Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானே சிறிலங்காவின் பிரதமர் – என்கிறார் ரணில்

Featured Replies

  • தொடங்கியவர்

ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டும் ரிஷாட்

பிரதமர் ரணில் விக்கரசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் அமைச்சர்களான அமீர் அலி மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், இலங்கை அரசியலில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஐந்து நாடாளுமன்ற பிரிதிநிதித்துவத்தை கொண்ட ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமரை சந்தித்து ஆதரவை வழங்கியுள்ளது.

http://athavannews.com/ரணிலுக்கு-ஆதரவு-கரம்-நீட/

  • Replies 78
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, போல் said:

ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டும் ரிஷாட்

இந்தக் காணொளியில்.. ரணிலின்....
அழுகும் முகத்தை பார்த்து, மிக மகிழ்ச்சி. அடைந்தேன். :grin:

செய்யும்.. தொழிலை... ஒழுங்காக செய்யா விட்டால், அழ  வேண்டி வரும். ?
இது, பிரதமர் பதவிக்கும்... பொருந்தும்.?

உனக்கு  வந்தால்... இரத்தம். எனக்கு வந்தால்... தக்காளி சட்னியா....  அணில்? ?

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானது.தே..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இருக்கும் அரசியல் யாப்பின்படி பிரதமர் பதவியில் இருக்கும் போது அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. எனவே இது ஒரு சட்டவிரோதமான செயற்பாடாகும்.

நாடாளுமன்றத்தில் ஐ.தே.க.வுக்கு பெரும்பான்மை உள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முக்கியமானது.

கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கமாட்டார்கள் என நம்புகின்றேன். ஏனென்றால் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இன்னல்களை அவர்கள் மறக்கமாட்டார்கள்.

அவர்கள் எம்மிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அதில் பலவற்றை செய்துள்ளோம். இன்னும் பல கோரிக்கைகள் இருக்கின்றது. அவர்கள் எங்களுடன் ஆதரவாகவே உள்ளார்கள்.

எனவே பெரும்பான்மை ஆதரவோடு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நடத்தும்” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/தமிழ்-கூட்டமைப்பின்-ஆதரவ/

22 minutes ago, போல் said:

ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டும் ரிஷாட்

பிரதமர் ரணில் விக்கரசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் அமைச்சர்களான அமீர் அலி மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், இலங்கை அரசியலில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஐந்து நாடாளுமன்ற பிரிதிநிதித்துவத்தை கொண்ட ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமரை சந்தித்து ஆதரவை வழங்கியுள்ளது.

http://athavannews.com/ரணிலுக்கு-ஆதரவு-கரம்-நீட/

இதை பார்த்தல் ரணில் தான் வெல்வார் போல் உள்ளது, அது தான் நானா அங்கு போய் சரண்டர் ....!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

ரணில் தலைமையில் இரண்டாவது அவசர கூட்டம்!

Dqdbu_8W4AEK4Ao.jpg

ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது அவசர கூட்டம் சற்று முன்னர் அலிமாளிகளியில் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருக்கும் ஆதவன் செய்தியாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில் தலைமையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

http://athavannews.com/ரணில்-தலைமையில்-இரண்டாவத/

ஆதவன்... இதனை, வேண்டுமென்றே...  எழுதினானா என்று தெரியவில்லை. :grin:
ஆனால்... அது. உண்மை. ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு... ஜனாதிபதியின்  கீழ்......

இரண்டு... பிரதமர்கள்  இருப்பது, நல்லது  தானே.

இரண்டு... பிரதமர் வந்தால், இரண்டு எதிர்க் கட்சி  தலைவர்  தேவை.

சுமந்திரனை... தவிர்த்து,  யாரும்... இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவையை...  இந்தப் போட்டியில், கணக்கு எடுக்கவேயில்லை. ?

  • தொடங்கியவர்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியில்.. ரணிலின்....
அழுகும் முகத்தை பார்த்து, மிக மகிழ்ச்சி. அடைந்தேன். :grin:

செய்யும்.. தொழிலை... ஒழுங்காக செய்யா விட்டால், அழ  வேண்டி வரும். ?
இது, பிரதமர் பதவிக்கும்... பொருந்தும்.?

உனக்கு  வந்தால்... இரத்தம். எனக்கு வந்தால்... தக்காளி சட்னியா....  அணில்? ?

