Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா?

26.jpg

டி.எஸ்.எஸ்.மணி

2018, அக்டோபர் 19ஆம் தேதி வழக்கம் போல வடநாட்டில் தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில், தசரா பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழன் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணித்து, ராவணன் கொடும்பாவியை எரிப்பது என்ற ஆண்டாண்டு காலமாய் செய்துவரும் பழக்கத்தைப் பின்பற்றினார்கள். வழக்கம் போல, இந்தியாவை ஆளும் கட்சிகளின் தலைவர்கள் முன்னே நின்று அந்தக் கொண்டாட்டத்தைச் செய்தார்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் ராவணன் வதத்தில் கலந்து கொண்டனர்.

ராவணன் கொடும்பாவி எரிப்பு

ராவணனின் கொடும்பாவி மீது பிரதமர் நரேந்திர மோடி வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு ஓர் அம்பை எய்வது போன்ற படங்களும் பெருமையாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொண்ட ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதும், வாஜ்பாயுடன் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்ட ராவணன் எரிப்பு நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. ஆகவே, இதுதான் டெல்லியில் பண்பாட்டுப் பழக்கமாக இருந்து வருகிறது.

இந்த முறை பஞ்சாபில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வில் ரயில்வே தண்டவாளம் அருகே அதை நடத்தி, விரைவுத் தொடர்வண்டி வருகிற நேரத்தில் தண்டவாளத்திலிருந்த அப்பாவி மக்கள் அறுபது பேரைக் கொல்லக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரான விளையாட்டு வீரர் சித்துவின் (தமிழ் மீது தனக்கு பாசம் இல்லை என்று சமீபத்தில் பகிர்ந்தவர்) மனைவி கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு தமிழர்கள் பற்றியும், ராவணன் பற்றியும் தவறாகச் சித்திரித்து நாடெங்கும் பரப்பப்படும் கதைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

26a.jpg

மாவீரன் ராவணன்

அதேநேரம், வடஇந்தியாவில் பல இடங்களில், ஆதிவாசி மக்கள் ராவணனைத் தங்களது மாவீரனாகவும் கடவுளாகவும் வழிபடுகிறார்கள். உத்தராகண்ட் மாநிலத்தில் பைஜிநாத் கங்கிரா போன்ற இடங்களில் அவர்கள் ராவணனைக் கடவுளாக நினைக்கவிட்டாலும், சிவனுடைய தீவிர பக்தன் என்று போற்றுகிறார்கள். ராவணனின் கொடும்பாவியை எரித்தால் சிவன் கடவுள் கோபம் கொள்வார் என்கிறார்கள். தசராவைக் கொண்டாடி ராவணனின் கொடும்பாவியை எரிப்பவர்கள், செயற்கை மரணத்தில் சாவார்கள் என்கிறார்கள். அப்படி உயிரிழந்த குடும்பங்களின் கதைகளையும் கூறி வருகின்றனர்.

மண்டோதரி பிறந்த இடம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மால்வா பிராந்தியத்தில் மாண்ட்ஸாவுர் பகுதியில் ராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர், தங்கள் ஊர் என மக்கள் கருதுகின்றனர். அதனால் ராவணனைத் தங்கள் ஊரின் மருமகன் என்று எண்ணுகின்றனர். அதுமட்டுமின்றி, ராவணன் ஒரு சிறந்த படித்த அறிவாளி எனப் போற்றுகின்றனர். தங்கள் ஊர் மருமகன் ராவணனுக்கு முப்பத்தைந்து அடி உயரச் சிலை ஒன்றை வைத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் டெல்லியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் பிஸ்ராக் என்ற சிறிய கிராமத்தில் ராவணன் தங்கள் ஊர்க்காரர் என்று பெருமையுடன் கூறுகிறார்கள். தங்கள் கிராமத்தின் வைஷ்ரவாவுக்கும், பெண் தெய்வம் கைகேசிக்கும் பிசராகில் பிறந்தவர்தான் ராவணன் என்கிறார்கள். ராவணனை மகா பிராமணன் என்று அழைக்கிறார்கள். தசரா நேரத்தில் ராவணனுக்காக அவர்கள் நினைவேந்தல் செய்து அவரது ஆன்மா அமைதி நாட வேண்டுகின்றனர். ராவணனின் தந்தை வைஷ்ரவா தங்கள் ஊரில் சுயம்புவான சிவலிங்கத்தை உருவாக்கியவர் என்கிறார்கள்.

