Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால்

கடந்த 2 ஆம் திகதி, துருக்கியின் தலைநகர் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதி தூதுவராலயத்திற்கு தனது திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறும் பொருட்டு, அமெரிக்காவில் வதிபவரும், வோஷிங்க்டன் போஸ்ட்டில் பத்தி எழுத்தாளரும், சவூதியின் இளவரசர் சல்மானின் கடும்போக்கிற்கெதிராக குரல் கொடுத்துவருபவருமான ஜமால் கஷோகி அவர்கள் சென்றுள்ளார்.

கடந்த சில வருடங்களாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் சல்மான், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்துவரும் கடும்போக்கு நடவடிக்கைகள் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் ஜமால் கஷோகி அவர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வந்த நிலையில், அவரைக் கொல்வதற்கு இளவரசரும் அவரது கொலைக்குழுவும் தயாராகி வந்ததாக தற்போது கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. 

இந்தவகையில், கடந்த 2 ஆம் திகதி ஜமால் அவர்கள் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதித் தூதரகத்திற்கு வரப்போகிறார் என்கிற செய்தி கிடைத்தவுடன், இவரைக் கொன்று, தடயங்களை அழிக்கும் நோக்குடன் ஒரு கொலைக்குழுவை சவூதி இளவரசர் அங்கு அனுப்பி வைத்திருக்கிறார். இக்கொலைக்குழுவில், தடய நிபுணர்கள், வைத்தியர்கள், இளவரசரின் நெருங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்று பலர் அடங்கியிருக்கின்றனர்.  சம்பவம் நடந்த அன்று காலையே துருக்கியில் தங்களது பிரத்தியே விமானத்தில் வந்திறங்கிய இக்குழு, சுமார் 2 மணித்தியாலங்களில் தமது பணியை முடித்துவிட்டு, அவசர அவசரமாக மீண்டும் விமானம் ஏறியுள்ளனர்.

ஜமால் அவர்கள் தூதரகத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார். அவரை சித்திரவதை செய்தவர்கள், அவரது விரல்களை ஒவ்வொன்றாக வெட்டியெடுத்துத்துள்ளனர். அவர் வலி தாங்காமல் அலறத் தொடங்கவே, அங்கு வைத்தியராக இருந்தவர், தனது சகாக்களுக்கு பாடல்களை சத்தமாக ஒலிக்கச் சொல்ல்விட்டு, ஜமால் உடலில் இரசாயணம் ஒன்றைச் செலுத்தியிருக்கிறார். ரசாயனம் செலுத்தப்பட்ட ஜமால் அவர்களின் ஓலம் அடங்கிக்கொண்டிருக்க, அவர் உயிருடன் இருக்கும்பொழுதே அவரது தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர், அவரது அவயங்கள் ஒவ்வொன்றாக அறுத்தெடுக்கப்பட்டு, தடயங்கள் இல்லாதவாறு அப்புறப்படுத்தப்பட்டு, சுமார் இரு மணித்தியாலங்களுக்குள் கொலைக்குழு தனது பணியை முடித்துக்கொண்டு விமானம் ஏறியிருக்கிறது.

இது எதுவுமே தெரியாமல், தூதரகத்திற்கு வெளியே காத்திருந்த அவரது காதலி, ஜமால் அவர்களை நெடுநேரம் காணாததால், துருக்கி பொலிஸாருக்கு முறையிட்டிருக்கிறார். ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த பொலிஸார், மெதுவாக விடயத்தை பத்திரிகைக்காரருக்கு கசிய விட்டிருக்கின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் விடயத்தை ஊதிப் பெருப்பிக்கும்பொழுது, ஒரு வாரம் ஓடிவிட்டது.

ஆரம்பத்தில் கஷோகி அவர்கள்  தூதரகத்திலிருந்து திரும்பிச் சென்றுவிட்டார் என்று சப்பைக் கட்டு கட்டிய சவூதி அரசு, வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணிந்து, தாம் விசாரிப்பதாகக் கூறியது. அதேவேளை, தூதரகத்திற்குள் துருக்கிய பொலிஸாரும், தடயவியல் நிபுணர்களும் செல்லவும் அனுமதித்தது.

