Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய் பிடிகாரர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொறுத்த வரை கிராமப்புறங்களில் நாய் இல்லாத வீடே கிடையாது என்றெ சொல்லலாம்.நகர் புறங்களில் வளவுகளுடன் வீடுள்ளவர்களில் கணிசமானவர்களின் வீட்டிலும் நாய் வளர்பை பார்க்கலாம்.மாநகர் என்று பார்த்தால் அங்கு நாய்கள் வளர்க்கக் கூடிய சூழ்நிலைகள் இல்லாததால் ஓரிரு வீடுகளைத் தவிர மற்றைய வீடுகளில் நாய் வளர்க்க மாட்டார்கள்.

ஒரு சில வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வெளிநாடுகளில் பாணியில் வளர்ப்பார்கள்.எமது ஆட்களுக்கு ஒன்றுக்கு இரண்டுக்கு போறதை கழுவுறது துடைக்கிறதென்றால் மூஞ்சையை சுழிப்பார்கள்.

வெளிநாடுகளில் பலரும் நாய்கள் வளர்க்கிறார்கள்.அந்த அந்த நேரத்திற்கு வெளியே கொண்டு போய் ஒன்றுக்கு இரண்டுக்கு விடுவார்கள்.ஆட்கள் நடமாட்டமாக இருந்தால் சுடச்சுட எடுத்துக் கொண்டு போவார்கள்.எவருடைய நடமாட்டமும் இல்லை என்றால் அங்குமிங்கும் பார்த்துவிட்டு கொற கொறவென இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.அத்தோடு தடுப்பூசிகள் போட வேண்டும்.மயிர் வெட்ட வேண்டும் ஏகப்பட்ட செலவு.

வெளிநாட்டில் மிருக வைத்தியருக்கும் நல்ல உழைப்பும் மரியாதையும்.இதுவே ஊரில் என்றால் ஏழனமாகவே பார்ப்பார்கள்.அலுவலகத்திலும் இலையான் கலைச்சுக் கொண்டு தான் இருப்பார்.

நான் யாழ் இந்துவில் சேர்ந்த புதிதில் இடைவேளையின் போது மைதானத்தில் தான் பொழுதைக் கழிப்பது.

ஒரு நாள் இரண்டு சில்லுள்ள தள்ளுவண்டியை இருவர் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.அந்த வண்டியினுள் 5 ,6 நாய்கள்அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.ஒருவர் வண்டியை தள்ளிக் கொண்டு வர மற்றவர் ஒரு கையை வண்டியிலும் மற்ற கையில் ஒரு அளவான தடியின் நுனியில் வயரினால் செய்த உருவுதடம் ஒன்றும் இருந்தது.

என்ன தான் செய்கிறார்கள் என்று பின் தொடர்ந்து பார்த்தா கட்டாகாலி நாய்களை பிடித்து வண்டியினுள் போட்டு கொண்டு போகிறார்கள்.

இப்படி பிடிபடும் நாய்களை என்ன செய்கிறார்கள் என்று பலரையும் விசாரித்தால் எவருக்கும் அதற்கு பின்னால் என்ன தான் நடக்கிறதென்பது தெரியவில்லை.எனக்கோ ஏதாவதொரு தெரியவில்லை என்றால் அதை அறியுமட்டும் அதே சிந்தனை தான்.

கொஞ்சகாலம் கடந்த பின் மீண்டும் அதே மாதிரி வண்டியில் கட்டாகாலி நாய்களை பிடித்து ஏற்றிக் கொண்டு போகிறார்கள்.அந்த வண்டி பின்னாடியே எனது நண்பனும் நானுமாக பின் தொடர்கின்றோம்.கொஞ்ச தூரம் போக ஒருவர் ஓடி வந்து அவர்களுடன் சண்டை பிடிக்கிற மாதிரி கதைத்து பின்னர் சிறிது பணம் கொடுத்து அவரின் நாயை மீட்டு செல்கிறார்.

அந்த நாயைக் கொண்டு வந்தவரிடம் விபரம் கேட்கலாம் என்று

அண்ணை அண்ணை கொஞ்சம் நில்லுங்கோ!இந்த நாய்களை ஏன் பிடிக்கிறார்கள?எங்கே கொண்டு போகிறார்கள்?

அது தம்பியவை இவங்கள் மாநகரசபையால் வாறாங்கள்.கட்டாகாலி நாய்களை பிடித்து கொண்டு போறாங்கள்.

