Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்!

 
Rahman_liveday.jpg

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016&க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது.

தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள்.

எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார்.

தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா சென்றார் ரஹ்மான். அங்கு 3000 ஆண்டு பழமையான இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்து வருகிறது.

மூன்று வருடங்கள் பழகினால் மட்டுமே அந்த கருவியை வாசிக்க முடியும். ரஹ்மான் அந்த கருவியை பார்த்து ஒரு டஜன் வாங்கிக் கொண்டார். விலைபேசி வாங்கியும் கொண்டார்.

ஆனால், பரிதாபம் 3000 வருட பாரம்பரிய இசைக்கருவி சில நூறுகளே…! பார்த்தார் ரஹ்மான். இந்த இசைக்கருவிகளுக்கு சில நூறுகள் விலை என்பது அவமானம். இது விலைமதிப்பில்லாத கருவி.

வறுமை, பசி, பட்டினியால் வாடும் சோமாலியா குழந்தைகள் நலனுக்காக பல கோடிகளை நன்கொடையாக கொடுத்து விட்டார். ஆடிப்போனது சோமாலியா அரசு. அவர்களால் நம்பவே முடியவில்லை.

சோமாலியா பிரதமர் அழுதே விட்டார். சட்டென்று ரஹ்மான் கால்களில் விழப்போனார். பதறிப் போய் தடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே ஒரு வார்த்தை சொன்னார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே…!

https://liveday.in/dont-miss-headline-news-today/rahman-donor/

இது தான் இசுலாமியத்தின் கொடுமை
இனத்தை மறந்து
மதத்தை பீடித்துக்கொள்ளும்.

இத்தனை லட்சம் சொந்த இன மக்கள்அழிந்தபோதும்
சொந்த மொழி பேசும் இத்தனை லட்சம் மக்கள் பட்டினி வாழ்வை எதிர் கொண்டபோதும் வராத கருணை இசுலாமிய நாடுமீது வருகிறது...

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக் குழந்தைகள் மீது கருணை இல்லா விட்டலாவது பரவாயில்லை. தமிழக் குழந்தைகள் மீதும் இல்லை என்பது தான் வேதனை. பிழைக்க மட்டும் தமிழ்நாடு தேவை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஈழக் குழந்தைகள் மீது கருணை இல்லா விட்டலாவது பரவாயில்லை. தமிழக் குழந்தைகள் மீதும் இல்லை என்பது தான் வேதனை. பிழைக்க மட்டும் தமிழ்நாடு தேவை

சொந்த நாட்டய் உயர்த்துவதில் தவறு இல்லை.
வாழ்க்கைக்கே அல்லலுறுபவர்களை தூக்கி விடுவதிலும் தவறு இல்லை.

ஈழத்தை பொறுத்தவரை அங்கே உணவனுக்கு கஷடப்பட வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.
போதிய அளவில் எல்லாம் இருக்கிறது ........ அதை கொள்ளை அடிப்பதால்த்தான் பிரச்சனை.
ஒவ்வரு கோவிலிலும் எவளவை கொட்டுகிறோம் ஒரு நாளைக்கு.
அதையே ஒரு ஏழையின் வாயில் கொட்டினால் எவ்ளவு புண்ணியம் கிடைக்கும்??

தமிழகம் கேரளா இரண்டும் இப்போ இந்தியாவிலேயே பணக்கார மாநிலங்கள் 
கூலி வேலை செய்ய தமிழகத்தில் ஆட்கள் இல்லை ........... உத்திரபிரதேசம் மகாராஷ்ட்டிரா போன்ற 
இடங்களில் இருக்கு ஏழைகள் இப்போ தமிழகத்திட்கு கூலி வேலை தேடி வருகிறார்கள்.

ஈழத்திலும் தமிழகத்திலும் ஏழைகள் இருக்கிறார்கள் ....
அவர்களை நேரில் கண்டு ஏதும் கொடுத்தால் தவிர .... வேறு ஒரு மாதிரியியும் அவர்களிடம் 
உதவிகளை சேர்க்க முடியாது.
இடையில் இருப்பவன் கொள்ளை அடிப்பான் ..... லூசு முத்தினவன் கோவில் கட்டுவான்.

சோமாலியாவின் நிலைமை வேறு விதமானது .....
ரகுமானின் செயல் மிகவும் பாராடடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தில் கிழக்கு மாகணத்தில் எவ்வளவு சனம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஸ்டப்படுவது மருதருக்கு தெரிந்திருக்க நியாயமில்லைத் தான்...அவர்களுக்கு ரகுமானின் உதவி தேவை இல்லை...ஆனால் தமிழகத்தில் எவ்வளவு சனம் பட்டினியால் வாடுது அந்த சனங்களுக்காவது ரகுமான் உதவி இருக்கலாம்.
தமிழகத்திற்கு வடக்கில் இருந்து கூலித் தொழிலாளார்கள் வரக் காரணம் அவர்கள் குறைந்த கூலியில் வேலை செய்வார்கள் என்பதால் தானே தவிர தமிழகத்தில் ஒருத்தரும் வறுமையில் இல்லையில் என்பது சரியான கருத்தல்ல.
குறைந்தபட்சம் இந்தியாவில் கஸ்டப்படுபவர்களுக்காவது உதவி இருக்கலாம்...ஆபிரிக்காரருக்கு உதவ போனதிற்கு காரணம் உலகலாவீய பொப்பிலாரிட்டியே தவிர வேறோன்டும் இல்லை
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்!

