Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவராக வடக்கு முதல்வர்! பசில் ராஜபக்ச

Featured Replies

மக்கள் மீது சி.வி.க்கு அளவுகடந்த பாசம்

 

இதனால்தான் தெற்கில் விமர்சனம் என்கிறார் பஷில்
(ரி.விரூஷன்)

நாட்டில் போர்க்­குற்­றங்கள் எவையும் இடம்­பெ­ற­வில்லை, ஆனாலும் சில குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அது தொடர்­பாக தற்­போது அர­சாங்கம் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. வடக்கு மக்கள் மீது விக்­கி­னேஸ்­வரன் கொண்­டுள்ள அளவு கடந்த பாசமே அவரை தெற்கில் உள்­ள­வர்கள் விமர்­

சிக்க கார­ண­மாகும் என்று முன்னாள் அமைச்­ச­ரான பஷில் ­ரா­ஜ­பக் ஷ தெரி­வித்தார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்­கொண்டு வடக்­குக்கு

 வந்­துள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ இங்கு தமது புதிய கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன கட்சியின் செயற்­பா­டு­களை ஆரம்­பித்து வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் யாழ்.ஊடக அமை­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லளார் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்ட விட­யத்தை தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

தற்­போ­துள்ள அர­சாங்கம் 33 மாதங்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றது. மஹிந்த ராஜ­பக்ஷ 2006 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் ஆட்சி ஏறும்­போது வடக்கின் நிலை எப்­படி காணப்­பட்­டது என்­பது உங்­க­ளுக்கு தெரியும். அவ்­வா­றான நிலையில் இருந்து வடக்கு மக்­களை மீட்­டெ­டுத்து அவர்­க­ளுக்கு சமா­தா­னத்­தையும் அபி­வி­ருத்­தி­யையும், சக்­தி­யையும் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்ற இலக்­கு­ட­னேயே அவர் ஆட்சிப் பீடம் ஏறி­யி­ருந்தார்.

அவ்­வாறு அவ­ரு­டைய இலக்கின் கார­ண­மா­கவே தான் கடந்த காலங்­களில் ஆயு­தங்­களை ஏந்­திய சிறு­வர்கள் இன்று பேனை­களை பிடித்து எழு­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு சமா­தான சூழலை கட்­டி­யெ­ழுப்­பிய பின்னர் அவர் வடக்கின் அபி­வி­ருத்தி தொடர்­பாக கவ­னிக்க தொடங்­கி­யி­ருந்தார். அந்­த­வ­கையில் வடக்­கிற்கு யாழ்.தேவியை கொண்­டு­வந்தார், ஏ9 பாதையை திறந்து அதனை காப்பட் வீதி­யாக்­கினார். பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லை­களை உரு­வாக்கி கல்வி சுகா­த­ரத்தை முன்­னேற்­ற­ம­டைய செய்தார்.

ஆனால் தற்­போ­தைய ஆட்­சியில் இவை­ய­னைத்தும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. நாம் கடந்த முறை வடக்கின் வசந்தம் என்ற வேலைத் திட்­டத்­திற்­காக யாழ்.வந்த போது அங்கு குறை­வான மக்­களே கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். ஆனால் இம்­முறை நாங்கள் வந்த போது அதி­க­ள­வான மக்கள் எம்­மோடு இணைந்­தி­ருந்­தார்கள். மகிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்­சினைக்­கான தீர்வுக்கு நடவடிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் எங்­க­ளு­டைய ஆட்­சி­யா­னது இனி மீண்டும் ஏற்­ப­டு­மாயின் இங்­குள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். அத்­துடன் காணி­யில்­லா­த­வர்­க­ளுக்கும் காணி வழங்­கப்­படும். இதே­போன்று காணாமல் போன­வர்கள் தொடர்­பான பிரச்சி­னைக்கும் தீர்­வொன்று எட்­டப்­படும். ஆனால் இந்த அர­சாங்­கத்தில் மீளக்­கு­டி­யேற்றம் கூட இன்­னமும் சரி­யான முறையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மீன­வர்­க­ளு­டைய பிரச்சினை முழு­மை­யாக தீர்க்­கப்­ப­ட­வில்லை என தெரி­வித்தார்.

