Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் உண்டா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

அருமையான ஊரை.இணைப்புக்கு நன்றி.
நேரமுள்ளவர்கள் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கஸ்பர் உண்மையில் இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர்.
ஏனோ திமுகவில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் தோன்றியது வெறும் 400 ஆண்டுகள் தான் என்கிறார்.
இங்கிலாந்திலேயே பிரெஞ்சுமொழி தான் இருந்ததாக கூறுகிறார்.இதை யாராவது உறுதிப்படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளிகள் மிக நீளமாக இருக்கிறது... எனது கருத்து இத்திரியின் தலைப்புக்கு தொடர்புடைையதாக இருக்கும்...

கடவுள் இருக்கிறாரா என்றால், இருக்கிறார்... 

கடவுள் என்பது ஒரு தன்மை, உணர தான் முடியும், உணர்ந்து பருக முடியும்...

உதாரணத்திர்க்கு ஒருவனுக்கு தாகம் என்ற உணர்வே இல்லை என்று வைத்து கொள்வோம்... அவனிடம் சென்று எனக்கு தாகமாக இருக்கிறது என்பதை எப்படி சொல்லி புரிய வைக்க முடியும்...

அவனிடம் இந்த தண்ணிய குடி புரியும் என்றால், இதில் முட்டாள் யார்... தண்ணீர் குடுத்தவனே முட்டாள்... 

அவனுக்கு தாகம் வரும் வரை காத்திருப்பதை தவிறு வேறு வழி இல்லை...

  • தொடங்கியவர்

https://www.youtube.com/watch?v=S3ezqQ-xd4M

Edited by சண்டமாருதன்

  • தொடங்கியவர்
20 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த கஸ்பர் உண்மையில் இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர்.
ஏனோ திமுகவில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஐம்பதாண்டுகாலத்துக்கும் மேலாக  தமிழ்நாட்டு அரசியலை மக்கள் கடவுள் இல்லை என்ற கருவில் இருந்து வளர்ந்த திராவிடக் கட்சிகளிடமே கொடுத்துள்ளார்கள்.  ஆனால் வாக்களிக்கும் மக்கள் எல்லோரும்  கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கிடையாது. 

கடவுள் என்ற கருப்பொருளை வைத்து உண்டா இல்லையா என்ற கேள்வி பதில்கள் உலகில் ஏனைய மக்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவானதில்லை.  ஒரு கோணத்தில் அணுகினால் தமிழ்மொழியே தமிழர்களின் கடவுள் என்றும் சிந்திக்க முடியும் அவ்வளவு ஆழமாக மொழி கடவுள் சார்ந்து பிணைந்துள்ளது.  இந்திய மத்திய ஆட்சியாளர்கள் இன்றய காலத்தில் தமிழை திட்டமிட்டு அழிபதென்றில்லை அன்றய காலத்திலும் தமிழை நீச பசை என்று எவ்வளவு தூரம் தாள்த முடியுமோ அவ்வளவு தூரம் நசுக்கவே செய்தனர். 

நீண்டகாலமாக மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அவ்வாறே இங்கும் பல கருத்துக்கள் பதிந்துள்ளேன் ஆனால் அண்மைக்காலமாக இக்கருத்தில் இருந்து மாறுகின்றேன். எனைய மொழிகள் போல் தமிழ் சத்தமாக மட்டுமின்றி அது ஒரு பொருள் தாங்கிய மொழி என்று மேலே உள்ள காணொளியில் சொல்வது சார்ந்து சிநதிக்கின்றபோது தொடர்பாடல் கருவி என்ற வட்டத்திற்குள் நிற்க முடியாதுள்ளது..

மொழி கடவுள் சமயம் சாதி இனம் மதம் என்ற பல்வேறு தளங்களில் தத்தளிக்கின்ற போதும் மொழி சார்ந்தே தமிழர்களின் அரசியல் அடிப்படையில் வாழ்கின்றது அந்தவகையில் இந்த மொழி பெரியாரை பயன்படுத்தியது எனலாம்.  கருணாநிதி எம் ஜி ஆர் போன்றவர்கள் பெரியாரையும் மொழியையும் பயன்படுத்தினார்கள் எனலாம்.  இதனடிப்படையில் எதிர்காலத்தில் நேரடியாக மொழியை அடிப்படையாக வைத்து வளரும் நாம்தமிழர் சார்நது மக்கள் ஆதரவு மாற வாய்பிருக்கின்றது. 

