Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 6 

வீட்டுக்கு வந்து சேர்ந்தபிறகும் என் கோபம் ஆறவேயில்லை. கள்ளப்பயல் எனக்கும் றூட் போட்டபடி மாமிக்கும் லேஞ்சி வாங்கிக் குடுத்திருக்கிறானே என்று படங்களில் வாற வில்லன் போல் அவர் தெரிஞ்சார். ஒருவாரமா மாமியோடும் கதைக்கேல்லை. அவை வீட்டுப்பக்கம் எட்டியும் பாக்கேல்லை. என்ர கவலையை ஆருக்கும் சொல்லவும்முடியாமல் தவிச்சுக்கொண்டிருந்த நேரத்திலதான் ரஞ்சிமாமி ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்தா. "என்னடி உன்னை வீட்டுப்பக்கமே காணேல்லை. வருவாய் எண்டு பாத்துக்கொண்டிருந்தனான்" எண்டா. "ஏன் என்ன அலுவல். எனக்கு படிக்கநிறைய இருக்கு என்றேன்." "நாங்கள் வந்து ஒரு கிழமையாகேல்லை. அதுக்குள்ள கனநாள் ஆனமாதிரி இருக்கு. ஆனா அவர் பொறுக்கேலாமல் எனக்குக் கடிதம் போட்டிருக்கிறார் என்றா". எனக்கு உடனே சந்தேகம் எழ "என்ன துணிவில எழுதினவர்? தற்செயலா உங்கட அம்மா அப்பா கையில சிக்கியிருந்தால் "?? என்றேன் நான்.

நான் இந்த வருசம் வீட்டிலதானே நிப்பன். அப்பா வேலைக்குப் போவிடுவர். அம்மா குசினீக்குள்ளதானே இருப்பா. நான்தான் அவருக்குக் கடிதம் போடச் சொன்னனான் என்றுவிட்டு என்னைப்பார்க்க முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டக்கூடாது என்று ஓ என்றேன். ஆனாலும் என் முகம் காட்டியதோ அல்லது சும்மா கேட்டாவோ ஏனடி உன்ர முகம் ஒரு மாதிரி இருக்கு என்று. "ஏன் ஒரு மாதிரி. என்ர நோமலாத்தான் இருக்கு. உங்களுக்குத்தான் இப்ப எல்லாம் மாறிமாறித் தெரியுது" என்றுவிட்டு நான் அப்பால் போய்விட்டேன். 

என்னை நினைக்க எனக்கே கேவலமாய் இருந்துது. ஏன் இப்பிடி என்னை ஏமாற்றினவர் என்று எண்ணியெண்ணி மாய்ந்துவிட்டு, அவர் என்னட்டைக் காதலைச் சொல்லேல்லையே. நானாக்க் கற்பனை செய்தேனோ என்றெல்லாம் ஏதேதோ எண்ணி மனம் குமைந்துவிட்டு திடமாக அவரைப்பற்றி இனி நினைத்தே பார்ப்பதில்லை என முடிவெடுத்து அதன்படி நடக்கத் தொடங்கினேன்.

நான் ரஞ்சி மாமியுடன் கதைக்காததை அவதானித்த அம்மா ஏன் உவள் ரஞ்சியோட நீ கதைக் கிறேல்லை. உங்களுக்குள்ள ஏதும் பிரச்சனையோ என்று கேட்க, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சிரித்து மழுப்பிவிட்டுச் சென்றுவிட்டேன். இரண்டுமாதம் போனபின் திரும்பவும் மாமி நான் நிக்கிற நேரமா வீட்டை வந்து "எடி அவர் அஞ்சாவது கடிதம் போட்டிருக்கிறார்" என்று முடிக்க முதல் "அவர் அஞ்சாவது போட்டாலென்ன பத்தாவது போட்டால் என்ன. எனக்கு இனிமேல் வந்து சொன்னியள் எண்டா அம்மாட்டைச் சொல்லிப்போடுவன்" என்றவுடன் மாமி வெலவெலுத்துப்போய் ஒண்டும் சொல்லாமல் போட்டா. அதுக்குப் பிறகு ஆறு மாதமா மாமியும் என்னோட கதைக்க வரேல்லை. நானும் எல்லாத்தையும் மறந்து என்ர அலுவலைப் பாக்கத்தொடங்கீட்டன். 

