Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செக்ஸ் எகனாமி! - உலகை புரட்டிப் போடும் புதிய பொருளாதாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் எகனாமி! - உலகை புரட்டிப் போடும் புதிய பொருளாதாரம்
 
* பத்திரிகை ஆசிரியர் ஒருவர், நிருபரை அழைத்து செக்ஸ் வலைதளங்கள் குறித்து புலனாய்வு செய்து கட்டுரை எழுதச் சொன்னார்.

ஆறு மாதம் போர்னோ வலைதளங்களைப் பற்றியும் அவர்கள் எப்படி பணம் ஈட்டுகிறார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்த அந்த நிருபர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது ஓர் ஆண்டு அவர் சம்பாதிக்கும் பணத்தை ஒரே வாரத்தில் போர்னோ வலைதளங்கள் ஈட்டிவிடுகின்றன! அவ்வளவுதான். கட்டுரை கொடுப்பதற்கு பதில் தன் ராஜினாமாவைக் கொடுத்தார். முழுநேர போர்னோ வலைதளத்தை தொடங்கிவிட்டார்! இப்போது கலிபோர்னியாவில் மிகப் பெரிய மூன்று மேன்ஷன்களுக்கு அவர் சொந்தக்காரர்! ஒவ்வொன்றும் பல மில்லியன் டாலர்கள் விலைபோகும்!

3.jpgசத்தியமாக இது கற்பனை அல்ல. நிஜம்! ஸ்மார்ட் போன், குறைந்த விலையில் 4ஜி வந்தபின் உலகம் முழுவதும் இணைய செக்ஸ் தளங்களின் வருமானம் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் சினிமாத் துறைக்கு நிகராக போர்னோ திரைப்படங்களின் துறை வளர்ந்துள்ளது. அமெரிக்காவில் மிகப் பிரபலமான போர்னோ பட நடிகை ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். 

உலகம் முழுவதும் ஒரு வருடத்துக்கு குத்துமதிப்பாக 300 மில்லியன் டாலர்கள் வரை இத்துறையில் புரள்கிறது. வலைதளங்களின் வழியேதான் இவர்கள் முதலில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இன்று ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், மெசன்ஜர், ஸ்கைப், டேட்டிங் செயலிகள்... என ஆக்டோபஸ் ஆக விரிந்திருக்கிறார்கள்! இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நொடியில் கூட இந்தியாவில் பலர் தங்கள் ஸ்மார்ட் போனில் ‘பிட்டு’ பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம். ஏனெனில் இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 51% பேர் பாலியல் வீடியோக்களை மட்டுமே பார்ப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது.

எல்லாம் சரி... இதன் வழியாக எப்படி சம்பாதிக்கிறார்கள்? செக்ஸ் படங்களும் வீடியோக்களும் கொண்ட வலைதளங்கள் இன்று பெருகிவிட்டன. அதாவது இணையத்தில் இன்றிருக்கும் ஒரு மில்லியன் வலைதளத்தில் 30% ஆபாச தளங்கள்தான்! இணையப் பயன்பாட்டிலும் சுமார் 50% போர்னோ பயன்பாடுதான்!  இந்த வலைதளங்களில் இலவசமாக சிறுசிறு வீடியோக்களை பதிவேற்றி வைத்திருப்பார்கள். இதைப் பார்த்து தூண்டப்படுபவர்கள் முழு வீடியோவையும் பார்க்க விரும்புவார்கள். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்!  
3a.jpg

அதாவது ஒரு வீடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய அல்லது மாதச் சந்தா செலுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள். அஸ்கு புஸ்கு. இலவச வீடியோக்களைத்தானே நாங்கள் பார்க்கிறோம் என்கிறீர்களா? நல்லது. அப்படி பார்க்கும் வீடியோவில் நடு நடுவே விளம்பரம் வருகிறதல்லவா..? இதன் வழியாக அத்தளம் பணம் சம்பாதிக்கிறது. இப்படி விளம்பரம் கொடுக்க பலத்த போட்டி நடக்கிறது பாஸ்! எந்தவொரு போர்னோ வலைதளத்தை திறந்தாலும் ‘பாப்-அப்’ முறையில் பத்து பக்கங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். இவை எல்லாம் விளம்பரங்கள்தான். குளிக்கும் சோப்பு முதல் கார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வரை இதில் இடம்பெறுகின்றன என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