இவர் முதல் ஒஸ்கார் மெடல் எடுக்கேக்கையே சொன்னனான்...

இவர் சரியில்லாதவர் எண்டு.......அப்ப ஒரு சில சனம் சொல்லிச்சு ஹொலிவூட்டிலை முதன் முதல் தமிழ் கதைச்ச பெருமை இவரைத்தான் சாரும் எண்டு..... சொன்ன வசனம் "எல்லாப்புகளும் அல்லாவுக்கே" எண்டது வேறை விசயம்.......


ஐரோப்பாவிலை ஜேர்மனியிலை எல்லாம் இந்திய குழந்தைகளுக்கு சாப்பிட காசு எண்டு பேப்பரிலையும் ரிவியள்லையும் காசு சேர்க்கிறாங்கள்.... இவர் என்னடாவெண்டால் தன்ரை சொத்திலை பாதியெண்டு பந்தாகாட்டி அடுத்த ஒஸ்காருக்கு அலுவல் பாக்கிறார் பந்தா சகுனி.....

சோமாலியாவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் உதவிசெய்து செய்து  களைச்சுப்போச்சுது....இப்ப புதிசாய் வந்துட்டார் சோமண்ணை ஏ,ஆர். ரகுமான்.

மதம் மாறிய இவருக்கு நான் சொல்வது:- மதம் என்பது உன் மனம். உதவி என்பது எந்தமதத்திலிருந்தும் செய்யலாம்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

தன் நாட்டிலேயே குழந்தை தொழிளாளர் முதல் அடிப்படைத் தேவைகளை தன்னும் பூர்த்தி செய்ய இயலாது இருக்கிறார்கள்..அப்படியிருக்கையில் இவரது செயலை நினைக்கும் போது மன வருத்தமாவேயுள்ளது..ஒரு விதத்தில் அடுத்த கட்ட பொப்பிலாருற்றிக்குரிய நகர்வு..

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, யாயினி said:

தன் நாட்டிலேயே குழந்தை தொழிளாளர் முதல் அடிப்படைத் தேவைகளை தன்னும் பூர்த்தி செய்ய இயலாது இருக்கிறார்கள்..அப்படியிருக்கையில் இவரது செயலை நினைக்கும் போது மன வருத்தமாவேயுள்ளது..ஒரு விதத்தில் அடுத்த கட்ட பொப்பிலாருற்றிக்குரிய நகர்வு..

 

 சரியான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.  :322_star: :322_star::322_star::323_star2:

 

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற மாதம் ரகுமான் ரொரன்டோவுக்கு அழைக்கப்பட்டு அவரின் சேவையை பாராட்டி ஒரு இசை நிகழ்ச்சி எம்மவரால் நடாத்தப்படுகிறது. ரகுமானின் இசையில் பாடிய வட அமெரிக்காவில் வாழும் பாடகர்களும் கனேடிய இளம்பாடகர்களும் பாட உள்ளனர். நுழைவுக்கட்டணம் $40 ம் அதற்கு மேலும். சேர்க்கப்படும் பணம் (செலவுகள் தவிர்த்து) ரகுமானின் பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வெம்ப்ளி அரீனாவில் சென்ற செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இவரது இசைநிகழ்ச்சி மார்ச் 24 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

f3831e3bb35b00dc6846e3a2d916107a.jpg

"இந்தியா" என்றால் வட இந்தியர்கள் கட்டமைக்க நினைப்பது மேலே காட்டப்பட்டுள்ள விம்பத்தைத்தான். அண்மையில் பண மதிப்பு இல்லாமல் செய்ததில் கூட இந்த சிந்தனை இருந்தது. ஏழைகள், தெருவோர வணிகர்கள் குறித்து எதுவித கவலையும் அதில் இருக்கவில்லை.

இப்போது ஏ.ஆர். ரகுமான் செய்வதும் இதைத்தான். சோமாலியாவுக்கு உதவி வழங்கி மேலே உள்ள Bollywood சிந்தனையை பிரதிபலித்திருக்கிறார். ஆனால் நிதர்சனம் வேறு விதமாக உள்ளது.

56f3a1f1858c0db5204bf238_750xNxrural-pov

இத்தகைய போலி மேட்டுக்குடி சிந்தனைக்கு எதிர்வினையாகத்தான் Slumdog Millionaire என்கிற படத்தை இங்கிலாந்துக்காரர் எடுத்து வெளியிட்டார்கள். அதற்கு Oscar விருதும் கொடுத்தாகள். tw_blush: தெரியாத்தனமாக ஏ.ஆர். ரகுமானும் மாட்டிக்கொண்டார். மேட்டுக்குடி அமிதாப் பச்சன் இப்படத்தைக் கண்டித்தார். இப்போது ஏ.ஆர். ரகுமானும் தனது தவறை திருத்திக்கொண்டு மேட்டுக்குடி வழியில் பயணிக்கிறார். :D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.