Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா?

June 28, 2019

Santhi-MP-1.png?resize=720%2C418காடழிப்பு, சுற்றுசூழல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் மக்கள் பிரதிநிதிகளால் அதிகளவு காடழிப்பு இடம்பெறுகின்றது என்பதற்கு இந்த பகுதி சான்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

சொந்த மண்ணிலேயே இவ்வாறு காட்டினை அழித்து சொத்தாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அதிகாரிகளை அச்சுறுத்தி குறித்த காணி வசப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை வனவளபாதுகாப்பு பிரிவினரோ, நீர்பாசன திணைக்களமோ அல்லது மாவட்ட அரச அதிபரோ நடவடிக்கை மேற்கொள்ளமை ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை பாலியாற்றின் எல்லை பகுதியையும் வேலியிட்டு ஆக்கிரமித்து விவிசாயம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறித்த பாலி ஆற்றிலிருந்து நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீர் வயலுக்கு பாய்ச்சப்படுகின்றது.

மக்களின் வாக்குகளால் தெரிவான அரசியல்வாதிகள் சுற்று சூழல் பாதுகாப்பு தொடரப்பில் மக்களிற்கு விழிப்புனர்வு ஊட்டவேண்டிய நிலையிலு்ம, பாதுகாக்க வேண்டியகடப்பட்டிலும் உள்ள நிலையில், அதிகளவான காடுகளை அழித்து தமது சந்ததிக்கு சொத்தாக்கிக் கொள்ள நினைப்பது தொடர்பிலும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் மௌனம் காப்பது குறித்தும், கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. #சாந்திசிறிஸ்காந்தராசா #தமிழ்தேசியகூட்டமைப்பு, #மாந்தைகிழக்குபிரதேசசெயலர்பிரிவு#பாண்டியன்குளம் #வனவளபாதுகாப்புபிரிவு#நீர்பாசன திணைக்களம்

இந்தக் குற்றச்சாட்டகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா பதிலளித்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும்.

Santhi-MP-2.png?resize=720%2C418Santhi-MP-3.png?resize=720%2C418Santhi-MP-4.png?resize=720%2C418Santhi-MP-5.png?resize=720%2C418Santhi-MP-10.png?resize=720%2C418

செய்தி – படங்கள் – yathu bashkaran

http://globaltamilnews.net/2019/125448/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே நேரடியா அவவை கேளுங்க
 
0774188975

shanthi_s@parliament.lk

No:278/3,
Barathinagar, Yogapuram,
Mallavi.

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியன்குளத்தில் நெல்விதைக்க கூடிய இடங்களில் 
இப்படி அழித்து வயலாக்க பெரிய காடுகள் இல்லை.
முன்பு வயலாக இருந்து இப்போது காடாக ஆகி அதை மீண்டும் 
வயலாக்கி இருக்கலாம்.

செய்தியாளருக்கு காடு போல இருந்து இருக்கும். 

18 hours ago, கிருபன் said:

12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா?

உண்மையிலேயே இவர் 12 ஏக்கர் காணியில விவசாயம் செய்தால் அவரை பாராட்டுவதே தகும்!

அத விட்டுட்டு கேவலமா ஒரு தமிழ் விவசாயிட காலை வாரிவிடும் ஊடகவியலாளருக்கும் / எழுத்தாளரும் தமிழின அழிப்புக்கு துணை போபவர்களாகவே கருதப்பட வேண்டும்!

அதுவும் எல்லா இடத்திலையும் தமிழ் மண் முசுலீம்களாலும் சிங்களவனாலும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்துல ஒரு மோசமான பேர்வழியால தான் இப்பிடி ஒரு செய்தியை பிரசுரிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில்... இனி, தண்ணீருக்கு , கஸ்ரம் வரப் போகின்றது.
தயவு செய்து காடுகளை... அழிக்காதீர்கள்.

7 hours ago, Maruthankerny said:

பாண்டியன்குளத்தில் நெல்விதைக்க கூடிய இடங்களில் 
இப்படி அழித்து வயலாக்க பெரிய காடுகள் இல்லை.
முன்பு வயலாக இருந்து இப்போது காடாக ஆகி அதை மீண்டும் 
வயலாக்கி இருக்கலாம்.