துருக்கிய ஊடகங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, ஜமால் கஷோகி அவர்களின் சித்திரவதையும், கொலையும் ஒலி, ஒளி வடிவில் கிடைத்திருக்கின்றன.

ஆரம்பத்தில் சுவூதியை மிரட்டிய ட்ரம்ப், பின்னர் சவூதியின் அதட்டலுக்கு அடிபணிந்து போய்விட்டார்.

இப்போது ஆதாரங்கள் இருப்பது வெளித்தெரிய ஆரம்பித்திருப்பது, கொடுங்கோல் இளவரசரின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கசோஜி கொலையை காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள்: துருக்கியை கேட்கும் அமெரிக்கா

 

அமைச்சரவைக் கூட்டத்தை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்.படத்தின் காப்புரிமை Getty Images

துருக்கியில் உள்ள சௌதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள் என்று துருக்கியைக் கேட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது டிரம்ப் இதைத் தெரிவித்தார்.

அக்டோரபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்குள் சென்றதில் இருந்து கசோஜியைக் காணவில்லை. தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்றும், வந்த வேலை முடிந்து அவர் திரும்பிவிட்டார் என்றும் கூறுகிறது சௌதி அரேபியா.

கசோஜி சம்பவத்தின் பின்னணியில் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ.படத்தின் காப்புரிமை AFP Image caption கசோஜி சம்பவத்தின் பின்னணியில் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ.

இதனிடையே காணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு நாடுகளில் சுதந்திரமான ஊடகத்துக்கான தேவை குறித்து அந்தப் பத்தியில் கசோஜி வலியுறுத்தியுள்ளார்.

கசோஜி பாதுகாப்பாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில், இந்த பத்தியை வெளியிடாமல் தாமதம் செய்ததாக அந்த நாளிதழின் உலக கருத்துப் பிரிவு ஆசிரியர் கரேன் ஆட்டியா தெரிவித்துள்ளார்.

"தற்போது அது நடக்கப்போவதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். நான் கடைசியாக எடிட் செய்யும் அவரது கட்டுரை இது" என்று கூறிய அவர், "அரபு உலகத்தில் சுதந்திரம் நிலவவேண்டும் என்பதற்கு அவர் காட்டிய அக்கறையையம், ஆர்வத்தையும் இந்த பத்திக் கட்டுரை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இந்த சுதந்திரத்துக்காகவே அவர் தமது உயிரைக் கொடுத்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார்.

இரும்புத் திரை

கசோஜிபடத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜமால் கசோஜி.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அந்த கடைசி பத்தியில் "அரபு உலகம் தம்முடைய சொந்த இரும்புத்திரை சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த இரும்புத்திரை வெளிநாட்டு சக்திகளால் உண்டானதல்ல.

அதிகார தாகத்தில் உள்நாட்டு சக்திகளே உருவாக்கியது. அரபு உலகத்துக்கு நவீனமான பன்னாட்டு ஊடகம் வேண்டும். இதன் மூலமே உலக நடப்புகளை குடிமக்கள் தெரிந்துகொள்ள முடியும். மிக முக்கியமாக, அரபு குரல்கள் ஒலிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்கவேண்டும்" என்று கசோஜி எழுதியுள்ளார்.

Jamal Khashoggiபடத்தின் காப்புரிமை Getty Images Image caption துணைத் தூதரக கட்டடத்தினுள் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தமது சக சௌதி எழுத்தாளர் சலே அல்-சலே தற்போதைய சௌதி அரசாங்கத்தின் கருத்துக்கு மாறான கருத்தை எழுதியதற்காக தேவையில்லாமல் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட கசோஜி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் காக்கும் மௌனம் விரைவில் கண்டனமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-45898493

  • கருத்துக்கள உறவுகள்

உவரை ஒழித்து வைத்து விட்டு அமெரிக்காவும் பொய் சொல்லலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்....
முதலாவது அல்லா
இரண்டாவது வாள்

அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜமாலின் கொடூரக் கொலை பற்றிய விபரங்கள் மெல்ல அவிழ்ந்து வரும் நிலைதில், கொலைக்கான சாட்சிகளை அழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் சவுதி இளவரசர்.

