Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன் நீங்கள் அட்டையை  ஒரு தட்டில் வைத்து தனியாக படம் எடுத்து போட்டிருக்க வேண்டும் ..........!

நான் எழுதிய சில கதைகளுக்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்புகள் இருக்குது.....!  😁

--- காரும் கதியாலும் கதையில் அவர் பொம்பிளையளுக்கு கெத்து காட்ட வெளிக்கிட்டு பாப்பாவில் இருந்து விழுவார்....!

---- சான்றிதழ் கதையில் ஆரம்பமே உந்த அட்டை  கடிதான்......!

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை ஊக்கமளித்து தொடர்ந்து எழுத ஒத்தாசை புரிந்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி.இன்னும் கொஞ்ச தூரம் தான் தொடர்ந்தும் ஊக்கம் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுவரை ஊக்கமளித்து தொடர்ந்து எழுத ஒத்தாசை புரிந்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி.இன்னும் கொஞ்ச தூரம் தான் தொடர்ந்தும் ஊக்கம் தாருங்கள்.

æ©å®ç¾å¾160822ï¼ä½ è¥å¯¹æ认çï¼æå¿è¿ä½ ææ·±

😄

ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்..

நன்றி நன்றி நன்றி.
என்ன விடவிட நிரம்புதில்ல.

6 hours ago, suvy said:

ஈழப்பிரியன் நீங்கள் அட்டையை  ஒரு தட்டில் வைத்து தனியாக படம் எடுத்து போட்டிருக்க வேண்டும் ..........!

நான் எழுதிய சில கதைகளுக்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்புகள் இருக்குது.....!  😁

--- காரும் கதியாலும் கதையில் அவர் பொம்பிளையளுக்கு கெத்து காட்ட வெளிக்கிட்டு பாப்பாவில் இருந்து விழுவார்....!

---- சான்றிதழ் கதையில் ஆரம்பமே உந்த அட்டை  கடிதான்......!

நீங்கள் கதையாக எழுதியிருக்கிறீர்கள்.நான் நடந்ததை எழுதியிருக்கிறேன்.அவ்வளவு தான்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி நன்றி நன்றி.
என்ன விடவிட நிரம்புதில்ல.

அதை பாத்துக்கொண்டு எழுதவும்......உற்சாகம்  தானாய் வரும்......🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, குமாரசாமி said:

æ©å®ç¾å¾160822ï¼ä½ è¥å¯¹æ认çï¼æå¿è¿ä½ ææ·±

😄

என்னங்க இது, 'சர்பத்' இந்தக் கலர்ல இருக்கு..?  vil-eauoeil.gif

எங்க ஊர்ல ஆரஞ்ச் கலர்லதான் இருக்கும்...!

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                    திருகோணமலை நோக்கி பயணம் தொடங்கிய போது எல்லோரும் மிகவும் களைப்படைந்து ஆளாளின் தோள்களில் சரிந்துவிட்டனர்.சாரதி வானிலேயே இருந்தபடியால் அவர் உற்சாகமாக இருந்தார். எனக்கும் அலுப்பாக இருந்தாலும் மிகவும் கஸ்டப்பட்டு சாரதியுடன் பேசிக் கொண்டே போனேன்.இடையில் நாங்கள் தங்குமிடத்திற்கு தொடர்பு கொண்டு இரவு சாப்பாடு பற்றி கேட்ட போது என்ன வேணுமென்று சொன்னால் எல்லாம் வாங்கி செய்து வைத்திருப்பதாக சொன்னார்கள்.சோறும் கடலுணவும் எல்லோரும் விரும்பினார்கள்.

                                    வழியில் சுடுதண்ணி கிணறு பார்த்தோம்.ஆனாலும் யானை பார்க்க போன இடத்தில் வாகனத்தில் இருந்து களைத்து விட்டதால் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.அங்கிருந்து நேராக தங்குமிடம் போனோம்.