செய்தியாளருக்கு காடு போல இருந்து இருக்கும். 

இவைகள்  காடுகளை அழிப்பதை விட மோசமான காரியம் ஏனெனில் பாலியாற்றின் இருபக்கமும்  நூறு இருநூறு சில இடங்களில் அதற்கும் கூடுதலான மீற்றர்களுக்கு  காடுகளும் பற்றைகளும் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாத அளவுக்கு உயிர்ப்புடன் வைத்திருந்தது. இப்போது ஜே சி  பி இயந்தித்தை பயன்படுத்தி அனைத்து மரங்களையும் புடுங்கியெறிந்து வயலை ஆற்றின் விழிம்பு வரைக்கும் நீட்டிவிட்டார்கள். மேலே குறிப்பிட்டவர்கள் மட்டும் செய்யவில்லை மாறாக ஆற்றை அண்டி வயல் வைத்திருந்த அனைவரும் காணியை நீட்டிவிட்டார்கள் சிலருக்கு மூன்று ஏக்கர் பத்து ஏக்கராகிவிட்டது சில ருக்கு பதினைந்து ஏக்கராகிவிட்டது. எதிர்காலத்தில் பெரும் வெள்ளங்கள் ஏற்படும் போது ஆற்று வழிம்பில் உள்ள மரங்கள் மண்ணரிப்பால்  இனி சரிந்து விழுந்துவிடும். ஆறு அதன் தன்மையை முற்றாக இழந்து மழை காலத்தில் மட்டும் தண்ணீர் ஓடும் ஆறாக மாறிவிடும். ஊற்றுத் தண்ணி சாத்தியம் இல்லை. பாலியாறு பறங்கியாறு என்னும் பல கிழையாறுகள் வன்னியின் முதுகெலும்பு போன்றது, போரின் பின்னரான பத்தாண்டுகளில் இவைகள் மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. காட்டை அழித்து இவர்கள் விவசாயம் செய்யவில்லை ஆற்றை அழித்து செய்கின்றார்கள். ஒரு வகையில் தற்கொலைக்கு சமமானது. 

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

வனாந்தரமாக்கிடந்தாலும் எரிஞ்சு  விழுகிறீர்கள்

அதை பண்படுத்தி  விவசாயம் செய்து

நாலு பேருக்கு தொழில்  வாய்ப்பை  கொடுத்தாலும் திட்டுகிறீர்கள்?

என்னைப்பொறுத்தவரை  நல்லவிடயம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சண்டமாருதன் said:

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் 
முன்பு நீங்கள் கூறியதுபோல பாலியாறு நீளத்துக்கும் அருகில் மரங்கள் 
நிறைந்து இருக்கும் எந்த வெய்யில் காலத்திலும் தண்ணீர் குளிராக இருக்கும் 
நான் பல நாட்கள் இந்த நீரை குடித்ததுண்டு.

பாண்டியன்குளத்தில் பாலியாறு இல்லை 
நான் பாண்டியன்குளம் குறித்துதான் எழுதினேன். 

5 hours ago, விசுகு said:

என்னப்பா

வனாந்தரமாக்கிடந்தாலும் எரிஞ்சு  விழுகிறீர்கள்

அதை பண்படுத்தி  விவசாயம் செய்து

நாலு பேருக்கு தொழில்  வாய்ப்பை  கொடுத்தாலும் திட்டுகிறீர்கள்?