  • தொடங்கியவர்
14 hours ago, மியாவ் said:

கடவுள் என்பது ஒரு தன்மை, உணர தான் முடியும், உணர்ந்து பருக முடியும்...

நீங்கள் சொல்லும் தன்மை என்பது Transcendence  and immanence என்ற கடவுள் குறிதத கருத்தியலில் immanence குறித்தது. அகநிலை சார்ந்தது. ஆனால் கடவுள் என்ற தமிழ்ச்சொல்லின் அர்த்தம் Transcendence and immanence என்ற முழுப்பொருளையும் குறிக்கின்றது. இதையே மேலே உள்ள காணொளியில் தமிழ் பொருள் சுமந்த மொழி என்பதற்கு உதாரணமாகத் தருகின்றார். இவர்கள் இன்று ஆராயும் எல்லாம் கடந்த நிலை மற்றும் கடந்து உள்ளே செல்லும் நிலை என்ற இரு நிலைகளையும் கொண்ட கருத்தியலையே ஒரு சொல் பொருளாக சுமந்துநிறகின்றது என்றால் இந்த மொழியின் கனதி எத்தகையது என்ற ஆச்சரியம் எழுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சண்டமாருதன் said:

விடயங்களை சொன்னால் மருத்துவ உதவி தேவைப்பட்டவர் என காண கூடும்...

எனக்கு தமிழில் பெரிய அளவில் பரிட்ச்சயம் கிடையாது, 

(மன்னிக்கவும் சொல்வதற்க்கு சரியான தருணமில்லை...)

என்னை மறந்த ஒரு தருணத்தில் ஆஃப்கானில் மிலிட்டரி போலிசால் கைகளை பின்னால் வைத்து விலங்கு போட்ட நிலையில் "என்னை வாழ வைத்த தமிழ் ம் ஹும் வாழ வைக்கும்  தமிழ்்   என்றேன்... 

யு நோ காட் ஆஃப் தி காட்?? என்றேன், 

யா எவ்ரிதிங் வில் கம் டு நோ ஷார்ட்லி என்று சற்று கிண்டலாக சொன்னார் ஒரு ராணுவ வீரர்...

மற்றொரு வீரர் மிக கிண்டலாக பல விடயங்களை செய்தார்... வேண்டுமென்றே Gaசை சத்்தமாக பிசுக்்கிினார்... 

பல விடயங்கள் நடந்தது...

பிறகு என்னை வேறு இடத்திற்க்கு கொண்டு சென்றனர்...         அங்்கு ஒரு லங்களவனை கண்டு, இங்க ஒரு லங்களவனும் இருக்க கூடாது என உரக்க சொன்்ன்்னேன்... 

சிறிது நேரம் கழித்து, என்னை கிண்டலடித்த ராணுவ வீரர் அந்த அறையில் பலர் இருக்கையில் சற்று தொலைவில் இருக்கையில் அமர்ந்தார்... எனது பார்வையை வலுகட்டாயமாக தவிர்த்து கொஞ்ச நேரம் உட்கார்நந்திருந்தார்... (அது யாரோ உத்தரவின் படி உட்ககார்ந்தது போலிருந்தது)

பிறகு பல விடயத்திற்கு பிறகு என்னை தமிழகத்திர்கு அனுப்பி வைத்து விட்டனர்... 

மேலே குறிப்பிட்டது தங்களால் ஏற்று கொள்ள கூடியவை...

மேலும் பல விடயங்கள் இன்று வரை பிரம்மிப்பூட்டும் வகையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது... 

--ஒன்று நான் பைத்திய காரனாக இருக்க வேண்டும் அல்லது சில விடயங்களை உணர்ந்தவனாக இருக்கலாம்...

நான் பைத்தியகாரனாக இருந்தால் அது என்னையும் என் குடும்பத்தை மட்டுமே பாதிக்கும்...

அப்படி இல்லை என்றால் என்னை சுற்றி நடப்பது உலக நாடுகளுக்கு தெரியாமல் இருக்க     வாய்ப்பிில்லலை பைத்்த்திய          காரன் என்ற வட்டத்திற்குள்ளிருந்து சற்று வெளியில் வந்து பார்த்தால் இங்கு சில நாய்கள், அப்படியும் தன்னுடைய மொழியை எந்த காரணமுமில்லாமல் திணிக்க முக்குகிறது... அந்த மொழியில் ஒரு மசுறும் இல்லை என்பது அந்த நாய்களுக்கும் தெரிந்தே தானிருக்கிறது...

