Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC03617.jpg?zoom=1.1024999499320984&res

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019  இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உடசவம் இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை  நிறைவேற்ற முடியும் என் அறிவிக்கப்படடதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றதுவருகிறது

அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உடசவம் சிறப்புற இடம்பெற்றது அதனை தொடர்ந்து 13/05/2019 இன்று மாலை 03:00 க்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்தம் எடுக்கும் புனித நிகழ்விற்காக தீர்த்தக்குடம் புறப்பட்டு  மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரை கடலில் அன்னைக்கு உப்பு நீரில் விளக்கெரிக்கும் தீர்தமெடுக்கப்பட்ட்து

இதனை தொடர்ந்து 13/05/2019- இரவு 11:00 காட்டா விநாயகர் ஆலயத்தை தீர்த்தம் வந்தடைது 13/05/2019- நள்ளிரவு 12:00 அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரித்தல் இடம்பெறும் அதனை தொடர்ந்து  15/05/2019- புதன் மடை 17/05/2019- வெள்ளி மடை 19/05/2019 – காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று  20/05/2019- அதிகாலை 03:00 மடை பண்டம் அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு செல்லல் 20/05/2019 வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை  கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று  20/05/2019- நள்ளிரவு 12:00 வளர்ந்து வைத்து பொங்கல் இடம்பெறும்  25/05/2019- பக்தஞானி பொங்கல் ( பொங்கல் கிரியை நிறைவு) உடன் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை  கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நிறைவடைய உள்ளது

ஆலய பொங்கல் உற்சவத்துக்காக பின்வரும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

  1. முப்படையினரின் மூவளைய பாதுகாப்பு
  2. பொலிஸாரின் முழுமையான உடல்,உடைமை சோதனை
  3. பிரதான வீதியுடன் மட்டுப்படுத்த பட்ட வாகன வசதிகள். ( ஆலய வளவினுள் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை)
  4. வியாபார நிலையங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி
  5. பறவை காவடிகளுக்கான அனுமதி பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட வில்லை                         (எனவே பறவை காவடி நேர்த்திக்கடன்களை அடுத்த வருடம் வழமை போல் நிறைவேற்ற முடியும்)
  6. தேவையற்ற பொதிகளுடன் ஆலய வளவிற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
  7. கட்டாயமாக தங்களது தேசிய ஆள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள்
  8. ஆலய வளவிற்குள் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் கிடையாது
  9. முழுமையான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய_நிர்வாகம் அறிவித்துள்ளத

 #விளக்கேற்ற #தீர்த்தம்  #VattapalaiKannakiAmman #வற்றாப்பளைகண்ணகிஅம்மன்

DSC03604.jpg?zoom=1.1024999499320984&resDSC03605.jpg?zoom=1.1024999499320984&resDSC03610.jpg?zoom=1.1024999499320984&resDSC03614.jpg?zoom=1.1024999499320984&res 

http://globaltamilnews.net/2019/121716/

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரதி said:

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

பூசலார் நாயனார் மாதிரி, ஒரு இடத்தில் இருந்து , மனதால் அந்த கோயிலுக்கு போய், வழிபடலாம்.

அம்மன் எப்ப கூப்புடுவாவோ, தெரியாது தானே.:100_pray:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

தெய்வமே....அம்மாளாச்சியே தங்கச்சிக்கு ஒரு வழியை காட்டு தாயே......

Bildergebnis für hindu prayer hands

  • கருத்துக்கள உறவுகள்

Image result for vattapalai amman kovil

Image result for vattapalai amman kovil

Edited by Nathamuni

  • 3 weeks later...

61575252_10216957555882482_6751281078519Image may contain: sky, cloud and outdoorImage may contain: sky and outdoorImage may contain: sky and outdoorவற்றாப்பளை கண்ணகி அம்மன்

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, tulpen said:

ஓம்...