என்னைப்பொறுத்தவரை  நல்லவிடயம்

நீஙகள் சொல்வதற்கும் இங்கே படத்தில் இணைத்திருப்பதற்கும் தொடர்பில்லை. குறிப்பிட்ட இவ்விடத்தில்  மருதங்கேணியர் சொன்னது போல் அழிப்பதற்கென்று காடுகள் எதுவும் இல்லை.  ஆற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இருபக்கமும் உள்ள மரம் புதர் புற்படுக்கைகளை அழித்து தமது நிலமாக்கியுள்ளார்கள்.  1950 களில் இவ்விடங்கள் நெற்செய்கை நிலங்களாக வழங்கப்பட்டபோதே ஆற்றில் இருந்து கணிசமான தூரம் பாதுகாக்கப்பட்டே வழங்கப்பட்டது. புலிகளின் காலம் வரையில் கூட யாரும் இவற்றை அழித்ததில்லை. நீர்வளத்தை அழித்துவிட்டு எத்தனை காலம் விவசாயம் செய்ய முடியும் !! நெற்செய்கையை பொறுத்தவரைக்கும் தொழில்வாய்பென்று எதுவும் இல்லை. முன்புபோல் நிறைய தொழிலாளர்களை வைத்து  விதைப்பதும் இல்லை கதிரறுத்து சூடடிப்பதும் இல்லை. எல்லாம் இயந்திரம்.  யுத்தத்தின் பின்னர் நெற்செய்கை பணப்பயிராகிவிட்டது. மேலும் முன்னர் சராசரி ஒடு குடும்பத்திற்கு நான்கு ஏக்கரளவில் நெற்செய்கைக்கான காணி இருந்தது. இப்போது நூற்றில் அறுபது வீதத்திற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு நெற்செய்கைக்கான காணி இல்லை மீதி நாற்பது வீதமுள்ளவர்களிடம் நான்கு ஏக்கருக்கு பதிலாக ஐம்பது நூறு ஏக்கர்கள் காணி உள்ளது. வன்னிக்கான சம  நிலை முற்றாக குழம்பிவிட்டது. சமநிலையை பேணக் கூடிய தலமைத்துவமோ சடடதிட்டங்களே அதை மதித்து பின்பற்ற வேண்டிய அவசியமோ கடமையே தமிழர் சமூகத்தில் இல்லை. அவனவன் எடுப்பது தான் முடிவு. நீர் வளத்தை பாதுகாத்தால் எதிர்கால சந்ததிக்கு வாழ்வாதராமாக இருக்கும் என்ற ஆதங்கத்தில் எழுதுவது தவிர நாம் எழுதுவதால் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

எனது  மாமனாருக்கு  விசுவமடுவில் 10 கமக்காணியுண்டு

அதே போல் தான் இதுவும் இருப்பது தெரிந்தது

இப்படித்தான் வாய்க்காலுக்கு இரு  மருங்கும் உழுது பதப்படுத்தி விதைப்பார்கள்

நீங்கள்  சொல்வது போல அதிகம்  உள்ளே  செல்லவில்லை

12 hours ago, சண்டமாருதன் said:

வயலை ஆற்றின் விழிம்பு வரைக்கும் நீட்டிவிட்டார்கள். மேலே குறிப்பிட்டவர்கள் மட்டும் செய்யவில்லை மாறாக ஆற்றை அண்டி வயல் வைத்திருந்த அனைவரும் காணியை நீட்டிவிட்டார்கள்

இவை உண்மை தான்!

பூவரசன்குளம் முதல் பூநகரி வரை, நெடுங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை இந்த விரிவாக்கங்களைக் காணலாம்.

குறிப்பாக பெருமளவு வன்னி மக்கள் போதியளவு தொழில் வாய்ப்பு, வருமானம் ஈட்டும் வாய்ப்புக்கள் அற்ற நிலையில் தான் இவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்ற உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது. 2009 இன் பின்னர் உயிர் வாழ திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது இவ்வாறு விவசாயங்களில் ஈடுபடுகின்றனர். இதில் ஓரளவு வசதியானவர்கள் (வருமானம் பெறுபவர்கள்) முதல் ஏழைகள் வரை பாகுபாடின்றி ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி காணிகளை விரிவாக்கி விவசாயம் செய்பவர்கள் ஒருபக்கம் இருக்க இன்னொரு குழுவினர் ஆற்று மணல் கடத்தலிலும் மரங்களை வெட்டி கடத்தி விற்பதிலும் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடனடியாக தோன்றினாலும் அவர்கள் குடும்ப பின்னணி, நாளாந்த வாழ்க்கைக்கு படும் சிரமங்களை அறிந்ததும் மனம் அடங்கிவிடுகிறது. வன்னியின் சில பகுதிகளில் தினமும் 20, 30 காட்டுமரங்கள் இயந்திர வாள்களால் வெட்டப்படுவதையும், அவற்றை லாண்ட் மாஸ்டர்களில் / ட்ராக்டர்களில் தெருவுக்கு கொண்டுவந்து, டிப்பர்களில் தென்னிலங்கைக்கு கடத்தப்படுவதை பல தடவைகள் கண்டுள்ளேன்.  

