Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

Featured Replies

அகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

32831341_639626876381904_900501130820609

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று மிக உணர்வெழுச்சியுடன் நடந்து முடிந்தது. வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் நடந்த இந்த நினைவேந்தலில் பின்னணியில் நடந்த- வெளியில் வராத சங்கதிகள் நிறைய உள்ளன. வெளிப்பார்வைக்கு சிக்கலின்றி தோன்றினாலும், பின்னணியில் நிறைய சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்பட்டன. இன்று காலையில் நினைவேந்தலை குழப்பும் விதமாக மாணவர்கள் நடந்து கொண்டபோதும், மாகாணசபை தரப்பிலிருந்து விட்டுக்கொடுப்புடன் நடந்ததால், அனைத்தும் சுமுகமாக முடிந்துள்ளது. வடமாகாணசபை மற்றும் ஜனநாயக போராளிகள் தரப்பிலிருந்து அதிகளவான விட்டுக்கொடுப்பு செய்ததாலேயே இது சாத்தியமானது.

தலைமை செயலக அணியின் பின்னணியில் நினைவேந்தலை குழப்பி, அரசியல் நீக்கம் செய்ய பல்கலைகழக மாணவர்கள் முயற்சிக்கிறார்கள் என்ற தகவலை தமிழ்பக்கம் ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தியிருந்தது.

பின்னர் நடந்த குழப்பங்கள் பேச்சுவார்த்தைகளையெல்லாம் அச்சொட்டாக- விலாவாரியாக வெளியிட்டது.

இந்தநிலையில் இன்றுகாலையில் நிகழ்விடத்திற்கு சென்ற பல்கலைகழக மாணவர்கள், பொதுச்சுடர் ஏற்றுமிடத்தை கட்டுப்படுத்திக் கொண்டனர். வடமாகாணசபை ஏற்பாட்டுகுழுவினர் அங்கு சென்று நிகழ்வுகளை ஒழுங்கமைக்க முயல, அவர்களை வெளியேறுமாறு பல்கலைகழக மாணவர்கள் உரத்தகுரலில் சப்தமிட்டு, நாகரிகமில்லாமல் நடந்து கொண்டனர்.

நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்தது வடமாகாணசபை. நினைவேந்தல் பிரதேசத்தில் அதிகளவில் ஒழுங்கமைப்பு பணிகளை- கொடி கட்டியது, பந்தம் நாட்டியது உள்ளிட்ட பணிகள்- ஜனநாயக போராளிகளே மேற்கொண்டனர். எனினும், இன்றைய நிகழ்வில்- உடையாரின் திருவிழாவில் சடையர் வானம் விட்ட கதையாக, பல்கலைகழக மாணவர்கள் ஒழுங்கமைப்பை தம்மிடம் தரவேண்டுமென வலியுறுத்தினர்.

இதற்கு வடமாகாணசபையின் நினைவேந்தல் ஒழுங்கமைப்புகுழுவினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்- விட்டுக்கொடுப்புடன் நடப்போம் என கூறி, பொதுச்சுடர் ஏற்றும்பகுதியை மாணவர்களிடம் கையளித்தார்.

32845655_639626769715248_849481095770328நிகழ்வு அறிவிப்பிற்கென மாகாணசபை உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரையும் அதற்கு அனுமதிக்காமல் பல்கலைகழக மாணவர்கள் ஒலிவாங்கியை எடுத்துக்கொண்டனர்.

ஏற்கனவே அனைத்து தரப்பும் பேசி, நினைவேந்தல் ஒழுங்கமைப்பு ஒன்று செய்யப்பட்டிருந்தது. ஆனால் அது எதையும் கருத்தில் எடுக்காமல், தமது இஸ்டத்துக்கு மாணவர்கள் புதிய நிகழ்ச்சி நிரலை மாணவர்கள் செயற்படுத்தினர். நினைவேந்தல் தொடர்பாக பெருந்திட்டம் தம்மிடம் உள்ளதாக கூறி, மூன்று பக்க அறிக்கையை மாணவர்கள் ஏற்கனவே முதலமைச்சரிடம் கையளித்திருந்தனர்.

ஆனால், இன்று எந்த திட்டமிடலும் இன்றி நிகழ்வை சொதப்பினர். நிகழ்வை தொகுத்து வழங்கியவர், அளவிற்கதிகமாக பேசி, உணர்வுபூர்வ தன்மையை கெடுத்துக்கொண்டிருந்தார்.

