Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Featured Replies

அம்பாறை வீரமுனையில் 400 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வினை, முன்னால் கிராம உத்தியோகஸ்த்தர் பொன்னம்பலம் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

இதன்போது, பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன், மு.இராஜேஸ்வரன், இரா.துரைரெட்ணம் மற்றும் கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், நம்பிக்கை ஒளியின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜெயசிறில், வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் க.லவகுகராஜா, முன்னாள் கிராம உத்தியோகஸ்தர் பொன்னுத்துரை மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400க்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/155023?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் வீரமுனை மட்டும் அல்ல திராய்க்கேணியும்       சேர்த்து  பல நூற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் முஸ்லீம்களாலும் ராணுவத்தினராலும் 

செய்தியாளார் ஏன் மர்மக்குழு என எழுதியிருக்கிறார் இது உலக்குக்கு  தெரிந்த உன்மைதானே யார் சுட்டும் வெட்டியும் கொத்தியும் கொன்றார்கள் என்று :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, தனி ஒருவன் said:

ஆழ்ந்த அஞ்சலிகள் வீரமுனை மட்டும் அல்ல திராய்க்கேணியும்       சேர்த்து  பல நூற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் முஸ்லீம்களாலும் ராணுவத்தினராலும் 

செய்தியாளார் ஏன் மர்மக்குழு என எழுதியிருக்கிறார் இது உலக்குக்கு  தெரிந்த உன்மைதானே யார் சுட்டும் வெட்டியும் கொத்தியும் கொன்றார்கள் என்று :104_point_left:

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். அந்தக் கூற்றிற்கு மதிப்பளிக்கவே மர்மக்குழு என்று தமிழ்வின் எழுதியிருக்கலாம். :shocked:

22 hours ago, தனி ஒருவன் said:

ஆழ்ந்த அஞ்சலிகள் வீரமுனை மட்டும் அல்ல திராய்க்கேணியும்       சேர்த்து  பல நூற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் முஸ்லீம்களாலும் ராணுவத்தினராலும் 

செய்தியாளார் ஏன் மர்மக்குழு என எழுதியிருக்கிறார் இது உலக்குக்கு  தெரிந்த உன்மைதானே யார் சுட்டும் வெட்டியும் கொத்தியும் கொன்றார்கள் என்று :104_point_left:

தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல நிறைய தமிழர்களும் நாகரிகம் என்ற போர்வையில் (குலைநடுக்கத்தில், பயத்தில்) உண்மைகளை மறைத்து மறைத்து எழுதுவது நீண்ட காலமாக நடந்துவருவது தானே. இப்படியாக போலி நாகரிகத்தின் மாயையில் சிக்கியுள்ள தமிழர்களின் பேருதவிகளுடன் சிங்களவனும், முஸ்லிம்களும்  பொய்களை துணிஞ்சு எழுதி தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றிவிட்டானர். இந்த தமிழர் இன்னும் போலி நாகரிகத்தில் இருந்து வெளிவந்ததாக தெரியவில்லை.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் நடந்தால்.. அது புலியே தான்.. என்று தலைப்புப் போடும் கூட்டம்.. வீரமுனை உட்பட எத்தனையோ கிழக்கு தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் மீது மர்மக் கும்பல் பழிபோடுவது ஏன்.. யாரை காப்பாற்ற...???!

இது மட்டுமல்ல.. கல்முனைப் படுகொலைகள்.. இனச்சுத்திகரிப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்டு.. இன்று கல்முனை முழு முஸ்லீம் நகரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 1983 களுக்கு முன்.. அங்கு தமிழர்களே அதிகம்..  வாழ்ந்தும் வியாபாரமும் செய்து வந்தனர். இன்று..??!

இப்படி எத்தனையோ படுகொலைகளை தமிழ் மக்கள் மீது நிகழ்த்திவிட்டு.. இன்றும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும்.. இனப்பரம்பலை சிதைத்தும்.. மதமாற்றத்தை ஊக்குவித்து வரும்.. தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் தொடர்பில் எம் சில ஊடகங்கள் அடக்கி வாசிக்கவே செய்கின்றன. அது அவர்களின் நரித்தனத்தையே இனங்காட்டுகிறது. ஊடக தர்மத்தை அல்ல. 

இஸ்லாமிய.. மற்றும் சிங்களக் காடைகளால்.. இனப்படுகொலை செய்யப்பட்டு வீழ்த்தப்பட்ட வீரமுனை மக்களுக்கு அஞ்சலிகள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வீரமுனை படுகொலை

 
கிழக்கில் முஸ்லீம் அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நடத்திய  வீரமுனைப் படுகொலை 1991.
 
வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.
 
1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 
 
1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். 
 
வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர்.
 
1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். 
 
கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 
 
1990 ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. 
 
ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனைஇ வளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. 
 
கொண்ட வெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர்.
 
ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். 
 
ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. 
 
முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டாரகள்;. 
 
கட்டிய மனைவிமாரும்இ பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். 
தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். 
 
கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது.
 
சம்மாநதுறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். 
 
இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. 
 
வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்களுறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. அக்காலகட்டத்தில்
sugatharan.blogspot

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.