Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்!

October 3, 2018

1 Min Read

திருமலை ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்…

VM.jpg?resize=558%2C412

கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். நியூசிலாந்துக்குச் சென்றுள்ள திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகாரை குளோபல் தமிழ் செய்திகளின் பத்தியாளர் வரதராஜன் மரியம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட திருகோணமலையின் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ” இராவணதேசம்” நூல் வெளியீட்டு நிகழ்விலே திருமலையின் புதிய ஆயர் பேசிய விடயங்களை தனது கலந்துரையாடலில் நினைவுபடுத்தியுள்ளார் பத்தியாளர்.

இன்று கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும். அதுவரை ஏதோ வருகிறது; வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிராதீர்கள்! தமிழ் தலைமையை நோக்கி கூறியிருந்தார் ஆயர். சிவ பக்தனான இராவணனின் பூமி பற்றி ஆயர் மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

புத்தக வெளியீட்டில், ஆயராக வந்தவர், வெறும் ஆசியுரை தான் வழங்குவார் என எதிர்பார்த்தவர்கள், கத்தோலிக்க ஆயர் தேவாரம் பாடப்பெற்ற இந்து ஆலயம் பற்றி ஆதங்கத்துடன் அங்கு பேசுவார் என்றும் எதிர்பார்க்கவில்லை. இது சர்ச்சைக்குரிய உரையாக அமைந்ததாக மட்டக்களப்பு ஊடவியலாளர் உதயகுமாரும் குறிப்பிட்டதாக வரதராஜன் குறிப்பிடுகிறார்.

அண்மையில் நியூசிலாந்து சென்றிருந்த ஆயருடன் மேற்குறித்த உரை பற்றிக் கேட்டபோது , ” நான் பிறந்த காலம் முதல் தட்டி விழுந்து ஓடித் திரிந்த மண் அது . கிண்ணியாவில் தமிழ் தவழ்ந்தது. இன்று போய்ப்பாருங்கள். நான் புதிதாய் ஒன்றும் சொல்லவில்லை. நடப்பதைத்தான் அங்கு சொன்னேன்” என்று ஆயர் பதில் அளித்துள்ளார்.

ஆயருடன் கலந்துரையாடிய சில விடயங்களை பின்வருமாறு குறிப்பிடுகிறார் வரதராஜன்.

நம்மவர்கள் சொல்கிறார்கள் ” எல்லாம் நிறைய இருக்கிறது ” ..என்று. ஆனால் நம்மைச் சந்திக்கும் வெளிநாட்டவர்கள் , “இதுவே கடைசிச் சந்தர்ப்பம்…… நிறைவாய்க் கேளுங்கள்..உங்கள் பக்கம் தான் கேட்கவேண்டும்..” என்று சொல்கிறார்கள்.

திருமலை மாவட்டத்திலிருந்து அகதிகளாகச் சென்ற பல குடும்பங்கள் தங்கள் காணி பூமிகளை விட்டுவிட்டு இன்றும் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். பலருக்கு இது இன்னமும் தெரியாது. அவர்களை, அவர்களில் இயன்றவர்களை மீளவும் திருமலை மாவட்டத்திலேயே குடியேற்ற புலத்திலுள்ள வசதியானவர்கள் முன்வரவேண்டும். அவர்கள் கட்டாயம் செய்யவேண்டிய சமூகக் காரியமாக அது அமையும்.

மட்டுநகர் – திருமலை மறை மாவட்டத்திலிருந்து திருமலை பிரிக்கப்பட்ட பின்னர் 15 கத்தோலிக்கப் பங்குகளை நான் நிருவகிக்கவேண்டியுள்ளது. அதில் 4 பங்குகள் ( Parishes) தன்னிறைவானவை. 11 பங்குகளை பராமரிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. யாழ், மன்னார், மட்டக்களப்பு போன்ற வருமானமும் வசதியும் கொண்ட மறைமாவட்டம் அல்ல எனது மறைமாவட்டம். இதைவிட வறிய மாணவர்கள் , போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எனப் பலரையும் பராமரிக்கும் பாரிய பணியும் எமது நிருவாகப் பொறுப்பாக உள்ளது.
புலத்திலுள்ள கத்தோலிக்கர்கள் உதவலாம்.