இரு வாரங்களுக்கு முன்னர், ஜமாலைக் கொன்று தடயஙகளை அழிக்கவென துருக்கிக்கு அனுப்பப்பட்ட 15 பேர் அடங்கிய கொலைக்குழுவின் உறுப்பினரான சவுதி விமானப்படை லெப்ரினட்டும், இளவரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும் என்று நம்பப்பட்ட நபர், இன்று சவுதியில் இடம்பெற்ற விசித்திர வாகன விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். இவர்மூலமே ஜமாலின் இறுதிக் கணங்கள் பற்றிய விபரஙகள் வெளிவந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் இவரும் அகற்றப்பட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி

ஜமால் கஷோஜிReuters

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. 

ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

 

சௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி மன்னர் சல்மான் அமைத்துள்ளார்.

செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக மன்னர் சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இளவரசர் முகமத் பின் சல்மான்Getty Images இளவரசர் முகமத் பின் சல்மான்

முன்னனதாக, ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடியது. 

அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியிருந்தது.

இலங்கை

சௌதி அரசு தொலைக்காட்சி கூறுவது என்ன?

ஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்தது. 

துருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சௌதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை

பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் யார்யார்?

செளத் அல் கதானி, செளதி ராஜ நீதிமன்றத்தின் முக்கிய நபராகவும், இளவரசர் முகமத் பின் சல்மானுக்கு ஆலோசகராகவும் இருந்தார்.

செளத் அல் கதானி டிவிட்டரில் 10 லட்சத்துக்கு அதிகமானோர் பின் தொடருகின்றனர்TWIITER/@SUADQ1978 செளத் அல் கதானி டிவிட்டரில் 10 லட்சத்துக்கு அதிகமானோர் பின் தொடருகின்றனர்

மேஜர் ஜெனரல் அகமத் அல் அசிரி, ஏமன் போரில் செளதி அரசக் குடும்பத்தின் முக்கிய செய்தி தொடர்பாளராக இருந்தார். 

பிபிசியிடம் 2017ஆம் ஆண்டு ஏமன் போர் பற்றி பேசிய அவர், செளதி அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேசியிருந்தார்.

இலங்கை

செளதியின் மேற்கத்திய கூட்டாளி நாடுகள் என்ன சொல்கின்றன?

டிரம்ப்Getty Images

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த கைதுகள் "முக்கியமான முதற்படி" என்றும் இதில் துரிதமாக செயல்பட்ட செளதி அரசரை பாராட்டுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செளதியின் கூற்று குறித்து அமெரிக்க அதிகாரிகள் பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் "நம்பகத்தன்மை" வாய்ந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், இது ஒரு "மோசமான சம்பவம்" என்றும் இதற்கு காரணமானவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த கொலை குறித்து அனைத்து தகவல்களையும், வெளியிடப்போவதாக துருக்கியின் ஆளுங்கட்சி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக செய்தி முகமை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாதம் செளதி தலைநகர் ரியாதில் முதலீடுகள் குறித்து நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ரூட்டே இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிவரும்படி விரிவான விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஜமாலை திருமணம் செய்யவிருந்த பெண் அவரின் உடலுக்கு என்ன ஆனது என டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இதயம் துயரில், கண்கள் கண்ணீரில், நீங்கள் எங்களைவிட்டு பிரிந்ததில் நாங்கள் துயருற்று இருக்கிறோம் ஜமால் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

முரண்படும் தகவல்கள் 

கசோஜி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டது என்று இந்த வழக்கை விசாரித்து வரும் துருக்கி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். 

ஆனால் கசோஜி மாயமான 17 நாட்களுக்கு பிறகு, அவர் அதிகாரிகளுடனான சண்டையைத் தொடர்ந்து இறந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள சௌதி அரசு தெரிவித்துள்ள கூற்று வேறு மாதிரியாக உள்ளது. அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை அல்ல என்பதை நிறுவ சௌதி முயல்கிறது. 

சௌதி அரசுடன் மிகவும் நட்புடன் இருக்கும் மேற்கு நாடுகள் இந்த விவகாரத்தில் சௌதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் லேன்ஸ்டேல். 

இலங்கை

யார் இந்த ஜமால் கஷோஜி?

