Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தோழியை பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்.!

Featured Replies

6 minutes ago, Nathamuni said:

இவ்வளவு முயன்றும், நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியவில்லை என்றே தோன்றுகிறது.

திரும்பவும் சொல்கிறேன். 

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பெண்ணுக்கு, ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். அவர் விலைமாதுவாக இருந்தாலும் கூட.... பாதுகாப்பானதா என்று தான் முதலில் கணக்கு எடுப்பார், பணத்துக்கு முதல்.

ஒரு இடம் பாதுகாப்பானதா நாம் இங்கே நீண்ட நேரம் இருக்கலாமா, தண்ணி அடிப்பதனால் எனது limit எது என்று தெரியாவிட்டால்..... அங்கே ஏன் அவ்வளவு நேரம் இருக்க வேண்டும். காரணம் என்ன?

அந்த எச்சரிக்கை உணர்வு அற்ற அப்பாவி பெண்ணாகவோ அது பற்றிய புரிதல் அற்ற பெண்ணாகவோ அவர் இருந்தால் அவருக்கு இந்திய கலாச்சாரத்தில் சட்டத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை என்று கூற வருகின்றார்கள்?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

நாங்கள் பேசிக்கொண்டிருந்த கலாச்சாரம் பற்றி அல்ல. ஒரு கிரிமினல் குற்றம் பற்றி. அதை முதல் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியென்றால் உவமை இந்திய பழக்கவழக்கங்கள், இந்திய மக்களின் மனோநிலை என்ன என்பதிற்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும்...

ஜார்ஜ் புஷ், ஒபாமா, ட்ரம்ப் என்று இருக்க கூடாது...

7 minutes ago, மியாவ் said:

அப்படியென்றால் உவமை இந்திய பழக்கவழக்கங்கள், இந்திய மக்களின் மனோநிலை என்ன என்பதிற்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும்...

ஜார்ஜ் புஷ், ஒபாமா, ட்ரம்ப் என்று இருக்க கூடாது...

கிரிமினல் குற்றம் உலகம் முழுவதுக்கும் பொதுவானது. குற்றவியல் சட்டங்களும் உலகம் முழுவதுக்கும் பொதுவானவை. மோடி பாலியல் வல்லுறவு செய்தாலும் ட்ரம்ப் செய்தாலும் ஒரே குற்றமே.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

கிரிமினல் குற்றம் உலகம் முழுவதுக்கும் பொதுவானது.

பொதுவானது தான், மேற்கத்திய நாட்டில் பெண்கள் தனது பாய் ஃப்ரெண்டை அவர்கள் தாய் தந்தை இருக்கும்பொழுதே வீட்டிற்கு அழைத்து வருவர்...

இந்தியாவில் அப்படி அல்ல...

இதில் அவர்களுக்கும் இவர்களுக்கும் மனோ நிலை மாறுபடுகிறது...

இப்படியான மனநிலையை கொண்டு எந்த துணையுமின்றி எதனடிப்படையில் இரண்டு மாதமே முக நூலில் நட்பு கொண்ட ஆண் வீட்டிற்கு சென்று மது அருந்துவார்... இப்படி செய்கிறோமே இந்த ஆண் மன நிலை எப்படி மாறும் என்று சிறிதளவும் யூகிக்க கூடவா மூளை வேலை செய்திருக்காது... அப்படி என்றால் அந்த பெண்ணின் நோக்கம் என்ன என்ற கேள்வியிலேயே தான் இந்த சம்பவம் முற்று பெறுகிறது...

26 minutes ago, மியாவ் said:

ஒரு பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு புரிவது ஒரு குற்றம் அதை மனிதத்தன்மையுடைய எல்லா கலாச்சாரங்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதுவே சட்டமாக உலக நாடுகளில் உள்ளது. நாம் இப்போது அது பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். சுற்றி வளைத்துப் பேசி திசை திருப்ப வேண்டாம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கொண்டீர்கள் என்றால் விவாதம் தேவையில்லை. வல்லுறவு செய்த ஆணைக் காப்பாற்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பழி போடுவதில் சாக்கடை இந்திய கலாச்சாரம் தெரிகிறது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

ஒரு பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு புரிவது ஒரு குற்றம் அதை மனிதத்தன்மையுடைய எல்லா கலாச்சாரங்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதுவே சட்டமாக உலக நாடுகளில் உள்ளது. நாம் இப்போது அது பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். சுற்றி வளைத்துப் பேசி திசை திருப்ப வேண்டாம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கொண்டீர்கள் என்றால் விவாதம் தேவையில்லை. 

