Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் போராளி – முப்படைகளையும் களத்தில் இறக்கி கைது செய்வோம். – காவல்துறைமா அதிபர் சூளுரை

Featured Replies

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் போராளி – முப்படைகளையும் களத்தில் இறக்கி கைது செய்வோம். – காவல்துறைமா அதிபர் சூளுரை

poojitha4.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியவர்களில் பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட காவல்துறைமா அதிபர் யாழ்.தலைமை காவல் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர். அவர் தற்போது யாழில் பிரபலமான ஆவா குழு எனும் சட்டவிரோத குழுவை சேர்ந்தவர் எனவும் அடையாளம் கண்டுள்ளோம் மேலும் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேரை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் சோதனை நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

அதற்காக காவல்துறை விசேட அதிரடிபடையினர் ,  இராணுவம் , கடற்படை மற்றும் விமான படையின் உதவிகளையும் நாடவுள்ளோம். இதனூடாக குற்ற செயல்களை நாம் மிக விரைவில் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவோம் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/34936

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் திட்டம் போட்டு நடத்துகிற  நாடகம்  மாதிரித் தெரிகிறதே. 

1 hour ago, நவீனன் said:

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் போராளி – முப்படைகளையும் களத்தில் இறக்கி கைது செய்வோம். – காவல்துறைமா அதிபர் சூளுரை

 முன்னாள் போராளி என்ற பெயரில் வாள்வெட்டுக் குழுக்களை களத்தில் இயக்கியவர் இந்த காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர என்பதில் எனக்கு இருந்த கொஞ்ச சந்தேகமும் இப்ப தீர்ந்துவிட்டது.

உண்மை வெளிவர இவர்களை சர்வதேச நீதிமன்றில் தான் நிறுத்த வேண்டும்.

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ஒரு விடையத்தை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இப்படியான வேலைகளை யார் செய்கிறர்கள் அவர்கள் ஒன்றும் வேற்றுக்கிரகவாசிகள் இல்லை புலத்தில் வாழும் தமிழ் இளையோரே, 

கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திப்போம் நான் அண்மையில் யாழ்குடாநாட்டில் நின்றபோது தெருக்க்ளில் சந்திக்குச் சந்தி சிறீலங்காவின் காவல்துறையினர் மோட்டர்சைக்கிள் சகிதமாக நின்றிருந்தார்கள் அனைவரும் போக்குவரத்துப்பொலீசார் தெருவில் போகும் அனேகமான வாகன ஓட்டிகளை மறிக்கிறார்கள் கூடுதலாக மோட்டார்சைக்கிளை மறிப்பதுதான் அதிகம். அனைத்தும் சும்மா இல்லை சந்தை விலையில் இரண்டு மூன்று இலட்சங்களைத் தாண்டும் பெறுமதியானவை. அவர்கள் மறிக்கும் பாதிக்குமேற்பட்ட வாகனசாரிகளிடம் ஒழுங்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதோ ஒன்று இல்லாமலேயே இருக்கு. உடனே நூறோ இருநூறோ அவரவர் அவசரத்துக்கும் தகுதிக்கும் தேவைப்படும் அனுமதிப்பத்திரத்துக்கும் ஏற்றாற்போல் காசுவெட்டுகிறார்கள்.

யாழ் குடாநாட்டில் சுமார் ஆறு இலட்சத்துக்குக்குறைவானவர்களே வாழ்கிறார்கள் அப்படி வாழ்பவர்களில் வாகனம் வைத்திருப்போர் எவ்வளவுவரும் அவர்கள் அனைவரும் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், வரி காப்புறுதி அவைபோன்ற இன்னபிற விடையங்களில் கவனமெடுத்து வீது ஒழுங்கு விதகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனமோட்டினால் ....

எந்தப் போலீஸ்காரனாவது யாழ்குடாவில் வேலை செய்ய வருவாணோ யாழ்ப்பாணமோ அது தண்ணியில்லாக்காடு எனச்சொல்லி அரளமாட்டான். இருக்கிறவனும் இந்தக்கடுப்பைஎல்லாம் களவு கொலை கொள்ளையில் பிடிபடுகிறவனிட்டைக்காட்டமாட்டானா. 

