Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 90
 
முகநூலும் நேரடி ஒளிபரப்பும்
 
தொழில் சம்பந்தமாக ஒருவருடன் ஒப்பந்தம் ஒன்று போடணும்.
இடைத்தரகர் ஒருவரை நியமித்து ஒப்பந்தம் எழுத முயன்றபோது
யாருக்கும் போகும் தரகுப்பணம் எம்மவருக்கு போகட்டுமே என எம்மவரை அமர்த்தியிருந்தேன்.
ஓம் என்றுவிட்டு போனவர் தான் பல வாரமாக இழுக்க ஆரம்பித்தார்.
தொலைபேசியிலும் பதிலில்லை.
நானெல்லாம் தண்ணீர் மாதிரி. 3 தரம் தான் பொறுமை.
 
இனி இவரை விடுத்து நேரடியாக ஒப்பந்தத்தை போடலாம் என்றாலும் இவர் சொந்தக்காரர்.
உறவில் விரிசல் வரக்கூடாது.
எனவே ஒப்பந்தம் போட நான் போகும் போது
இவர் அந்த இடத்தில் இல்லாமலிருக்கணும் என்ன செய்யலாம் என யோசித்தபடி இருக்கின்றேன்.
அதேநேரம்
அவர் அவ்விடத்திலிருந்து 100 கிலோ மீற்றருக்குப்பாலிருந்து முகநூலில் நேரடி ஒளிபரப்பு போட்டபடி இருந்தார்.
 
அந்த நேரம் எனக்கு போதுமே...
 
மாத்தி யோசி
இனி யாராவது நேரடி ஒளிபரப்பு போடுவீங்க...????
  • Replies 339
  • Views 51k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வனுக்கு வல்லவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 91

இன்று எனது அம்மாவின் 92வது பிறந்தநாள்.

இந்த உலகில் எம்மை முழுமையாக அறிந்தவர் புரிந்தவர் எவராக இருக்கும் என பார்த்தால்

நிச்சயமாக அது பெற்ற தாய்க்கே முதலிடம்.

எனது தாயார் எனது தம்பியின் வீட்டில் இருக்கிறார். அடிக்கடி பார்க்கப்போவதுண்டு.

அப்பொழுதெல்லாம் அங்கு சாப்பிடாமல் வருவதில்லை. அதை எனது உரிமை என நினைப்பவன் நான்.

அவ்வாறு நான் சாப்பிடும் போது தம்பியின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்கள் எனது கோப்பையில் தான் இருக்கும்.

மறுபடியும் பரிமாறுவதற்காக.

ஆனால் அவற்றையெல்லாம் மீறி அம்மா தான் இதுவரை முந்திவிடுகிறார்.

என்ன கோப்பை வெறுமையாக இருக்கு (ஆனால் கோப்பையில் அரைவாசி சாப்பாடு இருக்கும்)

கறி காணாமல் இருக்கு (கறி கனக்க இருக்கும்) என்பார்.

அவரும் என்னுடன் சாப்பிட்டால்

அவரது கோப்பையிலிருந்து விசேசமான சாப்பாடுகள் எனது கோப்பைக்கு மாறிவிடும்.

நாங்க அவருக்கு வடிவாக கொடுப்பம் தானே நீங்க சாப்பிடுங்கள் என்றாலும் கேட்கமாட்டார்.

போட்டுக்கொண்டே இருப்பார்.

தம்பியின் மனைவி சொன்னார் அத்தனை மக்களும் பேரப்பிள்ளைகளும் வந்து போகிறார்கள்

ஆனால் உங்களைக்கண்டால் தான் இப்படி என.

கதிர்காமத்தில் தவமிருந்து 5 பெண்களுக்கு பிறகு பிறந்தவனுக்கு ஊட்டி வளர்த்த 
தொட்டில் பழக்கம் அவருக்கு.

நூறுக்கு இன்னும் சில வருடங்கள் தான். வாழணும் தாயே. வாழ்த்தணும் எம்மை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அம்மாவுக்கு என்ட வாழ்த்தையும் சொல்லி விடுங்கள் அண்ணா...அம்மாவின் 100 வயசு பிறந்த நாளை யாழ் உறவுகளையும் கூப்பிட்டு சிறப்பிக்க வேண்டும்...அம்மா 100 வயது வரை வாழ ஆண்டவன் அருள் பாலிக்க வேண்டும் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

நூறுக்கு இன்னும் சில வருடங்கள் தான். வாழணும் தாயே.

