Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

நாதம்ஸ் முன்னர் எழுதிய நினைவு இருக்கு. புலிகள் விடயத்தில் அவர் நடுநிலைமை. சீமான் தமிழின் மீது பற்றுள்ளதால் அவருக்கு ஆதரவு.

  • Replies 3k
  • Views 276.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஜஸ்டின் ஐயா,

உங்களுக்கு இது மூன்றாவது தடவையாக சொல்கிறேன். இருவர் உரையாடலுக்கு இடையே, புகுந்து குலையடிக்கும் வேலையினை இனிமேலும் செய்யாதீர்கள். இது ஒரு தேவையில்லாத வேலை.

என்னுடன் பேசுவதனால் நேரடியாக பேசுங்கள்.  படித்தவர் என்றால் அது செய்கையிலும் இருக்க வேண்டும். நன்றி.

எப்ப இருந்து நீங்கள் மட்டுறுத்துனர்? இப்படி ஏதும் விதி இருக்கா யாழில்? 

எனக்கு விரும்பிய இடத்தில் விரும்பியதை நான் சொல்வேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நாதம்ஸ் முன்னர் எழுதிய நினைவு இருக்கு. புலிகள் விடயத்தில் அவர் நடுநிலைமை. சீமான் தமிழின் மீது பற்றுள்ளதால் அவருக்கு ஆதரவு.

புலிகள் விடயத்தில் என்ன நடுநிலமை?

முதலாவது புலிகள் விடயம் என்று ஒன்றும் இல்லை. தமிழர் விடயம். தமிழ் தேசிய விடயம். 

அவர்கள் என்ன தமது சொந்த பிசினசுக்காகவா போராடினார்கள்?

அவர்களின் சில விடயங்களை நோகலாம், விமர்சிக்கலாம் ஆனால் இந்த விடயத்த்தில் நடு நிலமை என்று ஒன்று இல்லை.

நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடுவில் நடு நிலமை என்றால் அது அநியாயத்தின் பக்கம்தான்.

சொந்த நாட்டில், சொந்த இனத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள் மீது நடுநிலமை, ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அபிமானி?

எங்கோ உதைக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

எப்ப இருந்து நீங்கள் மட்டுறுத்துனர்? இப்படி ஏதும் விதி இருக்கா யாழில்? 

எனக்கு விரும்பிய இடத்தில் விரும்பியதை நான் சொல்வேன்! 

கோசன் என்னை குறித்து சொன்ன அவதூறு சொல்லுக்கு, தமிழ் கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை யார் தந்தது. அது பொது கருத்து அல்ல. 

புரியாத மாதிரி பேசவேண்டாம். நாம் மனிதர்கள் தான், மாடுகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

கோசன் என்னை குறித்து சொன்ன அவதூறு சொல்லுக்கு, தமிழ் கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை யார் தந்தது. அது பொது கருத்து அல்ல. 

புரியாத மாதிரி பேசவேண்டாம். நாம் மனிதர்கள் தான், மாடுகள் அல்ல.

யார் தர வேணும்?🤔

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்,

நான் சொன்னது அவதூறு அல்ல. உங்கள் வார்த்தைகளை மட்டுமே மேற்கோள் காட்டிய ஒரு நியாயமான சந்தேகம்.

5 minutes ago, Nathamuni said:

கோசன் என்னை குறித்து சொன்ன அவதூறு சொல்லுக்கு, தமிழ் கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை யார் தந்தது. அது பொது கருத்து அல்ல. 

புரியாத மாதிரி பேசவேண்டாம். நாம் மனிதர்கள் தான், மாடுகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

  • இந்த கேள்விக்கு தெளிவாக பதில் அளித்து விட்டேன். இலங்கை எனது பிறந்த மண். எனக்கு இலவச கல்வி, மருத்துவம் வழங்கி உருவாக்கியது. அந்த வகையில் அந்த நாட்டின் மீது பேரபிமானம் உண்டு.
  • எனது வெறுப்பு பண்டாரநாயக்க, முதலான பேரினவாத அரசியல் வாதிகள் மீதுதான். அவர்கள் தான் என் தாய் நாட்டினை சீரழித்து இப்படி எம்மை அகதியாக ஓட விட்டார்கள் என்பது எனது நிலைப்பாடு. இன்றும் வேலையில் நான் இலங்கையன் என்று தான் சொல்வேன்.
  • இலங்கை கடவு சீட்டும் வைத்துக் கொண்டு.... இலங்கையன் இல்லை, இல்லாத ஈழநாட்டின் குடிமகன் என்று சொல்வதில் எனக்கு இஷடம் இல்லை.
  • தாய் பகை, குட்டி உறவு என்பது போல, யாழ்ப்பாணம் தேவை, அது இப்போது உள்ள இலங்கை பகை என்று அலம்பறை பண்ண எனக்கு தெரியாது, தேவையும் இல்லை.
  • நாங்கள் வேலைக்கு போவாபராக இருந்தால், ஈழத்தவர் என்று சொன்னால், அது உங்கள் விருப்பம்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