சன்னா குறூப் என ஒருகுழுவை இயக்கிவந்த பிரசன்னாவும் அவனது இரண்டாவது நிலைத் தலவர் எனப்படும் சஞ்சீவனும் இப்போது சுவிஸ்நாட்டில் தஞ்சம் இப்போ இருப்பவர்கள் அவர்களது எடுபிடிகள், இவர்களைப் பெத்ததுகள் பொறுப்பில்லாத அப்பன் ஆத்தை. யாழ் குடாநாட்டில் மாவா எனும் போதைப்பாக்கை அறிமுகப்படுத்தியவர் இப்போ பிரான்ஸ்சில் வாழ்கிறார் இவரது தகப்பன் யாழ்நகரில் பிரபல வியாபாரியும் ஒரு கோலிலின் அறங்காவலருமாவார். இப்போ தெரிகிறதா தம்பிகளா எங்கே பிரச்சனை என. இப்போ யாழ் குடாவில் காணப்படும் கோவில் தேர்முட்டிகள் எல்லாம் அவ்வூரின் இளையோ மாலைவேளையில் தண்ணி அடிக்கும் இடமாகப்போய்விட்டது

முதலில் எங்கள் பக்கத்தை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். 

ஊருக்கு அடிக்கடி போய்வாங்கோ சாதாரணமானவன் வாழ்க்கையைக்கொண்டுசெல்ல எப்படிக்கஸ்டப்படுகிறான் எனத்தெரியும். அண்மையில் விடுவிக்கபட்ட பகுதி ஊறணி காலையில் மீன் வாங்க ஊறணித்துறைக்குப்போனேன் முதல்நாள் மாலை ஆறுமணிக்குக் கடலில் படகுடன் சென்றவன் அடுத்தநாள் சுமார் ஐந்துகிலோ சிறிய மீஙளுடன் கரைசேர்ந்தார்கள் படகில் மொத்தம் மூன்றுபேர் கடலுக்குப்போனவையள் இப்படி நாணயமாக உழைத்துச் சாப்பிட விரும்புகிறவையளும் கண்ணியமாகக் கதைக்கக்கூடியவர்களும் அங்கு இருக்கிறார்கள் அவர்கள் இருக்கும் திசை வணங்குகிறேன். ஆனால் பொறுக்கிகளைப் புறம்கொண்டு ஒதுக்குகிறேன் 

இன்னும்வரும்

  • கருத்துக்கள உறவுகள்

யாரையோ போட்டு தள்ள நாடகம் போடுகினம் .

  • தொடங்கியவர்

வெளியானது அதிர்ச்சித் தகவல் ; யாழில் இரு பொலிஸார் மீது வாள் வெட்டு ; வழிநடத்தியவர் முன்னாள் புலி உறுப்பினர், ஆவாகுழுவின் செயற்பாட்டாளர் 

 (எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில்  முறைப்பாடு  ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்திய குழு தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். 

police-jaffna-ava.jpg

அதன்படி இந்த வாள் வெட்டுத் தககுதலானது ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்ட ஆயுதக் குழுவொன்றின் தாக்குதல் என்பது இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந் நிலையில் நேற்று முன் தினம் பொலிஸார் மீது தககுதல் நடாத்திய குழுவில் 15 பேர்வரை இருந்துள்ளமையை விசாரணையில் வெளிப்படுத்திக்கொண்டுள்ள பொலிஸார், அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்பின் உறுப்பினர் என்பதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

 அத்துடன் குறித்த பிரதான சந்தேக நபர் ஆவா பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் என்பதும்  விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர்  வீரகேசரி இணையத்திற்கு தெரிவித்தார். அத்துடன் இந்த விடயத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உறுதி செய்தார்.

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் கட்டுப்பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பாலித்த பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

 அந்த பொலிஸ் குழுக்களின் ஆரம்பகட்ட விசாரணைகளிலேயே பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  மேலும் 8 பேர் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அடையாளம் காணப்பட்டோரை கைது செய்யவும் மேலதிக நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நேற்று நண்பகல் தம்மிக, சுரேன் ஆகிய  இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை  செய்வதற்காக கொக்குவில் பகுதிக்கு தமது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது கொக்குவில் நந்தாவில் பகுதியில் உள்ள பற்றைக்காட்டு பகுதியில் சிலர் மது அருந்தி குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அப் பகுதிக்கு சென்ற  இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு சில இளைஞர்கள் மது அருந்திகொண்டிருப்பதையும் அவர்களிடம் வாள் போன்ற ஆயுதங்கள் இருப்பதனையும் அவதானித்ததுடன்   இருவரும் அங்கிருந்து திரும்பி பொலிஸ் நிலையம் நோக்கி சென்றுள்ளார்கள். 