சரி அண்ணை எங்கை கொண்டு போறாங்கள்?

இப்பிடியே கொண்டு போய் பண்ணை கடலினுள் இறக்கிவிடுவாங்கள் அதுகள் வாலை வெட்டிக் கொண்டு போய் மாநகரசபையில் கொடுத்தால் வாலுக்கு ஒரு ருபா கொடுப்பாங்களாம் இது மட்டும் தான் எனக்கு தெரியும்.

அந்த சிறு வயதிலேயே பிடிபட்ட நாய்களுக்காக மனம் ரொம்பவே அழுதது.இப்படியான சம்பவம் நடக்கிறதை மாநகரசபையில் வசிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்புகளே குறைவு.

உண்மையில் அந்த அண்ணன் சொன்ன மாதிரி நாய்களைக் கொன்று வாலை கொடுத்து பணம் பெறுகிறார்களா? அல்லது இந்த நாய்களுக்கு என்ன நடக்கின்றன என்று இன்று வரை சரியான தகவல்கள் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வாலை கொடுத்து(காட்டி) பணம் பெறுவதாகவே நானும் அறிந்துள்ளேன். நாய்களை கொன்று கடலில் வீசி  விடுவார்களாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

வாலை கொடுத்து(காட்டி) பணம் பெறுவதாகவே நானும் அறிந்துள்ளேன். நாய்களை கொன்று கடலில் வீசி  விடுவார்களாம். 

1966,67 களில் வாலுக்கு ஒரே ஒரு ருபா தான் என்று கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முறையாக   வளர்த்தால் அந்த நன்றி உள்ள பிராணி  வீட்டுக்கும் காவல் எசமானுக்கும் தோழன்நல்ல    காவல் காரன் வீட்டுக்கு வருபவர்களை" விசாரித்து" தான்  உள்ளே அனுப்பும் .  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையை பொறுத்த வரை கிராமப்புறங்களில் நாய் இல்லாத வீடே கிடையாது என்றெ சொல்லலாம்.

என்ரை வீட்டிலை இரண்டு நாய்கள்.....நாய் எண்டு சொல்லுறதை விட வீட்டுக்கு காவலன் எண்டே சொல்லலாம்.

பெயர் வீமன்,அர்ச்சுனன்.

சாப்பாடு புழிஞ்சதேங்காய்ப்பூவும்  பழைய சோறும் தான்....

எசமானுக்கு கட்டுப்பட்டதுகள்.  நன்றியான பிராணிகள்.

ஈழப்பிரியன்! புதியகோணத்தில் ஒரு சுயசரிதை. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கடும் வெக்கை நிலவும் மதிய நேரம்களில் குட்டித்தூக்கம் போடும் நேரம் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பழைய உலக்கையில் சாரைப்பாம்பு ஏறி தான் வளர்ந்து விட்டனோ என்று நீள் வாக்கில் அளந்து பார்த்து கொண்டு இருக்கும் அது மட்டும்தான் அதன் எல்லை அதன் பின் ஒரடி வீட்டுப்பக்கம் வந்தால் சூரன் போர் தொடங்கிடும் கருப்பனும்,வீமனும் போடும் சத்தத்தில் பக்கத்து வீட்டு கிழவி கத்தும் நாய் இரண்டுக்கும் கூட சாப்பாடு போடுறம் என்று . நாய்கள் கள்வர்களுக்கு மட்டும் அல்ல விஷ ஐந்துகளுக்கும் எமன் .

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நாய் பிடி வண்டி  Bildergebnis für நாய் பிடி வண்டி  

ஆகா.....  ஈழப்பிரியனின் நினைவு மீட்டல்,  நாய் பிடி வண்டிலைப்  பற்றி  வந்தது மகிழ்ச்சி. :)
யாழ்ப்பாணத்தில்... அப்போ  நாய் பிடி வண்டில் இரண்டு மீற்றர் நீளமும், ஒன்றரை மீற்றர் அகலமும் இருக்கும்.
அதன் சுற்றுப் புறம் படத்தில் உள்ளபடி, நீளக்  கம்பிகளால் அடைக்கப் பட்டிருக்கும்.
அதன் சக்கரம், பழைய காரின்  சக்கரத்தால்... செய்யப் பட்டிருக்கும்.