சிறிய விடயத்தையும் குழப்பியடிப்பதில், சிக்கலாக்குவதில் கைதேர்ந்த ரணில் ஒரு மிகமிக மோசமான நயவஞ்சகன்!

எத்தனை நெருக்குதல்கள், அனுபவங்கள் வந்தாலும் திருந்தும் மனோபாவம் அற்ற குள்ளநரிப் பேர்வழி!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  ஜனாதிபதியும், இரண்டு  பிரதமர்களும் , ஒரு எதிர்க்  கட்சி  தலைவரும்.....
இதை... வைத்தே.... ஒரு, சினிமா படம் எடுக்கலாம்.

  • தொடங்கியவர்

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ranil-4-720x450.jpg

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் தானே தொடர்ந்தும் நாட்டின் பிரதமர் எனக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுமாறு கூறியுள்ளார்.

நேற்றிரவு மற்றும் இன்று காலை ஐக்கிய தேசிய முன்னணியினருடன் சந்திப்புக்களை ரணில் நடத்தியிருந்த நிலையில், அவரது அடுத்த அறிவிப்பு தொடர்பாக எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

http://athavannews.com/ரணில்-விக்ரமசிங்க-நாட்டு/

  • தொடங்கியவர்

.தே.. ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்

Protest-infornt-of-temple-trees-2-720x450.jpg

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலரி மாளிகைக்கு முன்பாக ஐ.தே.க. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளிலுமிருந்து அலரி மாளிகை வளாகத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை சென்ற ஆதரவாளர்கள் அங்கு ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கு எதிராகவும் கோஷமெழுப்பி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் அலரி மாளிகைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.  தற்போது பேருந்துகளில் ஏராளமான ஐ.தே.க. ஆதரவாளர்கள் அலரி மாளிகையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில், அது அரசியலமைப்பிற்கு முரணானதென ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவர் அலரி மாளிகையிலிருந்து வெளியேற வேண்டுமென மஹிந்த அணியினர் குறிப்பிட்டுள்ளதோடு, அவ்வாறு வெளியேறாவிட்டால் அலரி மாளிகையை சுற்றிவளைப்போம் என குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே அலரி மாளிகைக்கு முன்பாக ஐ.தே.க. ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.

Protest-infornt-of-temple-trees-1.jpg

protest-1.jpg

 

http://athavannews.com/ஐ-தே-க-ஆதரவாளர்கள்-அலரி-மா/

Edited by போல்

  • தொடங்கியவர்

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது கட்டுப்பாட்டில் என்கிறார் மங்கள

mangala-samaraweera-300x199.jpgசிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் புதிய அதிபராக நியமித்து, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்த பின்னர், பெரும் அரசியல் குழப்பம் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ளது.

இரண்டு தரப்புகளுமே தாமே அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்றிரவு கருத்து வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியே இன்னமும் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிராகரித்துள்ள அவர், தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் இருப்பதாகவும், கூறியுள்ளார்.

அத்துடன் சட்டம், ஒழுங்கு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/27/news/33734

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, போல் said:

சர்வதேச அரங்கில், குறிப்பாக ஜனாயகம் கதைக்கும் மேற்குலகில், தமிழர் தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வை முன்நகர்த்த இன்னொரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மேற்குலக நலன்களுக்கு தமிழர் என்றும் ஆதரவாக இருந்தது இல்லை. இந்திய நலன்களுக்கே தமிழர் என்றும் ஆதரவாக இருந்து வந்துள்ளார்கள். மேற்குலக நலன்களுக்கு தேவையானதை தமிழர் முதலில் இலங்கையில் செய்து காட்டினால் தான் மேற்குலக அனுதாபம் கிடைக்கும். அது வேண்டாம் என்றால் மகிந்தவிடம் மீண்டும் சரண் அடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ரணில் முக்கிய சந்திப்பு!

Ranil_Wick_SL_PM-720x450.jpg

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி பல சந்திப்புக்களை நடத்திவருகின்றது.

