Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் 15 சடலங்கள் தோண்டியெடுப்பு

Featured Replies

கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் 15 சடலங்கள் தோண்டியெடுப்பு

 

மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

mannar-rc.jpg

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்தில் இறந்த மக்களினதும், கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரின் சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டு வந்தன.

rc-mannar1.jpg

கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் பொது மயானத்திற்கு அருகில் உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

rc-mannar2.jpg

குறித்த மயானத்தில் கடந்த சில வருடங்களாக உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

rc-mannar3.jpg

இந்த நிலையில் மன்னார் பொது மயானத்தில் கடந்த பல வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் அடக்கம் செய்யும் மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மன்னார் ஆயர் இல்லம் மேற்கொண்டது.

rc-mannar4.jpg

குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக மன்னார் ஆயர் இல்லம் சட்டத்தரணி வில்பட் அர்யூன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

rc-mannar5.jpg

குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய மன்னார் நீதிவான், மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்களை தோண்டி எடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கினார்.

rc-mannar6.jpg

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த 15  சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டன.

rc-mannar7.jpg

இதன் போது பொலிஸார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நீதிமன்ற பணியாளர்கள், மன்னார் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

rc-mannar8.jpg

இதன் போது குறித்த 15 சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு அருகில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக அமைக்கப்பட்ட மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27860

  • கருத்துக்கள உறவுகள்

தோண்டுங்க தோண்டுங்க, சாதியும் மதமும் தலைக்கேறினால் இதில்லை இன்னும் தோண்டலாம். விளங்கிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

“மதம்” என்கின்ற மதம் பிடித்த மந்திக் கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

சமரசம் உலாவும் இடத்திற்கு வேட்டுவைத்தது அருட்தந்தையர்கள் அல்ல. அருவருப்பான தந்தையர்.  :(:shocked: 

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போதும் இறக்கும்போதும்தான் மனிதன் மனிதனாக இருக்கின்றான் ....... இதன் இடையே வரும் சாதி மதத்தை ஏன் தூக்கி கொண்டாடுகின்றான் இந்த மனிதன் .........? பிறந்த குழந்தைக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டால் அவன் கிறிஸ்தவன் சுண்ணத்து செய்தால் அதன் பின் அவன் இஸ்லாமியன் என்று ஆகும் நிலையில் இதுவெல்லாம் தேவையா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

“மதம்” என்கின்ற மதம் பிடித்த மந்திக் கூட்டம்

மன்னாரில் திருக்கேதிஸ் வரம் கோயிலுக்கு ஒரு பேனர் கட்ட விடாத கூட்டம் இவர்கள் ஆனால் சொல்லி கொள்வது  ................................... ஊருக்கு உபதேசம் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலை தோண்டியெடுத்த உடலுக்கு மீண்டும் உயிரையா கொடுப்பாங்க திரும்பவும் னொண்டுபோய் இன்னொரு இடத்திலை தோண்டி புதைக்கத்தானேபோறாங்க. அதுகளை அமைதியா புதைச்ச இடத்திலேயே விட்டிடணும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rc-mannar2.jpg

கிறிஸ்தவம் கொஞ்சம் நாகரீகமான மதம் என நினைத்தேன். புதைகுழியில் கூட தராதரம் பார்க்கின்றார்கள். :(

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

rc-mannar2.jpg

கிறிஸ்தவம் கொஞ்சம் நாகரீகமான மதம் என நினைத்தேன். புதைகுழியில் கூட தராதரம் பார்க்கின்றார்கள். :(

 

வெளியில் நாகரீகமாக நம்ம அய்யர் வாளுகள் போல் நடித்து கொண்டு உள்ளுக்குள் பல மிருகம்கள் தூங்கும் இடம் சிலுவை யுத்தம்கள் மனித குலம் மிருகமாக மாறிய நேரம்கள் .  

மிக மிக மோசமான மத, சாதி வெறியர்களின் கைகளில் மன்னார் மாவட்ட கிறிஸ்தவம் சிக்கியுள்ளது மிகவும் கவலையான நிலைமை. இவர்களில் கூல் கும்பலினது, சுமந்திரன் கும்பலினது அடாவடித்தனங்களின் சாயல்கள் வெளிப்படுகிறது. 

On 12/5/2017 at 10:48 AM, நவீனன் said:

இதன் போது குறித்த 15 சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு அருகில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக அமைக்கப்பட்ட மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதனையில் சொல்லும் "உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி" என்பதற்கு நடைமுறையில் இது தான் உண்மையான அர்த்தம் என்று இந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் கிறிஸ்தவ மக்களுக்கு தங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

கிறிஸ்தவ மதத்தின் கேவலமான மூடநம்பிக்கைகளில் இதுவும் ஓன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.