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ரியூட்டறி. என் நண்பியின் அத்தான் தான் கணித ஆசிரியர். என் அங்கு என் நண்பியையும் வந்திருந்து படிக்கும்படி அத்தான் காறன் சொல்ல அத்தனை பெடியளுக்குள்ளும் தனி ஒருத்தியாய் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு எடி நீயும் வாடி என்று கரைச்சல் தர நானும் கணிதபாடத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் ரியூசனுக்குப் போகப்போறன் என்றேன். எங்கே என அம்மா கேட்க நான் உதுல பக்கத்திலதான் என்று விபரம் சொன்னேன். அம்மாவும் உடனே ஓம் எண்டிட்டா. OL லுக்குப் பிள்ளை நல்லாத்தான் படிக்குது எண்டு அம்மாட எண்ணம். 

நானும் அவளும் படிக்கத் தொடங்கினபிறகு இன்னும் மூண்டுபேர் எங்களோட சேர முன் வாங்கில போய் இருப்பம் எண்டு சொல்லி படிப்பில கவனத்தோட இரண்டுநாள் இருக்க, முன் வாங்கு வேண்டாமடி. பெடியள் பின்னால இருந்து குறுகுறுவென்று பாக்கிறாங்கள் போல முதுகு கூசுதடி என்று சொல்ல நாங்கள் பின் வாங்கை நிறைத்துக்கொண்டம்.

5-6 மணிவரை கணிதம். 6-7 மணிவரை விஞ்ஞானம். ஏழுக்கு வீட்டை. வீட்டில் தங்கை தம்பியுடன் என்னதான் செய்யிறது. அதனால அம்மாவுக்கு ரியூசன் எட்டுமணிவரை என்று சொல்லிப்போட்டு பெட்டையள் சிலர் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு எட்டு மணிக்கு AL பெடிபெட்டைகளின்  ரியூசன் முடிய வீட்டை போறதை வளக்கமாக்கிக்கொண்டம். 

என்ர வீட்டுக்கு சுத்திப் போக ஏழு நிமிட நடை. பக்கத்து ஒழுங்கையால போக மூன்று நிமிடங்கள் போதும். ஆனால் கும்மிருட்டு. எனக்குத் தனிய உதுக்குள்ளால போகப் பயமாய் இருக்கு. என்னை கொண்டுபோய் விடடி எண்டு சொல்ல அவள் திரும்பத் தனிய வர தனக்குப் பயமாய் இருக்கு என்று சொல்ல அத்தான் காறர் சொன்னார் எடேய் உந்தப் பெற்றோல் மக்ஸ்சைக் கொண்டுபோய் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ நிவேதா போகுமட்டும் என்றார். அன்றிலிருந்து யாராவது ஒருவர் பெற்றோல்மக்ஸ்சைப் பிடித்துக்கொண்டு நிற்க நான் ஓட்டமும் நனையும் வீடுபோய்ச் சேர்ந்திடுவன்.

எங்கட ரியூசன் முடிஞ்சு வெளியே வர ஒரு மூண்டுநாலுபேர் நிண்டு கதைச்சுக்கொண்டு நிப்பினை. அன்று பார்த்து புதிசா ஒருத்தர் அவர்களுடன் நிக்க, ஆரெடி இவன் புதிசாய் இருக்கு என்றேன் நண்பியிடம். கிளிநொச்சியில் இருந்தவை இத்தனைநாளும். தகப்பன் இப்ப மாற்றலாகி இங்க வந்திருக்கினை என்றும் இதே ஊரவைதான். உதில முன்னுக்குத்தான் வந்திரிக்கினை, புதிசா வந்ததால் ஒரு பிறெண்சும் இல்லை. அதுதான் இவங்களோட வந்து கதைச்சுக்கொண்டு நிக்குது ஆள் என்கிறாள்.

நான் சாதாரணமாக ஊரப்பெடியளைக் கணக்கிலையும் எடுக்கிறேல்லை. அவங்களும் பலரும் அம்மா அப்பாட்டைப் படிச்சபடியால் என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டுவதில்லை. ஆனால் பகிடிவிட்டுக் கதைப்பாங்கள். ஒருமாதமாப் பாக்கிறன் புதியவர் வகுப்புத் தொடங்க முதலும் முடியவும் வந்து பெடியளோட கதைச்சுக்கொண்டு நிக்கிறார். ஆனால் அவரைத் திரும்பியும் பார்ப்பதில்லை. அன்று ஏலெவல் ஆட்களின் வகுப்பு முடிய நான் வீட்டை போக வெளிக்கிட ஒருத்தன் பெற்றோல்மக்சைத் தூக்கிக்கொண்டு வாறான். மூண்டுநாலு பெடியள் வெளியில நிக்கிறாங்கள். நான் ஒழுங்கைக்குள்ள அப்பதான் காலெடுத்து வைக்கிறன். 

