Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ்

DSCF1518-Main-pic.jpg

பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம்.

இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி.

உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா.  

ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம்  உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது.

சவுதி அரேபியாவில் இருந்து வந்த பெரும் நிதியுடன், அரசு சார்பில்லாத தனியார் நிறுவனம் ஒன்று ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது குறித்த கரிசனைகள் கல்வியாளர்கள் மத்தியில் உண்டாகி உள்ளது.

இத்தகைய தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பேராசிரியர் சாண ஜெயசுமண, சட்ட பீடத்தின் கீழ் சட்டம் படிப்பதாக அனுமதியை வாங்கி, அதன் கீழ், ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது தான் திட்டம் என்கிறார். இது குறித்து முழு விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்கிறார்.

Batticaloa Campus (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஹிஸ்புல்லா. அவர் கிழக்கு கவர்னர் ஆனதும், தனது மகனை தலைவர் ஆக்கி உள்ளார்.

ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் படிப்பிக்கப் படும் என்பது  பச்சை பொய் என மறுக்கிறார் ஹிஸ்புல்லா. உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றி எவ்வாறு அதை செய்ய முடியும் என்கிறார் அவர்.

உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கின்றது.

முன்னாள் உயர் கலவி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, தனது காலத்தில் அவ்வாறான அனுமதி இன்னும் வழங்கப் படவில்லை என்கிறார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் மாயாதுன்னா, IT சிஸ்டம் குறித்த மதிப்பீடுகளுக்கே விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.

ஆயினும், குறித்த பல்கலைக்கழகம் ஏப்ரல் 30ம் திகதி, Information Technology, Management, Agriculture and Education ஆகிய துறைகளில் கற்க்கை நெறிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் முகாமையாளர் முகம்மது தாஹிர், இன்னும் ஒருவருட காலத்தில் சகல கட்டுமான வேலைகளையும் முடிந்து விடும் என்கிறார்.

தாஹிர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு வந்து பரிசீலனை செய்து சென்றதாக சொல்கிறார்.

ஆயினும் இதனை மறுக்கிறார் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி செயலாளர் விஜேசிங்க. நாம் நாட்டின் அரச பல்கலைக்கழகங்களையே ஒழுங்கு படுத்துகிறோம். இது தனியார் நிறுவனம். ஆகவே இது உயர்கல்வி அமைச்சின் கீழே வரும் என்கிறார் அவர்.

நிறுவனத்தின் முன்பகுதி, மொகலாய, மேற்கு ஆசிய (சவூதி) கட்டிட கலைகளை பிரதிபலிப்பதாக பிரமாண்டமாக உள்ளது. வகுப்பறைகள் மிக நவீன வசதிகள் கொண்டதாக உள்ளன. இந்த காணி உள்ள நிலம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. இங்கே நீச்சல் தடாகமும், கால்பந்து மைதானமும், பல நவீன விளையாட்டு வசதிகளும் கொண்டதாக இருக்கும் என நிறுவனத்தின் youtube பதிவு சொல்கிறது.

இதற்க்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ஹிஸ்புல்லாவிடம் முன்வைக்கப் பட்டது.

சவீதியில் உள்ள ‘Ali Al-Juffali Trust’ இடம் இருந்து 24 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் ஊடாக வந்தது என்கிறார் அவர்.

மலேசியாவில் உள்ள Universiti Teknologi Petronas (UTP) என்கிற தனியார் பல்கலைக்கழகத்தின் மாதிரியை கொண்டே இந்த பல்கலைக்கழகத்தினை அமைகின்றார் அவர். இதற்காக 2016 -17 காலப்பகுதியில் அங்கே சென்று இருக்கிறார் ஹிஸ்புல்லா.

சோலார் ஓடுகளுடன் கூடிய கூரைகளுடன் கட்ட பட்டுக்கொண்டிருந்த இந்த பல்கலைக்கழகத்தின் லைப்ரரி வேலைகள், கடந்த வார குண்டு வெடிப்புகளுக்கு பின் நிறுத்தப் பட்டுள்ளன.

யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு.

sundaytimes.lk

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நாதம்ஸ் ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

மொழி பெயர்ப்புக்கு நன்றி நாதம்.

இப்படி ஒரு பல்கலைகழகத்தை ஏன் புலம்பெயர் மக்கள் தமிழ் மாணவர்களுக்கு அமைக்க முடியாதா !!

10 லட்சம் தமிழர்கள் வெளி நாடுகளில் இருக்கும் போது  ஒவ்வொருவரும் ஆளுக்கு 10 டொலர் கொடுத்தாலே 10 மில்லியன் டொலர் சேரும்...!!!!!!

இதால்லாம எங்கட ஆக்கள் செய்ய மாட்டார்கள் ஆனால் பிரான்ஸ் வர  6,000,000 கண்ணை மூடிக்கொண்டு அனுப்பிவினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Dash said:

முக்கியமான விசயத்தினை  கவனியுங்கள்.

அரசியல் ஸ்திரத்தன்மை (உறுதிப்பாடு) இன்றி யாருமே முதலிட மாட்டார்கள். குண்டு வெடிப்பின் பின் முதலீட்ட பணத்தினை எடுத்துக் கொண்டு முதலீட்டாளர்கள் ஓடுவதை இந்த கார்ட்டூன் சொல்கிறது.

Econ-Cartoon.jpg

இலங்கையின் அரசியல் நிலைமை கடந்த அக்டோபர் மதம் 26ம் திகதியில் இருந்து தலைகீழாக மாறி உள்ளது.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு எந்த நம்பிக்கையில் கடன் வழங்கப் பட்டது, மேலும் இந்த சவூதி டிரஸ்ட் யார், அவர்களது பின்னணி என்ன என்பது இப்போது விசாரணைக்கு உள்ளாகும். 

இறுதியில் இந்த பல்கலைக்கழகமும் அதன் முதலீடும், சிங்கள அரச சுவீகரிப்புக்கு உள்ளாகலாம்.

ஹிஸ்புல்லாவின் கனவுக்கு மாறாக, பொடி மெனிக்கேவும், லொக்கு பண்டாவும் பௌத்தம் படிப்பார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பல்கலைக்கழகத்திற்கு தடை என்கிறார்கள்...இந்த இடத்தை போய் செக் பண்ணினால் இருக்கின்ற மிச்ச தீவிரவாதிகளையும் பிடிக்கலாம்...உடைச்சு தோண்டினால் என்னவெல்லாம் வருமோ தெரியாது 
 
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள்  பல விடயங்களை.... மிகுந்த முன் ஏற்பாட்டுடன்  செய்து வந்தது எல்லாம்.
குண்டு வெடிப்புடன்... தலைகீழாக மாறி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முஸ்லீம்கள்  பல விடயங்களை.... மிகுந்த முன் ஏற்பாட்டுடன்  செய்து வந்தது எல்லாம்.
குண்டு வெடிப்புடன்... தலைகீழாக மாறி விட்டது.

அவர்களுக்கு இனப்பற்று அதிகம் தமிழர்களுக்கு தான் வாழ்ந்தால் போதுமென்ற நினைப்பு அவ்வளவுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு இனப்பற்று அதிகம் தமிழர்களுக்கு தான் வாழ்ந்தால் போதுமென்ற நினைப்பு அவ்வளவுதான்

இல்லை மதப்பற்று  தான் அதிகம்.

இலங்கை சோனகராக அமைதியாக இருந்தவர்களிடையே, வஹாபி, சுபி என பல் முரண்பாடுகள் வந்து குழப்பி விட்டார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இல்லை மதப்பற்று  தன அதிகம்.

இலங்கை சோனகராக அமைதியாக இருந்தவர்களிடையே, வஹாபி, சுபி என பல் முரண்பாடுகள் வந்து குழப்பி விட்டார்கள்.

