Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

Featured Replies

15 hours ago, thulasie said:

புலிகளும் போர்க்குற்றம் இழைத்தது என்று நீங்களே ஒப்புவிக்கிறீர்கள்.

இப்படி நானோ, சுமந்திரனோ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரோ சொன்னால், 'புலியெதிர்ப்பு' என்ற பதத்திற்குள் வருகிறது என்று சொல்வீர்கள்.

கொள்கைக்காக தங்கள் இன்னுயிர்களை இழந்தவர்களை விமர்சிக்கும் எந்த அருகதையும் எவருக்கும் இல்லை .
 இப்ப 10 வருடமாக அவர்கள் இல்லை ....முடிந்தால் சிங்களவனிடம் இருந்து எலும்பு துண்டை வாங்கி காட்டுங்கள் ....? இப்ப கூட்டமைப்பு கேட்பதை விட ....இப்ப இங்க உள்ள நிலைமையே மிகவும் சிறந்தது.    பொன்சேகா சொன்ன மாதிரி ? சிறு பான்மை என்பது இல்லை ...எல்லோரும் இலங்கையர் ....அதனால் எந்த தீர்வும் தேவை இல்லை ......

  • Replies 65
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

என் நிலைப்பாடு, வன்னியில் இருந்து வந்த என் உறவுகளின் சாட்சியங்களால் மாறியது. இது ஒன்றும் இரகசியமல்ல! மிரட்டலாக அல்ல அது சொல்லப் பட்டது! உணர்ச்சிகளை வைத்து நீங்கள் மற்றவர் யாரை ஆதரிக்க வேணுமெண்டு கோடு போட்டால், அதே மாதிரியான எதிர்பார்ப்பை மற்றவரும் எதிர் பார்க்க முடியும் என்பதே fair game என்ற கருத்து! இதில் மிரட்டல் எங்கே வந்தது? 

இதுவே என் கடைசிப் பதிவு இங்கே! 

நானும் இவ்வாறான சாட்சியங்கள் பற்றிக் கேள்விப்பட்டேன், முதலில் நம்புவது கடிணமாகத்தான் இருந்தது. ஆனாலும் எமது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

7 minutes ago, ragunathan said:

நானும் இவ்வாறான சாட்சியங்கள் பற்றிக் கேள்விப்பட்டேன், முதலில் நம்புவது கடிணமாகத்தான் இருந்தது. ஆனாலும் எமது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

இப்ப புலிகள் பற்றிய தப்பு என்பது ரணிலும் சுமந்திரனும் சேர்ந்து திசை திருப்பி உள்ள விடயம் ....சிங்களவன் எந்த தீர்வும் தர மாட்டான் ....2/3 ஆதரவு எப்போதும் கிடைக்காது ....சும்மா ரணிலுக்கு சுமந்திரன் கழுவாமல் ....சிங்களவன் எமக்கு இழைத்த கொடுமைகளுக்கு ஐ நா வை வைத்தாவது ஏதாவது செய்ய வேண்டும் ....

5 hours ago, ragunathan said:

மறப்போம் மன்னிப்போம் என்று நீங்கள் இங்கே மேற்கோள் காட்டியது அண்மையில் இரு அரசியல்வாதிகள் தமிழர்க்கு நடந்த அநீதிகள் பற்றி இனிப் பேசக்கூடாது என்கிற தொனியில் பேசிய வார்த்தைகள். அது ஒரு அரசியல்  நிலைப்பாடு.

இவர்களின் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, இதுதொடர்பான உங்கள் கருத்து என்னவென்று கேட்டதற்கு ஆண்மீகரீதியில் பதிலளிக்க முற்படுகிறீர்கள். 

மன்னிக்கவேண்டும், எனக்கு ஆண்மீகத்தில் சிறிதளவேனும் நம்பிக்கையில்லை.

தமிழருக்கு  நடந்த அநீதிகள் பற்றி இனிப் பேசக்கூடாது என்கிற தொனியில்  யாரும் பேசவில்லை.

தமிழர், சிங்களவருக்கு நடந்த அநீதிகளைப்பற்றி பேசி காலத்தை வீணாக்காது, மறப்போம் மன்னிப்போம் என்ற வழியில் பயணிப்பதை இப்போது எல்லா  அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள்.

பிற இனங்கள் என்ன துன்பங்களை அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தன் இனம்  அடைந்த துன்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எழுத்து யாழில் வேண்டுமானால் OK.

