Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

Featured Replies

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜோங் உன்.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

9:00 இதுவரை சந்திப்பில் என்ன நடைபெற்றது என்பதை தென் கொரிய அதிகாரிகள் ஊடகங்களிடம் விவரித்தனர்.

அனைத்து நற்சந்திப்புகளை போன்றும், இங்கும் சந்திப்புக்காக தாங்கள் செய்த பயணம் குறித்து இருதலைவர்களும் உரையாடினர். மேலும் அவர்கள் இங்கு வருவதற்காக விரைவாக தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள வேண்டியிருந்த அவசியத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளால் தான் எதிர்காலத்தில் விரைவாக எழுந்து கொள்ளும் சூழல் வராது என்று உறுதி செய்வதாக கிம் தெரிவித்துள்ளார்.

8:22: ஒரு மணிநேரமாக இருதலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த உலகமே ஆரவமுடன் காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது அவர்கள் தனித்தனியாக உணவு இடைவேளைக்கு செல்லவுள்ளனர். இருவரும் ஒன்றாக உண்ணுவதற்காக இரவு உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைAFP

8:10 இந்த உச்சிமாநாட்டின் நேரலையை தென் கொரிய சிறைவாசிகளும் பார்த்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியிலிருந்து அரை மணி நேரத்திற்கு பல சிறைகளில் இந்த சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

8:00 இருநாட்டு தலைவர்களின் மனைவிகளையும் இதுவரை இந்த சந்திப்பில் காணமுடியவில்லை.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைAFP

சில காலங்களாக வட கொரிய அதிபர் மனைவி ரி சோல்-உ பொது வெளியில் அதிகம் காணப்பட்டார்.

எனவே அவர் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுவரை அவரை காணாத போதிலும் பெரிதாக நடைபெறவுள்ள இரவு விருந்தில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

7:52: சீனா வட கொரியாவின் ஒரே பொருளாதார கூட்டாளி நாடாக இருந்து வருகிறது. பதிவியேற்றதிலிருந்து தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டார் கிம்.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைREUTERS

7:45 கிம் மற்றும் மூன்னின் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அமெரிக்காவின் சிஐஏ தலைவராகவும், தற்போது வெளியுறவுச் செயலராகவும் இருக்கும் மைக் போம்பேயோ மற்றும் அதிபர் கிம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் சந்தித்து கைக்குலுக்கிய புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைEPA

7:39 தென் கொரிய அதிபர் மூன்னுடன் நல்ல முறையில், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல விளைவுகளை ஈட்டுவேன் என்று கிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்த வட கொரிய அதிபர் கிம்முக்கு நான் எனது மரியாதையை தெரிவித்து கொள்கிறேன் என தென் கொரிய அதிபர் மூன் தெரிவித்தார்.

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

7: 10 ராணுவமற்ற பகுதியில் உள்ள பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு இருவரும் செல்கின்றனர்.

7:00 தென் கொரியாவில் கிம்முக்கு சிறப்பு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

"நான் உங்களை சந்திப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என மூன் கிம்மிடம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

6:50 அணு ஆயுதங்கள் பயன்பாடை வட கொரியா நிறுத்துவதற்கு தயாராக இருப்பது, இந்த வரலாற்று முக்கியத்துவமான சந்திப்பில் முக்கிய கவனம் பெறும்.

6:40 இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், கிம்மை இருநாட்டு எல்லையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்தார்.

எல்லையில் இருபுறத்திலிருந்தும் கிம் மற்றும் மூன் கைகளை குலுக்கினர். எதிர்பார்க்கதாக தருணமாக தென் கொரிய அதிபர் வட கொரிய எல்லைக்குள்ளும் சென்றார்.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு தலைவர்களும் வட கொரியாவின் சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிவிட்டதால் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவோடு இப்போது ஒப்பந்தம் செய்ய முயல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தென் கொரியா தெரிவித்திருந்தது.

2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளுக்கு பிறகு, இரு நாட்டு உறவும் சமீப மாதங்களில் மேம்பட்டு வருவதே தற்போது நடைபெறும் இந்த சந்திப்புக்கு காரணமாகும்.

நிகழ்ச்சி நிரல் பட்டியல் முதல் விருந்து வரையான இந்த மாநாட்டின் எல்லா விபரங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள வட கொரிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு இந்த சந்திப்பு ஒரு முன்னோட்டம் என்றும் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-43917148

  • தொடங்கியவர்

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜாங்-உன்.

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

10:15 இந்த இருதலைவர்களுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவுகள் இருப்பதை போல எதிர்ப்புகளும் உள்ளன. வெகுசில தென் கொரிய மக்கள் வட கொரியாவை ராணுவ நடவடிக்கை மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர். மேலும் இவர்கள் தென் கொரியாவின் பாஜு நகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தென் கொரியாபடத்தின் காப்புரிமைEPA

10:00 இதற்கு முன்பு கொரிய தலைவர்கள் சந்தித்து கொண்டபோது அந்த செய்தி அவர்கள் சந்திப்பு நிகழ்ந்து பல மணி நேரங்கள் கழித்தே வட கொரிய ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

ஆனால் இன்று நடைபெற்றுள்ள சந்திப்பு குறித்து வட கொரிய ஊகங்கள் உடனடியாக செய்தி வெளியிட்டன.

9:50 இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்த செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட தின்பண்டம்.

தின்பண்டம்

9:40 தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கேற்றதை தொடர்ந்து இருநாடுகளின் உறவுகளில் சுமூகமான சூழல் நிலவ தொடங்கியது.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

9:30 இருதலைவர்களும் உணவு இடைவேளைக்கு சென்றுள்ள நிலையில், இதுவரை இந்த சந்திப்பு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

  • இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கும் போது தென் கொரிய அதிபர் வட கொரியாவின் எல்லைக்குள் சென்று கைகுலுக்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து தென் கொரிய சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
  • தென் கொரிய அதிபர் முன்னை வட கொரியாவிற்கு அழைத்துள்ளார் கிம். மேலும் இம்மாதிரியான வரவேற்பு அவருக்கும் அளிக்கப்படும் என்றும் கிம் தெரிவித்துள்ளார்.
  • எல்லையை கடந்து தான் நடந்து வர பத்து வருடத்திற்கும் மேலாக ஆனது என்றும், இனி இம்மாதிரியான சந்திப்புகள் அடிக்கடி நடைபெற வேண்டும் என்றும் கிம் தெரிவித்தார்.
  • பழைய நிகழ்வுகள் குறித்து பேச வேண்டாம். முடிந்தவரை இனி சிறப்பாக செயல்படுவோம் என கிம் முன்னிடம் தெரிவித்தார்.
  • பிற நாடுகள் பின்தொடர்வதற்கு எடுத்துக்காட்டாக கொரிய மக்கள் இருக்க வேண்டும் என்று முன் தெரிவித்துள்ளார்.
  • இந்த சந்திப்பை ஒட்டி, வட கொரியாவின் உணவான குளிர்ந்த நூடுல்ஸை உண்ண உணவகங்களில் கூட்டம் கூட்டமாக தென் கொரிய மக்கள் காத்துகிடப்பதாக பிபிசி கொரிய சேவையை சேர்ந்த செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

9:10 இந்த சந்திப்பை ஒட்டி, வட கொரியாவின் உணவான குளிர்ந்த நூடுல்ஸை உண்ண உணவகங்களில் கூட்டம் கூட்டமாக தென் கொரிய மக்கள் காத்துகிடப்பதாக பிபிசி கொரிய சேவையை சேர்ந்த செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

9:00 இதுவரை சந்திப்பில் என்ன நடைபெற்றது என்பதை தென் கொரிய அதிகாரிகள் ஊடகங்களிடம் விவரித்தனர்.

