Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன் தோள் சாய ஆசைதான்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன் தோள் சாய ஆசைதான்....

osoby_starsze.jpg

காலை எழுந்ததிலிருந்து சுந்தரத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காரணம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. வீடு அமைதியாக இருந்தது.

முன்பெல்லாம் தாத்தா தாத்தா என்று தோள்மீதும் மார்மீதும் புரண்டு மடிமீது தவழ்ந்த செல்லப் பேரன்கள் இருவரும் இ;ப்பொழுது தம் தேவைகளைத் தாமே கவனிக்கும் அளவு வளர்ந்து விட்ட பின்பு அவரை திரும்பியும் பார்ப்பதில்லை.

காரணம் அவர்கள் கைகளில் பல தொழில் நுட்பச் சாதனங்கள். காலை எழுந்ததும் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு வேகவேகமாக தத்தமது கருமங்களை கவனித்தபடி 'போய் வருகிறேன்' என்று சொல்லக் கூட நேரமில்லாமல்  'அப்பா யாராவது கதவைத் தட்டினால் பார்த்து திறவுங்கள் கவனம்' என்று சொல்வதைத் தவிர நின்று நிதானித்து

 'அப்பா சாப்பிட்டீங்களா? இரவு தூங்கினீங்களா? உங்கள் தேவை என்ன? என்று கேட்டுச் செல்லக்கூட நேரமில்லாத அவசரம்.

இப்பொழுது அவர் பகுதி நேரமாக சில நாட்களில்தான் வேலைக்கு போய் வருவார்.

சாரதா இருக்கும் வரை சுந்தரத்திற்கு உலகமே அவள்தான். தான் உண்டு தன் கடமை உண்டு என்று வேலைக்குப் போய் சம்பாதிப்பதை அவளின் கையில் கொடுத்து விட்டு நிம்மதியாக தன் வாழ்க்கையை கழித்து விட்டார்.

அவரது தேவை அறிந்து சேவை செய்ய அவளை மிஞ்ச யாருமில்லை.

சாரதாவும் அரசாங்க திணைக்களத்தில் தொழில் புரிந்தவள்தான். வேலைக்குச் செல்லுமுன் சுந்தரத்தையும் தன் ஒரே மகள் சுஜாவையும் கவனித்து அவர்களது தேவைகளையெல்லாம் கவனித்து விட்டுத்தான் செல்வாள்.

'அப்பா அம்மா என்று அன்புடன் கொஞ்சி மகிழ்ந்த ஒரே மகள் சுஜாவிற்கு கல்வியுடன் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்த்த சுந்தரமும் சாரதாவும் அவள் வளர வளர அவளது வளர்ச்சி கண்டு பூரித்தனர்.

தமது ஒரே மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதிலேயே அவர்களது மன எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் விரும்பியபடி சுஜாவுக்கு கனடாவிலிருந்து நல்லதொரு வரனும் வந்தமைந்தது. மகளுக்கு தமக்கு தெரிந்த இடத்திலேயே திருமணம் அமைந்ததில் திருப்திப்பட்ட பெற்றோர் தம் ஒரே மகளை கனடாவிற்கு அனுப்ப தயங்கவில்லை.

சுஜா கஜனின் திருமணம் மிக விமரிசையாக நடந்ததை நேரில் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு சுந்தரமும் சாரதாவும் தம் கடமைகளை தொடர்ந்தனர்.

சுஜா தாயாகப் போகிறாள் என்ற செய்தி வந்ததும் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம் பேரப் பிள்ளையை எப்ப பார்க்கப்போகிறோம் என்ற எதிப்பார்ப்பு ஒருபுறம் அவர்கள் மனம் அலைபாயத் தொடங்கியது.

தினமும் தொலைபேசியில் கதைக்கும் பொழுது சுஜா தனியாக இருப்பதையும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் கஜனும் பக்கத்தில் இருக்க முடியாத சூழ்நிலையையும் அறிந்ததும் சுந்தரமும் சாரதாவும் மனச்சஞ்சலம் அடைந்தனர்.

சுஜாவும் பெற்றவர்கள் பக்கத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை தெரிவிக்கவும் பெற்ற மனம் பித்தாகியது.

இறுதியில் சுந்தரமும் சாரதாவும் வேலையிலிருந்து கட்டாய ஓய்வெடுத்து கனடா வந்து சேர்ந்தனர்.

