Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு சீனா தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு சீனா தடை

போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது.

Ethiopian.jpg

சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

போயிங் மற்றும் அமெரிக்காவின் எப்.ஏ.ஏவிடம் பேசி, பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம். மறுபுறம் இதுதொடர்பாக போயிங் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகிமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/51670

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர், மலேசியாவை தொடர்ந்து, இன்று பகல் முதல் பிரிட்டிஸ் வான் பரப்பில் தடை.

அதாவது, இந்த விமானங்கள் வைத்திருக்கும் நிறுவனங்களிலில் உள்ள மக்ஸ் ரக விமானங்கள் பிரிட்டன் வர முடியாது.

எத்தியோப்பியாவில விழுந்து நொறுங்கியது, புத்தம் புது விமானம் எண்டது தான் இந்த நிலைமைக்கு காரணம். பழசு எண்டால், சேவிஸ் செய்யல்ல, பைலட்டில பிழை எண்டு முடிச்சிருப்பினம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இதே வகை விமானத்தில் பறந்து போயிருக்கேன். இப்ப பயந்து போயிருக்கேன். 😯

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

அண்மையில் இதே வகை விமானத்தில் பறந்து போயிருக்கேன். இப்ப பயந்து போயிருக்கேன். 😯

நாங்களும், நெடுக்கர் பறந்து போனாரே, இப்ப பயந்து போனாரே எண்டு பாடப்போறம்... 🤗

  • கருத்துக்கள உறவுகள்

போயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான பயணியர் நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன.

போயிங் மேக்ஸ் 8 ரக பயணியர் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பேர் பலியானதை தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது.

5 மாதங்களுக்குள் இந்த ரக பயணியர் விமானம் விபத்திற்குள்ளாவது இது இரண்டாவது முறை.

உலகிலேயே 6வது மிக பெரிய, விறுவிறுப்பாக இயங்குகின்ற சிங்கப்பூரின் சான்கி விமான நிலையம் ஐரோப்பாவோடும், அமெரிக்காவோடும் ஆசியவை இணைக்கின்ற முக்கிய விமான முனையமாகும்.

இங்கிருந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இத்தகைய பெரிய விமானத்தை சில நிறுவனங்கள்தான் இயக்கி வருகின்றன.

போயிங் விமானம்படத்தின் காப்புரிமை Reuters

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் எதையும் எந்தவொரு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களும் இயக்கவில்லை. சில்க்ஏர் மற்றும் ஃபீஜி ஏர்வேய்ஸ் என்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இவற்றை ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கி வருகின்றன.

இந்த விமானத்திலுள்ள பாதுகாப்பு ஆபத்துக்களை மீளாய்வு செய்து,மேலதிக தகவல்களை இந்த நிறுவனம் பெறுவது வரை இந்த தற்காலிக தடை அமலில் இருக்கும் என்று ஆஸ்திரேலிய பயணியர் விமான பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் ஷான் கார்மோடி கூறியுள்ளார்.

இந்த விபத்தை தொடர்ந்து, உலகிலுள்ள பல விமான நிறுவனங்கள் மேக்ஸ் 8 ரக விமானத்தை ஏற்கெனவே இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளன.

தென் கொரியாவில் மேக்ஸ் 8 ரக விமானத்தை கொண்டிருக்கும் ஒரேயோரு விமான நிறுவனமான ஈஸ்டர் ஜெட் நிறுவனத்திடம், அதன் விமானங்களை புதன்க்கிழமை முதல் நிறுத்தி வைக்க அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளதாக ஏஃஎப்பி நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நொறுங்கி விழந்த இடத்தில் இருந்து போயிங் 737 ரக விமானத்தின் கறுப்புப் பெட்டியும், விமானி அறையில் உள்ள குரல் பதிவு கருவியும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

வரைபடம்

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தினையடுத்து அங்கு பல விமானங்கள் தரையிரக்கப்பட்டன. அந்த விமானத்தில்கென்யா, எத்தியோப்பியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

நடந்தது என்ன?

எத்தியோப்பிய விமானம் விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் விமான ஓட்டுநர் சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

"தற்போதைய சூழலில் எதுவும் சொல்ல முடியாது. விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்" என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் டெவோல்டே ஜெப்ரிமரியம் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-47540031

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நாங்களும், நெடுக்கர் பறந்து போனாரே, இப்ப பயந்து போனாரே எண்டு பாடப்போறம்... 🤗

Image may contain: sky, outdoor and nature

கட்டுநாயக்க பிரதேசத்துக்கு மேலால். இதுக்க விழுந்திருந்தால்..  