Jamal KhashoggiGetty Images / AFP

செளதி இளவரசர் மொஹமத் பின் சல்மானை விமர்சிப்பவர்களில் செய்தியாளர் ஜமால் முக்கியமானவர். இவருக்கு 58 வயது. அல்-வடான் நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்த இவர், சில சௌதி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார்.

சௌதி அரச குடும்பத்துடன் பல ஆண்டுகள் ஜமால் நெருக்கமாக இருந்தார். சௌதியின் மூத்த அதிகாரிகளுக்கு ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.

ஜமால் கஷோஜிWashington post

ஜமாலின் நண்பர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அல்-ஹயாத் நாளிதழுக்கு சிறப்பு கட்டுரை எழுதுவது நிறுத்தப்பட்டது. பின்னர், அமெரிக்காவுக்கு சென்ற ஜமால், வாஷிங்டன் போஸ்டில் எழுதி வந்தார். மேலும் பல அரபு மற்றும் மேற்கத்திய தொலைக்காட்சிகளில் பேசியும் வந்தார்.

ஜமாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர் எழுதி வரும் பத்திக்கான இடத்தை காலியாகவிட்டு, அக்டோபர் 5ஆம் தேதிக்கான பாதிப்பை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டது.

இலங்கை

துணைத் தூதரகம் சென்றது எதற்கு?

ஜமால் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சான்றிதழ் வாங்க சௌதி தூதரகத்திற்கு சென்றார். ஹெடிஸ் செஞ்சிஸ் என்ற துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்திருந்தார்.

ஹெடிஸ் செஞ்சிஸ்AFP/GETTY IMAGES ஹெடிஸ் செஞ்சிஸ்

தூதரகத்திற்கு வெளியே ஹெடிஸ் 11 மணி நேரங்கள் காத்திருந்தும் ஜமால் வரவில்லை. தூதரகத்தினுள் செல்லும் முன், செல்பேசியை வெளியே கொடுப்பது அவசியம் என்பதால், ஜமால் செல்பேசி இல்லாமல்தான் உள்ளே சென்றார் என ஹெடிஸ் கூறியிருந்தார். 

தூதரகத்திற்கு வெளியே காதலியிடம் செல்பேசியை கொடுத்துவிட்டு சென்ற அவர், தான் திரும்பி வராவிட்டால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

 

https://www.bbc.com/tamil/global-45924522

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தரம் தலாக் சொன்னா, போதும் எணடெல்லோ நினைச்சேன்.  

பிறகேன் ஆவணம் வாங்க போனவராம். Living together காணாதா?

என்ன இருந்தாலும், போர் எதிரி பால்ராஜ்க்கு பாஸ்போட்கொடுத்து, சிங்கப்பூர் போய் வர உதவி செய்த சிங்களவர்.... திறம்.

நம்ம ஊரு..... இலங்கை!!!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

IMG_1174-1.jpg?resize=1120,800&quality=7

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிக்கையாளர் ஜமால் கொலை.... விறுவிறுப்பான மர்மக் கதை மாதிரி போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2018 at 4:51 AM, ragunathan said:

ஜமாலின் கொடூரக் கொலை பற்றிய விபரங்கள் மெல்ல அவிழ்ந்து வரும் நிலைதில், கொலைக்கான சாட்சிகளை அழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் சவுதி இளவரசர்.

இரு வாரங்களுக்கு முன்னர், ஜமாலைக் கொன்று தடயஙகளை அழிக்கவென துருக்கிக்கு அனுப்பப்பட்ட 15 பேர் அடங்கிய கொலைக்குழுவின் உறுப்பினரான சவுதி விமானப்படை லெப்ரினட்டும், இளவரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும் என்று நம்பப்பட்ட நபர், இன்று சவுதியில் இடம்பெற்ற விசித்திர வாகன விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். இவர்மூலமே ஜமாலின் இறுதிக் கணங்கள் பற்றிய விபரஙகள் வெளிவந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் இவரும் அகற்றப்பட்டிருக்கிறார்.

கதை விடுகினம்....

  • கருத்துக்கள உறவுகள்

செளதி பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டது எவ்வாறு? - மர்மம் விலகுமா?