26b.jpg

பழங்குடி அரசர் ராவணன்

அதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் கோண்டு பழங்குடிகள் முந்நூறு பேர் மட்டுமே வாழும் சிறிய கிராமமான பர்ஸவாடியில் ராவணனைத் தங்களது கடவுளாக வழிபடுகின்றனர். தங்களை ராவண வம்சத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதை மறுக்கின்றனர். இந்தக் கிராமத்து பழங்குடி கோண்டு மக்கள், ராவணன் ஒரு கோண்டு பழங்குடி அரசர் என்றும், அவர் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றனர். வால்மீகி ராமாயணம் ராவணனை ஒரு வில்லனாக விவரிக்கவில்லை என்றும், துளசிதாஸ் ராமாயணம்தான் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ராவணன் திருமணம் செய்த இடம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள மண்டோரி, மண்டோதரி, ராவணனை மணம் முடித்த இடம் என்று கூறப்படுகிறது. மண்டோரி என்ற அந்த ஊரில் உள்ள, ராவண கி சன்வாரியில் அந்தத் திருமணம் நடந்தது என்கிறார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மௌத்கில்ஸ் என்ற பிராமணர்கள், ராவணனை தங்களது மருமகன் என்கிறார்கள். அதனால் இந்தியாவின் மற்ற பகுதிகளை போல இங்கே, ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த ராவண கி சன்வாரியில், ராவணனுக்கு ஸ்ராத்தம், பித்ரு தானம் ஆகிய இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நினைவேந்தல்கள் இந்து முறைப்படி செய்யப்படுகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், கான்பூரில், ஷிவாலாவில் உள்ள சிவன் கோயிலில், ராவணனுக்கும் ஒரு கோயில் உள்ளது. தசரா அன்று தஷணன் கோயில் வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் ராவணனை மனதுக்கும் இதயத்துக்கும் சுத்தம் வேண்டி வழிபடுவார்கள். அந்தப் பக்தர்கள் ராவணன் ஒரு ராட்சசன் அல்ல. மாறாக, இணையற்ற அறிவு, கெட்டிக்காரத்தனம், புத்திக்கூர்மை, அன்பு ஆகியவற்றுக்கான கடவுள் என்று நம்புகின்றனர்.

26c.jpg

ராவணன் கோயில்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காக்கிநாடாவில் ராவணன் கோயில், சிவனுக்கு அடிப்படையில் அர்ப்பணிக்கப்பட்ட ராவணனைச் சிவனின் பக்தனாக ஏற்றுக்கொண்ட கோயில். பெரிய உருவம் கொண்ட சிவலிங்கம் சிலை அந்தக் கோயிலில் இருக்கிறது. ராவணனாலேயே அந்தச் சிவலிங்கம் சிலைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அதனால் இந்த அழகான ஆந்திர நகரில் பலர், ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நகரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராவண கிராம் என்ற இந்த இடத்தில், ராவணனை வழிபடக் கூடிய ஒரு கூட்டத்தையே காணலாம். தசரா அன்று இங்குள்ள மக்கள் ராவணனின் ஆன்மாவுக்காக அமைதி வேண்டுவார்கள். ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள். கன்யாகும்ப பிராமணர்கள் என்போர் தங்கள் வகுப்பைச் சேர்ந்தவர் ராவணன் என்று கூறி, ராவணனுக்கு ஒரு பத்து அடி நீளக் கல் உருவாக்கியுள்ளார்கள். அது பல நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது என்கிறார்கள். ராவணனது உயிரை ஓர் அம்பு துளைத்துக் கொன்று விட்டது என்பதே ஸ்டேட்ஸ்மன் ஆங்கில ஏட்டில், எட்டு இடங்களில் ’ராவணன் கொடும்பாவி எரிக்கப்படாது’ என்ற கட்டுரையின் கட்டுரையாளர் தனது முடிவான வாக்கியமாகக் கூறுகிறார்.

இனியாவது மாறுவோமா?

