Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 போர்ப்பரிசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                           போர்ப்பரிசு


மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சுமதிபால அங்கேயிருந்த சீமேந்தாலான இருக்கையிலிருந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி, தனது முழங்காலைத் தடவிக்கொண்டு பெருமூச்செறிந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். அம்மா! என்ற சத்தம் அவனது சிந்தனையை சிதறடிக்க சத்தம் வந்த திசையைப் பார்க்கிறான். அங்கே வெள்ளைப் பிரம்போடு ஒருவர் எழும்பமுயன்றுகொண்டிருந்தார். அருகே சென்ற சுமதிபால, அவரைத் தாங்கிக் கொண்டு வந்து தானிருந்த இருக்கையில் இருத்திவிட்டு, "வத்துறு பொனவத,, என்று கேட்டான். வெள்ளைப் பிரம்போடிருந்தவர் வேண்டமென்று தலையசைத்தார்.இவனே பேச்சைத் தொடர்த்தான். "கொய்த யன்ன,, என்று கேட்கவும், நான் தமிழ் என்று கூறிவிட்டு அமைதியாக, ஒரு சில மணித்துளிகள் அமைதியாகக் கழிந்தன. சுமதிபாலாவோ கொச்சைத் தமிழில் எங்க போகிறீர் எந்த ஊர் எப்படிக் கண் தெரியாமல் போனது போன்ற வினாக்களைத் தொடுக்கிறான். பேரூந்துக்கான நேரம் இருக்கிறது என்பதை அசைபோட்டுவாறு அமைதியாக இருந்த மயூரனின் மனதுள் உங்களாலதானடா இந்த நிலை என்று கத்தவேண்டும் போல் இருந்தது. அடக்கிக் கொண்டவனின் எண்ண அலைகள் பின்னோக்கி நகர்கிறது. 
மயூரன் ஓரளவு வசதியாக வறுமையற்ற நிலையில் வாழ்ந்த குடும்பம். தைப்பொங்கல் திருநாளிற்கு முந்தையநாள். அவனது கிராமமும் தைத்திருநாளை வரவேற்க ஆவலோடு காத்திருக்கப் பொழுது நள்ளிரவைக்கடந்திருந்தது. அப்பப்போ ஆமி வருவதும் கைது செய்வதும் காணாமலாக்கப்படுவதும் நடக்கும். ஆனால் நள்ளிரவைக் கடந்தபொழுதில், அன்று வழமைக்கு மாறாக அதிக வானங்களின் நடமாட்டம். தாய் தந்தை தமக்கையுடன் வாழ்ந்த மயூரன், பொங்கலிடுவது உறவுகளோடு களிப்பது முருகண்டிக் கோவிலுக்கு ஈருருளியில் போவது என்று மறுநாள் நடைபெற இருக்கும் பொங்கல் திருநாளின் குதூகலமான நினைவுகளோடு உறங்கிவிட்டான்."அடோ நக்கிண்ட என்ற குரல்கேட்டுத் திடுக்குற்றெழுந்த மயூரன் திகைத்துப்போய் நின்றான். தாயும் தந்தையும் முழங்காலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.தமக்கையைக் காணவில்லை. பால்ய வயதை நெருங்கியிருந்த மயூரன் நடுங்கியவாறு அழுதவனை படையினனின் மிரட்டல் நிறுத்தியது. "அடே ஒங்கட மாமா„ எங்க! அவன்... "அவர் இஞ்சை  வாறேல்லை„ என்றதை நம்பவில்லை. பொறு...கியண்டெப்பா! தமது காவலரணைக் காக்க முடியாத  சிங்களப்படைகள் இதயரூபனது தமக்கையின் வீட்டைச் சல்லடை போட்டன. இதயரூபனின் அணியே தாக்குதல் நடாத்தித் தமக்கு இழப்பை ஏற்படுத்தியது என்ற வெறியில் தேடுதல். தேடுதலின் முடிவில் தறதறவென்று இழுத்துச் செல்லப்படும் ஒலி அழுகை ஒலி என அதனைத் தொடர்ந்து சில வேட்டொலிகளும் கேட்டன. தாயும் தந்தையும் பிணமாகிச் சாயத் தமக்கை என்ன ஆனாள் என்றறியாது மயூரன் அனாதையானான். மாறி மாறி உறவுகளின் பராமரிப்பில் வாழ்ந்த மயூரன் பதிட்டுவயதை எட்டிய இளைஞனான். 