3c.jpg

யெஸ். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல, ஆபாச வலைதளங்களில் விளம்பரம் செய்யவும் பன்னாட்டு நிறுவனங்கள் கணிசமான தொகையை ஒதுக்குகின்றன. ஏனெனில் இதற்குத்தான் பார்வையாளர்கள் அதிகம் என்பது அந்நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும்! அடுத்து லைவ் ஸ்ட்ரீமிங். ஏற்கனவே காட்சியாக எடுத்து வைத்த படங்கள் இப்போது போர்னோ ரசிகர்களுக்கு சலித்துவிட்டன. எனவே, டிஜிட்டல் டெக்னாலஜி உதவியுடன் லைவ்வாக காட்சிகளைப் பார்க்க பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

ஒரு பெண் தனியாக அல்லது தன் இணையுடன் நடத்தும் அந்தரங்க செயல்கள் அனைத்தும் லைவ்வாக நகரும். அவர்களது அைனத்து நடவடிக்கைகளையும் செயல்களையும் இன்ச் பை இன்ச்சாக இருந்த இடத்தில் இருந்தே லைவ் ஸ்ட்ரீமிங் வழியே பார்த்து ரசிக்கலாம்.இப்போது ஹாட் ஆக இருக்கும் இதுதான் மிகப்பெரிய சந்தையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பணம் கட்டிவிட்டால் போதும். நபர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், செக்‌ஷுவல் ஆக்டிவிட்டி? 
3d.jpg

அது தொடரும். மட்டுமல்ல... அதிகப் பணம் செலுத்தினால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திரையில் அவர்கள் உறவு கொள்வார்கள்! ஏற்கனவே ஷூட் செய்த படங்களைவிட இந்த மாதிரியான லைவ் ஸ்ட்ரீம் வீடியோக்களுக்குத்தான் இப்போது ஏக டிமாண்ட்! மூன்றாவதாக, லைவ் ஸ்ட்ரீமிங்கை அப்படியே appக்கு பொருத்துவது. நம் வாட்ஸ்அப் முதல் மெசன்ஜர் வரை தகவல் தொடர்புக்கு பயன்படும் செயலிகளில் (app) படங்களாக அல்லது வீடியோ கால்களாக செக்ஸ் காட்சிகள் வந்து கொண்டே இருக்கும். ம்ஹும். இலவசமாக அல்ல. பணத்துக்கு! எவ்வளவு தொகை செலுத்துகிறோமோ அதற்கு ஏற்ப படங்களும் வீடியோ காட்சிகளும் வரும். அதாவது 7 செகண்ட் காட்சிக்கு ஒரு தொகை. 5 நிமிட காட்சிகளுக்கு ஒரு தொகை! 

ஒரே படம் அல்லது ஒரே வீடியோ துணுக்கை பலருக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கிறார்கள். ஒன்று தெரியுமா..? டிக்டாக் app, ஒரு காலத்தில் போர்னோ காட்சிகள் குவிந்திருந்ததால் தடை செய்யப்பட்ட செயலிதான்! பல கட்டுப்பாடுகளுடன் இப்போது அந்த செயலி சந்தைக்கு வந்திருக்கிறது! ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நம் கையில் இருப்பது ஸ்மார்ட் போன் அல்ல. பாலியல் உறுப்பு!                             

- வினோத் ஆறுமுகம்

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14845&id1=4&issue=20190201

450 பேருக்கு மேல் இந்த திரியை வாசித்தும் கம் என்று இருக்கினம் (நானும் தேன்)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தியை வாசித்தபின் நானும் இப்படி ஒரு இணையத்தளத்தினை ஆரம்பிக்காலாமோ எனத்தோன்றுகிறது. நாய் சம்பாதித்த காசு குரைக்கவா போகிறது.யாழ் களத்தில் யாராவது இணையத்தளம் ஆரம்பிப்பது அதை வழிநடாத்துவது அதாவது வர்க்தக ரீதியில் இருந்தால் என்னுடன் தொடர்புகொள்ளவும் முதலில் கொஞ்சம் பிட்டுப்படங்களைக் காட்சிப்படுத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

