Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

 இல்லையாயின் ஏன் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமையாக நடத்தப்பட வேண்டும்?

என்ன உரிமைகள் பறிக்கப்பட்டன? கொழும்பில் வீடு வாங்க தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பு பங்கு சந்தையில் கொள்ளை அடிக்க தமிழருக்கு உரிமை இல்லையா?

மத்திய வங்கிக்கு ஆளுநராக வர தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பில் சைவ கோயில் கட்டவும் சைவ பாடசாகைகள் நடத்தவும் உரிமை இல்லையா?

கொழும்பு, கண்டி யாழ்ப்பாணம் எங்கும் வணிகம் செய்ய உரிமை இல்லையா?

வாள்வெட்டு குழுக்களை அமைத்து வெளிநாட்டு பணத்தில் மோட்டசைக்கில் வாங்கி அதில் போய் போலீஸ்காரரின் கை வெட்ட உரிமை இல்லையா?

என்ன உரிமை இல்லை?

 பிடிக்கவில்லை பிரிந்து போக விரும்புகின்றோம் அதற்கும் விடவில்லையே ஏன்? 

தாராளமாக விட்டு இருக்கிறார்களே?

கனடாவுக்கு போக விட்டார்களே?

ஸ்ரீ லங்கன் விமானத்திலேயே ஐரோப்பா எங்கும் போய் தாராளமாக குடியேற விட்டுத்தானே இருக்கிறார்கள்?

தமிழ் நாட்டுக்கும் போக விட்டார்கள் தானே?

அவர்களுக்கு உலகில் உள்ள ஒரே நாட்டில் 70% கடல் வளத்தை பிரித்து எடுத்து அவர்களை அங்கு தடை செய்ய கேட்கிறீர்கள்,  அதை தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழரிலும்  அறிவாளிகள்.

தமிழரிலும் பார்க்க மற்ற நாட்டவருடனும் இனத்தவருடனும் கூட்டாக இணைந்து தமிழரையும் அழிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது.

இணைந்து வாழ விரும்பினால் எமது முட்டாள்தனத்தையும் பொருட்படுத்தாமல் இணைத்து வாழ முன்வர கூடும்.  நாமே எம்மை தொடர்ந்தும் அழித்து கொள்ள விரும்பினால் அவர்கள் அது பற்றி அலட்டி கொல்ல போவதில்லை. அவர்களுக்கு தொல்லை தீர்ந்ததாக  இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

என்ன உரிமைகள் பறிக்கப்பட்டன? கொழும்பில் வீடு வாங்க தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பு பங்கு சந்தையில் கொள்ளை அடிக்க தமிழருக்கு உரிமை இல்லையா?

மத்திய வங்கிக்கு ஆளுநராக வர தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பில் சைவ கோயில் கட்டவும் சைவ பாடசாகைகள் நடத்தவும் உரிமை இல்லையா?

கொழும்பு, கண்டி யாழ்ப்பாணம் எங்கும் வணிகம் செய்ய உரிமை இல்லையா?

வாள்வெட்டு குழுக்களை அமைத்து வெளிநாட்டு பணத்தில் மோட்டசைக்கில் வாங்கி அதில் போய் போலீஸ்காரரின் கை வெட்ட உரிமை இல்லையா?

என்ன உரிமை இல்லை?

சிங்கள ஊரில் ஒருமுருகன் சிலையை வைத்து விடுங்கள் பார்க்கலாம். (வடக்கு கிழக்கில் புத்தர் சிலையை வைப்பது போல்)

Quote

தாராளமாக விட்டு இருக்கிறார்களே?

கனடாவுக்கு போக விட்டார்களே?

ஸ்ரீ லங்கன் விமானத்திலேயே ஐரோப்பா எங்கும் போய் தாராளமாக குடியேற விட்டுத்தானே இருக்கிறார்கள்?

தமிழ் நாட்டுக்கும் போக விட்டார்கள் தானே?

அவர்களுக்கு உலகில் உள்ள ஒரே நாட்டில் 70% கடல் வளத்தை பிரித்து எடுத்து அவர்களை அங்கு தடை செய்ய கேட்கிறீர்கள்,  அதை தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழரிலும்  அறிவாளிகள்.

