Jump to content

தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்


Recommended Posts

பதியப்பட்டது
FB_IMG_1543324503510-720x500.jpg

தமிழீழ விடுதலைப்போரியல் வரலாற்றில்  தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூறுகின்ற இந்த மாவீரர் நாளினை இன்றைய தினம் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில் பூராகவும் பூரண உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியான லெப்.கேணல் கில்மன் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் ஆகியோரின் தந்தையார் பொதுச்சுடரினை ஏற்றினார்

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுவதற்கு முன்பு பிரிகேடியர் தீபனே கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரை ஏற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

http://nakarvu.com/2018/11/27/தாயகம்-எங்கும்-உணர்வெழுச/

 

கோப்பாய் துயிலும் இல்ல நினைவேந்தல் நேரலை!

மாவீரர் தினத்தை முன்னிட்டு அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல சூழலில் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாவீரர் நாளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை வெற்றியளிக்காத நிலையில் நினைவேந்தலை தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கோப்பாய் துயிலும் இல்லத்தில் நிகழ்வுகள் ஆரம்மாகி நடைபெற்றுக்கொண்டிருப்பதை பார்க்கக் கூடியதாகவுள்ளது.

 

https://www.ibctamil.com/srilanka/80/109899?ref=rightsidebar

 

வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் தினம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் தினம் எழுற்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் ஒருவரின் தந்தை நடராசா செல்வச்சந்திரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்

வல்வெட்டிதுறை தீருவில் மாவீரர் துயிலும்இல்லத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்கள் மற்றும் கொடிகளை பறக்கவிடுவதற்கும் வல்வெட்டி துறை பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இதனால்மக்கள் தமது கையடக்க தொலைபேசிகளில் பாடல்களை ஒலிக்கவிட்டு அஞ்சலிசெலுத்தியுள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/109900

Posted

பாசையூரில் மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பாசையூரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

யாழ்மாநகர சபை மேயர் இம்மனுவேல் ஆனோல்ட் தலைமையில் பாசையூர் அந்தோனியார் கோயிலுக்குஅருகில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

கடற்புலிஒருவரின் தந்தை விளக்கினை ஏற்றி வைத்துள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/109897

 

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்

மிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தாமும் சுடரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுரரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

2890.jpg

http://nakarvu.com/2018/11/27/யாழ்-சாட்டி-மாவீரர்-துயி/

Posted

 

கண்ணீரில் கரைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் (2ஆம் இணைப்பு)

 

 

உறவினர்களின் கண்ணீர் மாவீரர்களின் நினைவுக்கற்களை நனைக்க, கனகபுரம் மாவீரர் துயலும் இல்லத்தில் மாவீரர் நினைவுதினம் மிகவும் உணர்வுபூர்வாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமது பிள்ளைகளை நினைவுகூர்ந்து மண்ணில் புரண்டு தாய்மார் கதறியழ, தீபம் ஏற்றி மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை சரியாக 6.05இற்கு மணி ஒலிக்க, பிரதான சுடரை மாவீரரான பிரிகேடியர் தீபனின் தந்தை ஏற்றிவைத்தார். அதன் பின்னர் ஏனைய மாவீரர்களின் உறவினர்கள் தீபம் ஏற்றி, அகவணக்கம் செலுத்தினர்.

இதில் நூற்றுக்கணக்கான மாவீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

kanagapuram-thuyilum-illam-1-720x461.jpg

கனகபுரம் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

மாவீரர்களின் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில், தமிழீழ உணர்ச்சிப்பாடல்கள் ஒலிக்க மிகவும் உணர்வுபூர்வமாக குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாவீரர்களின் நினைவுக்கற்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு அவற்றிற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

தமது உறவுகளை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் இந்நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருளவானோர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

kanagapuram-thuyilum-illam.jpg

maveerar-day.jpg

kanagapuram-thuyilum-illam-1-720x461.jpg

http://athavannews.com/கனகபுரம்-துயிலும்-இல்லத்/
Posted

முன்மாரியில் மிகவும் உணர்வுபூர்வாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல்!

