Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்பாடா மாடு ஓமெண்டிட்டுது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த  வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள்.

 

https://rtlnext.rtl.de/cms/grundstueck-in-bremen-geeignet-fuer-hindu-tempel-heilige-kuh-madel-entscheidet-4139653.html

 

ஒரு ஜெர்மன் பால் மாடு  அதனது பெயர் ‘மாடல்’.  வயது மூன்றுஅந்த மாடல் என்ற பெயர் கொண்ட மாடுபிறீமன் நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு நிலத்தில் தனது உரிமையாளரான Frank Imhoff உடன்கவர்ச்சியாக அன்னநடை  நடந்து ஒரு இந்துக் கோயிலை கட்டுவதற்கு (17.01.2018 புதன்கிழமைஅனுமதி அளித்திருக்கிறது

 

மாடு நிலத்தில் முரண்டு பிடிக்காமல் ஒழுங்காக மகிழச்சியாக நடந்தால் அங்கே கோவில் கட்டுவதற்கானஅனுமதி கிடைத்து விடும் என்பது இந்துமதம் கண்டறிந்த ஒரு அற்புதமான தத்துவம்அந்த தத்துவத்தின்அடிப்படையில் மாடல் என்கின்ற மாடு எந்தவித அசௌகரியமும் இல்லால் நடந்திருக்கிறது. ஆகவேஇங்கே கோவிலை விரைவாக கட்ட இருக்கிறோம் என சங்கத் தலைவர் பத்மகரன் பத்மநாதன்செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்திருக்கிறார்ஆனால் மாடு தன்னைப் பராமரிப்பவரோடுதான் நடந்ததுமுரண்டும் பிடிக்கத்தான் செய்ததுமாடு பராமரிப்பவன் இல்லாமல் தனியாக அல்லவா நடந்திருக்கவேண்டும் என்று யாராவது கேள்வி கேட்டால் அது தெய்வக் குற்றமாகிவிடும் என்பதை முதலில் தெரிந்துவைத்துக் கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.

 

100,000 இந்துக்கள் யேர்மனியில் வாழ்வதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறதுஅதில்  ஏறக்குறைய 1000 இந்துக்கள் பிறீமன் நகரத்தில் வசிக்கிறார்கள்.  1000 பேருக்கு ஒரு கோயில் என்றால்  100,000 இந்துக்களுக்கு  குறைந்தது 100 கோவில்கள் தேவை அல்லவாஇப்பொழுது யேர்மனியில் இருப்பதோவெறும் 24 கோவில்கள்தான்ஆகவே மிகப் பெரிய பணி ஒன்று யேர்மனிய தமிழர்களுக்குக்காத்திருக்கிறது என்பது புலனாகிறது.

 

பிறீமன் நகரத்தில் புதன்கிழமை கொஞ்சம் குளிர்தான்அந்தக் குளிரிலும் தன்னுடய தேக நலனைக்கூடப்பாராமல்மேலாடை இன்றி  வேட்டியை மட்டும் கட்டிக் கொண்டுமாட்டுக்கு பூமாலை போட்டு, பொட்டுவைத்து, பூசை செய்த ஐயருக்கு பின்னாளில் பிறீமன் நகர்த்து தமிழ் மக்களூடாக இறைவன் கண்டிப்பாகஅருள்பாலிப்பான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

 

ஈழத்தில் இருந்து மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் ஆரியத்தையும்எடுத்துக்கொண்டே  புலம் பெயர்ந்திருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது” என்று ஒரு பேட்டியில்பேராசிரியர் சு..வீரபாண்டியன் குறிப்பிட்டதுஇந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது எனது நினைவுக்குவந்ததுகூடவே கண்ணன் வருவான் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற

பூமியை படைத்தது சாமியாஇல்லை 

சாமியை படைத்தது பூமியா

தினம் பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அழுகையில் 

ஆயிரம் கோவில்கள் தேவையா?...” என்ற பாடலும் காதுக்குள் கேட்டது.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேர் இருக்குமிடத்தில் கோயில் கட்டினால் குறைந்தளவு பக்தர்களே தினமும் வருவார்கள். வருட  வருமானமும் அதிகம் கிடைக்காது. ஏதாவது “அற்புதம்” நிகழ்த்தி அதன்மூலம் கிடைக்கும் விளம்பரத்தினால் பிற நகரங்களில் இருந்தும் அதிகளவு பக்தர்களை வரச் செய்யலாம் என்று யோசித்திருப்பார்கள். “மாடல்” ஒயிலாக நடந்தது அற்புதம்தானே!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த  வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள்.

