவதே இந்த முறையாகும். 

pise.jpg
இது பிரான்சிலும் சில வட ஆபிரிக்க நாடுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. களியின் அளவு இன்னும் குறைவாக 15 வீதம் வரையில் இருப்பதே இந்த முறையின் சிறப்பாகும். அத்துடன் சிறிய கற்களையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். வைக்கோல் தேவையில்லை. 

Adobe முறையில் கட்டச் சாத்தியப்படாத இடங்களில் இம் முறையைத் தெரிவு செய்யலாம். ஆனால் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். அச்சுப் பலகையை உருவாக்கவும் நேர்த்தியாகக் கையாளவும் சற்று அனுபவம் வேண்டும். 

சுவர்களின் தடிப்பம் Adobe முறையை விட அதிகமாக இருக்கும். 60 - 70 சென்ரி மீற்றர் அகலமாக இருக்க வேண்டும். வெளிச் சுவர்கள் நாளடைவில் மழையில் கரைந்து போகும். இவ்வாறான சுவர்கள் தடிப்பம் அதிகமாக இருப்பதால் 4 - 5 வருடங்களுக்கு ஒரு தடவை களிமண்ணால் பூசி மெழுகி விடுவார்கள். பிரான்சில் சில வீடுகளின் சுவர் 2 மீற்றர் தடிப்பமாகவும் உள்ளன. இச் சுவர்கள் 20 - 30 ஆண்டுகள் மழையைத் தாக்குப் பிடிப்பதுடன் குளிரையும் நன்றாகத் தாங்கும்.

இந்த முறையில் சுவர்களை மிக வேகமாகக் கட்ட முடியும் என்பதால் தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டுப் புதுமைகள் புகுத்தப்பட்டால் களி குறைந்த மணல் பிரதேசங்களிலும் மண் வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விடச் சற்றுத் தொழில்நுட்பம் கூடியதும் உறுதியானதும் செலவு குறைந்ததும் வேகமாகக் கட்டக் கூடியதும் மண்ணைச் சிக்கனமாகப் பாவிக்கக் கூடியதும்  அழகானதுமான இன்னுமொரு முறை உள்ளது.

- தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎01‎/‎2017 at 1:46 PM, இணையவன் said:

இன்னுமொரு அழகான வீடு.

maison-terre2.JPGmaison-terre3.jpgmaison-terre4.jpg

அப்படியே எனக்கும் இப்படி ஒரு சின்ன,அழகான வீடு கட்டித் தாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பயனுள்ள ஒரு பதிவுதான் இது. ஆனால் இங்கு இப்படியான கற்கள் கடைகளில் விற்பதில்லை.

மேலே உள்ள படத்தில் உள்ளது சுடாத கற்கள் போலவும் கீழே உள்ள வீட்டின் கற்கள் சுட்ட கற்கள் போலவும் உள்ளனவே ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தேடலும் பதிவும்...

மண்வீடுகள் சிறிதாக இருந்தாலும் மனதிற்கு ஒருவித மகிழ்வை கொடுப்பன ஒரு சில நாட்கள் மண்வீடுகளில் தங்கியிருந்திருக்கிறேன். என் சின்ன வயது கனவுகளில் இந்த மண்வீடுகள் பிரதானமானவை மட்டுமல்ல விருப்புக்குரியவையாகவும் வலம் வந்திருக்கின்றன. முதுமையில் காலத்தனிமையில் ஆசிரமம் போன்ற குடிலில் வாழ பெருவிருப்பம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
On 24 janvier 2017 at 7:35 PM, விசுகு said:

தொடருங்கள்...

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

On 25 janvier 2017 at 9:45 PM, ரதி said:

அப்படியே எனக்கும் இப்படி ஒரு சின்ன,அழகான வீடு கட்டித் தாங்கோ

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அதென்ன எல்லோரும் மண் வீடு என்றவுடன் சின்ன வீடு குடிசை என்ற வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறீர்கள் ? 
இதுவும் மண் வீடுதான். 
maison-ex6.jpg

On 25 janvier 2017 at 10:28 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் பயனுள்ள ஒரு பதிவுதான் இது. ஆனால் இங்கு இப்படியான கற்கள் கடைகளில் விற்பதில்லை.

