Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம்! பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை! கொந்தளிக்கும் பிக்குகள் Report us Vethu 6 hours ago

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/217722?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு அணையாது போல் உள்ளது முறையா வேண்டிகட்டபோகினம் .

தமது ஆட்களை வைத்தே புத்தர் சிலையை அங்கு வீசி விட்டு / வைத்து விட்டு அதை பொலிஸார் உதவியுடன் மீட்டிருப்பினம் என நினைக்கிறன். அப்ப தான் இனவாதத்தை தொடரலாம். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

தமது ஆட்களை வைத்தே புத்தர் சிலையை அங்கு வீசி விட்டு / வைத்து விட்டு அதை பொலிஸார் உதவியுடன் மீட்டிருப்பினம் என நினைக்கிறன். அப்ப தான் இனவாதத்தை தொடரலாம். 😎

இவையளும் நல்லா வேண்டிக்கட்டனும் சிங்களவன் அடிக்கிற அடியால் அவர்கள் கத்தும்போது அரபியில் கத்துகிறார்களா என்று யராவது கேட்டு சொல்லுங்கப்பா ?

உடம்புக்கு நோவு எண்ணயை பூசும்போது வடகிழக்கு  தாய் தமிழர்களின் வலி புரியனும் . 

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது?

சிங்களத்துக்கு வந்த சோதனை?😘

  • கருத்துக்கள உறவுகள்

தருமச் சக்கரம் போட்ட ஆடை உடுத்தியிருந்தா எண்டு பிடிச்சு வச்ச அந்த இசுலாமிய பெண்மணி இப்ப அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு போட்டிருக்காம்.  
இவை அது புத்தரின் தருமச் சக்கரம் தானோ என confirm பண்ண புத்த சாசன அமைச்சுக்கு அனுப்பினால் அவை அங்க கை விரிச்சிட்டினமாம் - தங்களிட்ட ஒரிஜினல் தரும சக்கரம் எப்படி இருக்கும் எண்டு prototype  ஒண்டும் இல்லை எண்டு .

நாங்கள் சின்ன வயதில விளையாடிய சடு குடு ஆட்டத்தில் இருந்த குவாலிஃபிகேஷன் கூட இல்லை இந்த மோடையா கூட்டம்  நாட்டை ஆளுற வள்ளிசு !

இப்ப உந்த சிலைகளெல்லாம் உண்மையான புத்தர் சிலை தான் எண்டு யார் உறுதிப் படுத்தப்  போகினம்?

படா ஷோக்கா இல்லியா இருக்கு இந்த கேம் ஒன்னு  !!

  • கருத்துக்கள உறவுகள்

சடத்துவத்திலும்.....உயிரைக் கண்டவன் புத்தன்....!

அன்றைய இரத்தலில்...ஒரு கொல்லன் இட்ட பன்றி இறைச்சிக் கறியை உண்டு...வயிற்றுப் போக்கினால்....மரணத்தைத் தழுவியவன்....!

அவன் ....இறுதிக் காலத்தில் இவ்வாறு தான் இருந்திருப்பான்!

காரைக்கால் அம்மையாரின் ஆண் பாலைப் போல...!

fasting-buddha1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்கு... கடுப்பு ஏத்த  வேண்டும் என்றே... ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு. 😄
பிக்குகளுக்கும்... பொழுது போக வேணும் தானே....
வாய்க்காலில் விழுந்து கிடந்த புத்தரால்... 
இந்தக் கிழமை... ஸ்ரீலங்கா செய்திகள் சூடு பிடிக்கும். :grin:

Edited by தமிழ் சிறி

10 hours ago, பெருமாள் said:

இவையளும் நல்லா வேண்டிக்கட்டனும் சிங்களவன் அடிக்கிற அடியால் அவர்கள் கத்தும்போது அரபியில் கத்துகிறார்களா என்று யராவது கேட்டு சொல்லுங்கப்பா ?

உடம்புக்கு நோவு எண்ணயை பூசும்போது வடகிழக்கு  தாய் தமிழர்களின் வலி புரியனும் . 

அவர்கள் அல்லா என்று கத்துவார்கள்.

அளவுக்கு மீறி அடி விழும் போது ISIS க்கு எதிரான மனநிலை உள்ளவர்களும் ISIS இல் சேர்ந்தால் என்ன என யோசிக்கக்கூடும். (அவ்வாறு யோசிப்பவர்களை வரவேற்று பயிற்சி வழங்க பலர் உள்ளார்கள்). பின் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக்கொண்டு வந்து தாக்குதல் நடத்தக்கூடும்.

நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

நாடு நல்லா இருந்து தமிழனுக்கு தீர்வு தருதோ அல்லது தமிழனை  நிம்மதியாய் இருக்க விடுதோ ? இவ்வளவு நடந்தும் உதட்டளவில் கூட சிங்களத்தால் தீர்வை பற்றி கதைக்க முடியலை .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

சடத்துவத்திலும்.....உயிரைக் கண்டவன் புத்தன்....!

அன்றைய இரத்தலில்...ஒரு கொல்லன் இட்ட பன்றி இறைச்சிக் கறியை உண்டு...வயிற்றுப் போக்கினால்....மரணத்தைத் தழுவியவன்....!

அவன் ....இறுதிக் காலத்தில் இவ்வாறு தான் இருந்திருப்பான்!

காரைக்கால் அம்மையாரின் ஆண் பாலைப் போல...!

fasting-buddha1.jpg

சிறிலங்காவில் இருக்கிற புத்தர் எல்லாம் கொழுத்த புத்தர இருக்கினம்..அது எப்படி?

புத்தருக்கு  பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா?......புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

சிறிலங்காவில் இருக்கிற புத்தர் எல்லாம் கொழுத்த புத்தர இருக்கினம்..அது எப்படி?

புத்தருக்கு  பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா?......புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

தானமாகக் கிடைக்கும் உணவு எதுவாக இருப்பினும் அதை உண்ண வேண்டும் என்கிறது புத்த மதம்! 

புத்தர் மரணிக்கும் முன்னர்...அந்தக் கொல்லன் கொடுத்த உணவு தனது மரணத்துக் காரணமில்லை என்று தனது சீடர்களிடம் தெரிவித்திருந்தார்! அவரது இயற்பெயர் சித்தார்த்தன் என்று நினைவு! பின்னர் கௌதம புத்தராகினார்! புத்தரின் மகனின் பெயர் ராகுலன்!

ஒரு வேளை...ரஹிம் ...ராகுலனாகி இருக்குமோ?😗

  • கருத்துக்கள உறவுகள்

சிஹாப்டீன் என்ற பெயரே பின்னாளில் சித்தார்தன் என்றானது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

.புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

எனக்குக் கூகுள் ஆண்டவர் தந்த புத்தரின் மறு பெயர்கள்..... இவை தவிர இன்னமும் உள்ளனவாம்.! 