ஒரு பங்கை வசதியுள்ளவர்கள் தத்தாகவும் குறித்த காலத்துக்கு ( 1 .2 வருடங்களுக்கு) எடுக்கலாம். இது எனது கோரிக்கை அல்ல. ஆலோசனை மட்டுமே ! ” இவ்வாறு திருமலையின் புதிய ஆயர் இம்மானுவேல் கூறியதாக குறிப்பிடும் வரதராஜன் ஆயர் சொன்னவற்றிலுள்ள அர்த்தங்களைப் புரியக் வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/98128/

அதிகம் கவனம் பெற வேண்டிய திரிகளில் ஒன்று... இன்றைய தமிழ் தலைமைகள் இப்படியான விடயங்களில் கவனம் செலுத்தாத மாதிரி நாமும் பார்க்காது கடந்து செல்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

அதிகம் கவனம் பெற வேண்டிய திரிகளில் ஒன்று... இன்றைய தமிழ் தலைமைகள் இப்படியான விடயங்களில் கவனம் செலுத்தாத மாதிரி நாமும் பார்க்காது கடந்து செல்கின்றோம்.

சில விடயங்களில் நாம் யதார்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கின் மாகாணசபை, கின்னியா உட்பட பல விடயங்களில், இணைக்க அரசியல் என்ற பெயரில் கோட்டை விட்ட கூத்தமைப்பின் தலைமை, இப்ப... ஏமாந்து போனோம் என்று கையை உரசும் கொடுமை...

சரியோ, பிழையோ... விக்கியர் வழி தான் சரி என தோன்றுகிறது.... அவர் கையை பலப்படுத்த வேண்டும்...

1 hour ago, Nathamuni said:

சம்பந்தன் சுமந்திரன் வரிசையில் விக்கியராலும் எதனையுன் சாதிக்க முடியாது. வடக்கு மாகாணசபையில் செய்ய கூடிய எத்தனையோ விடயங்கள் இருந்தும் செய்யாது, தன் கையாலாகத் தனத்தை வெற்று உணர்ச்சி பேச்சுக்களாலும் உசுப்பேத்துதல்களாலும் மறைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டு அரசியல் செய்யும் ஒரு வயதான நரித்தனம் மிக்க ஒரு அரசியல்வாதியாகவே அவரை பார்க்கின்றேன்.

இருக்கும் சொற்ப அதிகாரங்களை வைத்துக் கொண்டு எந்தளவுக்கு ஒரு மாகாணத்தையும் தன் இன மக்களையும் முன்னேற்ற முடியும் என்பதை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நசீர் அகமட்டிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இருக்கும் சொற்ப அதிகாரங்களை வைத்துக் கொண்டு எந்தளவுக்கு ஒரு மாகாணத்தையும் தன் இன மக்களையும் முன்னேற்ற முடியும் என்பதை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நசீர் அகமட்டிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் 

எப்படி காணிகளை அபகரிப்பது என்பதை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நசீர் அகமட்டிடம் இருந்து முதலமைச்சர் விக்னேசுவரனும் கற்று கொள்ள வேண்டுமா???? :103_point_down: 

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தமிழ் மக்களின் காணிகளை திட்டமிட்டு அபகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தமிழ் மக்களின் காணிகளை திட்டமிட்டு அபகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் பௌத்த மதத்தினர் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களால் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் உம் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், வடக்குக் – கிழக்கு இணைக்கப்படவேண்டுமென்பதே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தமிழர்களின் காணிகள் அபகரிப்பு மட்டும் உங்களுக்கும் அரியனேந்திரனுக்கும் தெரிவதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இப்படியான வியாக்கியானங்கள் விக்கியரினதும் அவரது சகபாடிகளினதும் கையாலாக்தனத்தை மறைக்க உதவுமே தவிர வேறு எந்த பயனும் இல்லை.