மேலே உள்ள படத்தில் உள்ளது சுடாத கற்கள் போலவும் கீழே உள்ள வீட்டின் கற்கள் சுட்ட கற்கள் போலவும் உள்ளனவே ?

நன்றி. 
அந்தப் படத்தில் உள்ளது சுடாத கற்களைக் கொண்டு கட்டிய வீடு. ஒரே இடத்தில் எடுக்கப்படும் மண்ணிலும் பல வகையான நிறங்கள் காணப்படும். இந்த நிற வித்தியாசங்கள் சுட்ட மண்போல் தோன்றும்.
எனது அடுத்த பதிவில் இன்னொரு முறையில் கள்களை உருவாக்குவது பற்றி எழுதுகிறேன். அக் கற்கள் பிரான்சில் சில கடைகளில் விற்பனைக்கு உண்டு. ஆனால் விலை சுட்ட கற்களை விட அதிகம்.

On 26 janvier 2017 at 0:38 AM, வல்வை சகாறா said:

நல்லதொரு தேடலும் பதிவும்...

மண்வீடுகள் சிறிதாக இருந்தாலும் மனதிற்கு ஒருவித மகிழ்வை கொடுப்பன ஒரு சில நாட்கள் மண்வீடுகளில் தங்கியிருந்திருக்கிறேன். என் சின்ன வயது கனவுகளில் இந்த மண்வீடுகள் பிரதானமானவை மட்டுமல்ல விருப்புக்குரியவையாகவும் வலம் வந்திருக்கின்றன. முதுமையில் காலத்தனிமையில் ஆசிரமம் போன்ற குடிலில் வாழ பெருவிருப்பம்.

நன்றி சகாறா.
மண் வீடுகள் சுவாசிப்பதாகக் கூறுவார்கள். இயற்கை அன்னையின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மையையே உண்டாக்கும்.

35 minutes ago, இணையவன் said:

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அது உங்கள் சொந்த முயற்சி :grin::grin:

பதிவுக்கு நன்றி இணையவன்

என்னிடம் மூன்று கேள்விகள் 
(எனக்கும் விடை தெரியாது - சண்டைக்கு வரவேண்டாம்)

சீமெந்து கற்களைவிட செங்கற்கள் நல்லம்தானே?
அதை ஏன் வடபகுதி மக்கள் விரும்புவதில்லை?
மண்வீடுகளை எமது சூழலில் எப்படி அமைக்கலாம்?

எனக்கும் ஒரு ஐடியா இருக்கு - ஒரு மண் வீடு கட்டி வாழ (சின்ன வீடில்லை :grin:)

நானும் எங்கள் வீட்டிலும் ஒருகாலத்தில் அம்மம்மாவுக்கென்று மண்ணிலேயே கட்டிலையும் செய்துள்ளேன். ரொம்ப விரும்பி அதில் படுப்பார் + நானும்தான் அவருடன்.
 
  • தொடங்கியவர்

3 - அமுக்கத்துக்குள்ளாக்கப்பட்ட மண் கற்கள்

நவீன முறையில் தயாரிக்கப்படும் இக் கற்கள் ஏறத்தாள சுட்ட செங்கற்கள் போல் காட்சியளிக்கும். இக் கற்களை உருவாக்க 15 முதல் 20 வீதமான களியை உள்ளடக்கிய மண் போதுமானது. நீர் அதிகம் தேவையில்லை. வைக்கோலும் தேவையில்லை. ஆனால் குருணிக் கற்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது. சிலர் 5 வீதம் சுண்ணாம்பும் சேர்த்துக் கொள்வார்கள். 