 
20181127_180503.jpg

தேசிய மாவீரர் தின நினைவேந்தலை பல இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவடி முன்மாரியில் மிகவும் உணர்வுபூர்வாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள். கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இருப்பினும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர் சிந்த மழை நீர் துளிகளுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மண்முனை தென் மேற்கு பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மாவீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 6.05 மணியளவில் மாவீரர் நினைவு மணி ஒலிக்கபட்டு பிரதான தீபச்சுடரை மேஜர் பயில்வானின் தாயார் ஏற்றிவைக்க மாவீரர்களை நினைவுகூரும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டது.

  IMG_6751.jpg

IMG_6741.jpg

IMG_6704.jpg

http://athavannews.com/முன்மாரியில்-மிகவும்-உணர/

 

மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவடி மும்மாரியில் மாவீரர் நினைவேந்தல்

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109906

Posted

காவியநாயகர்களுக்கு பண்டிவிரிச்சானில் உணர்வெழுச்சி நினைவேந்தல்!

மன்னார் மாவட்ட பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நினைவேந்தலை மாவீரர்தின ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டிருந்தனர். மாலை 06.05 அளவில் ஈகைச்சுடரேற்றி மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும் இந்நினைவேந்தலில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

https://www.ibctamil.com/srilanka/80/109905

 

 

கண்ணீரில் நனைந்த கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தெய்வங்களின் பெற்றோர்களாலும்,உறவினர்களாலும்உணர்ச்சிப் பெருக்கோடு நினைவேந்தல்கள் நடைபெற்று வருகின்றன.

அம்பாறைமாவீரர் துயிலுமில்ல ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் குட்டிமணி மாஸ்டர் எனப்படும் நாகமணி கிருஷ்ணபிள்ளையின் தலைமையில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுருகின்றன.

மாவீரர்களின்பெற்றோர்கள் மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்திய காட்சிகள் அனைவரதுமனதினையும் கனக்கச்செய்தது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

கஞ்சிகுடிச்சாறுமாவீரர் துயிலுமில்லத்தின் ஈக சுடரினை மூன்று மாவீரர்களை தேசியவிடுதலைக்கு கொடையளித்த கனகசுந்தரம் தில்லையம்மா என்ற தாய் ஏற்றிவைத்தார்.

இதன்பின்புஅனைத்து மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் தீபங்களை ஏற்றியபின்னர். மாவீரர்தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

வானவர்கள்மாவீரர்களை நினைவு கூர்ந்து கண்ணீர் சொரிவதனை போன்றுஇயற்கையும் மழைதூவி தாயக விடுதலைக்கு ஆகுதியாக்கிய தேசிய செல்வங்களின் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

எண்ணூற்றுக்குமேற்பட்ட வித்துடல்கள் விதைக்கப்பட்ட கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்திற்கு அரசபுலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அச்சமின்றி அகவணக்கம் செய்யபெருமளவிலான மாவீர குடும்பங்களின் உறவுகள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்ததை காணமுடிந்தது.

யுத்தம்நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் விடுதலை புலிகளாலும் புனிதமாக பேணிபாதுகாக்கப்பட்டு வந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இலங்கை அரசின் இராணுவங்களால்ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளம் எதுவுமின்றி அழிக்கப்பட்டன.

அம்பாரைமாவட்டதின் ஒரே ஒரு துயிலுமில்லமான கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லமும்இராணுவத்தினரால் அழித்தொழித்தனர். இதன் ஒருபகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள்இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/109903

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய செல்வம் 

parli.jpg

மாவீரர் தினத்தை நினைவுபடுத்திய செல்வம் அடைக்கலநாதன் இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினார். 

பாராளுமன்றம் கூடியபோது, பிரதான நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்போது கருத்து தெரிவித்து இறுதியில் மாவீரர்களுக்கும் தனது அஞ்சலியை செலுத்துவதாக தெரிவித்து சபையில் அமர்ந்துகொண்டார்.

http://www.virakesari.lk/article/45307

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

 
November 27, 2018

DSC_0114.jpg?zoom=1.2100000262260437&res

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று செவ்வாய்க்கிழமை(27) மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.

மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் மூன்று மாவீரர்களின் தந்தையான கந்தையா வைரமுத்து என்பவரால் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுத்திக்பட்ட யுத்தம் நிறைவடைந்த போது 2009 ஆம் ஆண்டு மன்னார் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு உடைத்து சேதமாக்கப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லத்தில் உடைக்கப்பட்ட கல்லறைகள் , கற்கைள் ஆங்காங்கே சிதறி காணப்பட்ட போது இதனை ஓரிடத்தில் குவித்த மாவீர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வந்திருந்தனர்

இந்த நிலையில் இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_0083.jpg?zoom=1.2100000262260437&resDSC_0086.jpg?zoom=1.2100000262260437&resDSC_0087-1.jpg?zoom=1.2100000262260437&r  DSC_0134.jpg?zoom=1.2100000262260437&resDSC_0146.jpg?zoom=1.2100000262260437&res

Posted

 

Posted

யாழ். கொடிகாமத்தில் வீரச்சாவடைந்த மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக வீரச்சாவடைந்த மாவீரர் தினம் உலக நாடுகள் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்ப்புப்பூர்வமாக ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது வீரச்சாவடைந்த மாவீரரின் உறவுகள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

DtBCea9U8AAxJvg.jpg

DtBCi1wVAAAzM9p.jpg

DtBCf5cU0AAOP_Y.jpg

http://athavannews.com/யாழ்-கொடிகமத்தில்-வீரச்/

Posted

காணாமல்போனோரின் உறவுகள் கண்ணீருடன் நினைவேந்தல்!

வவுனியா நகரசபை மண்டபத்தில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் அரசியல் வாதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் புலனாய்வு பிரிவினரின் நடமாட்டங்கள் அதிகரித்து காணப்பட்டதுடன் மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்க வந்திருந்தவர்களின் வாகனங்களும் இரகசியமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் வவுனியா நகரிலுள்ள பொங்குதமிழ் நினைவு துாபியில் வயோதிபர் ஒருவர் தனது பிள்ளைகளை நினைத்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109911

 

மன்னார் ஆட்காட்டிவெளி வீரமறவர் தின நினைவேந்தல்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர் நாள் செய்திகளை தொகுத்து இங்கே பதிவு செய்துகொண்டிருக்கும் போல் மற்றும் பிழம்பு உங்கள் இருவருக்கும் கரம் கூப்பி என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

 
November 27, 2018
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள்

November 27, 2018

IMG_6952.jpg?zoom=1.2100000262260437&res

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடியதோழர்கள் வந்துள்ளோம்.

 

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். என்ற துயிலுமில்லம் பாடல் ஒலிக்க ஆயிரக்கணக்கான உறவுகளின் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2018 மாவீரர் நாள் ஆயிக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி உணர்வெழுச்சியுடன் கண்ணீர் மல்க நடந்து முடிந்த விடுதலைப்போராட்டத்தில் மரணித்த தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு முன்னாள் அமைதியாக நின்றிருக்க மாலை 6.05மணிக்கு மணியோசை எழுப்பட்டு தொடர்ந்து பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன் , பிரிகேடியர் தீபன் ஆகியே மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றி வகைப்பட்டது.

அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடலும் ஒலிபரப்பட்டது. இதன் கலந்துகொண்ட உறவுகள் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.மிகவும் அமைதியாக எவ்வித நெருக்கடிகளும் இன்றி 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்து .

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதல் முதல் மரணித்த மாவீரான லெப். சங்கர்( சத்தியநாதன்) நினைவாக நவம்பர் 27 திகதியை விடுதலைப்புலிகள் மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு பிரகடனம் செய்தனர். அன்று முதல் நவம்பர் 27 தாயகத்திலும் புலம் பெயர் தேசத்தில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

IMG_6797.jpg?zoom=1.2100000262260437&resIMG_6815.jpg?zoom=1.2100000262260437&resIMG_6825.jpg?zoom=1.2100000262260437&resIMG_6849.jpg?zoom=1.2100000262260437&resIMG_6877.jpg?zoom=1.2100000262260437&resIMG_6898.jpg?zoom=1.2100000262260437&resIMG_6905.jpg?zoom=1.2100000262260437&resIMG_6910.jpg?zoom=1.2100000262260437&resIMG_6912.jpg?zoom=1.2100000262260437&resIMG_6930.jpg?zoom=1.2100000262260437&res

