Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் இளம் யுவதிகளை துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோதரர்களுக்கு சிறை

Featured Replies

கடைக்கு வரும் இளம் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோததர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரிசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இளவரசன் மற்றும் வினோதன் ராஜேந்திரன் என்ற சகோரர்கள், ஒன்பது யுவதிகளுக்கு மதுபானம் வழங்கி அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

26 வயதுடைய இளவரசனுக்கு 22 1/2 வருட சிறை தண்டனையும் 27 வயதுடைய வினோதன் ராஜேந்திரனுக்கு 18 1/2 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் மீது 30 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் அவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போது, இளம் யுவதிகளை இலக்காகக் கொண்டு கடையில் தவறாக நடந்து கொண்டதாக நீதிபதி நோர்மன் ரைட் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஜனவரி வரையான காலப்பகுதியில் பிர்ஹென்ஹெட், வால்டன் மற்றும் கர்ஸ்டனில் என்ற இடத்தில் குறித்த சகோதரர்கள் வேலைக்குச் சென்றிருந்தார்கள்.

இந்த நிலையில் 14 மற்றும் 15 வயதுடைய பதின்ம யுவதிகளுக்கு இலவச இனிப்பு மற்றும் மொபைல் ரீசார்ஜ் செய்து குறித்த சகோதரர்கள் இருவரும் அவர்களின் நம்பிக்கையை வென்றுளளனர். அதன் பின்னர் குறித்த இருவரும் அந்த பெண்களை வாகன பயணத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இறுதிக்கட்டமாக அந்த பெண்களை குடியிருப்பு ஒன்றிற்கு அழைத்து சென்று மதுபானம் வழங்கியுள்ளதுடன், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக நீதிபதி ரைட் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/uk/01/145892?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வளர்ப்பு..

2010 என்றால், 21, 20 வயது. இங்கே பிறந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது.

கையோட கப்பாத்து பண்றது நல்லது. உதுகள் இதைத்தான் செய்யப் போகினம்... வெளியால வந்தும். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை உந்த நகைக்கடை புடவைக்கடை  பெற்றோல்செற் வைச்சு நடத்துறவையின்ரை பெடி பெட்டையளையும் நிமித்தி எடுக்க எல்லாம் சரிவரும் கண்டியளோ.......

10 hours ago, போல் said:

கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரிசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இளவரசன் மற்றும் வினோதன் ராஜேந்திரன் என்ற சகோரர்கள், ஒன்பது யுவதிகளுக்கு மதுபானம் வழங்கி அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒன்பது இல்லை ஒன்பதினாயிரம் வன்முறைகள் வந்தாலும் உங்களிடம் அந்த அவலத்தை பதிவுசெய்யும் கருவி இருக்கின்றதா என்பதுதான் இப்போதைய கேள்வி.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்கை உந்த நகைக்கடை புடவைக்கடை  பெற்றோல்செற் வைச்சு நடத்துறவையின்ரை பெடி பெட்டையளையும் நிமித்தி எடுக்க எல்லாம் சரிவரும் கண்டியளோ.......

ஒன்பது இல்லை ஒன்பதினாயிரம் வன்முறைகள் வந்தாலும் உங்களிடம் அந்த அவலத்தை பதிவுசெய்யும் கருவி இருக்கின்றதா என்பதுதான் இப்போதைய கேள்வி.:cool:

ஆசை

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ...யு .கே வளர்ப்பு இப்படி நாறுது .....?