நாய் பிடிப்பவர்கள் மாநகர சபை ஊழியர்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைத்தாலும்,
ஒரு நாயை பிடித்தால்.... ஒரு ரூபாய் என்பது, விசேட ஊக்குவிப்பு ஊதியம்.
ஒரு ரூபாய் குறைவான காசு என்று நினைக்காதீர்கள்.
அந்தக் காலத்தில்... ஒரு ரூபாய்க்கு, ஒன்றரை போத்தில் கள்ளு  வாங்கலாம். :D:

யாழ்ப்பாணத்தில்... நாய் பிடிகாரர் ஒரு பகுதிக்கு  வந்தால்,
கைத்தொலைபேசி இல்லாத காலத்தில்....
"நாய்பிடி காரன் வந்திட்டான்.... உங்கடை நாயை கட்டி வையுங்கோ..."  என்ற செய்தியை,
வேலிக்குள்ளாலை சொல்ல....   அது, அரை மணித்தியாலத்தில
நல்லூரில் இருந்து, கோண்டாவில் மட்டும் போய் சேர்ந்திடும். :grin:

அதுக்குப் பிறகு... அவனுக்கு அம்பிடுறது எல்லாம், குட்டை  பிடித்த  நாய்கள் தான்.  :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

முறையாக   வளர்த்தால் அந்த நன்றி உள்ள பிராணி  வீட்டுக்கும் காவல் எசமானுக்கும் தோழன்நல்ல    காவல் காரன் வீட்டுக்கு வருபவர்களை" விசாரித்து" தான்  உள்ளே அனுப்பும் .  tw_blush:

ஊரில் கிராமங்களில் நாய் இல்லாத வீடே இருக்காது.இன்னும் கொஞ்ச காலத்தில் ஊர் நாய்கள் எல்லாம் அழிந்துவிடும்.

எல்லோருமே நாய்க்கு குடும்பகட்டுப்பாடு செய்கிறார்கள்.இது ஒரு சோகமான செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

என்ரை வீட்டிலை இரண்டு நாய்கள்.....நாய் எண்டு சொல்லுறதை விட வீட்டுக்கு காவலன் எண்டே சொல்லலாம்.

பெயர் வீமன்,அர்ச்சுனன்.

சாப்பாடு புழிஞ்சதேங்காய்ப்பூவும்  பழைய சோறும் தான்....

எசமானுக்கு கட்டுப்பட்டதுகள்.  நன்றியான பிராணிகள்.

ஈழப்பிரியன்! புதியகோணத்தில் ஒரு சுயசரிதை. நன்றி

அனேகமான வீடுகளில் இரண்டு நாய் தான் வளர்ப்பார்கள்.சில வேளைகளில் அதுகள் விளையாடும் போது பார்த்தால் உண்மையிலேயே கடிபடுவது போலவே இருக்கும்.

நீங்கள் சொன்னது போல் ஆட்டுக்கு மாட்டுக்கு நாய்க்கு என்று புழிந்த தேங்காய்ப் பூ புறித்து வைக்கப்பட்டிருக்கும்.

மீனில்லாத முள்ளு இறைச்சி இல்லாத எலும்பு மிஞ்சுற கொஞ்ச சோறு பிசைந்து வைக்க அவருக்கென ஒரு கோப்பை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

கடும் வெக்கை நிலவும் மதிய நேரம்களில் குட்டித்தூக்கம் போடும் நேரம் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பழைய உலக்கையில் சாரைப்பாம்பு ஏறி தான் வளர்ந்து விட்டனோ என்று நீள் வாக்கில் அளந்து பார்த்து கொண்டு இருக்கும் அது மட்டும்தான் அதன் எல்லை அதன் பின் ஒரடி வீட்டுப்பக்கம் வந்தால் சூரன் போர் தொடங்கிடும் கருப்பனும்,வீமனும் போடும் சத்தத்தில் பக்கத்து வீட்டு கிழவி கத்தும் நாய் இரண்டுக்கும் கூட சாப்பாடு போடுறம் என்று . நாய்கள் கள்வர்களுக்கு மட்டும் அல்ல விஷ ஐந்துகளுக்கும் எமன் .

பெருமாள் நீங்கள் பாம்பை பற்றி எழுதும் போது தான் எனக்கு நடந்தது ஞாபகம் வருகிறது!