                                   பெரியதொரு மாடிவீடு.கடற்கரை.போய் இறங்கியதும் பொறுப்பாக ஒரு சிங்களவரும் சமையலுக்கு ஒரு இளம் தமிழரும் இருந்தார்கள்.இவர் மலையகத்தை சேர்ந்தவர்.நீண்டகாலமாக இங்கிருக்கிறார்.சமையலில் மிகவும் கெட்டிக்காரன்.போனவுடன் சுடச்சுட தேநீர் வடை சம்பல் அருமையாக இருந்தது.கடற்கரையில் குளிப்பு.வந்திருந்து அடுத்தநாள் திட்டம்.ஏற்கனவே எங்கெங்கே என்னஎன்னன செய்ய வேண்டுமென்பதை மருமகனும் மகள்மாரும் திட்டம் போட்டிருந்தனர்.

                                 அவர்கள் எங்கே போனாலும் ஆழ்கடல் போய் முதுகில் சுவாச சிலிண்டர் கட்டி தண்ணீருக்கடியில் போய் பார்த்தால்த் தான் சந்தோசம்.அதற்காக பயிற்சி எடுத்து சான்றிதழும் வைத்திருந்தார்கள்.இங்கும் சுழியோடி பார்க்க கூடிய இடங்களை தெரிவு செய்திருந்தனர்.இரவு இருந்து கதைக்கும் போது அங்கே போனால் நீங்கள் மட்டும் தான் அனுபவிக்கலாம்.புறாத்தீவு PIGEON ISLAND என்று ஒரு தீவு இருக்கிறது.திருகோணமலை வரும் எவரும் இங்கு போகாமல் போவதில்லை என்று சொல்லச் சொல்ல எல்லோருக்கும் அந்த தீவைப் போய் பார்க்கலாம் என்று சொல்லி பிள்ளைகளின் முடிவை மாற்றிவிட்டார்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் தானே கூட்டிப் போவதாக சொன்னார்.

                                 இரவு சாப்பாட்டுக்கு இறால் மீன் பருப்பு அப்பளம் மிளகாய் பொரியல் சோறு என்று எல்லோரையும் அசத்திவிட்டார்.எல்லோரும் மீண்டும் மீண்டும் போட்டு அனுபவித்து சாப்பிட்டார்கள்.அவரின் ஒத்தாசையைப் பார்த்து அவருக்கு கொடுக்க இருந்த பணத்தை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகள் முடிவு எடுத்திருந்தனர்.இரவு விடை பெற்று அவரின் இருப்பிடத்துக்கு போக வெளிக்கிட கூப்பிட்டு பணத்தைக் கொடுத்தேன்.மிகவும் சந்தோமடைந்தார்.

                               அடுத்த நாள் காலை நாங்கள் எழும்ப முதலே வந்து இடியப்பம் மீன்கறி சொதி பருப்பு சம்பல் என்று அசத்தியிருந்தார்.இங்கு வேலையில்லாத நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறார்.மிகவும் துடிதுடிப்பானவர்.புறாத்தீவுக்கு போவதற்கு தனது நண்பர்கள் மூலமாக சகல ஒழுங்குகளும் செய்திருந்தார்.

                              புறாத்தீவு பார்க்க போக வெளிநாட்டவருக்கு 4000ரூபாவும் உள்ளூர் வாசிகளுக்கு 100 ரூபா (சரியாக நினைவில்லை).அங்கே போய் இறங்கியதும் ஒருவரும் வரவேண்டாம் என்று ரிக்கற் எடுக்க இவர் போனால் எல்லோரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டார்கள்.எல்லோரும் போனவுடன் அடையாள அட்டைகளைக் கேட்டார்.இவர் பாய்ந்துவிழுந்து என்னையா கடலுக்கு போகும் போது யாராவது இதுகளைக் கொண்டு வருவார்களா சிங்கள ஆட்கள் என்றா ஒன்றும் கேட்க மாட்டீர்கள் தமிழாக்கள் என்றபடியால் அதைத் தா இதைத் தா என்று கரைச்சல் வேறை என்று சத்தம் போட தொடங்கிவிட்டார்.உள்ளே இருந்தவரும் எல்லோரையும் வடிவாக பார்த்து விட்டு அரைகுறைத் தமிழில் எனது மூத்த மகளை கூப்பிட்டு எங்கே படிக்கிறீர்கள் என்று அரைகுறை தமிழில் கேட்டார்.
மகளும் இது தான் சாட்டென்று
நான்படித்து முடித்து கோப்பாய் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறேன்.வந்த நேரத்திலிருந்து கரைச்சல் தாறீங்கள் என்ன பிரச்சனை என்றதும் உள்ளிருந்தவர் புரிந்துதோ என்னவோ தமிழில் இப்படி கதைத்தவுடன் கொஞ்சநேரம் தறுபுறு என்று முழிசிவிட்டு ரிக்கட்டைத் தந்துவிட்டார்.

