Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017

Featured Replies

  • தொடங்கியவர்

58) IPL 2017 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

                            கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெறும் என்று  கிருபன் பதில் தந்து 3 புள்ளிகளை  பெறுகிறார்.

 

சன் ரைசர்ஸ்  வெற்றி பெறும் என்று ஈழப்பிரியன், Ahasthiyan பதில் தந்து இருந்தார்கள்.

ஏனையோர் சரியான அணியை தேர்வு செய்யவில்லை.

 

 

 

 

58 வது கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியபின்...

 

1. வாத்தியார்  35

2. கிருபன்  34

3. nesen  33

4. நந்தன்  32

5. Ahasthiyan  31

6. suvy  29

7. nunavilan  29

8. தமிழினி  27

9. ஜீவன் சிவா  27

10. vasanth1  24

11. ஈழப்பிரியன்  23

12. கறுப்பி  22

  • Replies 629
  • Views 39.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா! மழை மூன்று புள்ளிகளை தூக்கப் போகின்றது என்று நினைத்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்பாடா! மழை மூன்று புள்ளிகளை தூக்கப் போகின்றது என்று நினைத்தேன்!

வாழ்த்துக்கள் கிருபன் ஜி

  • தொடங்கியவர்

இதுவரை நடந்த IPL 2017 போட்டிகளில்  அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் யார்?  எத்தனை விக்கெட்கள்?

முதலில் சரியான விடை தருபவருக்கு ஒரு பச்சை..:)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

புவனேஸ்வர் குமார். s .r .h .... 15....!

  • தொடங்கியவர்
36 minutes ago, suvy said:

புவனேஸ்வர் குமார். s .r .h .... 15....!

புவனேஸ்வர் குமார் என்பது சரி

ஆனால் 15 விக்கெட்கள் இல்லை... இன்னும் கூட

  • கருத்துக்கள உறவுகள்

26

  • தொடங்கியவர்
9 minutes ago, நந்தன் said:

26

சரியான பதில்

  • தொடங்கியவர்

2nu16bl.png

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: தகுதி சுற்றில் மும்பை-கொல்கத்தா இன்று மோதல்

 
ஐ.பி.எல். கிரிக்கெட்: தகுதி சுற்றில் மும்பை-கொல்கத்தா இன்று மோதல்


201705190953467014_ipl-Mumbai-vs-Kolkata

 
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

3 போட்டியாளர்கள் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெறும் என்றும்,

2 போட்டியாளர்கள் கொல்கத்தா வெற்றிபெறும் என்றும் பதில் தந்து உள்ளார்கள்.

  • தொடங்கியவர்

59) IPL 2017 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

                                 மும்பை இந்தியன்ஸ் வெற்றி

 

மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்.

                                              தமிழினி, nesen, Ahasthiyan.

 

கொல்கத்தா வெற்றி பெறும் என்று வாத்தியார், கிருபன்  பதில் தந்து  இருந்தார்கள்.

            ஏனையோர் சரியான அணியை தேர்வு செய்யவில்லை.

 

  • தொடங்கியவர்

 

59 வது கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியபின்...

 

1. nesen  36

2. வாத்தியார்  35

3. Ahasthiyan  34

4. கிருபன்  34

5. நந்தன்  32

6. தமிழினி  30

7. suvy  29

8. nunavilan  29

9. ஜீவன் சிவா  27

10. vasanth1  24

11. ஈழப்பிரியன்  23

12. கறுப்பி  22

19 minutes ago, நவீனன் said:

7. suvy  29

8. nunavilan  29

9. ஜீவன் சிவா  27

10. vasanth1  24

11. ஈழப்பிரியன்  23

12. கறுப்பி  22

நம்மட இடத்தைத்தான் கறுப்பியும் ஈழப்பிரியனுமும் உடும்பு பிடியா பிடிக்கிறாங்க எண்டு பாத்தா

மேல இருந்து சுவியர் வேற கீழ வாறன் எண்டு வெருட்டுறார்.:grin:

  • தொடங்கியவர்
20 minutes ago, ஜீவன் சிவா said:

நம்மட இடத்தைத்தான் கறுப்பியும் ஈழப்பிரியனுமும் உடும்பு பிடியா பிடிக்கிறாங்க எண்டு பாத்தா

மேல இருந்து சுவியர் வேற கீழ வாறன் எண்டு வெருட்டுறார்.:grin:

Hollywood இல் நின்று இடம் பார்க்கும்போதும் இந்த கவலை..:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

இதுவரை நடந்து முடிந்த IPL 2017 போட்டிகளில் அதிக catches எடுத்த வீரர் யார்?  எத்தனை catches?