உங்களுக்கு வேற வேலை இல்லையோடா இவவுக்கு ஒவ்வொருநாளும் விளக்குப்பிடிக்கிறதுக்கு??? சுத்திப்போனால் தேஞ்சிடுவாவோ? என்று புதியவரின் குரல் என் காதுகளில் நாராசமாய் விழ எரிச்சலும் கோபமும் ஒருங்கே வர " ஏன் உங்களையே விளக்குப் பிடிக்கச் சொன்னனான். உதில நிண்டு தூங்காமல் போய் பாக்கிற அலுவலைப் பாரும்" என்கிறேன். உடனே அவர் " சரிதான் போடி வாயை மூடிக்கொண்டு என்கிறார். நீ வாயை மூடிக்கொண்டு போடா என்றுவிட்டு நான் ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்குள்ளே போக " ஏன் இப்பிடி ஓடி வாறாய்என்ற அம்மாவுக்கு நாய்க்குப் பயந்து ஓடி வந்தனான் என்றுவிட்டு முகம் கழுவச் செல்கிறேன். எல்லோரும் கொல்லென்று சிரித்த சிரிப்பொலி அடிக்கடி காதில் ஒலித்தபடி இருக்க நெஞ்சில் ஒரு பயமும் ஏற்பட்டது.

 

  • Replies 95
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமே , கதை சுவையாக போகுது. நானும் தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருக்கிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நீர்வேலியான் said:

சுமே , கதை சுவையாக போகுது. நானும் தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருக்கிறேன் 

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாயாடி பிள்ளை தான்!
சுமே அக்கான்ர தைரியத்த பாராட்டி ஒரு பட்டம் குடுக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் வாசிக்கோணும் என்டது என் தலையெழுத்து 😁
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஏராளன் said:

நல்ல வாயாடி பிள்ளை தான்!
சுமே அக்கான்ர தைரியத்த பாராட்டி ஒரு பட்டம் குடுக்கலாமே?

வேண்டாம் எண்டு சொல்வேனா??🤪🤪

37 minutes ago, ரதி said:

இதை எல்லாம் வாசிக்கோணும் என்டது என் தலையெழுத்து 😁
 

பின்ன விட்ட குறை தொட்டகுறை எண்டிறது இதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 7

அடுத்த நாள் ரியூசனுக்கு வர அந்தக் கும்பல் முதலே வந்து நிக்கினம். எனக்கு கொஞ்சம் புஜம் தான் இருந்தாலும் பயம் இல்லை என்று காட்ட தலையை நிமித்திக்கொண்டு கடந்து போக எதோ சொல்லி எல்லாரும் கொல் என்று சிரிப்பது கேட்டாலும் எதுவும் பேசாமல் போய் இருந்திட்டன். 

அடுத்த நாளில இருந்து பார்த்தா நான் காலை பள்ளிக்குப் போகேக்குள்ளை, பள்ளி முடிஞ்சு வீட்டை வரேக்குள்ள, நான் வீட்டில நிக்கிற நேரம் பார்த்தது எண்டு புதியவரும் இன்னும் இரண்டு குரங்குகளும் சைக்கிள்ள எனக்குப் பின்னால வாறதும் என்னை விலத்திக்கொண்டு பெல் அடிச்சுக்கொண்டு போறதுவும் மறைமுகமா ஏதும் கதை சொல்லுறதுமா .... முதல்ல எனக்குக்கோபம் வந்தாலும் போகப்போக அதை இரசிக்க ஆரம்பிச்சன். புதியவரின் பெயர் கூட அதன் பிறகுதான் அறிஞ்சன். நான் தற்செயலாக நிமிர்ந்து பார்த்தால் அந்தாள் பார்த்த பார்வை இன்னும் நெஞ்சில நிக்குது. 

ஒரு வாரம் போக நான் பஸ் எடுக்கிற பஸ்டாண்டுக்கு முன்னால வந்து நிக்க ஆரம்பிச்சார் அவர். நான் பயந்த மாதிரியே மற்றப் பெட்டையள்  ஆரடி அது உனக்கு காவலாய்த் திரியிறார் என்று கேட்க, எனக்குத் தெரியாது என்று மழுப்பினாலும் அவரின் பார்வையும் சிரிப்புமெனக்குப் பிடித்துப் போக நானும் அவரை சாடைமாடையாகப் பார்க்க ஆரம்பிச்சன். 