நாம் இனியாவது தமிழ் அரசர் ஒருவரின் வரலாற்றை மறு வாசிப்பு செய்ய இந்தியத் துணைக் கண்டத்தை நாடப் போகிறோமா, இல்லையா என்பதே கேள்வி. எல்லா விதிகளும் நியதிகளும் வரலாறுகளும் மாற்றப்பட்டு, மறு வாசிப்புக்கு உள்ளாகும் இன்றைய காலத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் விடுத்த கதைகளில்தான் இனியும் செல்வாக்கு செலுத்த வேண்டுமா? உண்மை வரலாறுகள் அடிப்படை மக்களால், ஆதிவாசிகளால் பின்பற்றப்படுகின்றனவே என்பதை நாகரிக உலகம் திரும்பிப் பார்க்குமா?

https://minnambalam.com/k/2018/10/21/26

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க தலை வெடிக்குது இராவணன் இப்ப தமிழன் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியொருவில் முன்னர் வந்த கட்டுரையைப் படித்திருந்தேன். தமிழர்கள் இராவணனின் வம்சம் என்று பெருமைகொள்வதால் ஒட்டவில்லை!

உங்களுக்கு தலைவெடிக்காமல் இருக்க இதையும் படியுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் ஒரு ராட்சன், கரிய நிறத்தவன், இலங்கையை ஆண்டவன் என்று ஆரிய பிராமணர்களில் நெடுங்கதை இராமாயணம் சொல்கிறது. தமிழர்களை அரக்கர்களாகப் பார்க்கும் அவர்களது மனவோட்டமே இராவணனை கரிய நிறத்து அரக்கனாகவும், தமிழனாகவும் காட்டியதாக நான் நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை, இராவணன் ஒரு தமிழன், ஆரிய ராமனுக்கு எதிராகப் போரிட்டு மாண்டவன். சீதையை கடத்தி வந்து காவலில் வைத்தவனேயன்றி, கட்டாயப்படுத்தவில்லை.

கதையானாலும் கூட, நான் இராவணனின் வம்சம்தான்.

பிற்குறிப்பு : சில தினங்களுக்கு முதல், பஞ்சாப்பில், கடுகதி ரயில் தண்டவாளத்தில் இராவண வதையை ரசித்துக்கொண்டிருந்தவர்களில் ரயில் மோதி குறைந்தது 60 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடுமையாக உருக்குலைந்துபோயுள்ள உடல்களில், எவரை எவரிலிருந்து பிரித்தெடுத்து அடையாளம் காண்பதில் மருத்துவர்கள் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கதையில் வரும் ஒரு பாத்திரத்தை, உண்மையான கடவுள் என்று நம்பி, பலநூறு வருட கால மசூதிகளை உடைத்து ராமர் கோயில் கட்டும் அரசு உள்ள நாட்டில் இது நடப்பதொன்றும் அசாதாரணம் இல்லையே !

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎21‎/‎2018 at 3:34 AM, கிருபன் said:

இனியொருவில் முன்னர் வந்த கட்டுரையைப் படித்திருந்தேன். தமிழர்கள் இராவணனின் வம்சம் என்று பெருமைகொள்வதால் ஒட்டவில்லை!

உங்களுக்கு தலைவெடிக்காமல் இருக்க இதையும் படியுங்கள்?

உதை வாசிக்க எனக்கு இன்னும் தலை சுத்துது...புங்கை,அல்லது சுவியண்ணா வர வேண்டும் விளக்கம் சொல்ல ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/22/2018 at 10:19 AM, ragunathan said:

இராவணன் ஒரு ராட்சன், கரிய நிறத்தவன், இலங்கையை ஆண்டவன் என்று ஆரிய பிராமணர்களில் நெடுங்கதை இராமாயணம் சொல்கிறது. தமிழர்களை அரக்கர்களாகப் பார்க்கும் அவர்களது மனவோட்டமே இராவணனை கரிய நிறத்து அரக்கனாகவும், தமிழனாகவும் காட்டியதாக நான் நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை, இராவணன் ஒரு தமிழன், ஆரிய ராமனுக்கு எதிராகப் போரிட்டு மாண்டவன். சீதையை கடத்தி வந்து காவலில் வைத்தவனேயன்றி, கட்டாயப்படுத்தவில்லை.