450 பேருக்கு மேல் இந்த திரியை வாசித்தும் கம் என்று இருக்கினம் (நானும் தேன்)

இங்கே எழுதி மினக்கெடுவதை விட இணையத்தளத்தை உருவாக்கலாம் என்று ரொம்ப பிசியாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இந்தச்செய்தியை வாசித்தபின் நானும் இப்படி ஒரு இணையத்தளத்தினை ஆரம்பிக்காலாமோ எனத்தோன்றுகிறது. நாய் சம்பாதித்த காசு குரைக்கவா போகிறது.யாழ் களத்தில் யாராவது இணையத்தளம் ஆரம்பிப்பது அதை வழிநடாத்துவது அதாவது வர்க்தக ரீதியில் இருந்தால் என்னுடன் தொடர்புகொள்ளவும் முதலில் கொஞ்சம் பிட்டுப்படங்களைக் காட்சிப்படுத்துவோம்.

நான் பாத்ரூமுக்குள  குளிக்கேக்க எடுத்த செல்பியை போடலாமே எண்டு யோசிச்சு வையுங்கோ.... வைன் கிளாஸை நிரப்பிக்  கொண்டோடி வாறன் ...
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் வாசித்ததை பகிர்கிறேன். கட்டுரையாளர் அறுமுகத்தார்  விசயம் கணக்க தெரியாமல் மேலோட்டமா கதை சொல்லி இருக்கிறார்.

தளங்களை உருவாக்கி நடத்துவது, படங்கள் ஏத்துவது எல்லாம் இலகுவானது தான். ஆனால் சந்தைப்படுத்துவது அவ்வாறு இல்லை. சில நாடுகளில் நேரடியாக தடை.

அவர்களது தளங்கள் இயங்குவது தடை இல்லாத நாடுகளில், பெரும்பாலும், அரசியல்வாதிகளை கையில் போட்டுக் கொண்டு தான்  இயங்குவார்கள். வரும் பணம் அந்த நாட்டில் தான் process  ஆகும். 

இந்த மாதிரி தளங்கள் இயங்குவது அமேசான் முறையில்.... அவர்கள் தளத்தில் யாரும் விடியோவை போடலாம்.... viewers பார்பதற்கு அமைய பணம் வரும்.

நீலப் படங்கள் எனப்படும் அந்த மாதிரி படங்களில், பணத்தை வாங்கிக் கொண்டு கட்டிலில் நடிப்பதில் பணம் கொட்டுவது இல்லை. 

கமரா கண்கள் தங்களை கண்காணிப்பது தெரியாமல் அறையில் நடந்து கொள்வதை, (innocent) காட்டுவதே பணம் கொட்டுகிறதாம்.

நடிகை திரிசா , தங்கி இருந்த ஹோட்டலில், பாத்ரூமில் கமராவை வைத்து, அதை பதிவு ஏற்றி, ஒரு சிறிய பகுதியை அந்த மாதிரி தளங்களில் விளம்பரமாக காட்டி,  அதை வைத்து, தமது தளத்துக்கு வர வைத்து பணம் பார்த்தது ஒரு கோஸ்ட்டி.

திரிஷா, அது நான் இல்லை, மார்பிங் என்று (வேறு வழி இல்லை, பாவம்) ஒதுங்கிக் கொள்ள, இந்த கொடூரர்கள் தப்பித்தார்கள்.

இப்ப நடிகைகள், சில முகவர்களை வைத்து, தாம் தங்கப் போகும் ஹோட்டல் ரூமை செக் பண்ணுகிறார்கள்.

முன்னர், கவர்ச்சி காரமான ஆணை வைத்து, பெண்களை காதலிக்க வைத்து, தென் இந்தியாவில் இருந்து, கிளப்பி, பம்பையில் சிவப்பு விளக்கு பகுதிக்கு கொண்டு போவார்கள்.

இப்போது அப்படி மினக்கெடுவதில்லை. அப்பாவி பெண்ணுடன் உறவு கொள்வதை, அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து இந்த வகை தளங்களில் ஏத்தி விடுகிறார்கள். அதுக்கு பார்வையாளர்கள் கொடுப்பது மிக மிக அதிக கட்டணம்.