முதலில்.... இந்தக்  காணொளியை..." You Tube",  "Tube tamil"   போன்ற காணொளிகளில் இணைத்து விட்டு, நியாயத்தை கேளுங்கள்... அருணாசலம்.
இப்படியான... செய்திகளை, உள்ளூர்  ஊடகங்கள் செய்வது... மிக மலிவான விளம்பரம்  ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் ஆரியத்தைக் காவிக் கொண்டு திரிவதென்பதில் முழு உண்மையும் இல்லை!

அவர்கள் சைவர்கள்! அவர்களது முழு முதற் கடவுள்...சிவனும்...சிவன் சார்ந்த தெய்வங்களும் தான்!

சிவன்...முருகன்....பிள்ளையார்...என்பவர்களோடு..அவர்கள் திருப்திப் பட்டுக் கொள்வார்கள்!

எனினும்...ஆரியம்...எல்லா ஈழக் கோவில்களிலும் தன்னை வலிந்து புகுத்திக் கொள்கின்றது!

அத்துடன் தமிழர்களிடம் மத வெறி என்பது மிகவும் குறைவு..! அதனால் தான் இலங்கையின் மற்றைய பகுதிகளிலும்..பார்க்க..வடக்கிலும் கிழக்கிலும், கிறிஸ்தவமும்...இஸ்லாமும் வாழ முடிந்தது!

அது மட்டுமன்றி...இப்போது...அனுமானும், ஐயப்பனும் கூடத் தங்களை விற்க முடிகின்றது!

எனினும் இப்போது எல்லாமே வியாபாரமாகி விட்டது!

இந்து மதம் என்ற சாக்கடைக்குள்....சைவமதம்...வலிந்து இழுக்கப்பட்டு...இப்போது தனது அடையாளத்தை இழக்கும் நிலைக்கு வந்து விட்டது! 

'சத்தி' எம்பதை நியாயப்படுத்த முயலும்...அந்த நித்தியானந்தாவின் பீடை...மன்னிக்கவும் சீடை....பிராமணப் பெண்களுக்கு மட்டும் உடன் கட்டை ஏறுதல் தேவையில்லை என்பதை ஏன் சொல்ல மறந்து விட்டதோ தெரியவில்லை! அதாவது தனது கணவன் இறந்தால்...ஒரு பிராமண மனைவி...உடன் கட்டையேற வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு விதி விலக்கு அழிக்கப்பட்டிருந்தது! அவர்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டால் போதும்!

அந்த மொட்டையடிப்பு 'சத்திக்குச்' சமனானது!

இவ்வாறான விதி விலக்குகளினால்  தான் தமிழன் மீண்டும்....மீண்டும் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறான்!

வைணவத்தையும்...சைவத்தையும் வளர்த்தெடுத்தது தமிழ் நாடு! ஆனால் அதன் அனுகூலங்களை அனுபவிப்பது..பிராமணர்களும், வட இந்தியர்களும்  மட்டும் தான்!

இதுவும் கிட்டத் தட்ட.....கிறிஸ்தவ மதத்தைப் போலத் தான்!

வறுமையில் வாழ்பவனிடம் தான்...மதமும்....மனிதமும் வாழும்!

வறுமையில் வாடும்....தென் அமெரிக்காவிலும்.....ஆபிரிக்காவிலும்...பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களிலும்...கிறிஸ்துவம் வளர்க்கப்படுகின்றது! அதனால் வரும் அனுகூலங்கள் அனைத்தையும்...அந்த மதத்தின் சொந்தக்காரர்கள் எனத் தங்களை அழைத்துக்கொள்வோர் பெற்றுக்கொள்கிறார்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

சைவ கோவில் அமைப்பதற்கு மாட்டை அழைத்து வந்தீர்கள் ஓகே, அதற்காக வைஸ்ணவகோயில் கட்டும்போது  பாம்பை கொண்டுவந்து ஊரவிட்டுவிடாதீர்கள் போட்டு தள்ளிவிடும்.

