Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் கோழைகளாக இருந்திருந்தால், காத்தான்குடியை புலிகளிடம் இழந்திருப்போம் -ஹிஸ்புல்லாவின் அதிரடிப் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் ஆயுதம் தந்தது என்று சொன்னதை jaffnamuslim இணையம்  வசதியாக உள்ளே செய்தியில் அமுக்கிவிட்டது.

 

அரசாங்கம் எமக்கு ஆயுதம் தந்தது; இராணுவ முகாமிற்குள் இருந்தே செயற்பட்டேன்: ஹிஸ்புல்லாஹ்!

August 6, 2018
hisbul.jpg

யுத்தகாலத்தில் நாங்கள் கேட்டதையெல்லாம் அரசாங்கம் தந்தது. ஆயுதங்களையும் தந்தது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதைபோல, மட்டக்களப்பிலிருந்தும் வரட்ட புலிகள் முயன்றார்கள். எம்மை விரட்ட முயன்றவர்களிற்கு பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தள்ளார் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.

காத்தான்குடி தேசிய ஷஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28-ஆவது ஷஹதாக்கள் தின பிரதான நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

“புலிகளால் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்ட ஷஹதாக்கள் தினத்தை எம்மால் என்றுமே மறக்க முடியாது. இந்த கொடூர சம்பவம் இடம்பெற முன்னர் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை நாங்கள் உணர்ந்தோம்.

ஆனால், இந்தளவு மோசமான ஒரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் இவ்வாறு படுமோசமான ஒரு செயலை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை .

நான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் – பூர்த்தியாகாத நிலையில் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தலைமையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரோமதாஸ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சிறிபால ஆட்டிகல் உள்ளிட்ட அரசியல் உயர் மட்டத்தில் அடிக்கடி பேச்சு நடத்திக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒருவாரத்தில் ஏறாவூரிலும் படு மோசமான பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.

 

இந்த ஷுஹதாக்கள் இரத்தம் சிந்தியதன் விளைவாகவ எம்மால் முழு கிழக்கு மாகாண முஸ்லிம்களையும் பாதுகாக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு விரட்டியடித்தார்களோ அதே போன்று கிழக்கிலிருந்தும் குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து முஸ்லிம்களை அடித்து விரட்ட கடும் முயற்சிகளை செய்தனர்.

விடுதலைப் புலிகளின் அந்த கடுமையான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு பள்ளிவாசல் படுகொலைச் சம்பவங்கள் பெரும் தாக்கம் செலுத்தியது.

சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய தேவை உணர்வு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

காத்தான்குடி படுகொலை சம்பவத்தில் ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. நாங்கள் கேட்டதையெல்லாம் அரசாங்கம் வழங்கியது.

இராணுவ முகாம்களை கோரினோம் வழங்கினார்கள். காத்தான்குடியில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு கோரினோம். அமைத்தார்கள். ஆயுதம் கோரினோம். வழங்கினார்கள். ஷஹதாக்கள் படுகொலை சம்பவம், அவர்கள் சிந்திய இரத்தம் என்பவற்றால் நாங்கள் மன ரீதியாகவும் பலமடைந்தோம்.

 

இங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறான சூழலில் ஷுஹதாக்களின் சிந்திய இரத்த உணர்விலேயே உருவாக்கப்பட்டார்கள். எம்மை விரட்டியடிக்க முற்படுபவர்க ளுக்கு பாடம் புகட்டி அவர்களுக்கு முன்பு நாங்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.

எமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்விலேயே நாங்கள் வளர்ந்தோம். இன்று நாங்கள் எமது பிரதேசத்தை கிழக்கு மாகாணத்தில் முக்கிய பிரதேசமாக அபிவிருத்தி செய்துள்ளோம்.