சட்டம் என்ன சொல்லும்,

தர்க்க ரீதியில் அந்த ஆண் செய்தது குற்றம் என்று சொல்லி தண்டனை தரும்...

குற்றம் செய்ய தூண்டுபவருக்கும் தண்டனை இருக்கிறது சட்டத்தில்... சட்ட புத்தகத்தில் இருக்கும் அந்த பக்கத்தை யார் விசாரிப்பர்...

5 minutes ago, மியாவ் said:

சட்டம் என்ன சொல்லும்,

தர்க்க ரீதியில் அந்த ஆண் செய்தது குற்றம் என்று சொல்லி தண்டனை தரும்...

குற்றம் செய்ய தூண்டுபவருக்கும் தண்டனை இருக்கிறது சட்டத்தில்... சட்ட புத்தகத்தில் இருக்கும் அந்த பக்கத்தை யார் விசாரிப்பர்...

பொதுவாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் உலகம் முழுவதும் உள்ள எல்லாம் கலாச்சார மக்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பேசுவதே வழக்கம். ஆனால் ஏனோ தெரியவில்லை  இங்கு குற்றம் செய்த ஆணுக்கு வக்காலத்து வாங்க கலாசாரத்தை துணைக்கு அழைக்கிறீர்கள் கலாச்சாரத்தை சாட்டி குற்றவாளியை காப்பற்றலாம்  என்று நினைக்கும் அளவுக்கு கேவலமான கலாசாரமா அங்கு உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

தற்பொழுது திசை திருப்புவது நீங்கள் தான்...

செய்த தவறுக்கு அந்த பெண்ணிற்கும் பங்குண்டு என்கிறேன்...

13 minutes ago, மியாவ் said:

தற்பொழுது திசை திருப்புவது நீங்கள் தான்...

செய்த தவறுக்கு அந்த பெண்ணிற்கும் பங்குண்டு என்கிறேன்...

நான் இல்லை என்கிறேன். அங்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் அது அவளின் சம்மதம் இன்றி நடைபெற்றது என்று தான் அர்ததம். அப்படியானால் குற்றவாளி நூறு வீதம் அந்த ஆணே. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

நான் இல்லை என்கிறேன். அங்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் அது அவளின் சம்மதம் இன்றி நடைபெற்றது என்று தான் அர்ததம். அப்படியானால் குற்றவாளி நூறு வீதம் அந்த ஆணே. 

அந்த அறையில் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது...

இரண்டு தரப்பு வாதமுமே யூகத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது...

அது பாலியல் வன்முறை என்றால் அந்த ஆண் மீது குற்றமே...

அந்த பெண்ணின் நோக்கம் உடலுறவு என்றால் அந்த பெண்ணுக்கும் குற்றத்தில் பங்கு இருக்கிறது...

குற்றம் வேறு தவறு வேறு, அந்த பெண்ணின் நோக்கம் உடலுறவு என்றால், இரண்டு மாத முக நூல் தொடர்பில் நேரில் சென்று அவனுடன் மது அருந்தியது அந்த பெண்ணின் தவறு...

பெண்கள் வீக்கர் செக்ஸ், எல்லா ஆண்களும் பணிந்து போக வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம்... எல்லாருக்கும் செக்ஸ் வக்கிரம் இருக்கிறது... ஆண்கள் அனைவரும் அதை தாண்டி சிந்திக்கின்றனர் என்று பெண்கள் முடிவெடுக்க கூடாது...

வெறும் முகநூலில் இரண்டு மாதம் என்பது ஏற்று கொள்ள முடியாதது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, tulpen said:

நான் இல்லை என்கிறேன். அங்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் அது அவளின் சம்மதம் இன்றி நடைபெற்றது என்று தான் அர்ததம். அப்படியானால் குற்றவாளி நூறு வீதம் அந்த ஆணே. 

நடந்தது பாலியல் வன்முறை என்று சொன்னது யார்? அந்த பெண் தான்  அன்றி போலீசாரோ , நீதிமன்றமோ அல்ல.

நீதிமன்றம் சொன்னால் மட்டுமே ஏற்றுக்  கொள்ள முடியும் ஏனெனினில், இந்த நிகழ்வில், பாலியல் வன்முறை நடந்துக்கான புற சூழ்நிலை இல்லை.