கண்ணகி, மனிதப்பிறவி எண்டதை மறக்கப்படாது கண்டியளே.

தமிழ்நாட்டில, கிராமம்  ஒன்றில் எம்ஜியாருக்கு கோவில் கட்டின ஒருத்தர் மூன்று வேளை பூசை செய்வதாகவும், சனமும் வந்து, துனணூறு, பிரசாதம் வாங்கி போகுதாம் எண்டும் செய்தி வந்ததே.

இது தொடர்ந்தால், நூறுவருசத்துக்கு பொறகு, எம்ஜியார் சாமி கண் திறந்து பார்க்கேல்லையே எண்டு கஸ்டம் வந்தாக்கள் சொல்லிவினம், இல்லையா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

குசுப்புவை மறந்தது ஏனோ முனிவரே..... 🙏

2 hours ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை

இது ஏமாற்று வித்தை என்று தோன்றவில்லை....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Paanch said:

இது ஏமாற்று வித்தை என்று தோன்றவில்லை....:rolleyes:

குஸ்பு அம்மன் எண்டு தொடங்க கிளம்பினவையள்....

அவரது மார்க்கம் வேறு, அம்மன் ஆக்க அலவுட் இல்லை என்று சொல்லப்பட்டதும் அடங்கிவிட்டார்கள். 

எண்ணைய் குறைந்தால், திரி ஊடுபத்தும்.

இதை தடுக்க, சேர்க்க  எண்ணைய் இல்லாவிடில், தண்ணீர் சேர்த்தால், மிதந்துவரும் எண்ணை, தண்ணீர் மேலே படிவதால், திரி தொடர்ந்து எரியும்.

தண்ணீரினால் தான் எரிகிறது என்பது, பூசாரிகளின் தொழில் ரகசியம். :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

ஓம்.......அம்மாளின்ரை சக்தியை விட குண்டுவீச்சு விமானங்களும்  செல் தாக்குதல்களின்  சக்தி அதிகம் தான்......

இதையெல்லாம் செய்தது யார்?

நீங்களும் உங்கள் வருடிகளும் போற்றிப்பாடும் பகுத்தறிவு கொண்ட மேற்குலகம் அல்லவா?  அவர்கள் விண்ணை முட்டும் விஞ்ஞான சக்தியில் முன்னேறி விட்டார்கள் அல்லவா?

மனிதநேயம் கொண்டுதானே எம்மையெல்லாம் அகதிகளாக ஏற்றார்கள். அந்த ஆறறிவு உள்ளவர்களுக்கு மனிதம் அங்கே சாகின்றது தெரியவில்லையா? அல்லது ஆடு மாடு பன்றிகள் போன்று ஐந்தறிவு படைத்தவர்களா?

ஏன் அந்த அழிவுகளை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை? 
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

கொடுமைதான் 

Edited by பெருமாள்

15 hours ago, குமாரசாமி said:

ஓம்.......அம்மாளின்ரை சக்தியை விட குண்டுவீச்சு விமானங்களும்  செல் தாக்குதல்களின்  சக்தி அதிகம் தான்......

இதையெல்லாம் செய்தது யார்?

நீங்களும் உங்கள் வருடிகளும் போற்றிப்பாடும் பகுத்தறிவு கொண்ட மேற்குலகம் அல்லவா?  அவர்கள் விண்ணை முட்டும் விஞ்ஞான சக்தியில் முன்னேறி விட்டார்கள் அல்லவா?

மனிதநேயம் கொண்டுதானே எம்மையெல்லாம் அகதிகளாக ஏற்றார்கள். அந்த ஆறறிவு உள்ளவர்களுக்கு மனிதம் அங்கே சாகின்றது தெரியவில்லையா? அல்லது ஆடு மாடு பன்றிகள் போன்று ஐந்தறிவு படைத்தவர்களா?

ஏன் அந்த அழிவுகளை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை? 
 