அனைத்து நற்சந்திப்புகளை போன்றும், இங்கும் சந்திப்புக்காக தாங்கள் செய்த பயணம் குறித்து இருதலைவர்களும் உரையாடினர். மேலும் அவர்கள் இங்கு வருவதற்காக விரைவாக தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள வேண்டியிருந்த அவசியத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளால் தான் எதிர்காலத்தில் விரைவாக எழுந்து கொள்ளும் சூழல் வராது என்று உறுதி செய்வதாக கிம் தெரிவித்துள்ளார்.

8:34: மெர்ஸிடீஸ் நிறுவனத்தின் லிமோ வாகனத்தில் பயணிக்கும் கிம் ஜாங்-உன்.

 
 
yLxxuNdeEzLV-KTy?format=jpg&name=small
 

The morning session is over, and Kim Jong Un, riding in the Mercedes limo, gets the human motorcade treatment, as his 12 bodyguards get in some nice midday cardio.

 

8:22: ஒரு மணிநேரமாக இருதலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த உலகமே ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது அவர்கள் தனித்தனியாக உணவு இடைவேளைக்கு செல்லவுள்ளனர். இருவரும் ஒன்றாக சாப்பிடுவதற்காக இரவு உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைAFP

8:10 இந்த உச்சிமாநாட்டின் நேரலையை தென் கொரிய சிறைவாசிகளும் பார்த்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியிலிருந்து அரை மணி நேரத்திற்கு பல சிறைகளில் இந்த சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

8:00 இருநாட்டு தலைவர்களின் மனைவிகளையும் இதுவரை இந்த சந்திப்பில் காணமுடியவில்லை.

https://www.bbc.com/tamil/global-43917148

  • தொடங்கியவர்

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜாங்-உன்.

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

11:40 அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்திர அமைதி, கொரிய நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஆகியவை குறித்து இரண்டு தலைவர்களும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் யூ யங்-சான் தெரிவித்துள்ளார்.

11:30 தென் கொரிய அதிபர் முன்னின் சொந்த ஊர் வட கொரியாவில் உள்ளது. முனின் பெற்றோர் கொரிய போரின் போது தென் கொரியாவிற்கு தப்பி வந்தவர்கள் இருப்பினும் அவர்களுக்கு வட கொரியாவில் உறவினர்கள் உள்ளனர்.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், தான் தனது பெற்றோரின் சொந்த ஊரான ஹநம்முக்கு செல்ல விரும்பியதாக தெரிவித்திருந்தார் முன்.

"இருநாடுகளுக்கும் இடையே அமைதி நிலவும் போது, எனது 90வயது அம்மாவை அவர்களின் சொந்த ஊருக்கு கூட்டிச் செல்ல வேண்டும்" என்றும் முன் ஜே-யின் தெரிவித்துள்ளார்.

11:00 தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் இதற்கு முன்னர் வட கொரியாவுக்கு சென்றுள்ளார் ஆனால் குடும்ப நிகழ்வுக்காக. 2004ஆம் ஆண்டு அவர் அதிபர் ரு மூ-ஹுயுனுக்கு உதவியாளராக இருந்த போது தனது தாயுடன் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக வட கொரியா சென்றுள்ளார்.

10:45:சீன ஊடகங்கள் இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மேலும் நேர்மறையாக இந்த செய்தியை ஒளிபரப்பி வருகிறது.

இரு தலைவர்களும் "பதற்றமற்று" காணப்பட்டதாக சீன தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

இருவரும் கைக்குலுக்கியது "வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு" என சீன செய்தித்தாள் ஒன்று விவரித்துள்ளது.

10:30 தென் கொரிய எல்லைக்குள் நுழைந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் (காணொளி)

 

https://www.bbc.com/tamil/global-43917148

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜாங்-உன்.

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1:30 மரக்கன்றை நட்டபின் கிம் மற்றும் முன் ஆகியோர் காவலர்கள் யாருமின்றி சிறிது தூரம் நடந்து சென்றனர். அவர்கள் பேசியது ஒலிவாங்கியில் பதிவாகவில்லை. பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்டது.

1:16 தென்கொரிய அதிபருடன் இணைந்து எல்லையில் மரம் நட்ட கிம் ஜாங்-உன், இரு நாடுகளுக்கும் 'புதிய வசந்தம்' வந்துள்ளதாக கூறினார்.

12:30 வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவி இன்று இரவு விருந்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜாங் சூக்கும் அதில் பங்கு கொள்வார் என தகவல்கள் வந்துள்ளன.

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட கொரிய அதிபரின் மனைவியை போன்று இவரும் பாடகர் ஆவார்.

12:15 இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் உள்ள எல்லை பகுதியில் மரங்களை இருநாட்டு தலைவர்களும் நட்டனர்.

அதற்கான மண் மற்றும் நீர் இரண்டு நாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டது.

12:00

LIVE: தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் அதிபர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைINTER-KOREAN SUMMIT PRESS CORPS

இந்த படம் ஆயிரம் கதைகளை சொல்கிறது. பேச்சுவார்த்தை நடைபெற்ற அமைதி இல்லத்தில் இருந்த மேஜையை சுற்றி அதிகாரிகள் பூச்சி மருந்துகளை அடிக்கின்றனர்.

இந்த மேஜையில்தான் கிம் அமர்ந்து வருகையாளர்களுக்கான கையெழுத்திட்டார்.

வட கொரிய தலைவர் பூச்சுகளை கண்டும், அதனால் ஏற்படும் விஷத்தன்மை கண்டும் அச்சம் கொள்வார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

அதை இந்த படம் உறுதி செய்கிறது என்பதை கூற இயலவில்லை என்றாலும் இந்த உச்சி மாநாட்டிற்கான தயாரிப்பை இந்த படம் பிரதிப்பலிக்கிறது.

https://www.bbc.com/tamil/global-43917148

  • தொடங்கியவர்

LIVE: அணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி

கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

LIVE: அணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்: இரு தலைவர்கள் உறுதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

3:30: வட கொரியா மற்றும் தென் கொரிய தலைவர்களின் "தைரியத்தை" சீனா பாராட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என சீன வெளியுறத்துறை கூறியுள்ளது.

2:52: வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னர், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் உறுதி பூண்டுள்ளனர்.

கூட்டு அறிக்கையில் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்ட மற்ற விஷயங்கள்.

  • இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளை நிறுத்துவது.
  • இரு நாடுகளை பிரிக்கும் ராணுவமயமற்ற பகுதியில், பிரச்சார ஒலிபெருக்கிகளை நிறுத்துவதன் மூலம் இப்பகுதியை அமைதி பகுதியாக மாற்றுவது.
  • அமெரிக்க மற்றும் சீனாவை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.
  • போரினால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒருங்கிணைத்தல்.
  • எல்லைகளை ரயில் மற்றும் சாலைகள் மூலம் இணைத்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல்.
  • இந்த வருடம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட, விளையாட்டு போட்டிகளில் கூட்டாக பங்கேற்பு.