வீட்டில் ஒரு ரூமை வாடகைக்கு கொடுத்து இருந்தால், அந்த வாடகை காரருடன் முரண்பாடா? பாத்ரூம் போகும் போது கவனம்..... கமரா படம் பிடித்து, இந்த வகை தளத்தில் ஏறிவிடும், அந்த வாடகைக்கு குடியிருப்பாளார் அயோக்கியனாக இருந்தால்... 

உண்மையில் இது ஒரு இருண்ட  பகுதி. பாதிக்கப் பட்ட பெண்ணோ, ஆணோ, அவர்களா அங்கே போய் பார்த்தால் அன்றி, அவர்களுக்கு தாம் ஒரு காட்சி பொருள் என்று தெரியாது. அதேவேளை அங்கே போனவர்களும் வாய் திறக்க மாட்டார்கள், தாம் பார்த்ததாக.

முறைப்பாடு செய்தால் அன்றி, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. முறைப்பாடு செய்யாவிடில், பணத்துக்காக இவர்கள் நடித்ததாகவே கருதப்படும்.

இதுவே, சட்டத்தின் கண்களில் அவர்கள் தப்பிவிட உதவுகிறது.

அண்மையில் பெங்களூரில் ஒரு பெண்... tiktalk இல் பெரிய ரசிகர் வட் டம். அவரது முகத்தினை, வேறு ஒரு நிர்வாணப் பெண்ணின் படத்தில் ஒட்டி (எல்லாம் அழகாக செய்வார்கள்) இந்த மாதிரி தளத்தில் போட்டு விட்டார்கள்.

யாரோ ஒருவர், அதை screenshot எடுத்து இவருக்கு அனுப்பிவிட, அவர் அதிர்ந்து போய் , போலீசுக்கு போய் இருக்கிறார்.

அவர்களோ, உடல் பகுதி உன்னுடையது இல்லை என்றால், இதில் நேரத்தை விரயம் செய்யாதே என்று அட்வைஸ் பண்ண, அவர் இணையத்தை விட்டு வெளியேறி விட்டார்.

ஆனால்  அந்த தளத்தில் இன்னும் இருக்கும்.

இது ஒரு சிக்கலான பிரச்சனை ..... நாம் பாதிக்கப் பட்டு இருக்கிறோமா என்று நமக்கே தெரியாது. உதாரணமாக நம்ம குமாரசாமியார் சிவனே என்று தேவார திருவாசகத்தை பாடிக்  இருக்க, அவர் முகத்தோட ஒருத்தர், நயனதாரா முகத்தோட மார்பிங் செய்யப்பட்ட இன்னோர் பெண்ணுடன், கட்டிலில் இருப்பார்.

என்னத்தை சொலவ்து.

(இன்னோரு கிளாஸ் நிரப்பிக் கொண்டோடி வாறன்  பொறுங்கோ)
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

அந்தமாதிரி  பிரிச்சு  மேய்ஞ்சு  ஆராய்ஞ்சிருக்கான்யா...😊

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னுமோர் விசயம் revenge porn என்பது.

அதாவது, கணவன், மனைவி, சந்தோசமாக இருக்கும் போது.... தாங்கள் அறையில் நடந்து கொள்வதை படம் பிடிப்பது.... பின்னர் மணமுறிவு உண்டானதும், ஒருவரை அடுத்தவர் பழி  வாங்க இந்த மாதிரி தளங்களில் பதிவு ஏத்துவது.

இதுவேதான் காதலர், காதலிக்கும் இடையே.... ஒருத்தரை ஒருத்தர் வெட்டி விட்டால், தாங்கள் தனிமையில் இருந்த படங்களை பதிவு ஏத்துவது.  

இது 2015 முதல் பிரிட்டனில், கனடாவில், அமெரிக்காவில் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம். ஆனாலும், அந்த படங்கள் அங்கே உள்ளன என சம்பந்தபட்டவருக்கு தெரிய வரும் சந்தர்ப்பங்கள் குறைவு என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.

அதுதான்... ஆட்களை வைத்து எடுக்கும் போது.... பணக் கொடுக்கல் வாங்கல்களினால், காட்டிக் கொடுக்கப் பட்டு மாட்டுப் படும் சந்தர்ப்பங்கள் கூட.

