Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல் விமானப்பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி பயணம் ஒரு அற்புத அனுபவமே ...
நான் முதன் முதலில் கொழும்பில் ஏறி .... சிங்கப்பூரில் போய் இறங்கினேன்.
விமானம் ஏறியவுடன் .... ஒரு வேளை விமானிகள் தூங்கி இருக்கலாம்.
எனக்கு ஒவ்வரு நொடியும் ஒவ்வரு ஆரய்ச்சியாகவே சென்று கொண்டு இருந்தது.

விமான பணிப்பெண்களை ஆராயும் எண்ணம் மட்டும் அப்போது வரவே இல்லை.
மயில் சேலையில் அழகாக இருக்கிறார்கள் என்று எண்ணி கொண்டேன்.
வெள்ளவத்தையில் நான் வசித்த ஒழுங்கைக்கு அடுத்த ஒழுங்கையில் ... இவர்களை 
நாளும் நாளும் காண்பேன் .... இவர்கள் ஒரு மூன்று நாலு பேர் அதில் வந்து நிற்பார்கள் 
பின்பு ஒரு ரோஜா பஸ் வந்து இவர்களை ஏற்றி செல்லும். 

ஒரு பிளாஸ்டிக் கடதாசி கூட்டம் ஒன்றை தந்தார்கள் 
எப்படியாவது அதை சுடுவது என்று முடிவு கட்டி கொண்டேன் 
பெரிய திட்டம் எல்லாம் வகுத்து ... ஒரு மாதிரி ஆட்டையை போட்டுகொண்டு வந்துவிட்டேன்.
சிங்கப்பூரில் இருக்கும்போதுதான் ...... வந்த இன்னமொருவர் நண்பராக ... 
கடதசி கூட்டத்தை .... வெற்றிகரமாக சுட்டது பற்றி ... பெருமையோடு சொன்னேன்.
அவர்தான் சொன்னார் .....
அது நாங்கள் கொண்டு போறதுக்குத்தான் தாறது என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

----- ------ ------ 

ஒரு பிளாஸ்டிக் கடதாசி கூட்டம் ஒன்றை தந்தார்கள் 
எப்படியாவது அதை சுடுவது என்று முடிவு கட்டி கொண்டேன் 
பெரிய திட்டம் எல்லாம் வகுத்து ... ஒரு மாதிரி ஆட்டையை போட்டுகொண்டு வந்துவிட்டேன்.
சிங்கப்பூரில் இருக்கும்போதுதான் ...... வந்த இன்னமொருவர் நண்பராக ... 
கடதசி கூட்டத்தை .... வெற்றிகரமாக சுட்டது பற்றி ... பெருமையோடு சொன்னேன்.
அவர்தான் சொன்னார் .....
அது நாங்கள் கொண்டு போறதுக்குத்தான் தாறது என்று. 

தனது  முதல் விமானப் பயணத்தைப்  பற்றி.....
இன்று... விமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும்.... 
மருதங்கேணி எழுதிய கருத்தை வாசித்து ரசித்தேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24.3.2017 at 5:52 PM, நிழலி said:

வழக்கம் போல நன்றாக இருக்கு புத்தன்.... விரைவில் கதைகளை தொகுத்து புத்தகமாக போடுங்கள்

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

On 24.3.2017 at 6:01 PM, விசுகு said:

ஆமோதிக்கின்றேன்

கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கோ எண்டால் என்ன அர்த்தம்...ஙே.....இதென்ன கோதாரியாக்கிடக்கு....மனிசர் இனி கோயில் குளத்துக்கெல்லாம் போறேல்லையே? :grin:

Bangkok's Hindu Temple at Silom - Bangkok, Bangkok

Sri Maha Mariamman Temple - Bangkok

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/03/2017 at 3:20 AM, சண்டமாருதன் said:

ஒவ்வொரு சிங்களவரும் இதைத்தன்  எண்ணுவார்கள்  அல்லது அவ்வாறு எண்ணுவார்கள் என்று நாம் எண்ணுவோம். ஒரு தரப்புக்கு அடிமைப்பட்டதன் தாக்கம் வாழ்நாள் முழுக்க  மனதை பாதிக்கும். 

நன்றிகள் சண்டமருதன்...ஓம் நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கு.

On 25/03/2017 at 3:52 AM, நிழலி said:

வழக்கம் போல நன்றாக இருக்கு புத்தன்.... விரைவில் கதைகளை தொகுத்து புத்தகமாக போடுங்கள்

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

நன்றிகள் நிழலி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்..பலர் சொல்லுகிறார்கள் புத்தகம் வெளியிடசொல்லி ஆனால் எனக்கு இன்னும் நான் ஒரு எழுத்தாளனா என்ற சந்தேகம் உண்டு....