1:40: வட கொரிய தொலைக்காட்சியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை அதிபர் என்று குறிப்பிட்டதாக பிபிசி மானிடரிங் செய்திகள் கூறுகின்றன. வழக்கமாக தென் கொரியாவை அவர்கள் தனி நாடாக கருதுவதில்லை. "கொரியாவின் தெற்கு பகுதி" என்றே குறிப்பிடுவார்கள்.

LIVE: புதிய வரலாற்றை படைக்கப்போகும் கொரிய அதிபர்களின் பேச்சுவார்த்தைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

1:30:மரக்கன்றை நட்டபின் கிம் மற்றும் முன் ஆகியோர் காவலர்கள் யாருமின்றி சிறிது தூரம் நடந்து சென்றனர். அவர்கள் பேசியது ஒலிவாங்கியில் பதிவாகவில்லை. பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்டது.

https://www.bbc.com/tamil/global-43917148

  • தொடங்கியவர்

LIVE: வட-தென் கொரியா இடையே மீண்டும் போர் நடக்காது: இரு தலைவர்கள் உறுதி

கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

கொரிய பிராந்தியம்படத்தின் காப்புரிமைREUTERS

4:30: நல்ல விஷயங்கள் நடக்கிறது- டிரம்ப்

வட மற்றும் தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பல டிவீட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

''ஏவுகணை ஏவியது மற்றும் அணுசக்தி சோதனைகள் நடத்தியது என சீற்றம் நிறைந்த ஆண்டுக்குப் பிறகு, வட மற்றும் தென் கொரியா இடையே ஒரு வரலாற்றுக் கூட்டம் இப்போது நடைபெறுகிறது. நல்ல விஷயங்கள் நடக்கிறது. இதன் பலன் என்ன என்பதைக் காலம்தான் சொல்லும்'' என ஒரு டிவீட்டில் கூறியுள்ளார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைTRUMP/TWITTER

மற்றொரு ட்வீட்டில்,''கொரிய போர் முடிவடையும். கொரியாவில் தற்போது நடப்பவற்றைக்கு, அமெரிக்கா மற்றும் அதன் சிறந்த மக்கள் மிகவும் பெருமையடைய வேண்டும்'' என கூறியுள்ளார்.

4:00: சந்திப்புக்கு பின்னர் பேசிய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், இப்பகுதியின் துரதிருஷ்டவசமான வரலாறு(கொரிய போர்) மீண்டும் திரும்பாது என்பதை உறுதிப்படுத்த நெருக்கமாக ஒத்துழைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

''பின்னடைவு, துன்பம் மற்றும் ஏமாற்றம் இருக்கலாம்'' என கூறிய அவர், ''வலி இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது'' எனவும் கூறினார்.

3:40: வட கொரிய அதிபரின் மனைவி ரி சொல்-ஜு மற்றும் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக்கும் சந்தித்து பேசிக்கொண்டனர். வட கொரியா மற்றும் தென் கொரியா நாட்டின் முதல் பெண்மணிகள் சந்திப்பது இதுவே முதல் முறை என தென் கொரிய ஊடகம் கூறுகிறது.

கொரியபடத்தின் காப்புரிமைREUTERS

3:30: வட கொரியா மற்றும் தென் கொரிய தலைவர்களின் "தைரியத்தை" சீனா பாராட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என சீன வெளியுறத்துறை கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-43917148

  • தொடங்கியவர்

LIVE: சந்திப்பு முடிந்தது- நாடு திரும்பினார் கிம் ஜாங்-உன்

கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் கொரிய தலைவர் உடனான தனது முதல் சந்திப்பை முடித்துவிட்டு, வட கொரிய எல்லைக்குள் திரும்பினார் கிம் ஜாங்-உன். கடந்த 10 ஆண்டுகளில் வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையில் நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்.

எங்களது நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். எனினும் வட மற்றும் தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு குறித்த அடுத்தடுத்த செய்திகள் பிபிசி தமிழில் தொடந்து இடம்பெறும்.

 

கிம்படத்தின் காப்புரிமைREUTERS Image captionவட கொரியா திரும்பும் போது காரில் இருந்து கையசைத்த கிம்

5:20: உங்கள் காலை தூக்கம் தடைபடாது

சந்திப்புக்கு பின்னர் தனது நாட்டின் அணு சோதனை குறித்து பேசிய கிம் ஜாங்-உன்,''தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்ள உங்கள்(தென் கொரிய அதிபர் முன்) காலை தூக்கம் பல முறை தடைபட்டதாக நான் கேள்விப்பட்டேன். உங்கள் காலை தூக்கம் இனி தடைபடாது என நான் உறுதியளிக்கிறேன்'' என்றார்.

வட கொரியாவின் போக்குவரத்து பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்ட கிம்,'' எங்கள் போக்குவரத்து நிலைமை மோசமாக உள்ளது. அதனால் நீங்கள் (தென் கொரிய அதிபர் முன்) வட கொரியா வரும்போது அசௌகரியமாக உணரலாம் என்பது எனக்கு கவலையளிக்கிறது.'' என்றார்.

கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைTVPERU

5:10: வட கொரியாவால் ஏவுகணைகளால் மிரட்டப்பட்ட ஜப்பான், இந்தச் சந்திப்பு ஒரு நேர்மறையான நடவடிக்கை என கூறியுள்ளது.

ஷின்சோ அபேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

''பல்வேறு வட கொரிய பிரச்சனைகளை தீர்க்க, முன்நோக்கி நகரும் மற்றும் விரிவான நடவடிக்கை " எனக்கூறிச் சந்திப்பை ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே வரவேற்றுள்ளார்.

5:05: வட மற்றும் தென் கொரியா இடையிலான ரயில் இணைப்பு, எரிவாயு மற்றும் மின் விநியோகம் ஆகியவற்றுக்கு நடைமுறை ஒத்துழைப்பு தர தங்கள் நாடு தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது

வட மற்றும் தென் கொரிய எல்லைகளை ரயில் மற்றும் சாலைகள் மூலம் இணைப்பது என ஒரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-43917148

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வட - தென் கொரிய பேச்சுவார்த்தை: எல்லாப் புகழும் டிரம்புக்கா?

வடகொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியாவின் முயற்சிகளே பிரதானமானதாக இருக்கும் நிலையில் அதற்கான பாராட்டு டிரம்புக்கு செல்வது ஏன்?

டிரம்ப்

1953இல் கொரிய போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு தற்போது வடகொரிய-தென் கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது இது மூன்றாவது முறையாகும். இதன் பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இடையே சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இரு நாடுகளிலும் பதவியில் இருக்கும் தலைவர்கள் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பகையுணர்வு மட்டுப்படுவதுதோடு, 68 ஆண்டு காலமாக இரு கொரிய நாடுகளுக்கும் இடையிலான மனவேறுபாடுகளை மாற்றும் வகையிலான ஒரு சமாதான உடன்படிக்கையும் ஏற்படலாம்.