  • கருத்துக்கள உறவுகள்

யு. கே யுவதிகள்பற்றி முன்பு வந்த ஒரு செய்தி படித்தது ஞாபகத்தில் வருகிறது. அங்கு பள்ளிக்கூடப் படிப்பு முடிந்து வெளிவரும் ஒரு மாணவி குறைந்தது எட்டு மாணவர்களின் அணைப்பை அனுபவித்த அனுபவத்தைக் கொண்டிருப்பதாக.! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Paanch said:

யு. கே யுவதிகள்பற்றி முன்பு வந்த ஒரு செய்தி படித்தது ஞாபகத்தில் வருகிறது. அங்கு பள்ளிக்கூடப் படிப்பு முடிந்து வெளிவரும் ஒரு மாணவி குறைந்தது எட்டு மாணவர்களின் அணைப்பை அனுபவித்த அனுபவத்தைக் கொண்டிருப்பதாக.! :grin:

இது கண்டிக்கப் பட வேண்டிய பதிவு பாஞ்சர். :unsure:

நாம் வெள்ளையர் என்றவுடன், அங்கு பார்த்த அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் நினைவுடன் தான் பாப்போம். ஆனால் அவர்கள் அப்படியா வாழ்கின்றனர்.?

இன்றும் கூட, அறிவியல், புதிய கண்டுபிடிப்புகளில் UK தான் உலகின் முதல் தர நாடு.

தண்ணி, தூள், திருமணத்துக்கு வெளியான கள்ள உறவு என்று நாசமாக்கிப் போன தாய், தந்தையரின், பிள்ளைகள், அவர்களது கவனிப்பில் இருந்து அரசால் எடுக்கப் பட்டு, அரச விடுதிகளில் வளர்க்கப் படுவார்கள். தாய், தந்தை அரவணைப்பில் வளர வேண்டிய இந்த, அன்புக்கு ஏங்கும் பிள்ளைகளை தான் இந்த நாதாரிகள் வளைத்து நாசம் பண்ணுகிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல. 40 வயதுக்கு மேலான பாகிஸ்தானியர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என பத்திரிகைகள் கவலை தெரிவிக்கின்றன. அப்படிபடட ஒரு கோஸ்ட்டிக்கு, மிக கடுமையான தண்டனை வழங்கப் பட்டது.

நமது கலாசாரம்: பேசிக் கட்டி வைப்பவர் உடன் வாழக்கையை ஓட்டி முடித்து விடுவது.

அவர்களது கலாசாரம், தனக்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடித்து வாழ்வினை சந்தோசமாக கொண்டு போவது. இந்த தேடல் ஒருவருடனும் முடியலாம். இல்லை ஒருவருக்கு மேலாகவும் முடியலாம். முக்கியமாக இவனை அல்லது இவளை நான் வாழ்வு முழுவது நம்பி வாழலாம் என்பதே அவர்கள் தேடுவது.

கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி போன எனது உறவினர் மகன், டாக்டர், அங்கு ஒரு வெள்ளை இன டாக்டர் பெண்ணை சந்தித்து, கலியாணம் செய்து கொண்டார். தாலியும், பெண்ணுமாக பார்த்தீர்களானால் நீங்களே கண் சுத்திப் போடுவீர்கள். 

அந்த பெண்ணின் குடும்பம் மிகவும் கலாசாரமானது. தாயார் இப்போது தோசை எல்லாம் சுடுகிறார். எனக்குத் தெரிந்த மூன்று தமிழர்கள், 30 வருடங்களுக்கு மேலாக வெள்ளை இனத்தவர்களுடன் சந்தோசமாக வாழ்கின்றனர்.

ஒரு பெண், அது எவ்வினத்தில் இருந்தாலும், தான், வாழ்நாள் முழுவதும் பயமில்லாமல் வாழ, நம்பிக்கைக்குரிய துணை தேடுகிறார். முதலாவது, இரண்டாவது என அயோக்கியர்களிடம் சிக்கிக் கொள்வது அப்பாவித்தனம், அனுபவமின்மை. அதை காமத்துடன் இணைத்து மலினப் படுத்த வேண்டியதில்லை என்று நினைகிறேன்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்னத்தையும் சொல்ல போக வெளி நாட்டு வாழ்கையில இதெல்லாம் சகஜம் என்பார்கள் நமக்கேன் வம்பு  அவர்களுடைய அம்மா அப்ப இருவரையும் வாழ்த்த வேணும் நல்லா வளர்த்ததற்கு ( நாங்க என்னப்பா செய்வது குழந்தைக்கெள கைவைக்க இங்க சட்டம் இல்லை இது ஒரு சாட்டு )