1) அகளங்கமூர்த்தி – சூ.
2) அகளங்கன் – தி.
3) அண்ணல் – சூ. தி.
4) அத்வயவாதி – நா.
5) அநந்தலோசனன் – தி.
6) அர்க்கபந்து – நா.
7) அரசுநிழலிருந்தோன் – சூ.
😎 அருங்கலைநாயகன் – தி.
9) அருணெறிகாக்குஞ்செல்வன் – தி.
10) அருளறம்பூண்டோன் – ம.
11) அறத்தகைமுதல்வன் – ம.
12) அறம்பகர்ந்தகோன் – வே.
13) அறவாழியாள்வோன் – ம.
14) அறவியங்கிழவோன் – ம.
15) அறவோன் – ம.
16) அறிவன் – பி.
17) ஆதி – சூ. தி.
18) ஆதிதேவன் – சூ.
19) ஆதிபுங்கவன் – பி.
20) ஆதிமுதலவன் – ம.
21) ஆதிமுனிவன் – ம.
22) ஆரியன் – ம.
23) இயல்குணன் – ம.
24) உரகர்துயரமொழிப்போன் – ம.
25) உலோகஜித் – நா.
26) எண்ணில்கண்ணுடையோன் – சூ.
27) எண்பிறக்கொழியவிருந்தோன் – ம.
28) ஏகதேவன் – தி. ம.
29) ஒருவன் – ம.
30) கண்பிறர்க்களிக்குங்கண்ணோன் – ம.
31) கந்தன் – வே.
32) கலைகட்கெல்லாம்நாதன் – சூ.
32) காமற்கடந்தோன் – ம.
33) கௌதமன் – நா.
34) சாக்கியமுனி – நா.
35) சாக்கியன் – சூ.
36) சாக்கியஸிஹ்மன் – நா.
37) சாந்தன் – சூ. தி. பி.
38) சாஸ்தா – நா.
39) சினந்தவிர்ந்தோன் – சூ.
40) சினன் – சூ. தி. பி.
41) சினேந்திரன் – ம.
42) செல்வன் – சூ.
43) சைனன் – சூ. தி.
44) சௌத்தோதனி – நா.
45) தசபலன்- நா.
46) ததாகதன் – சூ. நா.
47) தயாவீரன் – ம.
48) தர்மராஜன் – சூ. நா.
49) தருமதலைவன் – ம.
50) தருமன் – பி.
51) தன்னுயிர்க்கிரங்கான் – ம.
52) தீநெறிக்கடும்பகைகடந்தோன் – ம.
53) தீமொழிக்கடைத்தசெவியோன் – ம.
54) துறக்கம்வேண்டாத்தொல்லோன் – ம.
55) நரகர்துயர்கெடநடப்போன் – ம.
56) நல்லறம்பகர்ந்தோன் – வே.
57) நற்றவமூர்த்தி – தி.
58) நாதன் – ம.
59) பகவன் – சூ. தி. பி. ம.
60) பகவான் – நா.
61) பஞ்சதாரைவிட்டவுணர்க்கூட்டியபெருமான் – சூ. தி.
62) பரதுக்கதுக்கன் – வே.
63) பார் – வே.
64) பார்மிசநடந்தோன் – பி.
65) பாரின்மிசையோன் – தி.
66) பிடகன் – பி.
67) பிணிப்பறுமாதவன் – ம.
68) பிறர்க்கறமருளும்பெரியோன் – ம.
69) பிறர்க்கறமுயலும்பெரியோன் – ம.
70) பிறர்க்குரியாளன் – ம.
71) பிறவிப்பிணிமருத்துவன் – ம.
72) புங்கவன் – தி.
73) புண்ணியமுதல்வன் – சூ. தி.
74) புண்ணியமூர்த்தி – சூ. தி.
75) புத்தஞாயிறு – ம.
76) புத்தன் – தி. நா.
77) புலவன் – ம.
78) புனிதன் – தி. பி.
79) பூமிசைநடந்தோன் – சூ. நா.
80) பெரியவன் – ம.
81) பெருந்தவமுனிவன் – ம.
82) பெருமகன் – ம.
83) பேரறிவாளன் – ம.
84) பொதுவறிவிகழ்ந்து புலமுறுமாதவன் – ம.
85) போதித்தலைவன் – ம.
86) போதிநாதன் – ம.
87) போதிப்பகவன் – ம.
88) போதிமாதவன் – ம.
89) போதிமூலத்துநாதன் – ம.
90) போதியுரவோன் – ம.
91) போதிவேந்தன் – தி. பி. வே.
92) பௌத்தன் – வே.
93) மன்னுயிர்முதல்வன் – ம.
94) மாயாதேவீசுதன் – சூ. நா.
95) மாரனைவென்றவீரன் – ம.
96) மாரஜித் – நா.
97) மிக்கோன் – ம.
98) முக்குற்றங்கடிந்தோன் – தி.
99) முக்குற்றமில்லோன் – தி.
100) முத்தன் – தி.
101) முழுதுமுணர்ந்தோன் – ம.
102) முற்றவுணர்ந்தமுதல்வன் – ம.
103) முன்னவன் – ம.
104) முனி – நா.
105) முனீந்திரன் – சூ. நா.
106) முனைவன் – பி.
107) வரதன் – வே.
108) வரன் – சூ. தி. பி.
109) வாமன் – சூ. தி. பி. ம.
110) வாய்மொழிசிறந்தநாவோன் – ம.
111) விநாயகன் – சூ. நா.
112) ஜினன் – நா.
113) ஸ்ரீகனன் – நா.
114) ஷடபிஜ்ஞன் – நா.
115) ஸந்மார்க்கநாதன் – வே.
116) ஸமந்தபத்ரன் – நா.
117) ஸர்வஜ்ஞன் – நா.
118) ஸர்வார்த்தஸித்தன் – நா.
119) ஸித்தார்த்தன் – வே.
120) ஸூகதன் – நா. ம.