8ம் வகுப்பு படிக்கும் போது என்று எண்ணுகிறேன் எமது நாய் பெரிய ஒரு சாரைப் பாம்பை கடித்து ஏறத்தாழ அரைவாசியாக்கி விட்டது.பாம்பு புற்றை நோக்கி நகர அதன் வாலில் பிடித்து வெளியே இழுத்துவிட்டு கொண்டிருந்தேன்.கடைசியில் ஒரு மாதிரியாக புற்றுக்குள் போய்விட்டது.

அன்று இரவு படிப்பு முடிந்து சாப்பிட குசினிக்கு போகும் வழியில் எனக்கு பாம்பு கடித்துவிட்டது.அந்த காலங்களில் வீட்டில் மின்சாரம் பொருத்தப்படவில்லை.அதனால் ஏதோ கடித்து போட்டுது என்று குளறி அழுதேன்.உடனே மூன்று இடத்தில் கட்டு போட்டுவிட்டு கொட்டடிடியில் இருந்த விஷகடி வைத்தியரிடம் கொண்டு போய் அடுத்த நாள் விடியும் வரை இருந்தேன்.அவர் தான் இது பாம்பு கடி என்று சொன்னார்.

சென்ற வருடம் இலங்கைக்குச் சென்றபோது, யாழ்ப்பாணத்தில் சில ஒழுங்கைகளில் நாய்த்தொல்லை தாங்க முடியவில்லை. மாலை நேரங்களில் போக முடியாது. சைக்கிளில் சென்றால் அந்தத் தெருக்களில் வேகமாகச் சைக்கிளை மிதிப்பதுண்டு. நாய் துரத்தினால் கால்கள் இரண்டையும் மேலே தூக்கினாலும் சைக்கிள் அடுத்த சந்தி வரைக்கும் தானாக உருளும் என்ற நம்பிக்கை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für நாய் பிடி வண்டி  Bildergebnis für நாய் பிடி வண்டி  

ஆகா.....  ஈழப்பிரியனின் நினைவு மீட்டல்,  நாய் பிடி வண்டிலைப்  பற்றி  வந்தது மகிழ்ச்சி. :)
யாழ்ப்பாணத்தில்... அப்போ  நாய் பிடி வண்டில் இரண்டு மீற்றர் நீளமும், ஒன்றரை மீற்றர் அகலமும் இருக்கும்.
அதன் சுற்றுப் புறம் படத்தில் உள்ளபடி, நீளக்  கம்பிகளால் அடைக்கப் பட்டிருக்கும்.
அதன் சக்கரம், பழைய காரின்  சக்கரத்தால்... செய்யப் பட்டிருக்கும்.

நாய் பிடிப்பவர்கள் மாநகர சபை ஊழியர்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைத்தாலும்,
ஒரு நாயை பிடித்தால்.... ஒரு ரூபாய் என்பது, விசேட ஊக்குவிப்பு ஊதியம்.
ஒரு ரூபாய் குறைவான காசு என்று நினைக்காதீர்கள்.
அந்தக் காலத்தில்... ஒரு ரூபாய்க்கு, ஒன்றரை போத்தில் கள்ளு  வாங்கலாம். :D:

யாழ்ப்பாணத்தில்... நாய் பிடிகாரர் ஒரு பகுதிக்கு  வந்தால்,
கைத்தொலைபேசி இல்லாத காலத்தில்....
"நாய்பிடி காரன் வந்திட்டான்.... உங்கடை நாயை கட்டி வையுங்கோ..."  என்ற செய்தியை,
வேலிக்குள்ளாலை சொல்ல....   அது, அரை மணித்தியாலத்தில
நல்லூரில் இருந்து, கோண்டாவில் மட்டும் போய் சேர்ந்திடும். :grin:

அதுக்குப் பிறகு... அவனுக்கு அம்பிடுறது எல்லாம், குட்டை  பிடித்த  நாய்கள் தான்.  :unsure:

சிறி நாய்பிடி வண்டில் படம் போட்டு கலக்கிவிட்டீர்கள்.

நன்றி நன்றி.

நானும் இந்த நாய்பிடிகாரரைக் கண்டால் முடிந்தளவு நாய்களை துரத்திவிடுவேன்.அடைத்து வைத்திருக்கும் நாய்களையும் திறந்துவிடவே விருப்பம்.நாய் பிடிக்கிற மாதிரி உன்னையும் பிடித்து கொண்டு போடுவாங்கள் என்று சினேகிதர் பயப்படுத்துவார்கள்.அத்தோடு நின்றுவிடுவது.