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எவ்வளவு அரச கெடுபிடி புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஒவ்வொரு இடங்களிலும் திரண்ட மக்களைப் பார்க்க வியப்பாக உள்ளது.கதறியழும் உறவுகளைப் பார்க்க மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

நேரம் ஒதுக்கி தொடர்ந்து மாவீரர் செய்திகளை இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Posted

இரணைப்பாலை மாவீர் துயிலுமில்லத்தில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் நாள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது இரண்டு மாவீரர்களின் தாயாரான மரியதாஸ் மேரிமெற்ரலின் பொதுச்சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுடர் ஏற்றினார்கள்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/109916

 

கப்டன் அங்கயற்கண்ணியின் தாயார் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றினார்!

தேசிய மாவீரர் நாள் முல்லைத்தீவிலுள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் பொதுமக்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடற்கரும்புலி கப்டன் அங்கயக்கண்ணியின் தாயார் துரைசிங்கம் பரமேஸ்வரி பொதுச்சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுடர் ஏற்றினார்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/109922

Posted

இன்று உணர்வை உலுக்கிய முக்கியமான புகைப்படங்கள்!

தேசிய மாவீரர் நாளான இன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு கண்ணிர் மல்க மாவீரர்களை நினைவில் ஏந்தினர்.

பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள்.

ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு முன்னால் அமைதியாக நின்றிருக்க மாலை 6.05மணிக்கு மணியோசை எழுப்பட்டு தொடர்ந்து பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன், பிரிகேடியர் தீபன் ஆகிய மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றி வகைப்பட்டன. அதனைத் தொடர்ந்து துயிலுமில்ல பாடலும் ஒலிபரப்பட்டது.

இதன்போது பிடிக்கப்பட்ட முக்கியமான சில புகைப்படங்களை இங்கு இணைக்கின்றோம்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109917?ref=imp-news

 

தரவை துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

தேசத்தின் வேர்கள் முன்னாள் போராளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு தரவை துயிலுமில்லத்தில் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் தலைமையில் மிகவும் எழுர்ச்சிகரமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தேச விடுதலைக்காகவும் வட கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் ஒடுக்குமுறைக்காகவும் போராடி மண்ணிற்காக வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான தேசிய மாவீரர் நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்நீர்த்த 5000 க்கு மேற்பட்ட போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டட தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீர்ர்களது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காக அகல்விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109924

மன்னார், மட்டு. தாண்டியடியில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் நினைவு!

THANDIYADI-1.jpg

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில், மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்திலும் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே மாவீரர் நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் போது மாவீரர் உறவுகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் மாலை 6.05 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.மூன்று மாவீரர்களின் தந்தையான கந்தையா வைரமுத்து என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுத்திக்கப்பட்ட யுத்தம் நிறைவடைந்த போது 2009 ஆம் ஆண்டு மன்னார் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு உடைத்து சேதமாக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உடைக்கப்பட்ட கல்லறைகள் , கற்கைள் ஆங்காங்கே சிதறி காணப்பட்ட போது இதனை ஓரிடத்தில் குவித்த மாவீர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மன்னார்-மட்டு-தாண்டியடி/
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர் நினைவு நிகழ்வுகளை இங்கே இணைத்துவரும் போல்  மற்றும் பிழம்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

இவை எதுவுமே வீண்போய்விடக்கூடாது. வேறு சொல்லத் தெரியவில்லை. 

Posted

நான் என் முகநூலில் எழுதிய குறிப்பு இது. தாயக மக்களை பற்றி பெருமை கொள்ளும் இன்னொரு தருணம்

------------------------------------------------
நாங்கள் புலம்பெயர் நாடுகளில் ஒரு safe zone இற்குள் இருந்து கொண்டு முகனூலிலும், எம் நகரங்களில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றோம். ஆனால் தாயகத்தில் மகிந்தவின் வரவின் பின் மீண்டும் ஆரம்பித்து இருக்கும் கடும் முட்டுக்கட்டைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் வடக்கு கிழக்கு எங்கும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கு கொண்டு இருக்கின்றனர் எங்கள் சனம்.