எல்லா இளையோரும் வயதுக்கேயுரிய விளையாட்டுக்களோடு களிக்க இவன் அமைதியாகவே அந்த மைதானத்தின் ஓரத்தில் நிற்பான். அப்பப்போ அங்குவரும் சைமனின் அறிமுகத்தால் புலிகளோடு பழகி பின்னர் புலியாகவே வாழ்ந்தான். பல்வேறு சிறுசிறு தாக்குதல்களை வெற்றிகரமாக நடாத்திய மயூரனுக்கு பெரும் சமரின் போர்களமாய் விரிந்த ஆனையிறவுச் சமரிலே அவனும் பங்கெடுக்கும் வாய்ப்பு. சுண்டிக்குளச் சதுப்பு நிலத்தைக் கடந்து நீர்பரப்பில் இருக்கு முட்கம்பிவேலித் தடைகளைக் களைந்து அணிகளுக்கான பாதையைத் திறக்கும் பணி. அவனோடு வந்த அணியில் இருவர் குறிசுடும் தாக்குதலில் வீரமரணமடைய, வித்துடல்களை நகர்தியவாறு தமது அணிக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவுசெய்த திருப்தியில் மயூரன் மகிழ எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டொன்று அவனையும் பதம்பார்க்கிறது. மருத்துவஅணி அவனுக்கு முதலுதவியளித்துவிட்டு மருத்துவ முகாமுக்கு அனுப்புகிறது. அன்றுதான் அவனுக்குப் பார்வைதெரிந்த இறுதிநாளாகவும் அமைந்தது. பார்வை இழந்தபோதும் அவனது கண்ணுக் கண்ணாகச் சகபோராளிகள் பரிவுகாட்டுவதும். நடக்கப் பழக்குவதும், எல்லாவற்றையும் விட ஆனையிறவின் மீட்பு அவனுக்குப் பார்வை இழந்த கவலையைப் போக்கியது. காலம் வெகு வேகமாக உருண்டோடியது.  இறுதியுத்தம் பெரும் கோரத்தாண்டவமாடி எல்லாவற்றையும் உலுப்பிக் கொட்டிவிட்டு ஓய்ந்தபொழுதில், இவன் இடம்தெரியா முகாமொன்றில் இருந்தான். அவன் முகாமிலிருந்து வெளியேறும்போது, தனியே நின்ற மார்க்கண்டர்ளூ "தம்பி! என்னோட வாருமன் என்று கேட்க, " ஐயா! நானொரு சுமைதானே ஐயா! உங்களை யாரெண்டும் தெரியாது,, என்று இழுத்தான்.  மார்க்கண்டர் அருகேவந்து, ' நீங்கள் யாரென்றும் ஊரென்றும் உறவென்றும் பார்த்தே போராடினீர்கள்! தம்பி வாரும் எனக்கும் ஒருதரும் இல்லை எல்லாரையும் குடுத்துட்டன்,, என்றார் பெருமூச்சோடு. அந்தப் பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை மயூரன் உணர்ந்தான். அவரோடு நடக்கத் தொடங்கினான். இன்று மருத்துவப் பரிசோதனைக்காக வந்தவன் மருத்துவமனையைப் பூங்கா அமைத்து அழகுபடுத்த வைத்திருந்த கற்களில் தட்டுப்பட்டே விழுந்தான். 
அமைதியாக இருந்த சுமதிபால, மயூரனது கையை எடுத்து தனது முழங்காற் பகுதியில் வைத்தான். முழங்காலுக்கீழ் இல்லை என்பதை உணர்ந்தவாறு சுமதிபாலாவைப் பார்த்துத் தலையை அசைக்கின்றான். சுமதிபாலாளூ அவனது கனவு ஒரு ஆசிரியராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ வரவேண்டும் என்று படித்தவனுக்கு குடும்பச்சூழல் இடம்கொடுக்கவில்லை. தந்தையற்ற தாயார். திருமணவயதை எட்டிவிட்ட சகோதரிகள் மூவரென்று பெரும் பொருண்மிய நெருக்கடி. தனது நண்பனான பண்டார ஆமியில் சேர்ந்தபின் அவனது குடும்பத்தில் வசதிகள் கூடியுள்ளதையும், பத்திரிகைகளில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் எனப் பார்த்தவனுக்கு ஆமியில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, தனது