ஓ உண்மையை ஒத்துக்கொண்டுள்ளீர்கள். அதாவது தமிழர் பகுதி பொருளாதாரம் வேண்டும். மற்றும் படி அவர்கள் கேட் கும் சுதந்திரம் தேவை இல்லாதது.
சுதந்திரம் தமிழர்களுக்கு இருப்பின் ஏன் போர் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் தமிழர் பகுதியில்  பெரும்பான்மையான  சிங்கள இராணுவம் இன்றும் குவிக்கப்பட்டு தமிழரின் இயல்பு வாழ்க்கையை குழப்ப வேண்டும். அல்லது உங்களின் கருத்துப்படி அதுவும் பகுதியான ஒரு சுதந்திரமாக கருதப்படுமா??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

என்ன உரிமைகள் பறிக்கப்பட்டன? கொழும்பில் வீடு வாங்க தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பு பங்கு சந்தையில் கொள்ளை அடிக்க தமிழருக்கு உரிமை இல்லையா?

மத்திய வங்கிக்கு ஆளுநராக வர தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பில் சைவ கோயில் கட்டவும் சைவ பாடசாகைகள் நடத்தவும் உரிமை இல்லையா?

கொழும்பு, கண்டி யாழ்ப்பாணம் எங்கும் வணிகம் செய்ய உரிமை இல்லையா?

வாள்வெட்டு குழுக்களை அமைத்து வெளிநாட்டு பணத்தில் மோட்டசைக்கில் வாங்கி அதில் போய் போலீஸ்காரரின் கை வெட்ட உரிமை இல்லையா?

என்ன உரிமை இல்லை?

தாராளமாக விட்டு இருக்கிறார்களே?

கனடாவுக்கு போக விட்டார்களே?

ஸ்ரீ லங்கன் விமானத்திலேயே ஐரோப்பா எங்கும் போய் தாராளமாக குடியேற விட்டுத்தானே இருக்கிறார்கள்?

தமிழ் நாட்டுக்கும் போக விட்டார்கள் தானே?

அவர்களுக்கு உலகில் உள்ள ஒரே நாட்டில் 70% கடல் வளத்தை பிரித்து எடுத்து அவர்களை அங்கு தடை செய்ய கேட்கிறீர்கள்,  அதை தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழரிலும்  அறிவாளிகள்.

தமிழரிலும் பார்க்க மற்ற நாட்டவருடனும் இனத்தவருடனும் கூட்டாக இணைந்து தமிழரையும் அழிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது.

இணைந்து வாழ விரும்பினால் எமது முட்டாள்தனத்தையும் பொருட்படுத்தாமல் இணைத்து வாழ முன்வர கூடும்.  நாமே எம்மை தொடர்ந்தும் அழித்து கொள்ள விரும்பினால் அவர்கள் அது பற்றி அலட்டி கொல்ல போவதில்லை. அவர்களுக்கு தொல்லை தீர்ந்ததாக  இருக்கும்.

 நான் குறிப்பிடுவது எனது சொந்த நாட்டைப்பற்றியும் எங்களது   உரிமை பற்றியும். அது விளங்காத உங்களுடன் கதைத்து பிரயோசனமில்லை. ஒன்று கதைத்தால் வேறொன்று கதைத்து விஷயத்தை  மழுப்பி, திசை திருப்பி விதண்டாவாதம் பண்ணுவது   சிங்களவருக்கும் அதன் அடிவருடிகளுக்கும் கைவந்த கலை. தமிழை படித்ததால் இங்கு வந்து குசும்பு பண்ணுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 நான் குறிப்பிடுவது எனது சொந்த நாட்டைப்பற்றியும் எங்களது   உரிமை பற்றியும். அது விளங்காத உங்களுடன் கதைத்து பிரயோசனமில்லை. 

உங்கள் சொந்த நாட்டின் பெயர் என்ன? 