வந்ததும் சுந்தரம் சுறுசுறுப்பாக இயங்கினார்.

நேரத்தை வீணாக்காமல் வாகனம் ஓடப் பழகினார்.

தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக வேலை செய்தார்.

சாரதாவும் சுஜாவுக்கு உதவியாக இருந்ததில் கஜனுக்கும் மிக மகிழ்ச்சி.

பெற்றவர்கள் அருகாமையால் சுஜாவும் கஜனும் தத்தமது கடமைகளைச் செய்ய எதுவித தடைகளும் இருக்கவில்லை.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலம் உருண்டோட இப்பொழுது இரு பேரக்குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியாகி பேரக்குழந்தைகளுடன் பொழுது சந்தோசமாகக் கழிந்தது.

பேரக் குழந்தைகளும் தவழ்ந்து நடந்து ஓடி விளையாடி பாடசாலை செல்ல ஆரம்பித்தனர்.

விதி  என்பது புயலைப் போன்றது.

அது எப்படி யாரை எப்போது தாக்கும் என்று சொல்ல முடியாது.

அதுதான் சுந்தரத்தின் வாழ்க்கையிலும் நடந்தது.

திடீரென்று ஒருநாள் மாரடைப்பினால் அவதிப்பட்ட சாரதா சில மணி நேரங்களுக்குள் எல்லோரையும் தவிக்க விட்டு இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்.

சுந்தரத்துக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ..என்ற வாசகங்களை அடிக்கடி நினைத்து தான் வாழ்ந்த காலங்களின் நினைவுகளுடன் நாட்களை கடத்தத் தொடங்கினார்.

பேரப்பிள்ளைகளின் அருகாமை துயரை மறக்க வைத்தாலும் காலப் போக்கில் அவர்களும் அவரை விட்டு விலகத் தொடங்கவும் தனிமை அவரை கொடுமையாகத் தாக்கியது.

சாரதா இருக்கும் பொழுது காரை எடுத்துக் கொண்டு அவளுடன் கோவில் கடைத்தெரு என்று எங்காவது போய் வருவார். இடைக்கிடை உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தவறுவதில்லை.

சாரதாவின் இழப்பின் பின் சுந்தரத்தை தனிமை வாட்டத் தொடங்கியது.

தனிமையில் துவளும் சுந்தரத்திற்கு நான்கு சுவர்களே அரணாயின.

மனைவியின் பிரிவு சுந்தரத்தை ஆட்டிப் போட்டு விட்டது.

இப்பொழுதெல்லாம் கோவிலுக்குச் செல்வதையும் கடைத்தெருவுக்குச் செல்வதையும் கூட தவிர்த்தார்.

வீட்டில் கேட்கவே வேண்டாம்.

எத்தனை நேரம்தான் தொலைக்காட்சியையும் வானொலியையும் மாறி மாறி பார்ப்பதுவும் கேட்பதுவும்.

மனம் வெறுமையாகி விட்டது.

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன

வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என்ற பாடல் வரிகளை அடிக்கடி முணுமுணுப்பார்.

காலநிலை நன்றாக இருந்தால் பக்கத்திலுள்ள பூங்கா வாங்கில் சென்று அமர்வார். தனிமை அங்கும் அவரைத் துரத்திச் செல்வதை விடவில்லை.

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று எங்கெங்கு அலைந்தாலும் தன் கூட, தன் சுக துக்கங்களில் பங்குபெற, தன் தேவைகளை நிறைவேற்ற, தன்னுடன் பாசமுடன் பேசி மகிழ, தன் மனப் பாரங்களை மனம் திறந்து உரையாட, நட்புடன் உறவாட, தன் அருகாமையைப் புரிந்து நடக்க, தன்னுடன் சேர்ந்து பயணிக்க தனக்கு ஓர் துணை வேண்டுமென்ற உண்மை உறைக்கத் தொடங்கியது.

கொஞ்சக் காலமாக மனதில் வந்து போய்க் கொண்டிருந்த இந்த நினைவு இதை செயல்படுத்தினால் என்ன? என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

மகள் ஏதாவது நினைப்பாளோ? மருமகன் ஏதாவது சொல்வானோ? பேரக்குழந்தைகள் அங்கீகரிப்பார்களோ? உறவுகள் பரிகசிப்பார்களோ? ஏன்ற சிந்தனைகளையெல்லாம் மிஞ்சி எனக்கென்று ஓர் வாழ்க்கை உண்டு என் வாழ்க்கையை நான் ஏன் அர்த்தமாக்கிக் கொள்ள முடியாது? என்று சிந்தித்தார்.

