Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமத்தில் நள்ளிரவில் பதற்றம்

Featured Replies

கதிர்காமத்தில் நள்ளிரவில் பதற்றம்

கதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார். 

1_Police.JPG

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பிரயோகித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியது.

சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் விவரித்ததாவது:

குறித்த நபர் நேற்று இரவு சுமார் பத்து மணியளவில் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அவர் பொலிஸாருக்கு மிக நெருக்கத்தில் வரும்போது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.

மிதமான வேகத்தில் வந்த அந்த நபர், உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாததால், சில அடி தூரம் சென்று நிறுத்தியிருக்கிறார்.

அதற்குள், ஊர்காவல் படை வீரருடன் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த நபர் தப்பிச் செல்வதாக நினைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து விழுந்த நபரை தூக்க முயன்ற இளைஞரையும் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியுள்ளார்.

பின்னர் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்துக் கேள்விப்பட்ட அப்பகுதிவாசிகள் மற்றும் கொல்லப்பட்ட 44 வயது நபரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தின் முன் கூடி கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தனர்.

பின்னர், இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், சைக்கிளை நிறுத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/29698

  • தொடங்கியவர்

கதிர்காமம் துப்பாக்கிச் சூடு : விசாரணைகளுக்காக விஷேட குழு

கதிர்காமத்தில், பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அப் பகுதிக்கு விஷேட குழுவொன்றை அனுப்புமாறு, பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார். 

நேற்று இரவு கதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார். 

shooting296-720x480.jpg

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பிரயோகித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியது.

சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் விவரித்ததாவது:

குறித்த நபர் நேற்று இரவு சுமார் பத்து மணியளவில் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அவர் பொலிஸாருக்கு மிக நெருக்கத்தில் வரும்போது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.

மிதமான வேகத்தில் வந்த அந்த நபர், உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாததால், சில அடி தூரம் சென்று நிறுத்தியிருக்கிறார்.

அதற்குள், ஊர்காவல் படை வீரருடன் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த நபர் தப்பிச் செல்வதாக நினைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து விழுந்த நபரை தூக்க முயன்ற இளைஞரையும் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியுள்ளார்.

பின்னர் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்துக் கேள்விப்பட்ட அப்பகுதிவாசிகள் மற்றும் கொல்லப்பட்ட 44 வயது நபரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தின் முன் கூடி கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தனர்.

பின்னர், இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், சைக்கிளை நிறுத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/29730

  • தொடங்கியவர்

கதிர்காமத்தில் பதற்ற நிலைமை – 63 பேர் கைது

 kathirkamam.jpg?resize=650%2C433

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கதிர்காமத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய காரணத்தினால் இவ்வாறு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற 44 வயதான நபர் ஒருவர் காவல்துறையினரின் உத்தரவினை மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டங்களை நடத்திய 63 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 15 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/62511/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காவல்துறையானது மக்களைப் பாதுகாப்பதற்கு அல்ல. அதனால்தான் காடையர்களே அதிகமாகக் காவற்துறைக்குத் தேர்வாகின்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சம்பவம் யாழில் நடந்திருந்தால் உடனே சிங்கள அரசின் அராஜகம், தமிழர்கள்மீதான படுகொலை என்று உடனே ஆரம்பித்திருப்போம். நாகரிகமில்லாத தமிழர்கள்.

கொளுத்திபோடுவோம் போடுவோம், காசா பணமா ? திரி எரியட்டும் ;)

  • தொடங்கியவர்

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் மரணம் : மக்களின் ஆர்ப்பாட்டங்களினால் கதிர்காமத்தில் பெரும் பதற்றம்

2-feb5566d0d04681aa837c91321d9624368ff761d.jpg

 கண்ணீர் குண்டு பிரயோகம்; 63 பேர் கைது   
(எம்.எப்.எம்.பஸீர்)

 பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கொதித்தெழுந்த கதிர்காம பிரதேச மக்கள், பொலிஸாருக்கு எதிராக நேற்று முழு வதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய தினமும் கதிர்காமம் பிரதேசம் பதற்றத்துடனேயே காணப்பட்டது.

பிரதேசத்தின் இயல்பு நிலையை உறுதி செய்யவும் பாதுகாப்பு கட்டமைப்பை சீர் செய்யவும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் செய்தனர்.