காத்தான்குடி படுகொலைக்கு பின்னர் மிகவும் அச்சுறுத்தலான சூழலில் எனது இருப்பிடத்தை மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அச்சுறுத்தல்களுக்கு பயந்து காத்தான்குடியை விட்டு வெளியேற பலர் தயாரானார்கள்.

அப்போது நாங்கள் யாரையும் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை . மரணித்தாலும் இந்த மண்ணிலே தான் மரணிக்க வேண்டுமே தவிர யாரும் வெளி யேற முடியாது என கூறினோம். எனது இத்தீர்மானம் சமூக ரீதியாக எனக்கு ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

எனினும், நாங்கள் அன்று ஊரை விட்டு போக அனுமதித்திருந்தால் இன்று கத்தான்குடி என்ற மண் இருந்திருக்காது. எவ்வாறு வடக்கில் முஸ்லிம் பிரதேசங்களை நாங்கள் இழந்தோமோ அது போன்று கிழக்கிலும் இழந்திருப்போம்.

அன்று ஆயுத ரீதியான பயங்கரவாதத்தை நாங்கள் முகம் கொடுத்தோம். இன்று அரச அதிகாரிகளின் பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் அவர்களை குடியேற்ற முடியாத அளவுக்கு தடையாக அரச அதிகாரிகள் செயற்படுகின்றனர். இதனை முறியடிப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல.

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமைப் பட்டு வாழுகின்ற போது மாத்திரமே வடகிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச் சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலை மைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.

 

வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கெளரவிக்க வேண்டும். முஸ் லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும் என்றார்.

 

http://www.pagetamil.com/13090/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

 

உங்களுக்கு எப்படி முஸ்லீம்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு தெரியாதோ, அப்படியே தமிழர்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு சிங்களவர்களுக்கும் தெரியாது. அவர்களின் உலகம் அவர்கள் மொழியில் உள்ள ஊடகங்களிலும் பிக்குகளின் பிரசங்கங்களிலும் தங்கி உள்ளது. சிங்கள ஊடகங்கள் விற்பனைக்காக இனத்துவேஷத்தை அடிப்படியாக கொண்டு செயற்படுகின்றன.

தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களின் பிரச்சினை தமிழரான உங்களுக்கே தெரியாத போது எப்படி சிங்களத்தில் வராத தமிழர் பிரச்சினைகள் சிங்களவருக்கு புரியும்?

முஸ்லீம்களுக்கு அடிப்படை பிரச்சனை இருக்குதென்றால் அதைப்பெற அவர்கள் எதாவது போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்தினார்களா? இல்லையே எந்த அரசு வந்தாலும் அவர்களுடன்  உறவாடி எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டுதானே இருக்கிறார்கள். 

எங்களுக்குத்தான் தெரியாது முற்றும் தெரிந்த நீங்களே சொல்லலாமே அவர்களின் அடிப்படை பிரச்சனைகள் என்னவென்று?

உங்களின் பொழுதுபோக்கே திரியின் போக்கை மாற்றி புலிகளின் தலையில் எல்லாவற்றையும் கட்டுவதே! என்ன இப்ப இணையவனும் மதம் என்று வந்தவுடன் கொஞ்சம் ஒத்து ஊதுறார்?நடக்கட்டும் நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

சும்மா   சம்பந்தன்ரை தம்பி மாதிரி......அரைச்சமாவையே அரைச்சுக்கொண்டு  கதைக்காதேங்கோ.....

சிங்கள மக்களுக்கு எல்லாம் தெரியும்.

தமிழனின் பலம் தமிழனுக்கே தெரியாது.

ஆனால் சிங்களத்திற்கு நன்றாக தெரியும்.


கடலில் வீணாக கலக்கும் மகாவலியை வடக்கிற்கு திருப்பச்சொல்லி பாருங்கள்...அப்போது தெரியும் அவர்கள் பயமும் அச்சமும்......

