Jump to content

மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இலங்கைப் படையினர் விடுதலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் பேசும் மக்களின் தாயகம் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் ஐந்து

மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இலங்கைப் படையினர் விடுதலை

குற்றங்களை நிரூபிக்க மேலதிக ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் அறிவிப்பு
 
பதிப்பு: 2019 ஜூலை 03 16:55
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 03 17:56
main photomain photo
  •  

தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலை கடற்கரைப் பிரதேசத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இலங்கை விசேட அதிரடிப்படையினர் பன்னிரெண்டுபேர் உள்ளிட்ட பதின்மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென திருகோணமலை பிரதான நீதவான் முகமட் ஹம்சா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பதின்மூன்று பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதவான் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். 
 
2006 தை மாதம் இரண்டாம் திகதி திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்களை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் நேரடிச் சாட்சியங்களின் அடிப்படையில் இலங்கைப் படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

மனோகரன் ரஜீகரன், யோகராஜா ஹேமசந்திரன், லோகித ராஜா ரோகன், தங்கதுரை சிவநாதன், சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய 21 வயதுடைய மாணவர்களே இலங்கைப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்ப்பார்த்திருந்த நிலையில் திருகோணமலைக் கடற்கரையில் இலங்கைப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஐந்தாம் திகதி, பன்னிரெண்டு விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பதின்மூன்றுபேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான சந்தேகநபர்களை ஆவணி மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

பின்னர் கைதான அனைவரும் 2013 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே இன்று புதன்கிழமை பதின்மூன்று பேரும் நிரபராதிகள் எனவும் குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லையெனவும் கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

கொல்லப்பட்ட ரஜீகரன் என்ற மாணவனின் தந்தையரான வைத்தியக் கலாநிதி மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

சர்வதேச மனித உரிமைகள் காப்பகம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் இவருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அப்போது கோரியுமிருந்தன. மனோகரன் ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் சாட்சியங்களை வழங்கியிருந்தார்.

இலங்கைப் படையினரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான ஆதாரமாக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சடலங்களைப் படமெடுத்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன், இலங்கைப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1059&fbclid=IwAR35KaR88-HvGCNdKCQAIJEgFdwsl7Zjd04g8SgkGSpC17zq9WDhqrG0ekc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென திருகோணமலை பிரதான நீதவான் முகமட்ஹம்சா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பதின்மூன்று பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதவான் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெற்றோர் பாவங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென திருகோணமலை பிரதான நீதவான் முகமட்ஹம்சா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பதின்மூன்று பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதவான் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெற்றோர் பாவங்கள்.

வேற  ஏதாவது  தீர்ப்பை  எதிர்பார்த்தீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே 15 முஸ்லீம் மாணவர்களை கொன்று விட்டு தமிழரை நீதிபதியாய் போட்டால் இப்படி ஒரு தீர்ப்பு கொடுப்பாரோ?...நீதி ,நியாயம் ,மண்ணாங்கட்டி என்டுவினம் 

Link to comment
Share on other sites

 

திரிகோணமலை தமிழ் மாணவர்கள் கொலை: ஐ.நா. மனித உரிமை பேரவை கருத்து

ஐந்து தமிழ் மாணவர்கள்.

திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள பின்னணியில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தாருடன் ஐநா மனித உரிமை பேரவை நீதிக்காக முன்நிற்கும் என மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது.

அம்னெஸ்டி

இதேவேளை, இலங்கையில் நீதி அமைப்பில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இல்லாமையானது, திரிகோணமலையில் ஐந்து மாணவர்களின் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் விடுதலை செய்யப்பட்டமை எடுத்துக்காட்டுகின்றது என அம்னெஸ்டி இன்டர்நெஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை குறிப்பிடுகின்றது.

முக்கிய சாட்சியங்களும், பாதிக்கப்பட்டவர்களும் முன்வந்து சாட்சியங்களை வழங்குவதற்கு போதுமான பாதுகாப்பை உணரவில்லை என்பது உண்மை என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

தமிழ் மாணவர்களின் கொலை - 13 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுதலை

திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பாதுகாப்பு பிரிவினர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா.