Pollard 

13 catches

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை

 
ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை
 
 

 

201705211048177830_dhoni-sssss._L_styvpf

 

 

201705211048177830_bumrah-s._L_styvpf.gi

  • தொடங்கியவர்

ஸ்மித் வியூகம், தோனி ஃபினிஷிங் கைகொடுக்க சாம்பியனாகுமா புனே?! #IPLfinal

 
 

‘Maharashtra Derby’ - பத்தாவது ஐபிஎல் சீசனில், புதிதாக ட்ரெண்ட்டிங் ஆன வார்த்தை இது. விளையாட்டு உலகில் ஒரே நகரைச் சேர்ந்த, ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிக்கு, ‘Derby’ என்று பெயர். கால்பந்தில் இந்த வார்த்தை மிகவும் பிரபலம். உதாரணத்துக்கு, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இரு க்ளப்கள் உள்ளன. ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட்; ஸ்பானிஷ் லீக், சாம்பியன்ஸ் லீக்; கேபா டெல் ரே என எந்தத் தொடரில் இந்த இரு அணிகள் மோதினாலும், ‘Madrid Derby’ என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்களின் குடுமிப்புடிச் சண்டை நடக்கும். இது வெறுமனே வெற்றிக்கான மோதல் மட்டுமல்;. ஒவ்வொரு Derby மோதலுக்குப் பின்னாலும், ரத்தமும் சதையுமாக ஒரு கதை இருக்கும். சரி சரி... இப்போ IPL-லுக்கு வருவோம்...

IPL

இந்த பத்தாவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில், வெற்றிக் கோப்பைக்கு புனே - மும்பை அணிகள் இன்று இரவு ஐதராபாத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன. இரண்டுமே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவை. ‘Maharashtra Derby’ - பெயர்க்காரணம் புரிகிறதா? சர்வ நிச்சயமாக, இது மகாராஷ்டிரா மாநிலத்தவர்கள் மட்டுமே மார் தட்டிக்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான மோதலாக இருக்கப்போவது இல்லை! சொல்லப்போனால் புனேவில் உள்ளவர்களுக்கும், மும்பையில் உள்ளவர்களுக்கும் இந்த மேட்சால் துளிகூட சண்டை வராது; ஆனால் மகாராஷ்டிராவை விட தமிழ் ட்விட்டர் சந்தில்தான், காச்மூச் என ஒரே சத்தமாக இருக்கும். காரணம் மகேந்திர சிங் தோனி எனும் அந்த ஒற்றை மனிதன்! (தோனி இல்லையெனில், புனேவை யார் சீண்டப் போகிறார்கள்?). ஏழாவது முறையாக, ஐபிஎல் ஃபைனலில் இன்று விளையாடப் போகிறார் எம்.எஸ்.தோனி. சிஎஸ்கே ரசிகர்களுக்கு, தோனி ரசிகர்களுக்கு இந்த ஒரு பெருமையே போதும்!

போதும் தோனி புராணம். இனி மும்பை, புனே அணிகளின் பிளஸ், மைனஸ் பேசுவோம். 

பக்கா பிளான்:

IPL

குஜராத் லயன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில், 41 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் கொல்கத்தாவின் கிறிஸ் லின். அந்த அபாரமான இன்னிங்ஸைப் புகழ்வதை விட்டுவிட்டு, அவரது பலவீனம் என்னவென உட்கார்ந்து யோசித்தது மும்பையின் டெக்னிக்கல் டீம். அப்போட்டியில் கிறிஸ் லின்னின் wagon wheel அலசி ஆராயப்பட்டது. அவர் அடித்த 93 ரன்களில், ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட் ஏரியாவில், அடிக்கப்பட்டது வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே. பெரும்பாலான ரன்கள். லாங் ஆன் திசையில் அடிக்கப்பட்டவை. ஆக, முடிந்தவரை லின்னுக்கு புல்-லென்த்தில் பந்துவீச வேண்டும்; அவர் எப்படியும் லாங் ஆனில் தூக்கி அடிக்க முயற்சிப்பார். அந்நேரத்தில் ஒன்றிரண்டு சிக்ஸர்கள் போனாலும் பரவாயில்லை. மூன்றாவது முயற்சியில் கேட்ச் பிடித்து விடலாம் என்பதே மும்பை அணியின் திட்டம். எலிமினேட்டர் சுற்றில் கிறிஸ் லின் பேட்டிங் செய்ய வந்ததும், மிட் ஆனில் இருந்த ஃபீல்டரை லாங் ஆனில் நிறுத்தினார் ரோகித் சர்மா. பும்ரா வீசிய ஃபுல் லென்த் பந்தை, வழக்கம் போல சிக்ஸருக்குத் தூக்கினார் லின். அதை லாங் ஆனில் இருந்த பொல்லார்டு சிரமமின்றி கேட்ச் செய்தார். கிறிஸ் லின், வெறும் 4 ரன்களுக்கு அவுட்! மும்பையின் ஹோம் ஒர்க், ரோகித் சர்மாவின் கேப்டன்சி, டெக்னிக்கல் டீமின் நேர்த்தியான திட்டமிடல் மூன்றும் இணைந்த புள்ளி அது! 