சிங்களவனுக்கு விளங்காமல் இல்லை ஒரு நடிப்புக்கு கேட்பது உண்டு உங்களுக்கு என்ன பிரச்சனை? பிரச்சனையை சாட்டி வெளிநாட்டு தமிழர் நிறைய காசு படிப்பு வைத்து இருக்கிறியள்  இப்ப பிரபாகரனும் இல்லை நிம்மதியாய் ஜப்னாவில் இருக்கலாம் தானே ? ஏன் உங்கடை அரசியல்வாதிகள் திரும்பவும் புலியை கொண்டுவருவம் எண்டு பயம் காட்டினம் ?  அமைதியாய் சொன்னன் எல்லாத்துக்கும்  "உங்கடை அடிப்படை தமிழ் எதிர்ப்பு" என்றன் விளங்கவில்லை என்று கேட்டார்  நீங்கள் சைனாவுக்கு குடுத்த துறைமுகத்தை தமிழராகிய நாங்கள் காசு குடுத்து 100 வருட ஒப்பந்தம்போட்டு எடுக்க விடுவியளா ?      அதன் பின் அந்த சிங்களவன் என்னைக்கன்டாலும் என்னிடம் தமிழ் பழக வருவதில்லை .?

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு இலங்கைத் தீவில் ஒரு பிரச்சனையும் இல்லை. அவைட சண்டித்தனமும்.. காடைத்தனமும்.. மத வெறிப் பயங்கரவாதமும் தான் அவைட பிரச்சனை. இல்லாட்டில்..

அவை கேட்க ஆயுதம்.. இராணுவ முகாம்.. கொடுப்பானா.. சிங்களவன்.. தமிழன் புட்டும் தேங்காய்ப்பூவும் என்பானா.

சிலர்.. 2009  மே க்குப் பின் இன நல்லிணக்கத்துக்காக யாழில உழைக்கிறனமாம்.. என்று காட்டித்திரியினம்.  

உந்த நல்லிணக்கம் என்பது எந்த அடிப்படையும் அற்றது. உப்புச் சப்பற்ற மேற்குல குறிப்பாக அமெரிக்காவின் விரிவாக்க.. வியாபாரம் நோக்கம் கொண்டது மட்டுமே. அதன் கூலிகள் இங்கும் அதற்காக மாங்கு மாங்கென்று எழுதித் தள்ளுகிறார்.

ஒரு பிரயோசனமும் இல்லை. அடிப்படையும் இல்லை. எல்லாமே வெளிப்படை உண்மையாகக் கொட்டிக்கிடக்குது. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Jude said:

 

உங்களுக்கு எப்படி முஸ்லீம்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு தெரியாதோ, அப்படியே தமிழர்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு சிங்களவர்களுக்கும் தெரியாது. அவர்களின் உலகம் அவர்கள் மொழியில் உள்ள ஊடகங்களிலும் பிக்குகளின் பிரசங்கங்களிலும் தங்கி உள்ளது. சிங்கள ஊடகங்கள் விற்பனைக்காக இனத்துவேஷத்தை அடிப்படியாக கொண்டு செயற்படுகின்றன.

தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களின் பிரச்சினை தமிழரான உங்களுக்கே தெரியாத போது எப்படி சிங்களத்தில் வராத தமிழர் பிரச்சினைகள் சிங்களவருக்கு புரியும்?

தமிழரின் பிரச்சனை சிங்களவருக்கு நன்றாக தெரியும்.
அதே போல்  தமிழரின் பிரச்சனையை தீர்ப்பதற்கு சிங்களத்திற்கு என்ன அச்சமென்று தமிழருக்கும் நன்றாக தெரியும்.
இருக்கட்டும்....