தாயை வாழ்த்த வயது  எனக்கில்லை.

கடவுளின் கிருபை அவருக்கு என்றும்  இருக்க வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அம்மா.
தேக ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 92
 
உப்பிட்டவரை...???
 
உலக கோப்பை காற்பந்தாட்டம் நடைபெற்றுவருகிறது.
 
லண்டனில் இருந்தபடி I Love England என்று படம் போட்டு முழக்கம் செய்பவர்களை பார்க்கும் போது
தமிழினம் நன்றி மறந்து நடக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என தோன்றுகிறது.
அத்தனை பேரும் பிரான்சிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் சென்றவர்கள்.
 
முகமோ அல்லது உறவோ தெரியாமல்
அகதியாக ஓடி வந்தவரை அரணைத்தது
சாப்பாடு போட்டது
அகதிப்பணம் கொடுத்தது
முதல் சம்பளம் கொடுத்தது
எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதித்து விசா மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து கௌரவித்தது
 
இது அனைத்தையும் மறந்து
ஆங்கிலம் பேசுவது அறிவை அளக்கும் கருவி என
ஒல்லாந்தர் காலத்து அறிவியலை நம்பி
பாய்ந்து சென்றோரை நினைக்க....
 
சாபம் வேண்டாம் பிழைத்துப்போகட்டும்...
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 92
 
உப்பிட்டவரை...???
 
உலக கோப்பை காற்பந்தாட்டம் நடைபெற்றுவருகிறது.
 
லண்டனில் இருந்தபடி I Love England என்று படம் போட்டு முழக்கம் செய்பவர்களை பார்க்கும் போது
தமிழினம் நன்றி மறந்து நடக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என தோன்றுகிறது.
அத்தனை பேரும் பிரான்சிலிருந்து அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் சென்றவர்கள்.
 
முகமோ அல்லது உறவோ தெரியாமல்
அகதியாக ஓடி வந்தவரை அரணைத்தது
சாப்பாடு போட்டது
அகதிப்பணம் கொடுத்தது
முதல் சம்பளம் கொடுத்தது
எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதித்து விசா மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து கௌரவித்தது
 
இது அனைத்தையும் மறந்து
ஆங்கிலம் பேசுவது அறிவை அளக்கும் கருவி என
ஒல்லாந்தர் காலத்து அறிவியலை நம்பி
பாய்ந்து சென்றோரை நினைக்க....
 
சாபம் வேண்டாம் பிழைத்துப்போகட்டும்...
 

அதே...அதேதான் இஞ்சையும்.....சிற்றிசன் எடுத்துப்போட்டு இஞ்சையிருந்து என்ன நாக்கூத்தையே வழிக்கிறது எண்டு நக்கலடிச்சுப்போட்டு லண்டனுக்கு ஓடினவையள்.....

பெட்டி படுக்கை சோபா அலுமாரி எண்டு எல்லாத்தையும் கட்டிக்கொண்டு போகேக்கை ஜேர்மன்காரனுக்கு நாசியள் எண்டு பட்டத்தையும் குடுத்துட்டு ஓடினவையள்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 93

சீமானின் தமிழக அரசியலும் எம்மவர் அரசியலும்

சீமான் புலிகள் பற்றியும் அவர்களது செயல்முறைகள் பற்றியும் அதிகம் முரணாக பேசுகிறார்.

புலிகள் மீது வேறு விதமான சாயலை தூவுகிறார்

அதை தமிழகம் எங்கும் பரப்பகிறார்

இதனால் புலிகள் மீதான பார்வை மாறுகிறது

எனவே அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்தணும் என எம்மவர்கள் எழுதியும் அதை காவியும் வருகின்றனர்.

உண்மையில் இன்று சீமான் புலிகள் பற்றி பேசியதை தேடும் போது

சில விரும்பத்தகாத வார்த்தைகள் அதிகம் காணப்படுவதை

காவி மெருகூட்டியவர்கள்

இதே எம்மவர்கள்தான் என்பது தான் உண்மையும் எம்முன்னே நடப்பதுமாகும்.

அப்படிப்பார்த்தால் சீமானின் பேச்சை

சீமானை ஏன் நாம் தமிழரைவிட

அதிகமாக காவி அவற்றை பகிரங்கப்படுத்தி வலுச்சேர்த்த பெருமை எம்மவரையே சாரும்.