                                                 ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த வள்ளக்காரரிடம் கண்ணாடி மூச்செடுக்கிற சாமானுகள் கால் சப்பாத்து எல்லாம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு இரண்டு வள்ளத்தில் புறப்பட்டோம் .இத்தனை சாமன்களும் அவர்கள் கொண்டுவந்த பொதியில் இருந்தது.தவறுப்பட்டபடியால் வாடகைக்கு எடுக்க வேண்டியாயிற்று.வள்ளத்தில் ஏறப் போனால் மாமியை ஏற்றுவதில் பிரச்சனை.ஒரு மாதிரி மாட்டேன் மாட்டேன் என தூக்கி ஏற்றியாச்சு.இரண்டு வள்ளங்களும் புறாத்தீவு நோக்கி போகிறது.

                                               அங்கே வரவேற்பதற்கு இயமன் பாசக்கயிறுடன் நிற்கிறான்.
தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

என்னங்க இது, 'சர்பத்' இந்தக் கலர்ல இருக்கு..?  vil-eauoeil.gif

எங்க ஊர்ல ஆரஞ்ச் கலர்லதான் இருக்கும்...!

கொஞசம் எடுத்தா பின்பு தான் நிறம் நிறமா தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பவும் அவன் கயிற்றுடனா நிக்கிறான், பாவம் இன்னும் ஏழையாகவே இருக்கிறான். நீங்கள் தொடருங்கள்.நன்றாக இருக்கிறது.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, suvy said:

இப்பவும் அவன் கயிற்றுடனா நிக்கிறான், பாவம் இன்னும் ஏழையாகவே இருக்கிறான். நீங்கள் தொடருங்கள்.நன்றாக இருக்கிறது.......!  😁

இப்போது அவன் பாவமென்கிறீர்கள்.
நாளைய தொடரில் யார் பாவமென்பது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யமனை வென்று வந்துள்ளீர்கள் சீக்கிரம் தொடருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, நிலாமதி said:

யமனை வென்று வந்துள்ளீர்கள் சீக்கிரம் தொடருங்கள் 

நாங்க போய் குதியன்குத்தி போட்டு பிரச்சனை வர யமனைச் சாட்டுறது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/17/2019 at 4:03 AM, குமாரசாமி said:

எங்கையும் எப்பவும் குடுத்து பழக்கினால் உதுதான்  பிரச்சனை கண்டியளோ.....
 குடுத்தவன் குடுக்காட்டில்  வெட்டுக்கொத்து பகையிலை தான் முடியுமெண்டு ஊரிலை எங்கடை பழசுகள் அடிக்கடி சொல்லுவினம்...😎

நம்மட சிலோன்காரன்கள் கொடுத்து பழக்கி போட்டாங்கள் எல்லா இனத்தவனும் சுளியனுகள் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

உள்ளே இருந்தவரும் எல்லோரையும் வடிவாக பார்த்து விட்டு அரைகுறைத் தமிழில் எனது மூத்த மகளை கூப்பிட்டு எங்கே படிக்கிறீர்கள் என்று அரைகுறை தமிழில் கேட்டார்.
மகளும் இது தான் சாட்டென்று
நான்படித்து முடித்து கோப்பாய் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறேன்.வந்த நேரத்திலிருந்து கரைச்சல் தாறீங்கள் என்ன பிரச்சனை என்றதும் உள்ளிருந்தவர் புரிந்துதோ என்னவோ தமிழில் இப்படி கதைத்தவுடன் கொஞ்சநேரம் தறுபுறு என்று முழிசிவிட்டு ரிக்கட்டைத் தந்துவிட்டார்.