செளதி பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டது எவ்வாறு? - மர்மம் விலகுமாGetty Images

பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலையில் செளதியின் பங்கு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மூத்த அமெரிக்க அதிகாரி செளதி அரேபியாவின் முடியரசருடன் ரியாதில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீஃபன் முஷின், முகமத் பின் சல்மானை திங்களன்று சந்தித்தார்.

அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்துக்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜமால்Getty Images

முதலில் கசோஜி தூதரகத்துக்கு வந்த நாளிலே திரும்பி சென்றுவிட்டார் என செளதி கூறி வந்தது பின் கடந்த வெள்ளியன்று முதன்முறையாக கசோஜி இறந்துவிட்டார் என்றும் சண்டை ஒன்றில் அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் குறித்த அனைத்து உண்மையும் வெளியிடப்போவதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

முஷினும் சல்மானும், செளதி - அமெரிக்க மூலோபாய கூட்டுத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து உறுதிப்படுத்தியதாக செளதி அரேபிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரியாதில் நடந்த இந்த சந்திப்பு குறித்து அமெரிக்கா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை..

செளதி அரேபியாவில் இன்று தொடங்கும் முதலீடுகள் தொடர்பான மாநாட்டில் முஷின் உட்பட, மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பிற முக்கிய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் கலந்துக் கொள்ளபோவதில்லை என தெரிவித்திருந்தனர்.

ஜமால் விவகாரம் தொடர்பான பதில் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவில்லை என டிர்மப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

டிரம்ப்Getty Images

"நான் கேட்டது எனக்கு திருப்தியாக இல்லை" என வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் டிரம்ப்.

இருப்பினும், "அணு ஆயுதங்கள் தொடர்பாக செளதி அரேபியாவுடன் ஏற்பட்டுள்ள பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி, நமது நாட்டிற்கு வரும் முதலீடுகளை இழக்கவிரும்பவில்லை" என தெரிவித்திருந்தார்.

"இதுகுறித்த உண்மையை கண்டறிவோம்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

செளதியின் அதிகாரமிக்க நபராக கருதப்படும் முடியரசர் சல்மானுடன் தான் இதுகுறித்து ஆலோசித்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இதுவரை இந்த கொலை தொடர்பாக 18 பேரை கைது செய்ததாகவும், முகமது பின் சல்மானின் உதவியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்ததாகவும், சல்மானின் தலையமையில் உளவுத்துறை முகமையை மறுசீரமைக்க குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செளதி தெரிவித்துள்ளது.

செளதி அரசின் கூற்று எவ்வாறு மாறியுள்ளது?

ஜமால்GETTY IMAGES / AFP

செளதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடேல் அல் ஜுபேர், ஜமாலின் கொலை ஒரு "மோசமான நடவடிக்கை" என தெரிவித்துள்ளார்.

"அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த கொலைக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனையளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.

"ஜமாலின் உடல் எங்குள்ளது என்று செளதிக்கு தெரியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டாரா ஜமால்?

"இந்த கொலை குறித்து சல்மான் ஆணையிடவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

துருக்கி அரசுக்கு நெருக்கமான ஊடகமான யேனி சபாஃக், கொலைக்கு பிறகு சல்மானுக்கு நான்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்ததற்கான தகவல்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்திருந்தது.

செளதி அரேபியாவுக்கு திரும்ப போகவிடாமல் கழுத்து நெறிக்கப்பட்டு ஜமால் கொல்லப்பட்டார் என செளதி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதன்பின் அவரின் உடல் ஒரு கம்பளியில் சுற்றப்பட்டு, கொலையில் தொடர்புடைய உள்ளூர் நபரிடம் கொடுக்கப்பட்டது.

செளதியை சேர்ந்த அந்த நபர் ஜமாலின் உடைகளை உடுத்திக் கொண்டு தூதரகத்தை விட்டு வெளியேறினார்.

சொAFP

பாதுகாப்பு கேமராவில் செளதி முகவர் ஜமாலின் உடையணிந்து செல்வது பதிவாகியுள்ளது என மூத்த துருக்கி அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

போலியான தாடியுடன் அவர் தூதரகத்தின் பின் கதவு வழியாக செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

செளதி தூதரக ஊழியர் ஒருவர் இஸ்தான்புல்லில் ஆவணங்களை எரிப்பது போன்ற காட்சிகளையும் துருக்கி ஊடகம் வெளியிட்டுள்ளது.

