Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

73 வயதில் அப்பாவின் காதல் - ஒரே மகளை நீதிமன்றில் சந்திக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

73 வயதில் அப்பாவின் காதல் - ஒரே மகளை நீதிமன்றில் சந்திக்கிறார்

லண்டன் மாநகர லாயர் ஆக,  ஏனெஸ்ட் அண்ட் யங் கொம்பனிக்கு வேலை பார்த்த 49 வயது மகள்.

an145477559richard-gittins-.jpg

தாயார் இறந்த பின்னர்.... வயதான தந்தையையும் தனது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள, ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு au pair (வெளிநாடுகளில் இருந்து வந்து மொழி பேசிப் பழக... குடும்பங்களுடன் சேர்ந்து இருந்து கொண்டே, தமது தங்கும் வாடகை உணவுக்காக, வீட்டு வேலைகளை செய்பவர்கள்) ஒருவரை வைத்துக் கொள்கிறார்.

28 வயதான பெண்ணோ, கிழவரை நன்றாக கவனிக்க......கோதாரி விழ... கிழவர்.... அவோவோட கிளம்பி ஓடி.... வெளிய போய்...தனி வீடு எடுத்து... கலியாணத்தினை செய்து ஒரு பிள்ளைக்கு தந்தையுமாகி விட்டார்.

Couple: The father, Paul David, and nanny Jobeth Daguio on their wedding day

இப்ப பிரச்சனை என்னவெண்டா.... என்னத்த சொல்ல.... கிழவர் கையில காசு இல்லை.... எல்லாத்தையும்... முதல் மனிசியோட சேர்ந்து... ஒரே மக்களுக்கு எழுதி வைச்சாச்சு.

வயதானவர்களுக்கு கிடைக்கிற வாராந்திர கொடுப்பனவுகளை வைத்து 28 வயதுக் காரியையும்... பிள்ளையையும் பார்க்கிறதெண்டால்.... முடியிற வேலையே...

இப்ப 75 வயது.... கிழவர் வேலைக்கு போகவும் ஏலாது.... நிம்மதியாக காதல் மோகத்தில் இருக்கவும் முடியாது. பிள்ளையையும் அன்பா வளர்க்க ஏலாது...

கிழவர் மண்டையைப் போடுவதுக்குள்ள எதாவது தேத்தினால் தான் சரி எண்டது... புது பெண்டாட்டி நிலைப்பாடு.

விளைவு மகளுக்கு கொடுத்த ஒரு மில்லியன் பெறுமதியான சொத்துக்களை திருப்பி கேட்டு நீதிமன்று போயுள்ளார் தந்தை.

மகள் பெயரில் உள்ள £750,000 தென் லண்டன் வீடு,  £275,000  கிழக்கு லண்டன் வீடு வாங்க 'முதல்' தான் கொடுத்ததாகவும்... அந்த வகையில் தனக்குரிய பங்கும்... மகளுக்கு கொடுத்த £100, 000 பெறுமதியான தான் வாங்கிக் கொடுத்த நகை... வீடுகளின் 2003 முதல் இருந்து கிடைத்த வாடகை பணத்தில் £150,000. அமரிக்காவின் பிளோரிடாவின் தான் கொடுத்த பணத்தில் வாங்கிய நான்கு வீடுகளில் விற்பனை மூலம் கிடைத்த லாபம் என கிழவரின், திருப்பிக் தர, கேட்க்கும் பட்டியல் நீள்கின்றது.

மகளோ... அம்மாவும் அப்பாவும்... தாம் சேர்த்த சொத்துக்களை எனக்கு அன்புடன் gift ஆக தந்தார்கள். கிபிட் ஆக தந்ததை மீண்டும் உரிமை கோரா முடியாது. தவிர அப்பாவின் உழைப்பு மட்டும் இல்லை... இது அம்மாவின் உழைப்பும் கூட என வாதிடுகிறார்.

கலியாணம் பண்ணி... மனைவி குழந்தை குடும்பத்தினை பார்க்க... வெளியே சென்று உழைக்கும் கணவர்... வேறு கலியாணத்துக்காக விவாகரத்து கோரின்.... அவரது உழைத்த சொத்தில்... தான் விரும்பியதை முதல் குடும்பத்துக்கு கொடுப்பது அந்தக் காலம். 