தமிழர் உலகம் முழுவதும் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

தமிழ் உங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்கள அரசின் அராஜகம் எங்கு நடக்கிறதோ அதுதான் நான் பிறந்த எனது சொந்த நாடு. என் தந்தை, தாத்தா, முப்பாட்டன், கொப்பாட்டன் வியர்வை சிந்தி உழைத்து கட்டி குடியிருந்த வீட்டில் கம்பு நடாதவன்குடியிருந்து நட்டுத் தண்ணி ஊத்தாதவன்  பலன் அனுபவிக்கிறான். நாங்கள் வாடகை வீட்டில். என் மூதாதையர் வீட்டிற்கு நாங்கள் போக முடியாதாம். உயர் பாதுகாப்பு வலயமாம் சொல்லுறான் உறுதி, உரிமை  இல்லாதவன். இதை நீங்கள் சுதந்திரம் என்று பொருள் கூறுகிறீர்கள். சொந்தமண்ணில் பாதுகாப்பில்லாமல் அகதியாய் அந்நிய நாட்டில் தஞ்சம் அடைந்து வாழுகிறான் தமிழன் அதை சுதந்திரம் என்று சொல்கிறீர்கள். கொழும்பில் தன் சொந்தப் பணத்தில் காணி, வீடு வாங்குகிறான் தமிழன். தமிழர் பிரதேசங்களில் தமிழனை விரட்டி விட்டு அடாத்தாய் குடி அமர்ந்து, அவனின் தொழில் வளங்களை பறித்து அணிஞாயம் பண்ணுகிறான் அதை சுதந்திரம் என்று பெருமை அடிக்கிறீர்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்வதால் சொந்த மண்ணை சிங்களவன் கொள்ளை அடிக்கலாமா? தமிழ் எல்லோருக்கும் பொது மொழிதான். ஆனால் அரைத் தமிழனால் தமிழுக்கு  சரியாக பொருள் விளக்கம் தர  முடியாது என்று சொல்கிறேன். அடிமை வாழ்வை, அந்நியனின் ஆக்கிரமிப்பில் வாழும் வாழ்வை சுதந்திரம் என்று மொழி பெயர்த்தால் வேறு எப்படிச் சொல்வது?  

  • கருத்துக்கள உறவுகள்
On 24/03/2018 at 1:57 AM, Jude said:

எவ்வகையில் கணக்கு தவறானது என்று நீங்கள் எழுதவில்லையே?  இந்திய றோவின் உதவியுடனும் தமிழ்நாட்டின் பின்புலத்துடனும்  சிங்களவருடன் மோதியதே எமது வரலாறு. கிடைத்த படிப்பினை பெரும் அழிவும் அதில் இந்தியாவின் பெரும் பங்களிப்பும் ஆகும். இதுதான் எங்கள் வரலாற்று படிப்பினை. இதை நீங்கள் அறியவில்லையா?

இது உங்கள் அபிப்பிராயம் - ஆனால் இது சாத்தியம் அற்றது என்பது எங்கள் வரலாற்று படிப்பினை.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த கனவில் வாழ்ந்து கொண்டு வடக்கும் கிழக்கும் நீர்கொழும்பு போல சிங்கள மக்களாக மாறுவதை பார்த்து கொண்டு இருக்க போகிறீர்கள்?  சாத்தியம் அற்ற கனவுகள் தீர்வுகள் அல்ல. மாறாக தீர்வுகளை தடுக்கும் அழிவுக்கான தடைக்கற்கள்.

தமிழரின்  வரலாற்றை

புலிகளின்  காலத்துடன் குறுக்கும் உங்களது மனநிலை  தான் தவறு

கடந்த 100  வருடங்களை  எடுத்துக்கொண்டு 

ஒரு தேசத்துக்குள்  வாழ்வதற்காக

 தமிழகம் உட்பட அனைவரையும்  பகைத்தபடி 

தமிழர்  விட்டுக்கொடுத்து

எந்த சிக்கல் வந்தபோதும் (மலையத்தவர்  இசுலாமியர்  பிரச்சினை  உட்பட)

கொடுத்த அனுசரணையும் ஒத்துழைப்பும் 

சிங்களத்தால் மறக்கடிக்கப்பட்டு

தமிழர்கள்  தொடரந்:து வஞ்சிக்கப்பட்டதன் விளைவு  தான்

தந்தை  செல்வாவின் முடிவும்

பிரபாகரனின் வருகையும் என்பதையாவது உணர்ந்து ஏற்று  எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

தமிழரின்  வரலாற்றை

புலிகளின்  காலத்துடன் குறுக்கும் உங்களது மனநிலை  தான் தவறு

கடந்த 100  வருடங்களை  எடுத்துக்கொண்டு 

ஒரு தேசத்துக்குள்  வாழ்வதற்காக

 தமிழகம் உட்பட அனைவரையும்  பகைத்தபடி 

தமிழர்  விட்டுக்கொடுத்து

எந்த சிக்கல் வந்தபோதும் (மலையத்தவர்  இசுலாமியர்  பிரச்சினை  உட்பட)

கொடுத்த அனுசரணையும் ஒத்துழைப்பும் 

விசுகு,

என்னிலும் பார்க்க ஆழமாக அரசியலில் நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வமும் உங்கள் செயற்பாடு பற்றியும் யாழ் களம் மூலம் நான் அறிந்து இருக்கிறேன்.