ம் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள் 

வெளியில தாராளமா, video எல்லாம் போட்டுக் காட்டியும் மோட்டு சிங்களம் கோட்டை விட்டு விட்டதே. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தெரியும் அரசியல் என்ற கதிரை இருப்பும் பதவியும் இன்று அந்த சூழ்நிலை இல்லை அதனால் கண்ணுக்குள் விழுந்த தூசு போல் உறுத்திக்கொண்டு இருக்க்கு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னரே சொன்னது நடக்கின்றது.

நேற்று, கிழக்கு வந்த மைத்திரி, இந்த நிறுவனம் இலங்கை அரச, பல்கலைக் கழக ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப் படும் என அறிவித்தார்.

அவர் அவ்வாறு அறிவித்த போது, அங்கிருந்த கிழக்கு மாகாண கவனர் முகத்தில் ஈயாடவில்லை என்று தெரிய வருகிறது.

On 5/5/2019 at 4:18 PM, Nathamuni said:

இலங்கையின் அரசியல் நிலைமை கடந்த அக்டோபர் மதம் 26ம் திகதியில் இருந்து தலைகீழாக மாறி உள்ளது.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு எந்த நம்பிக்கையில் கடன் வழங்கப் பட்டது, மேலும் இந்த சவூதி டிரஸ்ட் யார், அவர்களது பின்னணி என்ன என்பது இப்போது விசாரணைக்கு உள்ளாகும். 

இறுதியில் இந்த பல்கலைக்கழகமும் அதன் முதலீடும், சிங்கள அரச சுவீகரிப்புக்கு உள்ளாகலாம்.

ஹிஸ்புல்லாவின் கனவுக்கு மாறாக, பொடி மெனிக்கேவும், லொக்கு பண்டாவும் பௌத்தம் படிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎6‎/‎2019 at 1:07 AM, Dash said:

இப்படி ஒரு பல்கலைகழகத்தை ஏன் புலம்பெயர் மக்கள் தமிழ் மாணவர்களுக்கு அமைக்க முடியாதா !!

10 லட்சம் தமிழர்கள் வெளி நாடுகளில் இருக்கும் போது  ஒவ்வொருவரும் ஆளுக்கு 10 டொலர் கொடுத்தாலே 10 மில்லியன் டொலர் சேரும்...!!!!!!

இதால்லாம எங்கட ஆக்கள் செய்ய மாட்டார்கள் ஆனால் பிரான்ஸ் வர  6,000,000 கண்ணை மூடிக்கொண்டு அனுப்பிவினம்.

நானும் இந்த பத்து டாலர் திட்டமொன்றை பிரேரித்து சென்ற 14ம் திகதியில் இருந்து ஒவ்வொரு கிழமையும் $10 சேர்த்து வருகிறேன் । இற்றை வரைக்கும் $40  சேர்ந்திருக்கு । வேறு ஒருவரும் இதில பெரிய அக்கறை எடுக்கவில்லை.  எல்லாரும் அவரவர் வாழ்க்கையில தங்களுக்கேயுரிய வகையில் பிஸி ஆகத் தானே இருப்பினம் !.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

ஈழ இறுதிப் போரில், வெளிநாட்டில்  சேகரித்த பணத்தை...   அங்கு பாதிக்கப் பட் ட மக்களின், போராளிகளின் நல்  வாழ்வுக்கும், தமிழ் பகுதிகளின் அபிவிருத்திக்கும் பாவிக்க சிலர்  கேட்ட போது...  
பணம் சேகரித்தவர்கள்... மீண்டும் போருக்கு அந்தப் பணம் தேவை என்றும், 
தலைவர் வந்து கேட்டால் மட்டுமே... பணத்தை கொடுப்போம் என்று சொன்னார்களாம்.