நேற்று முன் தினமும் இரவு முதல் பிரதேச மக்கள் இவ்வாறு பொலிஸாருக்கு எதிராக பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், கதிர்காமம் நகரம் பெரும் பதற்றத்துடன் களேபரமாக காணப்பட்டது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளிடையே, கதிர்காமம் பொலிஸ் நிலைய நிர்வாக கட்டிடம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறை ஆகியன பொது மக்களால் அடித்து கண்னாடிகள் நொறுக்கப்பட்ட நிலையில் பொலிஸ் ஜீப் வண்டி, பொலிஸ் மோட்டார் சைக்கிள்களுக்கும் பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டன. நகரின் பிரதான பாதைகளில் டயர்களைக் கொழுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நேற்று மாலை வரை தொடர்ந்த நிலையில் பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில், கதிர்காமம் பிரதேச சபையில் சேவையாற்றும் ஊழியர் ஒருவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பிரதேச சபையை அண்மித்த பகுதியூடாக பயணித்துள்ளார். வெடிஹிட்டி கந்த வீதி பகுதியை நோக்கி பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு நகரில் கடமையில் இருந்த பொலிஸ் காண்ஸ்டபிளும் ஊர்காவற் படை வீரரும் சமிக்ஞை செய்துள்ளனர். இந் நிலையில் சற்று முன்னோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது காண்ஸ்டபிள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பதிரணலாகே நிரோஷன் எனும் 25 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்ப்ட்டார். இந்த சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்றம் மற்றும் அல்லோல கல்லோல நிலைமை ஏற்பட்டது. நிராயுதபாணியாக சென்ற நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் கோபமுற்ற பிரதேச மக்கள் , கதிர்காமம் பொலிஸ் நிலையம் முன்பாக இரவோடிரவாக கூடி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். இதன்போது பொலிஸ் நிலையத்துக்கும், அதன் வாகனங்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டை நடாத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹராம நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடன் அவதானம் செலுத்திய பொலிஸ் மா அதிபர், இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பினை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளித்தார். அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் உத்தரவுக்கு அமைய சிறப்புக் குழு நேற்று காலை கதிர்காமம் நோக்கி சென்றது.

துப்பாக்கிச் சூட்டை அடுத்து மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததில் காயமடைந்த, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்து சென்ற நுவன் இவ்வாறு தெரிவித்தார்.

 ""நாம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தவே மெதுவாக முன்னோக்கினோம். எனினும் பொலிஸார் எம்மை நோக்கி சுட்டனர். நிரோஷனின் தலையில் குண்டு பாய்ந்தது. மோட்டார் சைக்கிள் வீழ்ந்தவுடன் நானும் விழுந்தேன். அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் என்னையும் அறைந்தனர்.' என்றார்.

 இந் நிலையிலேயே நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணி முதல் மக்கள் ஆவேசத்துடன் பொலிஸ் நிலையம் மீது தககுதல் நடாத்தினர். இதன்போது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி மக்களை விரட்டி அடித்தனர்.

 சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த கதிர்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாலி காரியவசம், நாம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரைக் கைது செய்தோம். உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டுகொண்டிருக்கின்றோம். என தெரிவித்தார்.

 எனினும் நேற்றும் பொது மக்கள் நகரில் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர். அப்பாவிகளை சுட்டுக்கொல்ல பொலிசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?, ரத்துபஸ்வலவில் பொது மக்களை சுட்டபோது பார்த்துக்கொன்டிருந்த பொறுப்பதிகாரி உபாலி இங்கும் ஆடுகிறார், அவரைக் கைது செய் என கோஷங்களை எழுப்பியவண்ணம் அவர்கள் ஆர்ப்படடம் செய்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் பேசிய உயிரிழந்த நிரோஷனின் மனைவி சத்துரிகா சந்தமாலி,

 ""நாம் என்ன தவறு செய்தோம். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் போது அப்பாவியை சுட்டுக்கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். எனது பிள்ளைக்கு தகப்பனை இல்லாமல் செய்தோரை இந்த கதிர்காம கடவுள் பார்த்துக்கொன்டிருக்கின்றார். ஜனாதிபதியே எமக்கான நீதியைப் பெற்றுத் தாருங்கள். என அழுதவண்ணம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நேற்றும் முழுவதுமாக கதிர்காம நகரின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்து இருந்ததைத் தொடர்ந்து, ஆர்ப்படடத்தில் ஈடுபட்டு, பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுத்திய, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களில் 63 பேரை பொலிஸார் கைது செய்தனர். 48 ஆண்களும் 15 பெண்களுமாக 63 பேரையே இவ்வாறு பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களை திஸ்ஸ மஹராம நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 அத்துடன் பொலிஸ் நிலையம், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்களை மையப்படுத்தி பிரத்தியேக விசாரணை ஒன்று நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதற்கென சிறப்பு பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.