எனது மாமாவை பற்றி ஒரு முறை இந்த களத்தில் வேறொரு திரியில் குறிப்பிட்டிருப்பேன்... அவரிடம் நான் பழக பழக அவருக்கு அடிமையாகவே என்பதை விட எனக்கு மிகப் பெரும் மரியாதை மிக்கவராகவே மாறிவிட்டார்... ஒருவன் மூலம் அவருக்கும் எனக்கும் சண்டை மூட்டி விடும் முயர்ச்சியில் களம் அமைந்திருந்தது... எவன் மூலம் களம் அமைந்ததோ அவனை அடிக்கும் களமாக மாறியது (நாான் மட்டும்)... 

என்மாமாவிர்க்கும் சில விடயங்கள் நடந்திருக்கலாம்... நாங்கள் அவ்வளவாக பேசிக் கொண்டது கிடையாது...

அதற்க்கான சந்தர்ப்பமும் அமையவில்லை... ஒரே ஒரு முறை வேறு சந்தேகத்தை போக்கும் கட்டாயத்தில் கை பேசியில் பேசினேன், சந்தேகத்தை தீர்த்து கொண்ட பிறகு, ஹேப்பி நியு இயர் மாமா, அதுக்கு தான் ஃபோன் பண்ணேன் என்றேன்... எனக்கு இன்னும் நியு இயர் வரலியே டே, என்றார்... 

பிறகு சண்டை அதன் பிறகு,   பேக் டு தமிிழ்நாடு...

Off the record...

இடை இடையில் என்னை நினைத்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sperm gfi à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

அந்த ஒரு துளி விந்துவால் உருவாகிய மனிதனா இப்படி சிந்திக்கின்றான்?

ஓ மை காட்....... ஐ மீன் என்ரை கடவுளே...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கா இல்லையா இருக்கட்டும்.. நம்ம சூரியன் கூட.. இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு நிலையான இடத்தில் இல்லை. இந்த உண்மை தெரியுமா.. ?!  ஆக மொத்தத்தில்.. நம்ம இருப்பே நிரந்தரமில்லை.. இதில.. கடவுளை... தேடிக்கிட்டு. 😂

Related image

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

கடவுள் இருக்கா இல்லையா இருக்கட்டும்.. நம்ம சூரியன் கூட.. இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு நிலையான இடத்தில் இல்லை. இந்த உண்மை தெரியுமா.. ?!  ஆக மொத்தத்தில்.. நம்ம இருப்பே நிரந்தரமில்லை.. இதில.. கடவுளை... தேடிக்கிட்டு. 😂

Related image

இருப்பு நிரந்தரமல்ல,

சுவடுகள்???

திரும்பி பார்க்க ஒன்னும் இல்லையென்றால், கடவுளென்ன, பிரபஞ்சமென்ன  எல்லாமும் சூன்யமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, மியாவ் said:

இருப்பு நிரந்தரமல்ல,

சுவடுகள்???

திரும்பி பார்க்க ஒன்னும் இல்லையென்றால், கடவுளென்ன, பிரபஞ்சமென்ன  எல்லாமும் சூன்யமே...

அந்த சூன்யம்தான் கடவுள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அந்த சூன்யம்தான் கடவுள்.

அந்த சூன்யத்திர்க்கும் நிறை பொருளுள்ளதென்று விஞ்ஞான உலகம் தேடலை துடங்கியுள்ளது...

நிறை பொருளென்று ஏதுமில்லையென்று விஞ்ஞான உலகம் பல வருடங்களாக தேடலை முடக்கி வைத்திருந்தது...

பிறகு ஜப்பான் மற்றும் கனடா விஞ்ஞானிகள் இருவரின் கூட்டு முயர்ச்சியால் அந்த முடிவு உடைத்தெரியபட்டு விஞ்ஞான உலகம் புத்துயிர் பெற்றதாக கேள்வி...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அந்த சூன்யம்தான் கடவுள்.

இது விவாத போக்கினுள்ள தங்களின் கருத்து...

கடவுள்,

தங்களின் நிலையென்ன???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, மியாவ் said:

இது விவாத போக்கினுள்ள தங்களின் கருத்து...

கடவுள்,

தங்களின் நிலையென்ன???