கதையானாலும் கூட, நான் இராவணனின் வம்சம்தான்.

பிற்குறிப்பு : சில தினங்களுக்கு முதல், பஞ்சாப்பில், கடுகதி ரயில் தண்டவாளத்தில் இராவண வதையை ரசித்துக்கொண்டிருந்தவர்களில் ரயில் மோதி குறைந்தது 60 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடுமையாக உருக்குலைந்துபோயுள்ள உடல்களில், எவரை எவரிலிருந்து பிரித்தெடுத்து அடையாளம் காண்பதில் மருத்துவர்கள் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கதையில் வரும் ஒரு பாத்திரத்தை, உண்மையான கடவுள் என்று நம்பி, பலநூறு வருட கால மசூதிகளை உடைத்து ராமர் கோயில் கட்டும் அரசு உள்ள நாட்டில் இது நடப்பதொன்றும் அசாதாரணம் இல்லையே !

உங்களைப் போலவே....எனக்கும்...ரகு!

இராமாயணத்தின் கதாநாயகனே...இராவணன் தான்!

கம்பன் கூட ஒத்துக்கொண்ட உண்மை...இது!

வாரணம் பொருத மார்பும்....,

வரையினை எடுத்த தோழும்...,

நாரத முனிவகேற்ப ...நயம்பட உரைத்த நாவும்...,

தாரணி...தாரணி...பத்தும்..சங்கரன் கொடுத்த வாளும்..

வீரமும் களத்தே போட்டு...,

வெறுங்கையோடிலங்கை புக்கான்!   

அது மட்டுமே...சம்பந்தன் என்ற பிராமணக் குழந்தையே...திருநீறுக்கு உவமானம் தேடிக் களைத்துப் போய்....,

இராவணன் மேலது நீறு....! 

என்று ராவணனை மேம்படுத்துகிறான்!

எனக்கும்....உங்களுக்கும்....இன்னும் பலருக்கும்....அவனே...காதாநாயகன்!

சாம வேதத்தின் நாயகன்...அவன்!

சனீஸ்வரனையே ...முடமாக்கியவன்!

அவனிடம் தோல்வியுற்ற வாலியையே....மறைந்திருந்து தாக்கி...வெற்றி கொண்ட ஸ்ரீ ராமனால்....இராவணனை அசைத்துப் பார்த்திருக்கக் கூட முடிந்திருக்காது!

தமிழனின் பரம்பரைக் காட்டிக் கொடுப்பினால்....தான் அவனும் அழிந்தான்! (விபீஷணன்)

  • கருத்துக்கள உறவுகள்

முடிவாய் என்ன சொல்றிங்கள் இராவணன் தமிழனா இல்லையா ?
 
இராமாயணமே ஒரு அம்புலிமாமா கதை. அம்புலிமாமா கறபனைக்கதை நூலில்  வரும் குப்பனும் சுப்பனும் எந்த இனமானாலும் எங்களுக்கென்ன  அதைப்போல. தான் இராமன். இராவணன் என்ற கற்பனைக்கதை சுவாரசியமாய் இருந்தால் வாசித்து விட்டு போக வேண்டியதுதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இராமாயணமே ஒரு அம்புலிமாமா கதை. அம்புலிமாமா கறபனைக்கதை நூலில்  வரும் குப்பனும் சுப்பனும் எந்த இனமானாலும் எங்களுக்கென்ன  அதைப்போல. தான் இராமன். இராவணன் என்ற கற்பனைக்கதை சுவாரசியமாய் இருந்தால் வாசித்து விட்டு போக வேண்டியதுதானே. 

எந்த ஒரு காவியமோ...வரலாறோ....வெறும் காற்றிலிருந்து...பிறந்து விடுவதில்லை!

அந்தக் கால கட்டத்தின்...வாழ்வியல்...மொழியியல் ...அறிவியல் போன்றவற்றிலிருந்தே...அது பிறக்கின்றது!

வெறும்...விஞ்ஞான அடிப்படையில்...எல்லாவற்றையும் நோக்குவது தவறு என்பது எனது வாதம்!