நீங்கள் மேலே சொல்லியுள்ள பல விடயங்கள் நான் அறியாதவை. குறிப்பாக:

  1. இலங்கை தமிழர் என்று தமிழகத்தை பகைத்து கொண்டு இலங்கை என்ற ஒரு தேசத்துள் வாழ முயற்சி செய்தார்கள்? இந்த வரலாறு நான் அறியாதது. விளக்கமாக கூறுவீர்களா?
  2. என்று இலங்கை தமிழர் மலையகத்தவருடன் சிக்கல் உண்டான நிலையில் அதனையும் மீறி சிங்களவருக்கு ஆதரவு வழங்கினார்கள்?
  3. என்று இலங்கை தமிழர் இசுலாமியருடன் சிக்கல் உண்டான நிலையில் அதனையும் மீறி சிங்களவருக்கு ஆதரவு வழங்கினார்கள்?

இவை பற்றி நீங்கள் விரிவாக எழுதினால், நான் மட்டுமல்ல என்னை போன்று இவை பற்றி அறியாத மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Jude said:

உங்களது  குறி  புரிகிறது

1-  தமிழகத்தில்  போராட்டங்கள்

பிரிவினை  மற்றும் மத்திய அரசுடனான   இந்தி எதிர்ப்புப்போராட்டங்களின்போது

ஈழத்தமிழர்கள் அவர்களை ஆதரித்தோ  அல்லது  அதே வழியில் இலங்கையிலும்  போராட்டங்களை  தொடங்கவில்லையே?

அதன்படி   பார்த்தால்

அகண்ட    ஈழமோ  அல்லது  தமிழகத்துடன் சேர்ந்து சிங்களவரை தூக்கி  விடுவோம்  என்றதங்கள் கூற்று தவறு  தானே?

2 - முன்னைய  தமிழ்த்தலைவர்களின் சில முடிவுகள்

மலையகத்தவர்  வாக்குரிமை  பறிப்பு  மற்றும் இசுலாமிய  தமிழர்  மீதான  கலவரங்களின் போது

எடுக்கப்பட்ட முடிவுகள்

அதைத்தானே  சொல்கின்றன

இன்றும் இவ்வாறான  சிங்களவர்களுடான  

தமிழர்களின்   ஒத்துழைப்பை

மலையகத்தமிழர்களும்  இசுலாமியத்தமிழர்களும் குத்திக்காட்டுகிறார்களே??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

 சிங்கள அரசின் அராஜகம் எங்கு நடக்கிறதோ அதுதான் நான் பிறந்த எனது சொந்த நாடு. என் தந்தை, தாத்தா, முப்பாட்டன், கொப்பாட்டன் வியர்வை சிந்தி உழைத்து கட்டி குடியிருந்த வீட்டில் கம்பு நடாதவன்குடியிருந்து நட்டுத் தண்ணி ஊத்தாதவன்  பலன் அனுபவிக்கிறான். நாங்கள் வாடகை வீட்டில். என் மூதாதையர் வீட்டிற்கு நாங்கள் போக முடியாதாம். உயர் பாதுகாப்பு வலயமாம் சொல்லுறான் உறுதி, உரிமை  இல்லாதவன். 

விடுதலை புலிகள் கூட என்னை சொந்த மண்ணுக்கு போக விடாத காலம் ஒன்று இருந்தது. போர்க்கால இரகசியங்களை பாதுகாக்கவும் என்னை தவறுதலான வெடி விபத்துகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த தடை அமைந்து இருந்தது. பல இன்ப துன்ப குடும்ப நிகழ்வுகளுக்கு போக முடியவில்லை.  இன்று நான் எனது நிலத்துக்கு பொய் வர கூடியதாக இருக்கிறது. 

இலங்கை இராணுவத்துக்கு உயர் பாதுகாப்பு வலயம் ஏன் தேவைப்படுகிறது? தமிழர் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களும் தாக்குதல் நடத்தினார்கள். இன்று வெற்றி பெற்று நிலத்தை கைப்பற்றி உயர் பாதுகாப்பு வலயம் அமைத்து இருக்கிறார்கள். இந்த நிலத்தை எப்படி மீட்டு எடுக்க போகிறீர்கள்? இரண்டு வழிகளே இருக்கின்றன:

  1. மீண்டும் போர் தொடங்கி இலங்கை இராணுவத்தை அடித்து விரட்டி நிலத்தை மீட்கலாம்.
  2. இனி தமிழர் அடிக்க மாட்டார்கள் என்று இலங்கை அரசு நம்பும் அளவுக்கு உறுதியான உறவை ஏற்படுத்தி அவர்களாகவே நிலத்தை தர செய்யலாம்.