ஆனால், பல்லினம் வாழும் இலங்கையில் எடுபடாது.

Sorry for saying this.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

சிங்களவர்களுக்கு தமிழர்களால் நடந்த அநீதிகள் என்பவை பற்றி சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் சர்வதேசத்தில் கூக்குரலிட்டுத்தான் வந்திருக்கிறது. புலிகள் தடைசெய்யப்படுவதற்கு, சிங்களவர்கள் மேலான தாக்குதல்களையே சிங்களம் அன்று காட்சிப்படுத்தியது. ஆகவே சிங்களவர் சார்பாக பேசுவதற்கு, சர்வதேசத்தில் கூக்குரலிடுவதற்கும் அவர்களது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழர் பாடு அப்படியில்லை. அவர்களிடம் அதிகாரமில்லை, சிங்களம் செய்த இனக்கொலையினை உலக அரங்கில் அவர்களால் இன்றுவரை வெற்றிகரமாகக் கொண்டுவர முடியவில்லை, அவர்கள் சார்பாகப் பேசக்கூடியவர்கள் என்பவர்கள் இதுபற்றிப் பேசுவதை ஒன்றில்த் தவிர்க்கிறார்கள் அல்லது, சிங்களத்தின் பாணியில் மன்னிப்போம் மறப்போம் என்கிறார்கள். இது நிச்சயமாக தமிழரின் இன்றைய அரசியல் கைய்யறு நிலையினை இன்னும் பாதிக்கப் போகின்றது. 

தமிழர்களுக்கெதிராக நடந்த அநீதிகளை நாங்கள் கேட்கக் கூடாது ஏனென்றால்  சிங்களவருக்கு அநீதிகள் நடந்திருக்கின்ற என்கிறீர்கள். இருபக்கமும் நடந்த அநீதிகள் ஒரே தராசில் வைத்துப் பார்க்கக் கூடியவைதானா என்பதுபற்றி தமிழராகிய உங்களுக்கு இருக்கும் விளக்கம் முக்கியமானது.

அரசியல் அநாதைகளான தமிழர்களின் கவலைகளையும் ஏக்கங்களையும் மன்னித்து மறந்துவிடுங்கள் என்று தமிழர் ஒருவரே கூறுவதும், பல்லினம் வாழும் நாட்டில் இவை எடுபடாதென்று கூறுவதும் நகைப்பிற்கிடமானது. பல்லினம் வாழும் நாடென்கிறபடியினால்த்தான் ஒரு இனம் இன்னொரு இனத்தின்மேல் ஒரு இனவழிப்புப் போரையே நடத்தி முடித்தது என்கிற சிந்தனையே உங்களுக்கு எழாமல்ப் போனது வியப்புத்தான். ஒரு இனம் மட்டும் வாழும் நாட்டில் இனவழிப்பு எப்படிச் சாத்தியம் என்கிற கேள்வியும் இத்துடன் எழுகிறது.

நீங்கள் இன்று வரிந்திருக்கும் அரசியல் நிலைப்பாடு எதனால் என்பது வெளிச்சமானது. சுமந்திரனது சொல்லையும் செயலையும் அப்படியே பிரதிபலிக்கிறீர்கள். ஆனால், அது தவறென்று நான் நினைக்கவில்லை. அது உங்களின் அரசியல் நிலைப்பாடு. நாங்கள் சரியென்று நினைப்பதை இங்கே எழுத எமக்கிருக்கும் உரிமை போல நீங்கள் சரியென்று நினைப்பதை இங்கே எழுதுகிறீர்கள். 

தொடர்ந்து எழுதுங்கள். எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், எந்த வழியிலாவது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

பாதிக்கப்பட்டவர்களை நோக்கி, “நாங்கள் குற்றங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; ஆனால், நீங்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்” என்று, குற்றமிழைத்த தரப்புகள் முன்மொழிவதும் கூட, வன்முறையின் உச்சமே.  ரணிலின் கூற்றைக் கொண்டு சுமக்கும் தரப்புகளும், அந்த வன்முறையில் பங்காளிகளே.  

  • கருத்துக்கள உறவுகள்

இருதரப்புப் போர்க்குற்றங்களையும் மறப்போம் மன்னிப்போம் என்பதன் மூலம் நாம் விளங்கிக்கொள்வது என்ன? 