Image may contain: sky, aeroplane and outdoor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏர்பஸ் 380 துலையப்போவுது எண்டு சந்தோசப்பட்ட போயிங் கொம்பனி  இப்பிடியொரு தலையிடி வருமெண்டு கனவிலையும் நினைச்சிருக்காது....
அவுஸ்ரேலியாவும் உந்த விமானத்தை பறக்கக்கூடாதெண்டு நிப்பாட்டிப்போட்டுதாம்.....இப்ப ஐரோப்பிய யூனியனும் ஒட்டுமொத்தமாய் தடை விதிச்சிட்டுதாம்..... டொனால்ட் தம்பர் இதுகளை கேள்விப்பட்டவுடனை ரிவிட்டரிலை நாயாய் பேயாய் குழம்பீட்டாராம்..😎

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சாமி எனது மகளும் போயிங்கில் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்களே.

28 minutes ago, குமாரசாமி said:

ஏர்பஸ் 380 துலையப்போவுது எண்டு சந்தோசப்பட்ட போயிங் கொம்பனி  இப்பிடியொரு தலையிடி வருமெண்டு கனவிலையும் நினைச்சிருக்காது....
அவுஸ்ரேலியாவும் உந்த விமானத்தை பறக்கக்கூடாதெண்டு நிப்பாட்டிப்போட்டுதாம்.....இப்ப ஐரோப்பிய யூனியனும் ஒட்டுமொத்தமாய் தடை விதிச்சிட்டுதாம்..... டொனால்ட் தம்பர் இதுகளை கேள்விப்பட்டவுடனை ரிவிட்டரிலை நாயாய் பேயாய் குழம்பீட்டாராம்..😎

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயோ சாமி எனது மகளும் போயிங்கில் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்களே.

இதற்குள் அரசியலும் ,வியாபார போட்டிகளுமே முக்கிய காரணம் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

இதற்குள் அரசியலும் ,வியாபார போட்டிகளுமே முக்கிய காரணம் என நான் நினைக்கின்றேன்.

விழுந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியின் ஒலிநாடாவில் தான் போயிங் 737 இன் எதிர்காலமே தங்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

விழுந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியின் ஒலிநாடாவில் தான் போயிங் 737 இன் எதிர்காலமே தங்கியிருக்கிறது.

பிளாக் பொக்ஸ் ஆவது கறுப்பு பெட்டியாவது.....அதெல்லாம் நோ டீல்...
உங்கடை டொனால்ட் ரம்ப்  உலக அரசியல்,வரி கொள்கைகளை கொஞ்சம் மாத்தி...ஒரு சொட்டு கீழை இறங்கி வருவாரெண்டால்.....எங்களுக்கு எத்தினை போயிங் கவுண்டு விழுந்தாலும் நாங்கள் எங்கடை சனத்தை சமாளிப்பம்...வெட்டியாடுவம்.

முதல்லை நாங்கள் ஒண்டை கவனிக்க வேணும். இந்த தடை விசயத்தை ஆயுதமாக கையிலை எடுத்தது    போயிங் விசயத்திலை   எங்கையும் பாதிக்கப்படாத சீனா.:cool:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் இந்தோனிசியாவில் இதே ரக போயிங் 737 மேக்ஸ் 8 (Boing 737 Max8) விமானத்தில் நடந்த விபத்து காரணங்களையும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்திற்கான காரணங்களையும் ஆராய்ந்தபோது எம்கேஸ்(MCAS-Maneuvering  Characteristics Augmentation System) எனப்படும் தானியங்கி பொறிமுறையில் பிழை இருக்கலாமென விமான பொறியியல் வல்லுநர்களின் கூற்று.

 

mcas-737-max-diagram-2.jpg

கறுப்பு பெட்டி கிடைத்தால், இரு விமான விபத்துகளையும் ஒப்பீடு செய்து தவிர்க்கும் வழிமுறைகளை உருவாக்கலாமென செய்திகள் வருகின்றன. 

 

12d31534-44ec-11e9-b168-96a37d002cd3?sou

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.