Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அரசுக்கு மாமா வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்’: கூட்டமைப்பிடம் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்யும் தமது வழக்கத்தை கைவிட வேண்டும். கல்முனை விடயத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.

கனடா “வாணிபம்” வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் என்ற மூதாளர் மாதாந்த உதவித்திட்டம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 35 பேருக்கு இன்று உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இப்படி காட்டமாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என்ற பெயரில் அவர்களின் உடமைகளை உறவுகளை அழித்து ஏதிலிகளாக்கிய பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். எவர் எவர்களின் வீடுகளை அரசபடைகள் அழித்து நிர்மூலமாக்கியதோ அவர்களுக்கான வீடுகள் அம் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதேபோன்று இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலக நியமங்களிற்கு ஏற்ப நியாயமாக நடந்து கொள்வதுடன் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதம் என்ற பதத்தை வைத்து எம் மக்களைப் பயங்கரமாகப் பதம் பார்த்தது அரசாங்கமே.

நாம் கேட்ட நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசாங்கங்கள் தந்திருந்தால் மக்கள் கிளர்ந்தெழத் தேவை எழுந்திருக்காது. அரச பயங்கரவாதம் எம் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது. இவை பற்றியெல்லாம் அரசுடனும் சர்வதேசத்துடனும் பலவழிகளில் பேசிப்பார்த்தாயிற்று. எமது அனைத்து முயற்சிகளும் ஏதோ வகைகளில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியாக நன்மை பெறவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனால்த்தான் எமது அரசியல்வாதிகளைக் காசுகொடுத்து வாங்க எத்தனித்திருக்கின்றது. இந் நிலையில் எமது பாதிக்கப்பட்ட உறவுகளை தாங்கிக் கொள்ள அவர்களை பொருளாதாரநிலையில் ஓரளவுக்காவது முன்னேற்றிவிட அவர்களின் மனஅழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்க எம்மவர்களே முயற்சிக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற அமைப்புக்கள் பெரிதும் உதவுகின்றன.

கல்முனை உபபிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவது சம்பந்தமாக நாங்கள் கடந்த ஏப்ரல் 21ந் திகதி மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு நடைபவனி ஆரம்பித்திருந்தோம். சுமார் ஒரு கிலோமீற்றர் நாம் நடந்து போன போது பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டோம். அங்கிருக்கும் கிறீஸ்தவ ஆலயத்தில் குண்டு வெடிப்பு அன்று காலை நடந்தது பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டோம். நடைபவனியை நாம் அன்று கைவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இன்று வரையில் தொடர்பில் இருந்து வருகின்றோம். உண்ணாவிரதிகளைக் கண்டு எமது ஆத்மார்த்த ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றோம்.

ஆனால் நேற்றைய சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. அரசாங்கம் காலம் கடத்தினால் உண்ணாவிரதிகளின் உயிருக்கு ஆபத்து விளையக்கூடும் என்று பயப்படுகின்றோம். தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக அறிவித்து உண்ணாவிரதிகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களைக் காப்பாற்றாது விட்டால் நிலமை மிக மோசமாகி விடும்.

DSCN01581-225x300.jpgதமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் அடிபட்டு சாகக்கூடிய நிலைமை உருவாகக்கூடும். 21ந் திகதி குண்டுவெடிப்பு பற்றி அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம் இதிலும் இவ்வாறான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது. அவர்கள் இந்த மாமா வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். நிலைமையை அறிய பிரதமர் உடனே குறித்த இடத்திற்குப் போனால் நல்லது என்றார்.

http://www.pagetamil.com/61294/http://www.pagetamil.com/61294/

விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு த.தே.கூ. செவிகொடுக்காது - சுமந்திரன்

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன், விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கல்முனை வடக்கு பிரதேசசபை விவாகரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்கின்றது என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பகிரங்கமாக தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதில் கூறும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்றுவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிட கூடாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/58919

19 hours ago, பெருமாள் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது. அவர்கள் இந்த மாமா வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

இந்த கூத்தமைப்பினர் (தமிழரசு கட்சி, புளட், டெலோ, ஈபிஆர்எல்எப்) காலங்காலமாக செய்ற தொழில் தானே!

இவர்கள் சொறிலங்கா அரசுக்கு மட்டுமில்ல தமிழரை அழிக்க நினைக்கும் எல்லாருக்கும் மாமா வேலை செய்றதும் அதுல வாற வருமானத்தில சொகுசா வாழ்றதும் தானே காலங்காலமாக செய்ற தொழில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான பேச்சை கண்டுகொள்ள மாட்டோம்! விக்கியின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி

Report us S.P. Thas 2 hours ago

விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செவிகொடுக்காது என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்கிறது என நேற்றைய தினம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்னேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்றுவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிட கூடாது.

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்னேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது. விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செவிகொடுக்காது என்றார்.

https://www.tamilwin.com/politics/01/218527?ref=home-feed

Just now, பெருமாள் said:

விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செவிகொடுக்காது என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கைப்புள்ள க்கு கோபம் வந்திட்டுது எத்தனை தலை உருளபோகுதோ......................