சில இடங்களில்... நாங்கள் இதை எப்படி வெட்டி ஆடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது... பிள்ளைகள்... அந்தப் பிரச்சினையை, இலகுவாக சமாளித்து விடுவார்கள்.
உங்கள் மகளின்... சாதுரியத்தால், புறாத்தீவை பார்த்தது மகிழ்ச்சி. :)

Posted

புறாத்தீவு பார்க்க போக வெளிநாட்டவருக்கு 4000ரூபாவும் உள்ளூர் வாசிகளுக்கு 100

இப்போது நாங்கள் சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் ரிக்கற்தான்.நான் திருமலையில் வசித்த போது புறாமலைக்குப் போயிருக்கிறேன்.அப்போது போட்க்கு மட்டும்தான் காசு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

சில இடங்களில்... நாங்கள் இதை எப்படி வெட்டி ஆடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது... பிள்ளைகள்... அந்தப் பிரச்சினையை, இலகுவாக சமாளித்து விடுவார்கள்.
உங்கள் மகளின்... சாதுரியத்தால், புறாத்தீவை பார்த்தது மகிழ்ச்சி. :)

எப்படியும் பார்த்திருப்போம்.ஆனால் 4000ரூபாபடி.

இங்கே தமிழ் சரளமாக பேச தெரிந்தபடியால் தப்பித்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஜெகதா துரை said:

புறாத்தீவு பார்க்க போக வெளிநாட்டவருக்கு 4000ரூபாவும் உள்ளூர் வாசிகளுக்கு 100

இப்போது நாங்கள் சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் ரிக்கற்தான்.நான் திருமலையில் வசித்த போது புறாமலைக்குப் போயிருக்கிறேன்.அப்போது போட்க்கு மட்டும்தான் காசு. 

புறாத்தீவு முன்னர் தேடுவாரற்றுக்கிடந்திருக்கலாம் இப்போ தேசிய பூங்காவாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மாத்திரமல்ல சிகிரியாவுக்கும் 4000 ரூபா.இங்கே பதிந்து தான் உள் அனுமதிக்கிறார்கள்.அதனால் தேசிய அடையாளஅட்டை பிள்ளைகளுக்கு இல்லாததால் அவர்களுக்கு தலா 4000ரூபாபடி கட்ட வேண்டி வந்தது.
இரு இடங்களிலும் வெளிநாட்டினர் ரொம்ப பேர் வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                        புறாத்தீவு மிகவும் சிறிய தீவாக இருந்தது.மாமியைத் தவிர மற்றைய எல்லோரும் தண்ணீருக்குள் இறங்கினார்கள்.தண்ணீருக்குள் இறங்கினால் கால் வைக்க முடியாது.அந்தளவு கல்வெட்டு போன எல்லோருக்கும் காலில் வெட்டுக்காயம்.
    
                                        நல்லவேளையாக பிள்ளைகள் கால்சப்பாத்து கண் வாய்க்கு போட என்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.அவர்கள் தங்கள் பாட்டில் போயிருந்தனர்.இடையில் நாங்கள் நின்ற இடத்துக்கு வந்து கண்ணாடியை ஒருக்கால் போட்டுப் பாருங்கோ என்றார்கள்.நானும் போட்டுக் கொண்டு தண்ணீருக்குள் பார்க்க மிகவும் அதிசயமாக இருந்தது.

                                        எனக்கு 15-20 யார் தூரத்துக்கு நீந்தத் தெரியுமே தவிர அதிக தூரம் நீந்த முடியாது.இருந்தாலும் அவர்கள் போட்டிருந்த சினோகில் என்றதை எப்படி போடுவது என்று கேட்டு போட்டுக் கொண்டு சினோக்கில் போட்டு நீந்துவதற்கென்று போட்ட இடத்துக்கு போனேன்.

                                       வழமையாக நீந்துவதை விட சினோக்கிள் போட்டிருந்தால் சுலபமாக நீந்தலாம்.நானும் போட்டுக் கொண்டு அந்த இடத்துக்குப் போக தண்ணீருக்குள் தலை இருந்ததால் நிமிர்ந்தே பார்க்கவில்லை.அலைக்கு அடித்து அடித்து நான் தனியே மற்றவர்கள் நின்ற இடத்திலிருந்து தனியே மிகவும் ஆழமான இடத்துக்கு போய்விட்டேன்.

