Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான ஒரு தொடர். விரைவாக முடித்து விட்டீர்கள்...ஊரில் போய் நிரந்தரமாய் மனைவி,மகனுடன் இருப்பது தான் "சுயத்தை தேடுதல்" என்று நினைத்தேன் 
 

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்குமே தொய்வில்லாத ஒரு எழுத்து நடை.....!

ஒரு அழகிய அன்னப்பறவையின்நடையைப் போல....நகர்ந்து செல்லும் சம்பவங்களில் தொகுப்பு..!

ஒரு விலையில்லாத புதையலைத் தொலைத்த தலைமுறையில்.....நானும் ஒருவன்  என்ற ஏக்கம்!

விடியாதா என்று...கீழ்த்திசை நோக்கிக் காத்திருக்கும் வலசைப் பறவைகளின் மனநிலை....!

அந்தப் பறவையின் சிறகுகளுக்கு......வலுவும்...நம்பிக்கையும் ஊட்டி நிற்கின்றது  உங்கள் கதை...!

நான் எதிர்பார்க்காத முடிவு...!

வாழ்த்துக்கள்..மல்லிகை வாசம்...! 

Posted
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புதையல் கிடைக்குமா கிடைக்காதா எண்டு எண்ணிக்கொண்டிருக்க மிக அருமையான எதிர்பாரா முடிவோடு கதையை நேர்த்தியாக முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக, அந்த முடிவு தான் இந்தக் கதைக்கான விதை. உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி சுமே அக்கா. 😊

Posted
10 hours ago, ரதி said:

அருமையான ஒரு தொடர். விரைவாக முடித்து விட்டீர்கள்...ஊரில் போய் நிரந்தரமாய் மனைவி,மகனுடன் இருப்பது தான் "சுயத்தை தேடுதல்" என்று நினைத்தேன் 
 

உண்மையிலேயே வசந்தனும், கல்யாணியும் மகனை வளர்த்து ஆளாக்கிவிட்டு இன்னும் ஓர் 10 வருடங்களில் ஊருக்குப் போய் அங்கேயே நிரந்தரமாக வசிப்பதுடன் முடிப்பதாக முதலில் எண்ணியிருந்தேன். எனினும், இதற்கும் முதற்படி சுயம் பற்றிய தெளிவு தான் என்பதால், முயற்சிகள் தொடரும் என்று சுருக்கமாக முடித்துவிட்டு மீதியை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிட்டேன்.

கருத்துக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி, ரதி.😊

 

Posted
9 hours ago, புங்கையூரன் said:

ஒரு விலையில்லாத புதையலைத் தொலைத்த தலைமுறையில்.....நானும் ஒருவன்  என்ற ஏக்கம்!

விடியாதா என்று...கீழ்த்திசை நோக்கிக் காத்திருக்கும் வலசைப் பறவைகளின் மனநிலை....!

அந்தப் பறவையின் சிறகுகளுக்கு......வலுவும்...நம்பிக்கையும் ஊட்டி நிற்கின்றது  உங்கள் கதை...!

நான் எதிர்பார்க்காத முடிவு...!

புங்கை அண்ணா, நான் எதை மனதில் வைத்து இத்தொடரை எழுதினோனோ அதை உங்கள் எழுத்துக்களில் காண்பதில் மகிழ்ச்சி! இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்?!

உங்களது ஏக்கமும், விடியலுக்கான காத்திருப்பும் என்னைப் போல் பலருக்கும் உண்டு. 

அதைக் கதை வடிவில் இங்கே பகிர்ந்தது எனக்கு மிகுந்த மன நிறைவைக் கொடுத்துள்ளது.

மீண்டும் உங்கள் ஊக்குவிப்புக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா. 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/8/2019 at 8:57 PM, மல்லிகை வாசம் said:

மிக நல்ல நண்பனாகவும் இருந்த ஒருவரின் மாரடைப்பால் ஏற்பட்ட மரணச்செய்தி தான் அது. அவனை விடவும் சில வருடங்களே மூத்தவரான அவர் தற்போது அவனது ஊரில் மருத்துவ சேவை வழங்கும் பணியை ஆற்றிவந்திருந்தார்.

இவரது சகோதரர் சிட்னியில் தான் வசிக்கின்றார் ...நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்....

 மிகவும் அருமையான ஒரு தொடர் .
சிட்னியில் எங்களோட மின்கில் (mingle)பண்ணியிருந்திருந்தால் இங்கயும் புதையலை தேடியிருக்கலாம்...😀.

Posted
9 hours ago, putthan said:

இவரது சகோதரர் சிட்னியில் தான் வசிக்கின்றார் ...நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்....

 மிகவும் அருமையான ஒரு தொடர் .
சிட்னியில் எங்களோட மின்கில் (mingle)பண்ணியிருந்திருந்தால் இங்கயும் புதையலை தேடியிருக்கலாம்...😀.

அதுவும் சரி தான் புத்தன். சிலருக்கு இருக்கும் இடத்திலேயே அந்தத் தெளிவு கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு பயணங்கள் தான் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. 😊

அப்ப புத்தனிட்ட வந்தா போதி மரத்தடிக்குக் கீழ வந்தது போலிருக்கும் என்கிறீர்கள். வசந்தனிட்ட சொல்லிடுறேன்! 😃

Posted
On 3/4/2019 at 1:38 AM, ஈழப்பிரியன் said:

எனக்கு கனவு காண்பதில் அலாதி பிரியம்.முழித்த பின்பும் கனவு நினைவில் தொடரும்.
சில கனவுகள் ஏனடா முழித்தோம் என்றிருக்கும்.

சில கனவுகள் சுவாரசியமானவை. சம்பந்தமில்லாத சில சம்பவங்களை இணைத்தும் கனவுகள் வரும். கனவு கலைந்ததும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்தால் குழப்பம் தான் மிஞ்சும். மனித மூளை எவ்வளவு சிக்கலான இணைப்புக்களை ஏற்படுத்தி இப்படி வித்தை ஜாலங்களைக் காட்டுகிறது என்று வியக்க வைக்கும்! 😊

Posted
On 3/9/2019 at 5:52 PM, புங்கையூரன் said:

ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வந்த ஒருவரை...சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன்!

இது தேவதைகள் வாழும் தேசம் என்று சிட்னியைக் கூறினார்!

எனக்கும் சிட்னி வந்த ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, புங்கை அண்ணா! போகப்போகத் தான் புரிந்து கொண்டேன், விடுமுறைக்கு வந்து போக மட்டும் சொர்க்கபுரி போல் இருக்கும் என்று! 😊🤣

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.