Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு – பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கருப்பு ஒக்டோபர்” பிரான்ச் தூதுவருடன், வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்பு

4952817635_4fce4e0467.jpg

JMC – I அமைப்பு இரண்டாவது வருடமாக பிரான்சில் ஏற்பாடு செய்துள்ள கருப்பு ஒக்டோபர் நிகழ்வில் பிரான்ச் நாட்டுக்கான இலங்கத் தூதுவர் புத்தி கே. அதாவுட அதீதியாக பங்கேற்கவுள்ளார். இவருடன் பிரான்ச் நாட்டு தூதரக முதல் செயலாளர் மங்கள ரணசிங்க மற்றும் டமித்த ஹேவவிக்கிரம ஆகியோருடன் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மியன்மார் மனித உரிமை பிரதிநிதிகள் உள்ளிட்ட மற்றும் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

காலம்: 29-10- 2017 நேரம்: 17:00 – 20:30 இடம்:UFB Centre, 91 Av.Paul Vaillant Courtiere, La Courneuve.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=179179 .

பிரான்சில் வடமாகாண முஸ்லிம்களின் ’27ம் கருப்பு ஒக்டோபர்’ அனுஸ்டிப்பும், சர்வதேச ஒன்றுகூடலும்

இலங்கை வடமாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழந்துவந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஈழப் போராட்டம் எனும் பெயரில் LTTE பயங்கரவாதிகளினால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக ஆயுதமுனையில் பலவந்தமாக தமது சொந்த மண்ணிலிருந்து 24 மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்து விட்டன.

இலங்கை வரலாற்றில் கறையேற்படுத்திய இந்நிகழ்வானது வடமாகாண முள்லிம்களதும் ஏனய மாகாண முஸ்லிம்களதும் மனதில் எழுதப்பட்ட குருதிவர்ண வரலாறாகும். வரலாற்றை மறக்கும் சமுதாயம் தன் இருப்பை இழக்கும் என்பர். வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை மன்னிக்கலாம், ஆனால் மறக்கலாகாது. தம் இருப்பை வளப்படுத்த LTTE இனர் சகோதர சமுதாயத்தை கருவறுத்த இந்த வரலாற்றுத் துரோகம் அவ்வளவு எளிதில் மறந்துபோகக் கூடியதல்ல.

1990 ஒக்டோபர் மாதம், காலம்காலமாக வடபுலத்து முஸ்லிம்கள் உழைத்த உழைப்புக்கள், சேமித்த செல்வங்கள், கட்டிக்காத்த கலாசாரங்கள், பேணிவந்த விழுமியங்கள், மனமாறக் கட்டியெழுப்பிய மனைகள், துள்ளித்திரிந்த தெருக்கள், அரிச்சுவடி படித்த பள்ளிக்கூடங்கள் என அனைத்தையும் பறித்துக் கொண்டு, டுவுவுநு ஆயுத தாரிகள் நிராயுத பாணிகளான முஸ்லிம்களை விரட்டிய அந்த கோர நிகழ்வு இலங்கை வரலாற்றின் கருப்பு ஒக்டோபர் என்றால் அது தவறாகாது.

இந்த கோர நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது பூர்வீக இடங்களில் தங்கு தடையின்றி மீள் குடியேறவும், சுதந்திரமாக வாழவும், அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் பழிதீர்;க்கப்படாமலிருக்கவும், வடமாகாண முஸ்லிம்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படுவதற்காகவும் இந்த ஞாபகார்த்த நிகழ்வு இன்றியமையாததாகின்றது. சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்களின் கடந்தகால இழப்புக்களை எடுத்துக்காட்டவும், நிகழ்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை நீக்கவும் JMC – I அமைப்பு இரண்டாவது வருடமாக பிரான்சில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தார்மீகக் கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது முயற்சிகளை அங்கீகரிப்பானாக!

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=179180 .