2018 ஜனவரி நான்காம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தி இது: "நிபுணர்கள் அனைவரும் அவர்களை எடை போடுவதில் தோல்வியுற்ற நிலையில், நான் உறுதியாகவும், வலிமையாகவும், வடகொரியாவுக்கு எதிராக நமது மொத்த வல்லமையையும் காட்ட தயாராக இல்லை என்றால் வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தையும் உரையாடலும் நடைபெறும் என்பதை யாராலும் நினைத்துப்பார்க்க முடியுமா? முட்டாள்கள், ஆனால் பேச்சுவார்த்தை ஒரு நல்ல விஷயம்!"

"இது அமெரிக்கா முன்னெடுத்த பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தத்தின் விளைவால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம்" என்று கூறிய தென் கொரிய அதிபர் முன் ஜே-இன், வட கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு காரணமான அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தார்.

கொரிய பிராந்தியம்படத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்கா முன்னெடுத்த தடைகளை செயல்படுத்தியது ஐ.நா

வட கொரியா 2006இல் தனது முதல் அணு ஆயுத பரிசோதனை நடத்தியதில் இருந்து, அமெரிக்காவும், அதன் பல நட்பு நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதேபோல், ஐ.நா. பாதுகாப்பு சபை வட கொரியா மீது ஒன்பது முறை தடைகளை நிறைவேற்றியது, அவற்றில் பல அமெரிக்காவால் முன்மொழியப்பட்டவை.

காலப்போக்கில், இந்த தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு தொடக்கத்தில் கனரக ஆயுதங்கள், ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் நவீன பொருட்கள் வழங்குவதை ஐ.நா. தடை செய்தது. 2017, டிசம்பர் மாதத்தில், எண்ணெய் இறக்குமதி, உலோகம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கும் தடைகளை விரிவுபடுத்திய ஐ.நா, வெளிநாடுகளில் பணிபுரியும் வட கொரியர்களை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்த சமீபத்திய தடைகள் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா முன்னெடுத்தவை என்றாலும், இந்த ஐ.நா.பொருளாதார தடைகளை சீனா அண்மையில் செயல்படுத்தியது வட கொரியாவை கடுமையாக பாதித்தது.

வட கொரியா தனது வெளிநாட்டு வர்த்தகத்தில் 90%க்கும் அதிகமானவற்றை சீனாவுடன் மேற்கொண்டுள்ள நிலையில், தனது நீண்டகால கூட்டாளியான வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதாரத் தடைகளுக்கு சீனா ஆதரவாக வாக்களித்தது.

ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அரிதாகவே சீனா ஆதரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன், அணு ஆயுதங்களை அகற்றும் பிரசாரம் ஒன்றில், டிரம்ப் மற்றும் கிம் உருவ முகமூடிகளை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்படத்தின் காப்புரிமைHUW EVANS PICTURE AGENCY Image captionபெர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன், அணு ஆயுதங்களை அகற்றும் பிரசாரம் ஒன்றில், டிரம்ப் மற்றும் கிம் உருவ முகமூடிகளை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஏற்கனவே தனது ராணுவ திறன்களை நிரூபித்த பின்னர், கிம் ஜாங்-உன் பொருளாதார வளர்ச்சியின் பக்கம் தனது கவனத்தை திருப்புகிறார் என்று சாத்தமின் ஹவுஸின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் நில்சன்-ரைட் கூறுகிறார். தடைகள் எதுவும் கிம்மின் ஆயுத அபிவிருத்தி திட்டங்களை தடுத்து நிறுத்தாத நிலையில், தற்போதைய முயற்சி, கிம்மின் நீண்ட கால பொருளாதாரத் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தக்கூடும்.

கடுமையான பேச்சுவார்த்தைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்கள்

2018 ஜனவரி இரண்டாம் தேதியன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறினார்: "வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தனது மேசை மீது அணுசக்தி பொத்தானை எப்போதும் வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். அவருடையதைவிட மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த பொத்தான் என்னிடமும் இருக்கிறது, அது வேலையும் செய்யும் என்பதை வீழ்ச்சியடைந்த மற்றும் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட அவரது பிராந்தியத்தை சேர்ந்த யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்".

2017 செப்டம்பர் 23 அன்று டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தி இது: "வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஐ.நாவில் பேசியதை இப்போதுதான் கேட்டேன். சிறிய ராக்கெட் மனிதனின் எண்ணங்களை அவர் எதிரொலித்திருந்தால், அவர்கள் நீண்ட காலம் இருக்க மாட்டார்கள்."

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவும் 2014இல் வட கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்தார், "இந்த விஷயங்களை மற்றவர்களின் மீது சுமத்த நாங்கள் ராணுவ வலிமையை பயன்படுத்தவில்லை, ஆனால் கூட்டாளிகளையும் எங்கள் வாழ்க்கையையும் பாதுகாக்க ராணுவ வலிமையைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம்."

2016இல், CBS செய்தி ஊடகத்தில் பேசிய அதிபர் ஒபாமா, "வட கொரியா "பொறுப்பற்றவர்கள்" என்றும், "அவர்களுடன் நெருக்கமாக நாங்கள் விரும்பாத அளவுக்கு பொறுப்பற்றவர்கள்" என்றும் கூறினார்.

"வட கொரியாவை நமது ஆயுதங்களைக் கொண்டு அழிக்க முடியும், ஆனால் அத்துடன் மனிதாபிமான பாதிப்புகள் ஏற்படும் என்பதும், நம்முடைய முக்கிய நட்பு நாடான கொரியா குடியரசின் அண்டை நாடாக அது இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ், வட கொரியாவை "தீய சக்தியின் மையம்" (axis of evil) என்ற முத்திரையிட்டார். "axis of evil" என்ற சொற்றொடரை 2002 ஜனவரி 29 அன்று முதன்முறையாக பயன்படுத்தினார் புஷ். பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பேரழிவு ஆயுதங்களை உருவாக்கும் நாடுகளை விமர்சிக்க இந்த சொற்றொடரை அவர் அடிக்கடி பயன்படுத்தினார்.

அதன்பிறகு அமெரிக்கா ராணுவ வலிமை கொண்டு அச்சுறுத்தல்கள் வெளியிட தொடர்ந்து பல ஆண்டுகள் இந்த சொற்றொடரை பயன்படுத்தியது.

Ms Kim (C) shook hands with Mr Moon at the opening ceremonyபடத்தின் காப்புரிமைREUTERS Image captionகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழாவின்போது கிம் யோ-ஜாங் உடன் கை குலுக்கும் தென்கொரிய அதிபர்

தென் கொரியாவின் ஏற்பாடு

தென்கொரியாவில் முன் ஜே-இன்னுக்கு முந்தைய இரண்டு அதிபர்களும், வட கொரியாவிற்கு எதிரான கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டிருந்தனர். லீ மியுங்-பாக் (2008-2013) கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்தாலும், அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த பார்க் ஹியூன்-ஹை (2013-2017), வட கொரியாவுடன் ஒரு சமாதான ஏற்பாட்டை முன்னெடுத்தார். ஆனால், அது ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டதை அடுத்து 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.

தனது தொடக்க உரையில் தென்கொரிய அதிபர் முன் ஜே-இன் இவ்வாறு குறிப்பிட்டார், "கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்".