  • ஒருபோதுமே இந்தியாவை நம்பக்கூடாது. அவர்கள் எமக்கு தந்தது அழிவு. அதனை தவிர எதுவுமே தரப்போவதில்லை இனியும்.
  • சிங்களவன் காலில் விழலாம் என்பது உவமானம்.... சாட்சிகாரன் காலில் விழுவதிலும் பார்க்க, சண்டைக்காரன் காலில் விழலாம் என்பது தமிழ் முதுமொழி.
  • இன்றும் இந்தியா கையெழுத்து போட்ட ஒப்பந்தம், குறித்து சிங்களம் சிரிக்கிறது. இந்தியா உங்களுக்கு தீர்வு வாங்கித்தரும் என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் நிலைப்பாடு. அதுக்காக அடுத்தவர்கள் அவ்வாறே நினைக்கவேண்டும் என்றோ, நினைக்கத்தவர்கள் தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது என்றோ இல்லை.

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

  • இந்தியா ஒருபோதுமே உதவாது என்பது நான் எப்போதும் துணிவாக சொல்லும் கருத்து. இதனை சொல்ல தமிழ் தேசியவாதியாகவே இருக்கவேண்டும். மேலும் ஒருவர் தமிழ் தேசியவாதியா இல்லையா என்று செர்டிபிகேட் கொடுப்பது உங்கள் வேலையா? நான் ஒருபோதும் தமிழ் தேசியவாதி என்று என்னை அலம்பறை பண்ணுவதில்லை. அது எனக்கு தேவையும் இல்லை.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

  • பிரபாகரனையோ அல்லது விடுதலை போராடத்தினையோ பெருமளவில்யாழ்பாண சாதிய மேட்டுக்குடி ஆதரிக்கவில்லை என்பது பொதுவான இணையத்தில் உள்ள கருத்து. அதனை லாவகமாக உங்கள் தலையில் போடவேண்டாமே.
  • சிங்கள இனவாதிகளின்குருதி கொடைஎன்பது ஆனந்த வீரசேகர பாராளுமன்று போகுமுன் சொன்னது, இப்போது பாராளுமன்றில் சொன்னது.  யாழ்ப்பாணத்தில் சாதியம் காரணமாக ரத்தம் கொடுப்பதில்லை என்றும், சிங்கள ராணுவமே அந்த குருதி கொடை செய்தது என்றும் தனக்கு புரிந்த வகையில் தவறாக அலம்பறை பண்ணினார்.   விக்கினேஸ்வரன் நாட்டின் ராணுவத்தின் மனிதாபத்தினை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அவரை மடக்கினார்.
  • இதுவே நான் சொன்னது. சிலவேளை உங்களுக்கு எழுதுவது புரிவதிலேயோ?

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

  • நீங்கள் எழுதும் விதத்தில், வாசிப்பவர்களுக்கு... அடடே... சிங்கள ராணுவ அதிகாரிகள்..... கோசன் சொல்வது உண்மையாக இருக்குமோ... என்று நினைக்க வைக்கும் வகையில் எழுதுகிறீர்கள்.... நல்லது...
  • இது சில மாதம் நீங்கள் இங்கே வராமல் இருந்த போதே தளத்தில் பதிந்தேன். ராணுவ அதிகாரி என்று தான் சொன்னேன். எனது நண்பனின் பர்கர் இன மனைவியின், உறவினர்... தண்ணி அடிக்க வந்தார்.... அவருடன் நாயக்கர்கள் குறித்து பேச்சு வந்தபோது, அவருக்கு தெரிந்திருக்கவில்லை, அவர்கள் வரலாறு... இலங்கைக்கு அவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்று தெரிந்திருக்கவில்லை.
  • நான் விளங்கப்படுத்திய போது ஆச்சரியமடைந்தார்..  நான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு குறிப்பு ஒன்றினை  மொபைல் போனில் காட்டியபோது வாசித்து, சிங்கள மொழியில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டார் என்றும், மறுநாள் நான் இருந்த ஹோட்டலுக்கு வந்து இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி என்னும் புத்தகம் பரிசளித்தார் என்றும் கூறினேன்
  • ஒரு உறவு அந்த புத்தகத்தின் பேரையும் கேட்டார்.
  • அதிகாரிகள் என்று சொல்லவில்லை.  நான் ஏதோ இலங்கை ராணுவத்துடன் அவர்கள் துறை சார்ந்து இயங்குவது போல கதை விடாதீர்கள். ஏனய்யா இந்த ஈன வேலை? கொழும்பில் போய் இறங்கும் போது, நான் தமிழ் தேசியன், சிங்கள அதிகாரிகள் யாரும் எனது பாஸ்போர்ட் பார்க்கக்கூடாது என்று கத்துவீர்க்ளோ?