சரி, ஒரு பேச்சிற்கு இருபக்கத்தாரும் போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம். அப்படியினால், இந்த இருபக்கத்தாரையும் நீதியின் முன் நிறுத்துவதற்குத் தடையாக இருப்பது எது?

சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களில் ஒன்று சிங்கள ராணுவம் மற்றையது விடுதலைப் புலிகள்.

புலிகளின் முக்கியஸ்த்தர்களில் அநேகமானவர்கள் சண்டையிலோ அல்லது சரணடைந்தபின்னரோ கொல்லப்பட்டுவிட்டார்கள், கருணா, கே பீ போன்றவர்களைத்தவிர. ஏனைய சாதாரண போராளிகள் புணர்வாழ்வு என்கிற பெயரில் நடைபிணங்களாக்கப்பட்டு தெருவில் விடப்பட்டுள்ளார்கள். ஆகவே, இவர்களில் எவரும் போர்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு பிரச்சினையில்லை. இதன்படி, ராணுவத்திற்கெத்கிரான தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்கிற காரணத்திற்காக இன்றும் முன்னாள்ப் புலிகள் நீதியின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆக, சிங்கள அரசு இதைச் செய்துதான் வருகிறது.

அடுத்த தரப்பு, சிங்கள அரச ராணுவம். சண்டையில் கொல்லப்பட்ட அல்லது, சரணடைந்தபின்னர் புலிகளால் கொல்லப்பட்ட சாதாரணச் சிப்பாய்களைவிட ராணுவ அணிகளுக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகள் இன்னமும் உயர் பதவிகளிலும், வெளியுறவுத்துறையிலும் இருக்கிறார்கள். இவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை விசாரிப்பதில் இருக்கக் கூடிய தடைகள் என்ன? 

இங்கு குற்றம் சாட்டப்பட்ட இருதரப்பினரையும் நீதியின் முன் நிறுத்துவது சிங்கள அரசிற்கு ஒரு பிரச்சினையாக இருப்பது எப்படி? 

மன்னிப்போம் மறப்போம் என்று ரணிலோ அல்லது அவரது நண்பரான சுமந்திரனோ கூறினாலும்கூட, இன்றுவரை சிங்களம் தனது ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அவற்றிற்கான தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதாகவோ கூறியிருக்கின்றதா? 

அடுத்ததாக, மன்னிப்போம் மறப்போம் என்பதன் மூலம் சிங்கள அரசு செய்ய நினைப்பது என்ன?

1. இருதரப்பிலும் இழைக்கப்பட்ட குற்றங்களைச் சமப்படுத்துவது. அதாவது திட்டமிட்ட வகையில் தமிழினத்திற்கெதிராக மொத்த அரச இயந்திரத்தைப் பாவித்து கடந்த 70 வருடங்களாக சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துவந்த இன ஒடுக்குமுறையையும், சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் சிங்களச் சிவிலியன்கள் மீதான புலிகளின் தாக்குதல்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்து, "நாங்கள் நீங்கள் செய்ததை மன்னித்துவிடுகிறோம், நீங்களும் அப்படியே செய்யவேண்டும்" என்று கேட்பது. இது நிச்சயமாக எமக்குச் சாதகமான ஒரு விடயம் அல்ல, தாம் செய்த ஒரு இனக்கொலையை, புலிகளின் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு நிகராக ஒப்பிட்டு, அதை  முற்றாக மறைத்து மறக்கவைக்கச் சிங்களம் செய்யும் திருகுதாலம்.

2. இப்போர்க்குற்றங்கள் தொடர்பாக தமிழினமும், அவர்களின் அழுத்தத்தின் மூலமாக ஐ. நா அடங்கலான சில சர்வதேச நாடுகளும் தொடர்ந்தும் பேசிவருவது தமது நிலையினைப் பலவீனப்படுத்தி ஒரு கட்டத்தில் சர்வதேச தலையீட்டுடனான போர்குற்ற விசாரணை ஒன்றிற்கு போக நேரிடலாம் என்கிற ஐயத்தினால், தமிழ்மக்கள் இதுபற்றிப் பேசாமல் இருக்க அறிவுறுத்துவது. 