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, colomban said:

1 minute ago, Maruthankerny said:

இந்த ஒரு பாரிய துயரமும் ...
மற்றது ..... அண்மையில் பாலியல் வன்கொடுமை சம்மந்த பட்டு 
முதல் முறையாக நடந்த வித்தியா படுகொலையும்தான் 

இலங்கை வரலாற்றில் நடந்த மிக பெருத்த துயர சம்பவங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் விசுகு மற்றும் வைரவனுக்கு,

முதலில் விசு, என் முகநூலில் என்ன பெயரில் இருக்கிறீர்ககள்? உங்கள் கேழ்வியை நீக்கியிருந்தால் மன்னிக்கவும். எடிற் பண்ணும்போது விவாதத்துக்கு வெளியே இருக்கும் பதிவுகளை மட்டும் விலக்குவதுண்டு. தெரியாமல் உங்கள் கேழ்வி எடிற் பண்ணபட்டிருந்தால் மன்னிக்கவும். திரும்ப எழுதுங்கள் பதில் தருகிறேன். திரு வைரவனுக்கு, நான் என் பக்கத்தில் கேழ்வி கேட்பவர்களை நீகுவதில்லை. ஆனால் என் பக்கத்தில் ரக் பண்ணுகிறவர்களை மட்டுமே நீக்குவது வழக்கம். தவறாக உங்கள் பெயரை நீக்கியிருந்தால் மன்னிக்கவும். தயவுடன் உங்க முகநூல் ஐடியை அனுப்புங்கள்.

நான் தமிழ் தலைமை தமிழர்களிடம் முஸ்லிம்களின் நியாயத்துக்கும் முஸ்லிம் தலைமை முஸ்லிகளிடம் தமிழர்கள் நியாயத்துக்காக போராடுகிறவன். இதனால்தான் நான் தமிழ் தலைமையாலும் முஸ்லிம் தலைமையாலும் மதிக்கப் பட்டேன். இதற்காக பல கொலை முயற்ச்சிகளை எதிர்கொண்டிருக்கிறேன். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இந்தளவுக்கு கிழக்கில் இருந்து எம்மக்கள் முஸ்லீம்களால்.. முஸ்லீம்காடைகளால்.. கொன்றொழிக்கப்பட்டதை உலக அரங்கிற்கு காட்டாமல்.. ஒளிச்சு வைச்சிருப்பதும்.. இவங்கள் உந்த ஆட்டம் போட ஒரு காரணம்.

கிழக்கில் முஸ்லீம்களால்.. தமிழ் மக்கள் மீது இனச்சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்டமை ஒரு நிறுவனப்படுத்தப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு உலக அரங்கில் நிறுத்தப்பட்டு நினைவு கூறப்படுவதன் அவசியத்தையே.. இது காட்டுக்கிறது.

ஆனால்.. எங்கட அரசியல்வாதிகளும்.. புகழ் விரும்பிகளும்... எல்லாத்தையும் மறப்போம்.. மன்னிப்போம் என்று சிங்களவர்களாலும்.. முஸ்லீம்களாலும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட இனப்படுகொலைகள்.. இனச்சுத்திகரிப்புகள்.. தாயக நிலப்பறிப்புகளை..  உலகில் இருந்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் கேவலமாக இருக்கிறது.

இதனை எல்லாம் கடந்து.. எம் இனம் சந்தித்த இனப்படுகொலைகள்.. இனச்சுத்திரிகரிப்புகள்.. ஆதாரங்களுடன் உலகின் முன் நினைவுறுத்தப்படுவது மிக  மிக அவசியமாகும். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 29.10.2017 at 7:24 AM, nedukkalapoovan said:

நல்லவிடயமொற்றை நினைவூட்டடியுள்ளீர்கள்.  ஆனால்  இதனை முன்னெடுக்கப் பொருத்தமானவராகக் கவிஞரே தெரிகிறார். ஏனென்றால் அவரே சொல்கிறார் இருதரப்பு இணக்கத்துக்காக உழைப்பதாக. எனவே மறுதரப்பால்(முஸ்லீம்) செய்யப்பட கொலைகள் கொடுமைகளையும் நியாயத்தராசில் வைத்து தொடக்கிவைப்பாரென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nochchi said:

நல்லவிடயமொற்றை நினைவூட்டடியுள்ளீர்கள்.  ஆனால்  இதனை முன்னெடுக்கப் பொருத்தமானவராகக் கவிஞரே தெரிகிறார். ஏனென்றால் அவரே சொல்கிறார் இருதரப்பு இணக்கத்துக்காக உழைப்பதாக. எனவே மறுதரப்பால்(முஸ்லீம்) செய்யப்பட கொலைகள் கொடுமைகளையும் நியாயத்தராசில் வைத்து தொடக்கிவைப்பாரென நம்புகிறேன்.

எனது வேண்டுகோளும் இதே!

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2017 at 11:30 AM, poet said:

தோழர் விசுகு மற்றும் வைரவனுக்கு,

முதலில் விசு, என் முகநூலில் என்ன பெயரில் இருக்கிறீர்ககள்? உங்கள் கேழ்வியை நீக்கியிருந்தால் மன்னிக்கவும். எடிற் பண்ணும்போது விவாதத்துக்கு வெளியே இருக்கும் பதிவுகளை மட்டும் விலக்குவதுண்டு. தெரியாமல் உங்கள் கேழ்வி எடிற் பண்ணபட்டிருந்தால் மன்னிக்கவும். திரும்ப எழுதுங்கள் பதில் தருகிறேன். திரு வைரவனுக்கு, நான் என் பக்கத்தில் கேழ்வி கேட்பவர்களை நீகுவதில்லை. ஆனால் என் பக்கத்தில் ரக் பண்ணுகிறவர்களை மட்டுமே நீக்குவது வழக்கம். தவறாக உங்கள் பெயரை நீக்கியிருந்தால் மன்னிக்கவும். தயவுடன் உங்க முகநூல் ஐடியை அனுப்புங்கள்.

நான் தமிழ் தலைமை தமிழர்களிடம் முஸ்லிம்களின் நியாயத்துக்கும் முஸ்லிம் தலைமை முஸ்லிகளிடம் தமிழர்கள் நியாயத்துக்காக போராடுகிறவன். இதனால்தான் நான் தமிழ் தலைமையாலும் முஸ்லிம் தலைமையாலும் மதிக்கப் பட்டேன். இதற்காக பல கொலை முயற்ச்சிகளை எதிர்கொண்டிருக்கிறேன். 

GOTABHAYA RAJAPAKSA AND ME
கோத்தபாயவும் நானும்.

இலங்கையில் வாழ்ந்த மாபெரும் கொலைகாரன் என்று கோத்தபாய இராசபக்சவைத்தான் நாளைய வரலாறு குறிப்பிடும். கோத்தபாய ”எத்தனைபேர் செத்தாலும் யுத்தத்தை நிறுத்தவேண்டாம். சர்வதேசத்தின் இனகொலை குற்றச்சாட்டு தமிழ்நாட்டு எதிர்ப்பு 
எல்லாம் நான் பார்த்துகொள்கிறேன் பிரபாகரன் கொல்லப்படும்வரை போரைத் தொடருங்கள் என ஒரு அம்மையாரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து 2009 மே மாதத்தில் ஈழத் தமிழர் இனக்கொலையை நடத்தி முடித்த கொடுங்கோலர்.