கடவுள் பற்றிய எனது நிலை மிகவும் சிறியது.
அது ஒரு புறமிருக்க.... எல்லோரையும் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு  இவ்வளவு  சிறப்புகளும் மரியாதைகளும் ஏன் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கடவுள் பற்றிய எனது நிலை மிகவும் சிறியது.
அது ஒரு புறமிருக்க.... எல்லோரையும் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு  இவ்வளவு  சிறப்புகளும் மரியாதைகளும் ஏன் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?

வென்றவர்கள்...

_______________________________________

ராமன் சூத்திரன், தன்னை நாயகனாகவும் ராவணனை அரக்கனாகவும் இதிகாசத்தில் இடம்பெறச் செய்தது அவனது வெற்றி...

-----------------------------------------------------------------

தனது இனத்திற்காக கால ஓட்டத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு இடம் பெயர்ந்ததில் அவர்களுக்கு கிடைத்த இடம் தான் அது...

_______________________________________

ஒருவன் பேருந்திற்காக பல மணி நேரம் காத்திருக்கிறான் பேருந்து வரவில்லை, ஒருவன் வந்த உடன் பேருந்து வந்து விடுகிறது, சீக்கரமாக வந்தவனுக்கும், தாமதமாக வந்தவனுக்கும் பேருந்தில் ஒரே இடம், ஒரே நேரத்தில் தான் பயணமும்... இதில் யாரை எனனனென்னவென்று அழைப்பது... ஒருவன் துரதிர்ஷ்டகாரன் மற்றவன் அதிர்ஷ்டகாரனா... அல்லது ஓட்டுனரிிின் கையிில் அவர்களது  பிரயாாண விதி சிக்குண்டு கிடந்ததா...

_______________________________________

ஐம்பது ஆண்டுகள் கழிந்த பிறகு இதே காணொளியை போட்டு இதே கேள்வியை உங்களால் கேட்க முடியுமா... 

  • தொடங்கியவர்

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/19/2018 at 5:27 AM, மியாவ் said:

வென்றவர்கள் சரித்திரம் என்றால்.....நான் இணைத்த காணொலியில் வந்தவரும் சரித்திரத்தில்  இணைந்து விடுவார். எனவே கேள்விகள் நூறு வருடங்கள்  சென்ற பின்னரும் கேட்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/18/2018 at 7:22 AM, மியாவ் said:

இது விவாத போக்கினுள்ள தங்களின் கருத்து...

கடவுள்,

தங்களின் நிலையென்ன???

கடவுள் பற்றி பெரிதாக ஒன்றுமே சொல்லத்தேவையில்லை.
ஆறறிவு படைத்த மனிதப்பிறவிகளான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஒரு எல்லையை தாண்டமுடியாமல் இருக்கும் போதுதான் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுள் என்பவனை  தேடுகின்றார்கள்.

கடவுள் பற்றி ஆலபேட் ஐன்ஸ்ரைனின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பாருங்கள். 

The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish.

- Albert Einstein

ஐன்ஸ்ரைன் கூறியது பைபிளை பற்றி மட்டும் ஆனால் நமது புராணங்களும் இதிகாசங்களும் அதை விடபெரிய புரட்டுக்களும் முட்டாள்த்தனங்களும் நிறைந்தவை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கடவுள் பற்றி பெரிதாக ஒன்றுமே சொல்லத்தேவையில்லை.
ஆறறிவு படைத்த மனிதப்பிறவிகளான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஒரு எல்லையை தாண்டமுடியாமல் இருக்கும் போதுதான் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுள் என்பவனை  தேடுகின்றார்கள்.

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ??  

கடவுள் ஆணா? எப்படி கண்டு பிடித்தீர்கள்? உங்களுக்கு மட்டும் தெரியப்படுத்தினாரா? 

6 minutes ago, tulpen said:

கடவுள் பற்றி ஆலபேட் ஐன்ஸ்ரைனின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பாருங்கள். 

The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரது மனதை பொறுத்தது. நம்பியவர்களுக்கு அது அரும‌ருந்து. அது அவர்கள் நம்பிக்கை. 

நான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என முழுமனதாக நம்புகின்றேன்.

வாழ்க்கையில் நிறைய ஏன் இப்படி நடக்கின்றது? என்பதற்கு பதிலில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 கடவுள் என்பவனை  தேடுகின்றார்கள்.

1 hour ago, colomban said:

நான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என முழுமனதாக நம்புகின்றேன்.

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.