தமிழர் அழிவுகள் வரும்போது எதுக்குமே வாய் திறக்காத இலங்கை முஸ்லீம்கள்......
தமிழர் பிரச்சனை சம்பந்தமாக சிங்கள-தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடக்கும் போது மட்டும் தாங்களும் குந்துவதற்கு கதிரை கேட்கும் மர்மம் தங்களுக்கு தெரியுமா தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2018 at 6:48 PM, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

ஈழத்தமிழரின் பிரச்சனை 
உகாண்டா காரன்  உக்ரைன் காரன் 
சீனா காரன்  சிங்களவனுக்கும் தெரியாது.

இன்றைக்கு இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை?
என்ன பிரச்சனை என்று  உங்களுக்கு தெரியுமா?
தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
வாசித்து அறிய ஆவலாக இருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் எவை என்பதுபற்றி சிங்களவன் கேள்விக்கேட்கலாம், ஏனென்றால் அவனுக்கு அது புரியபோவதில்லை அல்லது புரிந்தாலும் அவன் இனி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஆனால், தமிழருக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்று தமிழருக்கே சந்தேகம் வருவதென்பது உண்மையாகவே ஒரு பிரச்சினைதான். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சிங்களவர்கள் தமிழருக்கெதிராக இதுவரை காலமும் செய்துவந்த, இப்போதும் செய்துவருகிற அடக்குமுறைகளுக்கும், இனவழிப்புடனான ஆக்கிரமிப்பிற்கும் எப்படி நியாயம் கற்பிக்கிறார்களோ, அதற்கு நிகரானது ஒரு தமிழருக்கு அவரது இனம் எதற்காகப் போராடியது என்பது பற்றிய சந்தேகம் என்பது.

ஆனால், 2009 மே வரைக்கும் தமிழருக்கு இருந்துவந்த பிரச்சினைகள் பற்றியோ அல்லது அவர்கள் போராட ஆரம்பித்ததற்கான மூல காரணங்கள் பற்றியோ இந்தத் தமிழருக்கு எந்தவிதமான சந்தேகங்களோ அல்லது கேள்விகளோ இருந்ததில்லை. தமிழரின் விடுதலைக்கான போராட்டத்தை முன்கொண்டு நடத்தியவர்களை தனது ஒரே நம்பிக்கையாக வரிந்துகொண்டு, இறுதிவரை ஆதரவு வழங்கி, அவர்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி, அவற்றை வெளியாருக்குச் சொல்லக்கூட பின்னிற்காத அந்தத் தமிழர் இப்போது இவையெல்லாம் உண்மையா அல்லது தேவையில்லாமல் சிங்களவர்களின் நாட்டை தமிழர்கள் பிடிக்கப் போனதன் காரணமே அவர்களுக்கு கிடைத்த இந்த அழிவு, ஆகவெ இந்த அழிவு சரியானதுதான் என்கிற முடிவிற்கு வந்து நிற்கிறார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், முஸ்லீம்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி இவருக்கு இருக்கும் தெளிவு என்பது தனது சொந்த இனத்தின் இருப்பிற்கான தேவைபற்றியோ அல்லது அதற்கு நடந்த அநியாயங்கள் பற்றியோ இப்போது இல்லையென்பதுதான்.

இதற்கு என்னைப்பொருத்தவரை ஒரு காரணம்தான் இருக்கமுடியும். அதாவது, தமிழினத்திற்கும், அது கொண்டுநடத்திய ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கும் ஏற்பட்ட முற்றான தோல்வியென்பது. இந்தத் தோல்விகளுக்கெல்லாம் யார் அல்லது எதுவெல்லாம் காரணம் என்று அறிந்து, அவற்றின்மீது இவற்றையெல்லாம் சுமத்திவிட்டால் அதுபற்றிய தேடல்களுக்கும், வினாக்களுக்கும் தேவையில்லாமல் போகுமென்கிற எண்ணமும், தோல்வியினால் ஏற்படுத்தப்பட்ட மனவுழைச்சலும், விரக்தியும், போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீதான அதீத வெறுப்பையும், எதிரிமீதான விபரிக்க முடியாத பயம் கலந்த மரியாதையையும், தாம் செய்தது தேவையற்றது, ஆகவே அடிபணிந்துபோவதுதான் பிழைக்கும்வழி என்கிற மனோபாவத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்த மனோநிலைதான், இன்றுவரைக்கும் தமிழர் உரிமை பற்றி எவர் பேசினாலும், அது தேவையற்றது, ஆக்கிரமிப்பாளருடன் இனக்கலப்பில் ஈடுபடுவதுதான் சரியானதென்கிற முற்றான சரணாகதி நிலையை அந்தத் தமிழருக்கு ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