  • தண்ணி அடிக்கும் போது, கொண்டு போன ஓசி தண்ணி அடிக்க வந்த பரதேசிக்கு இவ்வளவு build up நீங்கள் கொடுக்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

  • இதை சொல்லுறது வாயால வடை சுடுறது எண்டு.... நான் சொன்னதை எடுத்தே திருப்பி அடிக்கிறாராம்.... நீங்கள் ஏன் பிராக்கிரசியார் எண்டு சொல்லிக்கொண்டே இங்கே பாயை விரித்து படுத்து இருக்கிறியள் என்னும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

  • நான் முதலில் பதிந்த போது யாருக்குமே வராத சந்தேகம்.... இரண்டாவது தடவையாக பதிந்த போது உங்களுக்கு வரும் காரணம் என்ன?

  • அடுத்தவர்களை முட்டாள்கள் ஆக்கும் உங்கள் வழமையான வேலை தானே. உங்கள் மீது பலருக்கு இருக்கும் சந்தேகத்தினை, லாவகமா யாராவது தலையில் கட்டி விட முனைக்கிறர்கள் என்று சந்தேகம் வருகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

  • நான் அந்த கருத்தினை சொன்னபோது, யார் அதனை செய்யக்கூடியவர்கள் என்று நீங்கள் தான் கேட்டீர்கள். மருதர் சாட்சி, கருத்தாடலில் அவர் பெயர் சொன்னபோது, நீங்கள் அவர் சரி வரார் என்கிறீர்கள்... அப்படியா என்றேன்.... அதனை இங்கே ஒரு தவறாக சொல்லவேண்டிய கயமைத்தனம் ஏன்?
  • அது ஒரு ஆரோக்கியமான விவாதம் என்று நினைத்துக் கொண்டிருந்து, மறுநாளும் அது குறித்து நான் திண்ணையில் நல்ல விதமாக சொல்லி இருந்த போது, நீங்கள் இங்கே சொல்வது, மிகவும் வருத்தம் தருகிறது.
  • என்னுடன், ஆரோக்கியமான விவாதமே.... பண்ணாடைகளே? என்று சொல்வது போலல்லவா இருக்கிறது.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

  • உங்கள் புலிகள் குறித்த கருத்துக்கள் தளம் அறியும். ஆகவே இது குறித்து பேசவேண்டாமே.
  • புலிகள், மாவீரர்கள் குறித்து இங்கே நாலு கருத்து பதிந்தால் தான் நான் தமிழ் தேசிய வாதி என்றால்.... நன்றி.... உங்கள் சான்றிதழ் தேவை இல்லை. நான் பதிந்தது நீங்கள் பார்க்காதது எனது தவறு இல்லை.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

  • சீமானை எதிர்ப்பவர்கள் இருவகை. ஒன்று பிரபாகரனை கொண்டு செல்வதை பிடிக்காதவர்கள். அடுத்தவகை சிங்களத்துக்காக, அவர்கள் அரசியலுக்காக பிடிக்காதது போல நடப்பவர்கள் என்று நான் தான் இது குறித்து இந்த தளத்தில் பதிந்து இருக்கிறேன். அப்படியே தொப்பியினை மாத்தி போட முனையாதீர்கள்.
  • என்னை கேள்வி கேட்பது இருக்கட்டும்.... நீங்கள் எந்தவகை என்று சொல்லுங்களேன் முதலில். அதுவே எமக்கு முதலில் வந்த சந்தேகம். அது கேட்கப்படவுடன்.... எனக்கு ஆப்படிப்பது போல, உங்கள் முதுகில் சொறிகிறீர்கள். நன்று.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  • காலையில் நித்திரையால எழுந்து வந்து, இங்கே நாலு பதிவை போடுவதை தவிர நீங்கள் தமிழ் தேசியம் தொடர்பில்  என்ன செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
  • நான் தமிழ்தேசியவாதி என்று அங்கீகரிக்க சொல்லி உங்களிடம் மனு ஏதாவது கொடுத்தேனா? உங்கள் நோக்கம், வேலை தான் என்ன? இந்த தளத்தினுள் படுத்துக் கிடந்தது, வருபவர், போவருடன்... கதையை போட்டு அவர் தமிழ் தேசியவாதியா, இல்லையா என்று ஆராய்ந்து சான்றிதழ் கொடுப்பதா உங்கள் வேலை? ஊரிலை இப்படி ஓய்வு பெற்று இந்த விடுப்புகள் கேட்கும் கனபேரை, கோவிலடியிலும், தேத்தணிக்கடை முன்னாலும் பார்த்திருக்கிறோம்.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

  • நிர்வாகத்தால், நீக்கப்பட்ட ஒரு கருத்தினை, நீக்கப்படும் என்று தெரிந்து, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து மீண்டும் பதிந்து, நிர்வாகத்துக்கு காரணம் சொல்லி, பதிந்தீர்கள். அதனையும் தூக்கியது. அதே கேள்வியினை இப்போதும் கேட்கிறீர்கள். முன்னர் கேட்டேன் பதில் இல்லை என்கிறீர்கள்.
  • நானும், அடுத்தவர்களும், நிர்வாகமும் உங்கள் வேலை வெட்டி இல்லாத அளப்பல்களுக்கு, நேரம் மினக்கெட்டு பதில் தரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

  • அதுதான் வேலை மினக்கெடட ஒருவர் சொல்லி விட்டாரே.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

  • இது கூட நான் சொன்ன உவமானம்: பம்பலப்பிட்டி தும்முள்ள சந்தியில் பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில், பிரேமர் போலீசாரை பிக்குகள் போல அனுப்பி, தமுக்குள் மோதவைத்து.... ஆர்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தது.