 

 

https://www.bbc.com/tamil/global-45948852

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது! – ஜனாதிபதி ட்ரம்ப்

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்தில் சவுதி அரேபியா அரசாங்கம், மிகவும் அப்பட்டமான உண்மைகளை மூடிமறைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிகவும் மோசமானது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜமால் கஷோக்கியின் கொலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரும் பாரிய பிரச்சினைக்குள் சிக்கியுள்ளனர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கையைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஜமால் கஷோக்கி கொலை விவகாரத்தில் அடையாளங்காணப்பட்ட  21 சந்தேகநபர்களின் விசாப்பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தங்களால் கொலை செய்யப்பட்ட ஜமால் கஷோக்கி, உயிரோடு இருப்பதாக பல நாட்களாக சவுதி அரசாங்கம் உறுதியாக தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/trump-calls-khashoggi-murder-worst-cover-up-in-history/

  • கருத்துக்கள உறவுகள்

ஜமால் கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் :

October 24, 2018

Jamal.jpg?resize=660%2C371

சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் டோகு பெரின்செக் கூறியதாக துருக்கி ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
கசோக்கியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபிய தூதரகத்துக்குள் வைத்து அவர் கொல்லப்பட்டு விட்டார் என குற்றச்சாட்டப்பட்ட நிலையில் முதலில் இதனை மறுத்த சவூதி , பின்னர் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட வேண்டும் என்ற ஆணையை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஸ்கைப் மூலம் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை துருக்கி பாராளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றிய ஜனாதிபதி எர்டோகன் கசோக்கி படுகொலை திட்டமிட்ட சதி என குற்றம்சுமத்தியுள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/100454/

  • கருத்துக்கள உறவுகள்

“சௌதி துணை தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்

 
கஷோக்ஜிபடத்தின் காப்புரிமை PA

கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

 

கஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கூலிப்படையால் கொலை செய்பவர்களால் கொல்லப்பட்டதாக சௌதி கூறுகிறது.

MOHAMMED AL-SHAIKH

ஆனால், சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்று சௌதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா ஒப்புக்கொண்டுள்ளார்.

சௌதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவரை மேற்கோள் காட்டி சௌதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜமால் கஷோக்ஜி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் கூறியது சௌதி

பிறகு, அங்கே நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று அந்நாடு கூறியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி சௌதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்துவந்தவர்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த சம்பவத்தால் சௌதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜமால் கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ்படத்தின் காப்புரிமை EPA Image caption ஜமால் கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையை விசாரிப்பதில் அதிபர் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, வெள்ளை மாளிகைக்கு வர அமெரிக்க அதிபர் தனக்கு விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார் ஜமால் கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ்.

டிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல கருத்தை தோற்றுவிப்பதற்கு என எண்ணுவதாக ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-46048120

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாத ஒரு விசயம் என்னவெனில் இந்த சவூதி புத்திசாலிகள் இவரை கொலை செய்யவேண்டும் என முடிவு செய்திருந்தால், எதுக்கு இப்படி 15 பேர், இரண்டு விமானங்கள் என்று ஒரு புண்ணாக்கு பிளான் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்?

அந்தாள் சிம்பிளா, பாதுகாப்பு இல்லாமல், ஒரு பெண்ணுடன், நடந்து தானே வருகிறார்.   

லோக்கல் பார்ட்டி ஒன்றுடன் கான்ட்ராக்ட் போட்டு காசை எறிந்து இருந்தால், ரோட்டிலேயே வெடி அல்லது வெட்டு போட்டு விட்டு போயிருப்பார்கள். இந்த மாதிரி தலை வலியும் வந்திருக்காது.

உடல் இன்னும் கிடைக்காததால், ஒருவேளை ஆள் உயிருடன் சவுதிக்கு கடத்தப் பட்டிருப்பாரோ? அதுதான் நோக்கமா இருந்து ஏமாத்துகிறார்களோ?

முன்னது உண்மையாயின் சவூதி மானம் கப்பல் ஏறுவது தவிர்க்க முடியாது. பின்னது (கடத்தல்) உண்மையாயின், சவூதி, பெருமை கொள்ளலாம். ஆயினும், ஆள் உயிருடன் இருந்தால், அமெரிக்கா ஆளை தருமாறு கோரும்.