முன் ஜே-இன்னைத்தவிர இதுவரை வட கொரிய உயர் தலைவரை சந்தித்த தென் கொரிய அதிபர்கள் கிம் டே-ஜங் (1999-2003) மற்றும் ரோ மூ-ஹுன் (2003-2008) இருவரே. 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற, இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடுகளில் வட கொரிய தலைவர்களை இவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்காக கிம் டே-ஜங் நோபல் சமாதான பரிசை பெற்றார்.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"தென் கொரியர்களுக்கே அதிக பாராட்டு சென்று சேரவேண்டும். ஏனெனில், வட கொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதை உறுதி செய்ததும், அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக ஏற்பாடு செய்ததும் தென் கொரியாதான்" என்று சொல்கிறார் ஆஸ்டன் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் விர்ஜினி க்ரெல்க்ஸ்கிக்.

ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கான பெருமையை டிரம்புக்கு தென்கொரியா கொடுப்பது ஏன்?

தென்கொரியா சமயோஜிதமான புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வதாக கூறுகிறார் க்ளெல்ஸ்கைக். அமெரிக்காவை சமாதான பேச்சுவார்த்தையுடன் காரணமாக கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

"இரு கொரிய நாடுகளும் கொரியாக்களும் ஏதாவது ஒரு விஷயத்தில் அமெரிக்க கொள்கையால் குழப்பம் மற்றும் கவலை கொண்டிருக்கின்றன".

https://www.bbc.com/tamil/global-43926202

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லது இரண்டு பேரும் சேர்ந்து அமெரிக்காவுக்கு ஆப்பு வையுங்கோ
 
  • தொடங்கியவர்

இரு கொரிய அதிபர்களின் ஆத்மார்த்த சந்திப்பின் புகைப்படத் தொகுப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னிற்கு தென் கொரியா சிறப்பான வரவேற்பை அளித்தது

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதித்திருக்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்.

2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளுக்கு பிறகு, இரு நாட்டு உறவும் சமீப மாதங்களில் மேம்பட்டு வருவதே தற்போது நடைபெறும் இந்த சந்திப்புக்கு காரணமாகும்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் கொரியாவின் ராணுவமயமற்ற பகுதியில் வட கொரிய தலைவர் கிம்முக்காக காத்திருக்கும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன்

நிகழ்ச்சி நிரல் பட்டியல் முதல் விருந்து வரையான இந்த மாநாட்டின் எல்லா விபரங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு, ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள வட கொரிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு இந்த சந்திப்பு ஒரு முன்னோட்டம் என்றும் கூறப்படுகிறது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

தென் கொரிய அதிபர் தனது நாட்டின் எல்லையில் நின்றபடியே கிம் ஜாங்-உன்னை வரவேற்றார். "நான் உங்களை சந்திப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என முன் கிம்மிடம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிவிட்டதால் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவோடு இப்போது ஒப்பந்தம் செய்ய முயல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தென் கொரியா தெரிவித்திருந்தது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

தென் கொரியாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

nதென் கொரிய அதிபரை தனது நாட்டு எல்லைக்குள் வருமாறு அழைப்பு விடுத்த கிம், பின்னர் வட கொரியா எல்லைக்குள் இருநாட்டு தலைவர்களும் கைக்குலுக்கி கொண்டனர்

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

 

அதிபர் கிம் ஜாங்-உன்னை கைப்பிடித்து அழைத்து செல்லும் தென் கொரிய அதிபர்

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

 

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துகொண்ட காட்சி

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

 

தென் கொரியா சார்பில் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

ஒருமணி நேரமாக இருதலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த உலகமே ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறது

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளால் தான் எதிர்காலத்தில் விரைவாக எழுந்து கொள்ளும் சூழல் வராது என்று உறுதி செய்வதாக கிம் தெரிவித்துள்ளார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

கிம் ஜாங்-உன் உணவு இடைவேளைக்காக வட கொரியா புறப்பட்ட போது உடன் வந்த பாதுகாப்பு படையினர்

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

இருநாட்டு கொரிய அதிபர்களின் சந்திப்பு காரணமாக உற்சாகத்திலிருக்கும் தென் கொரியர்கள்

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் முன் ஜே-இன்

 

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் செடிக்கு தண்ணீர் ஊற்றும் காட்சி

 

 

https://www.bbc.com/tamil/global-43918081

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

 

நல்லது இரண்டு பேரும் சேர்ந்து அமெரிக்காவுக்கு ஆப்பு வையுங்கோ
 

சிஐஏ வேலையே பிரச்சனையை உருவாக்குவது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தைன்னு போய் புலிகள் சிக்கிக்கிட்ட கணக்கா சிக்குப்படாட்டிச் சரி. :rolleyes:

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

பேச்சு வார்த்தைன்னு போய் புலிகள் சிக்கிக்கிட்ட கணக்கா சிக்குப்படாட்டிச் சரி. :rolleyes:

அவர்களுக்கு பின்னால் சைனா நிக்குது பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தடவையே இடது காலை வைத்தா போவது

_101063595_hi046444569.jpg&key=36d7c05da

  • தொடங்கியவர்

கிம்- முன் சந்திப்பின் 5 சுவாரஸ்ய தருணங்கள்

கிம்- முன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிம் ஜாங்-உன் மற்றும் முன் ஜே-இன் உடனான சந்திப்பு, வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையிலான மூன்றாம் சந்திப்பாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு பல அசாதாரண தருணங்களை சந்தித்தது.

1) தென் கொரியாவில் சந்தித்தது ஏன்?

தனது தலைவர் கிம் ஜாங்-உன், தென் கொரியாவுக்கு சென்று முன் ஜே-இன்னை சந்திக்க வட கொரியா ஒப்புக்கொண்டது.

2000-ம் ஆண்டு வட கொரியாவில் நடந்த முதல் கொரிய உச்சி மாநாட்டில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-இல்-லை பார்த்து மறைந்த தென் கொரிய அதிபர் கிம் டே-ஜங் சொன்னது இப்போது நடந்துள்ளது.

அப்போதைய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-இல்லை விட, கிம் டே-ஜங் 17 வயது மூத்தவர். மூத்தவரை இளையவர் வந்து பார்ப்பதுதான் பொறுப்பு, எனவே கிம் ஜாங்-இல் தென் கொரியா வர வேண்டும் என கிம் டே-ஜங் கூறினார். ஆனால், அது நடைபெறவே இல்லை.

கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எனவே 1951 முதல் தென் கொரியாவுக்கு வரும் முதல் வட கொரிய தலைவரான கிம், முன் மீது மிகுந்த மரியாதை காட்டினார்.

ராணுவமயமற்ற எல்லை பகுதியில், கிம்மை வரவேற்ற முன், தான் எப்போது வட கொரியா வரலாம் என கேட்டார். பிறகு திடீரென ஒரு சம்பவம் நடந்தது.

தென் கொரிய அதிபர் முன்னின் கையை பிடித்து, தன் நாட்டு எல்லை பக்கம் அழைத்துச் சென்ற கிம்,''இப்பொழுது எப்படி இருக்கிறது?" என கேட்டார்.

இந்த சந்திப்பு முழுவதும் தென் கொரிய அதிபர் முன் மீது மிகுந்த மரியாதை காட்டினார் கிம். இது கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என கிம்மின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

2) காரை சுற்றி ஓடிவந்த பாதுகாவலர்கள்

வடகொரியாவின் மிக உயர்ந்த தலைவராக இருப்பதில் பல வசதிகள் உள்ளன - ஒரு பெரிய பாதுகாப்பு பரிவாரம் உட்பட.