தயாரான மண்ணை அச்சு ஒன்றில் இட்டு அதனை சில வினாடிகள் அமுக்கத்துக்கு உட்படுத்த வேண்டும். இங்குதான் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். கீழுள்ள படத்தில் இருப்பது போன்று கையால் அமுக்கும் கருவியை உள்ளூரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். 

machine.jpg

அமுக்கும் திறன் 25 kg/cm2 (2.5 MPa) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது 30 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடைய கல்லில் 15 தொன் அமுக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும். 

ஆபிரிக்க நாடுகளில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களும் பாவிக்கப்படுகின்றன. இவற்றினால் பெரும் தொகையான கற்களை விரைவாக உருவாக்க முடியும். அமுக்கும் திறனும் அதிகமாக இருக்கும். இவ்வகையான இயந்திரங்கள் 2 கன மீற்றர் அளவான் மண்ணை 1 கன மீற்றர் அளவுக்குச் சுருக்கும் திறன் உடையன. அமுக்கம் அதிகமாக கல்லின் உறுதியும் அதிகரிக்கும். கல்லின் நிறையும் மிக அதிகமாக இருக்கும்.

machine2.jpg

கற்களை உருவாக்கியபின் அவற்றை இடைவெளி உள்ளவாறு அடுக்கி, படங்கினால் மூடி 3 - 4 கிழமைக்கு விட வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு தடவை கற்களின் மேல் நீர் தெளித்து ஈரப்படுத்த வேண்டும். 4 கிழமைகளுக்குப் பின்னர் படங்கினை நீக்கிவிட்டு நிழலில் 3 மாதங்கள் உலர விட வேண்டும்.

மண்ணின் தன்மையையும் அமுக்கத்தின் அளவையும் பொறுத்து இக் கற்கள் 4 முதல் 10 MPa அளவான அமுக்கத்தைத் தாங்கவல்லவை. அதாவது 1 MPa என்பது 1 சதுர மீற்றர் பரப்பளவில் ஏறத்தாள 100 தொன் பாரத்தை வைப்பதற்குச் சமன். 

இக் கற்களைப் பயன்படுத்தி உறுதியான பாரமான கூரையைத் தாங்கக் கூடியதான மாடி வீட்டினைக் கட்டிக் கொள்ளலாம். Adobe கற்களைப் போலவே களிமண்ணால் இவற்றை ஒட்டிச் சுவர் அமைக்கலாம். கல்லை ஒட்டுவதற்கு முன்னர் ஒட்ட வேண்டிய பகுதியை நீரில் நனைத்து ஒட்டினால் உறுதியாக இருக்கும். சீமெந்துக் கற்களை விட இவை பாரமாக இருப்பதால் ஒரே தடவையில் ருவரைக் கட்டி எழுப்புவது நல்லதல்ல. 1 மீற்றர் உயரமாகக் கட்டியபின் உலர விட்டு அடுத்தநாள் தொடரலாம். 

brique_btc.jpg

இக் கற்களின் மேற்பரப்பு நேர்த்தியாக இருப்பதால் வெளிப் பரப்பில் எதுவும் பூசாது கற்களுக்கு இடையில் ஒட்டுவதற்காக பயன்படுத்திய களிமண்ணை மட்டும் மட்டமாகச் சுரண்டி விட்டால் அழகாக இருக்கும். 

பிரான்சில் ஒரு நிறுவனம் வித்தியாசமான முறையில் கற்களை வடிவமைத்துள்ளது. இவற்றை ஒட்ட வேண்டியதில்லை. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் போதுமானது. 

வெளிப் பூச்சை விரும்புபவர்கள் தமக்குப் பிடித்தமான வகையில் பூசி பெயின்ற் அடித்து விட்டால் மண் சுவர் என்றே சொல்ல முடியாது. இயற்கையான பூட்டுக்களும் உள்ளன. அவற்றில் ஒன்றையும் பார்க்கலாம்.

- தொடரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அதென்ன எல்லோரும் மண் வீடு என்றவுடன் சின்ன வீடு குடிசை என்ற வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறீர்கள் ? 
இதுவும் மண் வீடுதான். 

maison-ex6.jpg

இன்னும் அப்படி ஒரு வரட்டு கௌரவத்துடனான / போலியான சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

16425728_1598481213514267_75380269757992இதற்க்குள்ளும் வாழ்ந்திட ஏங்குது மனது 

  • தொடங்கியவர்
1 hour ago, ஜீவன் சிவா said:

அது உங்கள் சொந்த முயற்சி :grin::grin:

பதிவுக்கு நன்றி இணையவன்

என்னிடம் மூன்று கேள்விகள் 
(எனக்கும் விடை தெரியாது - சண்டைக்கு வரவேண்டாம்)

சீமெந்து கற்களைவிட செங்கற்கள் நல்லம்தானே?
அதை ஏன் வடபகுதி மக்கள் விரும்புவதில்லை?
மண்வீடுகளை எமது சூழலில் எப்படி அமைக்கலாம்?

எனக்கும் ஒரு ஐடியா இருக்கு - ஒரு மண் வீடு கட்டி வாழ (சின்ன வீடில்லை :grin:)

நானும் எங்கள் வீட்டிலும் ஒருகாலத்தில் அம்மம்மாவுக்கென்று மண்ணிலேயே கட்டிலையும் செய்துள்ளேன். ரொம்ப விரும்பி அதில் படுப்பார் + நானும்தான் அவருடன்.
 
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ஜீவன்.

சீமெந்தை விடச் செங்கல் உறுதியானது நீண்ட காலம் நிலைக்கக் கூடியது. ஆனால் விலை அதிகம் வேலையும் அதிகம். வெளிநாடுகளில் செங்கல் வீடுகள் கட்டும்போது வெளிச் சுவரில் செங்கல் தெரியும்படியாகக் கட்டுவார்கள். அதுவும் ஒரு அழகு. சீமெந்துச் சுவர்களிலும் சிலர் செங்கல்லை அழகுக்காக ஒட்டி விடுவார்கள். எமது ஊரில் வித விதமான வண்ணப் பூச்சுகள் பூசப்படுவதால் வெளித் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாக நினைக்கிறேன். வேறு காரணங்கள் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அவர்களே தங்கள் வீடுகளை அமைக்க அரசாங்கம் உதவிப் பணம் வழங்கியது. இதில் செங்கல் பாவித்து வீடுகளை அமைக்க அதிகமான உதவிப்பணம் வழங்கப்பட்டது. ஆனால் செங்கல் வீடுகளை நான் காணவில்லை.

மண் வீடுகளை எமது ஊர்களில் எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். வீட்டின் இடத்தைத் தெரிவு செய்யும்போது வெள்ளம் ஏற்படாத இடமாகத் தெரிவு செய்ய வேண்டும். கரையோரப் பகுதிகளில் நேரடியான காற்றுவீச்சைத் தவிர்க்கும் இடமாகத் தெரிவு செய்ய வேண்டும். அது தவிர எமது சமுதாயத்தில் மண் வீட்டுக்குண்டான கௌரவம் பிரச்சனையாக இருக்கிறது. கல் வீடுகள் சூழ்ந்துள்ள இடத்தின் நடுவே மண் வீடு கட்டவே தயக்கமாக இருக்கும்.  நமது பாரம்பரிய முறையுடன் கூடிய கம்பீரமான அழகான நவீனமான ஒரு வீட்டை உதாரணமாகக் கட்டிக் காட்ட வேண்டும். பணமில்லாதவர்கள்தான் மண்ணால் வீடு கட்டுவதாக நினைப்பார்கள். இதன் நோக்கம் சுகாதாரமும் பண்பாடும் இயற்கையைப் பேணுவதுமே என்ற கருத்து முக்கியத்துவம் பெற வேண்டும். ஒருவேளை வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் மண்ணால் வீடு கட்டினால் இக் கருத்து எடுபடலாம் :unsure:.