இது கிழக்கு மாகாணசபையின் இணையம்:https://www.ep.gov.lk/en/#eastern-development-plan
இது வடக்கு மாகாணசபையின் இணையம்.https://www.np.gov.lk/

நேரம் இருந்தால் இரண்டிலும் போடப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான தகவல்கள்/ ஆவணங்கள்.  அபிவிருத்தி தொடர்பான அறிக்கைகள் / ஆவணங்கள், நிகழ்வுகள் என்பனவற்றை ஒப்பிட்டு பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சம்பந்தன் சுமந்திரன் வரிசையில் விக்கியராலும் எதனையுன் சாதிக்க முடியாது. வடக்கு மாகாணசபையில் செய்ய கூடிய எத்தனையோ விடயங்கள் இருந்தும் செய்யாது, தன் கையாலாகத் தனத்தை வெற்று உணர்ச்சி பேச்சுக்களாலும் உசுப்பேத்துதல்களாலும் மறைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டு அரசியல் செய்யும் ஒரு வயதான நரித்தனம் மிக்க ஒரு அரசியல்வாதியாகவே அவரை பார்க்கின்றேன்.

இருக்கும் சொற்ப அதிகாரங்களை வைத்துக் கொண்டு எந்தளவுக்கு ஒரு மாகாணத்தையும் தன் இன மக்களையும் முன்னேற்ற முடியும் என்பதை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நசீர் அகமட்டிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்

உங்கள் கருத்துக்கு மறுகருத்து  இல்லை. நண்பர் ஜீவன் சிவா கூட இதே கருத்தினை கொண்டிருக்கிறார்.

எனினும் சிங்களவர்கள் என்ன நோக்கத்துக்காக விக்கியரை எதிர்கிறார்களோ அதே காரணத்துக்காக நாம் ஆதரிக்க வேண்டும்.

ஆயுத போராட்டத்தினை எதிர்த்த, மேலை நாடுகள் அகிம்சைப் போராட்டத்தினை ஆதரிக்க கடைமை பட்டுள்ளன. இந்த நிலையில் முல்லைத்தீவு மக்கள் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

மக்களுக்கு இந்த விடயத்தில் துணிவும், தன்னம்பிக்கையும் வரும் போது .... போராட்டம் வலுவாகும்... உரிமைகள் கிடைக்கும்.

6 minutes ago, Nathamuni said:

நன்றி நாதம்

இந்த முல்லைத்தீவு போராட்டம் மக்களாலும் வெகு சன அமைப்புகளாலும் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டதா அல்லது வட மாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டதா? இதில் வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் பங்கு காத்திரமானது என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் போனது கனநாள் 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு மாகாணம் போனது கனநாள் 

தம்மை பலவீனபடுத்துகிறார்கள் என்று தெரிந்தும் தமில் தலைமகள் அரசுக்கு முட்டுகொடுத்துகொண்டு இருந்தன இருக்கின்றன இருக்கபோகின்றன .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தம்மை பலவீனபடுத்துகிறார்கள் என்று தெரிந்தும் தமில் தலைமகள் அரசுக்கு முட்டுகொடுத்துகொண்டு இருந்தன இருக்கின்றன இருக்கபோகின்றன .

தம்மை பலவீனப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் தமிழினம் மீண்டும் இந்தத் தமிழ் தலைமைகளைத் தெரிவு செய்யத்தான் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Paanch said:

தம்மை பலவீனப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் தமிழினம் மீண்டும் இந்தத் தமிழ் தலைமைகளைத் தெரிவு செய்யத்தான் போகிறார்கள்.

ஊருக்கு போய் வந்தவர்களை கேட்டுப்பாருங்கள் அங்குள்ளவர்களுக்கு சம்பந்தன் சுமத்திரன் எதோ செய்யினம் அவைக்குத்தான் என்று சொல்லுங்கள் காரணம் கீரைக்கடைக்கு எதிர்கடை உசாராக இல்லை அவையும் ஒப்புக்கு சப்பாணியாத்தான் பாட்டு பாடுகினம் விக்கியரிடம் பலகுறைக்கள் இருந்தாலும் தமிழரசு சப்பையாக தமிழரை ஏமாத்துகிறார்கள் என்று தெரியுது ஆளுக்கு அதனால் வந்த கோபத்தில் அறிக்கை போர் நடக்குது ஆளிடம் தன்னம்பிக்கை என்பது சிறு துளியும் கிடையாது கடவுளை கும்பிடாமால் ஆசாமியை நம்புவர்கள் அநேகர் அப்படியானவர்கள் இவரும் அப்படியே ஆனால் அவருக்கு பொருத்தமான கூட்டு கிடைத்து அதிகாரமும் கிடைத்தால் அநேகமா அடி தூள் பறக்கும் என்ன ஒன்று அப்படி வந்தால் ஜோசப் பரராஜசிங்கம் வரிசையில் ஏத்தி விடுவதுக்கு சொறிலங்கா இனவாத அரசு மும்முரமாய் முயற்சிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கென்ன முல்லையின் நிலைமையை பாருங்கள் .