கிம்மின் பாதுகாப்பு படையினர், சந்திப்பு நடக்கும் எல்லா அறைகளுக்கும் சென்று முழு சோதனை நடத்தினர்.

கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிம் அமர்ந்த நாற்காலியையும், அவர் உபயோகப்படுத்திய பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் மருந்து மூலம் கிம்மின் பாதுகாப்பு படையினர் சுத்தப்படுத்தினர்.

100 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு கிம் மதிய உணவுக்குச் சென்றபோது, அவரது பென்ஸ் காரை சுற்றி ஒரு டஜன் பாதுகாவலர்கள் ஓடிவந்தனர். தனது படை பலத்தை வெளிப்படுத்தும் எதிர்பாராத செயலாக இது இருந்தது.

3) ர் அரிய கோரிக்கை

யிவோன்பியோங் தீவில் வாழும் இடம்பெயந்த மக்களும், வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்களும் தங்களது சந்திப்பு குறித்து அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் என தென் கொரிய அதிபரிடம் வட கொரிய அதிபர் கிம் கூறினார்.

வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்களுக்கு ஆதரவாக கிம் பேசுவது அரிதானது. வட கொரியா, தனது நாட்டில் இருந்து தப்பித்து சென்றவர்களை துரோகிகளாகக் கருதுகிறது. இதற்காகத் தப்பித்து சென்றவர்களின் குடும்பங்கள் தண்டிக்கப்படலாம்.

கொரியாபடத்தின் காப்புரிமைAFP

வட கொரியாவின் முக்கிய உள்கட்டமைப்பு முன்னேற்றம் தேவை என்று கிம் ஒப்புக் கொண்டது மிகவும் சுவாரசியமானது.

கொரிய மக்களால் புனிதமானதாக கருதப்படும் வட கொரியாவில் உள்ள பெய்டு மலையில் ஏற தான் விரும்புவதாக கிம்மிடம் முன் கூறினார்.

''அங்குள்ள மோசமான போக்குவரத்து உள்கட்டமைப்பு எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது'' என கிம் கூறினார்.

4) இரு பெண்கள்

முன் மற்றும் கிம் இடையிலான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை கிம்மின் சகோதரி கிம் யோ-ஜாங் மற்றும் முன்னாள் ராணுவ புலனாய்வு அதிகாரியும், கொரிய உறவுகளின் முக்கிய கொள்கை வகுப்பாளருமான கிம் யோங்-சோல் மூலமே நடந்தது.

கிம்மின் மிக நெருக்கமான ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களான இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கின் போது தென் கொரியாவுக்கு பயணம் செய்தனர்.

கொரியாபடத்தின் காப்புரிமைAFP

பேச்சுவார்த்தையின் போது கிம் பேச வேண்டிய ஆவணங்களை, சந்திப்புக்கு முன்பு கிம் யோ-ஜாங் கொண்டுவந்தார்.

இவர்களுடன் பல மூத்த அதிகாரிகளையும் கிம் அழைத்துச் சென்றார்.

5)அர்த்தம் மிகுந்த சல்யூட்

வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பாக் யாங்க்-சிக் மற்றும் வட கொரிய ராணுவத்தின் தலைவரான வைஸ் மார்ஷல் ரி மியோங்-சூ ஆகியோர் மரியாதை நல்லெண்ணமாகத் தென் கொரிய அதிபர் முனுக்கு சல்யூட் வைத்தனர்.

ஆனால், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரும், ராணுவ தலைவரும் கிம்மிற்கு சல்யூட் வைக்கவில்லை.

கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனது பங்காக, தென் கொரியா ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட போது கிம் சல்யூட் வைக்கவில்லை.

இரு தலைவர்களும் "ஒரு புதிய சமாதானத்தை" ஆரம்பிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் கடுமையான பல சவால்கள் அவர்கள் முன் காத்திருக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-43926404

  • தொடங்கியவர்

கொரியப் பிரச்சனையின் வரலாறு: ஆ முதல் ஃ வரை

கிம் மற்றும் மூன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1953-ம் ஆண்டு கொரிய போர் முடிந்த பிறகு, தென் கொரியாவுக்குள் நுழையும் முதல் வட கொரிய தலைவராகியுள்ளார் கிம் ஜாங்-உன்.

ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை எப்போது ஆரம்பித்தது. 1948 முன்பு ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிந்தது?

நீண்ட மற்றும் சிக்கலான இந்த வரலாறு, இரண்டாம் உலகப் போரின் முடிவில் தொடங்கியது.

கொரியப் போர் எப்படி ஆரம்பமானது?

கொரியப் போர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகொரியப் போரின் போது வட கொரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்கள் நடத்தியது.

மேற்கு மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே நடந்த பனிப்போரின் நேரடி விளைவாக, 1950ல் கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தது.

ஒரே நாடாக இருந்த கொரியாவை, 1910 முதல் இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை ஜப்பான் ஆண்டது.

போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்ததை சிறந்த வாய்ப்பாகப் பார்த்த சோவியத் ஒன்றியம், கொரியாவுக்குள் நுழைந்தது.

1948-ம் ஆண்டு கொரியாவை பிரிக்க சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது. சோவியத் ஒன்றியம் வட கொரியாவையும், அமெரிக்கா தென் கொரியாவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.

வட கொரியாவில் ஒரு கம்யூனிச சர்வாதிகாரத்தை நிறுவிய சோவியத் ஒன்றியம், முன்னாள் கொரில்லா படை வீரரான கிம் இல்-சூங்கிடம்(கிம் ஜாங்-உன்னின் தாத்தா) அதிகாரத்தை ஒப்படைத்தது.

பிற செய்திகள்:படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜனநாயக தேர்தல் நடந்த தென் கொரியாவில், சைங்மேன் ரீ அந்நாட்டின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார்.

சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் 1949 இல் கொரியாவை விட்டு வெளியேறியது. ஒரு வருடம் கழித்து, எதிர்பாராவிதமாக தென் கொரியா மீது கிம் இல்-சூங் தாக்குதல் நடத்தினார்.

ஒரு ஐக்கியப்பட்ட கம்யூனிச கொரியாவை உருவாக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது.

வட கொரியாவிடம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. இதற்கு அவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

தென்கொரியாவுக்கு உதவுவதற்காக அமெரிக்க படையும் வந்தது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 14 ஐ.நா நாடுகளிடம் இருந்தும் தென் கொரியாவுக்கு ஆதராக படைகள் வந்தது.

பிற செய்திகள்:படத்தின் காப்புரிமைGETTY IMAGES

போரை நிறுத்த அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என அப்போதைய அதிபர் ட்வைட் ஐசனோவர் மிரட்டியதால் போர் நிறுத்த ஒப்பந்தம் 1953-ல் கையேழுத்தானது. அதே ஆண்டில் சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் மரணமும் போர் நிறுத்தத்திற்குப் பங்களித்தது.

இறுதி அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காக எட்டப்பட்ட இந்த உடன்படிக்கையால் அப்போது சண்டை ஓய்ந்தது.