இன்னொரு விடயத்தினையும் சொல்கிறேன்.

  • நான் போன வருடம் கேட்டபோது, my car, my petrol என்பதாக, உங்களது வீட்டு சோறையா தின்னுகிறேன், நீங்கள் கவலைப்பட என்று சொன்னீர்கள்.
  • ஆனால் இப்போது சகலரும், இவர் எப்படி இங்கே 24 மணி நேரமும் மினக்கெடுகிறார் என்று கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை.
  • என்ன வேலை செய்கிறீர்கள் என்று எமக்கும் தெரியாது, அது குறித்து திண்ணையில் சிலாகித்தபோது, ( solicitor office or university) எல்லைக்கோட்டினை தாண்டுவதாக குமுறினீர்கள்.
  • அதுவே இங்கு பலருக்கும், எனக்கும் சந்தேகம், எப்படி இந்த மனிதர் வருமானம் இல்லாமல் இங்கே 24hrs குப்பை கொட்டுகிறார் என்று.
  • திமுக IT wink  200 ரூபா கொடுக்குதே என்று நகைசுவையாக சொல்லி விட்டு, என் மேலே சந்தேகம் என்று சொல்வது உங்களுக்கே நகைச்சுவையாக இல்லையா?
  • அந்த சந்தேகத்தினை தீருங்கள்... உங்கள் சந்தேகத்துக்கு பதில் தானே வரும்.

எனது பதில்கள் மேலே

இனியும் உங்களுடன் கருத்தாடலாம் என்று தோன்றவில்லை. தோன்றினால் நல்லது. 

பாருங்கள் இரண்டு மணிநேரம் வேறு வேலைக்கு வைத்திருந்தது அநியாயம் ஆகிவிட்டது.

2 hours ago, Justin said:

யார் தர வேணும்?🤔

கடந்த வார இறுதி வரை நீங்கள் ஒரு அநோட்டமி படிப்பிக்கும் மருத்துவ பேராசிரியர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னடா பெரும் படிப்புக்காரர் இவருக்கெல்லாம் இங்கே வர நேரம் இருக்கிறதா என்று நினைத்தேன்.

நீங்களாகவே தான் என்ன வேலை என்று திண்ணையில் சொன்னீர்கள். ஏன் இந்த சிண்டு முடியும் சில்லறை விடயங்களுக்கு நேரம் இருக்கிறது என்று புரிகிறது. இதுக்கு மேலே சொல்ல விசயம் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

எனது பதில்கள் மேலே

இனியும் உங்களுடன் கருத்தாடலாம் என்று தோன்றவில்லை. தோன்றினால் நல்லது. 

பாருங்கள் இரண்டு மணிநேரம் வேறு வேலைக்கு வைத்திருந்தது அநியாயம் ஆகிவிட்டது.

கடந்த வார இறுதி வரை நீங்கள் ஒரு அநோட்டமி படிப்பிக்கும் மருத்துவ பேராசிரியர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னடா பெரும் படிப்புக்காரர் இவருக்கெல்லாம் இங்கே வர நேரம் இருக்கிறதா என்று நினைத்தேன்.

நீங்களாகவே தான் என்ன வேலை என்று திண்ணையில் சொன்னீர்கள். ஏன் இந்த சிண்டு முடியும் சில்லறை விடயங்களுக்கு நேரம் இருக்கிறது என்று புரிகிறது. இதுக்கு மேலே சொல்ல விசயம் இல்லை.

 வலது சாரி அரசியல் பற்றி ஒரு கருத்தைச் சொன்னால் எட்டாம் கிளாஸ் பிள்ளைகள் மாதிரி என்ன இது சிண்டு முடிதல் அது இது எண்டு கொண்டு நிக்கிறியள்? இப்ப என் வேலைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அனாடமியா? என்னப்பா இது?