8 minutes ago, இணையவன் said:

சென்ற வருடம் இலங்கைக்குச் சென்றபோது, யாழ்ப்பாணத்தில் சில ஒழுங்கைகளில் நாய்த்தொல்லை தாங்க முடியவில்லை. மாலை நேரங்களில் போக முடியாது. சைக்கிளில் சென்றால் அந்தத் தெருக்களில் வேகமாகச் சைக்கிளை மிதிப்பதுண்டு. நாய் துரத்தினால் கால்கள் இரண்டையும் மேலே தூக்கினாலும் சைக்கிள் அடுத்த சந்தி வரைக்கும் தானாக உருளும் என்ற நம்பிக்கை. 

இணையவன் இந்த நாய்கள் துரத்துவதை நன்கு கவனித்து பார்த்தால் எல்லோரையும் துரத்துவது கிடையாது.ஏதும் வித்தியாசம் தெரிந்தால்த் தான் துரத்தும் என எண்ணுகிறேன்.

சில பேர் நாய் துரத்த போய் சைக்கிளுடன் வேலிவழிய விழுந்தவர்களும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய் பிடி நல்லாத்தான் இருக்கு 

அந்த காலம்  நாய்க்கடிக்கான மருந்து செலவும் ஊசி செலவும் அதிகம் கட்டாக்காலிகளுக்கு  நோய் வருவது அதிகம் விசர் இதனால் மக்கள் பாதிப்படைவார்கள் என்பதற்க்காக வண்டிகளில் வருவது வழமை கிழக்கில் நஞ்சு கலந்த இறைச்சியை எறிவார்கள் கவ்வியவர்கள் காலி பிறகு அள்ளி சென்றுவிடுவார்கள்  தற்போது வலைகள் வீசுகிறார்கள் ஆனால் அதற்க்காக காசு கொடுத்ததாக நான் கேள்விப்படவில்லை 

வீட்டு நாய் தெருநாய் ஆகி தெரு நாய் சொறி நாய் ஆகி சொறி நாய் நாய் விசர் நாய் ஆவது வழமை இதை தடுப்பதற்கும் மக்களை விசர் நாய் கடியில் இருந்து காப்பாற்றவும் எடுக்கும் நடவடிக்கை  தான் அது 

எங்கள் வீட்டு நாயை அதிரடிப்படை சுட்டுக்கொன்றது அவனை வளவுக்குள் விடல அதனால் சுட்டுக்கொன்றான் 

2 மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பத்தில் ஒரு சிறுவனுக்குக் கடற்கரையில் வைத்து ஒரு நாய் கடித்து விட்டது. உடனடியாகச் சிகிச்சை செய்துள்ளனர். ஆனாலும் பிரான்ஸ் திரும்பியதும் சிறுவனுக்கு விசர் பிடித்து இறந்துவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசர் நாய் உள்ள முக்கிய நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, கவனமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் வீட்டு நாயை அதிரடிப்படை சுட்டுக்கொன்றது அவனை வளவுக்குள் விடல அதனால் சுட்டுக்கொன்றான் 

நல்ல நாய் என்றால் வாயை சுற்றி கறுப்பாக இருக்கும்.ரொம்பவும் கடியனாக இருக்கும்.

வீட்டில் வளர்த்த நாய் இறந்தால் ஏதோ எமது குடும்ப இழப்பாகவே இருக்கும்.

தனி பிடிபட்ட நாய்களை என்ன செய்கிறார்கள் என்று இது வரை எவரும் சரியான தகவல் சொல்லவில்லை.

கடலில் தள்ளிவிட்டால் சரியா?கரை ஒதுங்கும் போது முறைப்பாடு செய்வார்களே?

3 minutes ago, இணையவன் said:

2 மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பத்தில் ஒரு சிறுவனுக்குக் கடற்கரையில் வைத்து ஒரு நாய் கடித்து விட்டது. உடனடியாகச் சிகிச்சை செய்துள்ளனர். ஆனாலும் பிரான்ஸ் திரும்பியதும் சிறுவனுக்கு விசர் பிடித்து இறந்துவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசர் நாய் உள்ள முக்கிய நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, கவனமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை தான் இணையவன்

மாநகர வசதிகள் கிராமங்களில் இல்லை.

உண்ணி தெள்ளு குட்டை என்று கடைசியில் விசர் பிடித்து யாரையும் கடிக்கும் போது தான் கண் விழிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்ல நாய் என்றால் வாயை சுற்றி கறுப்பாக இருக்கும்.ரொம்பவும் கடியனாக இருக்கும்.