மனைவி வேலைக்கு போய் உழைக்காமல், வீட்டில் இருந்து குடும்பத்தினை பார்க்கவும், கணவர் வெளியே போய் உழைப்பதும்... ஒரு எழுதப் படாத ஒப்பந்தம். அதன்படி கணவர் உழைப்பதில் பாதி மனைவிக்கு என்று லண்டனில் நீதிமன்றங்கள் அதிரடி தீர்ப்புகள் வழங்கி பெரும் பணக்காரர்களை கதி கலங்க வைக்கும் நிலையில் இந்த வழக்கு புதிய கோணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.

நீதிமன்று என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது?

சரி, தம்பிக்கு எண்டு கொஞ்சம் காசை அக்கா கொடுக்கலாம் தானே என்று சொல்வீர்களா.... சரிதான்... கிழவர் பிறகு சும்மா இருப்பாரோ... உனக்கு தங்கச்சி பிறந்திருக்கு... ஹீ.. ஹீஹீ.... எண்டு வந்து நிற்பார் கண்டியளோ.... 77 வயதில....

என்னத்தை சேர்த்து வைக்கினமோ.... இல்லையோ... இதுகளை... அதுதான் காதல் உணர்வுகளை நல்லா சேர்த்து வைச்சு இருக்குதப்பா இந்த கிழடு எண்டு மட்டும் சொல்லாதீங்கோ... பிறகு பிலிபைன்ஸ் பொல்லாப்பு தான் வரும்.

இளந்தாரிப் பொடியளை தான்...பொம்பிளை பிள்ளையள் இருக்கிற வீட்டில நம்பி வைச்சு இருக்க ஏலாது எண்டு சொல்லுவினம்....இப்ப பொம்பிளையளை நம்பி.... கிழடு கட்டைகளை கூட விட ஏலாது போல கிடக்குது... கலிகாலமப்பா.. :rolleyes:

https://www.standard.co.uk/news/uk/city-lawyer-fights-father-75-she-doted-on-until-he-started-romance-with-her-nanny-28-a3813176.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இளந்தாரிப் பொடியளை தான்...பொம்பிளை பிள்ளையள் இருக்கிற வீட்டில நம்பி வைச்சு இருக்க ஏலாது எண்டு சொல்லுவினம்....இப்ப பொம்பிளையளை நம்பி.... கிழடு கட்டைகளை கூட விட ஏலாது போல கிடக்குது... கலிகாலமப்பா.. :rolleyes:

நாதமுனி

எனது பார்வை உங்களது நோக்கில் இருந்து மாறுபடுகிறது.

73 வயதுக் கிழவனுக்கும் வாழ்வு என்று ஒன்று இருக்கிறது. அந்தப் பக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மகளின் மீது எந்த தவறும் இல்லை..  எந்த ஒரு rational thinking  இல்லாத, பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காத தந்தையின் மீதுதான் முழுத்தவறும் இருப்பதாக உணர்கிறேன்.

முதுமையில் அரவணைப்பு, உணர்வுகளை பகிர துணை அவசியம் தேவைதான் ஆனால் தன் பலம் (உடற்சேர்க்கை அல்ல.), பொருளாதார வலிமையை கணக்கில் கொள்ளாமல், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய தந்தை, இப்படி பொறுப்பற்று நடந்திருப்பதை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும்..

தந்தை முதல் மனைவியோடு வாழ்ந்து சேர்த்த சொத்தில் மீண்டும் உரிமை கோருவது சரியன்று. அது முதல் மனைவியின் வாரிசுகளுக்கு பாத்தியதையாக இருப்பதே நியாயமானது!

மகள் மனமிறங்கி, நிபந்தனையோடு ஏதாவது கருணைத் தொகை கொடுத்தால் தான் உண்டு. Well done daughter..! o-k.gif

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

73 வயதில் அப்பாவின் காதல் - ஒரே மகளை நீதிமன்றில் சந்திக்கிறார்

...சரி, தம்பிக்கு எண்டு கொஞ்சம் காசை அக்கா கொடுக்கலாம் தானே என்று சொல்வீர்களா.... சரிதான்... கிழவர் பிறகு சும்மா இருப்பாரோ... உனக்கு தங்கச்சி பிறந்திருக்கு... ஹீ.. ஹீஹீ.... எண்டு வந்து நிற்பார் கண்டியளோ.... 77 வயதில....