இங்கே பேசப்படும் அரசியல் பற்றி ஒரு விடயம் சுட்டிக் காட்டினால் இப்படி பதகளிக்க என்ன இருக்கிறது நாதம்?இதுக்கேன் திண்ணையில் சொன்னதெல்லாம் தேவை?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ஐயா... உங்கள் வயதுக்கு, படிப்புக்கு தகுந்த ஆட்களுடன் பேசுங்கள்.... நம்முடன் வேண்டாமே. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அகற்றப்படும் கருத்துகளை மேற்கோள் காட்டாமல் எழுதுகிறேன் நாதம்: வலதுசாரி, நாசிக்கட்சியின் பெயரில் இருந்து ஆரம்பித்த விடயத்தை அப்படியல்ல என்று வாதிடுவதை விட்டு விட்டு ஏதோ நான் இன்னொரு யாழ் உறவோடு உங்களை பகையுண்டாக்க செயல் படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் நடக்கிறதென நினைக்கிறேன்! இனி களத்தில் நான் குழப்பம் விளைவிக்கவே எல்லா இடங்களிலும் எழுதுகிறேன் என்று dog whistle கொடுப்பீர்கள் என நினைக்கிறேன். 

கவலையில்லை, இதனாலெல்லாம் நான் யாழின் எப்பகுதியிலும் எழுதுவதை நிறுத்தப் போவதில்லை! 😊

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

புலிகள் விடயத்தில் என்ன நடுநிலமை?

முதலாவது புலிகள் விடயம் என்று ஒன்றும் இல்லை. தமிழர் விடயம். தமிழ் தேசிய விடயம். 

அவர்கள் என்ன தமது சொந்த பிசினசுக்காகவா போராடினார்கள்?

அவர்களின் சில விடயங்களை நோகலாம், விமர்சிக்கலாம் ஆனால் இந்த விடயத்த்தில் நடு நிலமை என்று ஒன்று இல்லை.

நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடுவில் நடு நிலமை என்றால் அது அநியாயத்தின் பக்கம்தான்.

நன்றி கோஷான்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

எனது பதில்கள் மேலே

இனியும் உங்களுடன் கருத்தாடலாம் என்று தோன்றவில்லை. தோன்றினால் நல்லது. 

பாருங்கள் இரண்டு மணிநேரம் வேறு வேலைக்கு வைத்திருந்தது அநியாயம் ஆகிவிட்டது.

கடந்த வார இறுதி வரை நீங்கள் ஒரு அநோட்டமி படிப்பிக்கும் மருத்துவ பேராசிரியர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னடா பெரும் படிப்புக்காரர் இவருக்கெல்லாம் இங்கே வர நேரம் இருக்கிறதா என்று நினைத்தேன்.

நீங்களாகவே தான் என்ன வேலை செய்கிறார் என்று திண்ணையில் சொன்னீர்கள். ஏன் இந்த சிண்டு முடியும் சில்லறை விடயங்களுக்கு நேரம் இருக்கிறது என்று புரிகிறது. இதுக்கு மேலே சொல்ல விசயம் இல்லை.

நீண்ட பதில்களுக்கு நன்றி.

என்னை பற்றிய உங்கள் குமுறல்களுக்கு நான் பதிலளிக்க போவதில்லை. ஆனால் உங்கள் நியாயமான கேள்விக்கு நிச்சயம் பதில் உண்டு.

1. திண்ணையில் நீங்கள்தான் - பணம் தருவோம்என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும் என்பதையும் சொல்லி. யார் அப்படி செய்ய கூடியவர் என நான் கேட்க, உருதிராவின் பெயரை சொன்னீர்கள். நான் அந்த ஐடியாவே சரி இல்லை என மறுப்பவன். நான் யார் பெயரையும் சொல்வில்லை. மருதர்தான் உருதிரா சரிவரமாட்டார் என எழுதினார். 

2. இலங்கை பற்றிய உங்கள் அபிமானம் - இதை முன்பு கூட பால்ராஜ் இலங்கை கடவுசீட்டுதானே பாவித்தார் என மிக மட்டமாக பால்ராஜையும் உங்களையும் ஒப்பிட்டு ஒரு பதில் எழுதினீர்கள். வேறு வழியில்லாமல் ஒரு நாட்டின் கடவு சீட்டை பாவிப்பது வேறு, ஒரு நாட்டின் மீது பேரபிமானம் கொள்வது வேறு. இலங்கையில் போய் இறங்கும் போது எல்லாரும் நவதுவாரங்களையும் மூடியபடிதான் போவார்கள். ஆனால் மிக சிலரே பேரபிமானம் கொண்டு கூத்தாடுவார்கள். அப்படி பட்ட ஒருவர், இலங்கை தமிழர்- சிங்களவர் பிணக்கில் தான் நடு நிலமை என கூறுபவர் - என்ன காரணதுக்காக எங்கேயோ இருக்கும் சீமானை மூர்கமாக ஆதரிக்க வேண்டும்? 

3. தனது சொந்த நாட்டில், பல கொடுமைகளுக்கு ஆளான தன் இனத்துக்காக போராடியவர் மீது “நடு நிலையாய்” நிற்கும் ஒருவர், எப்படி அதே இனத்துக்காக, சீமான் தமிழகத்தில் போராடுவதாய் சொல்லுவதை மட்டும் ஆதரிக்கிறார்?