மது போதையில் இருந்த பெண், அதே போல் மது போதையில் இருந்த ஆணுடன் விரும்பி உறவில் ஈடுபட்டு, போதை தெரிந்ததும், கலாச்சார  உணர்வு வந்து... அய்ய்யோ.. என்னை கெடுத்து விட்டான்  (ஆகவே அவனையே எனக்கு கட்டி வைத்து விடுங்கள்) என்று கூப்பாடு போடவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? 

ஒரு பெண் போதையில் இருந்தார் என்றவுடனேயே, அவர் மீதான அனுதாபம் இல்லாமல் போகிறது. அதுவும் இன்னொருவர் வீட்டில். சரி அப்போதாவது கிளம்பி போகவில்லை. அங்கேயே உள்ள கட்டிலில் படுத்து விட்டார் என்றால்.... அவர் குறித்து என்ன சொல்ல முடியும்...

'பாலியல் பலாத்காரம்' என்பது மிகவும் கடுமையான சொல். சமூகத்தையே அதிர வைப்பது. முறைப்பாட்டு கிடைத்ததும், போலீசார் உடனடியாக வேகமாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆயினும், விசாரணை செய்யும் போது  தான் யார் மேல் தவறு என்று தெரிய வரும்.  

Edited by Nathamuni

32 minutes ago, Nathamuni said:

நடந்தது பாலியல் வன்முறை என்று சொன்னது யார்? அந்த பெண் தான்  அன்றி போலீசாரோ , நீதிமன்றமோ அல்ல.

நீதிமன்றம் சொன்னால் மட்டுமே ஏற்றுக்  கொள்ள முடியும் ஏனெனினில், இந்த நிகழ்வில், பாலியல் வன்முறை நடந்துக்கான புற சூழ்நிலை இல்லை.

மது போதையில் இருந்த பெண், அதே போல் மது போதையில் இருந்த ஆணுடன் விரும்பி உறவில் ஈடுபட்டு, போதை தெரிந்ததும், கலாச்சார  உணர்வு வந்து... அய்ய்யோ.. என்னை கெடுத்து விட்டான்  என்று கூப்பாடு போடவில்லை (ஆகவே அவனையே எனக்கு கட்டி வைத்து விடுங்கள்) என்று சொல்ல வருகிறீர்களா? 

ஒரு பெண் மீது பாலியல் வன்முறை புரிவது குற்றம் என்பது கலாச்சாரத்தில் இருந்து வந்தது அல்ல. அது ஒரு மனித கெளரவம். இது ஆணிற்கும்  பொருந்தும். நீதி மன்றம் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்பதை விசாரித்து சட்டத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கும். அதற்காகவே  அதன் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வழக்கை குறிப்பிட்டேன். குற்றவியல் வழக்கு என்ற ரீதியில் இரண்டும் ஒரே வகையானது.உலகம் முழுவதும் குற்றவியல் வழக்குகள் ஒரே மாதிரியானது. பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவு நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அந்த ஆண் தப்ப வழி உள்ளளது. அதுவும் உலகம் முழுவதும் பொருந்தும்.

மற்றப்படி  பொதுவாக கலாச்சாரத்திற்கும் இதைப் போன்ற குற்றவியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. என்னைக்  கெடுத்துவிட்டான் அவனையே கட்டி வையுங்கள் என்று கூறுவதே ஒரு கேவலமான சாக்கடைக் கலாச்சாரம் ஆகும். பாலியல் வன்முறை புரிந்தவனை அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் கலாச்சாரம் கேவலமானது. வன்முறை செய்தவனை எதிர்த்து அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே சிறந்த  கலாச்சாரப்பெண்ணிற்கு அழகு. 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

நீங்கள் ஆரம்பத்தில் வைத்த உங்கள் சொந்த கருத்துகளுடனேயே மோதிக் கொண்டு இருக்கிறீர்கள் போலுள்ளதே நண்பரே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/12/2019 at 3:52 PM, Nathamuni said:

பேஸ்புக் நண்பர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்: ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் களைப்படைந்த பெண் ஓய்வு எடுப்பதற்காகச் சிறிது நேரம் பெட்ரூம் சென்றுள்ளார்.