எமது வாழ்விலேயே....கணனியின் உள்ளே இருக்கும்....Hard Drive ...என்பது...ஒரு பெரிய பெட்டி..அளவுக்கு இருந்து...இப்போது ஒரு நகத்தின் அளவுக்கு வந்திருக்கின்றது! தவிரவும் எமது அறிவியலின் பெருமளவிலான வளர்ச்சி....மின்சாரம் கண்டு பிடிக்கப் பட்ட பிறகே...ஏற்பட்டது!

வானியல் அறிவு...இவ்வளவு வளர்ந்திருக்கும் காலத்தில் கூட....பிரபஞ்சத்தைப் பற்றிய விளக்கத்தை....பழைய கலாச்சாரச் சுவடுகளிலிருந்தே..இன்றும் நவீன விஞ்ஞானம் தேடுகின்றது!

இராமயணத்தில் வரும்....சரயு நதியின் தடங்களை....ஆப்கானிஸ்தான் பகுதியில்...கண்டறிந்துள்ளதாக...நாசாவின் அண்மைக்கால விண்வெளிப் படங்கள்...உறுதிப்படுத்துவதாகக் கூறப் படுகின்றது!

எகிப்திய பிரமிட்டுக்களின் சுவர்களில்.....மாயன் குகைகளில்.....எல்லாம்....விஞ்ஞான அறிவின் சுவடுகள் காணப்படுகின்றன!

மகா பாரதத்தில்...சில...ஆயுதங்களை வர்ணிக்கும் போது....கருவில் இருக்கும் சிசுக்களைக் கூட அழித்து விடும்..வல்லமை..இவற்றுக்குள் புதைந்திருக்கின்றது என்று கூறப்படுகின்றது? அணு ஆயுதங்களைப் பற்றி...எவ்வாறு அவர்கள் அப்போது...அறிந்திருந்தார்கள்?

அந்த ஆயுதங்களை...உபயோகிக்க...சில மந்திரங்கள் தேவைப்பட்டன! இவையெல்லாம் ஏன்...அந்த ஆயுதங்களின்  code/ password  ஆக இருந்திருக்கக் கூடாது?

இருக்கு வேதத்தை வாசித்த....ஐன்ஸ்டீன்.....'Theory of Relativity' அதிலிருந்ததாகக் கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு!

எல்லாவற்றையும் நிராகரிக்காமல்....ஒரு திறந்த மனதுடன்...இவற்றை அணுகுவதே....சாலச் சிறந்தது!

மேலும்...அம்புலிமாமாக் கதைகளிலிருந்து...நான் நிறையப் பாடங்களைக் கற்றிருக்கிறேன்!

குறிப்பாக....அந்த....சற்றும் மனம் தளராத விக்கிரமன்...மீண்டும் மரத்தின் மீதேறி...அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்!

அப்போது அதனுள்ளிருந்த வேதாளம்...எள்ளி..நகைத்து...மன்னனே...நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன்!

அதற்கு சரியான விடையை...நீ கூறா விட்டால்...உனது தலை வெடித்துச் சுக்கு நூறாகும் என்று தொடங்கும் கதைகள் எனக்கு...மிகவும் பிடித்தவை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

முடிவாய் என்ன சொல்றிங்கள் இராவணன் தமிழனா இல்லையா ?
 
ரதி....ராவணன் ..கறுப்பன் என்று கூறுகின்றார்கள்!

அப்படியானால்..அவன்...ஆபிரிக்காவிலிருந்தோ..அல்லது இந்தியாவிலிருந்தோ தான் இருந்திருக்க வேண்டும்!

ஆபிரிக்காவை...இலகுவாகப் புறம் தள்ளலாம்!

அனுமான்...இந்தியாவிலிருந்து...இலங்கைக்க்...எட்டிப் பாய்ந்திருக்கிறார்! பறந்ததாக..இராமாயணம் சொல்லவில்லை!

அப்போது...இலங்கைக்கும்...இந்தியாவுக்கும் இடையே..கடலின் இடைவெளி...மிகவும் குறுகியதாக இருந்திருக்கும்!

தெலுங்கு...கன்னடம்....துளு..மலையாளம்...தோன்றிய தமிழ் மொழியே என்று தமிழைப் பாடுகின்றனர்!

அப்போது...தமிழ்...மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும்!

எல்லாவற்றையும் விடவும்...இராவணன்...சிவ பக்தன்!