.
திரு.கோத்தபாய 2013 நவம்பர் மாதத்தில் என்னை பிடித்த மூன்றாவது ”நாள் அவரை விடுவதற்காக பிடிக்கவில்லை. அவரது இறுதி சிறையில்தான்” என்று கொக்கரித்தாராம். ஆனால் ஆறாவதுநாள் ”அவரை வைத்திருப்பது கஸ்ட்டமாய் இருக்க்கு விட்டாலும் கஸ்ட்டம். தன்னை கொடுமைப் படுத்தியதாக பொய் பிரச்சாரம் செய்வாரே” என்று பதட்டபட்டாராம். ”ஜெயபாலன் பொய்சொல்வதில்லை” என என் நண்பன் ஒருவன் சொன்னதும் என்னை நாடுகடத்தும் உத்தரவில் கையெழுத்திட்டாராம். 
. 
எனக்காகக் குரல்கொடுத்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சர்வதேச பத்திரிகையாளர்கள் தினமும் ஓடி ஒடி வந்து பார்த்துகொண்ட தோழன் பசீர் சேகுதாவூத், இலங்கையின் நீதிஅமைச்சரே தான்தான் என்பதையும் பொருட்படுத்தாமல் சர்வதேசம் அறிய ”ஜெயபாலன் ஒரு குற்றமும் செய்யவில்லை” என அறிக்கை வெளியிட்ட தோழர் தலைவர் றவ்:. ஹக்கீம். தொடர்ந்து “ஜெயபாலனின் மீசையைக்கூட உன்னால் தொடமுடியாது விடு அல்லது நான் வாய்திறக்க நேரும்” என கோத்தபாயவுக்கு இறுதி மிரட்டல் விடுத்த நோர்வீஜிய அரசியல் பிரமுகர் எரிக் சோல்ஹைம் எல்லோருகும் என் நன்றி.

இது  உங்கள் முகநூலில்  வெளியிடப்பட்ட  உங்கள் அறிக்கை

இது சார்ந்து  எனது கேள்வி:

உங்கள்  ஒருவரது கைதுக்காக

வாய்  திறக்க  நேரிடும்  என  சிறீலங்கா  அரசை  வெருட்டும் நோர்வே  தூதர் எரிக் சோல்கைம்

இத்தனை  தமிழ் மக்கள் அழிவு  சார்ந்தும்  மௌனம்   காப்பதேன்??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வாய்  திறக்க  நேரிடும்  என  சிறீலங்கா  அரசை  வெருட்டும் நோர்வே  தூதர் எரிக் சோல்கைம்
இத்தனை  தமிழ் மக்கள் அழிவு  சார்ந்தும்  மௌனம்   காப்பதேன்??

இந்த கேள்விக்கு பதில் சிம்பிள்:
பொயட் நோர்வே பிரஜை ஆனால் போரில் அழிக்கப்பட்ட மக்கள் அப்படியில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

வாய்  திறக்க  நேரிடும்  என  சிறீலங்கா  அரசை  வெருட்டும் நோர்வே  தூதர் எரிக் சோல்கைம்
இத்தனை  தமிழ் மக்கள் அழிவு  சார்ந்தும்  மௌனம்   காப்பதேன்??

இந்த கேள்விக்கு பதில் சிம்பிள்:
பொயட் நோர்வே பிரஜை ஆனால் போரில் அழிக்கப்பட்ட மக்கள் அப்படியில்லையே.

அப்படியானால்  சுயநலம்??

எரிக்சோல்கைம்முக்கு  மட்டுமல்ல

தோழருக்கும்...