                                        நான் போகபோக மகளுக்கு ஏதொ நடக்கப் போகிறதென்று தெரிந்துவிட்டது.தண்ணீருக்குள் தலை அமிழ்ந்திருந்ததால் கூப்பிட்டதும் கேட்கவில்லை.கீழேயுள்ள பவளப்பாறைகள் விதவிதமான நிறங்களுடன் பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது.இதனால் எங்கே நிற்கிறேன் என்று கூட அறிய முற்படவில்லை.

                                       வாயால் மூச்செடுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் தலையை தண்ணீருக்குள் விட்டிருக்கிறேன் போல மூச்சை உள்வாங்கும் போது மூச்சுக்கு பதிலாக உப்புத் தண்ணீர் குடித்து பிரக்கேறி தெரிந்த நீச்சலும் போய் தாழத் தொடங்கிவிட்டேன்.பிரக்கடித்ததோடு சினோக்கிளையும் கழற்றிவிட்டேன்.நீந்த முயற்சிக்கிறேன் உடம்ப சோர்ந்து கொண்டு போகிறது.பக்கத்தில் உதவ யாருமே இல்லை.என் வாழ்வு கடேசி நிமிடங்களே தெரிகிறது.ஏற்கனவே ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்து மகள் நான் நின்ற இடம் நோக்கி வந்திருக்கிறார்.நான் தாண்டு தாண்டு எழும்ப மகள் மேலே மேலே தள்ளி சினோக்கிளைப் போடுங்கோ என்கிறாள்.என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.சரி ஒன்றும் செய்ய வேண்டாம் பயப்படாதைங்கோ யாரையும் பிடிச்சுப் போடாதைங்கோ என்று நான் தாளத் தாள மேலே தள்ளித் தள்ளி ஒரு மாதிரி கரை சேர்ந்தோம்.எட்டக் கூடிய தண்ணீரில் கூட என்னால் நடக்க முடியவில்லை.இதுகளை கரையிலிருந்து எமதுறவுகள் துடிதுடிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நிறைய உப்புத் தண்ணி குடித்திட்டார் தண்ணி போத்திலை எடுத்துக் கொண்டு வாங்கோ நிறைய தண்ணி குடிக்க வேணும் என்று மகள் சொல்ல ஒரு போத்தலை எடுக்க 4-5 பேர் ஓட்டம்.

                                                தள்ளாடித் தள்ளாடி கரைக்கு வர மனைவியும் ஓடி வாற.நானும் ஏதோ என்னைத் தான் பிடிக்க வாறாவாக்கும் என்று பார்த்தா வந்த மனுசி இத்தனை பேர் நிக்கினம் நீங்களொராள் தான் இவ்வளவு தூரம் போயிருக்கிறியள் சுதி காட்டுறதுக்கும் ஒரு அளவில்லையோ என்று நுள்ளி எடுத்துப் போட்டா.எல்லோர் முகங்களிலும் கோபமும் சோகமும்.இதற்கு மேல் அங்கிருக்க எவருக்குமே மனசில்லை.அத்தோடு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாலும் ஒவ்வொரு தடவையும் என்னைப் பார்க்கும் போதும் சோகமாக பார்க்கிறார்கள்.எவருக்கும் எதையும் ரசித்து செய்ய மனமில்லை.ஏறத்தாள எல்லோர் கண் முன்னேயும் போய்வந்த உயிரல்லவா.நான் எங்கே போனாலும் எனக்கு பின்னால் யாராவது ஒருத்தர்.ஒன்றுக்கு போனால் கூட 4ம் வகுப்பு படிக்கும் பெறாமகன் நானும் வாறதா என்று கேட்கிறான்.எனக்கு அது பாசமா?கேலியா என்று தெரியவில்லை.பாசமாகவே எடுத்துக் கொண்டேன்.இதை எழுதும் போது கூட கண்கள் கலங்குகின்றன.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகக் கவனம் தண்ணீர் என்பது சாதாரணமான விடயமல்ல. உங்களுக்கு நல்ல விதி இருந்திருக்கு,அத்துடன் மகளின் சமயோசித புத்தியும் தகுந்த நேரத்தில் செயல் பட்டிருக்கு........!   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புறாத் தீவுக்கு நானும் போயிருந்தேன் ...அந்த நேரம் ஆமி அந்தப் பகுதியில் இருந்தான்...போட்டுக்கு மட்டும் தான் காசு கொடுத்தோம்...தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

மிகக் கவனம் தண்ணீர் என்பது சாதாரணமான விடயமல்ல. உங்களுக்கு நல்ல விதி இருந்திருக்கு,அத்துடன் மகளின் சமயோசித புத்தியும் தகுந்த நேரத்தில் செயல் பட்டிருக்கு........!   