வடமாகாணசபை நிகழ்ச்சி நிரலில்- உயிரிழந்தவர்களிற்கு அகவணக்கம் செலுத்துவது நிகழ்வின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தது. வடமாகாணசபை நிகழ்ச்சி நிரல் இடம்பெறகூடாது என நினைத்ததாலோ என்னவோ, இன்று உயிரிழந்தவர்களிற்காக அகவணக்கமே செலுத்தப்படவில்லை!

பதிலாக- பல்கலைகழக மாணவர் ஒருவர் அலம்பல் பேச்சு பேசிக்கொண்டிருந்தார்.

பொதுச்சுடரை யார் ஏற்றுவது என்ற ஒன்றில் மட்டுமே மாணவர்கள் குறியாக இருந்தது தெரிந்தது. இதன்பின்னர் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை – ஒழுங்கமைக்கப்பட்ட பந்தங்களை கொளுத்தலாம் என்பதை கூட- தொகுப்பாளர் அறிவிக்கவில்லை. பொதுச்சுடர் ஏற்றப்பட்டதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் தன்னிஸ்டத்திற்கு பேச தொடங்கினார். இவர் பேசிக்கொண்டிருக்க, மக்கள் ஆங்காங்கே பந்தங்களை ஏற்றத் தொடங்கினர். இதை பார்த்து மற்றவர்கள் ஏற்றினார்கள்.

தமிழரசுக்கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சியினரை ஒதுக்குவதிலேயே மாணவர்கள் குறியாக இருந்தனர்.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்னர் பொதுச்சுடர் ஏற்றப்படும் இடத்திற்கு வெளியில் யாழ் மாநகரசபை மேயர் ஆனல்ட், மா.சபை உறுப்பினர் சயந்தன் உள்ளிட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் நின்றார்கள். அவர்களை அங்கிருந்து சென்று மக்களுடன் நிற்குமாறு மாணவர்கள் வற்புறுத்த, அவர்கள் இடத்தைவிட்டு நகர்ந்து விட்டனர்.

பின்னர் முதலமைச்சர் அங்கு வந்து, பொதுச்சுடர் ஏற்றும்பகுதிக்கு சென்றார். அவருடன் மாவை சேனாதிராசா, தமிழரசுக்கட்சியின் எம்.பிக்கள் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தாசா, சிறீதரன், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சென்றனர். முதலமைச்சரை மட்டும் பொதுச்சுடர் ஏற்றும்பகுதிக்கு வருமாறு அழைத்த மாணவர்கள், மற்றவர்களை திரும்பிப்போகுமாறு கூறினார்கள். அந்த முக்கியஸ்தர்களை திட்டமிட்டு அவமதிப்பதை போன்ற செயலாக அது

 

அமைந்தது

.32831341_639626876381904_900501130820609

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சிறுது நேரத்திலேயே ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர் துளசி, மற்றும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் அங்கிருந்து அதிருப்தியுடன் வெளியேற தொடங்கினர்.

தமிழரசுக்கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சியினருடன் வேண்டுமென்றே மோதல் போக்கை மாணவர்கள் கடைப்பித்ததில் காட்டிய அக்கறையை நிகழ்வு ஒழுங்கமைப்பில் காட்டவில்லை. இம்முறை முன்னுதாரணமாக நிகழ்ச்சியை நடத்திக்காட்டுகிறோம்- இனிமேல் தம்மை பின்பற்றி வேறு யாராவது செய்யலாமென மாணவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், இன்றைய நிகழ்வு மிக மோசமாக நிகழ்வாக அமைந்திருந்தது. வடமாகாணசபை பொறுப்பேற்ற- வாகன, நிகழ்விட, பொதுமக்களை அழைத்து வந்து நிகழ்விடத்தில் சேர்ப்பிப்பது உள்ளிட்டவை இம்முறை மிக சிறப்பாக அமைந்திருந்தது. அதிகளவான மக்கள் சிரமின்றி முள்ளிவாய்க்கால் வரக்கூடிய ஒழுங்கமைப்பை வடமாகாணசபையின் ஏற்பாட்டுகுழு செய்திருந்தது. ஆனால் அஞ்சலி நிகழ்வு ஒழுங்கமைப்பை பல்கலைகழக மாணவர்கள் சிறுபிள்ளைத்தனமாகவோ, வேண்டுமென்றோ குழப்பியிருந்தார்கள். இது, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராதென்பதை காட்டியது.