3 minutes ago, பெருமாள் said:

விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செவிகொடுக்காது என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்ப செவிமடுத்தபடியா தானே இந்தக் கூவு கூவுறார் சுமந்திரன்!

எங்களுக்கு மானம் ரோஷம் எதுவுமே இல்ல என்டு சுமந்திரன் சொல்றார்!
கூத்தமைப்பினருக்கு சுட்டு போட்டாலும் சொரணை வாராது என்டு தெரியும் தானே!
கூத்தமைப்பினர் செய்ற கீழ்த்தரமான வேலைகளை சொல்ல ஏதாவது நல்ல வார்த்தைகள் இருக்கோ என்டு எனக்கு தெரியல. அப்பிடி இருந்தா ஆராவது சொல்லுங்கோவன்!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Rajesh said:

இப்ப செவிமடுத்தபடியா தானே இந்தக் கூவு கூவுறார் சுமந்திரன்!

எங்களுக்கு மானம் ரோஷம் எதுவுமே இல்ல என்டு சுமந்திரன் சொல்றார்!
கூத்தமைப்பினருக்கு சுட்டு போட்டாலும் சொரணை வாராது என்டு தெரியும் தானே!
கூத்தமைப்பினர் செய்ற கீழ்த்தரமான வேலைகளை சொல்ல ஏதாவது நல்ல வார்த்தைகள் இருக்கோ என்டு எனக்கு தெரியல. அப்பிடி இருந்தா ஆராவது சொல்லுங்கோவன்!

விக்கினேஸ்வரனே... கூட்டமைப்பு மாமா வேலை பார்க்குது என்று சொல்லிய பின்...
அதனை விட கேவலமான வார்த்தையை, தமிழ் அகராதியில்  கண்டு பிடிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

விக்கினேஸ்வரனே... கூட்டமைப்பு மாமா வேலை பார்க்குது என்று சொல்லிய பின்...
அதனை விட கேவலமான வார்த்தையை, தமிழ் அகராதியில்  கண்டு பிடிக்க முடியவில்லை.

கூட்டிக் கொடுக்கிறது எண்டும் சொல்லலாம்!

அல்லது விக்கினேஸ்வரன் ஐயா சொன்ன மாதிரியும் சொல்லலாம்!😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனுக்கு இது ஒன்றும் புதுசு இல்லை அவரின் தொழிலே அதுதான் போற இடமெல்லாம் சொறிநாய்க்கு கல்லு சொந்தம் என்பது போல் அவருக்கு செருப்பு மழை தேர்தலில் தன்னுடைய கஞ்சா வாடிக்கையாளர்களின் ஓட்டை நம்பி மனிசன் இவ்வளவு திமிராடுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது மாமா வேலையல்ல; கல்முனையில் முஸ்லிம்கள் குழப்பம் செய்வதை கண்டித்துள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்!

64782085_1660582274086039_736155517633691648_n-696x391.jpg

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது எனத் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன்.

கல்முனை வடக்கு பிரதேசசபை விவாகரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்கின்றது என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பகிரங்கமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தமிழர்களின் உரிமை, அதை தடுக்க முஸ்லிம்களிற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்றுவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிட கூடாது.

விக்னேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம். கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்ய வேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாததது. இதில் தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாக வேண்டும். இது அவர்களின் பிரச்சினை, இதனை தீர்க்க தெரிவுக்குழு அமைத்துக் கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் அவர்களின் பிரச்சினை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அனாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளை குழப்புவது கண்டிக்கத்தக்கது.

கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு hமுஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது ஆனால் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறுவதற்கு அவர்களு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் நாம் கண்டிப்பாக தெரிவித்து வருகின்றோம்.

விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து கணக்காய்வாளர் கல்முனை வடக்கு செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பிப்பார்“ என்றார்.

ttp://www.pagetamil.com/61529/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இத வேற டீவியில காட்டுறான் மாமா வேலை செய்கிரார்கள் என்று சொல்லி கறுமத்த  (அரசியல் வாதி முழுவதும் மாமாதான் என்ற அப்பச்சி இவருக்கும் சேர்த்து என்ன கூட்டமைப்பினர் மாமாவுக்கு மாமா அவ்வளவுதான்)👌👌😁

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்க சும் மாமா

source.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Paanch said:

சும்மா போங்க சும் மாமா

source.gif

Bildergebnis für Vadivelu Shocked GIF

  • கருத்துக்கள உறவுகள்

 

On 6/24/2019 at 9:13 AM, தமிழ் சிறி said:

விக்கினேஸ்வரனே... கூட்டமைப்பு மாமா வேலை பார்க்குது என்று சொல்லிய பின்...
அதனை விட கேவலமான வார்த்தையை, தமிழ் அகராதியில்  கண்டு பிடிக்க முடியவில்லை.

உண்மை தான்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.