இவை இரெண்டுமே சாத்தியம். அங்கே வாழும் மக்கள் இன்னும் ஒரு போருக்கு ஆதரவு தரும் நிலையில் இல்லை. இனி போர் வெல்லும் சாத்தியமும் இல்லை. போர் பற்றிய முயற்சி பற்றிய சந்தேகமே இந்த  உயர் பாதுகாப்பு வலயம் இருப்பதற்கான காரணம். 

சர்வதேச நாடுகள் உயர் பாதுகாப்பு வலயத்தை விடுவிக்கும் என்று சிலர் நம்பலாம். இந்தியா விடுவிக்கும் என்று வேறு சிலர் நம்பலாம். மற்றும் சிலர் ஐக்கிய நாடுகள் சபை விடுவிக்கும் என்று நம்பலாம். எனது நம்பிக்கை எவை எவையும் சாத்தியம் அற்றவை என்பதே.

 அடிமை வாழ்வை, அந்நியனின் ஆக்கிரமிப்பில் வாழும் வாழ்வை சுதந்திரம் என்று மொழி பெயர்த்தால் வேறு எப்படிச் சொல்வது?  

அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பரின் ஆதரவுடன் ஒரு கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதியானார். கறுப்பர் தாம் அடிமைகளாக இருக்காமல் தாமும் நாட்டின் கட்டமைப்பில் பங்காளிகளாக மாற விரும்பி தம்மை அடிமைகளாக வைத்திருந்த வெள்ளையருடன் கூடி அவர்களின் நம்பிக்கையை வென்று உயர்ந்தார்கள். 

இலங்கை தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கும் கூத்தை பார்த்தால் எவரும் அடிமைகள் என்று சொல்ல மாட்டார்கள். வெளிநாட்டு பணம் ஆறாயை ஓடுகிறது. தமிழர் நீதிமன்றங்களில் இராணுவம் போலிஸ் உட்பட பலருக்கு கடும் தண்டனைகளை தமிழ் நீதிபதிகள் விதிக்கிறார்கள். இவை அடிமைகளுக்கு எங்கும் இல்லாத உரிமைகள். 

4 minutes ago, விசுகு said:

அகண்ட    ஈழமோ  அல்லது  தமிழகத்துடன் சேர்ந்து சிங்களவரை தூக்கி  விடுவோம்  என்றதங்கள் கூற்று தவறு  தானே?

அகண்ட ஈழம் ??? எங்கே நான் இது பற்றி எழுதினேன்? நான் இது பற்றி எதுவும் எழுதவில்லை. அகண்ட ஈழம் பற்றி ஒரு சில சிங்களவர்கள் எப்போதோ எழுதிய நினைவு. அது வெறும் இன வெறி பிரச்சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

தமிழர் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தினார்கள்.

 சிங்களவருக்காக  பிரித்தானியா வரை சென்று வாதாடி தண்டனையிலிருந்து காப்பாற்றிய தமிழர் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தினார்கள் என்றால் அது சிங்களவனின் நன்றி கெட்ட பண்பே காரணம். அமெரிக்க மக்களின் மனநிலை சிங்களவர்க்கு வராது. அப்படி ஒரு மனநிலை சிங்களவருக்கு இருந்திருந்தால் கதிர்காமர் எப்பவோ இலங்கையின் ஜனாதிபதியாக வந்திருப்பார். முத்தையா முரளிதரன் கிரிக்கட்டில் தலைவராய் இருந்திருப்பார். மற்றைய நாடுகளின் அரசியலமைப்பையே ஏற்க தயங்கும், எதிராய் இனவன்முறையை தூண்டும் இனம்  எப்போ நீங்கள் சொல்வதை ஏற்கும். போர் செய்யும்போது சர்வ்தேசத்திடம் பிச்சை எடுக்க கொடுத்த வாக்குறுதிகளையே காற்றிலே பறக்க விட்டிட்டு பெப்பே காட்டுது. உப்பிடித்தான் எங்கட அரசியல் தலைவர்களும் நம்பி உள்ளதையும் இழந்தார்கள். எங்களின் இழப்பை யாரும் மீட்டுத் தருவார்கள் என்று நான்நினைக்கவில்லை. ஆனால் தருமம் ஒருநாள் வெகுண்டெழும் அப்போ யாரும் அதை தடுக்க முடியாது. 