தாயாரிடம் கேட்கின்றான். அவளும் அரைமனதோடு சம்மதிக்கிறாள். குறுகியகாலப் பயிற்சியோடு சுமதிபால வழங்கற்பிரிவிலே  இணைக்கப்படுகிறான். காடுகளை அண்டிய எல்லைப்பகுதிகளிலுள்ள உருமறைப்பு முகாம்களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வது இவனது பணி. அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராது ஏற்பட்ட மோதலில் காயம்பட்டு மயக்கமடைய அவனைவிட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். தேடுதலில் ஈடுபட்ட புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவம் பார்க்கப்படுமவன், மயக்கம் தீர்ந்து கண்விழித்தவனுக்கு அங்கேதெரிந்த வரிப்புலிச் சீருடையாளர்களைக் கண்டதும் ஒருவிதபயமும் அதிர்வலைகளும் அவனை ஆக்கிரமிக்கத், தானிப்போது புலிகளிடம் பிடிபட்டுவிட்டதையும்; தனது கால்போனதையும் உணர்கின்றான்.  அவனுக்கு அவித்த பயறும் தேனீர் வழங்கப்படுகிறது. ஒருவித தயக்கத்தோடு உண்கின்றான்.  ஆனால், அவனது ஆழ்மனதில் பலவிதமான வினாக்கள் எழுகிறது. படைமுகாம்களுக்கு வரும் பிக்குகள் தமிழர்களை பேய்களெனவும் புலிகளைப் பயங்கரமானவர்கள் எனவும் மனிதாபிமானவற்றவர்கள் எனவும்  போதனைசெய்வதைத் தாம் கேட்டபோது ஏற்பட்ட உணர்வும், அவர்கள் தன்னைப் பார்க்;கும் விதத்தால் நேரடி அனுபவம் வேறாகவும் அல்லவா இருக்கிறது என எண்ணிக்கொள்கின்றான். அன்றையபொழுது கழிந்து போகிறது. 
மறுநாள் தனக்கு ஒருவர் உதவிக்குவரத் தனது கடமைகளை முடித்தவனிடம் காலை உணவின்பின் ஒரு சீருடையணிந்த புலி வருகிறார். நலம் விசாரிப்போடு ஒரு தகவலைக் கூறுகிறார். பயங்கரவாதிகளுடனான மோதலில் சுமதிபால என்ற இராணுச் சிப்பாய் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுக்கமுடியவில்லையென்றும் உங்கள் லங்க புவத் கூறியது. முதலில் உங்களின் முழுப்பெயர் முகவரி தொலைபேசி எண் போன்ற விபரங்களைப் பெற்றவாறு படையில் சேர்ந்த நோக்கம் போன்ற விபரங்களைத் திரட்டிக் கொண்டு போக இப்போது இவரை இன்னொரு அணிபொறுப்பேற்றுக் கொள்கிறது. அங்குதான் அவனொரு புதிய உலகைக் காண்கிறான் புரியாத மொழியைப் பழகும் வாய்ப்பு. தன்னை எதிரியாகப் பார்க்காது ஒரு கைதியாக வைத்திருந்தாலும் ஒரு கைதியைப்போலன்றி சாதாரணமாக தன்னோடு நடந்துகொள்ளும் புலிகள் எனப் புலிகள்பற்றிய தவறான கற்பிதங்கள் அவன் மனதிலிருந்து சாய்ந்து விழுகிறது. அவனது காயம்மாறி ஊன்றுகோலின் உதவியோடு நடக்கத்தொடங்கியிருந்தான். அவனிடம் திரட்டிய தகவலின் உதவியோடு சுமதிபாலாவின் தாயாருக்கும் அவன் தங்களிடம் இருப்பதை அறிவித்த புலிகள், நந்தவனத்திற்கு கடிதம் கொடுத்துவிட்டால் சுமதிபாலவுக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள்.  கடிதப்போக்கு  வரத்தையடுத்து சுமதிபாலாவின் தாயார் பாரப்பதற்கு வரமுயற்சிக்கிறார். ஆனால் போரரக்கனின் பொல்லாத பொழுதுகள் தீவிரமாகித் தாக்குதல் அதிகரிக்க, அவனைப் பாதுகாப்பது பராமரிப்பது எனச் சிக்கல்கள் தோன்றுகிறது. 
