Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: ஒரு தங்கையின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பிகள் தங்கைகளின் உறுதி மொழி

 

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்  -நமது கடமை என்ன?

seeman8355-1597242340.jpg

சென்னை: தற்போதைய நிலை தொடர்ந்தால் இனி யானைகள் தினம் என்பது மட்டும் இருக்கும்; யானைகளே இருக்காது என்கிற நிலை உருவாகிவிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு (ஆக.12) சீமான் வெளியிட்ட அறிக்கை:

உலகில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஆகத்து 12 ஆம் நாள் உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், தந்தத்திற்காக வேட்டையாடப்படுதல், வாழ்விடங்கள் அருகுதல், வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், மின்சார வேலிகள், தண்டவாளங்கள் , தோட்ட வெடிகள், உணவு வழங்கும் காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட மனிதர்களால் உருவாக்கப்படும் இன்னல்களால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்து வருவது பெரும்வேதனையளிப்பதாக உள்ளது.

விலங்கினங்களில் தனித்துவமிக்கச் சிறப்பு வாய்ந்த உயிரினம் யானை. மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. உயிரினங்களில் அதிக நினைவுத்திறனும் உடையவை. யானைகள் காடுகளில் இருக்கும்போது, பெரிய மரங்களின் இளம் கிளைகளை ஒடித்து உணவாக உட்கொள்கின்றன. மேல்மட்ட கிளைகளை ஒடிப்பதால், சூரிய ஒளி அடர்ந்த காட்டின் தரையை அடைய முடிகிறது. தேவையான சூரிய ஒளி கிடைப்பதால், புற்கள் அதிகம் வளர்ந்து, தாவர உண்ணிகளுக்கு உணவாகின்றன.

மேலும், கீழே விழும் இலை தழைகளையும் மற்ற தாவர உண்ணிகளான முயல், மான், காட்டெருமை போன்றவை உணவாக்கிக் கொள்கின்றன. தாவர உண்ணிகள் அதிகரிக்கும்போது ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளுக்கு உணவு கிடைக்கின்றது. எனவே உணவுச்சங்கிலியில் யானைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. யானைகள் ஒரு நாளில் 300 முதல் 350 வரை விதைகளை விதைக்கிறது. தன் வாழ்நாளில் சராசரியாக 18 இலட்சம் மரங்கள் வளரக் காரணமாக உள்ளது.

அழிந்த 22 வகை யானைகள்

இத்தகைய பல்லுயிர்ச்சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த யானைகள் மனிதர்களின் தன்னலத்தால் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்பதுதான் மறுக்கவியலா உண்மை. ஆதிகாலத்தில் உலகில் வாழ்ந்த 24 வகை யானைகள் இனங்களில் இதுவரை 22 வகைகள் அழிந்து தற்போது, உலகில் ஆப்பிரிக்கா, ஆசியா என இருவகை யானைகள் மட்டுமே உள்ளன.

தமிழகத்தில் மொத்தமே 3,500 யானைகள்

1900 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு கோடியாக இருந்த யானைகளின் எண்ணிக்கை 1990-களில் பத்து இலட்சமாகக் குறைந்தது. தற்போது ஆப்பிரிக்காவில் 5 இலட்சம் யானைகளும் , ஆசியாவில் 1 இலட்சம் யானைகள் மட்டுமே உள்ளன. 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் ஏறத்தாழ 31,000 யானைகளும் தமிழகத்தில் 3,500 யானைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன.

8 மாதங்களில் 17 யானைகள் பலி
17 யானைகள் மரணம்

கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 3000 யானைகள் வேட்டையாடப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் மாதந்தோறும் 8க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதாகவும், இதில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 17 யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியைத் தருகின்றன. யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் எனப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (IUCN) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு எத்தனை பாதுகாப்புச்சட்டங்கள் இயற்றியிருந்தாலும், அரசுசாரா நிறுவனங்களும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், யானைகள் அழிக்கப்படுவதும் அழிவதும் குறைந்தபாடில்லை.
யானைகள் இருக்காது
யானைகள் இனி இருக்காது

இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது. மிருகக்காட்சி சாலைகளிலும், திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் , புத்தகங்களிலும் மட்டுமே பார்க்கும் அரிய வகை உயிரினமாக யானைகள் மாறிப்போகும். ஏற்கனவே, மனிதர்களால் முற்றாக அழிந்துபோன உயிரினங்களால் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், அதிக வறட்சி, குறுகிய நாளில் அதிக மழைப்பொழிவு, திடீர் புயல்கள் எனப் பல்வேறு இயற்கை சீற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். பல்லுயிர்ச்சூழலில் உணவுச்சங்கிலி அறுபடாமல் பாதுகாக்கும் யானைகளின் அழிவு, அவற்றையெல்லாம் விடப் பல மடங்கு தாக்கத்தை, ஆபத்தைச் சூழலியலில் ஏற்படுத்தக் கூடியது என்றால் மிகையல்ல.

கடுமையான சட்டங்கள் தேவை

ஆகவே, இவற்றையெல்லாம் உணர்ந்து மத்திய-மாநில அரசுகள், யானைகள், புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களான காடுகள், மலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றையும் பாதுகாக்கும் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டுமே தவிர பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளவேட்டைக்காகத் தளர்த்திட முனையக்கூடாது. அது வனவிலங்குகளுக்கும் நாட்டின் வளங்களுக்கும் மட்டுமின்றி எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கே தவிர்க்கமுடியாப் பேராபத்தினை விளைவிக்கக் கூடும்.

நமது கடமை என்ன?

மேலும், சூழலியல் பாதுகாப்பு குறித்த அரசின் சட்டங்களையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிப்பதும், தவறான சட்டங்களை எதிர்த்துப் போராடுவதும், சரியான சட்டங்களை மதித்து முறையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

தன்னலம் விடுத்துத் தம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும், மலைகள், அருவிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கூறுகளையும் நேசித்து, பாதுகாத்து இப்புவியை உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்ததாக அடுத்தத் தலைமுறைக்குக் கையளிப்பதே நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-on-world-elephant-day-394292.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உதயசூரியன் இல்லை இது உதயநிதி சூரியன் | உதயநிதி ஸ்டாலின் | பாஜக

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை வீழ்த்த துடிக்கும் துரோகிகள் / உடைத்து நொறுக்குவோம் / நாம் தமிழர்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

TET-Secondary-Teachers-Protest-Equal-Pay-For-Equal-Post-Chennai-Seeman-Support-2.jpg

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதுவரை எவ்வித பணிநியமன ஆணையும் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப் பெறாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முந்தைய பணியையும் பலர் துறந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றுப் பரவலையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்கில் இவர்களது குடும்ப நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்றதனால் ஏராளமான பணி வெற்றிடங்கள் உருவாகியும் தமிழக அரசு ஏன் இதுவரை அவற்றை நிரப்பாமல் வைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லக்கதக்கது என்ற விதியின் காரணமாக, 2013ல் வெற்றிபெற்றவர்களின் தேர்ச்சி தகுதியானது இந்த ஆண்டோடு முற்றுபெறும் நிலையில் உள்ளது. இறுதி ஆண்டும் கொரோனா ஊரடங்கில் பணி ஆணை வழங்கப்படாமலே முடிந்துவிடுமோ என்ற கவலை ஆசிரியப் பெருமக்களை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

கல்லூரிப் பேராசிரியர்களுக்கான மத்திய-மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வுகளின் ( NET – SLET)தேர்ச்சி சான்றிதழானது, ஆயுட்காலம் முழுவதும் பணிநியமனம் செய்யப்படும் வரை செல்லத்தக்கதாக உள்ளது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தகுதித்தேர்வின் தேர்ச்சியானது ஏழாண்டுகள் மட்டுமே செல்லதக்கத்து என்பதும், அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித பணிநியமனமும் செய்யப்படவில்லை என்பது ஆசிரியப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

எனவே தமிழக அரசு, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடமாக விளங்கும் வகுப்பறைகளை வழிநடத்த காத்திருக்கும் ஆசிரிய பெருமக்களை இனியும் துன்பத்தில் ஆழ்த்தாது இனிவரும் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களில் 2013 ஆம் ஆண்டுத் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமன ஆணையை வழங்கி நிரப்பப்படாமல் உள்ள பணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப முன்வர வேண்டும். மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உள்ளதுபோல் தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்காலமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-tn-govt-to-appoint-2013-tet-pass-teachers/

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு விரோதமான மண் குவாரியை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் ! சீர்காழி குறவளூர் கிராம்.!

