Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன்

Featured Replies

17 minutes ago, வாத்தியார் said:

நம்பவே முடியலை
அப்படியே போட்டோவிலை பாத்தா மாதிரி சொல்றீக 

நீங்கள் கேக் வெட்டி திண்டு இருக்க மாட்டீங்கள் - போத்திலே உடைத்திருப்பீங்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வரு ஜீவராசிக்கும் ஒரு பிறப்பு குணமுண்டு .....

பூனை பால் குடிக்கும்போது கண்ணை மூடிக்கொண்டு குடிக்குமாம்.
அப்போ பூனை நினைக்கிறது ..... உலகம் இருட்டு என்று. 

அதனால் பாலை திருடி வாழ்தல் என்பதை பூனை தொடர்வதால் 
அப்ப அப்ப மாட்டி விடுகிறது.
பின்பு அனுபவத்தில் அது உணர்ந்துவிடும் ... பூனைக்கு 5 அறிவாவது இருக்கிறதே. 

சுயம் இல்லாதவருக்கு  அடுத்தவன் பற்றிய கற்பனை வேண்டும்.
நீ நீலம் என்று நான் கந்தனை சொன்னால்தான் ... பின்பு நீல நிறம் கூடாது என்று எழுதமுடியும்.

சுயம் உள்ளவனுக்கு கந்தன் எப்படி இருந்தால் என்ன ?
அதுதான் அவனுக்கு சுயம் இருக்கிறதே அதை எழுத முடியும். 
அது இல்லாதவன் என்ன செய்ய முடியும் ?

நேற்று ஒரு வீடியோ யூடியூபில் பார்த்தேன் இங்கு பலரும் பார்த்திருக்கலாம் 
ஆக்டபுஸ் ஒன்றை ஒரு போத்தலில் மூடி வைக்க அது தனது காலால் அந்த மூடியை திறக்கிறது.
அடைபட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த உடன் அது போராடுகிறது .......
அதை ஒரு அறிவு கொண்ட மனிதன் பார்த்தவுடன் ...ஆக்டபுஸ் இற்கு இத்தனை அறிவா என்று வியக்க தோன்றி உடனேயே அந்த ஆய்வில் மூழ்கிவிடுகிறான்.

ஆக்டபுஸ்சுக்கு அதைவிட அறிவு குறைவாக இருந்தால்  
அது போராடி இருக்குமா ?

அதுக்காக அந்த ஜீவராசியை நோக முடியுமா ?
கடவுளின் படைப்பில் இன்னொரு அதிசயம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது . 

 

 

2 hours ago, Maruthankerny said:

சுயம் உள்ளவனுக்கு கந்தன் எப்படி இருந்தால் என்ன ?
அதுதான் அவனுக்கு சுயம் இருக்கிறதே அதை எழுத முடியும். 
அது இல்லாதவன் என்ன செய்ய முடியும் ?

எழுத முடியுமே 

மருதரே எழுதிறார் 

மற்றவனால் முடியாதா :grin:

மற்றவர்களுக்கு புரியிறமாதிரி எழுதுறதுதான் கஷ்டம் // மருதர் மாதிரி தனக்கும் புரியாம மற்றவர்களுக்கும் புரியம எழுதுறது ரொம்ப ஈசி. 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆள் தன் இயலாத் தன்மையை திசை திருப்ப ஏதோ ஒன்றைச் சொல்ல, நீங்கள் வேற ஆளாளுக்கு வாக்குவாதம் பண்ணிக்கொண்டு. முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். நாயிடம் கடிபடுவதைக்காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு  ஒவ்வொரு நேரத்துக்கு ஒன்று பேசுவதே... தொழிலாகி விட்டது.

ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார். 
அடுத்த தீபாவளிக்கு   முன் தீர்வு கிடைக்கும்  என்றார். 
அதன்பின்... இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார்.

இப்போது, ராஜீவ்காந்தி கொல்லப்டாமல் இருந்திருந்தால்... இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்கிறார்.

ஒரு வருடத்தில்,  தீர்வு வரும் என்று அவர் கூறியபோது... ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தாரா?
யாராவது  அவரிடம், இதனை கேட்டுச்  சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

எழுத முடியுமே 

மருதரே எழுதிறார் 

மற்றவனால் முடியாதா :grin:

மற்றவர்களுக்கு புரியிறமாதிரி எழுதுறதுதான் கஷ்டம் // மருதர் மாதிரி தனக்கும் புரியாம மற்றவர்களுக்கும் புரியம எழுதுறது ரொம்ப ஈசி

 

மருதரே எழுதுறார் ...........
என்று சிலர் எழுதுகிறார்கள் என்றுதான் நான் சொல்ல வந்தேன்.

