Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2020 at 21:35, ஈழப்பிரியன் said:

 

சீனா ஊடுருவல் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல...

நாங்க தான் ராமர் கோவில் கட்டுகிறோமே!!!...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தமிழகத்தில் கிராமங்கள் வரை தலைவர் பிரபாகரனையும் புலிக்கொடியையும் கொண்டு சேர்த்த கட்சி நாம் தமிழர் கட்சிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர் தொகுதியில் 50க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சி இணைந்தனர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அறவழி ஆர்ப்பாட்டம் பனை விதை நடுதல்
ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் ஆர்வத்துடன் கலந்து பதாகைகள் ஏந்தி அறவழி ஆர்ப்பாட்டம் செய்தனர்

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்!
அறிவர்!
எழுச்சித் தமிழர்!
அண்ணன் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளில் நிறைந்த பேரன்புகொண்டு நெஞ்சார வாழ்த்துவதில் தம்பி பெரிதும் மகிழ்கிறேன்.

வாழ்க அண்ணன் பல்லாண்டு!

 

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் மறைத்த தமிழர்களின் வரலாறு

 

  • கருத்துக்கள உறவுகள்

இடும்பாவனம் கார்த்தியை கண்டிக்கிறேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

Agastya Agattiyam 1 hour ago
எங்கு பிறபினும் தமிழன் தமிழனே!!இங்கு பிறபினும் அயலான் அயாலானே!!பார்பினியத்தை தன்னுள் வாங்கி அடிமையாகி போன தெலுங்கன் கன்னடன் எப்படி பார்பினியதிற்கு எதிராக திரும்புவான் என்று எதிர் பார்க்க முடியும்!!! பெரியார் திராவிடம் என்ற பெயரில் செய்வது அனைத்தும் தமிழர்களை ஏமாற்றும் வேலையே!!ஏமாற்று தொழில்லில் தெலுங்கர் கை தேர்ந்தவர்கள்!!!தமிழ்நாட்டில் பொய்யான சிட் ஃபண்ட் கம்பனிகளை ஆரம்பித்து கொலையடிது ஆந்திர காட்டுக்குள்  ஓடியவர்கள் இதன் மூலம் பல குடும்பங்கள் அழிந்தார்கள்!! பொய் சான்று இதழ்க்கு பேர் போனவர்கள்!!!சாதி ஒழிப்பு என்ற பெயரில் நாடகம் ஆடி தமிழர்களை பிரித்து அழிக்கும் வேலையை திராவிடம் என்ற போர்வையில் 60 வருடமாக ஏமாற்றி வருகிறார்கள் ஏனென்றால் தமிழர்கள் தெலுங்கரா என்று எளிதாக கண்டுபிடித்து விடமுடியும் என்பதில்நாளே!! இதற்காக பணம் சேகரித்து செலவு இடுகிறார்கள்....

திராவிடம் என்று பேசிய நாம் இந்தி தொடங்கி நீட் வரை எதிர்க்கிறோம். ஆனா ஏன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பிற திராவிட பகுதியில் எதிர்ப்பு இல்ல??   காரணம் இங்க திராவிட கோஷம் எதிர்ப்பு அரசியல் நடத்தவும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைக்கவும் தான் பயன்பட்டது. ஆனா மத்த தென் மாநிலங்களில் திராவிட நாடு கோஷத்தோட பெரியாரும் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் அவர் வாழ்ந்த காலத்திலயே புறக்கணுக்கப்பட்டது வரலாறு. சரி விஷயத்துக்கு வருவோம். தமிழ்னு வெறும் அரசியல் கோஷம் போட்ட நாம் இந்தியை எதிர்த்தோம் ஆனா ஆங்கிலத்துக்கு அடிமையானோம். இது சிலரது அரசியலுக்கு மட்டும் தான் பயன்பட்டது.  

திராவிட ஈ.வெ. இராமசாமி நாயக்கர் பெரியார்  கோஷ்டிகள் தமிழ் வரலாறு பற்றி தவறாக திரித்து சொல்வதும். தமிழ் மன்னர்களையும் தமிழர்களையும் தவறாக திரித்து சொல்வதும் வாடிக்கையாக கொண்டவர்கள்  12ஆம் நூ்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை விஜய  நகர் நாயக்கர் மன்னர்கள் , Krishna Deva Raya செய்த அட்டூளியங்களும் கொலைகள் பார்பினிய அடிமை முறைகளையும் சாதியம் மக்கள் நிலங்களை பிடிங்கியும் படிக்க விடாமல் மூடர்கள் ஆகியும் அறம் தவறிய ஆட்சி முறையையும் போர் முறையும் தமிழ் பேச கூடாது  என்ற தடையும் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையும் யாரும் பேச மாட்டார்கள்.sun டி விவும் கலைஞர் டிவி வும் திணிக்கும் பார்பினியதை பேச மாட்டார்கள். தமிழ்நாடு  வந்தேறிய இது போன்ற கூட்டங்கள் மனிதம் இல்லாத சாதி வெறிய தூண்டுவதும் அதை வைத்து அரசியல் செய்வதும் கொலை கொள்ளை இயற்கை அழிப்பு போன்றவை  திராவிடம் என்ற பெயரில் நடத்துவதும் வழக்கம் ஆகி விட்டது.