இச்சமயத்திலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்று அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில்   மூகங்களை மூடிக் கொண்டுவந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத குழுவொன்று இவர்களை துரத்தி துரத்தி வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

இதனையடுத்து படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  இரு பொலிஸ் உத்தியோகத்தரில் ஒருவருக்கு இடது கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  மற்றைய  பொலிஸ் உத்தியோகத்தர் தப்பி ஓட முற்பட்ட போதும் சந்தேக நபர்கள் அவரை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.

 இந் நிலையில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இன்று நண்பகலாகும் போது சந்தேக நபர்கள் ஏழு பேரை அடையாளம் கண்டுள்ளனர்.  குறிப்பாக சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 7 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக கண்டறிந்துள்ள பொலிஸார் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களிலும் 2 அல்லது மூன்று பேர் இருந்துள்ளதை சாட்சிகள் ஊடாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி குறைந்த பட்சம் 15 பேர் கொன்ட குழு இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் அனைவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர விஷேட திட்டம் ஒன்றினை வகுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 முதலில் சந்தேக நபர்கள் இரு மோட்டார் சைக்கிள்களில் மூவர் வீதம் பொலிஸாரை துரத்தி வந்து பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிளை இடை மறித்து அவர்களை அவர்களது மோட்டார் சைக்கிளுடன் வீழ்த்தியுள்ளதாகவும் பின்னர் வாளால் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர். இதன் போது மேலும் 4 முதல் 5 மோட்டார் சைக்கிள்களில்  சந்தேக நபர்கள் அங்கு வந்துள்ளமையும் அங்கு பொலிஸார் மீதான தககுதலில் பங்கேற்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

 இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனவும் ஆவா குழுவினது முக்கிய செயற்பாட்டு உறுப்பினர் எனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

http://www.virakesari.lk/article/22562

16 hours ago, satan said:

எல்லாம் திட்டம் போட்டு நடத்துகிற  நாடகம்  மாதிரித் தெரிகிறதே. 

இதில் சந்தேகமே வேண்டாம்!

முன்னர் சிங்கள அரச பாதுகாப்புப் பயங்கரவாதிகள் செய்த கடத்தல், கொலை, கொள்ளை எல்லாம் புலிகள் மேல் போட்டு தப்பித்துக் கொண்டார்கள். அதே பாணியில் இப்போதும் செய்ய நினைக்கிறார்கள்.

பாதாள உலகக்குழுக்களை விட பல ஆயிரம் மடங்கு மோசமான பேர்வழிகளே சிங்கள அரச பயங்கரவாத இயந்திரத்தின் போலீஸ் அதிகாரிகளாக உள்ளனர்!

இங்கு ஆவா குழுவை இயக்கும் சிங்கள இராணுவ பயங்கரவாதிகளால் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே மக்கள் எண்ணுகின்றனர். புலிகள் மீது பழியை போடுவதற்கு, சேறடிப்பதற்கு அண்மைக் காலமாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீதிபதியின் மீதான தாக்குதல் நாடகத்தில் அவரது மெய்ப் பாதுகாவலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

புலி, ஆவா உறுப்பினர்களே பொலிஸார் மீது வாள் வெட்டு 

புலி, ஆவா உறுப்பினர்களே பொலிஸார் மீது வாள் வெட்டு 
 
கொக்­கு­வி­லில் நேற்­று­முன்­தி­னம் பட்­டப்­ப­க­லில் பொலி­ஸார் இரு­வ­ரைத் துரத்­தித் துரத்தி வெட்­டி­ய­வர்­க­ளுக்­குத் தலைமை தாங்­கி­ய­வர் விடு­த­லைப் புலி­கள் இயக்க முன்­னாள் போராளி என்று தெரி­வித்­தார் பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர. அந்­தச் சந்­தே­க­ந­பர் ஆவா குழு­வின் உறுப்­பி­ன­ரும்­கூட என்­றும் அவர் கூறி­னார்.

இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து பொறுமை இழந்­தி­ருக்­கும் பொலி­ஸார் சுற்­றுக்­கா­வல், தேடல், சோதனை நட­வ­டிக்­கை­களை இரா­ணு­வத்­து­டன் இணைந்து நடத்­தப் போகின்­ற­னர் என்­றும் அவர் அறி­வித்­தார். பொலி­ஸார் மீதான தாக்­கு­தலை அடுத்து நில­மை­களை அவ­தா­னிப்­ப­தற்­கா­கப் பொலிஸ் மா அதி­பர் நேற்று யாழ்ப்­பா­ணம் வந்­தார்.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவமனை ­யில் சிகிச்சை பெற்­று­வ­ரும் காய­ம­டைந்த பொலி­ஸார் இரு­வ­ரை­யும் நேரில் சென்று பார்த்­தார். அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். அப்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது-:கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தைச் சேர்ந்த இரு கொன்ஸ்­ட­பிள்­கள், ஒரு­வர் சிங்­க­ள­வர் மற்­ற­வர் தமி­ழர் தமது மோட்­டார் சைக்­கி­ளில் ஒரு­வர் சீரு­டை­யி­லும் ஒரு­வர் சிவில் உடை­யி­லு­மா­கக் கொக்­கு­வி­லுக்­குச் சென்­ற­னர். தம்­மைச் சில மோட்­டார் சைக்­கிள்­கள் வேக­மா­கப் பின்­தொ­டர்ந்து வரு­வதை இந்­தப் பொலி­ஸார் கண்­ட­னர்.

வழ­மைக்கு மாறா­னது அது. எனி­னும் தப்­பிச் செல்ல முடி­யாது என்­பதை அவர்­கள் உணர்ந்­த­னர். தொடர்ந்­தும் முன்­னோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்­த­னர். துரத்தி வந்­த­வர்­க­ளின் மோட்­டார் சைக் கிள்­கள் சக்தி வாய்ந்­தவை. ஒரு மோட்­டார் சைக்­கி­ளில் 3 பேர் இருந்­த­னர். ஒரு­வர் ஓடி­னார். ஏனைய இரு­வர் அமர்ந்­தி­ருந்­த­னர். இவ்­வாறு இரு மோட்­டார் சைக்­கிள்­கள். அவர்­க­ளின் கைக­ளில் வாள்­கள் இருந்­தன.

பொலி­ஸா­ரின் மோட்­டார் சைக்­கி­ளைக் கடந்து சென்று தமது மோட்­டார் சைக்­கி­ளைக் குறுக்கே நிறுத்தி அவர்­களை மறித்து பல­வந்­த­மாக அவர்­களை இழுத்து எது­வுமே சொல்­லா­மல் இரு பொலி­ஸா­ருக்­கும் அவர்­கள் தங்­களை ஏன் இடை­ம­றிக்­கி­றார்­கள் என்று எது­வுமே தெரி­ய­வில்லை. அவர்­க­ளுக்கு எல்­லா­மும் சூனி­ய­மாக இருந்­த­னர். வந்­த­வர்­கள் உடனே வெட்ட ஆரம்­பித்து விட்­டார்­கள்.

அவர்­க­ளின் தாக்­கு­த­லால் மோட்­டார் சைக்­கிளை ஓட்டி வந்த பொலி­ஸார் நிலை­கு­லைந்து கீழே வீழ்ந்­தார். அவ­ரு­டைய வலது கையின் மேல் பக்­கத்­தில் பலத்த காயம் ஏற்­பட்­டுள்­ளது. அது­போன்று முழங்­கா­லி­லும் அதற்­குக் கீழும் வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­டது. சில வெட்­டுக் காயங்­கள் அவர்­க­ளின் எலும்பு வரை சென்­றுள்­ளன.

பின்­னால் இருந்து வந்­த­வர் நில­மை­யைக் கொஞ்­சம் சமா­ளித்­துக்­கொண்டு அந்த இடத்­தி­லி­ருந்து தப்­பி­யோட முயன்­றார். ஆனால் அவ­ரை­யும் துரத்­திச் சென்ற அவர்­கள் வெட்­டி­னார்­கள். அத­னால் அவ­ருக்­கும் கையில் காயம் ஏற்­பட்­டது. அவர்­க­ளுக்கு அவ­சர அறு­வைச் சிகிச்சை வழங்­கப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளின் நிலை கொஞ்­சம் கவ­லைக்­கி­ட­மா­கத்­தான் இருக்­கி­றது. எனி­னும் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சை­கள் திருப்­தி­க­ர­மாக உள்­ளன.