எல்லாம் எழுதி முடிந்த பின்தான் ...
மருதர் தனக்கும் புரியாம மற்றவருக்கும் புரியாம ஈஸியா எழுதி 
இருக்கிறார் என்பதும் புரிகிறது.

அதைவிட சுயமா ஏதும் எழுத இருந்தால் அதை எழுதலாம்.
வீணா மருதர் புரியாம எழுத்துறை புரிஞ்சமாதிரி நடிச்சு 
அதுக்கும் பதில் எழுதிக்கொண்டிருப்பது வெறும் பைத்தியக்காரத்தனம்.
எழுத்து என்று வரும்போதுதான் அப்படி சொல்கிறேன்.

தவிர ஆக்டபுஸ் அளவுக்கு கூட அறிவில்லாத ஒரு ஜீவனை போத்தலில் 
அடைத்தால் ..........?
எவ்ளவு அழகான வெளிநாட்டு போத்தலில் அடைத்திருக்கிறார்கள் எஜமானர்கள் 
என்னில் எவ்வளவு அன்பு இருந்து இருந்தால் இப்படி சிவப்பு மூடி எல்லாம் போட்டிருப்பார்கள் 
வெளியில் போனால் உணவுக்கே போராடவேண்டிவரும்.
என்று சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் போத்தலுக்குள்ளேயே வாழலாம். 
அதோடு நிற்க தேவை இல்லை ........ போராடி போத்தலை திறந்த ஆக்ட்புஸ் பற்றி 
கீழ்த்தரமாக யோசித்து சாகும்வரை வாழலாம்.

ஒரு ஆக்ட்புஸ் இந்த அளவில் நுண்ணியமாக சிந்திக்கிறதே என்று சில ஆய்வாளர்கள் 
ஆய்வு செய்கிறார்கள் அதை பார்த்த பொது எனக்கும் இப்படி தோன்றுகிறது.
அதை பகிரலாமே என்று எண்ணி விடீயோவையும் இணைத்தது விட்டேன். 

46 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு  ஒவ்வொரு நேரத்துக்கு ஒன்று பேசுவதே... தொழிலாகி விட்டது.

ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார். 
அடுத்த தீபாவளிக்கு   முன் தீர்வு கிடைக்கும்  என்றார். 
அதன்பின்... இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார்.

இப்போது, ராஜீவ்காந்தி கொல்லப்டாமல் இருந்திருந்தால்... இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்கிறார்.

ஒரு வருடத்தில்,  தீர்வு வரும் என்று அவர் கூறியபோது... ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தாரா?
யாராவது  அவரிடம், இதனை கேட்டுச்  சொல்லுங்கள்.

 

ராஜீவ் இறந்த செய்தியை ...
சென்ற கிழமைதான் சுமந்திரனுக்கு சம்மந்தருக்கும் யாரோ 
சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வளவு சீக்கிரமாக அறிந்து இருக்கிறார்களே என்று 
ஆச்சரியத்தில் நாங்கள் இருக்கிறோம்.

நீங்கள் கேள்வி கேட்டு பகிடி பண்ணிக்கொண்டு இருக்கிறீங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரவேண்டும் என்கிற நோக்கம் இந்தியாவுக்கு என்றுமே இருந்ததில்லை. இந்திரா காலத்திலிருந்து இன்றுவரை அதுதான் நிலமை.

அமெரிக்காவின் பக்காம் சாய்ந்துகொண்டிருந்த ஜே. ஆரை தனது வழிக்குக் கொண்டுவரத்தான் தமிழ்ப் போராளிகளுக்கு இந்திரா ஆயுதமும் பயிற்சியும் அளித்தார். மாறாக ஈழம் எடுப்பதற்கல்ல. வேண்டுமென்றால் தனது மத்திய அரசின் பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள தமிழ்நாட்டின் தயவு தேவைப்பட்டதால், ஈழத்தமிழருக்கு உதவுவதுபோல காட்டிக்கொண்டு தமிழக வாக்குகளை அள்ளிக்கொண்டிருந்தார் என்று சொல்லலாம்.

போராளிகளை தனது கைக்குள் வைத்திருந்து ரோ பண்ணியதெல்லாம் தராசை சமமாகப் பார்த்துக்கொண்டதுதான். 