ஆனால் தீர்வு இன்னும் வரவில்லை. அதனால்தான் இரண்டு கொரிய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு மிக முக்கியமானது.

இரண்டு நாடுகளும் எப்படி வேறுபடுகின்றன?

தென் கொரியாவிலும் வட கொரியாவிலும் தினசரி வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்க முடியாது.

மேற்குப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் கொரியா, முதலாளித்துவ தத்துவத்தை ஏற்றுக்கொண்டது.

ஆசியாவின் மிகச் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாகத் தென் கொரியா வளர்ந்துள்ளது.

தென் கொரிய தலைநகர் சோல்படத்தின் காப்புரிமைED JONES Image captionதென் கொரிய தலைநகர் சோல்

1960களில் அரசால் ஊக்குவிக்கப்பட்ட தொழிற்துறையால், சாம்சங், ஹூண்டாய் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு உருவாகின.

தென் கொரிய கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது. இவை தயாரித்த நாடகங்கள் மிகவும் பிரபலமாயின.

நாட்டின் 48 மில்லியன் மக்கள் தொகையில், 45 மில்லியன் மக்களுக்கு அதிக வேகமான வயர்லெஸ் இணையம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வகையான பொருட்களும் மக்களுக்குக் கிடைக்கும்.

வட கொரியாவை பற்றி தென் கொரிய மக்களிடம் என்ன கற்பிக்கப்படுகிறது?

''வட கொரியா நமது முக்கிய எதிரி நாடு என்றும், அதே சமயம் நமது சக நாடு என்றும் எங்களுக்கு கற்பிக்கப்படுகிறது'' என்கிறார் கொரிய யு டியூப் பதிவாளர் பில்லி.

வட கொரிய தலைநகர் பியாங்யாங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவட கொரிய தலைநகர் பியாங்யாங்

வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. ஆனால், முதலாளித்துவம் அந்நாட்டில் ஊடுருவி வருகிறது.

வட கொரியாவில் வாங்குவதற்குப் பொருட்கள் உள்ளன. ஆனால், அது பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலான வட கொரிய மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் உயர் தலைவரே நமக்கு முக்கியம் என அந்நாட்டு குடிமக்களுக்கு சிறுவயது முதலே கற்பிக்கப்படுகிறது. அத்துடன் தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மற்றும் மேற்குலக நாடுகளும் தீயவை என மக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

துஷ்பிரயோகங்கள்

சித்திரவதை,பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு மற்றும் பட்டினி என மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக 2014-ம் ஆண்டு வட கொரியாவை ஐ.நா குழு குற்றம் சாட்டியது.

இந்நாட்டின் உயர் தலைவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் ஐ.நா பரிந்துரைத்தது.

கிம் வம்சம்

1992ல் கிம் இரண்டாம் சங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption1992ல் கிம் இரண்டாம் சங்

வட கொரியாவின் முதல் மற்றும் நீண்டகால தலைவராக இருந்தவர் கிம் இரண்டாம் சங். "தன்னுணர்வு" என்ற சுய நம்பிக்கை தத்துவத்தை அந்நாட்டிற்கு அவர் அறிமுகப்படுத்தினார்.

இடைவிடாத பிரசாரத்தின் மூலம், தன்னை சுற்றி தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டதினால், எதிரிகளே இல்லாமல் 46 ஆண்டுகள் ஆட்சி செய்தார் கிம் இரண்டாம் சங்.

அப்படி எதிரிகள் இருந்தால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த பாரம்பரியத்தை தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் கிம் ஜாங்-உன்னும் கடைபிடித்தார்.

கிம் இரண்டாம் சங், அவரது மகனான கிம் ஜாங்-இல்லை 1980களில் கொரிய தொழிலாளர்கள் கட்சி மற்றும் ராணுவத்தில் பெரிய பொறுப்புகளை அளித்து பதவி உயர்வு பெற செய்தார். இந்நிலையில், தலைவர் பதவியை கிம் ஜாங்-இல் எடுத்து கொள்வார் என தெரிய வந்தது.

1994 ஆம் ஆண்டு கிம் இரண்டாம் சங் உயிரிழந்த பிறகு, அவருக்கு "குடியரசின் நிரந்தர அதிபர்" என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும், அந்நாட்டின் கடவுள் போல அவர் கொண்டாடப்பட்டார்.

அவரை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த கிம் ஜாங்-இல், உலகின் முதல் பரம்பரை கம்யூனிச நாடாக வட கொரியாவை ஆக்கினார்.

இரட்டை வானவில் மற்றும் பிரகாசமான நட்சத்திரம் கிம் ஜாங்-இல் பிறப்பை குறிக்கும் என வட கொரிய மக்களுக்கு அதிகாரப்பூர்வ பிரசாரத்தில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள்

கிம் ஜாங்-இல்லின் ஆட்சியில் பொருளாதார நிலை மோசமடைந்து, அரசியல் எதிர்ப்பாளர்கள் அதிகமடைந்தனர்.

மேலும், அவர் நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை அதிகப்படுத்தினார். அவர் 2011ஆம் ஆண்டு உயிரிழந்த பிறகு கிம் ஜாங்-உன் ,இதனை தொடர்ந்தார்.

போருக்கு பின் தென் கொரியாவிற்கு சென்ற முதல் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்.

கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமீப மாதங்களில் தென் கொரியாவுடன் அவர் வைத்துள்ள உறவுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா மற்றும் ஐ.நா விதித்த அதிக பொருளாதார தடைகள்தான் என சிலர் குறிப்பிடுகின்றனர்.

அணு ஆயுதங்கள் வடிவமைப்பில் வல்லமை பெற்று விட்டதாக வட கொரியா கூறுகிறது. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்கு தடை விதிப்பதாகவும் அறிவித்தது.

இந்த அறிவிப்பானது, கிம் அமெரிக்கா அதிபர் டிரம்பை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து வந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற இடமாக மாற்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் சேர்ந்து பணிபுரிய போவதாக அவர் கூறுகிறார்.

ஆனால் இது எப்படி சாத்தியம் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஆய்வாளர்கள் இது குறித்து சந்தேகிக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

எல்லைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அணுஆயுத சக்தி கொண்ட அமெரிக்கா, தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது, வட கொரியா முக்கிய பிரச்சனையாக கருதும்.

இரண்டாவது காரணம்: இதே போன்ற ஒப்பந்தங்கள் வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையே போடப்பட்டு, வட கொரியா அதனை மீறியவுடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

இந்த சந்திப்பை கொரியர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

சோலில் உள்ள யு டியூப் பதிவாளர் கொரியன் பில்லி கூறுகையில், "இருநாட்டு தலைவர்களும் அமைதி குறித்து பேசுவதை பார்க்கும் போது உணர்ச்சிகரமாக இருந்தது. ஏனெனில் வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே சுமூகமான உறவையே கொரியர்கள் எதிர்பார்த்தனர்" என்றார்.