 

http://www.pagetamil.com/5361/

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு பிழை.  மாவைக்கு .. மானம் இருந்தால் தான், அவமானம் ஏற்பட முடியும். 

யாழ், பல்கலைக் கழக மாணவர்கள்,  40 வருடம் அரசியலில் இருந்த,  மாவை சேனாதிராஜாவுக்கு, 
நல்ல பாடத்தை.. புகட்டியுள்ளார்கள்.  பாராட்டுக்கள்.

"மாவை"  நெடுக... சம்பந்தன், சுமந்திரனுக்கு....  "கூசா"   தூக்கும்  வேலை செய்யாமல்.
சொந்தக் காலில் நிற்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி செய்தி உண்மையானால் அரசியல்வாதிகள் எவரையும் பழிவாங்குவதற்கோ அவமானப்படுத்தவோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தகுந்த தருணமில்லை என்பதை மனதில் கொள்ளாமல் கீழ்த்தரமாக நடந்துகொண்டமைக்காக மாணவர்கள் வெட்கி தலைகுனியவேண்டும். அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான் மாணவர்களும் மனிதர்கள்தான். எங்கும் எதிலும் அரசியல் உண்டு. வேண்டுமானால் அரசியல் கட்சிகளின் நேரடி தலையீட்டை தவிர்க்க கோரிக்கை வைக்கலாம். அரசியலிலும் பார்க்க அதிகம் ஆபத்தானது பொதுநிகழ்வில் சுயநலத்துடன் செயற்படுவது.

  • தொடங்கியவர்

#முள்ளிவாய்க்கால்_மண்ணில்_நடந்தது_என்ன?

முள்ளிவாய்க்கால் மண்ணில் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று; நிகழ்வேந்தல் நிகழ்வில் நடந்தது என்ன? நடந்த முழு உண்மைகளுடன் #வன்னியூர்_செந்தூரன்!

 
 
பிரதேச வாதத்தைத் தூண்டி வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டும்,ரவுடிகள் போலும் செயற்பட்ட மாணவர்கள் இவர்களின் பின்புலமும் குறிக்கோளும் எதுவாக இருக்கும்?

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம் எதோ பிரதேச வாதம் இல்லாமல் சுத்தமா வாழ்ந்த மாதிரி எல்லாரின்ட கதையும்......

உண்மையில் 18-05-2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று உங்களில் யாருக்காகவது தெரியுமா. 

எமது மக்கள் தங்களின்  தாயக நிலங்களில் உரிமையோடையும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்ற உரிமைப்போராட்டம் இந்த மண்ணில் முடிஞ்சு போய் இப்போ அந்த மண்ணில் யார் நிகழ்வை கொண்டாடுவது என்ற உரிமைப்போரில் வந்து நிற்குது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அண்ணா ..??

இந்த மண்ணில் காவியமான அனைத்து ஆன்மாக்களும் இதை பார்க்காமலே சாந்தியடையட்டும்.

 

இப்போதைக்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரண்டு பக்கமும் தங்களில் அரசியல் நிலைகளை தக்க வைக்க பயன்படட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்!

14816-0-4eab4bf9d5fcaa4be0d77e96a3ef2a12.jpg

 

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 18ம் திகதி விடுதலைப்புலிகளின் தொப்பியை வைத்து சிலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந் நிலையில் அவ்வாறு அஞ்சலி செலுத்தியவர்களும் அதைப் புகைப்படம் எடுத்தவர்களும் இலங்கைப் புலனாய்வாளர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படம் எடுத்த அவர்களின் நண்பர்களில் ஒருவரே புலனாய்வாளரிடம் முதலில் சிக்கிக் கொண்டார். சிக்கியவுடன் அவர் செய்த முதல் வேலை ஏனையவர்களையும் உடனடியாகக் காட்டிக் கொடுத்ததுதான். பிடிக்கப்பட்ட நண்பரால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களும் பிடிபட்டவர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவர்கள் என புலனாய்வாளர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர்கள் அழுது குழறி குறித்த புலனாய்வாளர்களிடம் கெஞ்சியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இவர்கள் பிடிபட்டது தொடர்பாக கொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு இணங்க புலனாய்வாளர்கள் குறித்த மாணவர்களை விடுவித்துள்ளனராம்.