தாக்­கு­த­லின்­போது இரு மோட்­டார் சைக்­கிள்­கள் மட்­டும் அங்­கி­ருக்­க­வில்லை. பொலி­ஸா­ரின் கூற்­றுப்­படி அங்கு 6 அல்­லது 7 மோட்­டார் சைக்­கிள்­கள் இருந்­தன. அனைத்­தி­லும் இரண்டு அல்­லது மூவர் இருந்­த­னர். கிட்­டத்­தட்ட 15 பேர் வரை­யி­லா­னோர் இருந்­த­னர். எல்­லோ­ருமே இளை­ஞர்­கள். எனவே பொலி­ஸா­ரால் தப்­பிக்க முடி­ய­வில்லை. அவர்­கள் பெருங் குர­லில் அவ­ல­மா­கக் கத்­தி­யதை அடுத்து தாக்­கு­த­லா­ளி­கள் அங்­கி­ருந்து வந்­த­வ­ழியே திரும்பி ஓடி­விட்­ட­னர்.

நாம் தாக்­கு­த­லின் நிலை தொடர்­பில் அறிந்­து­கொண்­டி­ருக்­கின்­றோம். இந்த தாக்­கு­தல் அணி­யின் தலை­வர் விடு­த­லைப் புலி­கள் இயக்க முன்­னாள் உறுப்­பி­னர் அத்­தோடு ஆவா குழு­வின் உறுப்­பி­ன­ரும்­கூட என்று அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றோம்.

மற்­றைய 6 பேரை­யும்­கூட அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றோம். பொலிஸ் ரோந்து சோதனை சந்­தே­கப்­ப­டு­ப­வர்­க­ளைக் கைது செய்­வது சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரின் உதவி என்­ப­வற்­று­டன் சந்­தே­க­ந­பர்­க­ளைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

தாக்­கு­தல் நடந்த பகு­தியை முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்­குத் தேவை ஏற்­ப­டின் தரைப்­படை கடற்­படை வான்­படை என்­ப­வற்­றின் உத­வி­யை­யும் பெற்­றுக்­கொள்­வோம்.

மக்­கள் இல­கு­வா­க­வும் சுதந்­தி­ர­மா­க­வும் நட­மா­டு­வ­தற்­கான வாய்ப்­பைக் கொடுத்­தி­ருந்­தோம். நிறை­யச் சந்­தர்ப்­பங்­க­ளை­யும் கொடுத்­தி­ருந்­தோம். பாது­காப்­பைப் பலப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. பொது­மக்­க­ளுக்கு இடைஞ்­சல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்று நினைத்­தோம்.

அப்­ப­டி­யான அணு­கு­மு­றை­யால்­தான் இது நடந்­தது. இந்த மாதி­ரி­யான போக்கு பொது­மக்­க­ளுக்­குச் சாத­மா­ன­தாக இருக்­காது. நான் நினைக்­கின்­றேன் பொது­மக்­கள், அரச பணி­யா­ளர்­கள் அச்­ச­ம­டைந்­தி­ருக்­கி­றார்­கள். பொலி­ஸா­ரும்­கூ­டப் பொறுமை இழந்­தி­ருக்­கி­றார்­கள்.

நாங்­கள் சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. ஏனெ­னில் சம்­ப­வங்­கள் ஒன்­றன் பின் ஒன்­றாக நடை­பெற்று வரு­கின்­றன. இத­னைத் தொடர்ந்து அனு­ம­திக்க முடி­யாது. மக்­கள் அமை­தி­யோ­டும் இணக்­கத்­தோ­டும் வாழத்­தக்க வகை­யில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும்.

மக்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டிய பொறுப்பு பொலி­ஸா­ருக்கு இருக்­கி­றது. அதற்­காக நாம் வெவ்­வே­றான அணு­கு­மு­றை­களை, உத்­தி­க­ளைக் கையா­ளப்­போ­கின்­றோம். அதனை இங்­கி­ருந்து நானே ஆரம்­பிக்­கப் போகின்­றேன்.

இங்­கி­ருக்­கும் பொலிஸ் அதி­கா­ரி­கள் ஏனைய பொலி­ஸா­ருக்கு எப்­ப­டித் தலை­மைத்­து­வத்தை வழங்­க­வேண்­டும், எப்­ப­டிக் கையா­ள­வேண்­டும் என்ன செய்­ய­வேண்­டும் என்­பது பற்­றி­யெல்­லாம் இன்று நான் அவர்­க­ளுக்கு அறி­வு­ரை­களை வழங்­க­வுள்­ளே்ன். ஆயு­தப் படை­கள் மற்­றும் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரி­டம் இருந்து எந்த வகை­யி­லான உத­வி­கள் தேவைப்­ப­டும் என்­பது பற்­றி­யும் ஆரா­ய­வுள்­ளேன்.