No automatic alt text available.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் கிழக்கு மக்களுக்காய் போராட வேண்டும் ?

9 hours ago, Nathamuni said:

சில விடயங்களில் நாம் யதார்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கின் மாகாணசபை, கின்னியா உட்பட பல விடயங்களில், இணைக்க அரசியல் என்ற பெயரில் கோட்டை விட்ட கூத்தமைப்பின் தலைமை, இப்ப... ஏமாந்து போனோம் என்று கையை உரசும் கொடுமை...

சரியோ, பிழையோ... விக்கியர் வழி தான் சரி என தோன்றுகிறது.... அவர் கையை பலப்படுத்த வேண்டும்...

விக்கியர் பதவியில் இருக்கும் மட்டும் தமிழ் மக்களுக்கு குரல் குடுக்கிற மாதிரி தன்னை காட்டிக் கொள்வார் ..கடைசி வரைக்கும் அவர் ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை....சம்மந்தரையும் ,சுமத்திரனையும் விட பெரிய நச்சுப் பாம்பு விக்கியர்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நாங்கள் ஏன் கிழக்கு மக்களுக்காய் போராட வேண்டும் ?

விக்கியர் பதவியில் இருக்கும் மட்டும் தமிழ் மக்களுக்கு குரல் குடுக்கிற மாதிரி தன்னை காட்டிக் கொள்வார் ..கடைசி வரைக்கும் அவர் ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை....சம்மந்தரையும் ,சுமத்திரனையும் விட பெரிய நச்சுப் பாம்பு விக்கியர்

நஞ்சு முறிவு மருந்து எப்படி எடுப்பது என்பது உங்களுக்கு தெரியுமா ? நச்சு பாம்பில் நல்ல விசத்தை  எடுத்து அதை குதிரையில்(உங்களுக்கு வேறு யாரும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பு அல்ல ) கொஞ்சமாய் கொஞ்சம் மில்லி விட குறைவாய்  செலுத்தி பின் அந்த குதிரையின் ரத்தமே நஞ்சு முறி மருந்து. கொத்தாமல் இருந்து நல்ல விசத்தை மட்டுமே கொடுக்கும்  நல்ல பாம்பு நல்லதா ? தமிழ் மக்களை தினமும் கொத்தி துளைக்கும் சம்பந்தன் சுமத்திரன் நல்லவர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

விக்கியர் பதவியில் இருக்கும் மட்டும் தமிழ் மக்களுக்கு குரல் குடுக்கிற மாதிரி தன்னை காட்டிக் கொள்வார் ..கடைசி வரைக்கும் அவர் ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை

இருப்பதில் எதை இழப்பதற்கு  விக்கியரின் செயட்பாடுகள் வழிகோலும்?

14 hours ago, ரதி said:

கடைசி வரைக்கும் அவர் ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை

எதை பெற்று தருவேன் என்று நினைவூட்டீனால் மிகவும் நன்று. 

தனது  உரிமைக்குரல் ஓயாது என்றே விக்கியர் மீண்டும் மீண்டும் எழுத்தில் கூட சொல்லி இருக்கிறார்.

உண்மையொயோ அல்லது நடிப்போ, விக்கியர் ஏதாவது ஒரு வழியில், மோடி என்றும் பாராது, தனது கனவான் முறையிலே அழுத்தத்தை கொடுத்தார். வேறு முறையிலும் அது தொடர்கிறது.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

சம்மந்தரையும் ,சுமத்திரனையும் விட பெரிய நச்சுப் பாம்பு விக்கியர்

இருக்கலாம். அவர் அப்படி இருப்பதற்கு இடமுண்டு என்பதும் தெரியும்.