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

நாம் என்னத்தையும் சொல்ல போக வெளி நாட்டு வாழ்கையில இதெல்லாம் சகஜம் என்பார்கள் நமக்கேன் வம்பு  அவர்களுடைய அம்மா அப்ப இருவரையும் வாழ்த்த வேணும் நல்லா வளர்த்ததற்கு ( நாங்க என்னப்பா செய்வது குழந்தைக்கெள கைவைக்க இங்க சட்டம் இல்லை இது ஒரு சாட்டு )

பிள்ளைகள் ஒழுங்காக இருப்பதை பார்த்து, இது என்ன வளர்ப்பு என்று பின்னால் கதைக்கும் தமிழ் பெற்றோர்களும் கனடாவில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vaasi said:

பிள்ளைகள் ஒழுங்காக இருப்பதை பார்த்து, இது என்ன வளர்ப்பு என்று பின்னால் கதைக்கும் தமிழ் பெற்றோர்களும் கனடாவில் இருக்கிறார்கள்.

கனடாவிலோ நல்ல பெற்ரோர்கள் போல அவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரப் பெட்டைகள் என்றாலே easy meat என்று நினைக்கும் ஆசிய இனத்தினரில் தமிழரும் அடங்கித்தான் உள்ளனர். ஆனால் பராயப்படாத பிள்ளைகளை ஏமாற்றுவதும், பாலியல் உறவு வைப்பதும் பாரிய விளைவுகளைத் தரும் என்ற சட்டங்களைத் தெரியாமல் இவர்கள் இருந்திருக்கமாட்டார்கள். இனி எல்லாம் வற்றும்வரை சிறையில் இருக்கும்போது உணர்ந்துகொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

எத்தனை ஆண்டுகள் வரையில் கம்பி எண்ண வேண்டி வரும் ??  பிணையெல்லாம் என்ன மாதிரி  கொடுத்து வெளியில் வர இயலுமோ என்ன 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

எத்தனை ஆண்டுகள் வரையில் கம்பி எண்ண வேண்டி வரும் ??  பிணையெல்லாம் என்ன மாதிரி  கொடுத்து வெளியில் வர இயலுமோ என்ன 

தண்டனைக் காலத்தின் அரைவாசியை சிறையில் கழித்த பின்னர் நன்னடத்தையில் விடுவிக்கப்படலாம். எனவே குறைந்தது 9 வருடங்களுக்கு ஒருவரும் 11 வருடங்களுக்கு மற்றவரும் வெளியே வரமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

எத்தனை ஆண்டுகள் வரையில் கம்பி எண்ண வேண்டி வரும் ??  பிணையெல்லாம் என்ன மாதிரி  கொடுத்து வெளியில் வர இயலுமோ என்ன 

இந்த மாத்தி எசக்கு பிசக்கு கேள்விகள் கேக்க, பழைய பெயர் விடேல்ல போல கிடக்குது, தனி ஜீ. :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனி ஒருவன் said:

எத்தனை ஆண்டுகள் வரையில் கம்பி எண்ண வேண்டி வரும் ??  பிணையெல்லாம் என்ன மாதிரி  கொடுத்து வெளியில் வர இயலுமோ என்ன 

இவர்களது தண்டனை காலம் 11 9 வருடங்களாகும். இங்கிலாந்தை பொறுத்தவரை ஒர் நாளில் பகல் 12 மணித்தியாலம் மாத்திரம் தண்டனை காலமாகும். இரவு 12 மணித்தியாலம் கணக்கெடுக்கப்படுவதில்லை. ஆகவே 22 வருடங்கள் 11 வருடங்களாக கருதப்படும். 