வரும் நாள்­க­ளில் கூட்­டுச் சுற்­றுக் காவல், கூட்­டுத் தேடல் சோத­னை­களை ஆரம்­பிக்­கப்­போ­கின்­றோம். பொது­மக்­க­ளின் ஆத­ர­வும் உத­வி­யும் இதற்­குத் தேவை. தக­வல் தரு­ப­வர்­கள் யார் என்­கிற விவ­ரங்­களை எக்­கா­ர­ணத்­தைக் கொண்­டும் வெளியே சொல்­ல­மாட்­டோம்.

எந்­த­வொரு சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கையை நீங்­கள் கண்­டா­லும் உட­ன­டி­யா­கப் பொலி­ஸா­ருக்கு அறி­வி­யுங்­கள். அது மணல் கடத்­த­லாக இருக்­க­லாம், ஆள் கடத்­த­லாக இருக்­க­லாம், வழிப்­பறி கொள்­ளை­யாக இருக்­க­லாம் எது­வா­னா­லம் அறி­வி­யுங்­கள்.

என்­னு­டைய தொலை­பேசி இலக்­கத்­தைக்­கூ­டத் தரு­கின்­றேன். இப்­ப­டி­யான தக­வல்­கள் இருந்­தால் உட­ன­டி­யாக அறி­வி­யுங்­கள். 0717582222 என்ற இலக்­கத்­திற்கு அறி­வி­யுங்­கள். 0718592020 என்ற இலக்­கத்­திற்­கும் அறி­விக்­க­லாம்.

எங்­க­ளு­டைய பொறு­மைக்­கும் எல்­லை­யி­ருக்­கி­றது. எங்­க­ளு­டைய சார்­ஜன்ட் ஒரு­வர் அண்­மை­யில் உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார். மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யின் நம்­பிக்­கைக்­கு­ரிய பாது­கா­வ­ல­ராக இருந்த அவர் கொல்­லப்­பட்­டார். அது தேவை­யற்ற ஒரு சம்­ப­வம்.

தம்­மைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத குடி­கா­ரர்­கள் இது­போன்­ற­வற்றை உரு­வாக்கி விடு­கி­றார்­கள். சில மாதங்­க­ளுக்கு முன்­னர் மற்­றொரு சம்­ப­வ­மும் இடம்­பெற்­றது. இவை­யெல்­லாம் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும். சட்­ட­மும் ஒழுங்­கும் காக்­கப்­ப­ட­வேண்­டும். எந்த விலை கொடுத்­தும் சட்­ட­மும் ஒழுங்­கும் பாது­காக்­கப்­ப­டும். எல்­லோ­ருக்­கும் ஒரே சட்­டம்­தான். எந்த இன­மா­னா­லும் மத­மா­னா­லும் கட்­சி­யா­னா­லும் எல்­லோ­ருக்­கும் ஒரே சட்­டம்­தான். எனவே மக்­கள் ஒத்­து­ழைக்­க­வேண்­டும்.

http://uthayandaily.com/story/15464.html

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராணுவ வீரர்கள்.. முன்னாள் ஜே வி பி ஆட்கள்.. எத்தனையோ பேர் தென்னிலங்கையில் எத்தனையோ வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில்.. ஒரு கைதியை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு சிறைத்துறை காவலர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

அப்போதெல்லாம்.. ரோசமும்.. முப்படையை இறக்குவன் என்ற வெருட்டலும் ஏன் இவர்களுக்கு அவர்களை நோக்கி வரவில்லை. இன்று வரை அந்தத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்களை கைது செய்யவும் இல்லை.

ஆக.. இடங்கண்ட இடத்தில் தான் இவைட... வெட்டி வீரம்.

இதெல்லாம்.. ஏதோ திசை திருப்பல்களுக்கும்.. சிங்கள படை ஆக்கிரமிப்பு.. இருப்பை நியாயப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளாகும்.

அண்மைக்காலமாக.. வடக்குக் கிழக்கில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் முன்னாள் போராளிகள் தலையில் போடப்படுவதானது.. தமிழ் மக்கள் மீது அழிவை செய்து விட்டு.. 2009 முன்னர் புலிகள் மீது பழிபோட்டு தப்பிக்கும் அதே பழைய தந்திரத்தின் தொடர்ச்சியாகவும்.. முன்னாள் போராளிகளின் நிம்மதியான சமூக வாழ்வைச் சீரழிப்பதையும் நோக்காகவே கொண்டுள்ளது.