ஒருநாள் நானும் நண்பியும் கதைததுக்கொண்டு இருந்தபோது எம்மிலும் மூன்று வயது குறைவான எங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பெடியன் ஒரு என்வலப்பை என் கையில் கொண்டுவந்து தர நான் என்ன என்று கேட்க உதயன் அண்ணா தந்தவர் என்று சொல்லிவிட்டு போய்விட்டான். 

அன்புள்ள நிவேக்கு என்று கடிதம் ஆரம்பித்திருக்க எனக்குள் ஒரு சந்தோச ஊற்று பொங்குவதை உணர முடிந்தது.தொடர்ந்து தடதடக்கும் நெஞ்சோடு வாசிக்க மகிழ்வாக இருந்தது.
" சண்டையில் ஆரம்பித்தாலும் என்னால் உங்களை ஒரு நிமிடமேனும் மறந்திருக்க முடியவில்லை. உங்களை விட்டு வேறொருவரை என் வாழ்வில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. இத்தனைநாள் எந்தவித சலனமும் அற்றிருந்தேன். நீங்கள் எனக்கு சம்மதம் தெரிவித்தால் அதைவிட மகிழ்ச்சி என் வாழ்வில் இருக்காது. உங்கள் சம்மததத்திற்காக காத்திருக்கும் உங்கள் காதலன்" என்று கடிதம் முடிந்திருந்தது.

உடன கையுல ஒரு உதறல் எடுக்க உந்தப் பெடியன் ஆரிட்டையன் போய்ச் சொல்லப்போறானடி என்று சொல்லியபடி கடிதத்தை என் நண்பியிடம் கொடுத்தேன். அவள் சிரித்தபடி வாசிச்சிட்டு உதை நான் எதிர்பார்தது தானடி என்றாள். உடன பதில் ஒண்டும் குடுத்திடாதை. ஆறுதலா யோசிச்சு முடிவெடுப்பம் என்றாள். அதன்பின் ஓம் ஓம் என்று தலையாட்டியபடி அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் மனம் எங்கெங்கோ அலைந்தது.

அடுத்தநாள் அண்ணை கடிதம் கேட்டவர் என்று அந்தப் பெடி வந்து நின்றபோது ‘’போடா இனிமேல் இங்கை வரக்கூடாது “என்று கலைத்துவிட்டாலும் மகிழ்ச்சியும் குழப்பமும் மாறிமாறி ஏற்பட என்னம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்றார் அம்மா. நல்ல பிள்ளைம்போல் ஓலெவல் சோதனைக்கு இன்னும் நாலு மாசம்தான் இருக்கு. அதுதான் என்று இழுத்தேன். முதலே பயப்பிடக்கூடாது. வடிவாப் படிச்சியெண்டா என்ன பயம் எண்டா அம்மா. ஓம்ம்மா என்றுவுட்டு ரியூசனுக்குக் கிளம்பினேன். 

என்னடி என்ன யோசிச்சு வைத்திருக்கிறாய் என்று என் நண்பி கேட்டதுக்கு நான் சம்மதம் என்று இப்பதான் பெடியிடம் கடிதம் குடுத்தேன் என்று கூற விசரி விசரி அவசரப்பட்டிட்டியே என்று திட்டத் தொடங்கினாள். 

விதி என்பது லேசுப்பட்டதல்ல என்பதை அப்போது நான் உணரவில்லை. உணர்ந்தபோது காலம் கடந்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய விதி என்று நீங்கள் குறிப்பிடவில்லை.உதயனை நினைக்கத்தான்....ம்........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

யாருடைய விதி என்று நீங்கள் குறிப்பிடவில்லை.உதயனை நினைக்கத்தான்....ம்........!  😁

அடுத்ததா அதைத்தானே சொல்லப்போறன் 😀

 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த இடத்தில நிறுத்திவிட்டு நிற்பாட்டிவிட்டு  போய்விட்டீங்கள். விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் அத்தான் போல!

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் உதயன் 😪அப்ப மாட்டுப் பட்டவர் என்னும் மீள முடியாமல் இருக்கிறார்...அதெல்லாம் இருக்கட்டும் அந்த மன்னார் பெடியனுக்கு என்னாச்யுது? உங்கட மாமியையும் விட்டுட்டாரா?
 