 

பிடிக்கப்பட்ட மாணவர்களை கொழும்பு விடுவித்ததில் சந்தேகம் நிலவுவதாக தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் என காரணம் காட்டி அடுத்த முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முற்றிலுமாக குழப்பியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயலக்கூடும் எனவும் சந்தேகம் வலுத்துள்ளது. 

இதே வேளை முள்ளிவாய்கால் நிகழ்வு முடிந்து வெளியேறிய மாணவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள் கடும் மது போதையிலேயே மோட்டார் சைக்கிளில் தமது இருப்பிடத்துக்கு சென்றுள்ளர். இவர்களில் இருவர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் சாராய வெறியில் விபத்துக்குள்ளாகியதாகவும் அவர்களை அப்பகுதியில் நின்ற படையினர் துாக்கிச் சென்று தமது முகாமில் வைத்து சிகிச்சை அளித்து வெறி முறிந்த பின்னரே மோட்டார் சைக்கிளில் வீடு செல்ல அனுப்பியதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் பரந்தன் பகுதியில் கடும் போதையில் தவறான பக்கத்தால் மோட்டார் சைக்கிள் ஓடியதால் சிறிது நேரம் அப்பகுதியில்  போக்குவரத்து குழம்பியுள்ளது. சில மாணவர்கள் பரந்தன் பூநகரிப் பாதையில் அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடிச் சென்றதையும் மக்கள் கலக்கத்துடன் பார்த்துள்ளனர்.

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கதாநாயகர்கள் போலவும் புலிகளின் கரும்புலிகள் போலவும் தம்மை உருவகித்து நின்றதைப் பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் வழி நடத்தலில் குறித்த மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைக் குழப்புவதற்காக படையினரால் திட்டமிட்டு அனுப்பப்பட்டார்களோ என சந்தேகம் நிலவுவதாகவும் முள்ளிவாய்க்கால் பகுதியில் நின்ற தமிழ் உணர்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்களில் பெருமளவானர்வர்கள் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைப்பீட மாணவர்கள் எனவும் இவர்கள் பட்டதாரியானவுடன் வேலை வாய்ப்புக்கள் இல்லாது அலையும் பீடத்தைச் சேர்ந்தவர்களாகையால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து இலங்கை அரசாங்கமே இவர்களை தவறான முறையில் கையாண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவுகின்றது.

14816-2-4eab4bf9d5fcaa4be0d77e96a3ef2a12.jpg

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள இவ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில் கலந்தமை அருவருக்கத்தக்க காரியம். அத்துடன் 20ஆம் திகதியாகிய இக்காலைவரை அம்மதுபானப் போத்தல்களை அகற்றப்படாமலும், தங்கிய இடத்தைச் சுத்தமாக்கலும் உள்ளமை அப்பகுதியில் இதனைக் காணும் தமிழுறவுகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரம், சூழல் பாதுகாப்பில் உதாரணத்துவமாக நடக்கவேண்டியோர் கழிவுகளை எவ்விதம் இடுவது எனும் நடைமுறையற்று இருந்தமை வேதனை என ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.

இக்கேவலமான செய்கைக்கும், புனிதப் பிரதேசமாக வருங்காலத்தில் மாறப்போகும் இவ்விடத்தின் தன்மை புரியாமல் மதுவருந்திவிட்டு தம்மை எழுச்சியின் முன்னோடிகளாக காட்சிப்படுத்த முற்பட்டமைக்கும் ஒட்டுமொத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் பொறுப்பல்ல. ஏனெனில் இறுதிப்போர்வரை துன்பங்களைச் சுமந்தோரும், அக்குடும்பங்களைச் சேர்ந்தோரும், மாவீரர், போராளிகளின் உறவினர்களும், களங்கமற்று தாயகத்தை நேசிப்போரும் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக உள்ளனர்.

இங்கே காணவேண்டியது 17ஆம் திகதி மாலை நினைவேந்தல் தளத்திற்கு வந்துவிட்டு இரவு இவ்விடத்தில் தங்கியதோடு, அருகேயுள்ள மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடத்தைக் குறித்தும் முரணான கருத்துக்களை வெளிப்படுத்தி, அதே குடிநிலையில் மறுநாளான 18ஆம் திகதி எழுச்சியின் காட்சிகளாக தம்மைக் காட்ட முற்பட்ட குறிப்பிட்டளவு மாணவர்களே புனிதம் கெடப்பண்ணிய இச்செயலின் பொறுப்பாளிகள்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புகொள்ள வேண்டியுள்ளது. எதிரிகளிடம் இருந்தல்ல உள்ளேயே இருப்பவர்களிடமிருந்து.