இது குறித்து எம் அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்காததும் வியப்பளிக்கிறது.

தென்னிலங்கையில் முன்னாள் இராணுவ வீரர்கள் அடாவடி செய்தால்.. அதனைக் கட்டுப்படுத்த.. முப்படையையும் இறக்காதவர்கள்.. எதுக்கு வடக்கில்.. நிகழ்ந்த ஒரு சில சிறிய வன்முறைகளோடு.. முப்படை வெருட்டல் விடுகின்றனர்.

தமிழ் மக்களை இராணுவ மயத்துக்குள் பயத்துக்குள் வைத்திருக்கும் நோக்கமே ஆகும். இது குறித்து ஏன் மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய கத்தும் சர்வதேசமும்.. சர்வதேச அமைப்புக்களும் மெளனம் காக்கின்றன..???! tw_angry::rolleyes:

இது தான் சர்வதேசம் சொறீலங்காவில் சிங்கள அரசுக்கு ஆயுதமும்.. இராணுவ உதவிகளும் வழங்கி..நிகழ்த்தி வரும்... நல்லிணக்க நல்ல நடைமுறையின் தொடர்ச்சியோ..???! :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

மக்­கள் இல­கு­வா­க­வும் சுதந்­தி­ர­மா­க­வும் நட­மா­டு­வ­தற்­கான வாய்ப்­பைக் கொடுத்­தி­ருந்­தோம். நிறை­யச் சந்­தர்ப்­பங்­க­ளை­யும் கொடுத்­தி­ருந்­தோம். பாது­காப்­பைப் பலப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. பொது­மக்­க­ளுக்கு இடைஞ்­சல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்று நினைத்­தோம்.

tw_cry:tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Elugnajiru said:

முதலாவது ஒரு விடையத்தை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இப்படியான வேலைகளை யார் செய்கிறர்கள் அவர்கள் ஒன்றும் வேற்றுக்கிரகவாசிகள் இல்லை புலத்தில் வாழும் தமிழ் இளையோரே, 

கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திப்போம் நான் அண்மையில் யாழ்குடாநாட்டில் நின்றபோது தெருக்க்ளில் சந்திக்குச் சந்தி சிறீலங்காவின் காவல்துறையினர் மோட்டர்சைக்கிள் சகிதமாக நின்றிருந்தார்கள் அனைவரும் போக்குவரத்துப்பொலீசார் தெருவில் போகும் அனேகமான வாகன ஓட்டிகளை மறிக்கிறார்கள் கூடுதலாக மோட்டார்சைக்கிளை மறிப்பதுதான் அதிகம். அனைத்தும் சும்மா இல்லை சந்தை விலையில் இரண்டு மூன்று இலட்சங்களைத் தாண்டும் பெறுமதியானவை. அவர்கள் மறிக்கும் பாதிக்குமேற்பட்ட வாகனசாரிகளிடம் ஒழுங்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதோ ஒன்று இல்லாமலேயே இருக்கு. உடனே நூறோ இருநூறோ அவரவர் அவசரத்துக்கும் தகுதிக்கும் தேவைப்படும் அனுமதிப்பத்திரத்துக்கும் ஏற்றாற்போல் காசுவெட்டுகிறார்கள்.

யாழ் குடாநாட்டில் சுமார் ஆறு இலட்சத்துக்குக்குறைவானவர்களே வாழ்கிறார்கள் அப்படி வாழ்பவர்களில் வாகனம் வைத்திருப்போர் எவ்வளவுவரும் அவர்கள் அனைவரும் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், வரி காப்புறுதி அவைபோன்ற இன்னபிற விடையங்களில் கவனமெடுத்து வீது ஒழுங்கு விதகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனமோட்டினால் ....

எந்தப் போலீஸ்காரனாவது யாழ்குடாவில் வேலை செய்ய வருவாணோ யாழ்ப்பாணமோ அது தண்ணியில்லாக்காடு எனச்சொல்லி அரளமாட்டான். இருக்கிறவனும் இந்தக்கடுப்பைஎல்லாம் களவு கொலை கொள்ளையில் பிடிபடுகிறவனிட்டைக்காட்டமாட்டானா. 