அதில்  சம்பந்தப் பட்டவர்கள்... இப்போது சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கின்றவர்களுக்கு...  வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

ஈழ இறுதிப் போரில், வெளிநாட்டில்  சேகரித்த பணத்தை...   அங்கு பாதிக்கப் பட் ட மக்களின், போராளிகளின் நல்  வாழ்வுக்கும், தமிழ் பகுதிகளின் அபிவிருத்திக்கும் பாவிக்க சிலர்  கேட்ட போது...  
பணம் சேகரித்தவர்கள்... மீண்டும் போருக்கு அந்தப் பணம் தேவை என்றும், 
தலைவர் வந்து கேட்டால் மட்டுமே... பணத்தை கொடுப்போம் என்று சொன்னார்களாம்.

அதில்  சம்பந்தப் பட்டவர்கள்... இப்போது சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கின்றவர்களுக்கு...  வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம்.

அப்படி நடந்தது ஊரறிந்த ரகசியம் । இழந்த வகையில் சொந்த அனுபவமும் உண்டு.

இங்கே நான் பிரேரித்த model மூன்றாவது நபர் பணம் சேர்ப்பதை அடிப்படையாக கொண்டதல்ல।  உண்மையில் இன்னொருவர் சேகரிக்க மாட்டார் । ஒவ்வொருவரும் தானே சேகரித்துக் கொண்டிருப்பர் , ஒரு பொது பட்டியலில் ஒவ்வொருவரும் எவ்வளவு சேமித்திருக்கின்றனர் என தங்களுக்குள் மாத்திரம் அறியக் கூடியதாக இருக்கும் .

இதிலுள்ள எவராவது ஒருவர் முன் வைக்கும் ஒரு செயல்திட்டத்திற்கு , ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் , ஒவ்வொருவரும் சேமித்த பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பர்.

செயல் திட்டத்தை நிர்வகிப்பது பட்டியலில் உள்ள தெரிவு செய்யப்பட மூன்று பேராக இருப்பர்
விளையாட இடம் இல்லை , accountability  at  its  highest  ,   personal involvement will be practical , also if willing only .

தொடரக்  கூடிய செயல் திட்டங்களுக்கு வேறு மூவர் முகாமைத்துவ பொறுப்பாக இருப்பர்.

 அடிப்படையில் நீங்களே சேமித்த பணத்தில் உங்களுக்கு பிடித்த செயல் திட்டத்தை மற்றவர்களின் துணையுடன் நீங்களே செயல்படுத்தக் கூடிய திட்ட முறை தான் இது .

Edited by சாமானியன்
Bold words added

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி அமைச்சின் கீழ்கொண்டு வந்தாலும் ஹிஸ்புல்லாவும்,அவரது மகனும் ஆட்சி செலுத்த முடியும் என்று நினைக்கிறேன்....அரசு இன்னும் கையகப் படுத்தவில்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ஈழ இறுதிப் போரில், வெளிநாட்டில்  சேகரித்த பணத்தை...   அங்கு பாதிக்கப் பட் ட மக்களின், போராளிகளின் நல்  வாழ்வுக்கும், தமிழ் பகுதிகளின் அபிவிருத்திக்கும் பாவிக்க சிலர்  கேட்ட போது...  
பணம் சேகரித்தவர்கள்... மீண்டும் போருக்கு அந்தப் பணம் தேவை என்றும், 
தலைவர் வந்து கேட்டால் மட்டுமே... பணத்தை கொடுப்போம் என்று சொன்னார்களாம்.

அதில்  சம்பந்தப் பட்டவர்கள்... இப்போது சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கின்றவர்களுக்கு...  வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம்.

அருமையான பதிவு. இதே கருத்தை 4 வருடங்களுக்கு முன் சொன்ன போது நான் சந்தித்த வசவுகள் மனதில் வந்து போனாலும், காலம் தாழ்தியேனும் உண்மையின் தரிசனம் கிட்டியதை இட்டி மகிழ்சியே.