தமிழ் அகராதியில்,  எட்டப்பர்  என்பதை  கதிர்காமர் எனும் பதம் மாற்றீடு செய்து விடும் எனும் ஓர் பார்வை சரித்திரம், மற்றும் வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்தது. அது இப்பொது முற்றாகவே இல்லாமல் போய்விட்டது.கருணை எனும் பதத்திற்கு ஆதித் தமிழில்  அர்த்தம் தேடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

ஒரு மாகாணத்தையும் தன் இன மக்களையும் முன்னேற்ற முடியும் என்பதை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நசீர் அகமட்டிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்

இதில் கில்லாகு தமிழ் மக்களின் இருப்பே பேரம் விடப்படுகிறது.

இப்போது கூட தமிழ் மக்களே, இன அடிப்படையில், கிழக்கு முழுவதிலும் மிக கூடிய தொகை ( ~ 40%) .

இதற்கு அபிவிருத்தி எனும் முழக்கத்துடன், ஓர் இனத்தின் எதிகாலத்தை அடகு வைத்தோரும் அடக்கம்.  

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மாகாண சபைகளையும் ஒரே விதமாக நடத்த வேண்டிய சட்ட வலு இல்லை.

மிக முக்கியமாக நிதி, வழங்கப்பட்டதை கூட மாகாணசபை செலவழிக்காமல் தடுப்பதத்திற்கு சொறி லங்கா திறை சேரிக்கும், ஆளுநருக்கும் கூட அதிகாரம் உண்டு.

இதை தடுப்பதற்கே, விக்கியர் மிகவும் போராடி களைத்து, முதலமைச்சர் நிதியம் என்பதை இரு நோக்கத்தோடு முன்னெடுத்தார்.

ஒன்று ஓரளவிடர்க்கேனும் fiscal devolution ஐ பெறுவது, அல்லது அதை அழுத்தமாக பாவிப்பதுடன், சொறி சிங்களத்தின் நிதி பங்கீட்டில் கூட நல்லிணக்கம் அடைய முடியாது என்பதை, முக்கியமாக மேற்கு நாடுகளுக்கு காட்டுவதற்கு.

கிழக்கிலே சொறி சிங்களத்தின் தேவை அடையப்படுவதால், முக்கியமாக தமிழர்களின் இருப்பு மற்றும் பொருளாதார வளங்கள் படிப்படியாக இழக்கப்படுவதால், வரலாற்று முக்கித்துவமுடைய இடங்கள் சிங்கள மயப்படுவதற்கு கிழக்கு மாகாணசபையம் சட்ட வலு அளிப்பதால், கிஏனெனில் கிழக்கில் முஸ்லீம் வரலாற்று பூர்விகம் இல்லை, கிழக்கு மாகாணசபை கேட்டதை சிங்களம் கொடுக்கிறது.    

தனிப்பட்ட தமிழர்களுக்கு ஆங்காங்கே பயன் கிடைக்கலாம், அதுவும் முஸ்லிம் மாகாணசபை மனம் வைத்தால்.

தனிப்பட்ட தமிழர்களுக்கு ஆங்காங்கே பயன் கிடைக்கலாம், அதுவும் முஸ்லிம் மாகாணசபை மனம் வைத்தால்.  

சிங்களத்தின் இந்த வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் திட்டம் வடக்கில், வெளிப்படடையாக வன்முறை பாவித்தாலன்றி, வடமாகாணசபை ஏறத்தாழ தடுத்து விட்டது.    

பிவிருத்தி, அபிவிருத்தி என்று முழக்கமிட, கருணை உள்ளம் படைத்த முட்டாள்களலுயூக்கு தனது அபிவிருத்தி கூட முஸ்லிம்களால், ஆக்க குறைந்தது சட்ட வலுவை பாவித்து,  பறிக்கப்படலாம் என்பது கூட விளங்கவில்லை.

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குத்தி முறிஞ்சாலும் இன்னும் 5 - 10 வருடங்களுக்குள் திருகோணமலையில் தமிழர்கள் எதுவித ஆதிக்கமும் இல்லாத மிகச்சிறுபான்மையாகிவிடுவார்கள். 

சில சில பொக்கற்றுக்கள் மட்டும் தமிழர்களுக்கு இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.