4. நான் உங்களுக்கு தேசியவாதியா இல்லையா என பட்டம் தரவில்லை. ஆனால் நீங்கள்தான் சீமானின் கொள்கைகளால் ஈர்கப்பட்டு அவரை ஆதரித்தாகவும், அவரின் தமிழ் இனதூய அரசியல் உங்களை கவர்ந்ததாயும் கூறினீர்கள். அப்போ நீங்கள் சீமானின் தீவிர தமிழ்  தேசியத்தை ஆதரிப்பவர்தானே? அப்போ தமிழக அரசியலை பொறுத்தவரை நீங்கள் தமிழ் தேசியவாதிதானே? ஆனால் இலங்கையில் சொந்த இரத்த உறவுகள் வேட்டையாடபட்ட நிலத்தில் மட்டும் ஏன், தமிழ் தேசியத்துக்கும் பேரினவாததுக்கும் இடையில் நடுநிலையானீர்கள்? இந்த முரண்தான் உங்கள் மீதான சந்தேகத்தின் அடிப்படை. வளைச்சு, வளைச்சு எழுதினாலும் இந்த கேள்விக்கு மட்டும் நீங்கள் பதிலே எழுதவில்லை.

5. மிக தந்திரமாக இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள்தான் கெட்டவர்கள், மக்கள் இல்லை என நிறுவ முயற்சிக்கிறீகள். நீங்கள் இதை சொல்லும்போது அங்கே வாழ்ந்து நாளும் பொழுதும் இனவாதத்தை அனுபவித்த ஒரு கூட்டத்தின் காதில் பூந்தோட்டத்தை  சுற்றுகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். இலங்கையில் பண்டா ,டட்லி முதல் ஒவ்வொரு அரசியல்வாதியும் தீர்வுக்கு வந்த போது அதை குழப்பியது வெகுசனமே. ஒரே நாட்டில் வாழும் இன்னொரு குழு நரவேட்டை ஆடப்பட்ட போது பால் சோறு ஊட்டியவர்கள் என்ன வானத்தில் இருந்தா வந்தார்கள் ? ஆக இதுதான் உங்கள் நிலைப்பாடு. எமது சொந்த பிரச்ச்னையையே கொழும்பு மேல்தட்டு, சிங்கள பார்வையூடு பாக்கும் நீங்கள். எங்களை பார்த்து தமிழ் சாதியவாதிகள். என்கிறீர்கள்.

6. மேலே சொன்னபடி - இத்தனை கொடுமைக்கும் பிறகும் நீங்கள் சிறிலங்கன் என உணருவதும், அரசியல்வாதியில்தான் பிழை என உணருவதும் உங்கள் இஸ்டம். ஆனால் நிச்சயமாக இலங்கையை பொறுத்தவரை நீங்கள் ஒரு தமிழ் தேசியவாதி அல்ல. மாறாக நீங்கள் ஒரு இலங்கைக்கு முண்டு கொடுக்கும் Sri Lankan apologist. 
7. இப்படி பட்ட ஒருவர், ஏன் சீமான், சீமான் என முறுகுகிறார்? இந்த எலி ஏன் அம்மமணமாக ஓடுகிறது ? இன்னும் பதில் இல்லை.

8. உங்கள் கட்டுரை. நீங்கள் அதை பற்றி பல்வேறு திரிகளிலிலே சொன்னதைதான் நான் சொன்னேன். புதிதாக எதுவும் எழுதவில்லை. ஆனால் இலங்கை அதிகாரிகளுடன் ஒன்றாக தண்ணி அடிக்கும் ஒருவர். பிரபா படத்தை, புலி கொடியை கொண்டு செல்லும் சீமானை ஆதரிப்பது ஏன்? இவர் சீமான் ஆதரவாளர் என்பது இந்த இராணுவ நண்பர்களுக்கு தெரியுமா? இவர் சீமானுக்கு பொய் சொல்கிறாரா? நண்பருக்கு பொய் சொல்கிறாரா? Your answers leave more questions unanswered. 

9. இனி கோசானுக்கு வருவோம். நான் எனக்கு சட்டம் தெரியும் என சொன்னால் நீங்கள் என்னை சொலிசிட்டர் என உருவகித்தால் நான் பொறுப்பல்ல. டவாலியில் இருந்து சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ் வரை சட்டம் தெரிந்தவர்கள்தான் 🤣. நான் கேம்பிரிஜுக்ஜு அப்பிளை பண்ண போறேன் என்றால் - அதை வைத்து நீங்கள் ஒரு கற்பனை செய்தால் அதற்கும் நான் பொறுப்பல்ல. 

10. இங்கே பல  ஐந்தாம் படைகளும் வருவதால் - நான் என்னை பற்றி பூடகமாகவே சொல்வேன். அதில் பல ஊகத்துக்கு இடம் இருக்கும். கூடவே விடுப்பு கதைப்பவர்களை சுத்தலில் விடுவதும் ஒரு கிக்தான்.