இதனை தொடர்ந்து அவ­ரிடம், கூட்­ட­மைப்பு அரசின் பங்­காளி கட்­சி­யாக செயற்­ப­டு­வதால் அவர்­க­ளுடன் தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பாக பேச முடி­யாது என முன்னால் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ கூறி­யது தொடர்­பாக கேள்வி எழுப்­பட்ட போது,

இது தொடர்­பான மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களை அறிந்­து­கொள்­ளவே நாம் வடக்­கிற்கு விஜயம் செய்­துள்ளோம். ஆகவே அம் மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்தே அவற்றை நிவர்த்தி செய்­கின்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம் என தெரி­வித்தார்.

வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் மீது தென்­னி­லங்­கையில் உள்­ள­வர்கள் அதி­க­மாக விமர்­சனம் செய்துவருவது தொடர்­பாக கேட்­கப்­பட்ட போது,

வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் வடக்கு மக்கள் மீது அதி­க­மான பாசத்­தையும், அன்­பையும் கொண்­டுள்ளார். ஆகவே தான் அவர் மீது தென்­னி­லங்­கையில் உள்­ள­வர்கள் விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றார்கள் என தெரிவித்தார்.

முன்னால் இராணுவ தளபதி சரத்பொன்சேகா போர்குற்றங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது,

நாட்டில் போர்க்குற்றங்கள் என்பது இடம்பெறவில்லை. ஆனால் சில குற்றங்களே இடம்பெற்றிருந்தன. அது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் பொறுமிக்க பதவிகளில் உள்ளவர்கள் பொறுப்போடு பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-02#page-1

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

நாட்டில் போர்க்குற்றங்கள் என்பது இடம்பெறவில்லை. ஆனால் சில குற்றங்களே இடம்பெற்றிருந்தன. அது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

சொல்லுறது யாரு?

வெள்ளைக்கொடி விவகார நாயகன்... ? tw_angry:

ஊழல் கிங் பஷிலுக்கு தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது அளவுகடந்த பாசம்!
இன்னமும் கொள்ளையடிக்க நோட்டம் விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகுற்றங்களே நடந்தன, போர்க்குற்றங்கள் அல்ல! – என்கிறார் பசில்

Basil-Rajapaksa-380-seithy-300x225.jpgஇலங்கையில் யுத்த மோதல்களின் பின் நடைபெற்ற குற்றங்கள் போர்க்குற்றமல்ல அதுவொரு சிறுகுற்றமே என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் தலைவருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா போர்க்குற்றத்தில் ஈடுபட்ட படையினரை தண்டிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளாரேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல. அதுவொரு சிறுகுற்றமே நீங்கள் அவற்றை போர்க்குற்றம் எனக் கூறவேண்டாம் என்று தெரிவித்தார்.

பொறுப்பான கதிரைகளில் இருப்பவர்கள் வெளியிடும் வார்த்தைகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு மேல் இவ்விடயத்தில் தற்போது நான் எதனையும் இவ்விடத்தில் சொல்ல முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் உள்ள நிலையில் எதற்காக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இலக்கு வைத்து தென்னிலங்கையில் தாக்குதல் நடத்தப்படுகின்றதேயென்ற கேள்விக்கு பதிலளித்த அவர் உண்மையில் வடக்கு மக்கள் மீது கூடிய அன்பையும் அக்கறையும் கொண்டவராக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளதாக கருதுகின்றேன். அதனால் தான் அவர் மீது தென்னிலங்கையினில் தாக்குதல் நடத்தப்படுகின்றதோவென தெரியவில்லையென்றார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதியான தனது சகோதரர் மஹிந்த மீது முதலமைச்சர் மரியாதை கொண்டிருந்தார் எனவும் அதனாலேயே தனது பதவிப்பிரமாணத்தை அவர் முன் செய்துகொண்டதையும் நினைவுகூர்ந்தார்.

இதனிடையே கூட்டமைப்பு, தமிழ் மக்களிற்கு எதனையும் தராத இந்த அரசின் பங்காளிகளாக உள்ளதால் அவர்களுடன் தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றிபேச விரும்பவில்லையென தெரிவித்ததுடன் அதனாலேயே தமது கட்சியான சிறீலங்கா பொதுஜன முன்னணி நேரடியாக தமிழ் மக்களை சந்திக்க வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.etr.news/சிறுகுற்றங்களே-நடந்தன-ப/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

ஊழல் கிங் பஷிலுக்கு தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது அளவுகடந்த பாசம்!
இன்னமும் கொள்ளையடிக்க நோட்டம் விடுகிறார்.