இந்திரா அம்மையாருக்குப் பிறகு வந்த ரஜீவுக்கு வாய்த்த ஆலோசகர் ஒற்றைவழிக்காரர். அவரின் சொற்படி நடந்த ரஜீவ் ஜே. ஆரின் வலைக்குள் வீழ்ந்ததும், சமாதானம் செய்ய வந்த அமைதிப்படை சிங்கள ராணுவத்தை விட மோசமான ராணுவம் தான் என்று தமிழருக்கு உணர்த்தியதும் வரலாறு.

அதன் பின் ஆத்திரப்பட்ட பழிவாங்கல், 1991 ஆம் ஆண்டு சிறிபெரும்புதூரில் நடைபெற்று முடிந்தது.

அதுவரை எந்த தமிழக மக்களுக்காக தமிழர்மேல் அக்கறையுள்ளதுபோல நடித்து வந்ததோ, அவற்றை முற்றாகக் கலந்துவிட்டு, தமிழருக்கெதிரான , சிங்களவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை தொடர்ச்சியாக வந்த இந்திய அரசுகள் எடுத்தன. 

தனது கணவனின் மரணத்துக்காக பழைவாங்க, தனக்கு ஆதரவான அரசொன்று இலங்கையில் வரும்வரை காத்திருந்த விதவையின் அரசு, 2009 இல் தனது பேயாட்டத்தை முள்ளவாய்க்காலில் ஆடி முடித்தது.

இப்போது புலிகள் அழிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது வரை அவர்கள் தான் இந்தியா தரவிருந்த தீர்வுக்குத் தடையாக இருந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம், அப்படியானால் இப்போது ஒரு தீர்வைத்தர இந்தியாவைத் தடுப்பது எது?

ஆக, புலிகளைப் பழிவாங்குகிறோம் என்கிற போர்வையில் இன்றுவரை இந்தியா பழிவாங்குவது தமிழர்களைத்தானே?

சிங்கள ராணுவத்துடன் போரிட இன்று எவருமே இல்லாத நிலையில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுத, பயிற்சி உதவிகளை வழங்குவது ஏன்?

பதில் ஒன்றுதான். இந்தியாவுக்கு ஈழத் தமிழர்மேல் அக்கறை என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது, இனியும் அப்படித்தான். பிராந்தியத்தில் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள அது என்னவேண்டுமானாலும் செய்யும். 

இந்தியா அதைத்தரும், இதைத்தரும் என்று தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. யாரைத் திருப்திப்படுத்த சம்மந்தர் இப்படிச் சொல்கிறாரோ தெரியாது. 

சிலவேளை இப்படிச் சொல்லியாவது இந்தியாவைக் கெஞ்சிப் பார்க்கலாம் என்று எண்ணியிருக்கலாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ragunathan said:

 

பதில் ஒன்றுதான். இந்தியாவுக்கு ஈழத் தமிழர்மேல் அக்கறை என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது, இனியும் அப்படித்தான். பிராந்தியத்தில் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள அது என்னவேண்டுமானாலும் செய்யும். 

 

 

 

 

அதே...... இதுதான் "இந்தியா இலங்கை அரசியல்" ஒற்றை வரியில் சொல்லிபோட்டியள்......

  • கருத்துக்கள உறவுகள்

 ரணில் கொடுத்த சிங்கக்கொடியை தலை கீழாய்ப் பிடித்த தலைவர், இந்தியாவிடம் கேட்டதை சொல்லியிருப்பார்.  சொன்னதை  சொல்லும் கிளிப்பிள்ளை 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

 

என்னமோ தெரியாது.இவளவு அனியாயம் செய்த சிங்களவனை விட பல மடங்கு கடுப்பு இந்தியன் இராணவத்தில் தான்.அந்த அம்பை யார் அழித்து இரந்தாலும் மகிழ்ச்சியே.

மகிழ்ச்சி 

20 hours ago, nedukkalapoovan said:

ராஜீவின் படைகளால்.. ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள்.. தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு.. அவை சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் சமர்க்கப்பிக்கப்பட்டு.. ஈழத்தில் ராஜீவின் படைகள் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கு ஹிந்திய அரசாங்கத்தையும்.. ஹிந்தியப் படைகளையும் விசாரித்து.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும்.. பாதிப்பை உண்டு பண்ணி விட்டு இவ்வளவு காலமும் தப்பி சுதந்திரமாக வாழும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்.

இது தொடர்பில்... சரியான சட்ட ரீதியான பரிசீலனைகள் செய்யப்படுவது.. ஈழத்தமிழர்கள் சார்பில் மிக முக்கியமான விடயமாகும்.

தாமதிக்கும் நீதி என்பது..  குப்பையில் போட்ட தர்மமாகி விடாது இனியும் பார்க்கப்பட வேண்டும்.