11. இங்கே நான் மட்டும் இல்லை, என்னை விட திண்ணையில் இருந்து விடுப்பு கதைபவர் நீங்கள். அப்புறம் மருது, ஜஸ்ரின், குசா அண்ணை, உடையார் நாங்கள் எல்லாரும்தான் அதிக நேரம் எடுக்கிறோம். இவர்கள் எல்லாரும் எவரிடமோ காசு வாங்கி விட்டு யாழில் எழுதுபவரா? May be நான் ஒரு காவலாளியாக இருக்கலாம், அதனால் எப்போதும் போன் பார்க்கும் வசதி இருக்கலாம்? (இன்னொரு ரவுண்ட் சுத்துங்கள்😂). 

12. ஆகவே உங்களை போல மூக்கு சாத்திரம் பார்த்து நான் ஒருவரையும் சந்தேகிப்பது இல்லை. உங்களை நான் சந்தேகிக்க காரணம் உங்கள் கொள்கை இலங்கையிலும் இந்தியாவிலும் ஏறுக்கு மாறாக இருப்பது. சுருங்க சொல்லின் நீங்கள் சீமானை ஆதரிப்பது, கதிர்காமர் சீமானை ஆதரிப்பது போல. An absolute contradiction. 

11. ஆனால் எனது அரசியல் தெளிவானது. தனிநாடு என்றுமே சாத்தியமில்லை. இலங்கக்குள்தான் தீர்வு ஆனால் கெளரவமான தீர்வு. இந்த தீர்வை வெளி சக்திகள் ஆதரவுடன், இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் அடைய வேண்டும். ஒரே ஒரு சாத்தியமான வெளிச்சக்தி இந்தியா மட்டுமே. புலிகளின் தனிநாட்டு கொள்கை, சில நடைமுறைகளில் ஒத்த கருத்து இல்லாவிடிலும். அவர்கள் பற்றுறிதியாக நியாயத்தை வேண்டி போராடினார்கள். எனக்காகவும் சேர்த்து என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த விடயத்தில் நான் நடுநிலைவாதி கிடையவே கிடையாது. 

12. ஒரு தமிழ் தேசியவாதியாக, தமிழரில் ஒரு பிரிவை நீ தமிழன் இல்லை என பிரித்து அவர்களை ஆரியத்தின் பக்கம் விரட்டுவதை, தமிழ் இனத்துக்கே செய்யபடும் துரோகமாக கருதுகிறேன். ஆகவே சீமானை எதிர்கிறேன். சீமான் மட்டும் தூய-தமிழர் அரசியலை கைவிட்டு, நெடுமாறன் பாணி தமிழ் தேசியத்தை கையில் எடுத்தால் - சீமானை எதிர்க்க எனக்கு ஒரு வலுவான காராணமும் இருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

 2009 இல் கோத்தா தன் சிங்கள இரணுவத்துக்கு என்ன சொன்னாரென்று யாரும் இதுவரை கதைப்பதில்லை, அந்த நாய்கள் அதை செயலிலும் காட்டினான்கள், இறந்த உடல்கள் என்று கூட இல்லாமல். ஆனா சீமான் கோபத்தில் பேசியது திரி க்கு திரி காவி திரிவது நல்லதா, இதையா மேற்கோள் காட்டுவது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

நன்றி கோஷான்

🙏🏾

2 minutes ago, உடையார் said:

 2009 இல் கோத்தா தன் சிங்கள இரணுவத்துக்கு என்ன சொன்னாரென்று யாரும் இதுவரை கதைப்பதில்லை, அந்த நாய்கள் அதை செயலிலும் காட்டினான்கள், இறந்த உடல்கள் என்று கூட இல்லாமல். ஆனா சீமான் கோபத்தில் பேசியது திரி க்கு திரி காவி திரிவது நல்லதா, இதையா மேற்கோள் காட்டுவது. 🤔

வணக்கம் உடையார்,

யாழில் முதல முறையாக இப்போதான் நான் இதை பற்றி எழுதுகிறேன். அதையும் மிக தெளிவாக கோபத்தில் வாய் தவறி என்றே எழுதினேன். 

சீமானின் உக்கிர தமிழ் தேசியத்தை சுட்டவே இதை பாவித்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

🙏🏾

வணக்கம் உடையார்,

யாழில் முதல முறையாக இப்போதான் நான் இதை பற்றி எழுதுகிறேன். அதையும் மிக தெளிவாக கோபத்தில் வாய் தவறி என்றே எழுதினேன். 

சீமானின் உக்கிர தமிழ் தேசியத்தை சுட்டவே இதை பாவித்தேன். 

நீங்கள் இல்லை👍, சிலர் இதைதான் மேற்கோள் காட்டுகின்றார்கள் 

19 minutes ago, goshan_che said:

🙏🏾

வணக்கம் உடையார்,

யாழில் முதல முறையாக இப்போதான் நான் இதை பற்றி எழுதுகிறேன். அதையும் மிக தெளிவாக கோபத்தில் வாய் தவறி என்றே எழுதினேன். 

