Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இடியாப்ப மாவு சரியான முறையில்  தயாராவதில்லை.

முக்கியமாக, அரிசியை ஊறவைத்து, கழுவி, காயவைத்து, அரைத்து, வறுப்பார்கள். இது செலவு கூட.

லண்டன் முதலாளிகள், இந்தியாவுக்கு சப் காண்ட்ராக்ட் கொடுப்பதால், அவர்கள், அரிசியினை நேரடியாக, மெஷினில் போட்டு அரைத்து, அனுப்பி விடுவார்கள். 

இது மாவின் தரத்தினை குறைப்பதால், அது, மா  போல, ஒன்றுடன் ஒன்று சேராமல், மண் போல தனி தனியே இருக்கும்.

இதனால், எண்ணெய் ஊத்தி, வேறு பொருட்களை கலந்து, ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் வகையில் செய்கிறார்கள்.

விலை கூடினாலும், தரமான மாவை தேடி வாங்குவது சிறந்தது. இலங்கையில் இருந்து கூட, வருகின்றன.

நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரிசிமா, மிளகாய்த்தூள் எல்லாம் இணுவிலில் செய்து எடுப்பதுதான். 

  • Replies 1.8k
  • Views 281.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரிசிமா, மிளகாய்த்தூள் எல்லாம் இணுவிலில் செய்து எடுப்பதுதான். 

அங்கிருந்து எடுக்கும் செலவை, இங்கு வாங்கும் விலையுடன் ஓப்பிட்டு சொல்ல முடியுமா?

தரம் சிறப்பாக இருக்கும்... அதை கேட்கவில்லை.

அங்கிருந்து கொண்டு வரும் தூளின், ஒரு கிலோ எவ்வளவு செலவாகிறது?
 
4 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியானுக்காக... ஒரு நீண்ட,  விடுமுறை கிடைக்கும் போது...  
மேலுள்ள முறையில்... கட்டாயம்   "பற்றீஸ்"  செய்து விட்டு, படம் போடுகின்றேன். :grin:

இதுக்கு ஏன் சிறியர் நீண்ட விடுமுறை.... ஒரு சண்டே, பியர் கானோட, எல்லோரையும் அடிச்சு திரத்திப் போட்டு, பட்டீஸ் உடனே தான் வெளியே வருவேன் எண்டு, கிச்சினுக்குள பூந்தால், இரண்டு மணித்தியாலமே கூட...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அங்கிருந்து எடுக்கும் செலவை, இங்கு வாங்கும் விலையுடன் ஓப்பிட்டு சொல்ல முடியுமா?

தரம் சிறப்பாக இருக்கும்... அதை கேட்கவில்லை.

அங்கிருந்து கொண்டு வரும் தூளின், ஒரு கிலோ எவ்வளவு செலவாகிறது?
 
தபாலில் அனுப்ப ஒரு கிலோ 750. பத்துக் கிலோ அனுப்பினால் 500 எடும்பார்கள். நாம் நாமே வாங்கி சுத்தம்செய்து காயவிட்டு மில்லில் கொடுத்து அரைத்து ஆறவிட்டுப் பொதி செய்து கொண்டு வருவோம். எவ வளவு என்று கணக்குப் பார்ப்பதில்லை. 

நான் நினைக்கிறேன் பத்துக்கிலோ தூள் செய்ய ஒரு 5000 ரூபாவுக்குள் தான் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தபாலில் அனுப்ப ஒரு கிலோ 750. பத்துக் கிலோ அனுப்பினால் 500 எடும்பார்கள். நாம் நாமே வாங்கி சுத்தம்செய்து காயவிட்டு மில்லில் கொடுத்து அரைத்து ஆறவிட்டுப் பொதி செய்து கொண்டு வருவோம். எவ வளவு என்று கணக்குப் பார்ப்பதில்லை. 

10Kg X 500 = Rs5,000 ?

பரவாயில்லையே...

  • கருத்துக்கள உறவுகள்

சீனி அரியதரம் செய்வது எப்படி 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இதுக்கு ஏன் சிறியர் நீண்ட விடுமுறை.... ஒரு சண்டே, பியர் கானோட, எல்லோரையும் அடிச்சு திரத்திப் போட்டு, பட்டீஸ் உடனே தான் வெளியே வருவேன் எண்டு, கிச்சினுக்குள பூந்தால், இரண்டு மணித்தியாலமே கூட...