நான் சொன்ன கருத்துக்கு துளியவும் பொருத்தமில்லாமல் ஏதோ வருடிகள் மேற்குலகம் என்று சம்பந்தமே  இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளீர்கள். எப்படியோ  கடவுள் சக்தி என்பது பொய் என்பதை இப்போதாவது ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் இருந்து குழாய் அடித்து 
அப்பிடியே எரிய விட்டு விட்டு 
மின்சாரம் தயாரிக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

நான் சொன்ன கருத்துக்கு துளியவும் பொருத்தமில்லாமல் ஏதோ வருடிகள் மேற்குலகம் என்று சம்பந்தமே  இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளீர்கள். எப்படியோ  கடவுள் சக்தி என்பது பொய் என்பதை இப்போதாவது ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

நான் உளறிக்கொட்டினான் எண்டால் பிறகு என்ன கோதாரிக்கு பதில் எழுதினீர்கள்? மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் மாரித்தவளை மாதிரி கத்திப்போட்டு அப்பிடியே போகவேண்டியதுதான்
ஓம் நமச்சிவாய

43 minutes ago, குமாரசாமி said:

நான் உளறிக்கொட்டினான் எண்டால் பிறகு என்ன கோதாரிக்கு பதில் எழுதினீர்கள்? மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் மாரித்தவளை மாதிரி கத்திப்போட்டு அப்பிடியே போகவேண்டியதுதான்
ஓம் நமச்சிவாய

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

மத்திய காலப்பகுதி பதினொன்றாம்  நூறாண்டு முதல், பதிணைந்தாம் நூறாண்டு காலப்பகுதி.

மதவெறி மூடத்தனம் இன்றும் தொடர்கிறது.

ஜரோப்பா, மத்தியகிழக்கில் இருந்து, நீயுசீலாந்து, இலங்கை என மூர்க்கமாக நகர்கின்றது.

இந்தியாவில் இந்துத்துவா என்றும், இலங்கையில், மியான்மரில் பெளத்தவாதமாகவும் தொடர்கிறதே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, tulpen said:

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

இஞ்சை பாரடா 20ம் நூற்றாண்டே மூச்செடுக்கேலாமல் அவதிப்படுது.குடிதண்ணீர் இல்லாமல் தத்தளிக்குது......இதுக்கை 25ம் நூற்றாண்டாமெல்லே.....ஆசையை பாரு!!!!!!

1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை பாரடா 20ம் நூற்றாண்டே மூச்செடுக்கேலாமல் அவதிப்படுது.குடிதண்ணீர் இல்லாமல் தத்தளிக்குது......இதுக்கை 25ம் நூற்றாண்டாமெல்லே.....ஆசையை பாரு!!!!!!

இதே போல 15 ம் நூற்றாண்டிலும் ஒரு குமாரசாமி  அப்பாவித்தனமாக நினைச்சிருப்பார். 20 ம் நூற்றாண்டில் இன்னொரு குமாரசாமி பிறந்து  21ம்ஸ நூற்றாண்மாடில்ர ஸ்மார்ட் போனில்  நினைத்த உடனே உலகம் முழுவதும் உள்ள தனது நண்பர்களுடன் காட்சித்திரையில் உரையாடுவார் என்று அந்த குமாரசாமி நினைத்துக்கூட இருக்க மாட்டார். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, tulpen said:

குமாரசாமியும் குஞ்சரமும் ஒருபக்கம் இருக்கட்டும்.
ஆதிகாலத்தில் செயற்கை அழிவுகள் இல்லை.இப்போது எல்லா அழிவுகளும் கண்முன்னே நடக்கின்றது
இப்போது வாராவாரம் ஒருதடவையாவது வீட்டு ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்திருக்குமாறு மக்களை வானொலியில் எச்சரிக்கின்றார்கள்.அந்த அளவிற்கு இரசாயன தொழிற்சாலைகளின் நச்சு வாயுக்கள் அதிகமாகி விட்டது.
கண்பார்வையையையும் காது கேட்பதையும் கெடுக்கும் ஸ்மாட்போன் போன்ற கருவிகள் எத்தனை அழிவுகளை சமுதாயத்திற்கு விளைவிக்கின்றது என்பது தெரியாமல் அதை பெருமையாக நினைத்து உள்ளம் பூரிக்கும் உங்களுடன் கருத்தாடுவதை நினைத்து வெட்கி தலைகுனிகின்றேன்.