தமிழர்களோடு இருந்தும் கொள்ளையடிக்குல் கூட்டம்  இன்னும் இருக்கு என்று கூறி 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தலைவராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த தகவலை பசில் வெளியிட்டார்.

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தலைவராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த தகவலை பசில் வெளியிட்டார்

கடந்த மஹிந்த ஆட்சியின் போது வடமாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் பதிவியேற்றார். இந்த காலப்பகுதியில் தேசியம் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்ட கருத்துக்களால் தென்னிலங்கையில் எதிர்ப்பலைகள் ஏற்பட்டன.

விக்னேஸ்வரனுக்கு எதிராக எதிர் கோஷங்களும், கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் பசில் ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பசில், தற்போது எதிர் தரப்பினர் என்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோன்று அப்போதைய எதிர்க்கட்சியினரும் விக்னேஸ்வரனுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருக்கலாம்.

எனினும் வடமாகாணத்தில் விக்னேஸ்வரன் மக்கள் மனங்களை வென்ற தலைவராக உள்ளார். ஏனைய தலைவர்களை விடவும் விக்னேஸ்வரனுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், வடக்கு, கிழக்கு மாணாங்களில் பசில் ராஜபக்ச பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tamilwin.com

  • தொடங்கியவர்

புதிய அரசாங்கம் 33மாதங்களாக எதுவும் செய்யவில்லை – யாழில் பசில்

basil-2.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு முதலமைச்சர் வடமாகாண மக்களின் ஆதரவை அன்பை பெற்று உள்ளார்,  அதானல்தான் கூட்டமைப்பினர் அவரை விமர்சிக்கின்றனர் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்திற்கு சென்றுள்ள பசில் ராஜபக்ச இன்றைய தினம் மதியம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடவியலாளர்களை சந்தித்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கின் வசந்த திட்டங்கள் ஊடாக அபிவிருத்தி , விவசாய ஊக்குவிப்பு , மீன் பிடி ஊக்குவிப்பு போன்ற பல அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்கள் சுவீட்சமாக வழி சமைத்தோம். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியது முன்னாள் ஜனாதிபதி தான். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 33 மாதங்கள் கடந்தும் இந்த புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. எமது ஆட்சி காலத்தில் தான் வெடிபொருட்களை அகற்றி மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை ஏற்படுத்தி கொடுத்தோம்.

இடம்பெயர்ந்த மக்களை நாம் மீள்குடியேற்றினாம். நாம் தொடர்ந்து மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம்.. காணியற்றவர்களுக்கு கூட காணிவழங்க தயாராக இருந்தோம். அதேபோல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்போம்.

புதிய அரசாங்கம் மீள்குடியேற்றத்தை ஒழுங்காக செய்யவில்லை இந்திய மீனவர்களை தடுத்து எமது மீனவர்கள் பாதுகாக்க கூட இந்த அரசாங்கத்தால் முடியவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் , தேவைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை , தேவைகளை கேட்டறியவே  நமது கட்சி மக்கள் சந்திப்புக்களை தற்போது நடாத்தி வருகின்றது.
வடக்கு முதலமைச்சர் வடமாகாண மக்களின் ஆதரவை அன்பை பெற்று உள்ளார் அதானல தான் கூட்டமைப்பினர் அவரை விமர்சிக்கின்றனர். என நினைக்கிறேன் என தெரிவித்தார்.

basil.jpg

http://globaltamilnews.net/archives/43421

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புதிய அரசாங்கம் 33மாதங்களாக எதுவும் செய்யவில்லை

வெள்ளை வான்களை அனுப்பவில்லையா என மறைமுகமாக கேட்கிறார்  போல

  • கருத்துக்கள உறவுகள்

 இவரின் பேச்சிலிருந்து ஒன்று புலனாகின்றது. த.தே. கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிமானத்தை இழந்து விட்டது. தொடந்து மக்களை ஏமாற்ற வேண்டுமானால் அவர்களின் மதிப்பு பெற்ற ஒருவரையே கைக்குள் போடவேண்டுமென்பதை புரிந்து வைத்துள்ளார் பசில். அதை நாடி பிடித்துப் பார்க்கவே வந்துள்ளார். இதோடு இவர் நின்று விடப்போவதில்லை. தொடரும் காலங்களில் முதலமைச்சருடன் உறவுகள் தொடர வாய்ப்புண்டு. முதலமைச்சர் அதை சரியாக கையாள எல்லோரும் உதவ வேணும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.