3. நடைபெற்ற போர்க்குற்றங்களை தமிழர்கள் மன்னித்து மறந்துவிட்டால், அவர்களுக்கான தீர்வொன்றைத் தர வேண்டிய தேவை அற்றுப்போவது. ஏனென்றால், இன்றுவரை போர்க்குற்றங்களுக்கான கோரலே சிங்களத் தரப்பின் மீது தீர்வொன்றை முன்வைப்பதற்கான அழுத்தமாக பாவிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான கோரல் ஒன்று இல்லாதவிடத்து, தீர்வொன்றிற்கான அழுத்தமும் இல்லாமல்ப் போய்விடும் என்கிற சிங்களத்தின் நிலைப்பாடு.

இதைச் செய்வதற்குச் சிங்களம் பாவிக்கும் வழிமுறை சாதுரியமானது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற பெயரில் வலம் வரும் ஒரு சிலரை இதற்குப் பாவிக்கிறது. தீர்வொன்று பற்றிப் பேசுகிறோம், செயற்படுகிறோம், இந்தவருட பொங்கலில் வரும் இல்லாவிட்டால் அடுத்த வருடத் தீபாவளியில் வரும் என்று எவர்களை வைத்து தனது காய்நகர்த்தல்களைச் செய்ததோ, அவர்களை வைத்தே "மன்னிப்போம் மறப்போம்" என்பதையும் சொல்கிறது.

இந்த மன்னிப்போம் மறப்போம் சொல்லப்பட்ட காலத்தைப் பார்த்தால் ஐ நா வில் சிங்களத்திற்கெதிராகக் கொண்டுவரப்படப்போகும் இன்னொரு புதிய தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவும், தமது இனவொடுக்கலுக்கான கால அவகாசத்தை எடுக்கவும், உள்நாட்டில் பிரச்சினைக்குற்பட்ட இனங்களுக்கிடையே சமாதானம் உருவாகிவருகிறது என்கிற பிரமையை உருவாக்கவுமே வலிந்து சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆக, முழுக்க முழுக்க சிங்களத்தின் நண்மைகருதி கூறப்பட்ட இச்சொற்றொடர் முற்றான ஏமாற்று வித்தையே அன்றி, உண்மையாகவே பிரச்சினைக்கான தீர்வைத் தரும் நோக்கிலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களை தேற்றும் நோக்கிலோ சொல்லப்படவில்லை என்பது திண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபாதாசன் said:

ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் கழுவுவது தான் நீங்கள் அறிந்த தெளிவு ......இருந்திட்டு போகட்டும் ...

ஆமா ஏன் 56 இல் தனி சிங்கள சட்டம் வந்தது ? அதனை ஏன் ஏற்று கொள்ளவில்லை ? அப்படியே அடிமையாகி கழுவி இருந்திருந்தால் ....நீங்கள் சொன்ன எந்த அழிவும் வந்திராது ?   முதலில் மனிதனுக்கு மானம் இருக்க வேண்டும் .... 

உங்களுக்கு முதலில் தன்மையாகச் சொல்ல வேண்டியது என் கடமை: மரியாதையான சொற்களைப் பயன்படுத்தப் பழகுங்கள் பொது இடங்களில்!

மந்தையாக, தாசனாக இருந்து விட்டுப் போவது மிக இலகு! சொந்தப் புத்தி (அது இருந்தால்!) பாவித்து உங்கள் நிலைப்பாடுகளை எடுப்பதே சிறப்பு! யாழ் களத்திலும், தாயகத்திலும்  பெரும்பாலோர் அப்படியானவர்களே. அதனால் உங்கள் கருத்துகள் இங்கே அவ்வளவு கவனிக்கப் படுவதில்லை என்பதை அவதானித்திருப்பீர்கள்!

கவனிக்கப் பட வேண்டும் என்பதற்காக உங்கள் குடும்பச் சூழலில் சாதாரணமாகப் புளங்கும் சொற்பிரயோகங்கள் இங்கே வேண்டாம்! கற்பதற்கு வயதில்லை, நாகரீக உரையாடல் என்னவென்று கற்றுக் கொள்ளுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் உங்கள் முழுமையான விளக்கம் குழந்தைக்கும் விளங்கக் கூடியவாறு எழுதியுள்ளீர்கள்.

இதைக் கூட விளங்கவில்லை என்றால் பிறப்பில் எங்கோ தவறிருக்கிறது.