வேதங்களில்...சிவனுக்கு...இடமில்லை! சிவன் தென்னவர்களின் கடவுள்!

வேதங்களில் வரும் உருத்திரன்...என்ற ஒரு காவாலிப் பாத்திரத்தையே சிவனென்று ஆரியர் கூறுகின்றனர்!

தென்னாடுடையே சிவனே போற்றி என்று தான் மாணிக்க வாசகர் பாடுகிறார்!

எனவே ...இராவணன்...தமிழன் என்றே அனுமானிக்கலாம்!?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

புங்கை சார்... அம்சமான கருத்துக்களை அழகாக தருகிறீர்கள்...
வாழ்த்துக்கள்...
 
https://goo.gl/images/2qwfFR

உங்களிற்கு இந்த புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

இராவணனின் பார்வையில் இராமாயனணம், மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.. படிக்க தொடங்கி நாளாகிவிட்டது இன்னும் முடிக்கவில்லை, மொழிபெயர்ப்பு, கொஞ்சம் கரடு முரடு எனக்கு சரளமாக இல்லை 

இராமாயண கதை வெறும் கற்பனை என முற்று முழுதாக சொல்ல முடியாதவாறு இராவணன் வெட்டு, சீதா எலிய  என இலங்கையில் காணப்படும் இடங்களும்,வேறு சான்றுகளும் இருக்கின்றன..

உண்மை என எடுக்கப்பட்டால் 10 தலை உடைய மனிதன் இருந்தானா? மற்றும் பறக்கும் வானரம் இருந்ததா? அதையும் விட இந்தியாவின் தெற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் வானரம்களா? என்பது போன்ற கேள்விகள் தவிர்க்கப் பட முடியாதவை

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வேந்தன் இராவணன் மிக மிக நல்லவன். இராவணனை வாலி கார்த்தவீர்யார்ச்சுனன் போன்றவர்கள் வென்றிருக்கின்றார்கள். அவர்கள் இவரை 10 தல பூச்சி என்று தமது பிள்ளைகளிடம் கொடுத்திருக்கின்றனர் என்றால் அவர்களின் தவ வலிமை எத்தகையது. ராவணன் மட்டும் குறைந்தவன் இல்லை.1008 அண்டங்களையும் 108 யுகம் ஆளவேண்டுமென்று சிவனிடம் வரம் பெற்றவன்.அவன் துரதிஷ்டம் அதில் முக்கால்வாசி காலம் கயிலை மலையை தூக்கப்போய் நசுங்குண்டு அதுக்குள்ளேயே கழிந்து விட்டது. அவன் குபேரனின் சகோதரன்.அவரிடம் இருந்த போயிங் 777 ஐயும்  (புஷ்பகவிமானத்தையும்) பறித்து எடுத்து கொண்டான். தனது ராஜ்ஜியத்தில் தான் விரும்பிய பெண்ணை கவர்ந்து வருவது அரசர்களுக்கு ஏதுவானதுதான். ஆனால் அவன் சகோதரி சூர்ப்பனகையின் சதியால் மாற்றான் மனைவி என்று தெரிந்தும் ஆசை கொண்டதுதான் தவறு. (இன்று வெகு சாதாரணமாக அந்தத் தவறை அநேகமானோர் செய்கின்றனர்.அது மஹா தவறு, அதற்கு பிராயசித்தமே கிடையாது. வாலி மற்றும்  கௌரவர்கள் அழிந்ததும் அதனால்தான்.).  

இராமர் கிஷ்கிந்தையில் அனுமனை சந்திக்க முதல் வாலியை சந்தித்திருந்தால் இராமாயணம் இருந்திருக்காது. எமது அதிஷ்டம் அவர் அனுமனை,சுக்கிரீவனை சந்தித்தது. சுக்கிரீவனும் இராமரும் மனைவியரை பறிகொடுத்த நிலையில் இருந்ததால் நடப்பாகினர்.இராமரும் அவருக்கு வாக்குறுதி கொடுக்கிறார் வாலியை வதம் செய்து உனது மனைவியை மீட்டுத்தருகிறேன் என்று......!

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

ராமாயணம் 12, 000 - 10,000 வருடங்களுக்கு முன்பு நடந்தது என்பது உண்மையா?

சீதையை இராவணன் உண்மையில் சிறைபிடித்தானா?