....

https://www.standard.co.uk/news/uk/city-lawyer-fights-father-75-she-doted-on-until-he-started-romance-with-her-nanny-28-a3813176.html

வடிவா செய்தியை வாசியுங்கோ.. அங்கே ஏற்கனவே கொயந்தை ரெண்டு ஆகிப் போட்டுது..! அந்தாளுக்கு வேற ஏதோ வியாதி..!!  bebefou.gif

5 hours ago, Nathamuni said:

 கலிகாலமப்பா.. :rolleyes:

அது என்னவோ மெய்தான்!

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

வடிவா செய்தியை வாசியுங்கோ.. அங்கே ஏற்கனவே கொயந்தை ரெண்டு ஆகிப் போட்டுது..! அந்தாளுக்கு வேற ஏதோ வியாதி..!!  bebefou.gif

அது என்னவோ மெய்தான்!

ஆமாம்.... வன்னியர்... கவனிக்கவில்லை.

வழக்கு ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்கிறேன்.... அப்போது ஒன்று.. விசாரணைக்கு வருவதற்கு முன்னர் இரண்டு... :rolleyes:

உந்த வயகரா வந்தபிறகு.... கிழவர்கள் எல்லாம் ஒரு மார்க்கமா தான் நிக்கினம்... புடுங்கி எறிய வேணும்... வயகராவை சொன்னேன்..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

.. வழக்கு ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்கிறேன்.... அப்போது ஒன்று.. விசாரணைக்கு வருவதற்கு முன்னர் இரண்டு... :rolleyes:

உந்த வயகரா வந்தபிறகு.... கிழவர்கள் எல்லாம் ஒரு மார்க்கமா தான் நிக்கினம்... புடுங்கி எறிய வேணும்... வயகராவை சொன்னேன்..

இந்த இளந்தாரிப் பொடியள் எல்லாம் காலாகாலத்தில் படித்து, வேலையில் செட்டிலானால், ஏன் வாழ்க்கையில் செட்டிலான கிழவர்களை பெண்கள் நாடப்போகிறார்கள்..? emoticone.gif

வயதானவரிடமிருந்து சமூக,பொருளாதார பாதுகாப்பும்,அக்கறையும் கிட்டும் என்பதனால்தானே..?  bebe-3.gif

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

வயதானவரிடமிருந்து சமூக,பொருளாதார பாதுகாப்பும்,அக்கறையும் கிட்டும் என்பதனால்தானே..?  bebe-3.gif

நீங்கள் சொன்னவை கிட்டும்    ஆனால் "அது" கிட்டாது அதற்கு மீண்டும் வேலையில்லாத பக்கத்து வீட்டு இளைஞர்களை நாட வேண்டி வரும்..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

நீங்கள் சொன்னவை கிட்டும்    ஆனால் "அது" கிட்டாது அதற்கு மீண்டும் வேலையில்லாத பக்கத்து வீட்டு இளைஞர்களை நாட வேண்டி வரும்..tw_blush:

57 minutes ago, Nathamuni said:

உந்த வயகரா வந்தபிறகு.... கிழவர்கள் எல்லாம் ஒரு மார்க்கமா தான் நிக்கினம்... புடுங்கி எறிய வேணும்... வயகராவை சொன்னேன்..

  • கருத்துக்கள உறவுகள்

கு சாமியார் என்ன சொல்லப்போறாரோ!