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா, (நீங்கள் அக்காவோ அல்லது தங்கச்சியோ தெரியவில்லை)
நல்ல சுவாரஸ்யமாக கதை போகுது. வாசகனை அடுத்து என்ன என்று தேடும் ஆர்வத்தை தரும் விதத்தில் உங்கள் எழுத்து /சம்பவங்கள் நிறைந்து இருக்கிறது...தொடருங்கள்.
ஒரே ஒரு வேண்டுகோள் ...கதையை முழுமையாக முடித்து விட்டு எங்களை போன்றவர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் தாருங்கள். 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

பொறுத்த இடத்தில நிறுத்திவிட்டு நிற்பாட்டிவிட்டு  போய்விட்டீங்கள். விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன் 

விரைவில் எழுதி முடிப்பன்.கவலையை விடுங்கள்😁

4 hours ago, ஏராளன் said:

இது தான் அத்தான் போல!

🤓 இன்னும் ஒரு கிழமை பொறுங்கோவன்.

3 hours ago, ரதி said:

பாவம் உதயன் 😪அப்ப மாட்டுப் பட்டவர் என்னும் மீள முடியாமல் இருக்கிறார்...அதெல்லாம் இருக்கட்டும் அந்த மன்னார் பெடியனுக்கு என்னாச்யுது? உங்கட மாமியையும் விட்டுட்டாரா?
 

அடுத்த பகுதியில வரும் ரதி. பச்சைக்கும் கருத்துக்கும் நன்றி. 

27 minutes ago, Sasi_varnam said:

சுமே அக்கா, (நீங்கள் அக்காவோ அல்லது தங்கச்சியோ தெரியவில்லை)
நல்ல சுவாரஸ்யமாக கதை போகுது. வாசகனை அடுத்து என்ன என்று தேடும் ஆர்வத்தை தரும் விதத்தில் உங்கள் எழுத்து /சம்பவங்கள் நிறைந்து இருக்கிறது...தொடருங்கள்.
ஒரே ஒரு வேண்டுகோள் ...கதையை முழுமையாக முடித்து விட்டு எங்களை போன்றவர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் தாருங்கள். 😍

மிக்க நன்றி சசித் தம்பி வருகைக்கும் கருத்துக்கும்😄 கனடாவில காணேக்குள்ள தங்கச்சி போலவா இருந்தது???😅

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/9/2019 at 1:22 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடுத்த நாளில இருந்து பார்த்தா நான் காலை பள்ளிக்குப் போகேக்குள்ளை, பள்ளி முடிஞ்சு வீட்டை வரேக்குள்ள, நான் வீட்டில நிக்கிற நேரம் பார்த்தது எண்டு புதியவரும் இன்னும் இரண்டு குரங்குகளும் சைக்கிள்ள எனக்குப் பின்னால வாறதும் என்னை விலத்திக்கொண்டு பெல் அடிச்சுக்கொண்டு போறதுவும் மறைமுகமா ஏதும் கதை சொல்லுறதுமா ....

அதென்ன குரங்குகள்??????  

ஆனால் நாங்கள் லேடீசை மரியாதையாய்த்தான் கதைப்பம் தெரியுமே......😍


  இல்லை தெரியாமல் கேக்கிறன் வாலிப வயசிலை பெல் அடிக்காமல் கிழட்டு வயசிலையே பெல் அடிக்கிறது? 😎

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இது தான் அத்தான் போல!

அத்தான் இவளவு உசாரா இருந்திருப்பாரோ  என்டு ஒரு டவுட்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதென்ன குரங்குகள்??????  

ஆனால் நாங்கள் லேடீசை மரியாதையாய்த்தான் கதைப்பம் தெரியுமே......😍


  இல்லை தெரியாமல் கேக்கிறன் வாலிப வயசிலை பெல் அடிக்காமல் கிழட்டு வயசிலையே பெல் அடிக்கிறது? 😎

 

இப்ப மரியாதையாத்தான் கதைக்கிறது. அப்ப அப்பிடித்தான் 😅

22 minutes ago, சுவைப்பிரியன் said:

அத்தான் இவளவு உசாரா இருந்திருப்பாரோ  என்டு ஒரு டவுட்டு.

அத்தார் சரியான உசார்😄

பச்சை தந்த நீர்வேலியானுக்கும் கண்மணி அக்காவுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 7:50 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாக் கப்பும் காலியாக இன்னும் ஒண்டு ஓடர் செய்யவோ என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார். தனியா இருந்தால் நான் ஓம் என்றுதான் சொல்லியிருப்பன். ஆனா மற்றவையும் முக்கியமா மாமிமாருக்கும் ஏன் இரண்டாவதை வாங்கிக் குடுக்கவேணும் என்று ஓடிய எண்ணத்தில வேண்டாம் வேண்டாம் வயிறு புல் என்கிறேன் நான்.