ம்..ம்ம்ம் .... அல்லாட காவல்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவூதிக்காரர் தங்கள் நாட்டுக்குள் குற்றம் செய்பவர்களின் விரல்களை,கைகளை,தலையை வெட்டி தண்டனை கொடுப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் இன்னொரு நாட்டுக்குள் புகுந்து கொலை செய்தால் என்ன தண்டனை கொடுக்கலாம் அமைச்சரே? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

எனக்கு புரியாத ஒரு விசயம் என்னவெனில் இந்த சவூதி புத்திசாலிகள் இவரை கொலை செய்யவேண்டும் என முடிவு செய்திருந்தால், எதுக்கு இப்படி 15 பேர், இரண்டு விமானங்கள் என்று ஒரு புண்ணாக்கு பிளான் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்?

அந்தாள் சிம்பிளா, பாதுகாப்பு இல்லாமல், ஒரு பெண்ணுடன், நடந்து தானே வருகிறார்.   

லோக்கல் பார்ட்டி ஒன்றுடன் கான்ட்ராக்ட் போட்டு காசை எறிந்து இருந்தால், ரோட்டிலேயே வெடி அல்லது வெட்டு போட்டு விட்டு போயிருப்பார்கள். இந்த மாதிரி தலை வலியும் வந்திருக்காது.

உடல் இன்னும் கிடைக்காததால், ஒருவேளை ஆள் உயிருடன் சவுதிக்கு கடத்தப் பட்டிருப்பாரோ? அதுதான் நோக்கமா இருந்து ஏமாத்துகிறார்களோ?

முன்னது உண்மையாயின் சவூதி மானம் கப்பல் ஏறுவது தவிர்க்க முடியாது. பின்னது (கடத்தல்) உண்மையாயின், சவூதி, பெருமை கொள்ளலாம். ஆயினும், ஆள் உயிருடன் இருந்தால், அமெரிக்கா ஆளை தருமாறு கோரும்.

ம்..ம்ம்ம் .... அல்லாட காவல்.

இது புளிச்சுப்போன பழைய வடிவம் 

குர்திஸ் மக்களுக்கு கெமிக்கல் அடிக்க சொல்லி 
சதாமுக்கு கெமிக்கல் கொடுத்தது யார்?

சதாமுக்கு குர்திஸ் மக்கள் மீது கெமிக்கல் அடித்ததுக்கு 
தூக்கு தண்டனை கொடுத்தது யார்?

இந்த அம்பு சுற்றிக்கொண்டு வர இருக்கும் இடம் இந்தியா 
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு தான் வர போகிறார்கள்.
இப்போ சவூதி தனியாக எவ்வளவு என்னை எடுப்பது என்று தீர்மானிக்க முடியாது 
அதை முடிவு செய்வது ஒபேக் .... ஓப்பெக்கின் விதிமுறைகளில் இருந்து 
சவுதியை பிரித்து எடுக்கவே ...
இந்த பத்த்ரிக்கையாளர்தான் உலகில் ஒரே ஒரு பத்த்ரிக்கையாளர் எனும் பாணியில் 
அமெரிக்க செய்திகள் வருகின்றன .. அதை உலக செய்திகள் கொப்பி பண்ணுகின்றன.

இதில் இருக்கும் தீமை ரஷ்யா தன்பாட்டில் எண்ணெய்  எடுக்க தொடங்கினால் 
அவர்கள் ரஸ்யாவில் இருந்து சீனாவுக்கும் வட கொரியாவுக்கு பைப் லைன் அடித்தே 
எண்ணெய் கொடுக்க தொடக்கி விடுவார்கள்.
சீனாவை கொண்டுவந்து மாட்டுவது எவ்வாறு என்பதில்தான் 
இப்போ தாமதம். 

சென்ற வெள்ளி கிழமை சவூதி ஒபேக்குடன் முறுக தொடங்கி விட்டது 
அதிர்ஷ்டா வசமாக பிரேசிலும் வலது சாரி இராணுவ வீரர் (முன்னாள்) 
அதிபராக தேர்தலில் சென்ற கிழமை வென்று இருக்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.