ஸ்கெட்ச் போட்டு... 

IPL

சுனில் நரைன் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்புவரை, சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 214 ரன்களை அடித்திருந்தார். அதில் 78 ரன்கள் (24 பந்துகளில்), அதாவது 36.45 சதவீதம் ரன்கள், மிட் ஆஃப் திசையைக் கடந்து அடிக்கப்பட்டவை. இதை ஈடன் கார்டனில் இரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியிலேயே சரியாகக் கணித்திருந்தது மும்பை அணி. எனவே முடிந்தவரை சுனில் நரைனை டிரைவ் ஆட விடாமல் தடுத்து, அதேநேரத்தில் இரண்டு ரன்களையும் அடிக்க விடாமல் தடுக்கும் வகையில், லாங் ஆஃப் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி இருந்தார் ரோகித் சர்மா. ஆக வேறு வழியின்றி டிம் செளதியின் பந்தை லாஃப்ட் செய்து, ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து, டக் அவுட்டாகி வெளியேறினார் சுனில் நரைன்! கடந்த போட்டியிலும் அதே திட்டம்தான். மிட்செல் ஜான்சன், மலிங்கா, பும்ரா மூவரும் இணைந்து 10 பந்துகளில் சுனில் நரைனை 7 ரன்கள் மட்டுமே அடிக்க அனுமதித்திருந்தனர். அதில் ஸ்கொயர் லெக் திசையில் பறந்த சிக்ஸரைத் தவிர, மீதி பந்துகள் எல்லாம் டாட் பால்தான்! எனவே கரண் சர்மா கையில் பந்து கிடைத்ததும், தன்னால் முடிந்தவரை அவரது கால் பேடை குறிவைத்துத்தான் பந்து வீசினார். இதனால் ஒருகட்டத்தில் கடுப்பான சுனில் நரைன், கரண் சர்மாவின் கூக்ளியை இறங்கி அடிக்க முயல, க்ரீஸைத் தவறவிட்டதில் ஸ்டம்பிங் ஆனார். ஒரு குறிப்பிட்ட வீரரை மும்பை அணி எப்படியெல்லாம் கட்டம் கட்டுகிறது, அதற்கேற்ப எப்படியெல்லாம் திட்டம் தீட்டுகிறது என்பதற்கு இது சின்ன உதாரணம் அவ்வளவே! 

இனி மும்பை அணியின் பலம், பலவீனம்: 

IPL

இந்த சீசனில் மும்பையை மூன்று முறை வீழ்த்தி விட்டது புனே. அதற்காக இறுதிப் போட்டியிலும் புனேதான் வெல்லும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மும்பை எப்போதுமே பேப்பரைக் கட்டிய பின் வேகவேகமாக எழுதும் மாணவனின் ரகம். கடைசி நேரத்தில்தான் சுதாரிக்கும். அதற்கு கொல்கத்தாவை வீழ்த்தி ஃபைனலுக்கு வந்ததே சான்று! மும்பை அணியின் ஓபனிங் ஜோடி, அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. லெண்டில் சிம்மன்ஸ் அதிரடியாக ஆடுபவர் என்றாலும், அவரிடம் கன்சிஸ்டன்ஸி இல்லை. எனவே இவருக்கு பக்கபலமாக அடித்து ஆடும் பார்த்திவ் படேல் விக்கெட்டை விரைவில் வீழ்த்திவிட்டால், பவர் பிளேவில் மும்பை தள்ளாடி விடுவது வாடிக்கையாகிவிடுகிறது. அதேபோல ஒன் டவுனில் இறங்குபவர்களையும் அடிக்கடி மாற்றுகிறார்கள். இந்த ஐபிஎல்லில் பல ஆட்டங்களில் நிதிஷ் ராணா களமிறங்கினாலும், கடந்த சில மேட்ச்களில் அம்பதி ராயுடு வருகிறார். இப்படி டாப் ஆர்டரிலேயே குழப்பங்கள் இருப்பதால், அணியின் கேப்டனான ரோகித் சர்மா பின்வரிசையில் களமிறங்க நேர்கிறது. இதனால் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு, அவரால் பல நேரங்களில் அதிரடியாக ஆட முடியவில்லை. க்ருனால் பாண்டியா, ஆல்ரவுண்டருக்கான பணியைக் கச்சிதமாகச் செய்துவருகிறார். இவர் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும்! ஹர்திக் பாண்டியாவிடம் பெரிதாக எந்த டெக்னிக்கும் இல்லாமல் ஆடுகிறார்;