மதங்கள் வழிபாடுகள் என்பவை விமர்சிக்கப்படமுடியாத பிறரின் பிறப்புரிமைகள், ஆனால் தெய்வபக்தி என்பதுவேறு, தெய்வங்களை பகடைகாய்களாக்கி செய்தியாக்கி செல்வம் தேடுவதுவேறு.

இதுபோன்ற முற்றுமுழுதான செயற்கைதனம் இந்துமதத்தை சேர்ந்தவர்களால்தான் முதலில் சிரிப்புக்கிடமாக பார்க்கப்படும். விமர்சிக்கப்படும்.

ஜேர்மனியிலிருந்து அறிவியல்,தொழில்நுட்பம்,விஞ்ஞானம்,மருத்துவம் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, நாங்கள் ஆசியாவிலிருந்து எங்களால் முடிந்ததை ஜேர்மன்காரனுக்கு இறக்குமதி செய்துகாட்டுகிறோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

முதலில்.... இந்தக்  காணொளியை..." You Tube",  "Tube tamil"   போன்ற காணொளிகளில் இணைத்து விட்டு, நியாயத்தை கேளுங்கள்... அருணாசலம்.
இப்படியான... செய்திகளை, உள்ளூர்  ஊடகங்கள் செய்வது... மிக மலிவான விளம்பரம்  ஐயா.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 

குருவும், Kuh வும் (பசு)  ஒன்று தான் என்று, இப்ப.... புரிந்து விட்டது. :grin:

Bildergebnis für kuh 

நான்... உங்களுக்கு, "பால்"  தாறது..காணாதா?      :grin: :D:
என்னை..... ஏனப்பா.... இதுக்குள்ளை, இழுக்குறியள்.  :love:  

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி யிருக்கு ......உவங்கள் எல்லாம் இந்துக்களாம்

மாடுகளை வைத்து வீடுகள் கோயில்கள் கட்டும் முறை ஒன்று இருக்கின்றது என்று முன்னர் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் இப்படியில்லை.  ஒரு அடைக்கப்படட காணிக்குள் மாடுகளை விட்டால் அந்தக் காணிக்குள் மாடுகள் தினமும் ஒரு இடத்தில் தான் இரவு தங்கும். அவ் இடத்தில் வீடு அல்லது கிணறு வெட்டுவது. வேலியற்றநிலையில் மாடுகள் தானாக தினமும் எங்கு தங்குகின்றதோ அதை அவதானித்து கோயில் கட்டுவது. சிவன் கோயில் கட்டுவது. ஏனைய கடவுள்களுக்கு வேறு  முறைகள்.  இவர்கள் விளம்பரத்துக்காக குறளிவித்தை காட்டுகின்றார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி, ஊடகங்களின் மலிவான விளம்பரம் என்பதைவிட புலம்பெயர்ந்த நாங்கள். செய்யும் மலிவான செயல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து

சண்டமாருதன், மாடு தங்குமிடம் எல்லாம் கோவில் காட்டலாம் என்றால் மாட்டுத்தொழுவங்கள் எல்லாம்  ஆண்டவனைத் தொழுவும் கோவிலகளாகிவிடுமல்லவா?

புங்கையூரான், 

“ஈழத் தமிழர்கள் ஆரியத்தைக் காவிக் கொண்டு திரிவதென்பதில் முழு உண்மையும் இல்லை” என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்லவன்,

மேலைநாட்டவர்கள் எங்கள் கடலில் தங்கள் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். பதிலுக்கு எங்கள் (மூடநம்பிக்கை) குப்பைகளை அவர்கள் நாட்டில்  நாங்கள் கொட்டுகிறோம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

கிருபன்,

மாடல்” ஒயிலாக நடந்தது எனவோ சரிதான். கூடவே கரகாட்டம், குத்தாட்டம்,ஒயிலாட்டம் எல்லாம் போட்டிருந்தால் இன்னும்  சிறப்பாக இருந்திருக்கும்.

22 minutes ago, Kavi arunasalam said:

சண்டமாருதன், மாடு தங்குமிடம் எல்லாம் கோவில் காட்டலாம் என்றால் மாட்டுத்தொழுவங்கள் எல்லாம்  ஆண்டவனைத் தொழுவும் கோவிலகளாகிவிடுமல்லவா?

அப்படியல்ல.. 