இந்த 13 சந்தேக நபர்களும் திரிகோணமலை பிரதம நீதவான் எம்.எம்.மொஹமட் ஹம்சா முன்னிலையில் ஜுலை 3ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த பின்னணியில், அந்த குற்றச்சாட்டுக்கள் எதையும் நிரூபிப்பதற்கு போதுமானமான சாட்சியங்கள் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே இவர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திரிகோணமலை கடற்கரை பகுதியில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

வாகனமொன்றில் வருகைத் தந்த சிலர், அந்த மாணவர்களை காந்தி சிலைக்கு அருகில் அழைத்து சென்று சுட்டுக்கொலை செய்ததாகவே கூறப்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், சம்பவம் நடந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை, மிக மோசமான மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையிலும் இந்த விடயம் பாரிய சவால்களை இலங்கைக்கு விடுத்திருந்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48896079

Link to comment
Share on other sites

On 7/3/2019 at 8:02 AM, ஏராளன் said:

குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென திருகோணமலை பிரதான நீதவான் முகமட்ஹம்சா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பதின்மூன்று பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதவான் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெற்றோர் பாவங்கள்.

 

On 7/3/2019 at 8:15 AM, விசுகு said:

வேற  ஏதாவது  தீர்ப்பை  எதிர்பார்த்தீர்களா???

நீதிவான் ஆதாரம் இல்லாமல் தீர்ப்பு கொடுத்து இருந்தால், அப்பீலில் இளஞ்செழியன் அனைவரையும் விடுதலை செய்து இருப்பார். போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதை விட்டு நீதிபதியின் மதத்தை பார்த்து கருத்து எழுதியது மத துவேசம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

 

நீதிவான் ஆதாரம் இல்லாமல் தீர்ப்பு கொடுத்து இருந்தால், அப்பீலில் இளஞ்செழியன் அனைவரையும் விடுதலை செய்து இருப்பார். போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதை விட்டு நீதிபதியின் மதத்தை பார்த்து கருத்து எழுதியது மத துவேசம் இல்லையா?

நான் மதத்தை குறித்து சுட்டவில்லை, ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய காவல்துறை/அரச தரப்பு செயலையே குறிப்பிட விரும்பினேன்.

Link to comment
Share on other sites

22 minutes ago, Jude said:

 

நீதிவான் ஆதாரம் இல்லாமல் தீர்ப்பு கொடுத்து இருந்தால், அப்பீலில் இளஞ்செழியன் அனைவரையும் விடுதலை செய்து இருப்பார். போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதை விட்டு நீதிபதியின் மதத்தை பார்த்து கருத்து எழுதியது மத துவேசம் இல்லையா?

 

18 minutes ago, ஏராளன் said:

நான் மதத்தை குறித்து சுட்டவில்லை, ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய காவல்துறை/அரச தரப்பு செயலையே குறிப்பிட விரும்பினேன்.

நீங்கள் அல்ல, விசுகு மதத்தை சுட்டிக்காட்டும் விதமாக நீதிபதியின் பெயரை சிவப்பாக்கி இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தை இழுத்த ஒன்று. அந்த வகையில் சொறீலங்கா அரசு.. மற்றும் அரச படைகளுக்கு சார்ப்பாக இயங்கும்..  சொறீலங்காவின் நீதித்துறையை துயில் உரிந்து காட்டவும்.. சர்வதேச நடுநிலை விசாரணையை கோரவும் இப்படியான சந்தர்ப்பங்களைப் பாவிக்க வேண்டும். 

இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது அவசியம். காரணம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பது மறுதளிக்கப்பட முடியாதது. சொறீலங்கா நீதித்துறையின் பலவீனங்களுக்குள்ளால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இல்லை என்பதை நிறுவ வேண்டியதும் அவசியமாகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாணவர்கள் படுகொலை- சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள புதிய உத்தரவு என்ன?

திருகோணமலை மாணவர்கள் படுகொலையின் சாட்சிகளை கண்டுபிடிக்க முயலுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண சட்டமா அதிபர் தப்புல்ல டி லிவேராவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலையின் சாட்சிகளை கண்டுபிடிக்க முயலுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ள சட்டமா அதிபர் இதன் மூலம் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் சாட்சிகளை கண்டுபிடிக்க முடிந்தால் விசாரணைகளை மீள ஆரம்பிக்கலாம் என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலையின் சாட்சிகளில் பலர் வெளிநாட்டில் உள்ள நிலையிலேயே சட்டமா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

trinco_5.jpg

2006 ஜனவரியில் திருகோணமலை கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சில வாரங்களிற்கு முன்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்

எனினும் இது குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.

 

https://www.virakesari.lk/article/60152

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.