முடியாதென்று எதுவுமில்லை. என் மனம் புரிந்து என்னுடன் இணைந்து வாழ என்னுடன் சேர்ந்து பயணிக்க ஏன் நான் ஒரு துணையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது?

சிந்தனைகளை அசை போட்டு போட்டு சில நாட்கள் கடந்தன.

வாழ்க்கையின் பொருள்தான் என்ன? வாழ்ந்துதான் பார்த்தாலென்ன? என்ற எண்ணம் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அவரை தட்டி எழுப்பியது.

பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் சாய்ந்து கொள்ளவும் ஓர் தோள் வேண்டும்

இதுவரை மற்றவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை இனி இருக்கும் கொஞ்சக் காலத்திலாவது தனக்காக தன் மன நிம்மதிக்காக வாழ்ந்தால் என்ன?

சாரதாவிடமும் மனதுக்குள் பேசிப் பார்த்தார். அவரும் புன்னகையுடன் கையசைத்து வாழ்த்தியதான பிரேமை.

மனச்சஞ்சலம் நீங்கியவராக புத்துணர்ச்சியுடன் செயற்பட ஆரம்பித்தார். முதற்கட்டமாக பத்திரிகையில் மணமக்கள் தேவை பகுதியைப் பிரித்து அதில் கண்களை ஓட விட்டார்.

 'நாற்பத்தைந்து வயதான கனடாவில் வசிக்கும் தன் சகோதரிக்கு பண்பான அன்பான ஒரு துணையை அவரது சகோதரன் தேடுகிறார்.'

இந்த வாசகம் கண்ணில் பட்டதும் ஏன் நான் இந்த விளம்பரத்தை அழைத்து பேசக்கூடாது என்ற எண்ணம் மின்னலென மனதில் தோன்றியது.

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்.

                                                                                                      ----------------------x-----------------x-----------------x---------------------x----------------------

  • கருத்துக்கள உறவுகள்

வயதான போதும் தனிமை கொல்லும் போதும் சாய ஒரு தோள்  வேண்டும்..... உண்மைதான்.......நல்ல முற்போக்கு சிந்தனை சொல்லும் கதை....தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி .....!  😁 

  • கருத்துக்கள உறவுகள்

இதே அந்த ஜயா இறந்து அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி துணை தேடி இருப்பாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட சுவிக்கும் விருப்பிட்ட ரதி குமாரசாமி சுவி புங்கையூரான் அனைவருக்கும் நன்றிகள். ஜயா இல்லாவிட்டால் அம்மாவை துணை தேட வேண்டாம் என்று ஒருவரும் தடை போடமாட்டார்கள். ஆயினும் இன்று எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. எதுவும் அவரவர் குடும்ப சூழலையும் மன விருப்பத்தையும் பொறுத்து தாமே தீர்மானிக்க வேண்டிய ஒன்று. நன்றிகள் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள

இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்..............

 வெளி நாடு வந்த பின் வாழ்கை மாற்றங்களும் தேவை தான்...தனிமையில் மனம் தவிப்பதை தவிர்க்க   இத்தகைய மாற்றம் தேவை  . ஆ னால் சமுதாயத்தின் ...கேள்விக ளுக்கும்  பதில் சொல்லியாக வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavallur Kanmani said:

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்.

என்ன இடையிலேயே நிற்பாட்டி விட்டீர்கள்.ஐயாவின் திஐமணம் முடிந்ததா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சம்பவம் சிட்னியிலும் நடந்தது.....இப்ப ஐயா மேலோகம் போய்விட்டார் .....அந்த அம்மா தனியாக‌ வாழ்கின்றார்....மிகவும் அருமையான வித்தியாசமான கதை

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

இதே அந்த ஜயா இறந்து அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி துணை தேடி இருப்பாரா?