இங்கு 60 - 70 ஆம் ஆண்டுகளில் சீமெந்தால் கட்டப்பட்ட பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டுப் புதிய கட்டடங்கள் கட்டப் படுகின்றன. தற்போது கட்டப்படும் கட்டடங்களுக்கும் கால எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இயற்கைக் கற்களை அறுத்துக் கட்டப்பட்ட கட்டடங்களே பெரும்பாலும் நூற்றாண்டுகள் நிலைத்துள்ளன. சீமெந்து வீடுகளும் நிரந்தரமானவை அல்ல. அவை வலுவிளந்து போவதற்கான முக்கிய காரணங்கள் சரியான பராமரிப்பின்மையும் நிலத்தின் அசைவும் ஆகும். சீமெந்து அத்திவாரம் நில அசைவை ஓரளவு தாங்கும். மண் வீடுகளின் சுவர்கள் அகலம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு ஏற்படாது. அத்துடன் வெடிப்பு ஏற்பட்டால் இலகுவாகச் சரிசெய்யலாம்.

பதிலுக்கு நன்றி இணையவன் 

32 minutes ago, இணையவன் said:

நமது பாரம்பரிய முறையுடன் கூடிய கம்பீரமான அழகான நவீனமான ஒரு வீட்டை உதாரணமாகக் கட்டிக் காட்ட வேண்டும். பணமில்லாதவர்கள்தான் மண்ணால் வீடு கட்டுவதாக நினைப்பார்கள். இதன் நோக்கம் சுகாதாரமும் பண்பாடும் இயற்கையைப் பேணுவதுமே என்ற கருத்து முக்கியத்துவம் பெற வேண்டும்.

முயற்சியில் உள்ளேன் - தேவைப்படும்போது உங்களிடமும் தொழில்நுட்ப உதவி கோருவேன்.

வெற்றிபெற்றால் பகிருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அதென்ன எல்லோரும் மண் வீடு என்றவுடன் சின்ன வீடு குடிசை என்ற வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறீர்கள் ? 
இதுவும் மண் வீடுதான். 
 
எனக்கு நான் மட்டும் இருக்க ஒரு சின்னக் குடிசையே போதும்...அதையும் உங்கள் செலவில் நீங்களே கட்டித் தாறேன் எனறு சொன்னது மிக்க மகிழ்ச்சி:unsure:

17 hours ago, ஜீவன் சிவா said:

சின்ன வீடில்லை :grin: - 
 
கவனம் அண்ணை, பெரிய வீட்டுக்கு தெரிஞ்சால் சிக்கலாகும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 06/02/2017 at 4:09 PM, முனிவர் ஜீ said:

16425728_1598481213514267_75380269757992இதற்க்குள்ளும் வாழ்ந்திட ஏங்குது மனது 

உங்கே இருந்துகொண்டே ஏன் ஏங்க வேண்டும். வீட்டுக்குப் பக்கத்திலேயே இப்படி ஒன்றைக் கட்டுவது தானே முனிவர் ?

இலங்கையில் இப்படியான வீடு கட்டுவதற்கான வளங்கள் இருக்கின்றனவா ??

அதாவது களிமண் கொண்டு கல் அரிவதற்கான இயந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/01/2017 at 9:36 PM, இணையவன் said:

2 - அச்சுச் சுவர்
சாக்குப் பைகளில் மண்ணை நிரப்பி அடுக்கிச் சுவர்களாக்கும் இன்னொரு முறையும் உண்டு. இதுவும் அழகாக இராது.
மனிதனின் தேவைக்குள் அழகும் முக்கியத்துவம் பெறுவதால் வேறு முறைகளைக் கையாள வேண்டும். அச்சுச் சுவர் என்பது சரியான பதமோ தெரியவில்லை. இரு பக்கமும் தட்டையான பலகைகளை வைத்து நடுவில் களிமண்ணை நிரப்பி இடித்து நேர்த்தியான சுவராகக் கட்டுவதே இந்த முறையாகும். 

pise.jpg
இது பிரான்சிலும் சில வட ஆபிரிக்க நாடுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. களியின் அளவு இன்னும் குறைவாக 15 வீதம் வரையில் இருப்பதே இந்த முறையின் சிறப்பாகும். அத்துடன் சிறிய கற்களையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். வைக்கோல் தேவையில்லை. 