ஆனால் நானென்னால்  என்மீசையை  அல்ல

தலையையே  எடு

அவர்  வாய்  திறக்கட்டும்

தமிழருக்கு அந்த  வாய் உதவட்டும் என்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் விசுக்கு. என்னை பயங்கரவாதியாக சிறைவைக்க கோட்டுக்கு கொண்டுசெல்லப் போவதாக சேதி கிடைத்திருந்த  தருணத்தில்  உடனடியாக நாடுகடத்துவதாகச் சொன்னார்கள். நீதி அமைச்சர் றவ் ஹக்கீம் உட்பட அரசும் கோத்தபாயவும்  எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் கண்டனங்கள் வந்ததாகச் சொன்னார்கள். நோர்வே வந்த பின்னர்தான் என் பிள்ளைகள் தொகுத்துவைத்திருந்த பத்திரிகையில் வெளிவந்த  கண்டனங்களை வாசித்தேன். என்னை கைது செய்தவகளுடன் ”அம்மா சமதிக்கு எடுத்துச் செல் அல்லது நாயைபோல சுட்டு உடலை எடுத்துச் செல்” என வன்னிவிழான்குழம் கோவில்முன் நான் போட்ட சண்டை இன்று உலக பிரசித்தம், நோர்வே சுந்தரலிங்கத்துக்கு (fb :  kanap suntharalingam) அவரது  வன்னிவிழான்குழ உறவினர்கள் “ஆமி ஜெயபாலனை பிடிச்சு வைச்சிருக்கு, ஜெயபாலன் ஆமி கமாண்டர்போல கத்திறார். ஆமி தமிழர் மாதிரி நிக்கிறாங்க” என கைபேசியில் சொல்லியிருக்கிறார்கள். சுந்தரலிங்கம் குளோபல் தமிழ் செய்தி குருபரனுக்கும் வேறு செய்தியாளர்களுக்கும் தகவல் சொன்னதால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன். எனக்காக உலகளாவ நடந்த முயற்சிகள் வெலியில் வந்துதான் தெரியும்.

விசுக்கு “நானென்னால்  என்மீசையை  அல்ல தலையையே  எடு அவர்  வாய்  திறக்கட்டும்த மிழருக்கு அந்த  வாய் உதவட்டும்” என சொல்லியிருப்பேன் எனச் சொல்கிறீங்க. நான் அதை மறுக்கவில்லை. நானும் உங்களைபோல துணிந்தவன்தான். என்னை தெரிந்தவர்களை சந்திக்கும்போது கேழுங்கள்.  வெளியில் வந்துதான் எல்லாம் தெரியும். ஒரு வேழை என் மரணத்துக்கு முன்னம் விட்ட இடத்தில் இருந்து விடுதலைகான இராஜதந்திரபணிகளை தொடர நேரலாம் என்கிற நப்பாசை இன்னும் இருக்கு. அந்த நப்பாசையால்தான் உங்கள் கேழ்விக்கு பதில்கூறுவதைத் தவிர்க்கவும் உங்கள் கேழ்வியை நீங்கவும் நேர்ந்தது. புரிந்து கொள்ளுங்கள். அல்லது மன்னியுங்கள்.

http://ireport.cnn.com/docs/DOC-1063267

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தோழா யாழ் குடும்பத்துக்கும் என் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 02/11/2017 at 5:41 PM, poet said:

தோழர் தாங்கள் இதுவரை செய்த இராஜதந்திரபணிகளையும் இனி எப்படியான இராஜதந்திரப்பணிகளை தொடரப்போவதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே???

  • கருத்துக்கள உறவுகள்

எத்ர்காலம்பற்றி ஆயுத்தமாக இருப்பதன்றி தமிழ் முஸ்லிம் கலந்துரையாடல்கள்தவிர என்செயலாவது யாதொன்றுமில்லை.  கடந்த காலத்தில் என்னால் இயன்ற சிறு பணியை எதிர்கால சந்ததிக்காக என் சுயசரிதையில் பதிவு செய்யவுள்ளேன், 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, poet said:

எத்ர்காலம்பற்றி ஆயுத்தமாக இருப்பதன்றி தமிழ் முஸ்லிம் கலந்துரையாடல்கள்தவிர என்செயலாவது யாதொன்றுமில்லை.  கடந்த காலத்தில் என்னால் இயன்ற சிறு பணியை எதிர்கால சந்ததிக்காக என் சுயசரிதையில் பதிவு செய்யவுள்ளேன், 