அப்படிப்பார்த்தால் சீமான் மீதான இவர்களின் குற்றச்சாட்டு இவர் மீதே வலுவாக பதிகிறது.

ஈழத்தமிழினத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்ட சில தம்பியிடம்

சீமானின் சில முரணான கருத்துக்கள் பற்றி எழுதி விளக்கம் கேட்டேன்.

பதில்: சீமான் செய்வது தமிழகத்துக்கான அரசியல்.

அது (எமக்கு) ஈழத்தவருக்கு புரியாதது.

புரிந்து கொள்ளவும் முடியாதது.


ஒரு கலைஞர் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு

எமது மண்ணில் உள்ளுராட்சி தேர்தலில் கூட வெல்லமுடியாது.

ஆனால் தமிழகத்தில் அவர்கள் தான் முதலமைச்சர்கள் என்றார்.

எனவே சீமானின் எமக்குத்தேவையற்ற

பொருந்தாத கருத்துக்களை

எம்மவர்கள் எம்மவர்களுக்குள் விதைப்பதை நிறுத்தினாலே போதுமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 94
 
கதாநாயகர்களின் ஆட்டம்
 
ஒரு கதாநாயகனை நம்பி எடுக்கப்படும்
படமாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும்
அது மிக மிக ஆபத்தானதும்
கரணம் தப்பினால் மரணம் என்றவகையில் பொருத்தமற்றதாகவுமே இருக்கும்.
 
இன்று Messi ஆ?
France ஆ?
இன்னும் சில மணித்துணிகளில் தெரிந்து விடும்.
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

Messiஉம் Ronaldo வும் தங்கள் தங்கள் வீட்டுக்குள் போகிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 95
 
கதாநாயகர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது
 
போன கிழமை கதாநாயகர்களின் கதை முடிவுக்கு வந்திருக்கிறது. Brésil யை தவிர.
எமக்கெல்லாம் இது விளையாட்டு.
ஆனால் Brésil போன்றவர்களுக்கு அது தான் வாழ்க்கை.
 
France க்கு சவால் விடக்கூடியவர்கள் அநேகமாக அகன்றுவிட்டுள்ள நிலையில்
நம்பிக்கை மேலும் வலுவாகிறது.
 
 
இன்னொரு சந்தோசமும் உண்டு.
 
சனிக்கிழமை போடப்பட்ட கோல்கள் 10
அதில் PSG (Paris saint Germain) வீரர்களால் போடப்பட்ட கோல்கள் 5.
 
இனி Brésil போடப்போவதும் Uruguay போடப்போவதும் நம்ம கணக்கில தானே...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 96
 
இன்று கரும்புலிகள் நாள்
 
காலையில் எழும்பும் போதே ஒருவித சோர்வு ஒட்டிக்கொள்ளும் இவர்களின் தியாகங்களுக்கும் ஏதுமற்று போனதே என.
 
ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
 
உலகில் வரலாறுகளில் இப்படியானவர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் நம்பமுடிவதில்லை
 
இவர்கள் எம் கண் முன்னே
திகதி குறித்து
இலக்கை தேடிச்சென்று மாண்டவர்கள்
எமக்கு தடையாக இருந்தவற்றை அகற்றிச்சென்றவர்கள்
 
உலக வரலாற்றில் இவை அதிசயம்
தமிழருக்கு இவர்கள் பொக்கிசங்கள்
 
 
தமிழ் உள்ளவரை
உங்கள் நினைவு இருக்கும் மாவீரரே.
 
ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
 
அதை காக்க பாதுகாக்க ஒன்றாகணும் தமிழர்கள்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 97
 
சுமை அதிகமானாலும் சுகமே....
 
France அரை இறுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
France மிகவும் நிதானமாகவும் நாணயமாகவும் விளையாடி இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
 
தொடர்ந்து France அணி விளையாடிக்கொண்டிருந்தால் தொழில்கள் படுத்துவிடும்.
மக்கள் வெளியில் வரமாட்டார்கள்.
வீடுகளுக்குள் தஞ்மடைந்து கொள்வார்கள்.
வருமானம் என்று பார்த்தால் இது தனி நபர்களுக்கு சுமையை அதிகரிக்கச்செய்வது தான்.
 