சிலர் அதை தவிர்த்து விடுவார்கள். சிலர் திருமணம் செய்து கொள்வார்கள். அதிலும் பெண் பிள்ளைகள் இருந்தால் மறுமணம் செய்வது சந்தேகமே.... அடிப்படையில் பெண்கள் உள்ளூர சோகத்தை விரும்புவர்களாகவும் மனதுக்குள்  அதை ரசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.அதை புரிந்து கொண்டவர்கள் சீரியல் டைரக்ட்டர்கள். பிழிய பிழிய சோகத்தை கொடுத்து நாடகத்தை வெற்றி பெற வைத்து விடுவதே அதற்கு சான்று.....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள

இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்..............

 வெளி நாடு வந்த பின் வாழ்கை மாற்றங்களும் தேவை தான்...தனிமையில் மனம் தவிப்பதை தவிர்க்க   இத்தகைய மாற்றம் தேவை  . ஆ னால் சமுதாயத்தின் ...கேள்விக ளுக்கும்  பதில் சொல்லியாக வேண்டும்.  

சமுதாயத்துக்கு பயந்த காலம் ஒன்று இருந்தது. சமூகம் என்பது நாங்கள்தானே. நிறைய மாறி விட்டோம்.சமுதாயத்துக்கு பயந்த காலம் ஒன்று இருந்தது. சமூகம் என்பது நாங்கள்தானே. நிறைய மாறி விட்டோம். கருத்துக்கு நன்றி நிலாமதி

9 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன இடையிலேயே நிற்பாட்டி விட்டீர்கள்.ஐயாவின் திஐமணம் முடிந்ததா இல்லையா?

பொறுத்திருந்து பார்ப்போம். நன்றிகள் ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இப்படி ஒரு சம்பவம் சிட்னியிலும் நடந்தது.....இப்ப ஐயா மேலோகம் போய்விட்டார் .....அந்த அம்மா தனியாக‌ வாழ்கின்றார்....மிகவும் அருமையான வித்தியாசமான கதை

இப்படியான சம்பவங்கள் அங்கங்கே நடக்கத்தான் செய்கிறது. எல்லோரும் ஒருநாள் போகத்தான் வேணும். துணிவே துணை  நன்றிகள் புங்கையூரான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சிலர் அதை தவிர்த்து விடுவார்கள். சிலர் திருமணம் செய்து கொள்வார்கள். அதிலும் பெண் பிள்ளைகள் இருந்தால் மறுமணம் செய்வது சந்தேகமே.... அடிப்படையில் பெண்கள் உள்ளூர சோகத்தை விரும்புவர்களாகவும் மனதுக்குள்  அதை ரசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.அதை புரிந்து கொண்டவர்கள் சீரியல் டைரக்ட்டர்கள். பிழிய பிழிய சோகத்தை கொடுத்து நாடகத்தை வெற்றி பெற வைத்து விடுவதே அதற்கு சான்று.....!  😁

நீங்கள் சொல்வது உண்மைதான் சுவி. பெண்கள் தம்மைச்சுற்றி ஒரு வேலி போட்டு அதற்குள் இருக்க பழக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இன்று எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. மறுமணம் என்பது நிறைய நடக்கிறது. நாடகம் வாழ்க்கை ஆகாது. அங்க சோகம் மட்டுமா காட்டப்படுகிறது. எப்படி பழிவாங்குவது எப்படி கொலை செய்வது. அது நடிப்பாக மட்டும்தான் பார்க்கலாம். தனிமையில் இருக்கும் பெண்களைவிட ஆண்கள் நிறைய மனதளவில் பாதிக்கப்படுவதை காண்கிறோம். நன்றிகள் சுவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையைப் படித்து விருப்பிட்ட மல்லிகை வாசம் மோகன் ஏராளன் யாழ்கவி இணையவன் ஜெகதாதுரை அனைவருக்கும் கருத்திட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

சிலர் அதை தவிர்த்து விடுவார்கள். சிலர் திருமணம் செய்து கொள்வார்கள். அதிலும் பெண் பிள்ளைகள் இருந்தால் மறுமணம் செய்வது சந்தேகமே.... அடிப்படையில் பெண்கள் உள்ளூர சோகத்தை விரும்புவர்களாகவும் மனதுக்குள்  அதை ரசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.அதை புரிந்து கொண்டவர்கள் சீரியல் டைரக்ட்டர்கள். பிழிய பிழிய சோகத்தை கொடுத்து நாடகத்தை வெற்றி பெற வைத்து விடுவதே அதற்கு சான்று.....!  😁