முஸ்லிம்களால் கலந்துரையாடல்கள் பல நடக்கின்றது எப்படி கள்ளக்காணி பிடிப்பது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு இணைந்தால் ரத்த ஆறு ஓடுமாம் பொயட்டின் காதில போட்டு வைப்பம்  ரிசாட் , மற்றும் ஹிஸ்புல்லா  அப்ப புட்டும்  தேங்காய் பூவும் சரிவராது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் அமைச்சர் பைசருடன், JMC – I பிரதிநிதிகள் சந்திப்பு

பிரான்சில் அமைச்சர் பைசருடன், JMC - I  பிரதிநிதிகள் சந்திப்பு

பிரான்சுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றியும், JMC – I பிரதிநிதிகளினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் அமைச்சரிடம் மகஐரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அமைச்சர் பைசருடன், JMC - I  பிரதிநிதிகள் சந்திப்பு

பிரான்சில் அமைச்சர் பைசருடன், JMC - I  பிரதிநிதிகள் சந்திப்பு

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=184994 .

  • கருத்துக்கள உறவுகள்

மீரா மற்றும் தனிக்காட்டு ரஜாவுக்கு என் பணிவான வேண்டுகோள்.   ஒரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே எல்லா நிலையிலும் பேச்சு வார்த்தையை தொடர்வது அடிப்படை அரசியலும் அடிப்படை ராஜதந்திரமுமாகும்.  1996க்கும் 2006 க்கும் இடையில் பலதடவை விடுதலைபுலிகளது வேண்டுகோளின் பெயரிலும் முஸ்லிம் தலைவர்களது கோரிக்கையில் அடிப்படையிலும் பல கந்துறையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்.   என்னை அறிய குறைந்தபட்ச்சம் என் முகநூலையாவது வாசியுங்க. ஐ.டி Jaya Palan 

Edited by poet

இது ஒன்றும் மாபெரும் ஒன்றுகூடல் இல்லை. நானும் நாளைக்கு வேணுமென்றால் தமிழர் சார்பாக டொனால்ட் டறம்புக்கு எதிராக லாக்கூர்னேவில் இப்படியான மாபெரும் ஒன்றுகூடலைச் செய்யலாம்.

அவர்களின் வெற்றி என்னவென்றால் எங்களைப் போன்று மூடிய அரங்கில் எங்களுக்கு மட்டுமே தெரியக் கூடியவாறு பொங்குதமிழ் போன்ற மாபெரும் போராட்டங்களை செய்துவிட்டு எங்களுக்குள்ளேயே தம்பட்டம் அடிக்காமல் பெட்டிக் கடைக்குள் அனுமதியில்லாத அமைதிப் போராட்டத்தைச் செய்துவிட்டுத் தம்பட்டம் அடிப்பதுதான். இங்கு போராட்டம் என்று ஒன்று நடந்தது என்பதே சந்தேகம்தான்.

இலங்கை  தமிழர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளை முஸ்லிம் இணையத் தளங்கள் இன்றும் காவித் திரிகின்றன. இளைய சமுதாயத்திற்கு அவை கற்பிக்கப்படுகின்றன. போர் முடிந்தபின் பிறந்த பிள்ளை கூட தமிழர் இழைத்த கொடுமைகளைச் சொல்லும். நான் சிறு வயது முதல் முஸ்லிம் பிரதேசத்தில் வளர்ந்திருக்கிறேன். அங்கேயே படித்திருக்கிறேன். நண்பர்களும் உண்டு. அவர்களுடன் பேசும்போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் இருப்பது போலவும் தமிழர்களுடன் சகோதர நேயத்துடன் இருப்பது போலவுமே தோன்றும்.

தமிழர்களின் பிரச்சனை என்னவென்றால்  ஒட்டு மொத்தத் தமிழர்களும் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களை அடியோடு மறைத்துவிடுவதும், புத்தி ஜீவிகளாகத் தங்களைக் கருதுபவர்கள் புலிகள் முஸ்லிம்களுக்கு மாபெரும் தவறு இழைத்ததாகக் கருதித் தம்மைக் தாழ்த்திக் கொள்வதும், புலம்பெயர்ந்த வீரத் தமிழர்கள் மொக்குத் தனமாக முஸ்லிம்களைத் துவேசிப்பதுதான்.