ஆனாலும் பிரெஞ்சு மக்களின் நல்லது கெட்டதில் பங்கெடுக்கணும்.
அகதியாக ஓடிவந்த எம்மை தாங்கிய மண்ணல்லவா.
 
ஒரு நாட்டின் மகிமை அதை இழந்தவனுக்குத்தான் அதிகம் தெரியும்.
 
ALLEZ LES BLEUS !!!
 
 
 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 98

பெற்றோரின் கனவுகள்

பிள்ளைகளின் படிப்பு சார்ந்து

ஒரு பெற்றோரின் கனவு ஆகக்கூடுதலாக போனால்

வைத்தியராக்குதல் அல்லது பொறியியலாளர் ஆக்குதல் தானே.

அதே நேரம் பெற்றோர்கள்

தமது பிள்ளைகளின் கல்வியை தீர்மானிப்பதை தற்போதைய உலகம் அனுமதிப்பதில்லை.

எனக்கும் இதில் உடன்பாடில்லை.

ஆனால் எதற்கும் தயாராக்குதல் பெற்றோரது கடமை.

முயற்ச்சியே இல்லாத வாழ்வை பிள்ளைகளுக்கு நாம் முன் மொழிய முடியாதல்லவா.

அவ்வாறே எனது கடைசி மகள்

பிறந்ததிலிருந்தே வாசிப்பு வாசிப்பு வாசிப்பு.

புத்தகங்கள் வேண்டுமானால் அக்கா அண்ணன்மார் உட்பட உடனடியாகக்கிடைக்கும் அவளுக்கு.

புத்தகங்கள் மற்றும் வாசிப்பு மீது அலாதி பிரியம் அவளுக்கு.

அதன்படி நேற்று வந்த உயர்தர சித்தியில்

விஞ்ஞான பாடத்தில் (SVT) 19/20 எடுத்து வைத்தியப்படிப்புக்கு செல்கிறார்.

பிரான்சைப்பொறுத்தவரை வைத்தியப்படிப்பில்

முதலாவது வருடத்தில் தெரிவாகி வருவதென்பது மிகமிக கடினம்.

அதை தாண்டிவிட்டால் தான் உறுதிப்படுத்தமுடியும்.

வந்தால் மலை.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்கிறேன்  வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், மலையே வரட்டும்......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு... உங்கள் மகள்  நிச்சயம்  தனது, இலட்சியத்தில் வெற்றி பெறுவார். வாழ்த்துக்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 99
 
செயல்
 
ஒரு செயலை லட்சம் எழுத்துக்கள் அல்லது பேச்சுக்கள் கூட சமனாக்கிவிட முடியாது.
 
அந்தவகையில்
என்னுடைய உறவுகள் நண்பர்கள் மற்றும் என்னுடன் தொடர்பிலுள்ளவர்கள் எவராயினும்
நான் அடிக்கடி சொல்லும் விடயம் ஏதாவது ஒரு அமைப்பில் செயற்படுங்கள் என்பது தான்.
புலிகளது காலத்தில் கூட நான் புலிகள் சார்ந்து இயங்கினாலும்
புலிகளுடன் சேர்ந்து இயங்குங்கள் என்று சொன்னதில்லை.
ஏதாவது ஒரு அமைப்பில் செயலில் இருக்கணும்.
 
அந்த செயல் என்பது
தாயகத்தின் விடுதலை அல்லது அபிவிருத்தி சார்ந்து இருந்தால் போதுமானது.
எமக்குள் வெவ்வேறான மாற்றுக்கருத்துக்கள் இருந்தபோதும்.
எனது ஊர் சார்ந்தும் அங்குள்ள அமைப்புக்கள் சார்ந்தும் எனது கருத்தும் வேண்டுகோளும் அது தான்
யார் குற்றியும் அரிசியானால் சரி என்பதே எனது எதிர்பார்ப்பு.
 
எனவே தாயகத்திலோ ஊரிலோ புலத்திலோ
ஏதாவது ஒரு அமைப்பில் அங்கத்தவராகி செயல்ப்பாட்டாளராக மாறுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.
அவ்வாறு மட்டுமே உங்களால்
உங்களது செயற்திறனை காட்டுவதுடன் மட்டுமன்றி
உங்களது கருத்துக்களுக்கும் உங்களது ஆலோசனைகளுக்கும்
அந்த அமைப்பை செவி சாய்க்க செய்யமுடியும். சீரமைக்க முடியும் (தவறுகள் இருந்தால்)
 
மற்றும்படி எந்த அமைப்பிலும் இல்லாது
வெறும் முகநூல் லைக் விரும்பிகளாக
மேடைப்பேச்சாளர்களாக வலம் வருவோர்
அல்லது உள்ள அமைப்புக்களுக்குள் வெளியிலிருந்து குற்றம் பிடிப்போர்
என்னைப்பொறுத்தவரை கையாலாகாதோர்.
 