பாராட்டுக்கள் ரகுநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், இப்போரினால் சொல்லொணாத்துயரங்களை எதிர்கொண்டு, இதுவரை நீதி மறுக்கப்பட்ட தமிழர்கள் இன்னுமொருமுறை கொல்லப்பட்டோ அல்லது காணாமல்ப் போகச் செய்யப்பட்டோ போன உறவுகளுக்குப் பொறுப்பானவர்கள்ளைத் தேடும் முயற்சியை கைவிட்டு விடுங்கள் என்று அந்நாட்டின் பிரதமர் அவர்களின் வாழிடத்தில் வைத்துக் கூறியிருக்கிறார்.

நாங்கள் எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம், ஆகவே அவற்றை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்லுங்க்கள் என்று மிகவும் இலகுவாக அதைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். 

ஐ. நா வில் 2015 ஆம் ஆண்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின்படி ஒழுகுவதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில் மீண்டுமொருமுறை இத்தீர்மானம் எடுக்கப்படப்போகும் நிலையிலும், மன்னார்ப் புதைகுழிகளின் அறிக்கை வெளிவரவிருக்கும் நிலையிலும் பிரதமரின் தமிழரை நோக்கிய இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பதவியேற்ற ரணில் அரசு, ஐ நா வில் துணை அணுசரனை ஒன்றின் மூலம் இலங்கையில் இனங்களுக்கிடையே இணக்கப்பட்டினை ஊக்குவித்தல், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை செயற்படுத்துதல் மற்றும் மனிதவுரிமை நிலையினை மேம்படுத்துதல் ஆகியவற்றினை செய்வதாக உத்தரவாதம் அளித்திருந்தது. இதற்கமைவாக உள்நாட்டில் ஒரு பக்கச் சார்பற்ற நீதி அமைப்பினை உருவாக்குதல், பொதுநலவாய மற்றும் சர்வதேச சட்ட ஆலோசனையைனைப் பெற்றுக்கொள்ளல், சர்வதேச விசாரணையாளர்களை உள்வாங்குதல் என்று பெருமளவு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருந்தது.

ஆனால், இவை செய்யப்படுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 4 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களைச் செய்த தனது ராணுவத்தை நீதியின் முன் நிறுத்த திராணியற்ற ரணில் அரசு, தற்பொழுது பொறுப்புக்கூறலினை செயற்படுத்தப் போவதில்லை என்று தெட்டத் தெளிவாகக் கூறியிருக்கிறது.

"எங்களால் விசாரணைகள் செய்து, வழக்குகளைத் தக்கல் செய்ய முடியாது. நாங்கள் இணக்கப்பட்டிற்கு வரவேண்டும். உண்மையைப் பேசி, செய்த தவற்றிற்காக வருந்துவதோடு, மன்னிப்பைக் கேட்டுவிட்டாலே போதும், பிரச்சினைகள் அத்துடம் முடிந்துவிடும்" என்று அவர் இப்போது சொல்கிறார். இப்படிச் செய்ததன்மூலம்தான் தென்னாபிரிக்கா முன்னோக்கிப் பயணிப்பதாக வேறு அவர் சொல்கிறார். ஆனால் இங்கே வேடிக்கை என்னவென்றால், தென்னாபிரிக்காவை இன்று ஆள்வது முன்னர் ஒடுக்கப்பட்ட கறுப்பினர்தான் என்பதை அவர் மறந்துவிட்டார். ஆனால், இலங்கையில் நிலமை அவ்வாறில்லை, தமிழர்கள் முன்னரும், தற்போது அடிமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் எந்த உண்மையைப் பற்றிப் பேசுவது? யாரிடம் யார் மன்னிப்புக் கேட்பது? 

முதன்முறையாக வெள்ளைவான் கடத்தலில் தனது புலநாய்வுபபடையினர் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தா அவர்கள் அதை நியாயப்படுத்தியிருக்கும் நிலையில், ரணிலின் இப்போதைய பேச்சுக்கள் பாதிக்கப்பட்ட தமிழருக்கு எந்தவித ஆறுதலையும் கொடுக்கப்போவதில்லை. மேற்கின் செல்லப்பிள்ளையான அவருக்கு, இன்னும் ஒருமுறை கால அவகாசம் கிடைக்கப்போவது திண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

இருதரப்புப் போர்க்குற்றங்களையும் மறப்போம் மன்னிப்போம் என்பதன் மூலம் நாம் விளங்கிக்கொள்வது என்ன? 

சரி, ஒரு பேச்சிற்கு இருபக்கத்தாரும் போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம். அப்படியினால், இந்த இருபக்கத்தாரையும் நீதியின் முன் நிறுத்துவதற்குத் தடையாக இருப்பது எது?

சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களில் ஒன்று சிங்கள ராணுவம் மற்றையது விடுதலைப் புலிகள்.

புலிகளின் முக்கியஸ்த்தர்களில் அநேகமானவர்கள் சண்டையிலோ அல்லது சரணடைந்தபின்னரோ கொல்லப்பட்டுவிட்டார்கள், கருணா, கே பீ போன்றவர்களைத்தவிர. ஏனைய சாதாரண போராளிகள் புணர்வாழ்வு என்கிற பெயரில் நடைபிணங்களாக்கப்பட்டு தெருவில் விடப்பட்டுள்ளார்கள். ஆகவே, இவர்களில் எவரும் போர்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு பிரச்சினையில்லை. இதன்படி, ராணுவத்திற்கெத்கிரான தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்கிற காரணத்திற்காக இன்றும் முன்னாள்ப் புலிகள் நீதியின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆக, சிங்கள அரசு இதைச் செய்துதான் வருகிறது.

அடுத்த தரப்பு, சிங்கள அரச ராணுவம். சண்டையில் கொல்லப்பட்ட அல்லது, சரணடைந்தபின்னர் புலிகளால் கொல்லப்பட்ட சாதாரணச் சிப்பாய்களைவிட ராணுவ அணிகளுக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகள் இன்னமும் உயர் பதவிகளிலும், வெளியுறவுத்துறையிலும் இருக்கிறார்கள். இவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை விசாரிப்பதில் இருக்கக் கூடிய தடைகள் என்ன? 

இங்கு குற்றம் சாட்டப்பட்ட இருதரப்பினரையும் நீதியின் முன் நிறுத்துவது சிங்கள அரசிற்கு ஒரு பிரச்சினையாக இருப்பது எப்படி? 

மன்னிப்போம் மறப்போம் என்று ரணிலோ அல்லது அவரது நண்பரான சுமந்திரனோ கூறினாலும்கூட, இன்றுவரை சிங்களம் தனது ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அவற்றிற்கான தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதாகவோ கூறியிருக்கின்றதா? 

அடுத்ததாக, மன்னிப்போம் மறப்போம் என்பதன் மூலம் சிங்கள அரசு செய்ய நினைப்பது என்ன?

1. இருதரப்பிலும் இழைக்கப்பட்ட குற்றங்களைச் சமப்படுத்துவது. அதாவது திட்டமிட்ட வகையில் தமிழினத்திற்கெதிராக மொத்த அரச இயந்திரத்தைப் பாவித்து கடந்த 70 வருடங்களாக சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துவந்த இன ஒடுக்குமுறையையும், சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் சிங்களச் சிவிலியன்கள் மீதான புலிகளின் தாக்குதல்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்து, "நாங்கள் நீங்கள் செய்ததை மன்னித்துவிடுகிறோம், நீங்களும் அப்படியே செய்யவேண்டும்" என்று கேட்பது. இது நிச்சயமாக எமக்குச் சாதகமான ஒரு விடயம் அல்ல, தாம் செய்த ஒரு இனக்கொலையை, புலிகளின் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு நிகராக ஒப்பிட்டு, அதை  முற்றாக மறைத்து மறக்கவைக்கச் சிங்களம் செய்யும் திருகுதாலம்.

2. இப்போர்க்குற்றங்கள் தொடர்பாக தமிழினமும், அவர்களின் அழுத்தத்தின் மூலமாக ஐ. நா அடங்கலான சில சர்வதேச நாடுகளும் தொடர்ந்தும் பேசிவருவது தமது நிலையினைப் பலவீனப்படுத்தி ஒரு கட்டத்தில் சர்வதேச தலையீட்டுடனான போர்குற்ற விசாரணை ஒன்றிற்கு போக நேரிடலாம் என்கிற ஐயத்தினால், தமிழ்மக்கள் இதுபற்றிப் பேசாமல் இருக்க அறிவுறுத்துவது. 

3. நடைபெற்ற போர்க்குற்றங்களை தமிழர்கள் மன்னித்து மறந்துவிட்டால், அவர்களுக்கான தீர்வொன்றைத் தர வேண்டிய தேவை அற்றுப்போவது. ஏனென்றால், இன்றுவரை போர்க்குற்றங்களுக்கான கோரலே சிங்களத் தரப்பின் மீது தீர்வொன்றை முன்வைப்பதற்கான அழுத்தமாக பாவிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான கோரல் ஒன்று இல்லாதவிடத்து, தீர்வொன்றிற்கான அழுத்தமும் இல்லாமல்ப் போய்விடும் என்கிற சிங்களத்தின் நிலைப்பாடு.