போதையில் பலாத்காரம்: நண்பர்களுக்காக உணவு வாங்கி வர ஆரிப் வெளியே சென்ற நேரத்தில், ஆதித்யா போதையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆதித்யாவும் போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமறியா,பழக்கமில்லா வீட்டுக்கு சென்றதே பெரிய தவறு.
அதிலும் இவர்களின் பிறந்தநாள் கொண்ட்டாட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவசரம் ஏன்?
அடுத்தது முன் பின் பழக்கமில்லாதவர்களுடன்(அதுவும் இரு ஆண்கள் மட்டும்) மது அருந்த  ஆண்களே பின்னிற்பார்கள். மேலைத்தேய பெண்கள் என்றாலும் பின்னிற்பார்கள். விலைமாதுக்களை தவிர....👈

 இன்னும் கொடுமையான விடயம் என்னவெனில்  பழக்கமில்லாத ஒருவரின் படுக்கையில் படுப்பது ஏதோ ஒன்றுக்கு அழைப்பது போலவே இருக்கும்/இருக்கலாம்.:rolleyes:

 ஒரு பெண் பலர் சேர்ந்து கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கு அல்லது சந்திப்புகளுக்கு செல்வது வேறு....தனிப்பட நடக்கும் தனிநபர் கொண்டாட்டங்களுக்கு தனிமையாக செல்வதன் அர்த்தம் வேறு.இந்தப் பெண் சர்வசாதாரணமாக மது அருந்தியுள்ளார்.

எனது எண்ணத்தின் படி ஏதோ பணபரிவர்த்தனையில் ஏற்பட்ட தகராறு  என்றே நினைக்கின்றேன்.

இப்படியான சம்பவங்கள்  மேலைத்தேய நாடுகளில் சர்வசாதாரணம். என்னவொன்று பேசிய பேச்சு தவறினால் நீதிமன்றம் வரைக்கும் செல்வார்கள்.

அது போல் தால் இதுவும்.:cool:

4 minutes ago, Nathamuni said:

நீங்கள் ஆரம்பத்தில் வைத்த உங்கள் சொந்த கருத்துகளுடனேயே மோதிக் கொண்டு இருக்கிறீர்கள் போலுள்ளதே நண்பரே...

நான் ஆரம்பத்தில் இருந்து ஒரே கருத்துடனேயே உள்ளேன். உங்கள் புரிதலில் தவறு இருக்கலாம். 

தென்னாசிய கலாச்சாரக் கண்ணாடியூடாக பார்ப்பின் இக் குற்றத்திற்கு பெண்ணும் காரணம் என்பதனையே நாம் காண முடியும்.

மாறக மேற்கத்தைய தேசத்தில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளைக் கேட்டால் அவர்கள் எமக்கு இது தொடர்பாக நன்றாகவே விளக்கமளிப்பார்கள். 

48 minutes ago, manimaran said:

தென்னாசிய கலாச்சாரக் கண்ணாடியூடாக பார்ப்பின் இக் குற்றத்திற்கு பெண்ணும் காரணம் என்பதனையே நாம் காண முடியும்.

மாறக மேற்கத்தைய தேசத்தில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளைக் கேட்டால் அவர்கள் எமக்கு இது தொடர்பாக நன்றாகவே விளக்கமளிப்பார்கள். 

தென்னாசிய கலாச்சாரம் என்பதே யதார்தத்தை புறம் தள்ளிய போலியானது. ஆண்பிள்ளைகளை நீ என்ன செய்தலும்  சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர்கண்ட இடத்தில் கழுவிட்டு வரலாம் என்று சொல்லிச் சொல்லி அவர்கள் மனதில் நான் ஆண்பிள்ளை எனது ஆசைப்படி எதுவும் செய்யலாம் என்று நினைக்கும் வகையில்  வளர்ககும் அதேவேளை  அவர்களை கண்டபடி ஊர் சுற்ற அனுமதிக்கும்  கலாச்சாரம் பெண்பிள்ளைகளைக்கு கலாச்சாரக் கட்டுப்பாடு போடுகிறது.

அதாவது வேறு வகையில் சொன்னால் எம்மால்  வளரக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும் எமது ஆண்பிள்ளைகளால்   உங்களிள் கற்புக்கு  ஆபத்து வந்து விடும் அதனால் உங்களை வெளியே எம்மால்  அனுப்ப முடியாது என்று பெண்பிளைகளுக்கு தடை போட்டு அவரகளின் கலவியைக் கூட மறுத்த கலாச்சாரமாகவே அங்கு கலாச்சாரம் உள்ளது. இந்த கலாச்சாரத்தில் என்ன மேன்மை உள்ளது.  அதை விட இரு பாலாருக்கும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க கற்றுக் கொடுக்கலாமே. பெண்பிள்ளைகளுக்கு பாலியல் விழிப்புணர்சியை ஏற்படுத்தி தற்காப்புப் பயிற்சியை வழங்கலாமே. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

தன்னை  முழுமையாக நம்பி சக  தோழனாக மதித்து பழகிய தோழி மீது பாலியல்வன்முறை புரிந்தத அந்த ஆணின் மீது தவறு இல்லையா? 