நான் தனிப்பட்ட முறையில் உறுதியாக நம்புவது என்னவென்றால் தமிழர்கள் முஸ்லிம்களுடன் சுமுகமான உறவைப் பேண முடியாவிட்டால் பெரும்பான்மை சிங்களவரிடமிருந்து எமது உரிமைகளைத் தக்கவைக்க முடியாது. ஒரு காலத்தில் சிங்களவர் முஸ்லிம்களுடன் முரன்படும்போது சிங்களவர் தற்போது முஸ்லிம்களைத் தமிழர்களுக்கு எதிராகப் பாவிப்பது போல் தமிழர்களை முஸ்லிம்பௌக்கு எதிராகப் பாவிக்கலாம். இதுவும் தமிழர்களை அழிவை நோக்கியே கொண்டு செல்லும்.

3 hours ago, poet said:

மீரா மற்றும் தனிக்காட்டு ரஜாவுக்கு என் பணிவான வேண்டுகோள்.   ஒரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே எல்லா நிலையிலும் பேச்சு வார்த்தையை தொடர்வது அடிப்படை அரசியலும் அடிப்படை ராஜதந்திரமுமாகும்.  1996க்கும் 2006 க்கும் இடையில் பலதடவை விடுதலைபுலிகளது வேண்டுகோளின் பெயரிலும் முஸ்லிம் தலைவர்களது கோரிக்கையில் அடிப்படையிலும் பல கந்துறையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்.   என்னை அறிய குறைந்தபட்ச்சம் என் முகநூலையாவது வாசியுங்க. ஐ.டி Jaya Palan 

நன்றி கவிஞரே. உங்கள் கருத்திற்குப் பச்சை தந்தது தடித்த எழுத்துக்களில் குறிப்பிட்டவற்றிற்கு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணையவன். ஏற்கவும் மறுத்து விமர்சிக்கவுமான மனநிலைதான் நமக்குத் தேவைபடுகிற பொறுப்புள்ள அரசியல் அணுகுமுறை. ஏற்ற விடயங்களை அரசியல் ஆதாயங்களாக்குவதும் எற்காத விடங்களை மோசமடைய அனுமதிக்காமல் விடுவிக்க முனைவதுதான் இன்று எமக்குத் தேவையான அடிப்படை இராசதந்திர்ம். 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

2006ல் பாலசிங்கம் ஓரங்கட்டபட்டு பெருந்தோல்வியையும் இனக்கொலையையும் நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

மீரா மற்றும் தனிக்காட்டு ரஜாவுக்கு என் பணிவான வேண்டுகோள்.   ஒரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே எல்லா நிலையிலும் பேச்சு வார்த்தையை தொடர்வது அடிப்படை அரசியலும் அடிப்படை ராஜதந்திரமுமாகும்.  1996க்கும் 2006 க்கும் இடையில் பலதடவை விடுதலைபுலிகளது வேண்டுகோளின் பெயரிலும் முஸ்லிம் தலைவர்களது கோரிக்கையில் அடிப்படையிலும் பல கந்துறையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்.   என்னை அறிய குறைந்தபட்ச்சம் என் முகநூலையாவது வாசியுங்க. ஐ.டி Jaya Palan 

