Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன? விளக்கும் அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில்,

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது.

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தவில்லை.

அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தி வருகின்றனர்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே.

தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்தனர், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். தமிழர்களின் உரிமையை பறித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது.

தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டனர்.

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/213301?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தவில்லை.

அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தி வருகின்றனர்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே.

இரத்த ஆறு ஓடுமென்ற நீங்கள் இப்போ ஏன் பம்முகிறீர்கள்??

தலைநகரில் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைப்பதில் அரசியல்வாதிகள், இராணுவத்தின் பங்கு நிச்சயமாக உண்டு. 

எந்த கட்சி வந்தாலும் அமைச்சர் ஆக பதவி ஏற்கின்றீர்கள். அது எத்தகைய அரசியல் ?

உங்களை கட்சி பேதமின்றி மனோ கணேசனில் இருந்து விமல் வீரவன்ச வரை குற்றம் சாட்டுகிறார்கள். ஆகவே உங்களின் பங்கு உண்டு என மக்கள் சந்தேகப்படுவது நியாயம் தானே?

நீங்களும் அசாத் அலியும் குய்யோ முறையோ என பாராளுமன்றத்தில் அதீதபிரசங்கம் செய்வது ஏன் உங்களில் குற்றம் இல்லை எனில்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

என்ன  மூஞ்சூறு குறுக்கு  மறுக்கா  ஓடுது????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு

hqdefault.jpg

சட்டை எனுதில்லை பகிடி.. சூடு சொரணை உள்ள சிங்கன் உடனே ரிஸ்மிஸ் செய்குக.. 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நீங்களும் அசாத் லியும் குய்யோ முறையோ என பாராளுமன்றத்தில் அதீதபிரசங்கம் செய்வது ஏன் உங்களில் குற்றம் இல்லை எனில்??

யார் இந்த அசாத் அலி? எங்கே இவரை பற்றி அறிந்தீர்கள்?

இலங்கை பாராளுமன்றத்தில் இப்படி ஒரு அசாத் அலி பேசியது பற்றி செய்தி எதுவும் வந்ததாக தெரியவிவில்லையே?

அசாத் சாலி என்பவர் மேல்மாகாண ஆளுநராக இருக்கிறார். ஆளுநர்கள் பாராளுமன்றத்தில் பெசுவதில்ல்லையே?

அது போக இந்த நுணாவில் அலியும் இவர்களில் ஒருவராமே? இங்கே யாழ் களத்தில் அடிக்கடி எழுதுவார் என்றும் இந்த களத்தில் அவரது பெயர் எதோ நுனாவ் என்று தொடங்குவதாகவும் கதை அடிபட்டது. உங்களுக்கு அவரை தெரியுமா? இப்படியும் யாரும் எழுதலாமா? 🤪, இது ஒரு உதாரனம் தான், தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அதனால் தான் இந்த நுனாவ் அலி பற்றி எழுதி பார்க்கிறேன்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

அசாத் சாலி என்பது அவரது பெயர். சூ , ஜூட் பிழையை கண்டு பிடிச்சிட்டாராம்.

முஸ்லிம் தீவிரவாதிகள் தேவாலயங்களை தாக்கவில்லை என்று சொன்ன பெரியவர் யாரப்பா?1f92a.png

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

அசாத் சாலி என்பது அவரது பெயர். சூ , ஜூட் பிழையை கண்டு பிடிச்சிட்டாராம்.

முஸ்லிம் தீவிரவாதிகள் தேவாலயங்களை தாக்கவில்லை என்று சொன்ன பெரியவர் யாரப்பா?1f92a.png

உண்மையில் இந்த பயங்கரவாதிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தேவாலயங்களை தாக்கியதாக நான் அறியவில்லை. சிலர் சில இணைப்புகள் தந்திருந்தார்கள். இனித்தான் பார்க்க வேண்டும். இவர்கள் முட்டாள் பயங்கரவாதிகள். தீவிரவாதிகள் என்று ஐப்னா முஸ்லிம் மாதிரி எழுதாதீர்கள். ரோமை பிடிக்க மட்டக்களப்பில் போராடுவதாக வீடியோவில் இந்த எருமைகள் சொன்னதாக எங்கோ படித்த  நினைவு. யாரோ ஏதோ தேவைக்கு உந்த முட்டாள்களை பயன்படுத்துகிறார்கள்.அமெரிக்க அரசு கோத்தாவின் குடி உரிமையை அகற்றி விட்டதாக கடிதம் அனுப்பி இருப்பதாகவும் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

அவரின் காணொளியை பார்த்ததால் தான் எழுதினேன். பெயரை எழுதியதில் பிழை இருக்கலாம். 

புனைகதைகளை எழுதி எனக்கு எதுவும் லாபம் வரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

அவரின் காணொளியை பார்த்ததால் தான் எழுதினேன். பெயரை எழுதியதில் பிழை இருக்கலாம். 

புனைகதைகளை எழுதி எனக்கு எதுவும் லாபம் வரப்போவதில்லை.

அசாத் சாலி முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் தவறாக எழுதியதாக நினைத்தேன். இப்போது ஆளுநர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

உண்மையில் இந்த பயங்கரவாதிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தேவாலயங்களை தாக்கியதாக நான் அறியவில்லை. 

முன்பு  இஸ்லாமியர்கள் உலகம் எங்கேயும் தேவாலயங்களை தாக்கியதில்லை என்றீர்கள்...

