Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" நினைவுப் பரிசு! - வெற்றியாளன் மணிவாசகன்!

Featured Replies

  • தொடங்கியவர்

போட்டியில் யாழ் கள உறவுகள் அனைவரும் காட்டும் ஆர்வத்திற்கு காட்டும் மிக்க நன்றி! போட்டி நேரடியாக நடைபெறும் விடயத்தை உங்கள் நண்பன், நண்பிகளிற்கும் சொல்லி விடுங்கள்.

யாழ் கள உறவுகளிற்கு போட்டி பற்றிய இன்னுமொரு அன்பான அறிவித்தல்

நேரடிப் போட்டியில் கேட்கப்படக் கூடிய, யாழ் இணையம், உறுப்பினர்கள், யாழ் இணைத்தில் ஒட்டப்பட்டுள்ள செய்திகள் சம்மந்தமான கேள்விகளையும், அதற்கான பதில்களையும் நீங்கள் தனி மடலில் எனக்கு அனுப்பி வைக்கமுடியும். பொருத்தமான கேள்விகள் எழுந்தமானமான முறையில் தேர்வு செய்யப்பட்டு (பல கேள்விகளும், பதில்களும் அனுப்பப்பட்டால்) போட்டியில் கேட்கப்பட முடியும். ஆனால், ஒருவர் பல கேள்வி, பதில்களை அனுப்பினாலும், அனுப்பியவற்றில் ஒரு கேள்வி மட்டுமே போட்டிக்கு சேர்த்துக் கொள்ளப்படும். 01 per 01

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

போட்டி ஒழுங்கமைப்பாளர்

Edited by மாப்பிளை

  • Replies 336
  • Views 23k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டியில் யாழ் கள உறவுகள் அனைவரும் காட்டும் ஆர்வத்திற்கு காட்டும் மிக்க நன்றி! போட்டி நேரடியாக நடைபெறும் விடயத்தை உங்கள் நண்பன், நண்பிகளிற்கும் சொல்லி விடுங்கள்.

யாழ் கள உறவுகளிற்கு போட்டி பற்றிய இன்னுமொரு அன்பான அறிவித்தல்

நேரடிப் போட்டியில் கேட்கப்படக் கூடிய, யாழ் இணையம், உறுப்பினர்கள், யாழ் இணைத்தில் ஒட்டப்பட்டுள்ள செய்திகள் சம்மந்தமான கேள்விகளையும், அதற்கான பதில்களையும் நீங்கள் தனி மடலில் எனக்கு அனுப்பி வைக்கமுடியும். பொருத்தமான கேள்விகள் எழுந்தமானமான முறையில் தேர்வு செய்யப்பட்டு (பல கேள்விகளும், பதில்களும் அனுப்பப்பட்டால்) போட்டியில் கேட்கப்பட முடியும். ஆனால், ஒருவர் பல கேள்வி, பதில்களை அனுப்பினாலும், அனுப்பியவற்றில் ஒரு கேள்வி மட்டுமே போட்டிக்கு சேர்த்துக் கொள்ளப்படும். 01 per 01

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

போட்டி ஒழுங்கமைப்பாளர்

<<<<

மாப்பிள்ளை, உங்களின் உற்சாகத்துக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்து இயக்கும் பொறுப்புக்கும் என் பணிவான வணக்கங்கள்+நன்றிகள்! தொடரட்டும் உங்கள் பணி..

30 ம் திகதி வெள்ளிக் கிழமையாச்சே. அதுவும் மாத நிறைவுநாள்.கணக்கியலாளர்களுக

மாப்பி உங்கள் உற்சாகமான ஒழுங்கமைப்புக்கு முதலில் பாராட்டுக்கள்.

போட்டிகள்,விதிமுறைகள் எல்லாம் ஓகே.

ஆனால் டைம் தான்..கொலிஜ் டைம். எனக்கு சமீபத்தில் இறுதி பரீட்சை

என்பதால் கொலிஜுக்கு கட்டாயம் போக வேண்டும். அதுவும் தமிழ் தங்கை போல பஸ்ஸில் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பேன். பார்ப்போம் முடிந்த வரை விரைவாக வர முயற்சி பண்ணுகிறேன். சிலவேளை 12.30 க்கு பின்னர் நான் வந்து இடையில் இணைந்து கொள்ளலாமா???

:(:o:o:(:(:(:(

வானவில் நம்மன்ட பமிலியை நக்கல் அடிக்கிறார் நீர் எப்படியாவது யாழ்களத்தை பற்றி கரைத்து குடித்து முதலிடம் பெற்றுவிடும் சரியோ?