தான் சொல்வதையும், எழுதுவதையும் முற்றாக நம்பிக்கொண்டு, மற்றவர்களையும் அதைப் பின்பற்றுங்கள் என்று இத்தமிழர் கேட்பதுகூட இந்த மனோநிலையின் ஒரு அங்கமாகத்தான் நான் பார்க்கிறேன்.

தான் முற்றாக நம்புவதை இங்கே எழுதும் ஒருவரிடமிருந்து வேறு எதனையும் நாம் எதிர்பார்க்க முடியாதென்பது எமக்கு விளங்கினால்ச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2018 at 12:13 PM, Jude said:

பண்பாட்டுக்கு அடிப்படை மொழி - மதமல்ல என்றால் ஏன் பிறப்பு, திருமணம், இறப்பு சம்பந்தமான நிகழ்வுகள் மொழி சார்ந்து அமையாமல் மதம் சார்ந்து அமைந்து இருக்கின்றன? 

பிறப்பு இறப்பு சம்பந்தமான சடங்கியல் அவரவர் தெரிவு. மதமும் அவரவர் விருப்பம் சார்ந்தது. கணவனும் மனைவியும் ஒரே மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதே மானிட சமூகம் ( நீங்கள், நான் உட்பட) அவ்வளவாக நாகரிகம் அடையவில்லை என்பதைச் சுட்டுகிறது. எனவே தவறான வழக்கத்தை வாதப் பொருளாய் வைத்து மதத்தை இன அடையாளமாய் நிறுவ இயலாது.

On 8/5/2018 at 12:13 PM, Jude said:

இன்று பிரான்சில் பிறந்த தமிழர் பிரெஞ்சு மொழி பேசுகிறார். அவரின் பேரப்பிள்ளைகளும் பெரெஞ்சு பேசும் மக்களாவர். அவர்கள் பிரெஞ்சு இனமா தமிழரா? உங்கள் வாதப்படி பேசும் மொழி இனத்தை நிர்ணயித்தால் அவர்கள் பிரெஞ்சு இனமாவர். 

வேற்று மண்ணில் பிறந்து வளர்பவரின் இனமும் அவரவர் தெரிவே. பெரும்பாலும் திருமலை நாயக்கர் காலத்தில் தமிழகம் வந்த தெலுங்கு பேசும் மக்கள் மொழியாலும் பண்பாட்டாலும் நம்முள் கரைந்து போயினர். தமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் அளவுக்கு நம் மொழிக்கு மேலும் மெருகூட்டினர்.  இந்த மண்ணும் மொழியும் நமக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவு அவர்களுக்கும் சொந்தம். எனவே தம் இனம் தமிழினம் என்பது அவர்கள் தெரிவு. விதிவிலக்காக என் தெலுங்கு நண்பர் ஒருவர் தெலுங்கில் இலக்கிய அறிவையும் வளர்த்து அம்மக்களோடு தொடர்பு வைத்துத் தம் வேர்களைப் பற்றிய புரிதலை நமக்கும் ஏற்படுத்துகிறார். அவரது இன உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன். பிரான்ஸில் பிறந்து வளர்ந்த தமிழருக்கும் இந்த அளவுகோலே பொருந்தும்.

மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம். வீட்டிலும் வழிபாட்டு இடங்களிலும் மட்டுமே கடைப்பிடிப்பது நாகரிகம். மொழி எங்கும் விரவி நிற்கும். மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல, பண்பாட்டு அடையாளமும்  கூட . எனவேதான் மொழி இலக்கணம் பேச வந்த தொல்காப்பியன் எழுத்து, சொல் மட்டுமன்றி பொருளும் பேசினான்.

 

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2018 at 5:08 PM, ஈழப்பிரியன் said:

நாங்கள் என்ன தான் குத்தி முறிந்தாலும் அத்தனை அதிகாரங்களும் அவர்களிடம் தானே உள்ளன.விரும்பிய நேரத்தில் அத்தனையும் அவரகள் கைக்கு போகுமே அது எப்படி?

  1. தொண்டமான் என்ற ஒரு தமிழனின் வாக்கால் பாராளுமன்றத்தில் வைத்து ஒரு சிங்கள அரசு கவிழ்க்கப்பட்டதே? யாருடைய கையில் அரசை கவிழ்க்கும் அதிகாரம் இருந்தது?
  2. வாக்கழிப்பை பகிஸ்கரித்து ரணிலை ஜனாதிபதியாகாமல் மகிந்த ராஜபக்ஷவை ஜானதிபதியாக்கும் அதிகாரம் யார் கையில் இருந்தது?

தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இப்படி பிரயோகித்த போது சிங்களவர்களும் கையறு நிலையில் உங்களைப்போல தான் எழுதினார்கள்.

எந்த சிங்கள மகனாவது தனது வீட்டில் ஒரு அறையைத் தானும் அத்துமீறி போய் இருக்கவிடுவானா?ஏன் இலவசமாக என்றாலும் கொடுப்பானா?

ஆயுதமுனையில் இராணுவமும் போலிசும் வரும் போது சிங்கள பொதுமகன் விடாமல் என்ன செய்வது? ஜே.வி.பி. காலத்தில் ஊரடங்கு சட்டம் போட்டு பாடசாலை பிள்ளைகளையே வீதி ஓரங்களில் டயர் போட்டு எரித்தார்கள். 

எத்தனயோ ஊடகவியலாளர்களின் கொலைகளும் காணாமல் போதல்களும் இன்றுவரை எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் வீடுகளும் ஜே.வி.பி. காலத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்க பட்டன, உடைக்கப்பட்டன.

இன்று சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் யார்?

அத்தனை பேருமே தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்த மக்களாச்சே?

போர் புரிந்தால் மக்கள் வீடுகள் உடையும். வீடுகள் இல்லாத மக்கள் அகதிகள் ஆவார்கள்.  நாங்கள் போருக்கு போனோம் இல்லையா? ஆகவே எமது மக்கள் அகதிகள் ஆனார்கள்.

இதுவே சிங்கள மக்கள் எனும் போது எத்தனை இழப்பீடுகள் கிடைத்திருக்கும்.

இல்லை - ஜே.வி.பி. காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. ரோகண விஜேவீராவின் மனைவி தனது கணவருக்கு என்ன நடந்தது என்று கேட்டு இப்போது தான் வழக்கே போட முடிந்து இருக்கிறது. காணமல் போன, மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் குடும்பங்களுக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. இவர்கள் அறியப்பட்டவர்கள். அறியப்படாத ஏழைகளுக்கு இழப்பீடு என்றாலே என்னவென்றும் தெரியாமல் பாதிக்கபட்டு அழிந்து போகிறார்கள்.

 

தமிழன் என்ன தான் கேட்டான்?

ஆயுதம் எடுத்து போர் புரிந்து தனிநாடு கேட்டான்.

சிங்களமக்கள் எவ்வளவு உரிமையுடன் வாழ்கிறார்களோ அதே உரிமையுடன் தமிழனும் வாழவேண்டுமென்று தானே கேட்கிறான்.