சிலவருட கற்கை முடிந்ததும் அவர்கள் வேலைவாய்ப்புத் தேடுதலில் இறங்கிவிடுவர். ஆனால் பல்கலைக்கழகம் நிலையானது. அது தொடர்ந்து இயங்கவேண்டும்.

 

14816-4-4eab4bf9d5fcaa4be0d77e96a3ef2a12.jpg

14816-5-4eab4bf9d5fcaa4be0d77e96a3ef2a12.jpg

http://www.jaffnaboys.com

Edited by colomban
edited

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 18ம் திகதி விடுதலைப்புலிகளின் தொப்பியை வைத்து சிலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந் நிலையில் அவ்வாறு அஞ்சலி செலுத்தியவர்களும் அதைப் புகைப்படம் எடுத்தவர்களும் இலங்கைப் புலனாய்வாளர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படம் எடுத்த அவர்களின் நண்பர்களில் ஒருவரே புலனாய்வாளரிடம் முதலில் சிக்கிக் கொண்டார். சிக்கியவுடன் அவர் செய்த முதல் வேலை ஏனையவர்களையும் உடனடியாகக் காட்டிக் கொடுத்ததுதான். பிடிக்கப்பட்ட நண்பரால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களும் பிடிபட்டவர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவர்கள் என புலனாய்வாளர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர்கள் அழுது குழறி குறித்த புலனாய்வாளர்களிடம் கெஞ்சியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இவர்கள் பிடிபட்டது தொடர்பாக கொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு இணங்க புலனாய்வாளர்கள் குறித்த மாணவர்களை விடுவித்துள்ளனராம்.

 

பிடிக்கப்பட்ட மாணவர்களை கொழும்பு விடுவித்ததில் சந்தேகம் நிலவுவதாக தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் என காரணம் காட்டி அடுத்த முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முற்றிலுமாக குழப்பியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயலக்கூடும் எனவும் சந்தேகம் வலுத்துள்ளது. 

போச்சா ...அடுத்த வருட நினைவேந்தல் 
யாழிலும் விசிலடிச்சு உசுப்பேத்தியவர்கள் ,உசுப்பேத்துவர்கள் பதில் சொன்னால் நன்று .
இவ்வளவு தான் இவர்களின் வீரம் ,கொஞ்சம் நெரித்தால் போறவன் வாறவன் எல்லோரையும் போட்டு கொடுத்து விடுவார்கள், இதுல சிலது அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி கரும்புலி போல நிக்கினம் என்று புளங்காகிதம் வேற , வச்சி மிரிச்சு ரெக்கைகளை புடுங்கும்போது தெரியும்,   

  • கருத்துக்கள உறவுகள்

பெடியன்கள் சாப்பிடுவது குடிப்பது எல்லாம் ஒரு பிரச்சனையா ?
இந்த குப்பையை கிளறாமல் .... சரியான பாதையை காட்ட சமூகம் 
முன்வர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

முள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்!

14816-0-4eab4bf9d5fcaa4be0d77e96a3ef2a12.jpg

 

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கதாநாயகர்கள் போலவும் புலிகளின் கரும்புலிகள் போலவும் தம்மை உருவகித்து நின்றதைப் பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் வழி நடத்தலில் குறித்த மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைக் குழப்புவதற்காக படையினரால் திட்டமிட்டு அனுப்பப்பட்டார்களோ என சந்தேகம் நிலவுவதாகவும் முள்ளிவாய்க்கால் பகுதியில் நின்ற தமிழ் உணர்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

http://www.jaffnaboys.com

கறுப்பு உடை அணிவது துக்கத்தினைக் குறிப்பதற்காக.  சிட்னியிலும் பலர் மே 18 நிகழ்வில் கறுப்பு உடை அணிந்தே வந்தனர். கறுப்பு உடை அணிந்தால் கரும்புலிகளா?  அப்படியானால் வெள்ளை உடை அணிந்தால் அரசியல் துறையா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.