கோப்பாய், தீருவில், கிளிநொச்சி, பண்டி விரிச்சான், சம்பூர், சாட்டி, மாவடி (மட்டக்களப்பு), கஞ்சிகுடிச்சாறு, மன்னார் ஆட்காட்டி வெளி,இரணைப்பாலை (முல்லைத்தீவு) ,தேராவில் (முல்லைத்தீவு), தரவை (மட்டக்களப்பு) மற்றும் சிற்றூர்கள் பலவற்றில் மக்கள் அணி அணியாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.

துப்பாக்கிகளின் சுடும் எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டு எந்த முக்கிய அரசியல் கட்சிகளின் ஏற்பாடுகளோ அனுசரனையோ இல்லாமல் தன்னெழுச்சியாக மாவீரர் தினத்தை உணர்வு பூர்வமாக அனுட்டித்திருகின்றனர் எம் தாயக மக்கள்.

தம் போராளிகளுக்கு  அஞ்சலி செலுத்துவது என்பது அடிப்படை மனிதவுரிமை. அதை எந்த அடக்குமுறைகளாலும் நிறுத்தி விட முடியாது என்று காட்டியுள்ளனர் தாயக மக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர்தின அஞ்சலிகள்: முழுமையான தொகுப்பு!

November 27, 2018
%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%

மாவீரர்தின நிகழ்வுகளில் இன்று வடக்கு கிழக்கிலுள்ள பிரதான துயிலுமில்லங்களில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

விதையாகிப் போன மாவீரச் செல்வங்களிற்காக கண்ணீராலும், ஒளிதீபத்தாலும் உறவுகள் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர். உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து துயிலுமில்லங்களிலும் மாவீரர் பாடல் ஒலிபரப்பப்பட்டு, முதன்மை சுடர் ஏற்றப்பட்டது.

கல்லறைகள் சிதைக்கப்பட்ட நிலத்தில், தமது பிள்ளைகளிற்காக பெற்றோர் எழுப்பிய அழுகுரல்கள் மனங்களை கலங்க வைத்தது. தமக்காக வீழ்ந்தவர்களை, உறவுகளை கடந்தும் பெருமளவானவர்கள் துயிலுமில்லங்களிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

எதிர்பார்க்கப்பட்டதைபோல, பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கவில்லை.

யாழ்ப்பாணம்-கோப்பாய் துயிலுமில்லம்

கப்டன் வெண்ணிலவன், கப்டன் பேரின்பன், லெப்.செந்தமிழ் செல்வன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயார் முதன்மை சுடரை ஏற்றினார்.

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%

முல்லைத்தீவு- முள்ளியவளை துயிலுமில்லம்

முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட தளபதி மேஜர் பசீலனின் தாயார் முதன்மை சுடர் ஏற்றினார்.

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%

வவுனியா- களிக்காடு துயிலுமில்லம்

களிக்காடு துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட முதல் மாவீரனான 2ம் லெப்.விக்ரரின் தாயார் முதன்மை சுடர் ஏற்றினார்.

%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%

மட்டு- தரவை துயிலுமில்லம்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்.கேணல் உருத்திராவின் தாயார் முதன்மை சுடர் ஏற்றினார்.

%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-3-3%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-1-2%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-2-2tharavai-1-2-300x225.jpg

தென்மராட்சி கொடிகாமம் துயிலுமில்லம்

மேஜர் கார்வண்ணன், கப்டன் சேரன், லெப்.ரஞ்சன் ஆகிய மூன்று மாவீரர்களின் சகோதரர் முதன்மை சுடர் ஏற்றினார்.

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%

கிளிநொச்சி- கனகபுரம் துயிலுமில்லம்

லெப்.கேணல் கில்மன், பிரிகேடியர் தீபன் ஆகிய மாவீரர்களின் தந்தை முதன்மை சுடர் ஏற்றினார்.

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0

வடமராட்சி கிழக்கு- உடுத்துறை துயிலுமில்லம்

மேஜர் மதுராவின் தாயார் முதன்மை சுடர் ஏற்றி வைத்தார்.

%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%

%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%

மன்னார்- பண்டிவிரிச்சான் துயிலுமில்லம்

மேஜர் பாலுவின் மனைவி முதன்மை சுடர் ஏற்றினார்.