IPL

இது மும்பைக்குச் சில போட்டிகளில் வெற்றியைக் கொடுத்தாலும், அவரது பலவீனம் எதிரணிகளுக்கு அத்துப்படி. பொல்லார்டு, இன்னும் தனது முழுத்திறனை வெளிப்படுத்தவில்லை. அவர் சீறும் பட்சத்தில், அது மும்பைக்குப் பெரும் பலம். மும்பையின் பேட்டிங்கைப் போல, பவுலிங்கிலும் அவ்வப்போது மாறுதல்களைத், தொடர் முழுக்க செய்துகொண்டே இருந்தார் ரோஹித் சர்மா. ஆரம்பம் முதலே அசத்தலாகப் பந்துவீசிய மிட்செல் மெக்கிளீனன், இதுவரை தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், தேவையில்லாமல் மிட்செல் ஜான்சனை ஏன் களமிறக்குகிறார்கள் என்பது புரியவில்லை. ஹர்பஜன் சிங் அதிக விக்கெட்களை எடுக்காவிட்டாலும், அவரது எகானமி ரேட் சிறப்பாகவே இருக்கிறது. இவருக்கு மாற்றாக வந்த கரண் ஷர்மா, சில முக்கியமான போட்டிகளில் மும்பைக்கு வெற்றி தேடி தந்து, அணி நிர்வாகத்தின் குட்புக்கில் இடம்பிடித்துவிட்டார். இதற்கான சிறந்த உதாரணமாக, கொல்கத்தாவுக்கு எதிராக எலிமினேட்டர் மேட்சில், 4 விக்கெட்களை எடுத்து, ஐ.பி.எல் தொடரின் வரலாற்றிலேயே தனது பெஸ்ட் பெர்ஃபாமென்ஸைக் கொடுத்ததே சான்று. யார்க்கர் கூட்டணியான பும்ரா - மலிங்கா இருவரும், டெத் ஓவர்களில் மிரட்டி விடுகின்றனர். இப்படி அணியின் காம்பினேஷனை, அடிக்கடி மாற்றுவதில் பிளஸ், மைனஸ் இரண்டும் இருக்கிறது ரோஹித்! 

புனே  அணியின் பிளஸ், மைனஸ்: 

IPL


மும்பை போல புனேவின் ஓபனிங்கில் எந்த பிரச்னையும் இல்லை. இந்த ஐபிஎல்லின் துவக்கத்தில் ரஹானேவுடன் களமிறங்கிய மயங்க் அகர்வால் தொடர்ந்து சொதப்ப, அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ராகுல் திரிபாதி பவர் பிளேவில் நின்றுவிட்டால், புனேவுக்கு மினிமம் 30 ரன்கள் கன்ஃபார்ம்.  ஒன் டவுனில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங்கை, அணியின் கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பு பாதித்து விட்டதோ? ஏனென்றால் இந்த ஐபிஎல்லின் தொடக்க ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய அவர், முக்கியமான ஆட்டங்களில் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார். எனவே முதன்முறையாக ஐபிஎல்-லின் இறுதிப்போட்டியில் புனே அணியின் கேப்டன் என்ற முறையில் களம்காணும் அவர், ஒரு பொறுப்பான ஆட்டத்தை ஆட வேண்டியது அவசியம். இல்லையெனில் வார்னே, கில்கிறிஸ்ட், டேவிட் வார்னருக்கு அடுத்ததாக ஐ.பி.எல் வென்ற ஆஸி கேப்டன்கள் என்ற வரிசையில் இடம்கிடைக்காமல் போய்விடும்.

புனேயின் டாப் ஆர்டர் கொஞ்சம் ஊசலாட்டத்தோடு இருந்தாலும், அதனை ஓரளவுக்கு சீர் செய்வது, மிடில் ஆர்டரில் களமிறங்கும் மகேந்திர சிங் தோனி - மனோஜ் திவாரி கூட்டணிதான்.