:D ம் வானவில் எனக்கும் ஒரு கப் அனுப்பி வையுங்க...ஓகே :lol:

அப்புறம் உங்க ஜம்மு கோவிப்பாங்க...அவாக்கு முதல் ஒரு கிளாஸ் குடுங்க..அப்புறம் எனக்கு ;)

  • தொடங்கியவர்

நீங்கள் எப்பொழுதும் போட்டியில் இணைந்து கொள்ள முடியும், ஆனால், ஆரம்பத்தில் இருந்து கலந்து கொண்டாலே, வெற்றி பெற முடியும். :P

எனினும், போட்டியை அரை மணித்தியாலம் தாமதித்து தொடங்க முடியும். ஆனால், இதற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் உறவுகள் உடன்பட வேண்டும். தற்போதைய திட்டத்தின்படி, நேரடிப் போட்டி அவுஸ்திரேலிய நேரப்படி, இரவு10.30 ற்கு ஆரம்பமாகின்றது. போட்டி முடிவதற்கு அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 11.30 ஆகும்.

எனினும், வாரவிடுமுறை என்பதால் அவுஸ்திரேலியாவில் வாழும் உறவுகள் சற்று தாமதமாக தூக்கத்திற்கு சென்றாலும் பாதகம் இல்லை என நினைக்கின்றேன். :)

எனவே, மற்றைய கள உறவுகளினதும் வசதியைப் பொறுத்து போட்டியை அரை மணித்திலாலம் பிந்தி ஆரம்பிக்க முடியும் என நினைக்கின்றேன்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

போட்டி ஒழுங்கமைப்பாளர்

நன்றி மாப்பிள்ளை. ஆனால் அவுஸ்ரேலியா உறவுகள் என்ன சொல்வார்கள் தெரியவில்லை. வெயிட் பண்ணுவம் என்ன சொல்கிறார்கள் என்று.

முடியாத பட்சத்தில் பிரச்சனை இல்லை. நான் காரை கொண்டு போக வீட்டில் ஒழுங்கு செய்வம். :):unsure:

நல்ல விளையாட்டு , விளையாடவும் விருப்பம் தான், நேரம் தான் நமக்கும் பிரச்சனை... வெள்ளிக்கிழமையா போச்சே , நான் பள்ளியால் வீட்ட வர எப்படியும் 13:00 மணியாகுமே. அப்படியென்றால் நானும் சகியைப் போல் அரைவாசிப் போட்டியில் இருந்துதான் கலந்து கொள்ளனும்..... :) நிறைய போட்டிகளை முன்னிண்டு செய்யும் மாப்பிள்ளைக்கு பாராட்டுக்கள்....! :P

Edited by அனிதா

அப்பிடி செய்யேலாதாம் அனி... :)

அதுதான் நான் யாருக்கு என்ன ஆனாலும் பறவால..காரில கொலிஜ் போறதா இருக்கேன் :unsure:

ஆமா இங்கு அரட்டை அடிக்கலாமா? :o அப்புறம் பேச்சு விழாதே :(

Edited by ப்ரியசகி

ஆ.....நான் போட்டியில் கலந்து கொள்கிறேன். ஆனால் நானும் பள்ளியால் வர நேரமகிவிடும். ஆகவே போடியில் தோற்றால் யாரும் கோபிக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான திட்டம் மாப்பு.உங்களின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். எனக்கும் இங்கு உள்ள சிலரை மாதிரி நேரம் சரி வராது.இதில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் வாழ்துக்கள்.

நல்ல விடயம் மாப்பிள்ளை.

ம்ம் நேரம்தான் சிக்கலா இருக்கு இருந்தாலும் என்னால் முடிந்தளவு முயற்சி செய்கிறேன்

நன்றி

  • தொடங்கியவர்

நேரடிப் போட்டி நிகழ்ச்சியில் நீங்கள் பங்குபற்றுவதற்கு தயாரா?

போட்டில் வெற்றி பெறுவதற்கு உங்களைத் தயார் செய்யக்கூடிய மாதிரிப் பயிற்சி வினாக்கள்!

Sample Questions

1. யாழ் இணையத்தில் இதுவரை ஆகக்கூடியளவு கருத்துக்களை பிரசுரித்தவர், பிரசுரித்த கருத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

2. யாழ் களத்தில் நடைபெறும் பொது அறிவுப் போட்டியை ஆரம்பித்துவைத்தவர் யார்?

3. "வேர்த்திருக்கு விசிறி விடு" எனும் கவிதையை யாழ் களத்தில் எழுதியவர் யார்?

4. "பீரோ, பூட்டு எதுக்கு? 'டென்ஷன்' திருடன்!" என்ற தலைப்பில் வரும் நகைச்சுவையை ஒட்டியவர் யார்?

5. "ஆங்கிலப் பாடல்கள் கேட்பதன் மூலம் உங்கள் ஆங்கில அறிவை இலகுவாக பெருக்கிகொள்ள முடியும்" என்ற தலைப்பில் மாப்பிளை ஒட்டியுள்ள தலைப்பில் "வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் விரும்புபவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும்" என மாப்பிளை சிபாரிசு செய்யும் பாடல்கள், எந்த இசைக்குழு அல்லது இசைக் கலைஞருடையது?