வீட்டில் வளர்த்த நாய் இறந்தால் ஏதோ எமது குடும்ப இழப்பாகவே இருக்கும்.

தனி பிடிபட்ட நாய்களை என்ன செய்கிறார்கள் என்று இது வரை எவரும் சரியான தகவல் சொல்லவில்லை.

கடலில் தள்ளிவிட்டால் சரியா?கரை ஒதுங்கும் போது முறைப்பாடு செய்வார்களே?

முதலில் நஞ்சு கலந்த இறைச்சி தற்போது ஊசி போட்டு கொன்று விடுவார்கள் ( வருடங்கள் அதிகமானதை )  சிலதை ஊசி போட்ட பின்பு விட்டு விடுறார்கள். கொல்வதில்லை 

8 minutes ago, இணையவன் said:

2 மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பத்தில் ஒரு சிறுவனுக்குக் கடற்கரையில் வைத்து ஒரு நாய் கடித்து விட்டது. உடனடியாகச் சிகிச்சை செய்துள்ளனர். ஆனாலும் பிரான்ஸ் திரும்பியதும் சிறுவனுக்கு விசர் பிடித்து இறந்துவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசர் நாய் உள்ள முக்கிய நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, கவனமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ம்ம் தெருநாய்கள் அதிகம் இலங்கையில்  தற்போது காயத்தை சுற்றி சுற்றி கணகெடுக்க முடியாத ஊசி போடுறார்கள் கிட்ட தட்ட 50 ஊசிகள்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் நீங்கள் பாம்பை பற்றி எழுதும் போது தான் எனக்கு நடந்தது ஞாபகம் வருகிறது!

8ம் வகுப்பு படிக்கும் போது என்று எண்ணுகிறேன் எமது நாய் பெரிய ஒரு சாரைப் பாம்பை கடித்து ஏறத்தாழ அரைவாசியாக்கி விட்டது.பாம்பு புற்றை நோக்கி நகர அதன் வாலில் பிடித்து வெளியே இழுத்துவிட்டு கொண்டிருந்தேன்.கடைசியில் ஒரு மாதிரியாக புற்றுக்குள் போய்விட்டது.

அன்று இரவு படிப்பு முடிந்து சாப்பிட குசினிக்கு போகும் வழியில் எனக்கு பாம்பு கடித்துவிட்டது.அந்த காலங்களில் வீட்டில் மின்சாரம் பொருத்தப்படவில்லை.அதனால் ஏதோ கடித்து போட்டுது என்று குளறி அழுதேன்.உடனே மூன்று இடத்தில் கட்டு போட்டுவிட்டு கொட்டடிடியில் இருந்த விஷகடி வைத்தியரிடம் கொண்டு போய் அடுத்த நாள் விடியும் வரை இருந்தேன்.அவர் தான் இது பாம்பு கடி என்று சொன்னார்.

அந்த இரவிலை உங்கடை பெரியவர் (உங்கள் நாய் ) அதான் எங்கை போனவர் ? 

விஷ ஐந்துகளில் இருந்து வரும் வாடை நாய்களுக்கு எச்சரிக்கை பண்ணும் என்பார்கள் . வீட்டுக்குள் களவு எடுக்க வரும் பூனையை கூட பூவரச மரத்தில் ஏத்தி விட்டு காகங்களிடம் கொத்து வேண்ட வைக்கும்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

முதலில் நஞ்சு கலந்த இறைச்சி தற்போது ஊசி போட்டு கொன்று விடுவார்கள் ( வருடங்கள் அதிகமானதை )  சிலதை ஊசி போட்ட பின்பு விட்டு விடுறார்கள். கொல்வதில்லை 

இல்லையே இங்கே கருத்தெழுதிய நுணா சிறி நான் அறிந்த வரை நாயைக் கொன்று வாலைக் கொடுத்து ஒவ்வொரு ருபாவாக வாங்குகிறார்கள்.

மிகுதி பகுதியை என்ன செய்கிறார்கள்?இது எனது நீண்ட கால கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

கடலில் தள்ளிவிட்டால் சரியா?கரை ஒதுங்கும் போது முறைப்பாடு செய்வார்களே?