6 hours ago, குமாரசாமி said:

இப்படி சொல்லிவிட்டு  அத்தனை நவீன சாதனங்களையும் (யாழ் இணையம் உட்பட) வெட்கமில்லாமல் பயன்படுத்தும் போது வராத வெட்கமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎30‎/‎2019 at 12:23 PM, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது... 2009 இது பற்றி எழுதியிருக்கிறேன்...அந்த நேரம் இது பற்றி கோயிலுக்கு வரும் ஒரு அம்மாவிடம்  கேட்டதிற்கு அவ, அவரவர் செய்த கர்ம பலனை மாத்த முடியாது என்று சொன்னார்...எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் கடவுள் எதற்கு என்று கேட்டேன்..கொஞ்சம் நடப்பதை பின் போடலாம் அல்லது குறைக்கலாம் என்று சொன்னார்.

நாவுறையும்,கண் திட்டியையும் கடவுளால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லினம்...வன்னியில் புலிகளின் ஆட்சியையும்,மக்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் பார்த்து அம்மன் கண் வைச்சு விட்டாவோ ! இது நான்  சொல்றன் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, tulpen said:

இப்படி சொல்லிவிட்டு  அத்தனை நவீன சாதனங்களையும் (யாழ் இணையம் உட்பட) வெட்கமில்லாமல் பயன்படுத்தும் போது வராத வெட்கமா? 

எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளது அது உங்களிடம் துளியேனும் இல்லை.
என்னுடனான பகிர்வுகளுக்கு நன்றி . வணக்கம்.

9 hours ago, குமாரசாமி said:

எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளது அது உங்களிடம் துளியேனும் இல்லை.
என்னுடனான பகிர்வுகளுக்கு நன்றி . வணக்கம்.

பொது வெளியில் நான் கேட்ட  யதார்ததமான கேள்வியை யதார்தத்திற்கு எந்தசம்பந்தமும் இல்லாமல் மேற்குலம் என்று ஏதோ உள்ளிக்கோட்டிய நீங்கள் யதார்ததைப்பற்று பேசுகின்றீர்கள்.  நமது முட்டாள்தனங்களை முன்னோர். கலாச்சாரம் என்று புனிதப்படுத்திவிட்டு எதற்கெடுத்தாலும் அடுத்தவர் மீது பழி போடுவது தான யதார்ததமோ? 

யதார்தமாக சிந்தித்து இருந்தால் எப்போதோ விடுதலை அடைந்திருப்போமே. 

Edited by tulpen

On 5/31/2019 at 9:52 AM, குமாரசாமி said:

 மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். 

மதம் தனிப்பட்ட விடயமாக வீட்டுக்குள் இருக்கு மட்டும் அதனால் எந்தப் பிரச்சணையும் இல்லை. அது வீட்டை விட்டு தெருவுக்கு வந்து சமூக பிரச்சணையாகி மக்களை அகதிகளாக்கி அல்லல் பட வைக்கும் போது அதனை 'தனிப்பட்ட' விடயம் என்று சொல்வது பொருத்தமானதா என்பது கேள்விக்குரியது.

ஈழத்தில் நாம் பட்ட துண்பங்களிற்கு மூலகாரணம் பெளத்த மதவாதமே. புலத்தில் எம்மை தங்க அனுமதித்திருக்கும் மேற்கத்தையம்  மதத்திற்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும் மிதவாதம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.