கோவில் கட்டுவதற்கு மாடுகள் தானாக விரும்பி தங்கும் இடத்தை தேர்ந்தெடுப்பார்கள் என்று கேள்விப்பட்டதை எழுதியுள்ளேன். அதன் அர்த்தம் ஜெர்மனியில் நடப்பதை ஆதரிப்பது என்று பொருளாகாது. இயற்கையோடு இசைந்த வாழ்க்கை முறைகளை வியாபாரம் ஆக்குவதே இங்கு நடப்பது என்பதையே எழுதினேன். 

மேலும் கோயிலின் மூலவர் இருக்கும் மேடை நிலத்தடி நீர் மட்த்தில் இருந்தே கட்டி எழுப்புவது ஒரு முறை அதனால் நீரோட்டத்தை கண்டுபிடிப்பதே பிரதானமானது. புலம்பெயர் நாடுகளில் கோயில்கள் வியாபாரம் அடயாளம் அந்தஸ்த்துக்கக உருவாக்கப்படுகின்றது. 

-------------------

#7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

empty.gifசித்தர்கள் காட்டிய வழிமுறை

Post by சரவணன் on Mon Jun 22, 2015 9:27 pm

 
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.  (தகவல் siththarkal .com )
 
-----

மேலும்;

பசு: கிராமங்களில் அந்தக் காலத்தில் பசுமாட்டின் கன்றை கிணறுவெட்ட வேண்டிய பூமியில் அவிழ்த்துவிடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து எதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.

 

http://www.eegarai.net/t121880-topic

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சண்டமாருதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/GvWf8dHriKo" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

 

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2018 at 9:28 PM, புங்கையூரன் said:

வைணவத்தையும்...சைவத்தையும் வளர்த்தெடுத்தது தமிழ் நாடு! ஆனால் அதன் அனுகூலங்களை அனுபவிப்பது..பிராமணர்களும், வட இந்தியர்களும்  மட்டும் தான்!

முருகன் தமிழ் கடவுள் என்போம் இங்கு வேல்ஸ் முருகன் கோவில் பிரபலம் கோவிலை தொடக்கின ஆள் போய் சேர்ந்துவிட்டார் இப்ப மட்டகளப்பு தமிழ் ஆளை பேருக்கு வைத்துகொண்டு கோவிலின் எல்லாவிடமும் வட இந்தியரின் ஆதிக்கம் அளவு கடந்த வருமானம்தான் அவர்களின் குறி என்று சொல்லி தெரியவேண்டியதில்லை .

On 19/01/2018 at 8:37 PM, putthan said:

இது எப்படி யிருக்கு ......உவங்கள் எல்லாம் இந்துக்களாம்

புத்தன் நீங்கள் யார் பக்கம்? :223_speak_no_evil:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கலைஞன் said:

புத்தன் நீங்கள் யார் பக்கம்? :223_speak_no_evil:

நான் என் பக்கம்.....tw_blush:


இதில் என்ன பக்கம் இருக்கு....நித்தியானந்தா கோஸ்டி கருத்து சொல்ல தகுதியற்றவர்கள்.சிறுமிகளை வைத்து ஆச்சிரமம் நடத்துவதே முதல் தப்பு ..அவர்கள் வைரமுத்துவை குற்றம் காண்பது என்பது அதைவிட தப்பு அதுவும் இந்துமத காப்பாளர்கள் என்ற போர்வையில்....உந்த இளைஞர்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்த இளம் வயதில் முறுகுசடை எப்படி வந்தது என்பது எனது கவலை ....பணத்திற்காக இந்த சிறுமிகள் ஆச்சிரம வாழ்க்கை வாழ்கிறார்கள்....இதை விட அதிக பணம் வேறு மதத்தவர்கள் வழ்ன்குவார்கள் என்றால் அந்த மதத்திற்கு தாவி இந்துமதத்தை இழிவுபடுத்துவார்கள் இந்த நித்தியானந்த கோஸ்டிகள்

On 1/22/2018 at 12:17 AM, putthan said:

நான் என் பக்கம்.....tw_blush:


இதில் என்ன பக்கம் இருக்கு....நித்தியானந்தா கோஸ்டி கருத்து சொல்ல தகுதியற்றவர்கள்.சிறுமிகளை வைத்து ஆச்சிரமம் நடத்துவதே முதல் தப்பு ..அவர்கள் வைரமுத்துவை குற்றம் காண்பது என்பது அதைவிட தப்பு அதுவும் இந்துமத காப்பாளர்கள் என்ற போர்வையில்....உந்த இளைஞர்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்த இளம் வயதில் முறுகுசடை எப்படி வந்தது என்பது எனது கவலை ....பணத்திற்காக இந்த சிறுமிகள் ஆச்சிரம வாழ்க்கை வாழ்கிறார்கள்....இதை விட அதிக பணம் வேறு மதத்தவர்கள் வழ்ன்குவார்கள் என்றால் அந்த மதத்திற்கு தாவி இந்துமதத்தை இழிவுபடுத்துவார்கள் இந்த நித்தியானந்த கோஸ்டிகள்