இப்படி சொல்லி,சொல்லியே பெண்களை அடக்கி வைத்திருக்கிறது இந்த சமுதாயம்...பொம்பிளை பிள்ளையள் இருந்தா கட்டக் கூ டாது,அவ கட்ட மாட் டா  போன்ற காரணங்களை சொல்லி பெண்களை தனியே வைத்திருக்கும் இச் சமுதாயம் ஆண்களுக்கு மட்டும் மனைவி இறந்து ஒரு வருடம் முடிவதற்கு இடையில் திருமணம் முடித்து வைத்து விடுவார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kavallur Kanmani said:

இப்படியான சம்பவங்கள் அங்கங்கே நடக்கத்தான் செய்கிறது. எல்லோரும் ஒருநாள் போகத்தான் வேணும். துணிவே துணை  நன்றிகள் புங்கையூரான்.

நான் புத்தன் ஆக்கும் .....புங்கையூரான் அல்ல‌:14_relaxed:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் புத்தன். வேலைப்பளு காரணமாக அவசரமாகப் பதிவிட்டதால் தவறு நேர்ந்துவிட்டது. நன்றிகள்

நமக்கு எது தேவையென நம்மை விட வேறு யார் தெளிவாக அறிவார்? இறுதியில் சுந்தரத்துக்குக் கிடைத்தது மனதில் சுதந்திரம். 

மன உணர்வுகளை அழகாகச் சித்தரித்துள்ளீர்கள், அக்கா 😊 மென்மேலும் தொடருங்கள் 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

நமக்கு எது தேவையென நம்மை விட வேறு யார் தெளிவாக அறிவார்? இறுதியில் சுந்தரத்துக்குக் கிடைத்தது மனதில் சுதந்திரம். 

மன உணர்வுகளை அழகாகச் சித்தரித்துள்ளீர்கள், அக்கா 😊 மென்மேலும் தொடருங்கள் 😊

சுந்தரம் தெளிவான முடிடிவடுத்து விட்டார். முன்போலில்லாது இப்பொழுதெல்லாம் அதிகமானோர் சுயமாகச் சிந்தித்து  சுதந்திமாக முடிவெடுக்கத் தொடங்கி விட்டனர். நல்ல மாற்றம். கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் மல்லிகை வாசம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தோர் ஓர் துணை தேட வயதோ, ஆண் பெண் என்ற பேதமோ தடையல்ல. எல்லோராலும் தனிமையில் இருந்துவிடமுடியாது. ஏதாவது இலட்சியத்தோடு அயராது உழைக்கும்போது,  நேரம் போதவில்லை என்று ஓடிக்கொண்டிருக்கும்போது தனிமை ஒரு பிரச்சினையில்லை. ஆனால் ஒவ்வொரு வினாடியும் ஓர் யுகமாக மாறும்போதும், தமக்குள்ளே பேசிப்பேசி அலுக்கும்போது தனிமையைப் போக்க ஒரு துணை தேவை. ஆனால் புரிந்துணர்வில்லாத துணைகள் எந்த வயதிலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கும். சுந்தரம் Tinder மாதிரி ஒரு dating app ஐ பாவித்தால் luck  வேலை செய்யலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரிந்துணர்வில்லாத துணையை விட தனிமையே மேல். உங்கள் கருத்துக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

வயது வந்தோர் ஓர் துணை தேட வயதோ, ஆண் பெண் என்ற பேதமோ தடையல்ல. எல்லோராலும் தனிமையில் இருந்துவிடமுடியாது. ஏதாவது இலட்சியத்தோடு அயராது உழைக்கும்போது,  நேரம் போதவில்லை என்று ஓடிக்கொண்டிருக்கும்போது தனிமை ஒரு பிரச்சினையில்லை. ஆனால் ஒவ்வொரு வினாடியும் ஓர் யுகமாக மாறும்போதும், தமக்குள்ளே பேசிப்பேசி அலுக்கும்போது தனிமையைப் போக்க ஒரு துணை தேவை. ஆனால் புரிந்துணர்வில்லாத துணைகள் எந்த வயதிலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கும். சுந்தரம் Tinder மாதிரி ஒரு dating app ஐ பாவித்தால் luck  வேலை செய்யலாம்!

வெள்ளைக்காரச்சனம் தனிமைக்கு பயந்து நாய்/பூனை வளர்க்கினம். நல்ல துணையும் கூட.....நன்றியுள்ளவை.