இதைச் செய்வதற்குச் சிங்களம் பாவிக்கும் வழிமுறை சாதுரியமானது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற பெயரில் வலம் வரும் ஒரு சிலரை இதற்குப் பாவிக்கிறது. தீர்வொன்று பற்றிப் பேசுகிறோம், செயற்படுகிறோம், இந்தவருட பொங்கலில் வரும் இல்லாவிட்டால் அடுத்த வருடத் தீபாவளியில் வரும் என்று எவர்களை வைத்து தனது காய்நகர்த்தல்களைச் செய்ததோ, அவர்களை வைத்தே "மன்னிப்போம் மறப்போம்" என்பதையும் சொல்கிறது.

இந்த மன்னிப்போம் மறப்போம் சொல்லப்பட்ட காலத்தைப் பார்த்தால் ஐ நா வில் சிங்களத்திற்கெதிராகக் கொண்டுவரப்படப்போகும் இன்னொரு புதிய தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவும், தமது இனவொடுக்கலுக்கான கால அவகாசத்தை எடுக்கவும், உள்நாட்டில் பிரச்சினைக்குற்பட்ட இனங்களுக்கிடையே சமாதானம் உருவாகிவருகிறது என்கிற பிரமையை உருவாக்கவுமே வலிந்து சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆக, முழுக்க முழுக்க சிங்களத்தின் நண்மைகருதி கூறப்பட்ட இச்சொற்றொடர் முற்றான ஏமாற்று வித்தையே அன்றி, உண்மையாகவே பிரச்சினைக்கான தீர்வைத் தரும் நோக்கிலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களை தேற்றும் நோக்கிலோ சொல்லப்படவில்லை என்பது திண்ணம். 

http://globaltamilnews.net/2019/113499/?fbclid=IwAR3P4d_Mx_Zy4ZbA5850PJLa_gjZzWJjRv-IjvPVh6V9MqFV0tC2UMalPxw

கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன கருத்தையே விக்கி அவர்களும் சொல்கிறார், ரகு.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலாவது மன்னிப்பாேம் மறப்பாேம் என்று உதிர்த்தார். உங்கட சட்டம்பி பாேரிலே இதெல்லாம் சகஜம் என்ற சாெல்லுக்குள் முடித்து விட்டார். வெகுவிரைவில் மக்களிட்டை பிச்சைகேட்டு வரத்தானே பாேகினம், அப்ப மக்கள் இதற்கான பதிலை காெடுப்பார்கள். ஆமா, அடுத்த தீபாபலிக்கிடையில் தீர்வு என்று சவால் விட்டவரின் பேச்சு மூச்சைக் காணாேம், அவர் இன்னும் இருக்கிறாரா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 11:37 AM, thulasie said:

தமிழருக்கு  நடந்த அநீதிகள் பற்றி இனிப் பேசக்கூடாது என்கிற தொனியில்  யாரும் பேசவில்லை.

தமிழர், சிங்களவருக்கு நடந்த அநீதிகளைப்பற்றி பேசி காலத்தை வீணாக்காது, மறப்போம் மன்னிப்போம் என்ற வழியில் பயணிப்பதை இப்போது எல்லா  அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள்.

பிற இனங்கள் என்ன துன்பங்களை அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தன் இனம்  அடைந்த துன்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எழுத்து யாழில் வேண்டுமானால் OK.

ஆனால், பல்லினம் வாழும் இலங்கையில் எடுபடாது.

Sorry for saying this.

எடுபடாதோ?! எடுபடவிட உங்களுக்கு விருப்பமில்லையோ!

On 2/21/2019 at 1:20 AM, Justin said:

உங்களுக்கு முதலில் தன்மையாகச் சொல்ல வேண்டியது என் கடமை: மரியாதையான சொற்களைப் பயன்படுத்தப் பழகுங்கள் பொது இடங்களில்!