அரசியல் பலம் உள்ளவர்களுக்கு உள்ள உரிமைகள் அந்த பலம் இல்லாதவர்களுக்கு இல்லை.

பணம் படைத்தவர்களுக்கு உள்ள உரிமைகள் ஏழைகளுக்கு இல்லை.

சிங்களவர் தமிழர் எல்லாம் அதற்கு அப்பால் தான்.

மத்திய வங்கி ஆளுனர் தமிழர். 

முதல் இருந்த மத்திய வங்கி ஆளுனரும் தமிழர். அவர் மத்திய வங்கியை கொள்ளைஅடித்த அளவுக்கு எந்த சிங்களவரும் கனவும் கண்டு இருக்க மாட்டார்கள். இந்த தமிழர்களுக்கு இல்லாத உரிமையா சிங்களவருக்கு இருக்கிறது?

வடமாகாண முதமைச்சர் ஹெலிகோப்ற்றில் தான் கொழும்பு போவார். போகும்போது அவருக்கு ஒரு மைப்பாதுகாவலரும் கூட போவார். இவை எல்லாம் அரச செலவில். எத்தனை சிங்களவருக்கு இந்த உரிமை இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2018 at 9:06 AM, Jude said:

 

நான் கேட்கவில்லை - சிங்களவர்கள் கேட்கிறார்கள். தமிழருக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சிங்களவருக்கும் இப்படியான பிரச்சினைகள் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழருக்கு உள்ள பிரச்சனைகளை கையாள தமிழரிடம் நிறைய பணமும் வளங்களும் இரு க்கின்றன. ஆனால் எமது தலைமைகள் இந்த வளங்களை பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க முயல்வதில்லை.

  1. வெளிநாட்டு பணம் தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. மாறாக வாள்வெட்டு குழுக்களுக்கு மோட்டர் சையிக்கில் வாங்க பயன்படுகிறது.
  2. மாகாண சபை தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. தங்களுக்குள் வழக்கு போட்டு யார் அமைச்சர், யார் லஞ்சம் வாங்கினார். யார் துப்பாக்கி வாங்கினார் என்று சண்டை பிடிக்க பயன்படுகிறது.
  3. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் எங்கள் மக்களின் பகுதிகள் - ஆனால் அவற்றை பயன்படுத்தி பெறக்கூடிய வேலை வாய்ப்புகளையோ, பொருளாதார அபிவிருத்தியையோ எமது தலைமைகள் செய்வதில்லை. புலம் பெயர்ந்தவரின் பணம் இலங்கை வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் மேலாக சேர்ந்து சிங்கள பகுதிகளில் முதலிடப்படுகிறது. 

 

இதை  நானும் ஏற்கின்றேன்

இது ஒரு சிறிய  கோடு பெரிய  கோட்டுத்தத்துவம் தான்

அதை  தமிழர் தரப்பு நிறைவேற்றவில்லை

நிறைவேற்ற  முயலவில்லை  என்பதை  ஏற்கத்தான் வேண்டும்

On 8/5/2018 at 1:48 AM, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

அதிகாரத்தை  கையில்  வைத்திருக்கும் எவருக்கும்  அதன் வீச்சு தெரியாது

ஒருமுறை இழந்து  பார்த்தால் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் முடிவுக்கு வந்தும் தமிழ் சமுதாயத்திற்கு மத்தியில் இருந்து ஆயுதக்கலாச்சாரம் களையப்படவில்லை என்பது எமது பெரும் குறைபாடு. போர்காலத்தில் ஏற்பட்ட அழிவிலிருந்தும் பொருளாதார கல்வி பின்னடைவுகளிலிருந்தும் மீண்டுவரவேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுபட்டு நின்று அக்கறையுடனும் குறிக்கோளுடனும் வாழ எவரும் முயற்சிப்பதாக தெரியவில்லை. அவன் அவன் தன்வாழ்கையை வாழ்ந்துவிட்டு போவதில்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு விலக்கல்ல. 