நாதமுனி... நீங்கள், "பற்றீஸ்"  செய்ய இரண்டு மணித்தியாலம் தான் எடுக்கும் என்று ஆசை காட்டி,
 "சண்டேயை"  வீணாக்கிற பிளான் போலை. எங்களுக்கு... முட்டை  பொரிக்கவே  இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி... நீங்கள், "பற்றீஸ்"  செய்ய இரண்டு மணித்தியாலம் தான் எடுக்கும் என்று ஆசை காட்டி,
 "சண்டேயை"  வீணாக்கிற பிளான் போலை. எங்களுக்கு... முட்டை  பொரிக்கவே  இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.  :grin:

பற்றீஸ் வருகுதோ இல்லையோ, வெறும் பியர் கான் வெளியில வரும் எண்டு சொல்லுவியள் என்று பார்த்தேன்.

அது சரி முட்டைபொரியலுக்கு ஏன் இரண்டு மணித்தியாலம்?

கோழியை வெட்டி, முட்டையை எடுக்கிறியள் போல கிடக்குது, பொரிக்க. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

மல்லி கோப்பி செய்யும் முறை.....அலுவலகத்தில் அல்லாடிவிட்டு  தலையிடியுடன் வீட்டுக்கு வருபவர்களுக்கு சிறந்த அலுப்பு நிவாரணி மல்லி கோப்பி....!   👍

அன்ரி சொல்லும் அளவுகளிலும் பார்க்க குறைவான அளவுகளில் (அரை கிலோ) செய்தால் பவர்புல்லாய் இருக்கும்......! 😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

உவ உங்களுக்கு அன்டியோ 🤯

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உவ உங்களுக்கு அன்டியோ 🤯

எனது  அற்ப சந்தோசத்தை கூட தாங்க முடியாத அளவுக்கு பலவீனமான இதயமா உங்களுக்கு.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களின் மிக சிறப்பான சரக்குத்தூள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2019 at 8:19 PM, தமிழ் சிறி said:

நாதமுனி... நீங்கள், "பற்றீஸ்"  செய்ய இரண்டு மணித்தியாலம் தான் எடுக்கும் என்று ஆசை காட்டி,
 "சண்டேயை"  வீணாக்கிற பிளான் போலை. எங்களுக்கு... முட்டை  பொரிக்கவே  இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.  :grin:

சிறி, நீங்கள் செய்யாமல் இருப்பதுக்கு ஏதாவது சாட்டு தேடுகிறீர்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முட்டை பப்சு வெதுப்பக செய்முறை..🎂

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சுவைமிகு ஆலங்காய் பிட்டு .......!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடை முறுக்கு..👌

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

சுவைமிகு ஆலங்காய் பிட்டு .......!  😄

இதை ஒரு நாளும் சாப்பிட்டுப்பார்த்ததில்லை, சுவை எப்பிடி?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நீர்வேலியான் said:

இதை ஒரு நாளும் சாப்பிட்டுப்பார்த்ததில்லை, சுவை எப்பிடி?

உளுத்தம்மாவும் பனங்கற்கண்டு & தேங்காய் பூ காம்பினேஷன் சும்மா  அள்ளிக்கொண்டு போகும்  நீர்வேலியான்..... பொதுவாக நான் இங்கு இணைக்கும் உணவுக்கு குறிப்புகள் வேலைக்கு போகின்றவர்கள் எளிமையாக பார்த்து செய்யக்கூடியவாறு பார்த்து கொள்கின்றேன்.....நீங்களும் விடுமுறை நாளில் கொஞ்சம் மினகட்டால் சுலபமாய் செய்திடலாம்......!  👍 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நிச்சயமாக ஒருநாள் செய்து பார்ப்பேன், தமிழ் சிறி மாதிரி சட்டி இல்லை, அகப்பை இல்லை, இப்ப நேரம் சரியில்லை என்று பேய்க்காட்டமாட்டேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎17‎/‎2019 at 10:17 AM, suvy said:

சுவைமிகு ஆலங்காய் பிட்டு .......!  😄

இதை நானும் ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...தமிழர் ஆகிய நாங்கள் எங்கட பல  சாப்பாட்டை ஒழுங்காய் சுவைத்ததில்லை 😋

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதை நானும் ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...தமிழர் ஆகிய நாங்கள் எங்கட பல  சாப்பாட்டை ஒழுங்காய் சுவைத்ததில்லை 😋

அப்ப நீங்கள் தமிழரில்லை...