தமது காவலில் உள்ள போர்கைதிகள் தொடர்பான ஆலோசனைகளின் பேரில், அவர்களைப் பாதுகாப்பாகச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு பணிக்கப்படுகிறது. செங்கதிரும் வாகையனுமாக சுமதிபாலாவை அழைத்துக்கொண்டு ஆவணங்களைப் பரிமாறி அவர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். சுமதிபாலா அந்தக்கணத்தில் அவர்களை அழைத்துக் கைகளைப் பற்றி நன்றியைக் கண்ணீரால் பரிமாறுகிறான். விடைபெறும்போது, கவனமாகப் போய்வரவும் என்று சிங்களத்தில் கூறிய வாகையனையும் செங்கதிரையும்  விழிகள் விரியப்பார்க்கிறான் சுமதிபாலா. போராளிகள், „அதுதான் எங்கள் அண்ணன்' என்று கூறியவாறு,  அவர்கள் சென்றுவிட இவனது பயணம் தனது ஊரைநோக்கித் தொடர்கிறது.
சிலமணிநேரங்களில் செஞ்சிலுவை சங்கத்தினரால் எல்லைப்பகுதியிலே உள்ள  இருபகுதியினரோடும் உரையாடி அனுமதியைப் பெற்று அழைத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட அவன், வன்னிக் கட்டளைப் பணியகத்தின் படைத்துறை ஆளணிப்பிரிவுக்கு அனுப்பப்படுகிறான். அங்கு பல்வேறு விசாரணைகள் புலிகளின் பலம் பலவீனம் யார்யாரைப் பார்த்தாய் போன்ற வினாக்கள். அவனுக்குள்ளே இவர்களது வினாக்கள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தச் சகித்துக்கொண்டு அனைத்தையும் முடித்தபின் மருத்துவ பரிசோதனைகள் முடிய மாற்றுவலுவுள்ளோர் முகாமுக்கு செல்லச் சொல்கிறார்கள். ஆனால் அவன் தனக்கு நிரந்தர விடுப்புக்கோரி எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். அவனை வீட்டிலே இறக்கிவிடுமாறு அங்கிருந்த ஒரு அதிகாரி பணிக்கிறார். காலிழந்தவனாக வீடு வந்தவனைக் கடைசிச் சகோதரியும் தாயுமாகப் பெரும் அழுகையோடு கட்டியணைக்கின்றனர். அவனது உள்ளம் பெருமோலமிட்டு அழுகிறது. தான் எதற்காக படைக்குச் சென்றானோ அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத துயரம் சூழ்கிறது. 
இன்று அவன் பொய்க்கால் அணிய நோவதனால் அதனைச் சீர்செய்யவே மருத்துவமனைக்கு வந்திருந்தான். அங்கே அவனுக்குப் புதுக்கால் செய்ய அளவெடுத்துவிட்டு அனுப்பியுள்ளார்கள். இருவரது இறுக்கமும் தளர்ந்து ஒரு இயல்பான நட்புரீதியான உரையாடல் நிலைக்கு மயூரனும் சுமதிபாலாவும் வந்திருந்தனர். சுமதிபாலா சொல்கின்றான். இனவாதம் உங்களை மட்டுமல்ல எங்களையும் முடமாக்கியுள்ளது. இன்று ஒரு புதியதலைவர் ஆள்கிறார். அன்று போர் நடத்தியோர் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் நானும் நீயும் அதன் வலிகளைச் சுமந்தபடி. மயூரன், எமது அடுத்த தலைமுறையாவது அமைதியாக வாழநாங்கள் சிந்திப்போமா? மயூரன் பெரிதாகச் சிரித்தேவிட்டான். நாங்கள் இதனையேதான் எழுபது ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். என்று ஆழ்மனம் அசைபோட அவன் தொடரூந்துத் தரிப்பிடம் நோக்கி நடக்கிறான்.
                                               முற்றும். 
 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நொச்சி...., கருத்தெழுத தெரியவில்லை அல்லது முடியவில்லை....! 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nochchi said:

இருவரது இறுக்கமும் தளர்ந்து ஒரு இயல்பான நட்புரீதியான உரையாடல் நிலைக்கு மயூரனும் சுமதிபாலாவும் வந்திருந்தனர். சுமதிபாலா சொல்கின்றான். இனவாதம் உங்களை மட்டுமல்ல எங்களையும் முடமாக்கியுள்ளது. இன்று ஒரு புதியதலைவர் ஆள்கிறார். அன்று போர் நடத்தியோர் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் நானும் நீயும் அதன் வலிகளைச் சுமந்தபடி. மயூரன், எமது அடுத்த தலைமுறையாவது அமைதியாக வாழநாங்கள் சிந்திப்போமா? மயூரன் பெரிதாகச் சிரித்தேவிட்டான். நாங்கள் இதனையேதான் எழுபது ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். 

உண்மையில் நடந்த விடயங்களை,  போர்ப்பரிசு கதையில்... அழகாக விபரித்துள்ளீர்கள் நொச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த ஆதவன் நந்தன் மீரா புங்கையூரான் யாகவி ஆகியோருக்கு நன்றிகள்.

3 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி நொச்சி...., கருத்தெழுத தெரியவில்லை அல்லது முடியவில்லை....! 


சுவியவர்களுக்கு படித்துக் கருத்தைப்பதிந்து ஊக்கம் தருவதற்கு நன்றிகள்.

3 hours ago, தமிழ் சிறி said:

உண்மையில் நடந்த விடயங்களை,  போர்ப்பரிசு கதையில்... அழகாக விபரித்துள்ளீர்கள் நொச்சி.

தமிழ்சிறியவர்களுக்கு படித்துப் பகுத்து கருத்தால் உற்சாகம் தருவதற்கு நன்றிகள். 

எமது உடம்பில் ஒரு ´சிறுகாயம்பட்டால் துடிக்கிறோம். ஆனால் இவர்போன்றவர்கள் அரசியல் ஆட்டத்தின் வலிகளைச் சுமந்தவர்களாகவே எம்முன்னே. ஒரு தயக்கமுடன்தான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி தமிழர்களை புரிந்து கொள்ளாத சிங்கள சமூகம் இன்னமும் இருக்கவே செய்கிறது.தனியொரு சுமதிபாலாவால் என்ன தான் செய்ய முடியும்.   

போராளிகளை எண்ண இன்னமும் நெஞ்சு கனக்கிறது.என்றோ உண்மையில் நடந்த சம்பவத்தை கதையாக தந்திருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நொச்சி தமிழர்களை புரிந்து கொள்ளாத சிங்கள சமூகம் இன்னமும் இருக்கவே செய்கிறது.தனியொரு சுமதிபாலாவால் என்ன தான் செய்ய முடியும்.   

போராளிகளை எண்ண இன்னமும் நெஞ்சு கனக்கிறது.என்றோ உண்மையில் நடந்த சம்பவத்தை கதையாக தந்திருக்கிறீர்கள்.

வணக்கம்ஈழப்பிரியன்    உண்மைதான். சிலவற்றைக்கடந்தே போகவேண்டிவரலாம் அல்லது காலம் மாற்றலாம்.எங்கள் தலைமுறை மறைந்து ஒரு புதிய தலைமுறையின்காலத்தில் அவர்களதை அவர்களிடம் விடுவோம் என்று எண்ணலாம்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி அண்ணை கதை க்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இரு புறம் சேதாரங்கள் இழந்தது உயிர்கள் உடமைகள் அம்பாறையில் பல வருடங்கள் கழித்து சிங்கள மக்களால் வளர்த்து எடுத்த ஒரு இளைஞசனே வந்திருந்தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