எதையாவது செய்து மக்களுக்கு சோறு போட முயலும் போது
அதை தட்டிவிடும் எவரும் மனிதர்களாக இருக்கமுடியாது.
மன்னிக்க முடியாதவர்கள் அவர்கள்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 100

தொடர்ந்து சீரியசாக மட்டும் பேசப்படாது.

எங்கள் ஐனாதிபதிக்கு

வாரிசில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இன்றுடன் தொலைந்தது எனக்கு.

நன்றி உலகக்கோப்பை அமைப்பினருக்கு.

L’image contient peut-être : une personne ou plus
L’image contient peut-être : 2 personnes, personnes souriantes, personnes debout
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 101
 
பிரான்சும் இங்கிலாந்தும் - மொழிப்போர்
 
இரு நாடுகளுக்குமிடையிலான மொழிப்போர் என்பது
நீண்ட வரலாற்றைக்கொண்டது.
ஒருமுறை ஐரோப்பிய பயணம் வந்திருந்த
தமிழக பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதியிருந்தார்
இரு நாட்டுக்குமிடையே 1 மணித்தியால விமான பயணம் தான்.
ஆனால் ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் பிரெஞ்சு மக்கள் பேச மாட்டார்கள். தெரியாது என்று.
சிறு வயதில் வாசித்த இதை நான் பிரான்சுக்கு வந்தபோது கண்டேன்.
 
ஆனால் காலங்களும் உலக மாற்றங்களும்
இன்று மாறுதல்களை ஊட்டிச்செல்கின்றன.
அதையும் பார்க்கின்றோம்.
 
இந்த இரு நாட்டவர்களும் மாறிவிட்டாலும்
இந்த இடையில் புகுந்தவர்கள்
அதிலும் எம்மவர்கள்
இதை தற்பொழுதும் அதி தீவிரத்தோடு காவித்திரிவதை
கடந்த உலகக்கோப்பை உதைபந்தாட்டத்தில் காண முடிந்தது.
 
எனக்கு இங்கிலாந்தின் மீது தீராத கோபமும் அடங்காத பகையுமுண்டு.
அது எனது இனத்தை அடிமைகளாக விற்றுச்சென்றது சார்ந்தது.
அதற்கு பரிகாரம் தேடாது மேலும் மேலும் சிங்களத்துக்கு உதவிகளும் காப்பாற்றுதல்களை செய்வதும் சார்ந்தது.
ஆனால் இவர்களுக்கு பிரெஞ்சின் மீது என்ன காட்டம் என்று புரியவில்லை.
எவர் வென்றாலும் பரவாயில்லை
ஆனால் பிரெஞ்சு தோற்கணும் என்பதே இங்கிலாந்திலுள்ள பலரின் நினைப்பாக இருந்தது.
அதில் ஒருத்தர் எழுதியிருந்தார் பிரெஞ்சுக்காரர்கள் வென்றாலும் ஆங்கிலத்தில் தான் அங்கு பேசவேண்டும் என்று.
இது மொழி வெறியன்று வேறேது.
தன்னையே அறியாதவர்கள்
 
இவர்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறென்ன செய்யமுடியும்????

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 102
 
தமிழகத்தில் இனி...?
 
சுப்பர் சிங்கரில் நாட்டுப்புறக்கலைஞர் செந்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.
 
உண்மையில் குரல் வளம் மற்றும் இசைத்திறமை சார்ந்து பலர் இவரைவிட முன்னணியில் இருந்தபோதும் செந்திலே மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
 
இது தமிழகத்தின் இன்றைய மற்றும் அடுத்த கட்டநிலையை தெளிவாக சொல்லிநிற்கிறது.
 
தமிழகத்தில் தமிழனைத்தவிர எவரும் இனி வரமுடியாது என்பதே அது.
 