1 minute ago, ஈழப்பிரியன் said:

இல்லையே இங்கே கருத்தெழுதிய நுணா சிறி நான் அறிந்த வரை நாயைக் கொன்று வாலைக் கொடுத்து ஒவ்வொரு ருபாவாக வாங்குகிறார்கள்.

மிகுதி பகுதியை என்ன செய்கிறார்கள்?இது எனது நீண்ட கால கேள்வி.

கொத்துரொட்டிக்கடைப்பக்கம் அனுப்பியிருக்கமாட்டார்கள்?????? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே இங்கே கருத்தெழுதிய நுணா சிறி நான் அறிந்த வரை நாயைக் கொன்று வாலைக் கொடுத்து ஒவ்வொரு ருபாவாக வாங்குகிறார்கள்.

மிகுதி பகுதியை என்ன செய்கிறார்கள்?இது எனது நீண்ட கால கேள்வி.

அது என்னவோ தெரியாது கிழக்கில் ஒரு பெரிய குழி வெட்டி புதைத்து விடுவார்கள் மாநகரசபையுடன் வருபவர்கள் பொது சுகாதார பரிசோதகர் (PHI) அவர்கள் முன்னிலையில் ஆனால் வடக்கில் இது பல வருடங்களுக்கு முன்பு நடந்த்ருக்கலாம் என நினைக்கிறன் அண்ண

11 minutes ago, குமாரசாமி said:

கொத்துரொட்டிக்கடைப்பக்கம் அனுப்பியிருக்கமாட்டார்கள்?????? :grin:

உவர சீனா பக்கம் நாய் சந்தை அனுப்பி எடுத்தால் தெரியும் வரைட்றி வரைட்றி நாய்கறியை வைத்திருபார்கள் தெரியாதோ என்னவோ  பாருங்கோவன் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அந்த இரவிலை உங்கடை பெரியவர் (உங்கள் நாய் ) அதான் எங்கை போனவர் ? 

விஷ ஐந்துகளில் இருந்து வரும் வாடை நாய்களுக்கு எச்சரிக்கை பண்ணும் என்பார்கள் . வீட்டுக்குள் களவு எடுக்க வரும் பூனையை கூட பூவரச மரத்தில் ஏத்தி விட்டு காகங்களிடம் கொத்து வேண்ட வைக்கும்கள் .

பெருமாள் ஊரில் நாய்களை வீட்டுக்குள் விடுவதில்லையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அது என்னவோ தெரியாது கிழக்கில் ஒரு பெரிய குழி வெட்டி புதைத்து விடுவார்கள் மாநகரசபையுடன் வருபவர்கள் பொது சுகாதார பரிசோதகர் (PHI) அவர்கள் முன்னிலையில் ஆனால் வடக்கில் இது பல வருடங்களுக்கு முன்பு நடந்த்ருக்கலாம் என நினைக்கிறன் அண்ண

உவர சீனா பக்கம் நாய் சந்தைப்பகம் அனுப்பி எடுத்தால் தெரியும் வரைட்றி வரைட்றி நாய்கறியை வைத்திருபார்கள் தெரியாதோ என்னவோ சிறியர் படம் இணைப்பார் பாருங்கோவன் 

Hundefleisch-Festival in China

  • கருத்துக்கள உறவுகள்

படம்பார்க்க அருவருப்பாக இருக்கும் என்பதால் நான் இணைத்த படத்தை எடுத்து விடுகிறேன்  கு.சாமி அண்ண

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் ஊரில் நாய்களை வீட்டுக்குள் விடுவதில்லையே.

பொதுவாகவே நாயின் குரைப்பு சத்தம் கேட்டு அரவம்கள் வீடுகளுக்குள் இறங்குவதில்லை வீட்டின் பகுதி எங்கயாவது மரத்தில் முட்டிக்கொண்டு நிக்க விடுவதில்லை காரணம் கொடுக்கான் பூரான் அந்த வழியே வீட்டுக்குள் இறங்குவதுண்டு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கொத்துரொட்டிக்கடைப்பக்கம் அனுப்பியிருக்கமாட்டார்கள்?????? :grin:

தொங்குமான் இறைச்சி கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் நாய் இறைச்சி என்று கேள்விப்படவில்லை.

ஒரே ஒரு முறை காங்கேசந்துறை வந்த பிலிப்பைன்ஸ் கப்பல்காரர் அங்கிருந்த கட்டாக்காலி நாய்களை பிடித்து சாப்பிடுகிறார்கள் என்று பலரும் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.