நான் அதிகம் அறியவில்லை நித்தியானந்தா அவர்கள் ஆச்சிரம் பற்றி. சிறுபிள்ளைகளுக்கான குருகுலம் உள்ளது என்று ஒரு காணொலியில் பார்த்தேன். இந்த வீடியோவை முன்பு இங்கு பார்த்ததாக ஞாபகம். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் அரோகரா! 
இஞ்சை இரண்டுமூண்டு யாழ் உறவுகளும் நிக்கினம் எண்டதை சொல்லியே ஆகணும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 19/01/2018 at 10:12 PM, valavan said:

சைவ கோவில் அமைப்பதற்கு மாட்டை அழைத்து வந்தீர்கள் ஓகே, அதற்காக வைஸ்ணவகோயில் கட்டும்போது  பாம்பை கொண்டுவந்து ஊரவிட்டுவிடாதீர்கள் போட்டு தள்ளிவிடும்.

மதங்கள் வழிபாடுகள் என்பவை விமர்சிக்கப்படமுடியாத பிறரின் பிறப்புரிமைகள், ஆனால் தெய்வபக்தி என்பதுவேறு, தெய்வங்களை பகடைகாய்களாக்கி செய்தியாக்கி செல்வம் தேடுவதுவேறு.

இதுபோன்ற முற்றுமுழுதான செயற்கைதனம் இந்துமதத்தை சேர்ந்தவர்களால்தான் முதலில் சிரிப்புக்கிடமாக பார்க்கப்படும். விமர்சிக்கப்படும்.

ஜேர்மனியிலிருந்து அறிவியல்,தொழில்நுட்பம்,விஞ்ஞானம்,மருத்துவம் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, நாங்கள் ஆசியாவிலிருந்து எங்களால் முடிந்ததை ஜேர்மன்காரனுக்கு இறக்குமதி செய்துகாட்டுகிறோம்!

பல்லைப் பிடுங்கிய பாம்பைக் கொண்டுவந்தால் அது கடிக்காது. கடவுளையே விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும்போது மதங்களும் வழிபாடுகளும் எம்மூலை. மதம் ஒருவனின் பிறப்போடு வந்தாலும் அது அவனின் உரிமை அல்ல. ஒன்றை விமர்சிப்பது பொது உரிமை மற்றவர் அந்தரங்கத்துள் நுழையாதவரை.

10 hours ago, குமாரசாமி said:

எல்லாருக்கும் அரோகரா! 
இஞ்சை இரண்டுமூண்டு யாழ் உறவுகளும் நிக்கினம் எண்டதை சொல்லியே ஆகணும்.:cool:

 

அரோகரா! ஆறந்த உறவுகள் எண்டு சொன்னால் எங்களுக்கும் சந்தோசம் எல்லோ குசா

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கலைஞன் said:

நான் அதிகம் அறியவில்லை நித்தியானந்தா அவர்கள் ஆச்சிரம் பற்றி. சிறுபிள்ளைகளுக்கான குருகுலம் உள்ளது என்று ஒரு காணொலியில் பார்த்தேன். இந்த வீடியோவை முன்பு இங்கு பார்த்ததாக ஞாபகம். 

 

எனக்கு உந்த மனித கடவுள்களில் எந்த நம்பிக்கையுமில்லை....ஆத்மீகம் என்பது வேறு, ஆலவட்டம் பிடிக்கும் ஆத்மீகத்தில் எனக்கு உடன்பாடில்லை....மனிதன் மனிதனாக வாழ்ந்தால் ஆண்டவன் மகிழ்ச்சியடைவான் என்பது என் எண்ணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரோகரா! ஆறந்த உறவுகள் எண்டு சொன்னால் எங்களுக்கும் சந்தோசம் எல்லோ குசா

அரோகரா!!!! :27_sunglasses:

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அரோகரா!!!! :27_sunglasses:

 

:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.