Adobe முறையில் கட்டச் சாத்தியப்படாத இடங்களில் இம் முறையைத் தெரிவு செய்யலாம். ஆனால் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். அச்சுப் பலகையை உருவாக்கவும் நேர்த்தியாகக் கையாளவும் சற்று அனுபவம் வேண்டும். 

சுவர்களின் தடிப்பம் Adobe முறையை விட அதிகமாக இருக்கும். 60 - 70 சென்ரி மீற்றர் அகலமாக இருக்க வேண்டும். வெளிச் சுவர்கள் நாளடைவில் மழையில் கரைந்து போகும். இவ்வாறான சுவர்கள் தடிப்பம் அதிகமாக இருப்பதால் 4 - 5 வருடங்களுக்கு ஒரு தடவை களிமண்ணால் பூசி மெழுகி விடுவார்கள். பிரான்சில் சில வீடுகளின் சுவர் 2 மீற்றர் தடிப்பமாகவும் உள்ளன. இச் சுவர்கள் 20 - 30 ஆண்டுகள் மழையைத் தாக்குப் பிடிப்பதுடன் குளிரையும் நன்றாகத் தாங்கும்.

இந்த முறையில் சுவர்களை மிக வேகமாகக் கட்ட முடியும் என்பதால் தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டுப் புதுமைகள் புகுத்தப்பட்டால் களி குறைந்த மணல் பிரதேசங்களிலும் மண் வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விடச் சற்றுத் தொழில்நுட்பம் கூடியதும் உறுதியானதும் செலவு குறைந்ததும் வேகமாகக் கட்டக் கூடியதும் மண்ணைச் சிக்கனமாகப் பாவிக்கக் கூடியதும்  அழகானதுமான இன்னுமொரு முறை உள்ளது.

- தொடரும்

இரண்டு மீட்டர் என்று சரியாகத்தான் எழுதியுள்ளீர்களா இணையவன்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கே இருந்துகொண்டே ஏன் ஏங்க வேண்டும். வீட்டுக்குப் பக்கத்திலேயே இப்படி ஒன்றைக் கட்டுவது தானே முனிவர் ?

இலங்கையில் இப்படியான வீடு கட்டுவதற்கான வளங்கள் இருக்கின்றனவா ??

அதாவது களிமண் கொண்டு கல் அரிவதற்கான இயந்திரம்.

இப்பொழுது நகரமயமாக்கலில் காரணமாக இப்படியான இடங்களை  காண முடியாதுள்ளது அப்படி போக வேண்டும் என்றால்பல கிலோமீற்றர் தூரம் போனால் இதே போல் கன இடங்களை காணலாம் உதாரணமாக அம்பாறையில் கொலனி என்ற பக்கம் இதே போல் வாய்க்கால் ஓரம் வீடு குளிரான காற்று பச்சை பசேல் என இருக்கும் இடம்  

நான் நண்பர்களுடன் விடுமுறையில் சென்று வருவதுண்டு இப்படியான இடங்களூக்கு  சிங்கள மக்கள் , தமிழ் மக்கள் , முஸ்ஸிம் மக்கள் என மூவின மக்களும் வாழும் இடம்  

களிமண்ணால் அரியும் கற்கள் இருக்கின்றன இப்பவும் செங்கல் சூளைகள்  இயந்திரம் இங்கே வரவில்லை  கைகளினால் தான் இதுவ்ரைக்கும் அரிகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை. என் கணவர் வன்னியில் தான் வளர்ந்தவர். நான் இதைக் காட்டியபோது வன்னியில் தாமும் களிமண் கொண்டு கல் அறுத்துத் தமது வீட்டைக் கட்டி மேலுக்கு சீமெந்து பூசியதாகவும், வன்னியில் பலர் அப்போது அப்படியான வீடுகளையே கட்டியதாகவும் கூறனார்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
On 13 février 2017 at 10:21 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இரண்டு மீட்டர் என்று சரியாகத்தான் எழுதியுள்ளீர்களா இணையவன்? 