அதேவேளை, ரகசிய கமரா.... யார் எடுத்தார், எங்கே என்பது யாருக்கும் தெரியாது. எடுப்பவர்களுக்கு, background மாத்திவிடுவதால்.... இது எங்கே எடுக்கப் பட்டது .... நாம் தானோ என குழப்ப மடைவார்கள். அத்துடன் இவ்வகை வீடியோக்களுக்கே டிமாண்ட் அதிகம் என்பதால்..... 

ம்... நாம தான் ஹோட்டலுக்கு போனால் கவனமாக இருக்க வேண்டும்..... லபக்கென்று நித்தா கொள்ள வேண்டியது தான்...

சில வருடங்களுக்கு முன்னர் நடிகை சோனியா அகர்வால், (இவர் மன்மதராசா தனுஷ் அண்ணன் செல்வராகவனை திருமணம் செய்தவர்) இனது  நிர்வாண படம் இணையத்தில் வந்துள்ளதாக தமிழக மீடியாக்கள் தெரிவித்தன. 

அது தலை மட்டும் மாத்தப் பட்ட படம் என்று பிறகு சொன்னார்கள்.

ஆயினும், சுசி லீக்ஸ் கசிந்த போது, நடிகை ஆண்ட்ரியா, தனது அந்தரங்க படங்கள் சில செல்வராகவானால் எடுக்கப்பட்டதாகவும், அவை அழிக்கப் பட வேண்டும் என கோரியிருந்தார். இது தொடர்பில் அவர் அனுப்பிய ஈமெயில் கூட வெளியே வந்திருந்தது.

இதுக்கும் சோனியா படத்துக்கும் முடிச்சு போட்டு அப்ப, அது ஒரிஜினல் தான் என்று கிளப்பினார்கள்.

தமிழ் நாட்டில் இந்த சம்பாத்தியத்தில் ருசி கண்ட, டாக்டர் பிரகாஷ் என்பவர், இது போல படங்கள் எடுத்து, மாட்டி சிறை சென்றார்.  

இதில இன்னுமோர் மிக, மிக மோசமான வகை குழந்தைகள் படங்கள். (இதனை ஆங்கிலத்தில் போடுவதே பிரச்னை).

இது மிக ரகசிய வலையமைப்பு ஊடாக பகிர்கிறார்கள். குழந்தைகள் ஒருபோதுமே இதற்கு இணங்குவது  இல்லை என்பதால், அதிகாரிகளும் கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறார்கள். பல அதிகாரிகள், சட்ட  ரீதியாக, தாமே அந்த படங்களை விட்டு, யாரு வாங்கி மாட்டுகிறார்கள்..... யார் யாருக்கு பகிக்கிறார்கள் என்று பொறி வைத்து இவர்களை பிடிக்கிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கணனியில் படம் நாடகம் ஏதாவது பார்க்க அழுத்தும் போதும் தானாகவே வந்து தொலைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கணனியில் படம் நாடகம் ஏதாவது பார்க்க அழுத்தும் போதும் தானாகவே வந்து தொலைக்கிறது.

Filter பண்ணுங்கோ..... 

இந்த மாதிரி படங்கள் pop  up ஆவதை தடுப்பது எப்படி என்று கூகிளிடம்  கேளுங்கோ ..... 

விலாவரியாக சொல்வார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

(இன்னோரு கிளாஸ் நிரப்பிக் கொண்டோடி வாறன்  பொறுங்கோ)
 
கிளாஸ் நிரப்ப இவ்ளோ நேரமா தல?!!!

2 hours ago, ஈழப்பிரியன் said:

இதில ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கணனியில் படம் நாடகம் ஏதாவது பார்க்க அழுத்தும் போதும் தானாகவே வந்து தொலைக்கிறது.

நம்பீட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்லவேணும் ஸ்மார்ட் போன்களில் கணவன் மனைவியோ, காதலன் காதலியோ (கள்ள) தமது உறவு நேரத்தில் எடுத்த வீடியோவை பார்த்துவிட்டு அழித்து விட்டோம் என்றிருப்பார்கள்.

ஆனால் போனில் பழுது/ பற்றி மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு திருத்தும் இடத்தில் வழங்கும் போது அவர்கள் றிகவரி மென்பொருள் மூலம் வீடியோக்கள் படங்களை எடுத்து இணையத்தளங்களுக்கு வழங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கிளாஸ் நிரப்ப இவ்ளோ நேரமா தல?!!!