தற்போது தென்னிலங்கைக்கு கடத்துவது பெரும்பாலும் சிங்கள போலீஸ், சிங்கள இராணுவ அதிகாரிகளே. இந்த மணல், மரக்கடத்தல்களை 2010ல் ஆரம்பித்து வைத்தது தமிழினப் படுகொலைகாரர்களான கோட்டாபய, பசில், நாமல், ரிஷாட் பதியுதீன் போன்றவர்களே.

வேகமாக அருகிவந்த விவசாய ஈடுபாடு கடந்த 2, 3 வருடங்களில் சற்று அதிகரித்து வருவதும், இளைஞர்கள் சிலரும் விவசாயத்தில் ஈடுபாடு காட்டுவதும் நல்ல மாற்றமாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரீங்க. 
சாந்தி சிறிஸ்கந்தராஜா சட்டத்தைமீறி காட்டை அழித்து அரசகாணியை ஆட்டையை போட்டாவா இல்லியா? 
உங்க குற்றச்சாட்டு சரியா பிழையா? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vanangaamudi said:

இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரீங்க. 
சாந்தி சிறிஸ்கந்தராஜா சட்டத்தைமீறி காட்டை அழித்து அரசகாணியை ஆட்டையை போட்டாவா இல்லியா? 
உங்க குற்றச்சாட்டு சரியா பிழையா? 

இறுதி தீர்ப்பாக 
சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவை  
யாழ் களத்தில் ஆஜாராகும்படியும்.
நேரடியான விசாரணையின் பின்பே 

சரி பிழை அறிவிக்கப்படலாம் என்பதையும் 
இத்தால் அறிவித்துக்கொள்கிறோம். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரீங்க. 
சாந்தி சிறிஸ்கந்தராஜா சட்டத்தைமீறி காட்டை அழித்து அரசகாணியை ஆட்டையை போட்டாவா இல்லியா? 
உங்க குற்றச்சாட்டு சரியா பிழையா? 

சாந்தி சிறிஸ்கந்தராஜா குளோபல் தமிழில் வந்த குற்றச்சாட்டுக்கு இன்னும் மறுப்பைத் தெரிவிக்கவில்லை. 

Quote

அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அதிகாரிகளை அச்சுறுத்தி குறித்த காணி வசப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை வனவளபாதுகாப்பு பிரிவினரோ, நீர்பாசன திணைக்களமோ அல்லது மாவட்ட அரச அதிபரோ நடவடிக்கை மேற்கொள்ளமை ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு வசிப்போரை கேட்டால் தெரியும் இந்த அம்மையார் என்ன செய்திருக்கிறார் என்று!

15-20 ஏக்கரிற்கு (இன்னும் தொடர்கிறது) மேற்பட்ட காட்டை 2 ஜேசிபி இயந்திரங்களை வைத்து அழித்து நெல் விதைப்பு செய்கிறார், கோடை காலம்/சிறுபோக நெற்செய்கைக்கு பாலியாற்றை மறித்து தண்ணீரை தன்னுடைய புதிதாக உண்டாக்கப்பட்ட நெற்காணிகளுக்கு நீரிறைக்கும் இயந்திரங்களை மூலமாக நீர் பாய்ச்சுகின்றார். வவுனிக்குளத்தில் இருந்து 1 ஏக்கர் விவசாயத்திற்கான நீரே நீர்ப்பாசன திணைக்களத்தால் வழங்கப்படுகிறது.

ஒரு முறை காடழிப்பின் போது ஜேசிபி இயந்திரம் கைப்பற்றபட்டபோது தனக்கும் காடழிப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி இயந்திரத்தை மீட்டிருக்கிறார்.

On 6/30/2019 at 11:37 AM, ஏராளன் said:

காணிகளை ஆயிரம் ஏக்கர் கணக்கில திருடும் றிசாட்டுக்கு போட்டியா ஒருத்தரையும் வரவிட மாட்டீங்க போல இருக்கு!
தமிழன்றை குணம் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.