7 hours ago, Jude said:

தமிழர் நீதிமன்றங்களில் இராணுவம் போலிஸ் உட்பட பலருக்கு கடும் தண்டனைகளை தமிழ் நீதிபதிகள் விதிக்கிறார்கள்.

இது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்களை விசாரிக்க விடாமல் தடுப்பதற்கு சிங்களவன் போடும் நாடகம். தமிழ் நீதிபதிகள் தண்டனை விதிக்கலாம் ஆனால் நிறைவேற்றப்படாது. அப்படியாயின் எத்தனையோ இராணுவத்தினர் தூக்கில் ஏறியிருப்பர். அந்த தமிழ் நீதிபதிகளால் அநியாயமாக சிறையில் வாடும் அப்பாவி இளைஞர்களை விடுவிக்க முடியவில்லையே, விசாரிக்கவும் இயலவில்லை. ஒரு வழக்கில் இருந்து விடுவித்தால் இன்னொரு வழக்கை போட்டு அவர்களுடைய ஆயுளை சிறையிலேயே முடித்து விடுகிறார்களே .தங்களது பயத்தினால் , சுயநலத்தினால். சிங்களவனின் பயத்துக்கு  ஒரு இனம் முழுவதும் இரை ஆக வேண்டும் என்று நினைக்கும் மனிதர் நீங்கள் ஒருவராகத்தான் இருப்பீர்கள். இனிமேல்இதுபற்றி எழுத நான் விரும்பவில்லை. நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.3.2018 at 9:27 PM, Jude said:

என்ன உரிமைகள் பறிக்கப்பட்டன? கொழும்பில் வீடு வாங்க தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பு பங்கு சந்தையில் கொள்ளை அடிக்க தமிழருக்கு உரிமை இல்லையா?

மத்திய வங்கிக்கு ஆளுநராக வர தமிழருக்கு உரிமை இல்லையா?

கொழும்பில் சைவ கோயில் கட்டவும் சைவ பாடசாகைகள் நடத்தவும் உரிமை இல்லையா?

கொழும்பு, கண்டி யாழ்ப்பாணம் எங்கும் வணிகம் செய்ய உரிமை இல்லையா?

வாள்வெட்டு குழுக்களை அமைத்து வெளிநாட்டு பணத்தில் மோட்டசைக்கில் வாங்கி அதில் போய் போலீஸ்காரரின் கை வெட்ட உரிமை இல்லையா?

என்ன உரிமை இல்லை?

தாராளமாக விட்டு இருக்கிறார்களே?

கனடாவுக்கு போக விட்டார்களே?

ஸ்ரீ லங்கன் விமானத்திலேயே ஐரோப்பா எங்கும் போய் தாராளமாக குடியேற விட்டுத்தானே இருக்கிறார்கள்?

தமிழ் நாட்டுக்கும் போக விட்டார்கள் தானே?

அவர்களுக்கு உலகில் உள்ள ஒரே நாட்டில் 70% கடல் வளத்தை பிரித்து எடுத்து அவர்களை அங்கு தடை செய்ய கேட்கிறீர்கள்,  அதை தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழரிலும்  அறிவாளிகள்.

தமிழரிலும் பார்க்க மற்ற நாட்டவருடனும் இனத்தவருடனும் கூட்டாக இணைந்து தமிழரையும் அழிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது.

இணைந்து வாழ விரும்பினால் எமது முட்டாள்தனத்தையும் பொருட்படுத்தாமல் இணைத்து வாழ முன்வர கூடும்.  நாமே எம்மை தொடர்ந்தும் அழித்து கொள்ள விரும்பினால் அவர்கள் அது பற்றி அலட்டி கொல்ல போவதில்லை. அவர்களுக்கு தொல்லை தீர்ந்ததாக  இருக்கும்.

தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .. தெரிந்து கொண்டேன் உண்மையை
தெரிந்து கொண்டேன் உண்மையை
தெய்வமே தெய்வமே....

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Jude said:

அகண்ட ஈழம் ??? எங்கே நான் இது பற்றி எழுதினேன்? நான் இது பற்றி எதுவும் எழுதவில்லை. அகண்ட ஈழம் பற்றி ஒரு சில சிங்களவர்கள் எப்போதோ எழுதிய நினைவு. அது வெறும் இன வெறி பிரச்சாரம்.

தமிழகத்துடன் சேர்ந்து

தம்மை  தமிழர்கள்   அழித்துவிடுவார்கள்  என்ற பயம்

சிங்களவருக்கு  இருக்கு  என்று எழுதியது தாங்கள்  தானே  சகோ?