 

  • கருத்துக்கள உறவுகள்

large.Survey.jpg.61ea48070b5a21452fbb32b59d3b51d7.jpg

இதிலே பழனிச்சாமி அவுட் ஆவார்.... ரஜனி போட்டியில் இல்லை.

ஆக.... அய்யாதுரைக்கும், சீமானுக்கும் தான் போட்டி. 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

large.Survey.jpg.61ea48070b5a21452fbb32b59d3b51d7.jpg

இதிலே பழனிச்சாமி அவுட் ஆவார்.... ரஜனி போட்டியில் இல்லை.

ஆக.... அய்யாதுரைக்கும், சீமானுக்கும் தான் போட்டி. 😎

 நாதமுனி ஏன் இந்த பொல்லாப்பு!! பாருங்கோ கொஞ்சப்பேர் கத்தி கோடாலியோடை வருவினம்!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 500 பேரை வேலைக்கு சேர்த்ததில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி புலி இடும்பாவனம் கார்த்திக் வீர உரை

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஓட்டுக்கானவர்கள் அல்ல

 

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மிக முக்கியமான இரண்டு சம்பவங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மாநில தன்னாட்சி உரிமைகளைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கை! - சீமான் போராட்ட அழைப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது சனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை! – சீமான்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது சனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை! - சீமான்

 

பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலைநாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று.

நீதித்துறை மீதான எண்ணற்ற இளையோர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிராசந்த் பூசண் அவர்களோடு துணை நிற்பது சனநாயகத்தின் மீதும், அதனை அங்கீகரிக்கும் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை.

இதுவரை ஏழைகளின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகவும் வலம் வந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்கள் மேலும் உறுதியோடு இயங்க, நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே இன்றைய தேவை.

 

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

The need of the hour is to support Lawyer Prashant Bhushan, who has been the voice of the poor and the companion of the oppressed, to be more and stay determined.

While the freedom of expression, which has been denied for centuries, was nominally established in the post-1947 Independent Indian Union, the contempt of court against advocate Prashant Bhushan is totally undesirable.

It is the duty of every one of us who believes in democracy and the constitution to support Prasanth Bhushan, who resonates the minds of countless young people in the judiciary system.

– Seeman
Chief Coordinator
Naam Tamilar Katchi

 

https://www.naamtamilar.org/seeman-urges-to-stand-with-lawyer-prashant-bhushan/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏலியன் அல்ல தமிழன்டா
கல்யாணசுந்தரத்தின் குரலில்
பாட்டைக் கேழுங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இன்றைய பேட்டி

 

  • கருத்துக்கள உறவுகள்

"ஏலியன் அல்ல தமிழன்டா" பாடல் மதிப்புரைகள் | பெ.மணியரசன்|சுரேஸ் காமாட்சி|களஞ்சியம்| ஆட்டோ சந்திரன்

தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், திரைப்பட தயாரிப்பாளர் சுரேஸ் காமாட்சி, இயக்குனர் களஞ்சியம், ஆட்டோ சந்திரன் ஆகியோர் பயணியின் "ஏலியன் அல்ல தமிழன்டா" பாடல் குறித்தான மதிப்புரைகளை இந்தக் காணொளியில் வழங்குகிறார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

சீமான் இன்றைய பேட்டி

 

உடையார், மன்னிக்க வேண்டும், இது முழு பேட்டி. நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

உடையார், மன்னிக்க வேண்டும், இது முழு பேட்டி. நன்றி.

 

நன்றி நாதமுனி முழு இணைப்பிற்கு 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.