Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றில் கடும் அமளிதுமளி – சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து குழப்பம் (3ஆம் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

parliament-clash-720x450.jpg

நாடாளுமன்றில் கடும் அமளிதுமளி – சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து குழப்பம் (3ஆம் இணைப்பு)

நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, இறுதியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கூடியது – மஹிந்த விசேட உரை (2ஆம் இணைப்பு)

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்றைய அமர்வில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாார நிலைமைகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது உரையாற்றி வருகின்றார்.

http://athavannews.com/சர்ச்சைகளுக்கு-மத்தியி-3/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

srilanka-parliament-720x450.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு வெட்கக் கேடானது: சபாநாயகர்

மக்களின் பெறுமதிமிக்க வாக்குகளை பெற்று நாடாளுன்றத்திற்கு வந்துள்ள உறுப்பினர்கள் செயற்படும் விதமானது, மிகவும் வெட்கக் கேடானதென சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக சாடியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த உரையாற்றிய சந்தர்ப்பத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது, பிரதமர் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை பெயர் அடிப்படையில் நடத்துமாறு ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரினார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.

இந்நிலையில், இச்செயற்பாடு மிகவும் அறுவறுக்கத்தக்கதும், வெட்கக் கேடானதுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாடாளுமன்ற விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என்றும், அதற்கு அனுமதி வழங்குமாறும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் கடும் அமளி ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

http://athavannews.com/நாடாளுமன்ற-உறுப்பினர்க-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் தீவிர நிலை – சபை ஒத்திவைப்பின்றி சபாநாயகர் வெளியேறினார்! – (4ஆம் இணைப்பு)

நாடாளுமன்றில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளதால், சபாநாயகர் தமது அக்ராசனத்தை விட்டு வெளியேறியுள்ளார். சபை ஒத்திவைப்பின்றி சபாநாயகர் அவையிலிருந்து வெளியேறியதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குறிப்பிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், அவரது ஆசனத்தை சூழ்ந்துகொண்டனர். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும், காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/சர்ச்சைகளுக்கு-மத்தியி-3/

  • கருத்துக்கள உறவுகள்

கருவை நோக்கி குப்பைக் கூடைகள் – தண்ணீர் போத்தல்கள் – பாராளுமன்றை ஒத்திவைக்காமல் எழுந்து சென்றார்..

November 15, 2018

parliament4.png?resize=800%2C463

பாராளுமன்றில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது ஆசனத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். பாராளுமன்றில் ஏற்பட்ட கைலப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் குப்பை கூடைகளை சபாநாயகரை நோக்கி தூக்கியெறிந்ததையடுத்தே சபாநாயகர் எந்த வித அறிவிப்பையும் விடுக்காது நாற்காலியை விட்டு எழுந்து சென்றள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

அருமை, இந்த லட்சணத்தில தமிழர்களை வேறு ஆளவேண்டுமாம். ?

ஆங்கிலப் பத்திரிகை பின்னூட்டம்; தமிழ் உறுப்பினர்கள் தயவு செய்து வெளியேறுங்கள். சிங்கள உறுப்பினர்கள் தம்மைத் தானே அடித்து கொள்ளட்டும். அதில், வன்முறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். பின்னர் வீடியோவே போலி, அது நாம  அல்ல என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

11-14-18

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டை ஏதும் இதை போல கிழிக்க படவில்லையா .. ? ஓ மை . . ?

57228905.jpg

போக இனி வரும் காலங்களில் உறுப்பினர் தேர்வு எல்லாம்  சும்மா.. மிலிட்டரி செலக்க்ஷன் தான் ..?

ஒரே ஜனநாயக டமாஸ்தான் ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சட்டை ஏதும் இதை போல கிழிக்க படவில்லையா .. ? ஓ மை . . ?

57228905.jpg

போக இனி வரும் காலங்களில் உறுப்பினர் தேர்வு எல்லாம்  சும்மா.. மிலிட்டரி செலக்க்ஷன் தான் ..?

மிக விரைவில் இதே நிலைமைக்கு வரும் இலங்கை பாராளுமன்றம் ..எல்லாம் ஹிந்தியன் டிரைனின்க் 
மீன் விற்றவனும் கள்ளச்சாராயம் காய்ச்சியவனும் ,பொண்ணுங்களை வைத்து மாமா வேலை பார்த்தவனும் ஆள ஆசைப்பட்டால் இதுவெல்லாம் சகஜமப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

 

அருமை, இந்த லட்சணத்தில தமிழர்களை வேறு ஆளவேண்டுமாம்

 

கொஞ்சம் தவறு.

ஆழ வேண்டுமென்பதல்ல அடிமையாக வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வளர்க

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த

 
November 15, 2018

mahi-parliment1.png?zoom=1.1024999499320
மஹிந்த ராஜபக்ஸவுடன் காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் தாக்குவதற்கு முற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஏற்பட்ட அமளிதுமளியின்போது சபாநாயகரை அரச தரப்பினர் தாக்க முற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவுடன் அவரது ஆசனத்துக்கு அருகில் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க காரசாரமாக பேசிக்கொண்டு இருந்த போது குறுக்கே சென்ற அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் மகனுமான லோஹான் ரத்வத்த சம்பிக்க ரணவக்கவை நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டுள்ளார்.எனினும் இந்த வேளையில் அதனைக் குறுக்கிட்டு தடுத்த மஹிந்த ராஜபக்ஸ ரோஹான் ரத்வதவை அகன்று செல்லுமாறு குறிப்பிட்டு சம்பிக்கவை தன்னருகே அழைத்து கைலாகு கொடுத்து தோளில் தட்டி சமாதானப்படுத்தியுள்ளார்.

 

இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரச தரப்புக்கு தாவிய ஆனந்த அளுத்கமகே, தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த வேளை? நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சமாதானப்படுத்த முயற்சித்த போது அவரை தாக்க அளுத்கமகே முற்பட்டிருந்தார். எனினும் ஏனைய சில உறுப்பினர்கள் அதனை தடுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/103400/

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

11-14-18

 

 

22 hours ago, பெருமாள் said:

 

 

 

நேற்று பாராளுமன்றத்தில் நடந்த  அமளியை...   சிங்கள உறுப்பினர்களின், சத்தத்துடன் கேட்கும் போது...  மகிழ்ச்சியாக உள்ளது.  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people

 

Image may contain: 2 people, people standing and crowd

 

Image may contain: 3 people, suit

இந்தச்  சண்டையில்.. அனல் பறக்க... குனிந்தார்...  சம்பந்தர். :grin:

எரிமலை...  "சும்மை"  தாண்டி...  சம்மையும்,  ரணில்  மாத்தையாவையும்...  யாரும்.. நெருங்க முடியாது. ?
நெருப்புடா,   தமிழன்டா,    கெத்துடா,    செம்புடா.... ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

இது உகண்டாவில்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

 

சபாநாயகரின் கதிரையில் தண்ணி ஊற்றிய... புத்திசாலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. :grin:
இந்த அமளிக்குள்... ஒருத்தர்,  தலை இழுத்துக் கொண்டு இருக்கிறார்.   ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.