On 25/03/2017 at 5:33 AM, கிருபன் said:

என்னுடைய முதல் விமானப்பயணமும் மறக்கமுடியாதது. பலாலியிலிருந்து கொழும்புக்கு இந்திய இராணுவ அடக்குமுறையிலிருந்து தப்பித்து ஓடிய பயணம். முழுக்காற்சட்டை போட முன்னரே அவசரமாகப் போகவேண்டி வந்தது. சிறிலங்கன் விமானப்படையின் துருப்புக்காவும் விமானத்தில் நின்றுகொண்டே அநுராதபுரம் மட்டும் போகவேண்டி வந்தது. பின்னர் இருக்கைகள் கிடைத்தன!

பண்ணைப் பாலத்தை அந்த முதலாவது விமானப் பயணத்தில்தான் பார்த்தேன். இன்னும் நேரே பார்க்கவில்லை?

நன்றிகள் கிறுபன்....பண்ணைப்பாலம்,கிளாலி பாலம் எல்லாம் இப்ப அந்த மாதிரியிருக்கு......ஆனையிறவால் போவதைவிட கிளாலியால் போவதை சாரதிமார் அதிகம் விரும்புகின்றார்கள்....ஒருக்கா எங்கன்ட நாட்டுக்கு போயிட்டு வாங்கோ.....குருவியன் வெட்டையில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்க முடியுமா என்று விசிபிலிட்டி ஸ்டடி செய்து போட்டு வாங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/03/2017 at 6:31 PM, சுவைப்பிரியன் said:

அருமை புத்தன்.எந்த முதல் அனுபவமும் மறக்க முடியாது.எனது முதல் விமானப்பயணம் கொழும்பு சென்னை .அதில வாழைப்பழத்தை கத்தி கறன்டியால் வெட்டி சாப்பிட்டதை மறக்க முடியாது.tw_blush:

நன்றிகள் சுவைப்பிரியன் ...விமானத்தில் தார வாழைப்பழம் சாப்பிட கொஞ்சம் கடினமா இருக்கும் முள்ளுக்கரண்டி தேவைதான்..:10_wink:

On 28/03/2017 at 4:46 AM, வல்வை சகாறா said:

கன்னிப் பயணத்தில் மிடுக்கு வேற..... அதென்னப்பா கௌரவப்பிரச்சனையா பீல் பண்ணுறீங்கள்?

நன்றிகள் வல்வை..... " வி ஆர் போய்ஸ்." அதுதான் அந்த கெளரவ பிரச்சனை:10_wink:

On 28/03/2017 at 1:45 PM, Maruthankerny said:

... பெருமையோடு சொன்னேன்.
அவர்தான் சொன்னார் .....
அது நாங்கள் கொண்டு போறதுக்குத்தான் தாறது என்று. 

நன்றிகள் மருதங்கேணி....எனக்கும் உந்த ஆட்டையை போடுற ஐடியாக்கள் வாரது ஆனால் பயத்தில தூக்கிரதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

அதே, ஒரு புள்ளியாக தென்பட்டு பலாலியில் விமானம் வந்து இறங்கியது ஞாபகம் உள்ளது. பயத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடித்து அழுது நித்திரையாகி அப்பா தூக்கிக் கொண்டு போனாதாகவும் திரும்பி வரும் போது புகையிரதத்தில் வந்ததாகவும் அம்மா கூறுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/03/2017 at 1:41 PM, கந்தப்பு said:

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

நீங்கள் பிளனோட பிறந்த ஆள் என்று சொல்லூறீயள் கொடுத்த வைச்ச ஆள். நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

On 31/03/2017 at 4:55 PM, MEERA said:

அதே, ஒரு புள்ளியாக தென்பட்டு பலாலியில் விமானம் வந்து இறங்கியது ஞாபகம் உள்ளது. பயத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடித்து அழுது நித்திரையாகி அப்பா தூக்கிக் கொண்டு போனாதாகவும் திரும்பி வரும் போது புகையிரதத்தில் வந்ததாகவும் அம்மா கூறுவார்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் மீரா....

இந்த கிறுக்கலுக்கு பச்சை புள்ளிகள் இட்டு ஊக்கம் தந்த‌ ராசம்மா,மோகன்,இணையவன் ,நேசன்,ஆதவன்,யாயினி ஆகியோருக்கும் நன்றிகள்

Edited by putthan

On 23.3.2017 at 3:30 PM, putthan said:

நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன்.

"சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன்.

நம்ப மாட்டனே புத்தா

பணிப்பெண் குனிந்து நெளிந்து வளைந்து உரசி போட்டுவிடுவா என்ற எதிர்பார்ப்பில்தான் குந்தி இருந்திருப்பீங்கள்.:grin:

புத்தனுக்கு சமர்ப்பணம்  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31.3.2017 at 4:41 AM, கந்தப்பு said:

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து  கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.

உள்ளதை சொல்லுறன்....:cool:

நான் முதன் முதல் ஏரோப்பிளேனிலை ஏறினது ஜேர்மனிக்கு வரேக்கைதான்....அதுவும் கட்டுநாயக்காவிலை முளுசி முளுசி கியூவிலை நிண்டு ஏறி....

பிறகென்ன மிச்சம் சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.:mellow:

5 hours ago, குமாரசாமி said:

அதுவும் கட்டுநாயக்காவிலை முளுசி முளுசி கியூவிலை நிண்டு ஏறி....

பிறகென்ன மிச்சம் சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.:mellow:

உதை ஒரு கதையா எழுதலாமே. உங்கள் எழுத்து நடையில் வாசிக்க நல்லா இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2017 at 2:41 AM, ஜீவன் சிவா said:

நம்ப மாட்டனே புத்தா

பணிப்பெண் குனிந்து நெளிந்து வளைந்து உரசி போட்டுவிடுவா என்ற எதிர்பார்ப்பில்தான் குந்தி இருந்திருப்பீங்கள்.:grin:

உள் நோக்கம் அதுதான் ......இதெல்லாம் பப்ளிக்கா கேட்க கூடாது...நகைச்சுவை வீடியோவுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für  Air Ceylon

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து திருச்சிராப்பள்ளி. சற்று அழகான பெண்களின் முறைப்பும் விறைப்பும் மனதை வருத்தும் பருவம். அன்னநடை அழகிய மயில்கள் நாங்களே! என்று மின்னும் அழகிகள் விமானத்தில் முகம்மலர்ந்த புன்சிரிப்புடன் என்னை வரவேற்று அன்புடன் உபசரித்த நிகழ்வு, காலத்தால் அழியாதது!!
 
  • கருத்துக்கள உறவுகள்

Airbus_A330-200_Gulf_Air_old_livery.jpg

எனது கன்னிப்பயணம், கல்ஃப் ஏர் (Gulf Air) விமானத்தில் மும்பாயிலிருந்து தோஹா வழியாக துபாய் நகரம்தான்..

ஏற்கனவே சென்னையிலிருந்து மும்பாய் வந்த பயணக் களைப்பில் இருந்ததால், மும்பாயிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு விமானம் கிளம்பிபியபோது, விமான கன்னியை பார்க்கவில்லை, தண்ணியையும் குடிக்கவில்லை.. விமானத்தில் ஏறியமர்ந்தவுடன் ஒரே தூக்கம்தான்.. காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியவுடன் தான் கண் விழித்தேன்..

ஆனால் மும்பாயில் தோஹாவிற்கு செல்லும் பயணிகளிடம், கூட்டத்தை வரிசையில் விடும் விமான நிலைய காவலர்கள், அப்பாவி தொழிலாளிகளிடம் லஞ்சம் வாங்கிவிட்டுதான் உள்ளே விட்டனர். என்னிடம் கறக்க முயன்றபோது, 'எதற்காக உங்களுக்கு பணம் கொடுக்கவேண்டுமென' ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு, எனது அடையாள அட்டையை காண்பித்தேன்.. பதிலேதும் பேசாமல் உடனே வழிவிட்டனர்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Paanch said:

Bildergebnis für  Air Ceylon

எனது முதல் பயணம் பலாலியில் இருந்து திருச்சிராப்பள்ளி. சற்று அழகான பெண்களின் முறைப்பும் விறைப்பும் மனதை வருத்தும் பருவம். அன்னநடை அழகிய மயில்கள் நாங்களே! என்று மின்னும் அழகிகள் விமானத்தில் முகம்மலர்ந்த புன்சிரிப்புடன் என்னை வரவேற்று அன்புடன் உபசரித்த நிகழ்வு, காலத்தால் அழியாதது!!
 
நன்றிகள் பான்ஞ்  உங்கள்து பயண அனுபவ‌ பகிர்வுக்கு.....இந்த வயசிலும்  அந்த வயசு அனுபவதை நினைக்கும் பொழுது புல்லரிக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.