நிரப்பிக் கொண்டு வந்து தானே, உங்க குரு - சிஷ்யன் கதைக்கு பதிலைப் போட்டேன்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இதில இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்லவேணும் ஸ்மார்ட் போன்களில் கணவன் மனைவியோ, காதலன் காதலியோ (கள்ள) தமது உறவு நேரத்தில் எடுத்த வீடியோவை பார்த்துவிட்டு அழித்து விட்டோம் என்றிருப்பார்கள்.

ஆனால் போனில் பழுது/ பற்றி மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு திருத்தும் இடத்தில் வழங்கும் போது அவர்கள் றிகவரி மென்பொருள் மூலம் வீடியோக்கள் படங்களை எடுத்து இணையத்தளங்களுக்கு வழங்குகிறார்கள்.

அதுக்கு ரிப்பேர் பண்ண கொடுக்க வேண்டியதில்லை. வேறு விசயமா தருவதாக சொல்லி ஆப்ஸ் இலவசமாக தந்து, வீடியோக்களை, படங்களை உருவுவது....

இப்படி தான் பல அங்கே தளமேருகிறது. நல்ல பணம் கிடைப்பதால், உருவுற ஆப்ஸ் எழுதுகின்றனர். 

இங்கேதான் சட்ட  சிக்கல் உருவாகின்றது. தமது படம் அத்தகைய இணைய தளத்தில் இருக்கிறது என தெரிந்தால், ... சிக்கலோ சிக்கல்... அவர்கள் தாமே எடுத்த படம்.... எவ்வாறு அங்கே போனது என்று தெரியாமல் தடுமாறுவார்கள். 

கணவன் ஆயின், மனைவியையும், மனைவி ஆயின் கணவனையும் சந்தேகிப்பார்....

அல்லது அதை வெளியே சொல்லி பிரச்சனை ஆக்காமல் , சரி பார்த்துட்டு போகட்டுக்கே என்று அமுசடகமாய் இருந்து விடுவார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்த பிறகு ஹொட்டல்களில் போய் தங்கவே பயமாயிருக்கு 😪

10 hours ago, ரதி said:

இதை வாசித்த பிறகு ஹொட்டல்களில் போய் தங்கவே பயமாயிருக்கு 😪

பெண்களை தாயாக பார்கிறோம்.  தெய்வமாக மதிக்கிறோம்  என்று அளவுக்கு அதிகமாக பீலா விடும் நாடுகளில் மிக அவதானமான இருங்கள். அங்கு தான் ஆபத்து மிக மிக அதிகம். சக தோழியாக மதிக்கும் நாடுகளில் ஆபத்து குறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

பெண்களை தாயாக பார்கிறோம்.  தெய்வமாக மதிக்கிறோம்  என்று அளவுக்கு அதிகமாக பீலா விடும் நாடுகளில் மிக அவதானமான இருங்கள். அங்கு தான் ஆபத்து மிக மிக அதிகம். சக தோழியாக மதிக்கும் நாடுகளில் ஆபத்து குறைவு. 

இந்த விசயத்தில் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

சக தோழியாக மதிக்கும் நாடுகளில் ஆபத்து குறைவு.

ஏனெனில், ஏதோ ஓர் காரணத்திற்காக தோழி மீது தோழனுக்கோ அல்லது மறுவளமாகவோ ஆசை வந்தால் தோழனை தோழியோ அல்லது தோழியை தோழனோ தனது ஆசை தெரிவித்து மற்றவரின் காதல், காமம், கலவி பற்றிய எண்ணத்தை வெளிப்படையாக கேட்காலம்.

இது மேலை நாடுகளில் சர்வ சாதாரணம்.

அண்ணல் ஆசை எப்போது வரும் என்று சொல்வது மிகவும் கடினம்.

On 2/10/2019 at 5:06 PM, ஏராளன் said:

இதில இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்லவேணும் ஸ்மார்ட் போன்களில் கணவன் மனைவியோ, காதலன் காதலியோ (கள்ள) தமது உறவு நேரத்தில் எடுத்த வீடியோவை பார்த்துவிட்டு அழித்து விட்டோம் என்றிருப்பார்கள்.