அப்படியே தமிழர்களின் குணம் தெறிக்கிறது 

 

On 3/21/2019 at 4:37 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனாலும் மேல படிக்கேல்லை எண்டதும் ஒரு நெருடலாத்தான் இருந்தது.

ரொம்ப எதிர்பார்க்கப்படாது கண்டியளோ 

 

 

 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

.அதெல்லாம் இருக்கட்டும் அந்த மன்னார் பெடியனுக்கு என்னாச்யுது? உங்கட மாமியையும் விட்டுட்டாரா?
 

இதெல்லாம் ஏன் கேட்கிறியள் அதெல்லாம் கடந்து போன லிஸ்ட் ஆங் 

 

அந்த மனுசனை பார்க்கும் போதே தெரிஞ்சுது உதயன் அண்ணை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியே தமிழர்களின் குணம் தெறிக்கிறது 

நாங்கள் எப்பவும் உண்மையைத்தான் சொல்லுவம்😎

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த மனுசனை பார்க்கும் போதே தெரிஞ்சுது உதயன் அண்ணை

என்ன தெரிச்சிது ?????

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 8

நாங்கள் இருவரும் தனியாக நின்று கதைத்ததுகூடக் கிடையாது. கடிதப்போக்குவரத்து மட்டும்தான். உறை போட்ட புத்தகத்தின் அல்லது கொப்பியின் உறையின் உள்ளே கடிதத்தை வைத்து என் சிறிய தங்கையிடம் அல்லது அந்தப் பெடியனிடம் கொடுக்க  அவரும் தன் சின்னத் தம்பியிடம் அல்லது அவர் நண்பனிடம் கொடுக்க, மற்றவர்களுக்குத் தெரியாது என எண்ணிக்கொண்டு நாம் தொடர்ந்தோம். எங்கள் காதல் கதை அரசல்புரசலாக ஊரில் பரவலாயிற்று.ஆனால் நல்லகாலம் அம்மாவின் காதுக்கு இன்னும் வரவில்லை.

நாலு மாதங்களில் ஓலெவல் சோதினை எல்லாம் முடிய நல்ல நின்மதியாக வீட்டில இருக்க ஆன்ரியும்  விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தா தினேசோடு. எனக்குத் தினேசைப் பார்த்ததும் ஒரு கோபம் எட்டிப் பார்த்ததுதான் எனினும் வீட்டுக்கு வந்தவரிடம் மற்றவர்கள் முன்னால் என் கோபத்தைக் காட்டிட முடியாது சாதாரணமாகவே என் முகத்தை வைத்துக்கொண்டேன். ஆனாலும் பெரிதாக அவருடன் கதைக்காது மாலையில் என் நண்பி வீட்டுக்கு போட்டுவாறன் என்று அம்மாவிடம் சொல்ல, "தினேஷ் நிக்குது. நாளைக்குப் போவன்" என்று கூறியும் இல்லை போட்டுவாறன் என்றுவிட்டுக் கிளம்ப தினேஷின் பார்வையில் என்னை விட்டுவிட்டுப் போகிறாயா என்று கேட்பது போலிருந்தாலும் அதுதான் மாமி வருவா உன்னோடு கொஞ்சிக் குலாவ என்று மனதுள் திட்டியபடி போய்விட்டேன்.   

மாலை ஆறு மணிக்கு நான் வீட்டுக்கு வந்தபோது தினேசைக் காணவில்லை. நான் உள்ளே வரும்போது குசினியில் நின்று அம்மாவும் அன்ரியும் இரவுஉணவு தயார் செய்தபடி கதைத்துக்கொண்டிருந்தார்கள். நான் வந்ததைக் கவனிக்காது அன்ரி அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தா. தினேஷ் போனமாதம் ஒருக்காக் கதைக்கேக்குள்ள என்னட்டைக் கவலைப்பட்டவர். "உங்கடை அக்கா நல்லாத்தான் எங்களைக் கவனிக்கிறா. உபசரிக்கிறா ஆனால் தன்ர மகளைக் கட்டித்தாங்கோ என்று கேட்டால்கட்டித் தருவாவோ" என்று. நான் சொன்னேன் அக்காவும் அத்தானும் ஆசிரியர்கள் என்றபடியால் பிள்ளையளுக்கு படிச்ச மாப்பிளைத்தானே பாம்பினம். அதோட நீங்கள் கிறீஸ்தவர்கள். அதனால அதை பிள்ளை என்று சொல்ல முடியாதுதானே என்று அவரின் வாயை அடக்கீட்டன் என்றா.

