Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு!

Featured Replies

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு!

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின்  பிரியாவிடை நிகழ்வு!

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு இன்று(17) மதியம் 12 மணியளவில் பிள்ளையார் விடுதியில் நடைபெற்றது.

கடந்த நான்கு வருடங்களாக யாழ் மண்ணிலிருந்து சேவையாற்றிய அவர் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் சேவைக்காலத்தினை நிறைவு செய்து தாய் நாடு திரும்ப காத்திருக்கும் நிலையில் அவர்களது நண்பர்களினால் இந்த விருந்து உபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின்  பிரியாவிடை நிகழ்வு!

கலாநிதி சிதம்பர மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ரத்தினம் விக்னேஸ்வரன், பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கம், கலாநிதி சந்திரபண்டார, பேராசிரியர் கா.குகபாலன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், சங்கானை கோட்டக்கல்வி பணிப்பாளர் ராசலிங்கம் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின்  பிரியாவிடை நிகழ்வு!

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின்  பிரியாவிடை நிகழ்வு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/R--Natarajan-s-farewell-event

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நவீனன் said:

கடந்த நான்கு வருடங்களாக யாழ் மண்ணிலிருந்து சேவையாற்றிய அவர் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் சேவைக்காலத்தினை நிறைவு செய்து தாய் நாடு திரும்ப காத்திருக்கும் நிலையில் அவர்களது நண்பர்களினால் இந்த விருந்து உபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

என்ன சேவை செய்தார் என்று யாராவது அறிய தருவீர்களா ..? பிளீஸ் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்ன சேவை செய்தார் என்று யாராவது அறிய தருவீர்களா ..? பிளீஸ் :rolleyes:

நாட்டாமை செய்தவர்...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

வந்த விடயம் முடிந்துவிட்டதா அல்லது இன்னும் ஆற்றல் வேண்டும் என்று புதியவர்கள் வருகிறார்களா?

அது ஒரு தொடர் கதை

  • தொடங்கியவர்

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான சிறந்த பாலம் நடராஜன் - ரெஜினோல்ட் குரே

அநேகமாக யாழ்ப்பாணத்தில்இந்தியாவின் கால்கள் ஆழ வேரூன்ற பண்ணியதில் இவர் முக்கியமானவர் இதன் விளைவுகள் எதிர்காலத்தில் எமது இனத்தின் தலையில் விடியும் ,

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2018 at 7:30 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்ன சேவை செய்தார் என்று யாராவது அறிய தருவீர்களா ..? பிளீஸ் :rolleyes:

On 1/18/2018 at 1:41 AM, அபராஜிதன் said:

அநேகமாக யாழ்ப்பாணத்தில்இந்தியாவின் கால்கள் ஆழ வேரூன்ற பண்ணியதில் இவர் முக்கியமானவர் இதன் விளைவுகள் எதிர்காலத்தில் எமது இனத்தின் தலையில் விடியும் ,

அவர் இந்தியாவின் பிரதிநிதி. அவரது சேவை இந்தியாவின் நலன்களை பேணுவதே.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎17‎.‎01‎.‎2018 at 1:30 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்ன சேவை செய்தார் என்று யாராவது அறிய தருவீர்களா ..? பிளீஸ் :rolleyes:

img_0703.jpg?resize=735%2C400
யாழ்ப்பாணச் செய்திகள்

நடராஐனின் சேவையை புண்ணியமாக கருதுகின்றேன் வடக்கு ஆளுநர்

எத்தனையோ பல வசதி வாய்ப்புக்கள் இருந்தபோதும் அவற்றினை பயன்படுத்தாது மிகவும் எளியமுறையில் இந்திய தூதுவர் என்ற பதவிக்கு அப்பால் தனது கடமையினை கஸ்டப்பட்ட இந்த மக்களுக்காக ஆற்றியிருக்கின்றார்.

அவரினை சந்தித்தமை அவருடன் இங்கே சேவையாற்றியமையை நான் எனக்கு கிடைத்த புண்ணியமாக கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணை தூதுவரின் பிரியாவிடை நிகழ்வை யாழ் வைத்தியசாலையில் வைத்திருக்கலாம்.

இந்திய துணை தூதுவரின் சேவையை நினைவுகொள்ள எதாச்சும் இல்லாமபோனாலும் 

தாதிகள், டாக்டர்கள்,நோயாளிகள்,ஊழியர்கள் என்று மருத்துவமனையிலேயே வைத்து படுகொலை செய்து குவித்த

இந்தியாவின் சேவையை அவருக்கு நினைவுபடுத்த ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2018 at 6:00 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்ன சேவை செய்தார் என்று யாராவது அறிய தருவீர்களா ..? பிளீஸ் :rolleyes:

Freeஆக  கர்நாடக சங்கீதமும் ,ஹிந்தியும் சொல்லித்தந்தவர், இலவச இணைப்பாக சிவசேனையை இறக்குமதி செய்தளித்தவர்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.