குறைபாடுவதும் சேறுபூசுவதும் எமது பிழைப்பாக போச்சு. போரின் பின் எமது வாழ்வாதார அடித்தளமே ஆட்டம் கண்டு  நம் உறவுகள் சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டிய இந்நிலையில் இனரீதியான ஒற்றுமைதான் எமது அடிநாடி. நாம் வேண்டியதை ஜனநாயமுறையில் வென்றெடுக்க இன ஒற்றுமை இன்றியமையாதது. கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது அதை நேருக்கு நேர் இருந்து கதைத்து விட்டுக்கொடுப்புடனும்  தொலைநோக்குடனும் பேதங்களை தீர்ப்பதற்குப் பதிலாக சொந்தமாக கட்சி தொடங்கி  அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அரசியலே தெரியாத அரசியல் மூடர்கள். இந்த வீணர்கள் எதற்குமே உதவாதவர்கள். தமிழினம் சின்னாபின்னப்பட்டு போனதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vanangaamudi said:

போராட்டம் முடிவுக்கு வந்தும் தமிழ் சமுதாயத்திற்கு மத்தியில் இருந்து ஆயுதக்கலாச்சாரம் களையப்படவில்லை என்பது எமது பெரும் குறைபாடு. போர்காலத்தில் ஏற்பட்ட அழிவிலிருந்தும் பொருளாதார கல்வி பின்னடைவுகளிலிருந்தும் மீண்டுவரவேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுபட்டு நின்று அக்கறையுடனும் குறிக்கோளுடனும் வாழ எவரும் முயற்சிப்பதாக தெரியவில்லை. அவன் அவன் தன்வாழ்கையை வாழ்ந்துவிட்டு போவதில்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு விலக்கல்ல. 

குறைபாடுவதும் சேறுபூசுவதும் எமது பிழைப்பாக போச்சு. போரின் பின் எமது வாழ்வாதார அடித்தளமே ஆட்டம் கண்டு  நம் உறவுகள் சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டிய இந்நிலையில் இனரீதியான ஒற்றுமைதான் எமது அடிநாடி. நாம் வேண்டியதை ஜனநாயமுறையில் வென்றெடுக்க இன ஒற்றுமை இன்றியமையாதது. கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது அதை நேருக்கு நேர் இருந்து கதைத்து விட்டுக்கொடுப்புடனும்  தொலைநோக்குடனும் பேதங்களை தீர்ப்பதற்குப் பதிலாக சொந்தமாக கட்சி தொடங்கி  அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அரசியலே தெரியாத அரசியல் மூடர்கள். இந்த வீணர்கள் எதற்குமே உதவாதவர்கள். தமிழினம் சின்னாபின்னப்பட்டு போனதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம்.

ஒரு சிறந்த அரசியல்வாதி இல்லாததுதான் ஈழத்தமிழினத்தின் குறையும் சாபக்கேடும்...
ஒரு பலமான சுயநலமில்லாத அரசியல்வாதி இருந்திருந்தால் இயக்கங்களே உருவாகியிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஒரு சிறந்த அரசியல்வாதி இல்லாததுதான் ஈழத்தமிழினத்தின் குறையும் சாபக்கேடும்...
ஒரு பலமான சுயநலமில்லாத அரசியல்வாதி இருந்திருந்தால் இயக்கங்களே உருவாகியிருக்காது.

உண்மையான வார்த்தைகள். சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கு இந்திய றோவின் சதி முதலில் புரியவில்லை. புரிந்த பின் சுயநலத்துக்கு விலை போய் விட்டார்கள்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசியல்வாதியாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு லீ குவான் யு கிடைத்திருப்பார். ஈழம் சிங்கப்பூர் போல உருவாகி இருக்கும். சிங்கள நாடு மலேசியா போன்று வளர்ச்சி அடைந்து இருக்கும்.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.