நொச்சி அண்ணை கதை க்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இரு புறம் சேதாரங்கள் இழந்தது உயிர்கள் உடமைகள் அம்பாறையில் பல வருடங்கள் கழித்து சிங்கள மக்களால் வளர்த்து எடுத்த ஒரு இளைஞசனே வந்திருந்தான் 

முனிவர்ஜீ அவர்களே

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள். ஒவ்வொரு தமிழரதும் மனதிலே ஏதோ ஒருகாயம் வலித்தவாறே இருக்குமென்றே நம்புகிறேன். வலியை மாற்றும் புதியதலைமுறையொன்று  இருபகுதியிலும் இருந்து எழுமா? நீங்கள் தாயகத்தில் இருக்கிறீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

முனிவர்ஜீ அவர்களே

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள். ஒவ்வொரு தமிழரதும் மனதிலே ஏதோ ஒருகாயம் வலித்தவாறே இருக்குமென்றே நம்புகிறேன். வலியை மாற்றும் புதியதலைமுறையொன்று  இருபகுதியிலும் இருந்து எழுமா? நீங்கள் தாயகத்தில் இருக்கிறீர்கள்....

பல  சிங்கள மக்களுக்கும் சிங்கள இளைஞர்களுக்கும் தமிழர்கள் எதிரிகள் என்றே  சொல்லி கொடுக்கப்பட்டது போர்க்காலத்தில் ஆனால் சில சிங்கள மக்கள்  வடகிழக்கில் வந்து பார்த்த பின்பே சொல்கிறார்கள்  இவ்வளவு கஸ்ரம் தமிழ் மக்கள் அனுபவித்திருப்பது தங்களுக்கு தெரியாது என அண்மையில்  வடக்கில்ச்  சென்ற சிங்கள மக்களின் செவ்விகளில் காண முடிந்தது 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் இப்படித்தான் எங்கும் இருப்பினும் யார் சொல்லி யாருக்குப் புரிந்து ...... நடப்பதைப் பார்க்க வேண்டியவர்களாய் நாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

பல  சிங்கள மக்களுக்கும் சிங்கள இளைஞர்களுக்கும் தமிழர்கள் எதிரிகள் என்றே  சொல்லி கொடுக்கப்பட்டது போர்க்காலத்தில் ஆனால் சில சிங்கள மக்கள்  வடகிழக்கில் வந்து பார்த்த பின்பே சொல்கிறார்கள்  இவ்வளவு கஸ்ரம் தமிழ் மக்கள் அனுபவித்திருப்பது தங்களுக்கு தெரியாது என அண்மையில்  வடக்கில்ச்  சென்ற சிங்கள மக்களின் செவ்விகளில் காண முடிந்தது 

நாற்றமெடுக்கும் இனவாதச்சகதியுள் இருந்து மாற்றமொன்றே மாறாதது என்ற வல்லமைச் சொல்லியம் பெறுமதியாகுமா ?... மீள்வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்.

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைகள் இப்படித்தான் எங்கும் இருப்பினும் யார் சொல்லி யாருக்குப் புரிந்து ...... நடப்பதைப் பார்க்க வேண்டியவர்களாய் நாம்.

மக்கள்தமது சக்திகுறித்து அறியாது இருக்கும்வரை ஆட்டங்கள் தொடரவே செய்யும். ஆனால் எதுவரை? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

 

 

பச்சைகளால் பாராட்டும் கிருபன், சுவியர், அபராஜிதன், மொசொபொத்தேமியா சுமேரியர், தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கதை கடந்த காலத்தினதும் தற்காலத்தினதும் அரசியல் நடப்பை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளது.

போரின் வலிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனாலும் இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வுகள் அதிகரித்தாலும், இனவாத அரசியலும் சிங்கள வெற்றிவாதமும் இருக்குமட்டும் நிரந்தர அமைதியான வாழ்வு நிலைக்குமா என்ற சந்தேகமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎.‎04‎.‎2017 at 10:04 PM, nochchi said:

முனிவர்ஜீ அவர்களே

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள். ஒவ்வொரு தமிழரதும் மனதிலே ஏதோ ஒருகாயம் வலித்தவாறே இருக்குமென்றே நம்புகிறேன். வலியை மாற்றும் புதியதலைமுறையொன்று  இருபகுதியிலும் இருந்து எழுமா? நீங்கள் தாயகத்தில் இருக்கிறீர்கள்....