தெலுகு நாயகர்களின் ஆட்சி காலத்தில்தான் தீண்டாமை திணிக்க பட்டது தமிழர்களிடம் சாதியின் அடிப்படையில் பிரித்து பார்ப்பனியத்தை திரித்து தினித்தார்கள் தமிழர்களை கொன்று குவித்து அவர்களது நிலங்களை பிடிங்கி கொண்டார்கள் பறையரிடம் விளை நிலங்களை பிடிங்கி கொண்டு ஊரை விட்டு ஓதிக்கி வைத்தார்கள் தமிழர்களின் வரலாற்றை மாற்றி திரித்து  சொன்னார்கள் கடைசியாக திராவிடம் என்கிற பெயரில் தமிழர்களை பிரித்து சண்டை போட வைக்கின்றனர் அவர்கள் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.https://youtu.be/YZJ1WLQxetY
இப்போது திரை துறையும் தொலைக்காட்சி துறையிலும் செய்தி துறைகளிலும் விட்டு வைக்கவில்லை அங்கேயும் சாதி பிரச்சினைகளை தூண்டி தமிழர்களை துரத்திவிட்டு தெலுங்கர்களே ஆட்சி செய்கின்றனர் எந்த ஒரு தமிழர் கட்சி தொடங்கினாலும் அவர்களை சாதி கட்சி என்கிற பெயரில் முடகுவதே இவர்களுது தொடர் செய்யல் ஆகி விட்டது இவர்கள் தமிழர்களை ஒரு போதும் ஒன்று சேர விடமாட்டார்கள்
 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஊரடங்கு நேரத்தில் ஆட்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் உட்பட 30 பேர் மேல் வழக்கு பாய்ந்தது.  😀

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனுக்கான சீமானின் பாராட்டும் வாழ்த்தும் கொண்ட இந்தக் காணொளி நிச்சயம் ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சியான விடயம் அல்ல. சீமான் இதைச் செய்திருக்க வேண்டாம். 2009 இல் இவர் காங்கிரஸ் - தி மு க கொலைகாரக் கூட்டணியிலிருந்துகொண்டு ஈழத்தமிழர் இனக்கொலையில் ஆற்றிய பங்கிற்குப் பிறகுமா அவரை வாழ்த்துகிறார் சீமான்? தவறு செய்கிறீர்கள் சீமான். தமிழ்த்தேசியத்தினை உண்மையாக நேசிக்கும் நீங்கள் இவர்போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு ஆதரவு தர வேண்டாமே? இந்தக் காணொளியில் அவர்செய்த தவறுபற்றி ஒரு வசனம் கூடவா உங்களால் கூறமுடியவில்லை? அப்படிச் செய்தாலாவது இக்காணொளி திருமாவை வாழ்த்தும் அதேநேரத்தில், அவர் செய்த தவற்றினையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருக்குமே? ஏன் செய்யத் தோன்றவில்லை?

 

Connecting The Dots on Twitter: "Indian controversial politician ...

  • கருத்துக்கள உறவுகள்

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது! - சீமான் வலியுறுத்தல்

 

அறிக்கை: வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

வடமாநிலத்தவர் கொண்டாடும் விழாவிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் 10 நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று வடமாநிலத்தவர் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடர்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா உள்ளிட்ட வட மாநில விழாக்களுக்குத் தமிழர்களின் பெருந்தன்மையால் தமிழகத்தில் விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் தமிழர் திருநாளான பொங்கல், முப்பாட்டன் முருகனைப் போற்றும் தைப்பூசம் உள்ளிட்ட எந்த வகையான தமிழர் விழாக்களுக்கும் விடுமுறை கூட அளிப்பதில்லை என்பது மற்ற மாநிலங்களில் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கும் எத்தகைய மதிப்பு வழங்கப்படுகின்றன என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

கொல்லாமையைப் போதித்த மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏற்கனவே ஒரு நாள் இறைச்சிக்கடைகள் தமிழகத்தில் மூடப்படுகிறது. அதைத் தமிழர்கள் நாம் இதுவரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம் என்பது நமது பெருந்தன்மை. அதற்காகத் தொடர்ந்து பத்து நாட்கள் தமிழர்கள் அனைவரும் இறைச்சி உண்ணக்கூடாது என்று சட்டத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்க துணிவது தமிழர்களின் உணவை, உணர்வை, உரிமையைப் பறிக்கின்ற கொடுஞ்செயலாகும். இங்கு வந்து குடியேறி, தமிழர்களின் வரிப்பணத்தில் எல்லாவித சலுகைகள், அரசின் திட்டங்களையும் எவ்வித பாகுபாடுமின்றிப் பெற்றுக்கொண்டு, வளமோடு வாழவைத்த தமிழர்களுக்கு வடமாநிலத்தவர்கள் செய்யத் துணியும் துரோகமாகும்.