இப்ப எல்லாம் முப்பது வயது தாண்டினாலே எங்களைப்பாத்து இளம்பெண்கள் அங்கிள் எனக் கூப்பிடுதுகள் ஆனால் அந்தப் பிலிப்பைன் பெட்டைக்குத்தான் தெரிஞ்சிருக்கு ஓல்ட் இஸ்  கோல்ட் என 

ம்ம்ம்ம் அதுக்கெல்லாம் மச்சம் வேணும். எதுக்கும் எனது எழுபத்துஐந்து வயசில ஒரு பிலிபைன் காரியிடம் ........ அதுக்கு இன்னும் நேரமிருக்கு 

இல்லாதுவிட்டால் மோடியின் கையைக் காலைப்பிடித்து தமிழ்நாட்டுக்கு ஆளுனராகப் போய்விடவேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

நீங்கள் சொன்னவை கிட்டும்    ஆனால் "அது" கிட்டாது அதற்கு மீண்டும் வேலையில்லாத பக்கத்து வீட்டு இளைஞர்களை நாட வேண்டி வரும்..tw_blush:

அதை நீங்கள் மட்டும் கற்பனையில் முடிவு செய்தால் எப்படி புத்ஸ். இதையெல்லாம் மான ரோஷமுள்ள கௌரவமான வன்னியனால் வெளிப்படையாக சொல்ல முடியாது.அதுதான் நான்.... ஹி .....ஹி ....!  tw_blush:

இந்தக் கதையின் நீதி யாதெனில், ஆணோ பெண்ணோ எக்காரணம் கொண்டும் தனது சுய சம்பாத்தியத்தை, கையிருப்பை தான் தன்னிடமே வைத்திருக்க வேண்டும்.இவ்வளவு ஹார்ஸ் பவருடன் இருப்பவர் வீணாக அதை அவர் தவற விட்டு விட்டார் அவ்வளவுதான்......!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

72 வயசிலும் இந்தத் தாத்தாவின் ஆண்மை  வேலை செய்து இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்தக் கதையின் நீதி யாதெனில், ஆணோ பெண்ணோ எக்காரணம் கொண்டும் தனது சுய சம்பாத்தியத்தை, கையிருப்பை தான் தன்னிடமே வைத்திருக்க வேண்டும்.

இதுதான் சரியான யோசனை.   நன்றி, சுவி !

அந்த மகள், தன்னுடைய 'தந்தையை கடவுளாக மதித்து அவரை கவனித்து வந்தேன், ஆனால் அவர் இன்னொரு பெண்ணுடன் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று கூறியிருப்பது நியாயமானது.

நம்பிக்கையுடன் மகளின் கவனிப்பில் வாழும் தந்தை, 'தனிப்பட' தன்னை கவனிக்க இன்னொரு பெண் வேண்டுமென்றால், மகளிடம் வெளிப்படையாக ஆலோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும். vil-idee.gif

இப்படி மதிகெட்டுபோய் நடந்திருக்கக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

உது தான் வெள்ளையர்கள் செய்வது, 17 வயதுடன் வீட்டினை விட்டு அனுப்பி விடுவார்கள். 

மேலும் எமிடையே இல்லாத மரண சாசனம் எழுதும் பழக்கம் அவர்களிடம் உண்டு. மரண சாசனம் எப்போதும் மாத்த முடியும். உறுதி அவ்வாறு அல்ல.

இவர் ஏதோ பிழை விட்டு விட்டார். வெள்ளையர் அல்ல என்பதாலோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21.4.2018 at 3:16 PM, Elugnajiru said:

கு சாமியார் என்ன சொல்லப்போறாரோ!

இப்ப எல்லாம் முப்பது வயது தாண்டினாலே எங்களைப்பாத்து இளம்பெண்கள் அங்கிள் எனக் கூப்பிடுதுகள் ஆனால் அந்தப் பிலிப்பைன் பெட்டைக்குத்தான் தெரிஞ்சிருக்கு ஓல்ட் இஸ்  கோல்ட் என 

ம்ம்ம்ம் அதுக்கெல்லாம் மச்சம் வேணும். எதுக்கும் எனது எழுபத்துஐந்து வயசில ஒரு பிலிபைன் காரியிடம் ........ அதுக்கு இன்னும் நேரமிருக்கு 

இல்லாதுவிட்டால் மோடியின் கையைக் காலைப்பிடித்து தமிழ்நாட்டுக்கு ஆளுனராகப் போய்விடவேண்டியதுதான்