சீமானின் உக்கிர தமிழ் தேசியத்தை சுட்டவே இதை பாவித்தேன். 

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

வணக்கம் கோஷன், மன்னிக்கவும், கவனிக்கவில்லை.

என்னால் உங்களை போல் இப்படி பந்தியா எழுத வராது.

சுருக்கமாக நான் அறிந்தவரை நாதா நீங்கள் எழுதிய மாதிரி இல்லை.

நாதா சீமானை ஆதரிப்பது எமது தலைவரையும் போராட்டத்தையும் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் எடுத்து சென்றாதிற்கே, அதனால்தான் நானும் ஆதரிக்கின்றேன்.

எமக்காக குரல் கொடுக்க ஒரு நல்ல ஆட்சி இந்தியாவில் உருவாக வேண்டும், அதனால் மத்திய அரசை அரசை அசைக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

துல்ப்ஸ்,

சீமான் மீதான என் விமர்சனப்பார்வை நீங்கள் அறிந்ததே. ஆனால் இதை அவர் ஒருதரம் மட்டும் சொன்னதும், சொல்லபப்ட்ட சூழலும், கோபத்தில் வந்த வார்த்தை என்றே படுகிறது.

எனது கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

தெலுங்கர் இல்லாவிட்டால் தமிழ்நாடு இல்லை - உங்களின் வெறுப்பிற்கு காரணம் தெரியவில்லை, நீங்கள் சீமானின் ஒன்று இரண்டு காணொளிகளை பார்த்தால் இப்படிதான் உங்களின் பதில் வரும். சீமானின் பதிலை கீழே பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

வணக்கம் கோஷன், மன்னிக்கவும், கவனிக்கவில்லை.

என்னால் உங்களை போல் இப்படி பந்தியா எழுத வராது.

சுருக்கமாக நான் அறிந்தவரை நாதா நீங்கள் எழுதிய மாதிரி இல்லை.

நாதா சீமானை ஆதரிப்பது எமது தலைவரையும் போராட்டத்தையும் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் எடுத்து சென்றாதிற்கே, அதனால்தான் நானும் ஆதரிக்கின்றேன்.

எமக்காக குரல் கொடுக்க ஒரு நல்ல ஆட்சி இந்தியாவில் உருவாக வேண்டும், அதனால் மத்திய அரசை அரசை அசைக்க முடியும்

உங்களளை போல் இல்ல உடையார் நான் எனக்கு விகல்ப மனது. ஆகவே கேள்வி கேட்கிறது. கேள்வி இதுதான்.

பிரபாவின் போராட்டத்தை “நடு நிலையாக”  தள்ளி நின்று பார்க்கும் ஒருவர், அதை அடுத்த நாட்டில் பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்வதால் ஏன் சீமானை ஆதரிக்கிறார்?

இங்கே நீங்கள், கு.சா அண்ணை, மருது இவர்கள் எல்லாம் ஏன் சீமானை ஆதரிகிறீர்கள் என்பதிலும், நந்தன் ஏன் எதிர்கிறார் என்பதும் எனக்கு நன்றாகவே விளங்கிறது. 

பிகு: ஒவ்வொருவரையும் அவரவர் சொல்வதை வைத்து எடை போடுவது உங்கள் தனி விடயம். இதில் நான் கோஸ்டி சேர்க வரவில்லை. நீங்கள் கேட்டபடியால் சொன்னேன்.

2 minutes ago, உடையார் said:

ராதாரவி v சீமான்.

தமிழரை துண்டு போடும் கத்தரிகோலின் இரு பக்கங்கள். 

மறைகரம் டெல்லியில்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

நடிகர் ராதாரவி அவர்களின் பேச்சு
நாம் தெலுங்கர்கள் என்று பெருமையுடன் பேசிவந்த ராதாரவி
இனி யார் தமிழர்கள் என்று கேள்வி வராது

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்

  • கருத்துக்கள உறவுகள்

சரி நின்று உரையாடுங்கள். இனி நான் patrolling போகும் நேரம். இந்த யூனிபோர்ம் வேறு குளிர் தாங்காது. 

வருகிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சரி நின்று உரையாடுங்கள். இனி நான் patrolling போகும் நேரம். இந்த யூனிபோர்ம் வேறு குளிர் தாங்காது. 

வருகிறேன்🤣

கொராணா உங்களைப்பார்த்து ஓடப்போகின்றது பின்னங்கால் பிரடியில்பட 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தெலுங்கர் இல்லாவிட்டால் தமிழ்நாடு இல்லை - உங்களின் வெறுப்பிற்கு காரணம் தெரியவில்லை, நீங்கள் சீமானின் ஒன்று இரண்டு காணொளிகளை பார்த்தால் இப்படிதான் உங்களின் பதில் வரும். சீமானின் பதிலை கீழே பாருங்கள்

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வேளாண் மசோதாவை எதிர்த்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.