இந்நிலையில், சற்று முன்னர் தூதுவர்கள், உயர் ஆணையர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பில் சாகல ரத்னாயக்கவும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://athavannews.com/வெளிநாட்டு-இராஜதந்திரி-2/

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – அதிரடி தகவலை வெளியிட்ட ஐ.தே.க!

maithri20151003-720x450.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் யோசனை இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் பதவியை வகிக்க முடியும். அந்தப் பெரும்பான்மை எனக்கு இருக்கின்றது.

அரசியல் அமைப்புக்கு அமைய தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமரை பதவி விலக்க இரண்டு முறைகளே உள்ளன அதாவது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அல்லது பிரதமர் சமர்பித்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தால் மாத்திரமே அவரை பதவி விலக்க முடியும்.

அப்படியும் இல்லாவிட்டால் பிரதமர் தனது பதவியில் இருந்து தாமாகவே விலக வேண்டும். தற்போது சட்டபடியான பிரதமர் பதவியை நான் வகிக்கின்றேன். நாடாளுமன்ற பெருபான்மை எனக்கு இருக்கின்றது. அவ்வாறு பெரும்பான்மை இல்லாவிட்டால் நான் பதவிவிலக தயார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவ்வாறு பதவிவிலகியுள்ளேன். தற்போதைய பிரச்சினையை நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்க முடியும். இந்த சூழ்நிலையில் பொது மக்கள் மத்தியில் தனக்கு நம்பிக்கை இல்லை என உணர்ந்த படியினாலேயே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பில் யோசனை உள்ளது முதலில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும” என கூறினார்.

 

http://athavannews.com/ஜனாதிபதி-மைத்திரிக்கு-எத/

 

  • தொடங்கியவர்

20 நாடுகளின் தூதுவர்கள் அலரி மாளிகையில் ரணிலுடன் சந்திப்பு

Ranil-met-Diplomats-1-300x200.jpgஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில்,  அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், கனடா,  உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாலக ரத்நாயக்க ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

இதன் போது அரசியலமைப்பு ரீதியாக தானே பிரதமராக இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தமக்கு இருப்பதாகவும், அதனால் தான் தாம் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் திரும்பத் திரும்ப கேட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தச் சந்திப்பில் சீனத் தூதுவர் சென் ஷிய யுவான் பங்கேற்கவில்லை என்பதும், அவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/10/27/news/33777

7 hours ago, Jude said:

மேற்குலக நலன்களுக்கு தமிழர் என்றும் ஆதரவாக இருந்தது இல்லை. இந்திய நலன்களுக்கே தமிழர் என்றும் ஆதரவாக இருந்து வந்துள்ளார்கள். மேற்குலக நலன்களுக்கு தேவையானதை தமிழர் முதலில் இலங்கையில் செய்து காட்டினால் தான் மேற்குலக அனுதாபம் கிடைக்கும். அது வேண்டாம் என்றால் மகிந்தவிடம் மீண்டும் சரண் அடையலாம்.

அடிமை மனநிலை உடையவர்கள் இதைப் போன்றே எப்போதும் சிந்திப்பார்கள்.

 

  • தொடங்கியவர்

ரணிலையும் சந்தித்தார் சீனத் தூதுவர்

Ranil-cheng-300x200.jpgசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா அதிபரால் நேற்றுப் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவின் புதிய பிரதமராக நேற்று நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, அவரது இல்லத்தில், சீன இராஜதந்திரிகளுடன் இணைந்து  சந்தித்துப் பேசிய பின்னரே,  அலரி மாளிகைக்குச் சென்று  ரணில் விக்கிரமசிங்கவை சீனத் தூதுவர் தனியாகச் சந்தித்துள்ளார்.

முன்னதாக, 20இற்கும் மேற்பட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்ற கூட்டம் அலரி மாளிகையில் நடந்திருந்தது. அதில் சீனத் தூதுவர் பங்கேற்கவில்லை.

சீன அதிபர் ஷி ஜின்பிங் கொடுத்தனுப்பிய வாழ்த்துச் செய்தியை, மகிந்த ராஜபக்சவிடம் இன்று சீனத் தூதுவர் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ranil-cheng.jpg

 
 
 
 
 
 
  • தொடங்கியவர்

அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு

JO-press-300x200.jpgரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி காலக்கெடு விதித்துள்ளது.

கொழும்பில் இன்று கூட்டு எதிரணியின் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை அறிவித்தார்.

நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேறாவிட்டால், அவரை அங்கிருந்து அகற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, அடுத்த அதிபர் தேர்தலில் எமது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு எந்த உடன்பாடு செய்து கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நிலையை உறுதி செய்து கொள்வதற்கும், அவரது திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கும் காலஅவகாசம் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் முடக்கியுள்ளார் என்று, இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தால், ஐதேக அதனை வரும் 16ஆம் திகதி நிரூபித்து விட்டு, அரசாங்கத்தைப் பொறுப்பேற்கட்டும் என்றும் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

JO-press.jpg

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற, ஆறுமுகன் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க சிறிலங்கா அதிபரும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இணங்கியதால் தான், அவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாக, கூறினார்.

அதேவேளை, ஐதேகவில் இருந்து கட்சி தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேயும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

ஐதேகவைச் சேர்ந்த மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவர் என்றும், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை தன்னால் இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், பிரதமர் மகிந்த தன்னிடம் கூறியிருப்பதாகவும், ஆனந்த அளுத்கமகே கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து சிறிலங்கா அதிபர் அரசியலமைப்பின் படியே நீக்கினார் என்று தெரிவித்தார்.

“தேசிய அரசாங்கத்தில் உள்ள கட்சி ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகிய போது, அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வரும். அதுவே, பிரதமரின் பதவிக்காலத்தை ரத்துச் செய்ய வழிவகுத்தது.

அமைச்சரவை தொடர்ந்து செயற்படும் போது மட்டுமே,  பிரதமரால்  செயற்பட முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகியதை அடுத்து, ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமராக செயற்பட முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2018/10/27/news/33763

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, போல் said:

சர்வதேச அரங்கில், குறிப்பாக ஜனாயகம் கதைக்கும் மேற்குலகில், தமிழர் தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வை முன்நகர்த்த இன்னொரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 

22 minutes ago, போல் said:

அடிமை மனநிலை உடையவர்கள் இதைப் போன்றே எப்போதும் சிந்திப்பார்கள்.

எப்பொழுதும் மேற்குலகின் காலை பிடிக்கும் உங்கள் அடிமை மனநிலை பற்றி தெளிவாகவே தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். 

மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் பாதுகாப்பை நீக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பிரதமருக்கான பாதுகாப்பு மற்றும் வாகனங்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறு  அகற்றப்படும் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை போலியாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜக்ஷவுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இச்செயற்பாடு ஒரு வெட்கக்கேடான செயற்பாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://athavannews.com/ரணிலின்-பாதுகாப்பை-நீக்க/

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய நாள் பல எம்பிக்கள் அமைச்சர்கள் மகிர்ந்தர் ஐயாவிடம் சரணடைய உள்ளதாக  தகவல்  இதில் நம்ம ஆட்கள் பேரம் பேசலில் உள்ளார்கள் நடு நிலையில் 

எவன் வந்தாலும் எமக்கு ஒன்றும் ஆகபோவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

குற்றாலம் , கூவாத்தூர் போல் வி.ஐ .பி க்களை கண்ணின் மணி போல் பாதுகாக்கும் ரெசாட்டுக்கள் இல்லையா ? ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, Jude said:

 

எப்பொழுதும் மேற்குலகின் காலை பிடிக்கும் உங்கள் அடிமை மனநிலை பற்றி தெளிவாகவே தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். 

மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? 

கிளிநொச்சிக்கு வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் வடை சாப்பிட்டு தேத்தண்ணியும் குடிக்கவா போனார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

44873354_10211993775134900_7131204844617

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கிளிநொச்சிக்கு வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் வடை சாப்பிட்டு தேத்தண்ணியும் குடிக்கவா போனார்கள்?

வடையும் தேத்தண்ணியுமா கொடுத்தார்கள்? கொடுத்தவர்கள் தமக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களை எப்படி அழிக்கலாம் என்று பார்க்க போயிருக்கலாம். இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, Jude said:

வடையும் தேத்தண்ணியுமா கொடுத்தார்கள்? கொடுத்தவர்கள் தமக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களை எப்படி அழிக்கலாம் என்று பார்க்க போயிருக்கலாம். இல்லையா?

அழிக்கவேண்டிய அளவிற்கு என்ன  கெடுதல் வெள்ளையளுக்கு செய்தார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.