இப்படி ஒரு திட்டத்தை லைக்கா கிளிநொச்சியில் செய்யப்போவதாக பேச்சு அடிபட்டதே?

தமிழரோ, முஸ்லீமோ லைக்கா, ஹிஸ்புல்லா போன்ற முகவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

நம்மை போல யாராவது சேவை நோக்கில் போனால், திறைசேரிக்குப் போ, அனுமதி எடு, இது புலிக்காசா எண்டு ஆயிரம் தடைகள் வரும்.

விசுகரின் அனுபவத்தை கேட்கவும். சின்ன அளவில்தான் இப்போதைக்கு செய்ய முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவூதியில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு வந்த பணத்தில் கட்டப்பட்ட பல்கலைக்கழகத்தின் 50 கோடி பெறுமதியான பங்குகளை அவர் வாங்கி முதலீடு செய்ததாக காட்டப்படுள்ள விபரத்தினை முழு விசாரணைக்கு உள்ளாக அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அதாவது நிறுவனத்தில் தான், ஆளுனர் முக்கியத்தும் தனது இடத்துக்கு மகனை நுழைத்தார் அவர்.

அந்த தனியார் நிறுவனத்துக்கு வந்த பணத்தில் அமைக்கப் பட்ட, பல்கலைக்கழகத்தில், பங்குகள் 50 கோடிக்கு வாங்கி இருப்பதே எப்படி என்பதே கேள்வி.

ஏனெனில் பல்கலைக்கழகம் தனியார் நிறுவனம் அல்ல. தனியார் நிறுவனத்தின் சொத்து. அந்த சொத்தில் பங்கு என்பது எப்படி என்பதே கேள்வி.

http://www.dailymirror.lk/breaking_news/Govt--probing-how-Hisbullah’-son-obtained-shares/108-166893

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎11‎/‎2019 at 9:53 AM, goshan_che said:

அருமையான பதிவு. இதே கருத்தை 4 வருடங்களுக்கு முன் சொன்ன போது நான் சந்தித்த வசவுகள் மனதில் வந்து போனாலும், காலம் தாழ்தியேனும் உண்மையின் தரிசனம் கிட்டியதை இட்டி மகிழ்சியே.

இப்படி ஒரு திட்டத்தை லைக்கா கிளிநொச்சியில் செய்யப்போவதாக பேச்சு அடிபட்டதே?

தமிழரோ, முஸ்லீமோ லைக்கா, ஹிஸ்புல்லா போன்ற முகவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

நம்மை போல யாராவது சேவை நோக்கில் போனால், திறைசேரிக்குப் போ, அனுமதி எடு, இது புலிக்காசா எண்டு ஆயிரம் தடைகள் வரும்.

விசுகரின் அனுபவத்தை கேட்கவும். சின்ன அளவில்தான் இப்போதைக்கு செய்ய முடியும்.

செய்வதற்கு மனமும் செயற்பாடுமே தேவையானவை வழியைக் கண்டு கொள்ளலாம் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் பொறியியலாளர் சங்கம் பல வருடங்களாக இவ்வகையான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் அவர்களின் சமீபத்திய செயல்பாடு :   

Please find attached photos, thanking letter & receipt in regard to a Donation to Hari Illam Orphanage at Batticaloa.

Tamil Engineers Foundation made a donation of Rs 323,900.00 ($2550.00) to Hari Illam Orphanage at Batticaloa to arrange additional coaching classes in Maths, Science & English for grades 8 to 11 students.

It is noted that many students from this Orphanage (16 in total) have obtained University Admissions and continuing their tertiary education at various Universities. Great achievement.

I am glad that many of you came forward to help and support these children who lost their parents in the troubles and sought refuge in orphanage centres for food & shelter.

The details of funding received for this project:  பத்து உறுப்பினர்கள் சேர்ந்து இந்த பணத்தை அனுப்பியிருந்தார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.