எனக்கே  குளப்பமா  இருக்கு

எனக்கு  வயது   போய் மாறாட்டம்  வந்திட்டுதோ என்று:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2018 at 1:54 PM, Jude said:

நீங்கள் சிங்களவரின் மனநிலையை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையா? தமிழருக்கு தன்னாட்சி பலம் இருந்தால் தமிழ்நாட்டின் உறவுடனும் இந்திய மத ரீதியான உறவுடனும் கூடிய பொருளாதார அரசியல் பலம் கொண்டு சிங்களவரை தமிழர் நசுக்கி விடுவார்கள் என்பது சிங்களவரின் நிரந்தர பயம்.

5 hours ago, விசுகு said:

தமிழகத்துடன் சேர்ந்து

தம்மை  தமிழர்கள்   அழித்துவிடுவார்கள்  என்ற பயம்

சிங்களவருக்கு  இருக்கு  என்று எழுதியது தாங்கள்  தானே  சகோ?

எனக்கே  குளப்பமா  இருக்கு

எனக்கு  வயது   போய் மாறாட்டம்  வந்திட்டுதோ என்று:grin:

இங்கே எங்கே நீங்கள் குறிப்பிட்ட "அகண்ட ஈழம்" வந்தது? 

சீனாவுடனும் இந்தியாவுடனும் சேர்ந்து சிங்களவர்கள் ஈழத்தமிழரை அழித்தார்கள்.

அதற்காக இலங்கை இப்போது "அகண்ட இந்தோசீனா" ஆகி விட்டதா?  இல்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா.. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உறுதியாக கால்பதிக்கும் வரை இப்படியான சீன்களுக்கு குறைச்சலே இருக்காது.

இதனால்.. தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையாது.

அமெரிக்காவின் நண்பர்கள்.. அமெரிக்காவாலேயே அழிக்கப்பட்டது தான் வரலாறு. இதனை தமிழர்கள் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியம்.

அமெரிக்காவை தயவு வைச்சு தமிழர்களின் இராஜதந்திரம் நகருமாக இருந்தால்.. அது முள்ளிவாய்க்காலை விட மோசமான தோல்விகளை தமிழர்களுக்குப் பெற்றுத்தருமே தவிர தமிழர்கள் தலை நிமிர முடியாது.

அதனால்.. பன்முகத்தன்மை.. பல முனை இராஜதந்திரம் ஒன்றே.. சிங்களவனையும் அமெரிக்கனையும் ஹிந்தியனையும் சீனனையும் ஒரே நேரத்தில் சந்திக்க வகை செய்யும். ஆனால்.. இதற்கான மதிநுட்பத் தலைமைகள் இப்போ தமிழர்களிடம் இல்லை.. துரதிஷ்டவசமான யதார்த்தமாகும்.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2018 at 5:35 PM, Jude said:

அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பரின் ஆதரவுடன் ஒரு கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதியானார். கறுப்பர் தாம் அடிமைகளாக இருக்காமல் தாமும் நாட்டின் கட்டமைப்பில் பங்காளிகளாக மாற விரும்பி தம்மை அடிமைகளாக வைத்திருந்த வெள்ளையருடன் கூடி அவர்களின் நம்பிக்கையை வென்று உயர்ந்தார்கள். 

இலங்கை தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கும் கூத்தை பார்த்தால் எவரும் அடிமைகள் என்று சொல்ல மாட்டார்கள். வெளிநாட்டு பணம் ஆறாயை ஓடுகிறது. தமிழர் நீதிமன்றங்களில் இராணுவம் போலிஸ் உட்பட பலருக்கு கடும் தண்டனைகளை தமிழ் நீதிபதிகள் விதிக்கிறார்கள். இவை அடிமைகளுக்கு எங்கும் இல்லாத உரிமைகள். 

கதை வசனம் நல்லா இருக்குது. யதார்த்தம்..??!

ஒபாமா சனாதிபதி ஆகி.. அமெரிக்க கறுப்பின மக்களுக்கு எதிரான சிந்தனைகளை மாற்றி என்ன புரட்சியா செய்து கிழித்தார். அவர் காலத்திலேயே அவர் ஆட்சியிலேயே கறுப்பின மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  அதுவும் வெறும் சந்தேகத்தின் பேரில்.

பேர் இடர் ஒன்றின் போது கறுப்பின மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.

இவரின் கதை வசனமும் இப்படியானது தான்.