6. யாழ் களத்தில் யாழ்வினோவினால் சிபாரிசு செய்யப்பட்ட, தேசியத் தலைவரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையத் தளத்தின் முகவரி என்ன?

7. சித்திரை மாதத்தில் யாழ் களத்தில் எத்தனைபேர் பிறந்தநாள் கொண்டாடுகின்றார்கள்?

8.

"இவ்வுலகில் ஒரே ஒருமுறைதான் நான் வாழ்கின்றேன்

ஆகவே நல்லவை செய்ய வேண்டுமாயின் அன்பு செய்ய வேண்டுமேனில்

அதை இன்றே இப்பொழுதே செய்வேன்"

என்ற இந்தக் கருத்து யாழ் களத்தில் எவரது Blog இல் இணைக்கப்பட்டுள்ளது?

9. யாழ் களத்தில் எத்தனை நிபந்தனைகள் உள்ளன? இதில் ஆறாவதாகக் கூறப்படும் நிபந்தனை என்ன?

10. மாவீரர் மேஜர் டம்போவின் எத்தனையாவது ஆண்டு நினைவு அஞ்சலி அண்மையில் யாழ் களத்தில் நினைவுகூறப்பட்டுள்ளது?

  • தொடங்கியவர்

நேரடிப் போட்டி நிகழ்ச்சியில் நீங்கள் பங்குபற்றுவதற்கு தயாரா?

போட்டில் வெற்றி பெறுவதற்கு உங்களைத் தயார் செய்யக்கூடிய மாதிரிப் பயிற்சி வினாக்கள்!

Sample Questions

1. "பிரெஞ்சு மொழியைப் பிரதானமாகக் கொண்ட ஐந்து நாடுகள் இணைந்து இலங்கையில் நடத்திய குறுந்திரைப்பட விழாவில், தமிழ் திரைப்படம் ஒன்று முதன் முறையாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது" என்ற வானவில் ஒட்டிய செய்தியில் கூறப்படும் குறுந்திரைப்படத்தின் பெயர் என்ன?

2. "அண்ணை றைற்" என்ற தலைப்பில் கானாபிரபா ஒட்டிய செய்தியில் பேசப்படும் ஈழத்து கலைஞரின் பெயர் என்ன?

3. மயூரேசன் எழுதிய காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) இல் வரும் கதாநாயகியின் பெயர் என்ன?

4. யாழ் கள உறுப்பினர்களிடையே அரவிந்தன் நடாத்தும் கீரிக்கட்டு புதிர்ப் போட்டியில், எத்தனை உறுப்பினர்கள் பங்குபற்றுகின்றார்கள்?

5. கறுப்பி நடாத்தும் பாட்டுக்குள்ளே பாட்டு போட்டியில், எழுதப்பட்டுள்ள முதலாவது பாடல் என்ன?

6. யாழ் களத்தில் நடாத்தப்படும் பொது அறிவுப் போட்டியில், யாழ்வினோ தந்த தகவலின்படி, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ஐ.எஸ்.எஸ்.) ஒரு நாளில் எத்தனை தடவை பூமியை சுற்றி வலம் வருகின்றது?

7. "சீனாக்காரனுக்கு தமிழனால் நவீன குடை விற்க முடியுமா?" என யாழ் களத்தில் கேள்வி எழுப்பியவர் யார்?

8. பழைய வின்டோசிற்குள் நுழைந்து "System Restore" செய்ய வழியிருக்கின்றதா? என்று வியாசன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐயா இ.தேவகுரு

"உங்கள் கணனிஐ இயக்கி Post முடிந்தவுடன் O/S தேர்வு செய்து அதன் பின் ***கீறு*** அடித்து Boot Options க்கு போய் Safe Mode With Command Prompt ஐ தெரிவு செய்து அதில் பூட் பண்ணி, Start--> Run-->(type) CMD -->ok.

Command Prompt விண்டோவில் %systemroot%\system32\restore\rstrui.exe என ரைப் செய்து Enter ஐ தட்டவும். System Restore Wizard தோன்றி உங்களை வழிநடத்தும். முந்திய ஒரு திகதிக்கு restore பண்ணவும். "

என்று பதில் அளித்துள்ளார். இங்கு ***கீறு*** அடித்து என்று கூறப்பட்டுள்ள இடத்தில் கீறுக்கு பதிலாக வர வேண்டிய சரியான சொற்பதம் எது?

9. வெளிவந்துவிட்டது 'தாயக தரிசனம் பார்வை - 1' - என்று கறுப்பி கூறும் செய்தியில் கூறப்படும் இதழை வெளிவிடுவது யார்?