ஆனால் போனில் பழுது/ பற்றி மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு திருத்தும் இடத்தில் வழங்கும் போது அவர்கள் றிகவரி மென்பொருள் மூலம் வீடியோக்கள் படங்களை எடுத்து இணையத்தளங்களுக்கு வழங்குகிறார்கள்.

இது பழைய முறை.

இப்பொது மொபைல் போன், laptop, PC, tablet, வீடுகளுக்கு உள் இருக்கும் cctv camera    ஐ hack  பண்ணுவது நடக்கிறது.  

IoT (உ.ம். தானாக இயங்கும் vaccum cleaner இல் கேமரா இருக்கிறது), 5G பாவனை பரந்தளவில் பெருகும் போது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும்

அதனால்,  நீங்கள் பாவிக்கும் PC, laptop, tablet இல் camera இ பவித்தவு முடிந்தவுடன் disable பண்ணிவிடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

தனால்,  நீங்கள் பாவிக்கும் PC, laptop, tablet இல் camera இ பவித்தவு முடிந்தவுடன் disable பண்ணிவிடுங்கள்.

Hackers உள்ளே நுழைந்தால் கமெராவை  வேலை செய்யப் பண்ணலாம்தானே!

அடிப்படையான இணையப்பாதுகாப்பு இருந்தாலே பலவிடயங்களைத் தவிர்க்கலாம். 

Firewall , up to date anti-virus கட்டாயம் தேவை. நாடகம் பார்க்கப் போகும் திருட்டு இணையத்தளங்கள் மூலம் வரும் spyware எல்லாவற்றையும் திருடிக்கொண்டுபோகும் என்று அவதானமாக இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி செகசோதியா எரியுது😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

Hackers உள்ளே நுழைந்தால் கமெராவை  வேலை செய்யப் பண்ணலாம்தானே! 

அடிப்படையான இணையப்பாதுகாப்பு இருந்தாலே பலவிடயங்களைத் தவிர்க்கலாம். 

Firewall , up to date anti-virus கட்டாயம் தேவை. நாடகம் பார்க்கப் போகும் திருட்டு இணையத்தளங்கள் மூலம் வரும் spyware எல்லாவற்றையும் திருடிக்கொண்டுபோகும் என்று அவதானமாக இருந்தால் போதும்.

நீங்கள் சொல்லும் best practice நிச்சயமாக இருக்கவேண்டும்.

ஆனாலும், உள்ளே நுழைய எத்தனிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான (Script Kiddies) hacking.

அதனால் தான், இலத்திரனியல் இணைய வலையில் தொடுத்திருக்கும் camera உள்ள கருவிகளை பாவித்து முடித்தவுடன் அதில் உள்ள கேமராவின் கண்களை மறைத்து விட வேண்டும் என்பது.

உதாரணம், லேப்டாப் ஐ முற்றாக மூடி விடுவதும், முற்றாக மின்னிணைப்பில் இருந்து துண்டிப்பதும் . எல்லோராலும் செய்யக் கூடியது.

ஓர் கோணத்தில், இவையும் best practice தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Kadancha said:

நீங்கள் சொல்லும் best practice நிச்சயமாக இருக்கவேண்டும்.

ஆனாலும், உள்ளே நுழைய எத்தனிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான (Script Kiddies) hacking.

அதனால் தான், இலத்திரனியல் இணைய வலையில் தொடுத்திருக்கும் camera உள்ள கருவிகளை பாவித்து முடித்தவுடன் அதில் உள்ள கேமராவின் கண்களை மறைத்து விட வேண்டும் என்பது.

உதாரணம், லேப்டாப் ஐ முற்றாக மூடி விடுவதும், முற்றாக மின்னிணைப்பில் இருந்து துண்டிப்பதும் . எல்லோராலும் செய்யக் கூடியது.

ஓர் கோணத்தில், இவையும் best practice தானே.

   எங்கடை பொம்புளையள் பாவிக்கிற ஸ்ரிக்கர் பொட்டு ஒன்றை கமராவுக்கு மேலை ஒட்டிவிட்டால் பயப்பிடத்தேவையில்லை...😀

RED sticker Bindi à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தளத்தில் நாம் விவாதித்ததின் தொடர்பானதே, பொள்ளாச்சி சம்பவம் 😓🤑

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.