சிங்களத்தில் பிக்குகளும், தமிழினத்தில் மேட்டுக்குடி அகங்காரமும் மாற்றமடைந்தால் வலியை மாற்றும் புதிய தலைமுறை ஒன்று தலையெடுப்பதை,  இத்தலைமுறையிலேயே காணமுடியும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கதை கடந்த காலத்தினதும் தற்காலத்தினதும் அரசியல் நடப்பை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளது.

போரின் வலிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனாலும் இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வுகள் அதிகரித்தாலும், இனவாத அரசியலும் சிங்கள வெற்றிவாதமும் இருக்குமட்டும் நிரந்தர அமைதியான வாழ்வு நிலைக்குமா என்ற சந்தேகமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

 

 

உண்மைதான் கிருபனவர்களே,

வருகைக்கும் கருத்துப்பகிர்வும் நன்றிகள்!

8 hours ago, Paanch said:

சிங்களத்தில் பிக்குகளும், தமிழினத்தில் மேட்டுக்குடி அகங்காரமும் மாற்றமடைந்தால் வலியை மாற்றும் புதிய தலைமுறை ஒன்று தலையெடுப்பதை,  இத்தலைமுறையிலேயே காணமுடியும். 

தமிழினம் இறங்கிச் சென்றாலும் சிங்க பெளத்த மேலாதிக்கவாதமானது மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுச் சீராக நகர்த்ததப்படுகிறது. தேசிய அனைத்துல அரங்கில். அரசியல் நுண்ணகர்வுத் தளத்திலும் சரியாகத் தமது இனவாதத்தை நகர்துகிறார்கள். ஆனால் இந்த மேட்டுகக்குடி வித்தகர்கள் ஒலிவாங்கியின்முன் உறுமுவதோடு குறுகிவிடுகிறார்களே. பிறகு எப்படி இவர்களால்......

பாஞ்சவர்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

On 15.4.2017 at 1:51 AM, nochchi said:

இனவாதம் உங்களை மட்டுமல்ல எங்களையும் முடமாக்கியுள்ளது. ....... அன்று போர் நடத்தியோர் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் நானும் நீயும் அதன் வலிகளைச் சுமந்தபடி.

 

2 hours ago, nochchi said:

பெளத்த மேலாதிக்கவாதமானது மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுச் சீராக நகர்த்ததப்படுகிறது.

 

On 16.4.2017 at 5:05 PM, nochchi said:

மக்கள்தமது சக்திகுறித்து அறியாது இருக்கும்வரை ஆட்டங்கள் தொடரவே செய்யும். ஆனால் எதுவரை?

உங்கள் பதிவுகளை விட வேறு என்னத்தை நான் எழுதிவிட முடியும்.

On 16.4.2017 at 5:05 PM, nochchi said:

நாற்றமெடுக்கும் இனவாதச்சகதியுள் இருந்து மாற்றமொன்றே மாறாதது என்ற வல்லமைச் சொல்லியம் பெறுமதியாகுமா ?

மாறும் //  மாறனும் //  மாறியே ஆகணும் 

நம்பிக்கைதான் வாழ்க்கை 

நம்புவதை தவிர வேறு வழி 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17.4.2017 at 9:47 PM, ஜீவன் சிவா said:

 

 

உங்கள் பதிவுகளை விட வேறு என்னத்தை நான் எழுதிவிட முடியும்.

மாறும் //  மாறனும் //  மாறியே ஆகணும் 

நம்பிக்கைதான் வாழ்க்கை 

நம்புவதை தவிர வேறு வழி 

வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

தமிழினம் முதலில் தன்மீது நப்பிக்கைவைத்தாலேயன்றி வேறில்லை. மெத்தப்படித்த சட்டாம்பிகளால் விடிவுவராது. சிலநேரம் தமிழினத்தின் முடிவாக்கிவிடுவார்களோ(!) என்றே தோன்றுகிறது. இவர்கள் மாறுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் பழுத்த அரசியல்வாதிகளல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.