யார் என்ன படிக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என அடுத்தவர் தீர்மானிப்பதை அனுமதிப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமின்றிச் சமூகநீதிக்கும் எதிரானது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரிவினர் நோன்பு கடைப்பிடிக்கின்றனர். அதற்காக அந்த நாட்களில் மற்றவர்கள் யாரும் இறைச்சி உண்ணக்கூடாது என முடிவெடுத்தால் ஒவ்வொரு நாளுமே இறைச்சிக் கடைகள் மூடித்தான் இருக்க வேண்டும். யார் நோன்பு மேற்கொள்கிறார்களோ, யார் விழா கொண்டாடுகிறார்களோ, யாருக்கு உண்ண விருப்பமில்லையோ அவர்கள்தான் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிரத் தங்களது நிலைப்பாட்டை அடுத்தவர் மேல் திணிக்கக் கூடாது.

மேலும், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் பண்ணையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் எனப் பல இலட்சக்கணக்கானவர்களை நேரடியாகப் பெரும் இழப்பிற்குத் தள்ள நினைக்கும் எண்ணம் மிகக்கொடுமையானது. ஏற்கனவே ஊரடங்கால் பெரும் இழப்புகளைச் சந்தித்து வரும் இறைச்சி விற்பனையாளர்களை 10 நாட்களுக்கு விற்பனைக் கூடாது எனத் தடுப்பது மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாகவே அமையும்.

தமிழக அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டித்தரக்கூடிய தொழிலான இறைச்சி விற்பனை மற்றும் அது சார்ந்த தொழில்களான உணவகங்கள், விடுதிகள் போன்றவையும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கொரோனோ நோய்த்தொற்றுப் பரவி வரும் சூழலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் உள்ள உணவான இறைச்சியை மக்கள் அவரவர் விருப்பத்தின் பேரிலும் தேவையின் பொருட்டும் உண்பதற்கு தமிழக அரசு எத்தகைய இடையூறும் விளைவிக்கக்கூடாது.

கலாச்சாரப் படையெடுப்பாக நிகழும் வடமாநிலத்தவர்களின் இத்தகைய போக்குக்கு தமிழக அரசு ஒருபோதும் அடிபணியக் கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். தவறும்பட்சத்தில் தமிழகத்தில் தடையை மீறி இறைச்சிக் கடைகள் திறப்பதும், அதற்குப் பாதுகாப்பாகப் பெருந்திரளாகப் அணிதிரள்வதும், பொது இடங்களில் இறைச்சி சமைத்து உண்ணும் போராட்டங்கள் போன்ற எதிர்வினைகளை அரசால் தவிர்க்க முடியாததாகி, அதனால் விளையும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையும் ஏற்படலாம் என எச்சரிக்கிறேன்.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தமிழக அரசு, இவ்விவகாரத்தில் உறுதியான எதிர்ப்பைப் பதிவு செய்து, தமிழர்களின் உரிமைக்கும் தமிழகத்தின் அமைதிக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய இப்பிரச்சினையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை பெரும்பான்மை தமிழக மக்களின் உரிமையைப் பறிக்கின்ற இதுபோன்ற சதிச்செயல்களுக்கு தமிழக அரசு துணைபோனால், மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் கடுமையான போராட்டங்களை தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-tn-govt-should-not-succumb-to-the-northerners-cultural-invasion/

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: பல்வேறு மாவட்டங்களில் உறவுகள் களத்தில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இணையதள வகுப்பும் தேர்வுகளும் வளர்வது ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு இது சாத்தியமா.? தமிழ்பிரியா வேங்கை பிரபாகரன்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி வறுமை நிலைக்கு தள்ளும் SWIGGYமீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீமான்

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

சாதாரண விடமில்லை ஆட்சி அமைப்பது விரைவில், ஆனா பல தடைகளை தாண்டி அமைப்பார்கள், இளைஞர்கள் விழித்தெழ தொடங்கிவிட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து என்ன செய்வது ? | what is our next steps ? | NTK இணையத்தில் பிரச்சாரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

போலி தமிழ்தேசிய வாதிகள் / திருமாவளவன் / சீமான் ntk / U2 brutus / தமிழ் தேசியன்

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்க நினைக்கும் கூட்டம் அடங்கட்டும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.