சன்னா குறூப் என ஒருகுழுவை இயக்கிவந்த பிரசன்னாவும் அவனது இரண்டாவது நிலைத் தலவர் எனப்படும் சஞ்சீவனும் இப்போது சுவிஸ்நாட்டில் தஞ்சம் இப்போ இருப்பவர்கள் அவர்களது எடுபிடிகள், இவர்களைப் பெத்ததுகள் பொறுப்பில்லாத அப்பன் ஆத்தை. யாழ் குடாநாட்டில் மாவா எனும் போதைப்பாக்கை அறிமுகப்படுத்தியவர் இப்போ பிரான்ஸ்சில் வாழ்கிறார் இவரது தகப்பன் யாழ்நகரில் பிரபல வியாபாரியும் ஒரு கோலிலின் அறங்காவலருமாவார். இப்போ தெரிகிறதா தம்பிகளா எங்கே பிரச்சனை என. இப்போ யாழ் குடாவில் காணப்படும் கோவில் தேர்முட்டிகள் எல்லாம் அவ்வூரின் இளையோ மாலைவேளையில் தண்ணி அடிக்கும் இடமாகப்போய்விட்டது

முதலில் எங்கள் பக்கத்தை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். 

ஊருக்கு அடிக்கடி போய்வாங்கோ சாதாரணமானவன் வாழ்க்கையைக்கொண்டுசெல்ல எப்படிக்கஸ்டப்படுகிறான் எனத்தெரியும். அண்மையில் விடுவிக்கபட்ட பகுதி ஊறணி காலையில் மீன் வாங்க ஊறணித்துறைக்குப்போனேன் முதல்நாள் மாலை ஆறுமணிக்குக் கடலில் படகுடன் சென்றவன் அடுத்தநாள் சுமார் ஐந்துகிலோ சிறிய மீஙளுடன் கரைசேர்ந்தார்கள் படகில் மொத்தம் மூன்றுபேர் கடலுக்குப்போனவையள் இப்படி நாணயமாக உழைத்துச் சாப்பிட விரும்புகிறவையளும் கண்ணியமாகக் கதைக்கக்கூடியவர்களும் அங்கு இருக்கிறார்கள் அவர்கள் இருக்கும் திசை வணங்குகிறேன். ஆனால் பொறுக்கிகளைப் புறம்கொண்டு ஒதுக்குகிறேன் 

இன்னும்வரும்

நீங்கள் சொல்கிற விதத்தில் சிந்திக்க ஏதோ தடுக்குது போல.ஆனால் இது தான் நிஜம்.

8 hours ago, போல் said:

பாதாள உலகக்குழுக்களை விட பல ஆயிரம் மடங்கு மோசமான பேர்வழிகளே சிங்கள அரச பயங்கரவாத இயந்திரத்தின் போலீஸ் அதிகாரிகளாக உள்ளனர்!

இதை மறுக்க முடியாது! யாரோ கூறியது போல கடைநிலையிலிருந்து கடைகள், அங்கை, இங்கை என்று காசு, பொருள்  பறித்து வளர்ந்தவர்களே இன்று உயர் பொறுப்புக்களில் உள்ளனர்.

7 hours ago, nedukkalapoovan said:

இதெல்லாம்.. ஏதோ திசை திருப்பல்களுக்கும்.. சிங்கள படை ஆக்கிரமிப்பு.. இருப்பை நியாயப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளாகும்.

அண்மைக்காலமாக.. வடக்குக் கிழக்கில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் முன்னாள் போராளிகள் தலையில் போடப்படுவதானது.. தமிழ் மக்கள் மீது அழிவை செய்து விட்டு.. 2009 முன்னர் புலிகள் மீது பழிபோட்டு தப்பிக்கும் அதே பழைய தந்திரத்தின் தொடர்ச்சியாகவும்.. முன்னாள் போராளிகளின் நிம்மதியான சமூக வாழ்வைச் சீரழிப்பதையும் நோக்காகவே கொண்டுள்ளது.

இவை தான் யதார்த்தம்! நாட்டில் நீண்டகாலம் இருக்கும் மக்கள் கூறுவதும் இதைத் தான்.

விடுமுறையில் போய் பார்ட்டிகளை வைத்து கூத்தாடிவிட்டு, மேலோட்டமாக பார்த்து "எல்லாம் அந்த மாதிரி இருக்கு" என்று சொல்வது வெறும் வெளிப்பார்வைகள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.