:grin:

5 hours ago, நீர்வேலியான் said:

நிச்சயமாக ஒருநாள் செய்து பார்ப்பேன், தமிழ் சிறி மாதிரி சட்டி இல்லை, அகப்பை இல்லை, இப்ப நேரம் சரியில்லை என்று பேய்க்காட்டமாட்டேன்😂

என்னெண்டு சொன்னியல்...:grin:

பின்ன...!

முட்டைய உடைச்சூத்திப் பொரிக்க, இரண்டு மணித்தியாலம் தேவையாமே.🤭

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

அப்ப நீங்கள் தமிழரில்லை...

:grin:

என்னெண்டு சொன்னியல்...:grin:

பின்ன...!

முட்டைய உடைச்சூத்திப் பொரிக்க, இரண்டு மணித்தியாலம் தேவையாமே.🤭

அவர் நல்ல நேரம், ராகு காலம் பார்த்துதான் முட்டை உடைப்பாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் முட்டை உடைத்து  பொரிக்கிறது கூட தெரியவிடாமல்  மனைவி அப்பிடி தாங்குகிறாரா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 6/17/2019 at 10:17 AM, suvy said:

சுவைமிகு ஆலங்காய் பிட்டு .......!  😄

என் பெரியம்மா இதை அடிக்கடி செய்வார். நல்ல சுவையாக இருக்கும். நான் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் செய்த நினைவு. ஒருக்கா திரும்பச் செய்து பார்க்கவேணும். நன்றி சுவி அண்ணா பகிர்ந்தமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் பெரியம்மா இதை அடிக்கடி செய்வார். நல்ல சுவையாக இருக்கும். நான் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் செய்த நினைவு. ஒருக்கா திரும்பச் செய்து பார்க்கவேணும். நன்றி சுவி அண்ணா பகிர்ந்தமைக்கு.

அக்கா,

ஒரு விசயம் கவனித்தீர்களா?  கடை, கண்ணி என்று வைத்திருந்தீர்கள் என்ற படியால, 'Business lady' என்கிற வகையில் கேக்கிறன்.

இவர்கள் இந்த சமையல் வீடியோக்கள் மினக்கட்டு போடுவதன் காரணம் என்ன? 

நிச்சயமாக நாம் ரசிக்க வேண்டும் என்கிற காரணம் (மட்டும்) இல்லை. அதோட நீங்களும் வடை சுட்டு, இங்கே போட்டீர்கள் தானே.

சரி, சொல்லுங்க பாப்போம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அக்கா,

ஒரு விசயம் கவனித்தீர்களா?  கடை, கண்ணி என்று வைத்திருந்தீர்கள் என்ற படியால, 'Business lady' என்கிற வகையில் கேக்கிறன்.

இவர்கள் இந்த சமையல் வீடியோக்கள் மினக்கட்டு போடுவதன் காரணம் என்ன? 

நிச்சயமாக நாம் ரசிக்க வேண்டும் என்கிற காரணம் (மட்டும்) இல்லை. அதோட நீங்களும் வடை சுட்டு, இங்கே போட்டீர்கள் தானே.

சரி, சொல்லுங்க பாப்போம்...

இவர்கள் போடுவதன் நோக்கம் முன்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் You tube சணலைப் பார்த்தால் அவர்களுக்குப் பணம் கிடைக்கும் என்னும் நோக்கத்தில்தான் என்று எண்ணுகிறேன். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக You Tube பில் போடும் வீடியோக்களுக்கு பணம் கொடுப்பதில்லை. நான் போட்ட வீடியோ யாழில் வேறு முறையைவீடியோவை இணைக்க முடியாததனால் நிலை சொன்னதற்கிணங்க அதில் போட்டு பின் யாழில் இணைத்தேன்.யாழில் சிலர் போடும் குப்பை செய்முறைகளை பார்த்து வந்த எரிச்சலில் ஒழுங்கான செய்முறை போடவேண்டும் என்று தொடங்கியது. எனக்கு நேரம் இன்மையால் விட்டுவிட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.