நேற்று யமன் பாவம் என்றீர்கள்.இன்று யார் பாவம்?

2 hours ago, ரதி said:

புறாத் தீவுக்கு நானும் போயிருந்தேன் ...அந்த நேரம் ஆமி அந்தப் பகுதியில் இருந்தான்...போட்டுக்கு மட்டும் தான் காசு கொடுத்தோம்...தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா. 

இப்போது அது தேசிய பூங்காவாக்கப்பட்டு நிறைய சம்பாதிக்கிறார்கள்.வாங்கிற பணத்துக்கு உயரமான பாதுகாப்பு அரண் அமைத்து லைவ்காட் என்று பயிற்சி எடுத்தவர்களை வேலைக்கு வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/18/2019 at 6:09 PM, ஈழப்பிரியன் said:

புறாத்தீவு பார்க்க போக வெளிநாட்டவருக்கு 4000ரூபாவும் உள்ளூர் வாசிகளுக்கு 100 ரூபா (சரியாக நினைவில்லை).அங்கே போய் இறங்கியதும் ஒருவரும் வரவேண்டாம் என்று ரிக்கற் எடுக்க இவர் போனால் எல்லோரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டார்கள்.எல்லோரும் போனவுடன் அடையாள அட்டைகளைக் கேட்டார்.இவர் பாய்ந்துவிழுந்து என்னையா கடலுக்கு போகும் போது யாராவது இதுகளைக் கொண்டு வருவார்களா சிங்கள ஆட்கள் என்றா ஒன்றும் கேட்க மாட்டீர்கள் தமிழாக்கள் என்றபடியால் அதைத் தா இதைத் தா என்று கரைச்சல் வேறை என்று சத்தம் போட தொடங்கிவிட்டார்.உள்ளே இருந்தவரும் எல்லோரையும் வடிவாக பார்த்து விட்டு அரைகுறைத் தமிழில் எனது மூத்த மகளை கூப்பிட்டு எங்கே படிக்கிறீர்கள் என்று அரைகுறை தமிழில் கேட்டார்.
மகளும் இது தான் சாட்டென்று
நான்படித்து முடித்து கோப்பாய் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறேன்.வந்த நேரத்திலிருந்து கரைச்சல் தாறீங்கள் என்ன பிரச்சனை என்றதும் உள்ளிருந்தவர் புரிந்துதோ என்னவோ தமிழில் இப்படி கதைத்தவுடன் கொஞ்சநேரம் தறுபுறு என்று முழிசிவிட்டு ரிக்கட்டைத் தந்துவிட்டார்.

தேப்பனை மாதிரியே பிள்ளையும் பேக்காய்.....அது சரி புலிக்குபிறந்தது பூனையாகுமா? 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

தேப்பனை மாதிரியே பிள்ளையும் பேக்காய்.....அது சரி புலிக்குபிறந்தது பூனையாகுமா? 😄

ஏற்கனவே மூழ்கி எழும்பி வந்துள்ளேன்.திரும்பவும் பப்பாவில ஏத்திறீங்களே?நியாயமா ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே மூழ்கி எழும்பி வந்துள்ளேன்.திரும்பவும் பப்பாவில ஏத்திறீங்களே?நியாயமா ஐயா?

என்னையா இது?

விசயம் இருக்கிறவனைத்தானே பப்பாவிலை ஏத்துறம்...😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

என்னையா இது?

விசயம் இருக்கிறவனைத்தானே பப்பாவிலை ஏத்துறம்...😂

ஏத்துங்கோ ஏத்துங்கோ. சொன்னால் கேக்கவா போறீங்கள்.
விழுந்து பிரண்டு போய் கிடக்கிறது நான் தானே
ஏத்துங்கோ ஏத்துங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.