மந்தையாக, தாசனாக இருந்து விட்டுப் போவது மிக இலகு! சொந்தப் புத்தி (அது இருந்தால்!) பாவித்து உங்கள் நிலைப்பாடுகளை எடுப்பதே சிறப்பு! யாழ் களத்திலும், தாயகத்திலும்  பெரும்பாலோர் அப்படியானவர்களே. அதனால் உங்கள் கருத்துகள் இங்கே அவ்வளவு கவனிக்கப் படுவதில்லை என்பதை அவதானித்திருப்பீர்கள்!

கவனிக்கப் பட வேண்டும் என்பதற்காக உங்கள் குடும்பச் சூழலில் சாதாரணமாகப் புளங்கும் சொற்பிரயோகங்கள் இங்கே வேண்டாம்! கற்பதற்கு வயதில்லை, நாகரீக உரையாடல் என்னவென்று கற்றுக் கொள்ளுங்கள்! 

சொந்த புத்தி  ....புலி எதிர்ப்பு கொள்கை என்றால் அந்த  கருத்து அப்படியே இருக்கட்டும் .
எதிர்கருத்து எழுவதால் தான் ... அவர்கள் புத்தி உள்ளவர்கள் என்றால் ....அது எனக்கு தேவை இல்லை ...
மற்றவர்கள் படிக்கவேண்டும் என்பதை விட யதார்த்தம் என்பது என் நிலைப்பாடு ....

தமிழில் கழுவுதல் என்பது .....அழகான சொல் .... உண்மைகளை மறந்து சிங்களத்துக்கு துணை செய்பவர்களை ....குறிப்பதட்கு ....வேறு சிறந்த தமிழ் சொல் தேவை இல்லை ....என் குடும்பதில் பாவிக்கும் என்று  சொல்வதற்கு ....முதலில் உங்களை சரி பார்க்கவும் ....

நீங்கள் எழுதும் விடயங்களை எத்தனை பேர் இங்கு படிக்கின்றார்கள் .... சொன்னால் நன்றாக இருக்கும் .....
 
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்போம் மறப்போம் என்கிற சுலோகம் உங்களால் பாடப்படுவதன் காரணம் நீங்கள் ஆதரிக்கும் ரணிலும் சுமந்திரனும் அண்மையில் திருவாய் மலர்ந்தருளியதனால்த்தான் என்பது தெளிவு. ஆக, அவர்கள் இருவரும் தமது அடுத்த சுலோகத்தை உச்சரிக்கும்வரை நீங்கள் இந்த பஜனையையே பாடிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். 

ஆனால், தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்  என்று இன்றுவரை கூறிக்கொண்டிருக்கும் சம்பந்தன் அவர்கள் ரணிலின் மன்னிப்போம் மறப்போம் என்கிற பீலாவை முற்றாக நிராகரிப்பதாகக் கூறியிருப்பதோடு, தமிழ் மக்கள் மேல் மட்டுமல்லாமல் சரணடைந்த புலிகள்மீதும் போர்க்குற்றங்களைச் சிங்கள ராணுவம் புரிந்ததென்றும், இதனால் சர்வதேச விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கிறாரே?  

இதுபற்றி நீங்கள் ஒன்றும் பேசுவதில்லையே, ஏன்? 

சுமந்திரன் மட்டும்தான் கூட்டமைப்பு என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது கூட்டமைப்பு என்கிற அரசியல்க் கட்சிக்காக அல்லாமல் சுமந்திரன் என்கிற தனிமனிதருக்கு மட்டுமானதா உங்கள் ஆதரவு?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 3:26 AM, Justin said:

உணர்ச்சிகளை வைத்து நீங்கள் மற்றவர் யாரை ஆதரிக்க வேணுமெண்டு கோடு போட்டால், அதே மாதிரியான எதிர்பார்ப்பை மற்றவரும் எதிர் பார்க்க முடியும் என்பதே fair game என்ற கருத்து! இதில் மிரட்டல் எங்கே வந்தது? 

இதுவே என் கடைசிப் பதிவு இங்கே! 

அப்படியென்றால் உங்கள் அபிமான சம்சும்மும் ரணிலும் சொன்ன மறப்போம் மன்னிப்போம் என்ற போதனையை பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ஏற்கத்தான் வேண்டும் என்று சொல்ல துளசி யார்? அவருக்காக கேட்கப்பட்ட கேள்விக்காக குத்தி முறியும் உங்களின் அறிவுரைகளை நாங்கள் ஏற்கவேண்டும் என்று எப்படி சட்டம்பி எதிர்பார்க்கிறீர்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.