இப்போ ஐரோப்பாவுல தாக்கியதில்லை நான் கேள்விபட்டதில்லை என்கிறீர்கள்..;

ஆதாரம் தந்தாச்சு  ,

https://www.bbc.com/news/world-europe-36892785

இனிமேல் பங்களாதேசில் தேவாலயத்தை யாரும் தாக்கவில்லையென்று ஆரம்பிப்பீர்கள்.

மதத்துக்காக மக்களை கொல்பவர்கள் கொடியவர்கள்,  அந்த கொடிய தீவிரவாதிகளை காப்பாற்ற நினைப்பவர்கள், அவர்களுக்கு முட்டு கொடுப்பவர்கள் அவர்களைவிட கொடியவர்கள்.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இனிமேல் பங்களாதேசில் தேவாலயத்தை யாரும் தாக்கவில்லையென்று ஆரம்பிப்பீர்கள்.

மூக்கு சாத்திரம் பார்க்கும் வியாபாரமா? எப்படி போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Jude said:

மூக்கு சாத்திரம் பார்க்கும் வியாபாரமா? எப்படி போகிறது?

எதையும் சொல்லி சமாளீக்க முடியவில்லையா? பலபேருக்கு இனிமேதான் புரியும் இதுநாள்வரை ஜூட் என்ற பெயரில் ஒளிந்திருந்த இவர்  யூசுப் பதான் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எதையும் சொல்லி சமாளீக்க முடியவில்லையா? பலபேருக்கு இனிமேதான் புரியும் இதுநாள்வரை ஜூட் என்ற பெயரில் ஒளிந்திருந்த இவர்  யூசுப் பதான் என்று.

அஸ்ஸலாமு அலைக்கும் நானா. மூக்கு சாத்திரத்தில் நீங்கள் விண்ணர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்லாமு அலைக்கும்னா அதுக்கு ஒரு விளக்கம் இந்த செத்துபோன உங்க புனிதரிடம் இருக்கு ...பார்க்குறீங்களா?

பாருங்க...

https://m.facebook.com/story.php?story_fbid=417201635760082&id=100024107465364&hc_location=ufi

https://m.facebook.com/story.php?story_fbid=417201635760082&id=100024107465364&hc_location=ufi

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பலரும் இத்தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளையும் புலிகளையும் ஒப்பிட்டு நோக்கி, வேறுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் போராட்டம் மதம் சார்ந்ததல்ல என்பதோடு, மற்றைய இனங்களின் மதத்தை அழித்து தமது மதத்திற்கு மாற்றும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

பொதுமக்களை வேண்டுமென்று புலிகள் இலக்குவைக்கவில்லை என்று சிலர் கூறினாலும் கூட, அவப்போது அரந்தலாவை, சிறி மஹா போதி, தெஹிவளைப் புகையிரதம், காத்தான்குடி, ஏறாவூர், கட்டுப்பெத்தை போன்றவை தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

கனடாவில் உளவியலாளர்களினால் ஒரு ஆராய்சி செய்யப்பட்டது அதில் சூதாடுபவர்கள் சூதாட்டக்குதிரையை தெரிவு செய்ததின் பின் அக்குதிரைகள்தான் வெல்லும் என தீர்க்கமாக நம்புவதைக்கண்டறிந்த்தனர் ஒரே குதிரை தெரிவுக்கு முன்னரை விட தெரிவுக்கு பின்னர் அவர்களது நம்பிக்கையில் வலுவடைகிறது ,நாம் ஒன்றை வரித்து கொண்டுவிட்டால் அதுவே எம்மை ஆட்கொண்டுவிடும் சாதி , மதம் , இனம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

நான் ஏதும் தவறுதலாக எழுதிட்டேனோ? 

சிலவேளை, நான் மேலே சொன்ன தாக்குதல்கள் புலிகளால் நடத்தப்பட்டவை என்று நம்புவதால் அப்படி எழுதுகிறேனோ தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நீங்கள் எங்களைப்போலில்லாமல் , இந்த வட்டத்திற்குள் நிற்காமல் தெளிவாக சிந்திகின்றீர்கள் என்றுதான் குறிப்பிட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

கொள்கையுடன்,  போராடியமையால்தான்...  புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். -மைத்திரி-

Edited by தமிழ் சிறி

On 4/29/2019 at 4:14 AM, ரஞ்சித் said:

புலிகளின் போராட்டம் மதம் சார்ந்ததல்ல என்பதோடு, மற்றைய இனங்களின் மதத்தை அழித்து தமது மதத்திற்கு மாற்றும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

திட்டமிட்ட இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிங்கள-பௌத்த மத வெறியர்களுக்கு (அரச பயங்கரவாதிகளுக்கு) எதிரான போராட்டமே ஈழத்தமிழரின் (விடுதலைப் புலிகளின்) போராட்டம். விடுதலைப் புலிகள் இல்லாத சூழ்நிலையில் அது இன்றும் ஐ.நா. சபை உட்பட்ட சர்வதேச சக்திகளின் துணையுடன் விக்கினேஸ்வரன், திறமையற்ற சம்பந்தன் போன்றவர்களின் தலைமையில் தொடருகின்றது.

On 4/27/2019 at 7:50 PM, பெருமாள் said:

சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகளால் தான் தானுடப்பட முஸ்லிம்கள் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளின் பின்னால் நிக்கிறம் என்று ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை காணி திருட்டுகளில் மன்னாதி மன்னனான ரிஷாட் பதியுதீன் மறைமுகமா வழங்கியிருக்கிறார்! முதுகெலுப்பிருந்தா இந்த மனுஷன் இதை நேரடியா சொல்லிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.