10. சாத்திரி ஒட்டிய தகவலில் உள்ள கீழ்வரும் பாடலைப் பாடியவர் யார்?

"உருவமுமாகி உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்

நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து

யோகமும் வாரமும் நாளும் அறிந்து..."

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் வசிப்பவர்கள் 30ம் திகதி இரவு கலந்து கொள்வார்களா என்பதில் ஒரு சந்தேகம். எனென்றால் அங்குள்ள சிட்னி முருகன் கோவிலில் சப்பரத் திருவிழா. அதில் பல சிட்னிவாழ் தமிழர்களைக் காணலாம். கிட்டத்தட்ட ஒன்று கூடல் என்பதினால் யாழுக்கு சிட்னி வாழ் யாழ்கள உறுப்பினர்கள் அன்னேரத்தில் வருவது சந்தேகம்

  • தொடங்கியவர்

போட்டி சிட்னி நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகும். கோயில் திருவிழாவை முடித்துக் கொண்டு இரவு சுமார்10.00 மணிக்கு முன் வீடு திரும்ப முடியாதா? ஊரில் கூட சப்பரத்திருவிழா இரவு 10.00 மணியுடன் வழமையாக முடிந்துவிடுமே? :lol:

யாழ் களத்தில் கோயிலிற்கு போய் சுவாமி தரிசனம் செய்யும் நிறைய சைவ பக்தர்கள் இருக்கின்றார்களா? :lol:

Edited by மாப்பிளை

போட்டி சிட்னி நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகும். கோயில் திருவிழாவை முடித்துக் கொண்டு இரவு சுமார்10.00 மணிக்கு முன் வீடு திரும்ப முடியாதா? ஊரில் கூட சப்பரத்திருவிழா இரவு 10.00 மணியுடன் வழமையாக முடிந்துவிடுமே? :rolleyes:

யாழ் களத்தில் கோயிலிற்கு போய் சுவாமி தரிசனம் செய்யும் நிறைய சைவ பக்தர்கள் இருக்கின்றார்களா? :rolleyes:

மாப்பு போயிட்டு சாப்பிட்டு விட்டு வரமுடியாது எல்லாம் சுத்தபடுத்தி விட்டு வர நேரம் எடுக்கும் பட் உங்கள் போட்டியை சிறப்பாக நடத்துபடியும் சில அவுஸ்ரேலிய உறவுகள் இணைவார்கள் என்று நினைக்கிறேன்....

நல்ல மூயற்சி ஆந்த பட்டம் எனக்குத்தான் கவலைப்படாதீங்க யாழ் கள ஜேம்ஸ்ப்பண்ட்007 ஈழவன் வாறார் பராக் பாராக்

நல்ல மூயற்சி ஆந்த பட்டம் எனக்குத்தான் கவலைப்படாதீங்க யாழ் கள ஜேம்ஸ்ப்பண்ட்007 ஈழவன் வாறார் பராக் பாராக்

வழி விடு வழி விடு வழி விடு நம்ம 007 வாறாரு :angry:

அட..நான் தற்போது என்னை சோதனைக்கு தயாராக்கிக் கொண்டள்ளேன்...

மாப்பு எல்லா பகுதியையும் படிக்கும் படி வைத்துள்ளார்...

உரே ..டென்சனா இருக்கு....

லஞ்சம் தாறன் எனக்கு கொஞ்சம் தயவு காட்டும்..

தனி மடலில் தயவு காட்டும்..குறிப்பு...மோகனுக்கு சொல்லிப் போடாதீம்...

சத்தியமா..எனக்கு தெரியாது..அவருக்கு எத்தனை வயசு...??? 19....????

ரசிகைக்கு..10..கறுப்பிக்கு..17...து

கேள்விகளை தந்ததிற்க்கு மாப்புவிற்க்கு நன்றிகள், :rolleyes: கேள்விகள் அவுட் தேவையானவர்கள் வானவில்லை தொடர்பு கொள்ளுங்கள் :P :rolleyes:

வழி விடு வழி விடு வழி விடு நம்ம 007 வாறாரு :angry:

விலகி விலகிடு ஜம்ம்கு வருகிறாள்

:rolleyes:

கேள்விகளை தந்ததிற்க்கு மாப்புவிற்க்கு நன்றிகள், :lol: கேள்விகள் அவுட் தேவையானவர்கள் வானவில்லை தொடர்பு கொள்ளுங்கள் :P :rolleyes:

எந்த அம்பயர் அவிட் கொடுத்தவர்

:o

நாந்தான்

நாந்தான்

அப்ப சரி

;)

என்னாலும் கலந்து கொள்ள முடியாதே :lol: மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றையதினம் என்னால் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன்.எனினும் நிகழ்ச்சி இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.