 இந் நிலையில் நேற்று மாலையாகும் போது பிரதேசம் முற்றாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தொடர்கின்றனர். பொது சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள், இயல்பு நிலையை பாதிக்கச் செய்த சம்பவங்கள் தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ.பெர்ணான்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-22#page-1

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

இப்படி ஒரு சம்பவம் யாழில் நடந்திருந்தால் உடனே சிங்கள அரசின் அராஜகம், தமிழர்கள்மீதான படுகொலை என்று உடனே ஆரம்பித்திருப்போம். நாகரிகமில்லாத தமிழர்கள்.

கொளுத்திபோடுவோம் போடுவோம், காசா பணமா ? திரி எரியட்டும் ;)

சிஙகளவ்ர்களும் அதைதான் செய்துள்ளார்கள் ....ஆர்ப்பாட்டம் செய்தமையால் 63பேரை கைது செய்துள்ளார்கள்....

அதிகாரங்கள் எல்லை மீறும் பொழுது மக்கள் கிளர்ந்தெழுவது சகயம் இதில் தமிழ் சிங்களம் முஸ்லிம் என்று வேறுபாடில்லை ...

சிங்களவர்கள் "பொலிஸ் கரியோ" என்று திட்டியிருப்பார்கள்.
நாங்கள் "சிங்கள வெறியன்" என்று சொல்லியிருப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

சிங்களவர்கள் "பொலிஸ் கரியோ" என்று திட்டியிருப்பார்கள்.
நாங்கள் "சிங்கள வெறியன்" என்று சொல்லியிருப்போம்....

வேறுபட்ட இனங்களிடையே  இரண்டு சம்பவங்களின்போதும் ஏற்படுகின்ற மனோநிலை வெவ்வேறுபட்டது என்பது, ஒரு எழுத்தாளரான புத்தனுக்கு கண்டிப்பாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, valavan said:

இப்படி ஒரு சம்பவம் யாழில் நடந்திருந்தால் உடனே சிங்கள அரசின் அராஜகம், தமிழர்கள்மீதான படுகொலை என்று உடனே ஆரம்பித்திருப்போம். நாகரிகமில்லாத தமிழர்கள்.

கொளுத்திபோடுவோம் போடுவோம், காசா பணமா ? திரி எரியட்டும் ;)

நாங்க சொல்ல இயலாது நீங்கள் சொல்லி விட்டியள் tw_blush:

On 1/21/2018 at 10:40 PM, Paanch said:

இலங்கையில் காவல்துறையானது மக்களைப் பாதுகாப்பதற்கு அல்ல. அதனால்தான் காடையர்களே அதிகமாகக் காவற்துறைக்குத் தேர்வாகின்றனர்.  

சென்ற வருடம் அதிகமான தமிழர்கள் இணைந்தார்கள் காரணம் படித்த படிப்புக்கு தொழில் இல்லை அதற்கு காரணம் அமைச்சு பதவி எடுக்காமல் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்துகதிரையை தேய்ப்போம் என்று எடுத்த முடிவினால் முஸ்லீம் அமைச்சர்கள் ஆகி அவங்க இனத்துக்கே வேலை வாய்ப்பு அதிகம் வாரி வழங்கினார்கள் சிற்றூழியர் முதல் நீர் பாசனம்,  ஏன் சகல துறைகளிலும் நாங்கள் ஓர் சிபாரிசு கடிதம்கேட்க போனபோது ஐயா ஊரில இல்லை (இருந்தும் ) இதான் இங்க நிலமை இதை சொன்னா நீங்கள் ஏற்றுக்கொள்ளவா போறீங்கள் :104_point_left::104_point_left:

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

இப்படி ஒரு சம்பவம் யாழில் நடந்திருந்தால் உடனே சிங்கள அரசின் அராஜகம், தமிழர்கள்மீதான படுகொலை என்று உடனே ஆரம்பித்திருப்போம். நாகரிகமில்லாத தமிழர்கள்.

கொளுத்திபோடுவோம் போடுவோம், காசா பணமா ? திரி எரியட்டும் ;)

இது ஒரு  அராஐக   செயல் தானே?

சைக்கிளை நிறுத்தாவிடினும் 

கொல்லும் அளவுக்கு துப்பாக்கியால்  சுடும் அதிகாரம்  அல்லது மனத்துணிவு  எவ்வாறு வந்தது??