அம்மா எதுவோ சொல்வது கேட்டது. ஆனால் என்ன சொன்னா என்று விளங்கவில்லை.
உவர் ஏன் உப்பிடிக் கதை விட்டவர் என்று எனக்கு யோசனையாக இருக்க  நான் அப்போதுதான் வருவதுபோல் குசினிக்குள் வந்து எங்க தினேஷ் அண்ணை போட்டாரோ என்றேன். தெல்லிப்பளையில் யாரையோ பார்க்கப் போட்டார் என்று கூறிவிட்டு அன்ரி இடியப்பத்தைப்பிழியத் தொடங்க நான் உடுப்பை மாற்ற அறைக்குள் சென்றுவிட்டேன்.

சாதாரணமாக நாம் இரவு ஏழுமணிக்கெல்லாம் இரவு உணவை உண்டுவிடுவோம். அதனால் அம்மாவிடம் சென்று சமையல் முடிஞ்சுதோ என்றேன். கொஞ்சம் பொறன் தினேசும் வரட்டும் என்ற அம்மாவிடம் "அவர் வரும்வரையில் பார்த்துக்கொண்டு இருக்கேலாது" என்றேன். சரி சின்னக்கா நானும் நீயும் தினேசோட சாப்பிடுவம். உவைக்குக் குடன் என்று  தம்பி தங்கைகளையும் பார்த்துச் சொன்னா அன்ரி.

நாங்கள் மேசையிலிருந்து சாப்பிட்டு முடிஞ்சு எழும்ப தினேஷ் உள்ளுக்கு வாறார். " என்னை விட்டிட்டு நீங்களெல்லாரும் சாப்பிட்டிட்டியள்போல என்றபடி அவர் வர சீச்சீ சின்னாக்கள் பசிக்குது என்றவை. நானும் அவளும் இன்னும் சாப்பிடேல்லை. நீங்கள் முகம் கழுவிவிட்டுவாங்கோ நாங்கள் சாப்பிடுவம் என்று சொல்ல அதன்பின் நான் அங்கு நில்லாது கையைக் கழுவிவிட்டு அங்காலே போய்விட்டேன். மாமி ஆட்கள் வந்தவையே என்று மெதுவாகத் தங்கையிடம் விசாரிக்க அவள் இல்லையென்று தலையாட்ட என்னடா இது அதிசயமாய் இருக்கு. அவ்வளவு தூரத்தில இருந்து அவவைப் பார்க்க இவர் வந்திருக்கிறார். அவ ஏன் வீட்டுப்பக்கம் வரவே இல்லை. இரண்டு பேருக்குள்ளும் ஏதும் பிரச்சனையோ என்று என் மனம் குழம்பத் தொடங்க யாரிடமும் இதுபற்றிக் கேட்க முடியாமல் தவிப்புடன் நின்றேன் நான்.

முன்பெனில் தினேஷ் வந்தால் கும்பலாகக் இரவிரவாகக் கதைத்துச் சிரித்து வேறுவழியில்லாமல் தூங்கப் போகும் நான் அன்று வெள்ளணவே தூங்கப்போனாலும் தூக்கம் வராமல் மாமி ஏன் வீட்டுப்பக்கமே வரவில்லை என்ற யோசனையோடு புரண்டு புரண்டு படுத்துத் தூங்கிப்போனேன். அதிகாலையில் வழக்கம்போல் விழிப்பு வர நான் எழுந்து வந்து பல் தீட்டி முகம் கழுவிவிட்டு வெளியே வர எதிர்ப்பக்கம் மாமி வீட்டு வேலிக்கு மேலால் மாமியும் தினேசும் கதைத்துக்கொண்டு நிற்பது தெரிய எரிச்சலோடு விடுவிடு என்று வீட்டுக்குள்போய் சுவாமி கும்பிட்டுவிட்டு குசினிக்குள் போகிறேன். அம்மா நான் எழும்பிய சத்தம்கேட்டு தேநீர் தயாரித்து வைத்து குடிக்கும் படி எடுத்துத் தருகிறதா. " தினேஷ் எழும்பிட்டுதா " என்று அம்மா என்னைக் கேட்க நான் ஓம் என்று தலையாட்டுகிறேன்.