வெறும் வெளிப்பூச்சுக்காக நிகழும் சில நிகழ்வுகளை மையமாக வைத்து தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை தாரை வார்த்துவிட வேண்டும் என்று இவர் போன்றவர்கள் நினைப்பதன் வெளிப்பாடுதான்.. இப்படியான கதை வசனங்கள்.

கண்டியில் நிகழ்ந்தவை.. சொறீலங்காவின் சிங்கள பெளத்த பேரினாவதத்தின் உண்மை நிலையை அப்பட்டமாகச் சொல்லி வைக்கிறது. 

இதை அறியாமல்.. தமிழர்கள் வெளிநாட்டுக் காசு சுகத்தில் போடும் கூத்துகள்.. நிலத்தில் அவர்களின் இருப்பை பலவீனமாக்குமே தவிர.. அவர்களுக்கு ஒரு உறுதியான வாழ்வுரிமையைப் பெற்றுக் கொடுக்க உதவாது.

இது தான் சொறீலங்காவில் கள யதார்த்தம். tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தமிழர்கள் வெளிநாட்டுக் காசு சுகத்தில் போடும் கூத்துகள்.. நிலத்தில் அவர்களின் இருப்பை பலவீனமாக்குமே தவிர.. அவர்களுக்கு ஒரு உறுதியான வாழ்வுரிமையைப் பெற்றுக் கொடுக்க உதவாது.

வெளிநாட்டு காசில் இலங்கையில் தான் நிறைய கூத்து நடக்கிறது. இப்போது ஏதோ பலமாக இருக்கிறோம் என்ற தோரணையில் அல்லவா எழுதி இருக்கிறீர்கள்? 

Edited by Jude

மனிதர்கள் பலவிதம்!

சிலர் தாங்கள் நேர்வழியில் சொந்தமாக உழைத்து, தமது குடும்பம், உறவுகள் மற்றும் இனத்தின் கவுரவத்தை காத்து, தமது குடும்பம், உறவுகள் மற்றும் இனத்திற்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி தேடி அர்த்தமுடைய வாழ்க்கை வாழ முனைகிறார்கள்!

இன்னும் சிலர் குறுக்குவழியில் பெறக்கூடியவற்றை பெற்று, குடும்பம், உறவுகள் மற்றும் இனத்தின் கவுரவங்களைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், தமது குடும்பம், உறவுகள் மற்றும் இனத்திற்கு ஏற்பட்ட அநீதிகளைப் பற்றி கவலையற்று, பலமாது எது எனத் தோன்றினாலும் அதை இறுக பற்றிப்பிடித்து அதுவே கதியென வாழும் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்வதை பெரும்பேறாக கருதுகின்றனர்.

இன்னும் சிலர் நேர்மையற்ற முறையில் பெறக்கூடியவற்றை பெற்று, குடும்பம், உறவுகள் மற்றும் இனத்தின் கவுரவங்களை விலைபேசி, தமது குடும்பம், உறவுகள் மற்றும் இனத்திற்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு காரணமான சாத்தான்களின் காலடியில் வீழ்ந்து, சாத்தான்களின் புகழ்பாடி, சாத்தான்களை மகிழ்வித்து, சாத்தான்கள் வீசும் எலும்புத்துண்டுகளை நக்கி மகிழ்ந்து வாழும் ஈனப் பிழைப்பை பெரும் சுதந்திரமாகவும் பெருமையாகவும் கருதுகின்றனர்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2018 at 12:56 AM, போல் said:

மேலே முக்கி முக்கி சகோதர இனத்துடன் கூட்டாக வாழ வேண்டுமென கொக்கரிப்பவர் இதில் மூன்றாவது ரகம். சொரணை கெட்டதுகள் !!

16 hours ago, Eppothum Thamizhan said:

மேலே முக்கி முக்கி சகோதர இனத்துடன் கூட்டாக வாழ வேண்டுமென கொக்கரிப்பவர் இதில் மூன்றாவது ரகம். சொரணை கெட்டதுகள் !!

சகோதர இனங்களுடன் கூட்டாக, இணக்கமாக வாழ்வதே அடிப்படை மனித தர்மம்.

ஆனால் இலங்கையில் இருப்பது காலம் காலமாக எமது தமிழினத்தையே திட்டமிட்டு அழிக்கும் இனப்படுகொலைகார இனம். அந்த இனப்படுகொலைகார இனத்துடன் கூட்டாக, இணக்கமாக இருக்க மறுப்பதும் அடிப்படை மனித தர்மம் தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.