இஞ்சை கன கோல்டன் ஜேர்மன்காரர் பிலைப்பைன்ஸ்/தாய்லாந்து குட்டியளை கட்டி குடியும் குடித்தனமாய் வாழ்க்கையை எஞ்ஜோய் பண்ணீனம்.....நாங்கள்தான் கலை கலாச்சாரம் எண்டு ஒல்லாந்தர் காலத்து ஒரு  உரலை வைச்சு  உருட்டிக்கொண்டு திரியிறம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

.....நாங்கள்தான் கலை கலாச்சாரம் எண்டு ஒல்லாந்தர் காலத்து ஒரு  உரலை வைச்சு  உருட்டிக்கொண்டு திரியிறம். tw_blush:

இதையே 'என்னடாப்பா இது.. ஒல்லாந்தர் காலத்து உளுத்துப்போன உலக்கையை உருட்டித் திரிய வேண்டியதயிருக்கு?' என அவர்களும் ஆரம்பித்தால் நிலைமையென்னவென்று சிந்தித்தால் நன்று.. vil-content.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இப்ப பெரிய விசயமில்லை. இப்ப.. 70 வயசில.. இரண்டு வேலை செய்யுது உழைக்கிற ஆக்களே இருக்கினம்.

உந்த செய்தி எழுதினவருக்கு ஏதோ இயலாமை.

அந்த ஐயாவுக்கு அமையுது அனுபவிக்கிறார்... ஏன் செய்தி எழுதிறவை அதுக்கு பொறாமைப்படுகினம். 

இதெல்லாம்.. தனிப்பட்ட விடயங்கள். செய்தி ஆக்குவதே அநாகரிகம். இதில அந்த ஐயாட்ட நாகரினமுன்னு..

இதையே பெரியார் என்கிற கன்னட இராமசாமி செய்த போதும்... காந்தி செய்த போதும்... எவராவது அவர்களிடம் போய் நாகரிகம் போதிச்சானுகளா...????! இல்லை இல்ல.. இப்பவும் அவைய தலைல வைச்சு கொண்டாடி அரசியல்.. சொந்த விளம்பரம்.. வியாபாரம்.. செய்யுற கூட்டம் இருக்கத்தானே செய்யுது.

விட்டுத்தள்ளுங்கப்பா. உலகும்முன்னா.. இப்படி ஆயிரம் முரண்கள் இருக்கத்தான் செய்யும். அதுக்காக நாங்க எதுக்கு வீணா முரண்பட்டுக்கிட்டு கிடக்கனும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 21/04/2018 at 4:54 PM, suvy said:

அதை நீங்கள் மட்டும் கற்பனையில் முடிவு செய்தால் எப்படி புத்ஸ். இதையெல்லாம் மான ரோஷமுள்ள கௌரவமான வன்னியனால் வெளிப்படையாக சொல்ல முடியாது.அதுதான் நான்.... ஹி .....ஹி ....!  tw_blush:

இந்தக் கதையின் நீதி யாதெனில், ஆணோ பெண்ணோ எக்காரணம் கொண்டும் தனது சுய சம்பாத்தியத்தை, கையிருப்பை தான் தன்னிடமே வைத்திருக்க வேண்டும்.இவ்வளவு ஹார்ஸ் பவருடன் இருப்பவர் வீணாக அதை அவர் தவற விட்டு விட்டார் அவ்வளவுதான்......!  tw_blush: 

சொத்தை  எழுதி  வைத்ததால் தானே

தகப்பனை நன்றாக பராமரிப்பது தனது பொறுப்பு என   

மகள் வேலைக்கே  ஆள்  வைத்து பராமரித்திருக்கிறார்

எல்லாம்  சரியாகத்தான்  நடந்திருக்கு

வேலைக்கு  வந்தவருக்கு  அழகும் 

அவரது அடுத்த  கட்டங்களுக்கான  திட்டங்களுமே  வலையாகிப்போச்சு

சும்மா  ஐயாவை வசை  பாடக்கூடாது ராசாக்கள்

சுவியண்ணை

சொத்தை ஏன்  இன்னும் எழுதவில்லை  என்பதை அறிய  முடிகிறது

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

சொத்தை  எழுதி  வைத்ததால் தானே

தகப்பனை நன்றாக பராமரிப்பது தனது பொறுப்பு என   

மகள் வேலைக்கே  ஆள்  வைத்து பராமரித்திருக்கிறார்

எல்லாம்  சரியாகத்தான்  நடந்திருக்கு

வேலைக்கு  வந்தவருக்கு  அழகும் 

அவரது அடுத்த  கட்டங்களுக்கான  திட்டங்களுமே  வலையாகிப்போச்சு

சும்மா  ஐயாவை வசை  பாடக்கூடாது ராசாக்கள்

மகள் சொத்துக்காகதான் தந்தையை பராமரித்தார் என்ற மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து..!