மேலும் 9 பேர்களை இவர்கள் துஸ்பிரயோகம் செய்தர்கள் என கூறுவது நம்பக்கடினமாக உள்ளது. பல under age இவர்களுடன் சிகரட் / தண்ணிக்காக இணங்கி வந்திருக்கலாம் இவர்களுக்கு நிருபிக்க முடியாமல் போயுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

தண்டனைக் காலத்தின் அரைவாசியை சிறையில் கழித்த பின்னர் நன்னடத்தையில் விடுவிக்கப்படலாம். எனவே குறைந்தது 9 வருடங்களுக்கு ஒருவரும் 11 வருடங்களுக்கு மற்றவரும் வெளியே வரமுடியாது.

10 hours ago, colomban said:

இவர்களது தண்டனை காலம் 11 9 வருடங்களாகும். இங்கிலாந்தை பொறுத்தவரை ஒர் நாளில் பகல் 12 மணித்தியாலம் மாத்திரம் தண்டனை காலமாகும். இரவு 12 மணித்தியாலம் கணக்கெடுக்கப்படுவதில்லை. ஆகவே 22 வருடங்கள் 11 வருடங்களாக கருதப்படும். 

மேலும் 9 பேர்களை இவர்கள் துஸ்பிரயோகம் செய்தர்கள் என கூறுவது நம்பக்கடினமாக உள்ளது. பல under age இவர்களுடன் சிகரட் / தண்ணிக்காக இணங்கி வந்திருக்கலாம் இவர்களுக்கு நிருபிக்க முடியாமல் போயுள்ளது.

உங்கள் தகவலுக்கு நன்றி 

10 hours ago, Nathamuni said:

இந்த மாத்தி எசக்கு பிசக்கு கேள்விகள் கேக்க, பழைய பெயர் விடேல்ல போல கிடக்குது, தனி ஜீ. :grin: 

ஓம் ஓம் நாதமுனி இனி தடுத்து ஆடுவது  தனி ஒருவன்  மட்டுமே :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎17‎.‎05‎.‎2017 at 7:09 AM, Nathamuni said:

இது கண்டிக்கப் பட வேண்டிய பதிவு பாஞ்சர். :unsure:

அவர்களது கலாசாரம், தனக்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடித்து வாழ்வினை சந்தோசமாக கொண்டு போவது. இந்த தேடல் ஒருவருடனும் முடியலாம். இல்லை ஒருவருக்கு மேலாகவும் முடியலாம். முக்கியமாக இவனை அல்லது இவளை நான் வாழ்வு முழுவது நம்பி வாழலாம் என்பதே அவர்கள் தேடுவது.

உண்மைதான்.!! கற்பு என்பதற்குத் தவறான பாதை வகுத்து அந்தக் கலாச்சாரத்திற்குள் மூழ்கிவாழ்வது எங்கள் இனம். அத்துடன் தேடும் அறிவியலின் ஆற்றலை, மதிப்பு மரியாதையுடன், சீதணமும் நிர்ணயிக்கின்றது.

மேலைநாடுகளில் ஒருவரோடு ஒருவர் பழகியபின்னரே வாழ்வதற்குத் துணையைத் தேடிக் கொள்கிறார்கள். கற்பை உடல்ரீதியாகப் பார்க்கும் கலாச்சாரம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தன் மகளுக்கு, ஏன் ஒரு சினேகிதன் கிடைக்கவில்லை? தன் மகனுக்கு ஏன் ஒரு சினேகிதி கிடைக்கவில்லை?. இவர்களிடம் உள்ள குறை என்ன? என்று கவலைப்படும் பெற்றோர்கள் இங்கு ஏராளம்.

பாடசாலைகளில் உள்ள மாணவ மாணவியர்கள், ஊர் உலாவிற்காகக் கூடிச் செல்வதற்கான அனுமதியை வேண்டி பெற்றோருக்கு அனுப்பப்படும் படிவங்களில், உங்கள் பிள்ளை கருவுறுவதைத் தடுப்பதற்கு என்ன முறைகள் கையாளப்படுகிறது என்பதாக ஒரு கேள்வியும்  உள்ளது. 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.