ஆம் 2 மீற்றர்தான். சுவரின் தடிப்பம் அதிகமாக அதன் வெப்பத் தடுப்பும் அதிகமாகும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இருக்கும் சூடு வெளியேறுவது குறையும். அத்துடன் வீட்டின் உயரத்தையும் அதிகரிக்கலாம். 

On 14 février 2017 at 11:49 AM, முனிவர் ஜீ said:

இப்பொழுது நகரமயமாக்கலில் காரணமாக இப்படியான இடங்களை  காண முடியாதுள்ளது அப்படி போக வேண்டும் என்றால்பல கிலோமீற்றர் தூரம் போனால் இதே போல் கன இடங்களை காணலாம் உதாரணமாக அம்பாறையில் கொலனி என்ற பக்கம் இதே போல் வாய்க்கால் ஓரம் வீடு குளிரான காற்று பச்சை பசேல் என இருக்கும் இடம்  

நான் நண்பர்களுடன் விடுமுறையில் சென்று வருவதுண்டு இப்படியான இடங்களூக்கு  சிங்கள மக்கள் , தமிழ் மக்கள் , முஸ்ஸிம் மக்கள் என மூவின மக்களும் வாழும் இடம்  

களிமண்ணால் அரியும் கற்கள் இருக்கின்றன இப்பவும் செங்கல் சூளைகள்  இயந்திரம் இங்கே வரவில்லை  கைகளினால் தான் இதுவ்ரைக்கும் அரிகிறார்கள் 

களிமண் கற்கள் இலங்கையில் அரியப்படுவது பற்றிக் கேள்விப்படவில்லை. மேலதிக விபரம் தெரிந்தால் எழுதுங்கள்.

On 15 février 2017 at 11:12 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை. என் கணவர் வன்னியில் தான் வளர்ந்தவர். நான் இதைக் காட்டியபோது வன்னியில் தாமும் களிமண் கொண்டு கல் அறுத்துத் தமது வீட்டைக் கட்டி மேலுக்கு சீமெந்து பூசியதாகவும், வன்னியில் பலர் அப்போது அப்படியான வீடுகளையே கட்டியதாகவும் கூறனார்.

எனக்கும் தெரியாது. :unsure:

அந்த வீடுகள் இப்போது எப்படி உள்ளன என்று தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

ஆம் 2 மீற்றர்தான். சுவரின் தடிப்பம் அதிகமாக அதன் வெப்பத் தடுப்பும் அதிகமாகும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இருக்கும் சூடு வெளியேறுவது குறையும். அத்துடன் வீட்டின் உயரத்தையும் அதிகரிக்கலாம். 

களிமண் கற்கள் இலங்கையில் அரியப்படுவது பற்றிக் கேள்விப்படவில்லை. மேலதிக விபரம் தெரிந்தால் எழுதுங்கள்.

கிழக்கில் அம்பாறை சிங்கள மக்களால் அரியப்படும் கற்கள் கொஞ்சம் பெரிது  விலையும் கூட  அடுத்து தமிழர்கள் அதிகம் இருந்த திராய்க்கேணி என்ற இடல் செங்கல் உற்பத்திக்கு பெயர் போன இடம் தற்போது அந்த இடங்களை மூஸ்லீம்கள் வாங்கி கொண்டு வருவதால் அந்த தொழில் இல்லாமை போய் விட்டது அடுத்தது நைனா காடு என்று என்று சொல்லப்படும் இடத்தில்தான்  கல் அரிகிறார்கள் அம்பாறையில் அது முஸ்லீம் மக்கள் கிழக்கில் கல் வெட்டுவது என்று சொல்வார்கள் அரிவது என்று சொல்வதில்லை  அதிக களைகளை எடுத்து பள்ளம் ஆகியதால் சில இடங்களை தற்போது தவிர்த்து விட்டார்கள் களி மண் அகல

நாளை வேண்டுமானால் படங்களை எடுத்து இணைக்கிறேன் இணையவன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.