இப்படி  யாழில்  நடந்திருந்தால்

தமிழர்கள் வேறாக  நினைப்பதற்கு காரணம்

தமிழர்கள்  அல்ல

சிங்கள  அரசுகளின் மாற்றாந்தாய்  எதிர் நிலையே...

On 1/21/2018 at 11:33 AM, நவீனன் said:

மிதமான வேகத்தில் வந்த அந்த நபர், உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாததால், சில அடி தூரம் சென்று நிறுத்தியிருக்கிறார்.

அதற்குள், ஊர்காவல் படை வீரருடன் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த நபர் தப்பிச் செல்வதாக நினைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து விழுந்த நபரை தூக்க முயன்ற இளைஞரையும் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியுள்ளார்.

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களின் பயங்கரவாதங்களில் இதுவும் ஒன்று!

வீரவுணர்வு கொண்ட மக்கள் அநீதிகளை எதிர்த்து போராடுகிறார்கள். கோழைகள் ஆயிரம் காரணங்களைக் கூறி யாரோ ஒருவர் வந்து தான் தங்களுக்காக போராட வேண்டும் என்று ஓலமிடுவர்!!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களின் பயங்கரவாதங்களில் இதுவும் ஒன்று!

வீரவுணர்வு கொண்ட மக்கள் அநீதிகளை எதிர்த்து போராடுகிறார்கள். கோழைகள் ஆயிரம் காரணங்களைக் கூறி யாரோ ஒருவர் வந்து தான் தங்களுக்காக போராட வேண்டும் என்று ஓலமிடுவர்!!!

வெளிநாடுகளில் வாழ்ந்தாலும்
பயத்தால் முக மூடி
போட்டுக் கொண்டு
விசைப் பலகையில் மட்டும்
வீரம் பேசி
களமாடும் கோழைகள்  
தாம் வந்து
போராடாமல் வெறுமனே
உசுப்பேத்துவர்

Just now, வைரவன் said:

வெளிநாடுகளில் வாழ்ந்தாலும்
பயத்தால் முக மூடி
போட்டுக் கொண்டு
விசைப் பலகையில் மட்டும்
வீரம் பேசி
களமாடும் கோழைகள்  
தாம் வந்து
போராடாமல் வெறுமனே
உசுப்பேத்துவர்

உங்களைப் பற்றி உங்கள் சுயரூபம் பற்றி அவ்வப்போது தெளிவாக எழுதிவருவது தெரிகிறது!

தொடர்ந்து உங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்துங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

உங்களைப் பற்றி உங்கள் சுயரூபம் பற்றி அவ்வப்போது தெளிவாக எழுதிவருவது தெரிகிறது!

போலர்
நாங்கள் ஒரு நாளும்
வந்து உசுப்பேத்துறது
இல்லைங்கோ

ஊர்ல இருக்க பயமில்லாது  
ஓடி வந்துட்டு
முக மூடி
போட்டுக் கொண்டு
அங்கிருப்பவர்களை
பார்த்து கோழைகள் என
சொல்ல
எனக்கு ஒரு போதும்
மனசு வராது
பாருங்கோ

1 minute ago, வைரவன் said:

போலர்
நாங்கள் ஒரு நாளும்
வந்து உசுப்பேத்துறது
இல்லைங்கோ

ஊர்ல இருக்க பயமில்லாது  
ஓடி வந்துட்டு
முக மூடி
போட்டுக் கொண்டு
அங்கிருப்பவர்களை
பார்த்து கோழைகள் என
சொல்ல
எனக்கு ஒரு போதும்
மனசு வராது
பாருங்கோ

நீங்கள் இப்படியே ரீல் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்!
கோழைகளுக்கு வேறு வழியில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/01/2018 at 6:52 PM, valavan said:

இப்படி ஒரு சம்பவம் யாழில் நடந்திருந்தால் உடனே சிங்கள அரசின் அராஜகம், தமிழர்கள்மீதான படுகொலை என்று உடனே ஆரம்பித்திருப்போம். நாகரிகமில்லாத தமிழர்கள்.

கொளுத்திபோடுவோம் போடுவோம், காசா பணமா ? திரி எரியட்டும் ;)

உங்களையும் சேர்த்தே தானே சொல்கிறீர்கள் ????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களையும் சேர்த்தே தானே சொல்கிறீர்கள் ????

நானறிய, பிரெஞ்சு,இத்தாலி , ஜேர்மன்,ஸ்பானிஷ் மற்றும் சீன பாஷைகளில் வளவன் என்று பெயர் இருக்காது என்று நினைக்கிறேன் அக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.