இப்ப எங்கடை ஆக்களும் தங்கடை பிள்ளையள் படிப்பு வேலை கலியாணம் எண்டு பிரிஞ்சு போக வெளிக்கிட நாய் பூலையெல்லாம் வளர்க்க வெளிக்கிடீனம்.

தனிமை என்பது அதுவும் புலம்பெயர் நாடுகளில் பொல்லாதது. கொடுமையானது.

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இந்த தனிமை என்னும் கொடுமையினால்தான் நிறையப்போ் மனஉழைச்சலுக்கும் மனப் பிறழ்வுக்கும் ஆளாகி அவதிப்படுவதைப் பாா்க்கிறோம். நிறையப்போ் இப்பொழுதெல்லாம் செல்லப்பிராணிகள் வளர்க்கிறாா்கள்தான். அதுகும் தம்மால் இயங்கமுடிந்தவரைதானே கவனிக்கலாம். துணை அமைவதெல்லாம்கூட இறைவன் கொடுத்த வரம்தான். கருத்திட்ட விருப்பிட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/14/2019 at 1:09 PM, Kavallur Kanmani said:

தனிமையில் இருக்கும் பெண்களைவிட ஆண்கள் நிறைய மனதளவில் பாதிக்கப்படுவதை காண்கிறோம்

வீட்டு வேலைகள்/தீர்மானங்கள் திட்டமிடல் சமையல் உட்பட  ஒவ்வொன்றிலும் கணவனும் மனைவியும் சரி சமமாக பங்கெடுத்து வாழ்ந்து பழக்கப்பட்டால்......ஓரளவு மனப்பாதிப்பிலிருந்து தப்பிக்கொள்ளலாம். தேனீர் தொடக்கம்   சேட்டுக்கு கை மடிக்கும் வரைக்கும் மனைவிதான் என்றிருப்பவர்களுக்கு ....மனைவி இல்லையென்றால் நடுக்காட்டில் விட்டது போலவே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுகளுக்கு வந்தபின்தானே சரிசமம் என்ற பேச்சே வந்தது. அங்கென்றால் ஜயா சாய்மானக் கதிரையில் இருக்க அம்மாமார்தானே விழுந்து விழுந்த வேலை செய்து பயந்து பயந்து உபசரிப்பதை பார்த்திருக்கிறோம். இங்கு வாழ்க்கையை ஆரம்பித்தவர்களுக்கு வேறுமாதிரி வாழ்க்கை.  பாதியில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் துணையை இழக்கும்பொழுது பெரிதும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் ஓரளவு தங்களைச் சுதாகரித்து வாழ பழகிவிடுகிறார்கள். அநேகம் ஆண்கள் தவித்துப் போய் விடுவதை மறுக்க முடியாது. கருத்துக்கு நன்றி குமாரசாமி

சிறிய கதையாக இருந்தால் நல்லதொரு கதை. பத்தாம் பசலித்தனமான முடிவு இல்லாமல், சரியான முடிவில் கதை முடிந்திருக்கு.

மனுசர் ஒரு சமூக பிராணி. மனுச வாழ்க்கை என்பது தனித்து வாழ்வதற்கு அல்ல. முக்கியமாக வயது போகும் போது கண்டிப்பாக துணை தேவை.

என் அப்பா செத்து 14 வருடங்களாகின்றது. அம்மா தனியாகத்தான் இருக்கின்றார். இங்கு வந்து இருக்கும் போது, 'அம்மா ஏன் நீங்கள் இன்னொரு கலியாணம் கட்டி வயதான காலத்தில் கதைத்துக் கொண்டு இருப்பதற்காகவாவது ஒரு துணையை தேட நினைக்கவில்லை' எனக் கேட்டனான். அதற்கு அம்மா சொன்ன பதில் 'சனம் என்ன நினைக்கும்' என்பது தான். இங்கு மற்றவர்கள் என்ன நினைப்பினம் என்பதற்காகவே தனிமையை தேர்ந்தெடுப்பவர்களாக எம்மவர்களில் அனேகம் பேர் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, நிழலி said:

இங்குதான் எனது பிறப்பும் ஆரம்பமாகியது. இளவயதில் வாழ்விழந்த என் தாய் வாழ்க்கைதுணை தேடி தஞ்சம் அடைந்ததால் ஊரால் ஓரங்கட்டப்பட்டார். இது பற்றி நிறைய எழுதலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.