மன்னிக்கவும் பொயட் விடுதலைப்புலிகள் காலத்தில்  அதாவது நமது  பக்கம் கை ஓங்கியிருந்த நிலையில் முஸ்லீம்கள் நம்மளை சார்ந்து தான் நின்றார்கள் அதற்கு முன்னர்  பல கொலகளங்கள் அவர்களால் அரங்கேற்றப்பட்டது தாங்கள் அறிந்திருப்பீர்கள்  எத்தனையோ கலந்துரையாடல்கள் ஏன் சமாதான காலத்தில் கூட ஹக்கிம் கூட வன்னிக்கு வந்து தலைவரை சந்தித்து கலந்துரயாடல்களை நடத்தினார் மறுப்பதற்கில்லை ஆனால் தற்போதுள்ள நிலமை வேறு அதை இங்குள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் ஊரை சுற்றி பார்த்து விட்டு போகிறவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது நான் உங்கள  சொல்ல வில்லை கிழக்கில் தற்போது உள்ள நிலமை மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் சில முஸ்லீம் நாடுகள் உதவியுடன் கிழக்கை முற்றாக கைப்பற்ற  முஸ்லீம் சக்தி  நினைக்கிறது இதை மறுக்க முடியாது தமிழர்கள் காணிகளை பல லட்சம் கொடுத்து வாங்கி கொள்கிறார்கள் இனி யாழ்ப்பாணமும் அப்படியே நடக்கும்  இதன் திரை மறை வேலைகள் பல அரங்கேறி வருகின்றன 

இன்னும் ஒன்று பொயட் உங்கள் முகநூலில் நான் பல வருட நண்பனாக இருக்கிறேன் வாசிக்கிறேன் என்னை தெரிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும் பொயட் ஐயா மீது எனக்கு தனிப்பட்ட     ரீதியில் எந்த கோப தாபங்களும் இல்லை மன்னிக்கவும் . இன்றுமுஸ்லீம்களால்  இனி வரும் காலங்களில் தமிழர் படப்போகும் துன்பங்களை நீங்களும் பார்க்கலாம் அதற்கு உதாரணம் இன்று ஆரையம்பதில் நடுத்தெருவில் விரட்டிவிடப்பட்ட ஒரு தமிழ் குடும்பம் 35 ஆண்டுகளாக குடியிருந்த வீடு வாசல்களை விட்டு நடு ரோட்டில் இருக்கிறார்கள் 

எம்மினம் நடுத்தெருவில். எம் இனத்தை விற்றுப் பிழைப்பு நடாத்தும் வேடதாரிகளே இனியாவது உங்கள் வேடம் கலையுமா?

 · 
Image may contain: one or more people and outdoor
  • கருத்துக்கள உறவுகள்

படம் மனசை நோகவைக்குது,  இரண்டு பக்கத்தில் பயமும் மாறுபட்ட பிரச்சினைகளும் இருப்பதை நான் மறுக்கவில்லை. காணிவாங்கும் பிரச்சினையில் யாழில் முஸ்லிம்களின் காணிகள் தமிழரால் வாங்க படுகிற பிரச்சினையில் நான் தமிழர்களே முஸ்லிம்களின் காணிகளை வாங்காதீர்கள் எனவும் முஸ்லிம்களே உங்கள் காணிகளை தமிழருக்கு விற்காதீர்கள் எனவும் குரல் எழுப்பினேன். என்னிடம் எப்பவும் இரண்டு நாக்கில்லை. கிழக்கிலும் கானி வாங்கும் முஸ்லிம்களிடமும் காணி விற்க்கும் தமிழரிடமும் அட்தையே சொல்ல எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.  ஆனால் பல பிரச்சினைகளை  பேசித் தீர்க்கிற வழி முறைகளை அனுபவம் ஆற்றலை இருசாராரும் இதுவரை கட்டி எழுப்பவில்லை. இதுவும் கவலை தருகிறது

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

ஏற்றுக்கொள்கிறேன் :104_point_left:

சிங்களவனுக்குகீழ தமிழன் வாழ விரும்பல தமிழன் கீழ் முஸ்லீம் வாழ விரும்பல   எல்லாரும்  நம்மை இவர்கள் நசுக்கி விடுவார்கள் என்ற நிலமை மாய தோற்றம்  இது மூவினத்தும் பொருந்தும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.