இந்தநிலையை இளைஞர்களே ஏற்படுத்தி வருகின்றனர் . சென்ற தலைமுறை முடிவுடன் தமிழக இளைஞர்கள் தேர்தல்களிலும் இதை வலுப்படுத்தி தமிழகத்தை தமிழன் ஆளும் நிலையை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.
 
இதற்கு நாம் சீமானுக்குத்தான் அதிகம் நன்றி சொல்லணும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 103
 
ஒரு மக்கள் அமைப்பு எவ்வாறு உருவாகணும் செயலாற்றணும்
 
தாயகத்திலோ ஊரிலோ புலத்திலோ
ஒரு மக்கள் சார்பான அமைப்பை உருவாக்கும் போது
அடித்தளத்தை எவ்வாறு உருவாக்குதல் என்பது மிக மிக முக்கியம்.
 
அதன்படி அதன் முதற்படியாக
1)அங்கத்தவரை சேர்த்தல்
2)பொதுக்கூட்டத்தை கூட்டி
நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்தல்
3)அந்த நிர்வாக்குழுவினால் அமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு வங்கி திறக்கப்படுதல்
4)அங்கத்தவர்களை சந்தாதாரர்களாக மாற்றுதல்
5)அதனைத்தொடர்ந்து
வணிகர்களை செல்வந்தர்களை உத்தியோகத்தவர்களை நிலையான மாத வருமானம் பெறும் ஊழியர்களை அணுகி
அவர்களது பங்களிப்புக்களை உறுதி செய்தல்
6)திட்டங்களை தயாரித்து மக்கள் முன் வைத்தல்
 
பொது வாழ்வில் என் அனுபவப்படி
இவையே ஒரு அமைப்பை உருவாக்கும் அடிப்படை நடவடிக்கைகள்.
இப்படி ஆரம்பிக்கப்படும் அமைப்புக்கள் தான்
மக்களது நம்பிக்கையையும் ஏனைய அமைப்புக்களின் அனுசரணையையும் பெறமுடியும்.
 
அந்தவகையில் தற்பொழுது எமது ஊரில்
புங்குடுதீவு பசுமைப்புரட்சி குழுமம் என்ற அமைப்பு
இந்த அடிப்படையில் தொடங்கி சரியாக பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
இதன் அடுத்த கட்டமாக
தம்மால் சேர்க்கப்படும் பணத்துக்கும் மேலாக
அவர்களது செயற்த்திட்டம் இருந்தால்
ஏனைய சகோதர அமைப்புக்களிடம் திட்டத்தை சமர்ப்பித்து
தேவையான மிகுதி பண உதவியை நாடலாம்.
நாடணும்.
அதுவே மண்ணை நேசிப்பவர்களின் அவாவும் செயலுமாகும்.
காத்திருக்கின்றோம். செயலால் ஒன்றிணைவோம்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 104
 
கனவுகள் மெய்ப்படும் ஆனால்...??
 
 
ஒருவருடைய கனவு அல்லது இலட்சியம் நிறைவேற
சில தலைமுறைகள் காத்திருக்கணும் என்பர்.
அந்தவகையில் சில கனவுகள் அடுத்த அடுத்த தலைமுறையில்
நனவாகியதை கண்டிருக்கின்றோம்
சில கனவுகள் நிறைவேறிய போது அது யாருடைய கனவு என்பதை அறியாமலிருப்போம்.
நான் அறிந்த கனவை அவன் இல்லாதபோதும் நினைவூட்டுவதற்காக இந்தப்பதிவு.
நமக்கு எழுதமுடியும் போது அல்லது உயிரோடிருக்கும் போது சிலவற்றை பதியணும் என்பதற்காகவே எழுதவந்தேன் நான்.
 
 
என்னோடு புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் படித்தவன் Krishnakumar.
அவனுக்கு பட்டப்பெயர் DMO என்பது.
தான் ஒரு நாள் வைத்தியராவேன் என அவன் கூறியதால் அப்பட்டப்பெயர் அவனுக்கு வந்தது.
சிலர் இதை வைத்து அவனை கேலி செய்தபோதும் அவன் அது பற்றி அலட்டிக்கொண்டதில்லை.
 
நேற்று ஒரு பதிவு பார்த்தேன்.
அதில் அவனது மருமகள் வைத்தியராகிய செய்தி வந்திருந்தது.
மாமாவின் கனவை மருமகள் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.
ஆனால் அவனது கனவு மருமகளால் அடையப்பெற்றுள்ளது. நன்றி தாயே.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.