"எதிர்காலத்தில் நான் வட கொரியாவுக்கு பயணம் செல்ல முடியும் என்ற அளவிற்கு கற்பனை செய்ய தொடங்கி விட்டேன். வட கொரியாவிற்கு சென்று அந்நாட்டு மக்களுடன் பேச வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக தென் கொரியர்களுக்கு உண்டு"என்றார்.

https://www.bbc.com/tamil/global-43935080

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குள்ளன்! வெய்யில் மழை எண்டு பக்பக்கெண்டு காலநிலை மாறுற மாதிரி மாறினது எனக்கு டவுட் :cool:

  • தொடங்கியவர்

கொரிய தலைவர்கள் சந்திப்பு நீண்டகால அமைதிக்கு வழிவகுக்குமா?

 
கொரிய தலைவர்கள் சந்திப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் கொரியா அதிபர் முன் ஜே-இன் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன் சந்திப்பானது ஒரு வரலாற்று திருப்புமுனையை பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தமான - கொரிய தீபகற்பத்தின் சமாதானம், செழிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய பன்முன்ஜொம் பிரகடனம், நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

வட கொரிய தலைவர், தென் கொரிய மண்ணில் அடி எடுத்து வைத்ததன் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

விரோத நாடு என்று கருதப்பட்ட எல்லைக்குள் உறுதியுடன் சென்றது இளம் சர்வாதிகாரியான கிம்மின் தைரியத்தை காண்பிக்கிறது.

தென் கொரியாவில் காலடி எடுத்து வைத்தவுடன், வட கொரியாவுக்கு முன் ஜே-இன்னை அழைத்தது கிம் தன்னிச்சையாக எடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும்.

கொரிய தலைவர்கள் சந்திப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே உள்ள எல்லைகளை மறைத்து, சோலும் ப்யாங்யாங்கும் ஒருமைப்படுவதே குறிக்கோள் என்பது போல தோன்றுகிறது.

அந்நாளில் நடைபெற்ற மற்ற விஷயங்கள் எல்லாம் புத்திசாலித்தனமாக இயக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களும் திறந்த வெளியில் நெருக்கமாக பேசியது சக்திவாய்ந்த புதிய கதைகளை முன்னெடுத்து சென்றது.

கைக்குலுக்கள்கள், பரந்த புன்னகை, ஒருவருக்கு ஒருவர் அணைத்து கொண்டது என கொரியர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கான செய்தியை இது வழங்கியுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் முன்பு இரு நாட்டு தலைவர்களின் கூட்டு அறிக்கை வெளியிட்டது, கிம்மிற்கு சரியான நேரத்தில் நடைபெற்ற சாதகமான நிகழ்வாகும்.

கொரிய தலைவர்கள் சந்திப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உதாரணமாக, கிம் உறுதியாக மற்றும் நிதானமாக செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிட்டது, கடுமையான சர்வாதிகார தலைவர் என்ற பிம்பத்தை மாற்றி, சமாதானத்திற்காகவும், தேசிய நல்லிணக்கத்திற்காகவும் இயங்கும் சாதாரண அரசியலாளர் போல அவரை சித்தரித்தது.

இந்த கூட்டு அறிக்கை கடந்த 2000 மற்றும் 2007-ல் ஏற்பட்ட கொரிய தலைவர்களின் சந்திப்பின் போது ஏற்பட்ட உடன்படிக்கையின் கருப்பொருளை எதிரொலிக்கிறது.

இரு நாடுகள் இடையிலான தொடர்பு, ராணுவ பேச்சுவார்த்தைகள் , பொருளாதார ஒத்துழைப்பு, மற்றும் இரு நாடுகளின் குடிமக்கள் இடையே தொடர்புகளை விரிவாக்குவது ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் முந்தைய ஒப்பந்தங்களில் இடம்பெற்றன.

எனினும், தற்போதைய சந்திப்பின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. "நிலம், கடல் மற்றும் வான் உட்பட ஒவ்வொரு களத்தில் ஒருவருக்கொருவர் விரோதமான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரிய தலைவர்கள் சந்திப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அத்துடன், மே 1-ம் தேதி முதல் இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கு அருகில் "அனைத்து விரோத நடவடிக்கைகளையும்" நிறுத்துதல்,மே மாதம் இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தைகளை தொடங்குவது, 2018 ஆசிய விளையாட்டுகளில் இரண்டு கொரிய நாடுகளும் கூட்டாக பங்கேற்பு, மிக முக்கியமாக இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் தென் கொரிய அதிபர் முன், வட கொரியாவுக்கு வருகை தருவது என பல விஷயங்கள் கூட்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

உச்சிமாநாட்டில் கிம்மின் பேச்சுக்கள், அடையாள அரசியலுக்கு ஆதரவானதாக இருந்தது. ''ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு ரத்தம்", என குறிப்பிட்ட அவர், கொரியர்களுக்கு இடையே எதிர்காலத்தில் மோதல்கள் வராது என அழுத்தமாக குறிப்பிட்டார். இவை தென் கொரிய மக்களிடையே நன்றாக எடுபட்டது.

பொதுவான எதிர்காலத்தை நிர்ணயிக்க அனைத்து அழுத்தங்களுக்கும் கொரியர்கள் மத்தியில் உள்ளதே இதற்கு காரணம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப்- கிம் இடையிலான சந்திப்பு மே அல்லது ஜூன் மாதம் நடக்க உள்ளது. அப்போது, சமாதானத்தை தீர்வாக முன்வைக்கும் வட கொரியாவின் உறுதியை சோதிப்பது மிகவும் முக்கியமானது.

டிரம்ப்படத்தின் காப்புரிமைAFP

டிரம்ப்- கிம் சந்திப்பு மட்டும், அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான இடைவெளியை குறைக்காது. வட கொரியா உடனான இடைவெளியை குறைப்பதற்கு அமெரிக்கா எப்படி தனது யுக்திகளை வளர்த்துக்கொண்டுள்ளது என்பதும் முக்கியம்.

கொரிய உறவுகளில் சுமூகத்தை ஏற்படுத்தியதில் அனைத்து புகழம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் செல்லும் விதமாக, தென் கொரிய அதிபர் முன் தெளிவாக செயல்பட்டார். போரின் அபாயத்தை குறைப்பதற்கும், வட கொரியா உடனான பேச்சுவார்த்தையில் டிரம்ப் ஈடுபாட்டுடன் பங்குபெறுவதற்கு இதுவே சிறந்த வழி.

வெள்ளிக்கிழமையின் வியத்தகு நிகழ்வுகள், வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஆளுமை மற்றும் தலைமைத்துவம் மிக முக்கியம் என நினைவுப்படுத்துகிறது. இரு கொரிய தலைவர்களின் சந்திப்பு, அவர்களின் ராஜதந்திரத்தையும் எதிர்கால பார்வையையும் எதிரொலிக்கிறது.

https://www.bbc.com/tamil/global-43942653

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/28/2018 at 12:52 AM, vaasi said:

முதல் தடவையே இடது காலை வைத்தா போவது

_101063595_hi046444569.jpg&key=36d7c05da

வாசிக்கு... நல்ல அவதானிப்பு சக்தி. ?
கிம்.... வேணுமெண்டுதான்  இப்படி  செய்திருக்கிறார் என்று  சந்தேகிக்கின்றோம்.   ?  ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்டவர்கள் இடது கையால் கொடுப்பது தான் அதிஷ்ட்டம் என்று சொல்வார்கள் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன்காரனுக்கு எல்லாக்காலும் ஒண்டுதான்.......இடக்கால் வலக்கால் எண்டு பிரிவினை காட்டமாட்டான்...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.