IPL

இவர்கள் அணிக்குத் தேவையான ரன்களை அடித்தாலும், இவர்கள் வந்ததில் இருந்தே அடித்து ஆடினால்தான், அணியின் ரன் ரேட் சீராக ஏறும்... கடைசி ஓவர்களில் மட்டும் சிக்ஸர்களை அடிக்க முற்படுவது, எல்லா நேரத்திலும் ஓர்க் அவுட் ஆகாது சாரே! அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இம்ரான் தாஹிர் இல்லாததை, டேனியல் கிறிஸ்டியன் மற்றும் ஆடம் ஜம்பா ஓரளவுக்கு கவர் செய்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் எல்லா மேட்ச்சிலும் கிளிக் ஆகவில்லை. அணி நிர்வாகம் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, வாஷிங்டன் சுந்தர் காப்பாற்றிவருகிறார். இவரின் சுழல் ஜாலத்துடன், எதிரணியின் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தக்கூடிய திறன்படைத்த வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர் & ஜெயதேவ் உனத்கட் ஆகியோர், மீண்டும் அசத்தலாக ஆடக் காத்திருக்கிறார்கள். புனேவின் நான்காவது வெளிநாட்டு வீரராக இடம்பிடித்திருக்கும் பெர்குசன், ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் அணியில் இருக்கிறார். ஆனால்  இவருக்குப் பதிலாக, ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கி அதிரடியாக ஆடக் கூடிய. உஸ்மான் கவாஜாவை அணியில் சேர்ப்பது நல்லது. 

கோப்பை யாருக்கு?

IPL

இரண்டு முறை (2013,2015) ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் மும்பைக்கு, பிரதான சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், நம்ம மகேந்திர சிங் தோனி மட்டுமே! சிஎஸ்கே இருந்த நாட்களில் இருந்து இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரோகித் ஷர்மா, பொல்லார்டு, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு போன்றவர்கள், மும்பை அணி சாம்பியன் ஆனபோது அணியில் இருந்தவர்கள். எனவே ஐபிஎல் ஃபைனல் மேட்ச்சில், எப்படி ஆடினால் ஜெயிக்கலாம் என்ற அனுபவம், அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. மும்பையைப் பொறுத்தவரை, ஆடாமல் பெஞ்ச்சில் இருக்கும் மாற்று வீரர்கள்கூட, திறமையானவர்களாக இருக்கிறார்கள். மேலும் எந்நேரத்திலும் தனி ஆளாக ஆட்டத்தின் போக்கை மாற்றும் மேட்ச் வின்னர்கள் பலர் அணியில் இருப்பது மும்பையின் பிளஸ்.

IPL

 

கடந்த தொடரில் அறிமுகமான புனே அணிக்கும், இம்முறை ஆடும் அணிக்குமே பல வித்தியாசங்கள். கடந்த முறை அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தும், ஃப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறவில்லை. இந்தமுறை ஃபைனல் வரை வந்திருக்கிறது. இது எல்லாம் புதிய கேப்டனால்தான் நடந்ததாக அணி நிர்வாகம் மார்தட்டிக் கொண்டாலும், வீரர்கள் தமது பொறுப்பை உணர்ந்து ஆடியதே, இதற்கான முக்கியக் காரணம். மும்பை போல அணித்தேர்வில் எந்த குழப்பங்களும் இல்லாமல் தெளிவாகச் செயல்படும் பெருமை, அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளமிங்கைச் சேரும். மேலும் புனே அணி வெற்றி பெற்ற போதெல்லாம். அதில் தோனியின் பங்கு கணிசமாக இருந்திருக்கிறது. எனவே அவர் தனது வழக்கமான பாணியைக் கடைபிடித்தாலே, எதிரணி பாடு திண்டாட்டம்தான்! இவருடன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ரஹானேவின் பேட்டிங் சேரும்போது, இமாலய இலக்கு நிச்சயம். மும்பை போல, புனேவின் பவுலிங் பலமாகவே இருக்கிறது. மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை மும்பை படைக்குமா? அல்லது முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை புனே வெல்லுமா? என்ற கேள்விகளுக்கு, இன்றைய போட்டி சுவாரஸியமிக்க பதிலாக அமையும்.

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

 

இண்டைக்கு புனே புண்பட்ட நெஞ்சத்துடன் புயலாய் பறக்கப் போகுது.....!  tw_blush:

குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இன்றைய புள்ளிகள் முழுதும் சுவிக்கே .....!  :108_metal:  

  • கருத்துக்கள உறவுகள்

 

மும்பைக்காக காசைக் காசெண்டு பாராமல்  இறக்கி விட்டிருக்கு.....!tw_blush: 

  • தொடங்கியவர்

 

:grin::grin:

  • தொடங்கியவர்

Mumbai will bat

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.