நானாயிருந்தால் எவ்வளவு உயிர் தோழனாக இருந்தாலும்,பள்ளிக் கூடத்தில் இருந்து படித்து வந்த நீண்ட கால நண்பனாக இருந்தாலும் இரவில தனிய  அவன்ட வீட் டை[அவன் மட்டும் இருக்கும் வீட்டை] வா என்று கூப்பிடடால் போக மாட்டேன்....(அப்படி அவசரமாய் போக வேண்டிய தேவை இருந்தால் யாராவது நண்பிகளை கூட்டிக் கொண்டு தான் போவன்) ...அப்படிக் கூப்பிடுபவனை நண்பனாய் வைய்ச்சிருக்க மாட்டேன் .
இவ இரண்டு மாசம் மு.பு பழகின ஒருவர் கூப்பிட்டார் என்று இரவில தனியாய் முன்,பின் தெரியாத ஆளின்ட வீட்டை ,அதுவும் இரு ஆண்கள் மட்டுமே இருக்கும் வீட்டை போயிருக்கா...உங்கட மகளை இப்படி தனியே விடுவீர்களா?
பார்ட்டி என்டால் பல பேர் சேர்ந்து கொண்டாடுவது...நண்பரோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்றால் எங்கேயாலும் பொது இடத்தில கொண்டாடி இருக்கலாம் 
போனவ இரு ஆண்கள் மட்டும் தனிய இருக்கிறார்கள் என்றிட்டு உடனே திரும்பி வந்திருக்கோணும்..அவ அங்கேயிருந்து நல்லாய் குடி,குடி என்று குடித்திருக்கிறார் 
பார்ட்டிக்கென்று கூப்பிட் டவர் நன்றாய் குடித்து ,முடித்த பிறகு தான் சாப்பாடு வாங்க என்று சாட்டு சொல்லி வெளியில போயிருக்கார்.
16 வயசிற்கு குறைந்த பெண்ணிற்கு இப்படி எதாவது நடந்திருந்தால் மன்னிக்கலாம்...சிறுமி ,உணர்ச்சி வசப்படும் வயசு..இவ 24 வயசு..நன்றாய் படித்து சுய அறிவுள்ள பெண் யோசிக்க வேண்டாமா?
அநேகமாய் பலாத்காரம் தான் நடந்திருக்கும்...அவருக்கு கட் டாயம் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் முதற் குற்றவாளி இந்த விடயத்தில் அந்தப் பெண் தான்..."சேலையில் முள்ளு பட் டாலும், முள்ளில சேலை பட்டாலும் சேலைக்கு தான் சேதம்" என்று எம் முன்னோர் சும்மாவா சொன்னார்கள். 

பி;கு; முகப் புத்தகத்தில் அவரோடு பழகியவர் அவரை பாலியல் வன்புணர்வு செய்யவில்லை.அவரது நண்பர் தான் செய்தவர்😫 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

நேகமாய் பலாத்காரம் தான் நடந்திருக்கும்..

இரண்டு ஆண்களும் சம்பந்தப்பட்டிருந்தால் அது சரியாக இருக்கலாம்.

இங்கே இருவரும் தாமாகவே குடிபோதையில் இணைந்துள்ளனர்.  அந்தப் பெண்ணை இவராக இழுத்துக் கொண்டு கட்டிலுக்கு போகவில்லை.

ஏன் அந்த ஆண் தான் தனது அறையில், தனது கட்டிலில் ஒரு பெண்ணால் பலாத்காரத்துக்கு உள்ளானதாக சொல்லமுடியாது? அதிலும் ஓர் நியாயம் இருக்கிறது தானே. 

பெண் பாதிக்கப்பட்டரா இல்லையா என்ற கேள்வி, பெண் நடந்து கொண்ட முறையற்ற தன்மையால் வலுவிழந்து போகிறது. 

சட்டம் ஒரு இருட்டறை, இதில் திறமையான வக்கீல் வாதமே வெல்லும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கம்பெனி குடுப்பதையும் நடப்பையையும் போட்டு குழப்புகிறோம் என்று தோன்றுகின்றது. நட்பென்றால் அளவுடன் பழகி கண்ணியமாய் பிரிந்திருப்பினம். சேர்ந்து அளவின்றி குடித்து கம்பெனி குடுத்து விட்டு என்ன காரணத்தாலோ இப்ப குளறுகினம்.....!  😐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.