தினேஷ் முகம்கழுவிவிட்டுதா என்று கேள் என்று அம்மா சொல்ல நான் பின்பக்கம் சென்று எட்டிப் பார்க்க அவர் முகம் கழுவிக்கொண்டு நிற்பது தெரிகிறது. நான் பார்த்துவிடடேன் என்று மாமி போட்டா போல என எனக்குள் எண்ணிக்கொண்டே வந்து முகம் கழுவிறார் என்கிறேன் அம்மாவிடம். இந்தா கோப்பியைக் கொண்டுபோய் தினேசுக்குக் குடு என்று மக்கைத் தருகிறா. நான் வாங்கிக்கொண்டு அவர் இருந்த அறைக்குள் செல்ல அவர் முகம் துடைத்தபடி இருக்க இந்தாங்கோ கோப்பி என்று அவரைப் பார்க்காமல் நீட்டுகிறேன்.

"என்னை ஏமாத்திப் போட்டீங்கள் நிவேதா" என்று அவர்சொல்ல திடுக்கிட்டுப் போய் அவரை நிமிர்ந்து பார்த்து "என்ன ஏமாத்தினானான்" என்கிறேன். "நான் உங்களையே நினைச்சுக்கொண்டிருக்க நீங்கள் இப்ப உதயனைக் காதலிக்கிறீங்களாம்" என்றவுடன் எனக்கு கோபம் வருகிறது. "என்னையும் நினைச்சுக்கொண்டு மாமிக்கும் கடிதம் குடுத்தனீங்களோ" என்று கேட்கிறேன். அவர் முகம் சுருங்குகிறது. "என்ன விசர்க் கதை கதைக்கிறீர். நான் எங்க கடிதம் குடுத்தனான்" என்று சொல்ல என் உச்சந்தலையில் யாரோ ஓங்கி அடித்ததுபோல் இருக்க, மாமி எனக்கு எல்லாம் சொலீற்றா. நீங்கள் லேஞ்சி வாங்கிக் குடுத்தது வரை என்கிறேன். "என் அம்மா சத்தியமாய் நான் உங்கள் மாமிக்கு ஒண்டும் வாங்கிக் குடுக்கவுமில்லை. கடிதமும் குடுக்கேல்லை. வாங்கோ இப்பவே உங்களுக்கு முன்னால அவவைக் கேட்கிறன்" என்கிறார்.  

என் கால்கள் தொய்ந்துபோக  பக்கத்தில் இருந்த கதிரையில் இருந்து மேசையில் முகம் கவிழ்த்தபடி  அழத் தொடங்குகிறேன் நான். "ஐயோ நிவேதா. உங்கள் அம்மாவுக்கு கேட்கப் போகுது. அழாதேங்கோ.  என்னோட இவ்வளவு பழகின்னீங்கள். எப்பிடி அவ சொன்னதை நம்பின்னீங்கள். என்னட்டை ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே" என்கிறார் தினேஷ். நான் நிமிர்ந்து அவரைப் பார்த்து "எப்பிடிக் கேட்டிருக்கமுடியும் ?? காலம் கடந்துபோச்சு என்கிறேன்".
நான் கேட்டதை மறந்திடுங்கோ. நீங்கள் சந்தோசமாய் இருங்கோ. ஆனாலும் உங்களோட பழகின நாட்கள் எப்பவும் மனதை விட்டுப்போகாது என்றபடி அவர் கட்டிலில் சோர்வாய் அமர நான் எழுந்து வெளியே சென்று அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமலிருக்க முகத்தை மறுபடியும் கழுவி திருநீறு பூசியபடி வெளியே வந்து பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விடத் தொடங்குகிறேன்.

இன்னும் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் வரும்

இனி  தினேஷ் வரமாட்டார் போல

மாமி விளையாடீ இருக்கா போல 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா?
மாமி உங்களை குழப்ப சொன்னது இப்பிடி நடந்திட்டுதே!
தினேஸ் பார்த்தா பாவமா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மாமி ஏன் இந்த நாத்த வேலை பார்த்தவ.😞..அவ தெரிஞ்சு செய்தாவோ தெரியாமல் செய்தாவோ தினேசுக்கு நல்லது தான் செய்திருக்கிறா😊 ...மாமியோட உப்ப பேச்சு வார்த்தை உண்டோ 🤐
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனி  தினேஷ் வரமாட்டார் போல

மாமி விளையாடீ இருக்கா போல 

இன்னும் ஒருக்கா வருவார்🤣

3 hours ago, ஏராளன் said:

என்ன கொடுமை சரவணா?
மாமி உங்களை குழப்ப சொன்னது இப்பிடி நடந்திட்டுதே!
தினேஸ் பார்த்தா பாவமா இருக்கு.

உலகத்தில பலவிசயங்கள் இப்பிடித்தான் நடக்கிறது. ஆனால் என்னைப்போல ஒருத்தரும் சொல்லுறேல்லை.🤓

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.