சீதையை இராவணன் சிறைபிடித்ததினால் தான் இராமாயணம் எனும் போர் வந்ததா?

10, 000 வருங்கல்லுக்கு பின்பு, பிரபா ராஜீவை கொன்றதால் தான் கிந்தியா பிற மீது போர் தொடுத்தது என்றே சொல்லப்படும்.

அதுவும் பகிரங்கமாக தான் தனது சிறப்பு படைகளை இறக்கி போர் செய்தேன் என்று சொல்ல வக்கற்று, சிங்களத்தின் சேலைக்குள் நின்று சிங்கள படையாகி காட்டிக் கொண்டு போர் செய்தது என்பது காலத்தால் அளிக்கப்படும்.    

ராஜீவ் இப்படி இறக்கவில்லையாயினும், ஹிந்தியை பிரபா மீது போர் தொடுத்திருக்கும் என்பது சொல்லப்படுமா?

இராவணனை, பிரபா மாற்றீடு செய்தாலும் ஓர் புதினமாக இருக்காது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அபராஜிதன் said:

https://goo.gl/images/2qwfFR

உங்களிற்கு இந்த புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

இராவணனின் பார்வையில் இராமாயனணம், மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.. படிக்க தொடங்கி நாளாகிவிட்டது இன்னும் முடிக்கவில்லை, மொழிபெயர்ப்பு, கொஞ்சம் கரடு முரடு எனக்கு சரளமாக இல்லை 

இராமாயண கதை வெறும் கற்பனை என முற்று முழுதாக சொல்ல முடியாதவாறு இராவணன் வெட்டு, சீதா எலிய  என இலங்கையில் காணப்படும் இடங்களும்,வேறு சான்றுகளும் இருக்கின்றன..

உண்மை என எடுக்கப்பட்டால் 10 தலை உடைய மனிதன் இருந்தானா? மற்றும் பறக்கும் வானரம் இருந்ததா? அதையும் விட இந்தியாவின் தெற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் வானரம்களா? என்பது போன்ற கேள்விகள் தவிர்க்கப் பட முடியாதவை

படிக்கவென்று வாங்கி வைத்திருக்கின்றேன். கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியாத புத்தகம் என்பதால் விடுமுறைக்காலம் வரை காத்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎23‎/‎2018 at 10:44 AM, புங்கையூரன் said:

ரதி....ராவணன் ..கறுப்பன் என்று கூறுகின்றார்கள்!

அப்படியானால்..அவன்...ஆபிரிக்காவிலிருந்தோ..அல்லது இந்தியாவிலிருந்தோ தான் இருந்திருக்க வேண்டும்!

ஆபிரிக்காவை...இலகுவாகப் புறம் தள்ளலாம்!

அனுமான்...இந்தியாவிலிருந்து...இலங்கைக்க்...எட்டிப் பாய்ந்திருக்கிறார்! பறந்ததாக..இராமாயணம் சொல்லவில்லை!

அப்போது...இலங்கைக்கும்...இந்தியாவுக்கும் இடையே..கடலின் இடைவெளி...மிகவும் குறுகியதாக இருந்திருக்கும்!

தெலுங்கு...கன்னடம்....துளு..மலையாளம்...தோன்றிய தமிழ் மொழியே என்று தமிழைப் பாடுகின்றனர்!

அப்போது...தமிழ்...மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும்!

எல்லாவற்றையும் விடவும்...இராவணன்...சிவ பக்தன்!

வேதங்களில்...சிவனுக்கு...இடமில்லை! சிவன் தென்னவர்களின் கடவுள்!

வேதங்களில் வரும் உருத்திரன்...என்ற ஒரு காவாலிப் பாத்திரத்தையே சிவனென்று ஆரியர் கூறுகின்றனர்!

தென்னாடுடையே சிவனே போற்றி என்று தான் மாணிக்க வாசகர் பாடுகிறார்!

எனவே ...இராவணன்...தமிழன் என்றே அனுமானிக்கலாம்!?

உங்கள் பதிலுக்கு நன்றி...வட இந்தியர்களும் சிவனை கும்பிடுகிறார்கள் தானே!....வட இந்தியாவில் நிறைய சிவன் கோயில்கள் இருக்கின்றனவாம்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.