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%

முல்லைத்தீவு- இரட்டைவாய்க்காய் துயிலுமில்லம்

லெப்.கேணல் பீஸ்மனின் மனைவி  முதன்மைச் சுடரை ஏற்றினார்.

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0

வல்வெட்டித்துறை- தீருவில் 

%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%

கிளிநொச்சி- முழங்காவில் துயிலுமில்லம்

கரும்புலி மாவீரன் ஒருவரின் தாயார் ஏற்றினார்.

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%

மட்டக்களப்பு- கல்லடி துயிலுமில்லம்

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%

தீவகம்- சாட்டி துயிலுமில்லம்

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%

மட்டக்களப்பு- கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்

%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%

மன்னார்- ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%

மட்டக்களப்பு- மாவடி முன்மாரி வேம்பு துயிலுமில்லம்

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%

மட்டக்களப்பு- தாண்டியடி துயிலுமில்லம்

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%

 

 

http://www.pagetamil.com/25718/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ragunathan said:

மாவீரர் நினைவு நிகழ்வுகளை இங்கே இணைத்துவரும் போல்  மற்றும் பிழம்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

இவை எதுவுமே வீண்போய்விடக்கூடாது. வேறு சொல்லத் தெரியவில்லை. 

ரகுநாதன் நீங்களும் ஒரு சகோதரனை இழந்த மாவீரர் குடும்பம்.

இந்த நேரத்தில் நினைவலைகளில் பழைய எண்ணங்களெல்லாம் அலைமோதிக் கொண்டே இருக்கும்.

இந்நேரத்தில் உங்கள் தம்பிக்கும் வீர வணக்கங்கள்.

Posted

..... இவ்வாரம் தமிழ் வானொலிகளை திருகினால், இதயத்தை குற்றி ஊடுருவும் மண்ணின் மைந்தர்களின் பாடல்கள் ... வேலைக்குப் போகவும் மனமுமில்லை/போனாலும் வேலையும் ஓடவில்லை! ... எங்கே போவது? இரு பிரிவுகளாம்! ... பல பதிலில்லாக் கேள்விகள் .. இருநாள் ஓய்வை எடுத்து விட்டு,  இன்று EXCELL மண்டபத்துக்குப் போய் மலரஞ்சலி செலுத்தி விட்டு ... கனத்த மனத்துடன் வீடு திருப்புகையில், மீண்டும் பல பல கேள்விகள் ..

... அவர்கள் மண்ணுக்குள் புதைந்தது ... எம்மைப் பிரிவினைப் படுத்தவா?
... அவர்களின் தியாகங்கள், கனவுகள் மாவீர்நாட்களுடன் முற்றுப்பெறவா?
... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Nellaiyan said:

அவர்கள் மண்ணுக்குள் புதைந்தது ... எம்மைப் பிரிவினைப் படுத்தவா?
... அவர்களின் தியாகங்கள், கனவுகள் மாவீர்நாட்களுடன் முற்றுப்பெறவா?
... 

நெல்லையன் இது உங்களின் கேள்வியல்ல.உலகத் தமிழரின் கேள்வி.

பலருக்கும் இதே மாதிரி கேள்விகள் இருந்தாலும் வழி நடத்த ஒரு தலைவன் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரகுநாதன் நீங்களும் ஒரு சகோதரனை இழந்த மாவீரர் குடும்பம்.

இந்த நேரத்தில் நினைவலைகளில் பழைய எண்ணங்களெல்லாம் அலைமோதிக் கொண்டே இருக்கும்.

இந்நேரத்தில் உங்கள் தம்பிக்கும் வீர வணக்கங்கள்.

நன்றி ஈழப்பிரியன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனையோ... அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்,
தாயகத்தில் நடந்த மாவீரர் தின அஞ்சலிகளை பார்க்க... கண்கள் கலங்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின அஞ்சலி!

முல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்தோடு முல்லைத்தீவு கடற்கரை மாவீரர் அஞ்சலி மற்றும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/முல்லைத்தீவு-மாவீரர்-துய/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான ஈகை சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர் மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC0108.jpg

WhatsApp-Image-2018-11-27-at-21.26.44.jpeg

WhatsApp-Image-2018-11-27-at-21.26.41.jpeg

http://athavannews.com/793841-2/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.