( இன்னும் பலவுள )

6 hours ago, பெருமாள் said:

நாடு நல்லா இருந்து தமிழனுக்கு தீர்வு தருதோ அல்லது தமிழனை  நிம்மதியாய் இருக்க விடுதோ ? இவ்வளவு நடந்தும் உதட்டளவில் கூட சிங்களத்தால் தீர்வை பற்றி கதைக்க முடியலை .

நாடு எப்ப நல்லா இருந்தது? 😀

இலங்கையின் பல நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதே இஸ்ரேல். 😎

இஸ்ரேல் பலஸ்தீனர்களை எவ்வாறு நடத்துகிறது என்று பார்த்தால் இலங்கை அரசு தமிழர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 🙃

போரில் தமிழர்களை தோற்கடித்த பின் தீர்வை தட்டில் வைத்து தர சிங்களத்திற்கு அவசியமில்லை. இஸ்ரேலுக்கு அவசியம் இருந்தால் இந்தியா, அமெரிக்கா மூலம் அதை நிறைவேற்றும். இல்லாவிட்டால் காலப்போக்கில் தமிழர்கள் சிங்களவர்களாகி விடுவர். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Lara said:

இல்லாவிட்டால் காலப்போக்கில் தமிழர்கள் சிங்களவர்களாகி விடுவர். 😎

உங்களின் பதிலுக்குத்தான் மறுமொழி உங்களின் பதிலை மறுபடியும் படித்து பாருங்கள் நண்பரே தமிழன் சிங்களவன் ஆகிறதுக்கு முதல் சிங்களவன் அல்லாவை கும்பிட மக்காவுக்கு  கிளம்பிடுவான் அந்தளவுக்கு நிலைமை 😀😀

1 hour ago, பெருமாள் said:

உங்களின் பதிலுக்குத்தான் மறுமொழி உங்களின் பதிலை மறுபடியும் படித்து பாருங்கள் நண்பரே தமிழன் சிங்களவன் ஆகிறதுக்கு முதல் சிங்களவன் அல்லாவை கும்பிட மக்காவுக்கு  கிளம்பிடுவான் அந்தளவுக்கு நிலைமை 😀😀

நான் “நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம்” என எழுதியதற்காக நாடு இப்ப நல்லா இருக்கு என்று சொல்ல வரேல்லை, நீங்கள் மாறி விளங்கி விட்டீர்கள் போல.

வஹாபிஸம், அரேபியம், பயங்கரவாதம் போன்றவற்றை உள்ளே விட்டது சிங்கள முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கவும் தான். இப்பொழுது அது உருவாக்கப்பட்டு விட்டது.

இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்பம். 😎

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

தானமாகக் கிடைக்கும் உணவு எதுவாக இருப்பினும் அதை உண்ண வேண்டும் என்கிறது புத்த மதம்! 

புத்தர் மரணிக்கும் முன்னர்...அந்தக் கொல்லன் கொடுத்த உணவு தனது மரணத்துக் காரணமில்லை என்று தனது சீடர்களிடம் தெரிவித்திருந்தார்! அவரது இயற்பெயர் சித்தார்த்தன் என்று நினைவு! பின்னர் கௌதம புத்தராகினார்! புத்தரின் மகனின் பெயர் ராகுலன்!

ஒரு வேளை...ரஹிம் ...ராகுலனாகி இருக்குமோ?😗

நஞ்சுஊறிய காளானை உண்டதானலதான் புத்தர் மரணித்தார் 
பன்றி இறைச்சி இல்லை.

ஒவ்வருவரும் புத்தரை அழைத்து உணவு கொடுப்பது வழக்கம் 
அவ்வாறே புத்தர் கொல்லன் வீட்டிற்கும் போனார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நஞ்சுஊறிய காளானை உண்டதானலதான் புத்தர் மரணித்தார் 
பன்றி இறைச்சி இல்லை.

ஒவ்வருவரும் புத்தரை அழைத்து உணவு கொடுப்பது வழக்கம் 
அவ்வாறே புத்தர் கொல்லன் வீட்டிற்கும் போனார். 

புத்தரின் மரணம் குறித்துப் பல விதமான கருத்துக்கள் உள்ளன! அவற்றுள் நீங்கள் கூறுவதும் ஒன்றாகும்! புத்தர் அறுபது வருடங்கள் இறைச்சி சாப்ப்பிடாமல் இருந்ததாகவும்... அவரது இளைத்துப் போயிருந்த உடலுக்கு இறைச்சியைச் சமிபாடடைய இயலவில்லை என்றும் கூறுகிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.