அப்படி சொத்து மட்டுமே பிரதானம் என அவர் நினைத்திருந்தால், உயில் எழுதி வாங்கிய பின் தந்தையை நட்டாற்றில் விட்டிருக்கலாம்.

இவ்வளவு வயதான பின்பும் தந்தை 'ஜொள்ளு பார்டி'யாக இருந்திருக்கிறார், வந்த வேலைக்காரி கவுத்துவிட்டாள்.

முறைதவறும் முன்பே மகளிடம் தந்தை, தன் 'தேவை'யை பற்றி பேசி சுமுகமாக முடித்திருக்கலாம்.

தவறு, மதியிகெட்ட தந்தை மீதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஜேர்மனியிலை பெத்த தாய்தகப்பனை உப்பிடி நடுத்தெருவிலை விடுற சேட்டையெல்லாம் சரிப்பட்டுவராது கண்டியளோ.......பெத்ததுகளை வயோதிபமடத்திலை விட்டாலும் பிள்ளையள் காசு கட்டவேணும்.......இல்லாட்டி அரசு நடவடிக்கை எடுக்கும்.......லண்டனிலை என்னமாதிரியெண்டு தெரியேல்லை. சிலோன் இந்ந்தியாவிலைதான் பெத்ததுகளை நட்டாற்றிலை விடுறது வலு சுகம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

யாழ் பெருசுகள், அந்தாள் செய்தவற்றை மூடி, பூசி மெழுகுவதிலேயே இருக்கிறார்களப்பா..! vil-nono.gifnon-2010.gif

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

மகள் சொத்துக்காகதான் தந்தையை பராமரித்தார் என்ற மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து..!

அப்படி சொத்து மட்டுமே பிரதானம் என அவர் நினைத்திருந்தால், உயில் எழுதி வாங்கிய பின் தந்தையை நட்டாற்றில் விட்டிருக்கலாம்.

இவ்வளவு வயதான பின்பும் தந்தை 'ஜொள்ளு பார்டி'யாக இருந்திருக்கிறார், வந்த வேலைக்காரி கவுத்துவிட்டாள்.

முறைதவறும் முன்பே மகளிடம் தந்தை, தன் 'தேவை'யை பற்றி பேசி சுமுகமாக முடித்திருக்கலாம்.

தவறு, மதியிகெட்ட தந்தை மீதுதான்.

அப்படியொரு  அர்த்தமும் வருகுதோ??

நான் குறிப்பிட்டது

தகப்பன்  சொத்து முழுவதையும் மகளுக்கு எழுதி  வைத்தாலும்

பிள்ளை  தனது கடமையை  மறக்காமல்

அதை  திறமாக  செய்ய முயற்சித்ததை  ஐயா

தவறை  யாரு  ராசா  மூடி  மறைச்சது

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில  பக்கத்தில  வைச்சுப்போட்டு....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில  பக்கத்தில  வைச்சுப்போட்டு....

இது உள்ள புகைந்து கொண்டிருந்த எரிமலை நெருப்பு எண்டு பஞ்சுக்குத் தெரிஞ்சிட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ராசவன்னியன் said:

யாழ் பெருசுகள், அந்தாள் செய்தவற்றை மூடி, பூசி மெழுகுவதிலேயே இருக்கிறார்களப்பா..! vil-nono.gifnon-2010.gif

மூடி மெழுகேல்லை பாருங்கோ......ஊர் உலகத்திலை நடக்கிறதைத்தான் சொன்னன்....இப்ப பாருங்கோ இந்தியா சிலோனிலையெல்லாம் பழசுகள்/பெரிசுகள் வீட்டு வேலைக்காரிமாரிலை கையை வைச்சு கலியாணத்திலை வழமையான ஒண்டுதானே....