ராஜீவ் ஒருவகை கொலைவெறி பிடித்த மனநோயாளி மட்டுமன்றி.. ஈழத்தில் பல போர்க்குற்றங்களைப் புரிந்த போர்க்குற்றவாளி.. ஹிந்திய அரச பயங்கரவாதியும் கூட. யாழ் பொது வைத்தியசாலைப் படுகொலை.. வல்வைப் படுகொலை.. சாவகச்சேரி பொதுச் சந்தைப் படுகொலை.. பருத்தித்துறை படுகொலை.. பொற்பதி வீதிப்படுகொலை..  உட்பட பல படுகொலைகளுக்காக இவரும்.. ஹிந்திய அரசும்.. ஹிந்தியப் படைகளும்.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்பட வேண்டியது அவசியமாகும். அவை மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.

ஹிந்திய அரச பயங்கரவாதத்தை உலகுக்கு உணர்த்தவும் இந்த நகர்வுகள் அவசியம். tw_dissapointed::rolleyes:

ஹிந்தியாவில்.. உள்ள அரச பயங்கரவாதத்திற்கு எதிரான நேச சக்திகளோடு சேர்ந்து ராஜீவ் படைகளுக்கு எதிரான போர்க்குற்றங்களை சர்வதேச நீதி விசாரணைக்கு சமர்ப்பிப்பது பற்றி ஆலோசிப்பது நல்லம். 

ஈழத்து தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய முக்கிய வரலாற்றுப் பணி!
யாழ் களத்தில் கூட ஒரு திரி தொடங்கப்பட்டதாக ஞாபகம். சிறுசிறு பதிவுகளை சேர்த்து நடந்த உண்மைகளை வெளிப்படுத்துவதுடன் அவற்றை வரலாற்றில் ஆணித்தரமாக பதிய வேண்டும்.

6 hours ago, Maruthankerny said:

தவிர ஆக்டபுஸ் அளவுக்கு கூட அறிவில்லாத ஒரு ஜீவனை போத்தலில் 
அடைத்தால் ..........?

மருதர், ஆக்டபுஸ் அளவுக்கு அறிவில்லாத ஒரு ஜீவனை சுதந்திரமா கருத்தெழுதவிட்டா ......... என்ன நடக்கும்?

On 31/7/2017 at 1:09 AM, ஜீவன் சிவா said:

என்ன செய்யிறது 

உங்கள் அளவுக்கு மக்களுக்கு அறிவு இல்லாமலும் + அதைவிட அதிகமாய் இருப்பதுமே பிரச்சனை போல

பயப்பிடாதீங்க - இங்க அரைவேக்காடுகள் நிறையவே இருக்குது - நீங்கள் தனியாக விடப்படவில்லை.:grin:

உங்கள் அரைவேக்காட்டுக் கூட்டத்தில் எங்களையும் சேர்த்து கற்பனை செய்யவேண்டாம்! :grin:

On 7/31/2017 at 0:44 PM, ragunathan said:

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரவேண்டும் என்கிற நோக்கம் இந்தியாவுக்கு என்றுமே இருந்ததில்லை. இந்திரா காலத்திலிருந்து இன்றுவரை அதுதான் நிலமை.

 

On 7/31/2017 at 0:44 PM, ragunathan said:

இப்போது புலிகள் அழிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது வரை அவர்கள் தான் இந்தியா தரவிருந்த தீர்வுக்குத் தடையாக இருந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம், அப்படியானால் இப்போது ஒரு தீர்வைத்தர இந்தியாவைத் தடுப்பது எது?

ஆக, புலிகளைப் பழிவாங்குகிறோம் என்கிற போர்வையில் இன்றுவரை இந்தியா பழிவாங்குவது தமிழர்களைத்தானே?

சிங்கள ராணுவத்துடன் போரிட இன்று எவருமே இல்லாத நிலையில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுத, பயிற்சி உதவிகளை வழங்குவது ஏன்?

 

On 7/31/2017 at 0:44 PM, ragunathan said:

இந்தியா அதைத்தரும், இதைத்தரும் என்று தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. யாரைத் திருப்திப்படுத்த சம்மந்தர் இப்படிச் சொல்கிறாரோ தெரியாது. 

சம்பந்தனின் அறிக்கையில் எஜமானரிடம் காட்டும் விசுவாசமும் தனது கையாலாகாத தனமும் தான் வெளிப்பட்டது!
இந்தியாவைப் போலவே சம்பந்தருக்கும் தமிழர்களுக்கு நீதி, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்கிற முழுமையான  நோக்கம் இன்றும் இல்லை, முன்னரும் இருந்ததில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.