இது சிங்களப்பாட்டெண்டாலும் விசயத்தோடைதான் எடுத்திருக்கினம் கண்டியளோ...:cool:

Edited by குமாரசாமி
மெ

  • கருத்துக்கள உறவுகள்

பல்லுள்ளவன் பக்கொடா சாப்பிடுகின்றான். தவறில்லை.

இங்கு பலர் இந்த தாத்தாவை குறை சொல்லி எழுதுகின்றார்கள்.தவறு

பிலிபைன்ஸ் நாட்டுகாரர்களுடன் பல வருடங்கள் நெருங்கிப்பழகியவன் என்ற அடிப்ப்டையில் நான் சொல்கின்றேன். 
இவள் விசாவிற்க்காகவே இவரை திருமணம் செய்துள்ளார். பிலிபைன்ஸ் நாட்டு பெண்கள்  பொதுவாக எந்த ஆணுடனும் மிகவும் சகஜாமாக‌ பழகக்கூடியவர்கள். இதானால் இவர்கள்  எந்த ஆண்களுடனும் இலகுவாக உறவு வைத்து கொள்வார்கள். இது இவர்களினது கலாச்சாரத்தில் சாதாரணமானது. 

இங்கு நான் என் அனுபவத்தில் இதே போல் பல திருமணங்களை கண்டுள்ளேன். வயது கூடிய ஆண்களை திருமணம் செய்து அமேரிக்கா  போவதே இவர்களினது திட்டம். இவர்களுக்கு அமெரிக்க என்றால் அவ்வளவு விருப்பம். அதற்காக எதையும் செய்வார்கள். தினமும் இவர்களை போல் பலரை நான்  shopping mall   காண்பேன்.

அதேபோல் இவர்களின் ஆண்களும் பெரும்பாலும் குடும்பத்தை கவனிப்பதில்லை. அவர்கள் பல பெண்களுடன் சல்லாபிப்பவர்கள்.
இதால் இவர்கள் பிற இன ஆண்களுடன் சுற்றித்திரிவார்கள். 

எனக்கு தெரிந்து இங்கு ப‌ல இலங்கையர்கள் பிலிப்பைன் பெண்களை திருமணம் செய்து வாழுகின்றார்கள்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

பிரச்சனை அதில்லை கொழும்பான்.... கொப்பு  இழக்கப்படாது.

விஷயம் என்னெண்டா, செகண்ட் இன்னிங் தொடங்கணும்.. இரண்டு பிள்ளையளை பெறுவம் எண்ட ஐடியா இருந்திருந்தால், எல்லாத்தையும் மூத்த மகளுக்கு கொடுத்திருக்க கூடாது.

இப்ப பாருங்க... இரண்டு குழந்தைகள்.... மூத்தது ஒண்டும் தராவாம்....

80 ஆகப்போகுது.... காடு வேற வா எண்டப் போகுது... மனுசனுக்கு இது தேவையா? ஆறுதலா, அமைதியா இருக்க வேண்டிய இந்த நேரத்தில? மகள் வேற புரோகிராசியார்.

இந்தாள் இருக்கிற கொஞ்ச சில்லறையையும், வழக்கு செலவுக்கு கொடுத்தே முடிக்கப் போகுது...

இவர் பாசத்தில எல்லாத்தையும் ஒரே மகளுக்கு எழுதிப் போட்டு... இப்ப திருப்பி வேண்டும் எண்டால்... எந்த ஊரு ச ட்டம் ?

கொடுத்தா வாங்க ஏலாது எண்டு தான்.... எங்கண்ட ஊரிலேயே சீவிய உரித்து வைத்து எழுதுறவை.

வெள்ளையர்கள், சத்தம் போடாம மரண சாதனம் எழுதி வைத்திருப்பினம்.... எப்பவும் மாத்தி எழுதலாம்... அதோட கடைசி காலம் வரைக்கும் பிள்ளையள் காலுக்கு நிப்பினம் எல்லோ...

... ஜட்ஜ் ஐயா அல்லது மூத்தமகள், ஏதாவது பார்த்து செய்தால் தான் உண்டு...:rolleyes:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.